Advertisement

உன் வருகை என் வரமாய்…
11
பானுமதி தம்பதி, மறுநாள் திருமணத்திற்கு செல்லவும்.. பானுமதி வர்ஷினியிடம், காலையில் சொன்னார் “உன் புருஷனுக்கும் சேர்த்து சமைச்சிட்டு போ.. மதியம் அங்க வந்து சாப்பிட சொல்லியிருக்கேன்” என்றார் பொறுப்பாய்.
“ம்.. சொல்லிட்டிங்களா அவர்கிட்ட” என்றாள்.
“நீதான் சொல்லணும்… நான் வர சாயங்காலம் ஆகும்… பார்த்துக்க” என்றார்.
“ஏன் த்த, பூச்சாண்டி தூக்கிட்டு போயிடுவானா” என்றாள் சாதுவான குரலில்.
பாவம் பானுமதி “தங்கம், அவன் பாவம் டி… யாருக்காக பார்ப்பான்… அப்பாக்காக அமைதியா இருக்கான்.. அவன ஒன்னும் சொல்” என, ஆரம்பிக்க…
வர்ஷினி “ஐயோ ஆரம்பிக்ககாத த்த, நல்லா சேர்ந்திங்க அம்மாவும் புள்ளையும், நடுவுள நான்தான் இடிவாங்கிறேன்… சரி, நீங்களே சொல்லிடுங்க.. வந்து சாப்பிட சொல்லி..” என்றாள். சிடு சிடுப்பாக.
பானு “நீ சொல்லேன் இப்போ என்ன, உன் புருஷன் தானே..” என்றார்.
“நான் உங்க மருமகன்னு நியாபகம் இருக்கா.. நான் எதுக்கு சொல்லணும்.. முடியாது.. சமைச்சு வைப்பேன்.. வேணும்னா வந்து சாப்பிட சொல்லுங்க” என்றவள் போனை வைத்துவிட்டாள்.
வர்ஷினிக்கு கோவம்தான் வந்தது இன்னும் வேண்டுமென்றே ஆத்ன்மநாதன் சொல்லும் நாள் நட்சத்திரம் எல்லாம் உண்மை என அவளால் எண்ண முடியவில்லை.. நேற்று வேறு.. இவன் அருகில் அமர்ந்து சென்றது குறுகுறுக்க தொடங்கியது.
என்ன இருந்தாலும் சுப்புவை, கணவனாக இந்த பத்துநாளில் அவள் பழகிக் கொண்டாள்.. அவன்மேல் கோவம்தான்.. ‘என்னை கெளரவத்துக்காக மணந்து கொண்டான், அதன்பின் எட்டியும் பார்க்கக்வில்லை..’ என.. மனம் நிறைய கோவம்.. ஆனால் எங்கோ ஒரு ஓரத்தில்.. ‘அவனும் என்ன செய்வான்..’ என்று சின்னதான ஒரு சாப்ட் கார்னர்.. தோன்றியது.. 
அதுவும் நேற்று அவனுடன் அந்த விழாவிற்கு சென்று வந்தது, இன்னும் இளக்கி இருந்தது அவளை.. என்னவன்.. என மனம் மெல்ல உணர தொடங்கியது..
சுப்புவும் நேற்று எந்த வகையிலும் அவள் மேல் விழுந்து பழகவில்லை.. ஆனால் தள்ளி நிற்கவும் இல்லை.. கொஞ்சமாக உரசி.. பேசி.. எல்லோரையும் பொறுப்பாக அறிமுகம் செய்து.. அவளும் பழக இடமளித்து.. என வழமைபோல் அவளை கையாண்டான்.. அதுவும் அவளை ஈர்க்க செய்ததோ.. இதெல்லாம் மனதில் ஓட, அவனுக்கு சமைத்துக் கொண்டிருந்தாள். 
வர்ஷினிக்கு மதியம் உணவு எடுத்து செல்லும் பழக்கமில்லை… ஸ்கூல்லிலேயே கொடுத்து விடுவர்… (இண்டர்நேஷனல் ஸ்கூல்) ஆனாலும் பொறுப்பாக சமைத்து வைத்து சென்றாள் கணவனுக்காக. 
தன் கணவனுக்கு வாட்ஸ்சப்பில் “லஞ்ச் வைச்சிருக்கேன், சாப்பிடுங்க “ என மெசேஜ் செய்துவிட்டாள்.. அழைப்பதற்கு மனமில்லை.. இன்னும் அவனே அழைத்து பேசியிருக்கவில்லை.. எனவே இவளும் மெசேஜ்சுடன் நிறுத்திக் கொண்டாள்.
அவனும் அலட்டாமல்.. சொன்னது போல… இங்கு தோட்டத்து வீட்டில் வந்து உணவு உண்டான். செண்பா வரவில்லை… அங்கேயே தோட்டத்தில் இருந்து கொண்டார்.. சுப்பு வருவது தெரிந்து.
தானே எடுத்து, போட்டு சாப்பிட்டு.. வந்து.. அவளின் அறையிலேயே ஆனந்த சயனம்.. பொதுவாக மதியத்தில் படுப்பதில்லை அவன். இப்போதுதான் அவனுக்கு எல்லாம் மாறுகிறதே.. 
சற்று வளைகிறானோ.. ம்… அவனிற்கே அப்படிதான் தோன்றியது.. பர்வதத்தை சுற்றி சுற்றி வருகிறேன் என. ஆனாலும், வெளியே ஏதும் காட்டாமல் இருக்க பழகிக் கொண்டான். 
நேற்று.. காலையில் என்ன பேசினாலும்.. மாலையில் தன்னுடன் வர ரெடியாகி நின்றாளே.. அப்போது இன்னும் அவளை பிடித்தது அவனுக்கு.. என்போலவே… வெளியே எதையும் காட்டுவதில்லை.. பேசணும்… அதுதான் எப்படின்னு தெரியலை.. என எண்ணிக் கொண்டிருந்தவன் உறங்கிவிட்டான். 
அவள், சொன்னதே.. ‘சாப்பிடுங்க’ என சொன்னதே, போதுமென… சயனம் வேறு.. அவளறையில் ஆனந்தமாய்.. அவனின் பாதம் பிடித்திட அவளில்லை மற்றபடி ஆனந்த சயனம்தான்…
வர்ஷினி வருகைக்காக காத்திருந்தான் இன்று. ஏதாவது பேசலாம்.. என்ன சொல்கிறாள் என கேட்கலாம் என காத்திருந்தான். அவளும் நேரமே வந்துவிட்டாள். 
ஆனால், இவனை எதிர்பார்க்கவில்லை.. அதுவும் தன்னறையில், தன் கணவனை அங்கு, பார்க்கவும், ஸ்தம்பித்து நின்றாள்.. அந்த பெரிய அறை சிறிதாக தெரிந்தது.. இவனின் முன்..
உள்ளே வந்தாள்.. அவன் அப்போதுதான் தயாராகிக் கொண்டிருந்தான். இவளின் சத்தம் உணர்ந்து, திரும்பி பார்த்தான் முகம் ஒளிர  “என்ன சீக்கிரமே வந்துட்ட” என்றான் தனது கையில் வாட்ச் அணிந்தபடி… பழகியவனாக.
வர்ஷினிக்கு அந்த இயல்பான குரல்… உரிமையான பாவனை மிக பிடித்தது, கோவம் வருவதற்கு பதில் ஏக்கமே வந்தது… ஏதோ பத்து வருடம் பழகியவன் போல்.. உரிமையாக ஒலித்தது குரல்.. ‘இந்த கல்யாணம் எந்த.. பிரச்சனையும் இல்லாமல்… நார்மலா நடந்திருக்க கூடாதா’ என அந்த ஷனம் தோன்றியது அவளுக்கு.. 
ஆனால்.. அவனுக்கு அப்படி இல்லை போல, ஒன்றுமே நடவாது போல.. முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் எப்படி இப்படி கேட்கிறான்… பிடிக்கிறதோ.. என லேசாக அவளின் மனமே அவளிடம் அவனுக்காக முன்னும் பின்னும் பேசியது. 
அவன் பார்வையின் வீச்சு உணர்ந்து, சுதாரித்த வர்ஷினி “இல்ல.. சரியான நேரம்தான்” என்றாள். உள்ளே, கிட்சேன் சென்றுவிட்டாள். அங்கே நிற்க முடியாமல்.
சுப்பு “சரி.. நான் கிளபறேன்… ஒருமணி நேரத்தில் வந்திடுவேன்.. டிபன் இங்கதான்.. அம்மா, அவங்க வீட்டில் இருக்காங்க” என்றான் சிறுபிள்ளை.. காரணம் போல..
வர்ஷினி “என்னமோ நாங்க.. கேள்வி கேட்டுதான் சாப்பாடு போடறோமோ.. புதுசா.. வந்து சொல்ல வேண்டியது.. இத்தனை நாள் எங்க சாப்பிட்டாங்களாம்.. இன்னிக்கு புதுசா சொல்றாங்க” என சட்டென பொங்கியது அழுகை… விடை தெரியா அழுகை அவளுக்கு… ஏதோ.. அவனின் காரணம்.. அதனால்தான் இங்கு உண்கிறேன் என்றது.. அவளை தாக்கியது. எனவே புலம்பியபடியே அவள் கிட்செனில் எதையோ எடுத்துக் கொண்டிருக்க…. 
சுப்பு “என்ன சொன்ன” என்றான் வேண்டுமென்றே… அமர்ந்த இடத்திலிருந்து.
அந்த வார்த்தை விசிறிவிட… பொங்கிவிட்டாள்.. “என்ன சொன்னேன் நான்… எப்போதும் உங்ககிட்ட கேள்வி கேட்டுதான் சாப்பாடு கொடுக்கிறனா… இன்னிக்கு எதுக்கு காரணம் சொல்றீங்க… 
எல்லாம் நான் செய்து செண்பாம்மா கிட்ட கொடுத்து விடுறேன்…” என்றாள் அந்த வாயிற்படியில் நின்று.
சுப்பு “நான் கொடுத்துவிட சொல்லலையே… நான் வரேன்னுதான் சொன்னேன்” என்றான்.
“எதுக்கு… இப்போ வரீங்க… இப்போ யார் கூப்பிட்டா இங்க… எதுக்கு வரணும்” என்றாள் அடங்கா ஆத்திரம் அவளுக்கு.. அவனின் அமைதியான போக்கு அவளை ஆத்திரபடுத்தியது.
அவனும் “யார் கூப்பிடனும்… என் வீட்டுக்கு….நா” என ஏதோ சொல்ல வர…
“இது ஒன்னும் உங்க வீடு இல்ல… இத்தனை நாள் அப்படிதான் வந்தீங்களா.. இது வர்ஷினி வீடு” என்றாள்.
லேசாக சிரிப்பு வந்தது, அவள் அடுத்து என்ன கேட்பாள் என புரிந்தது அவனுக்கு “சரி, பர்வதம் வீடாவே இருக்கட்டும்… இனி அப்படி வந்திட்டு போறேன்… உன் வீடு, என் வீடும்தானே “ என்றான்.
“யார் சொன்ன அப்படி… என் வீடு மட்டும்தான்… இங்க யாரும் யாருக்கும் சொந்தமில்ல… அப்போ வீடு மட்டும் எப்படி… அப்படிதானே… இங்க யாரும்.. வர வேண்டா” என அவள் சொல்லி கொண்டிருக்க… 
அவளின் முன் வந்து நின்றான் சுப்பு… பேச்சு நின்றது அவளுக்கு… கண்ணெல்லாம் சிவந்து ஒருநிமிடம் முன் பார்த்தவளா இவள், என நினைக்கும்படி… நின்றாள்…
சுப்புக்கு ஏதோ போலாக.. அவளின் அருகில் வந்தான், அவளின் முகம் அவனை என்னவோ செய்ய.. கைநீட்டி அவளின் தலையை தொட, இரண்டடி பின் சென்றாள். சுப்பு “என்ன இப்போ… இவ்ளோ கோவம்” என்றான் சமாதான குரலில்..
வர்ஷினிக்கு இந்த சாந்த குரலில் கோவமே வந்தது.. திரும்பிக் கொண்டாள் அவனை பார்க்காமல், எவ்வளவு திடமாக பேசுகிறான்.. எனக்குதான் நடுங்குகிறது என தனது அழுகையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.. 
சுப்பு “என்ன.. நான், வர கூடாதா” என்றான் உடனே பணிந்து. என்ன குரலது.. கம்பீரம் குறையாத உரிமை குரலில் அவன் கேட்க.. 
என்ன சொல்லுவாள்.. தன்மீதே கோவம் வந்தது.. எனக்கு என்ன ஆயிற்று.. இப்படி இவனிடம் எதற்கு பேசணும் என ஏதோ எண்ணம்… அதன் பிறகும் நிற்க முடியவில்லை அவளால்.. வெளியே சென்றுவிட்டாள். வெளியேதான் பாத்ரூம் இருக்கும். எனவே, அதனுள் புகுந்து கொண்டாள்.
சுப்புக்கு என்ன சொல்லுவது தெரியவில்லை.. பிடிக்கலியா… என்னவோ அழுகிறாளே என்றானது.. சங்கடபடுத்துகிரமோ.. என தோன்றியது.. இருக்கவும் மனதில்லை, அவளை அப்படியே விட்டு செல்லவும் மனதில்லை.. அமைதியாக அமர்ந்திருந்தான்.
இத்தனை வருடங்கள் அப்படியில்லையே.. அவளின் முகம் பார்த்து பேசியதில்லையே.. இன்று இந்த கோவமும் வலித்தது.. அதை அவள் மறைக்க திரும்பிக் கொண்டதும் வலித்தது. 
அவளின் அருகில் போய் “என்ன இப்போ… “ என உரிமையாய் கட்டி தழுவ மனம் விழைந்தாலும்… இன்னமும் அவனுள் தயக்கம் மிச்சமிருக்கிறது போல.. ஏதும் செய்யாமல் அமர்ந்து கொண்டான். இந்த நொடி அவனுக்கு நரகமாக இருந்தது. அவளை தாண்ட முடியவில்லை.. ‘என்னவோ செய்’ என முன்போல போக முடியவில்லை.. அதற்காக அருகில் நின்று தேற்றவும், இன்னும் நெருங்க முடியவில்லை.. நரகமாக உணர்ந்தான்.
அவளும், அழுது முடித்து வந்தாள்.. தன் கணவன் அங்கே அமர்ந்திருப்பதை பார்த்து… திரும்பவும் தனதறைக்கு சென்றாள். 
சுப்புக்கு பொறுமை பறக்க தொடங்கியது “பர்வதம், போதும் அழுதது… டீ போடு… எனக்கு வேலையிருக்கு” என்றான் அதட்டலாக..
பர்வதம் பொறுமையாக கால்மணி நேரம் சென்றுதான் வந்தாள்… அப்போதும் முகம் சற்று கலங்கிதான் இருந்தது. சுப்புக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவளை நெருங்க தெரியவில்லை அவனுக்கு.. அதுதான் உண்மை.. அத்தோடு.. இத்தனை மாதம் விலகி இருந்தது, ஏதோ தவறோ எனவும் தோன்ற.. இப்போது இயல்பாய் நெருங்கவரவில்லை.. அவள் முகத்தையே உற்று பார்த்தான்…
அவனை கண்டுகொள்ளாமல், தாண்டி சென்று.. டீ போட்டு.. ஏதோ முறுக்கு எடுத்து வந்து கொடுத்தாள் கொறிப்பதற்கு.. சுப்பு மீண்டும் அவளிடம் பேச நினைத்து.. “உன் தம்பி வந்தாதான்.. வெரைட்டி… ஸ்னாக்ஸ்…” என்றான் ஒரு முறுக்கை கையில் எடுத்தபடியே…
“ஆமாம் அப்படிதான்… என்ன இப்போ… புதுசா எல்லாம் எதுவும் செய்ய முடியாது… எல்லாம் பழைய மாதிரிதான் இருக்கும்” என்றாள் விட்ட சண்டையை தொடர்ந்த படி…
அலட்டாத குரலில் “அப்படியெல்லாம் இல்ல, நீ கூட பழைய பர்வதம் இல்லையே… நானும்தான்.. எனக்கெதுவும் வேண்டாம்.. சும்மா கேட்டேன்” என்றவன் எழுத்து வெளியே வந்தான்..
வர்ஷினி “கேட்டாலும் எதுவும் தர முடியாது” என்றாள்.
நின்றவன் அவளை பார்த்து வசீகரமாக சிரித்தான், பின் அவளை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்து.. மீண்டும் சிரித்தான். வர்ஷினி “எ.. என்ன” என்றாள்.
ஒன்றுமில்லை என்பதாக இடவலமாக தலையசைத்தான்.. வர்ஷினி “என்ன“ என்றாள்… 
“இந்த கலர் புடவை உனக்கு அழகா இருக்கு.” என்றான் சம்மந்தமேயில்லாமல்..
வர்ஷினி “ச்சு..” என திரும்பி நடந்தாள்.
சுப்பு “சரவனன்கிட்ட பேசு.. ரொம்ப சங்கடபடுறான். நீ பேசலைன்னு.. பேசு” என்றான் செல்லும் அவளை பார்த்து.
“ம்…” என்றவள் திரும்பாமல் சென்றாள்.
சுப்பு “அவன் மேல தப்பில்லை பர்வதம், அன்னிக்கு அவன்தான் உனக்கு வீட்டில் சப்போர்ட் செய்தான்… நீ பேசுனா.. தெரியும் பேசு… “ என்றான் இங்கிருந்தே அவளுக்கு கேட்கும் குரலில்.
“ச்சு… பார்க்கலாம்” என்றாள். சுப்பு வெளியே சென்றுவிட்டான்.. எதுவும் இன்னும் ஒரு படி நகர்ந்ததடாக கூட தெரியவில்லை அவனுக்கு. எல்லாம் அதது இடத்தில் இருந்தது. அதுவும் எப்படி பேசினாலும் வர்ஷினி இறுதியில் அழுகையில்தான் முடித்தாள்… அவனுடான உரையாடலை..
வெளியே வந்தவன், பின் மீண்டும் உள்ளே சென்று.. “நாளைக்கு ஆட்கள் வருவாங்க வீட்டு வேலைக்கு.. இங்க சைடில்.. ஒரு ரூம் போடலாம்னு.. ஒரு மாசம் வேலையிருக்கும்…” என்றான். வர்ஷினி எதுவும் சொல்லவில்லை.. அமைதியாக இருந்தாள்..
சுப்பு “சரி.. நான் வரேன்” என அவளைவிட்டு மனதேயில்லாமல் கிளபினான். பானும்மா அப்போது வந்தார்..
“என்ன ப்பா கிளம்பிட்டியா” என்றார்.. “ம்.. ம்மா… நான் போயிட்டு வரேன்.. இங்க இருங்க வரேன்… “ என்றான். இப்படியே மாறி மாறி அம்மாவும் மகனும் அவளை சமாதானம் செய்கிறேன் என… என்னவோ படுத்திக் கொண்டிருந்தனர். அப்படிதான் தோன்றியது வர்ஷினிக்கு.
இப்படியே நாட்கள் நகர்ந்தது.. பேச்சும் சண்டையுமாக… இப்போதெல்லாம் பானுமதியிடம், அமைதியாகவே பேசினாள் வர்ஷினி.. அவரிடம் பட் பட்டென பேசுவது நின்று.. அது தன் கணவனிடம் என மாறியது.
இருவரும் ஒருவரை ஒருவர்.. காயபடுத்திக் கொண்டனர். சுப்பு அவளை சீண்டினான் என்றால்.. இவள் குழப்பத்தில் என்ன பேசுகிறோம் என தெரியாமலே அவனை நிறைய காயபடுத்தி.. அதை சமாளிக்க தெரியாமல் அமைதியாக இருந்து.. என இப்போதெல்லாம் தவித்துக் கொண்டிருக்கிறாள்.
கணவன் என அவனுடன் ஒன்றவும் முடியாமல்.. வேண்டாம் என ஒதுக்கவும் முடியாமல், பெரிய நதியில் துடுபில்லாமல் ஆடும் பரிசலாக.. தவித்துக் கொண்டிருக்கிறாள். 
“காவல் காத்தவன் …
கைதியாய் நிற்கிறேன் வா…
ஊடல் என்பது …
காதலில் கௌரவம்.. போ…
இரண்டு கண்களும் ஒன்று ஒன்றின் 
மேல் கோவம் கொள்வதா..
லா.. லால…
ஆண்கள் எல்லாம் பொய்யின் அம்சம்…
கோவம் கூட.. அன்பின் அம்சம்..
நாணம் வந்தால்… ஊடல் போகும்…”
இன்று.. பானுமதி எப்போதும் போல வந்தார்… இருவரும் சேர்ந்து இரவு உணவுக்கு ஏற்பாடு செய்தனர். செண்பா இப்போதுதான் வந்தார்.. வர்ஷினி அவரை பிடித்துக் கொண்டாள் ‘இதென்ன இந்நேரேம் வரை தோட்டத்தில் வேலை செய்வது… எப்போதும் இப்படி இல்லையே நீங்க… இனி எப்போதும் போல வாங்க… அத்த, இத நீங்க கேட்கமாட்டீங்களா…” என கேட்கவும் செய்தாள்.
ஆனால், பானுமதியும்.. செண்பாவும்… ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். வர்ஷினிக்கு இது ஏதோ என கண்ணில் பட்டது. இருந்தும் ஒன்றும் கேட்காமல் இருந்தாள்.
சுப்புவும்… இப்போதெல்லாம் காலையும் மாலையும்.. அவளின் தரிசனம் பெற்று.. கொஞ்சம் அழவைத்து.. உண்டு.. ஏதோ பேசி சமாளித்துதான் வீடு வருவான், உறங்க மட்டும். தோட்டத்து வீட்டில், புதிதாக.. வீட்டின் பக்கவாட்டில் இப்போது சுவர் எழுப்பி.. ஒரு அறை கட்ட வேலை நடந்து கொண்டிருந்தது .. 
இப்படி ஏதோ பேசியபடியே வேலை நடந்து கொண்டிருக்க, பானுமதி “உனக்கு தாலி பிரிச்சி போடணும்… இப்போதான் நாள் பார்த்துட்டு வந்திருக்கேன்.. வர ஞாயிறு நாள் நல்லாயிருக்கு சொன்னங்க.. உனக்கு ட்டேட் எதுவும் இல்லையே” என்றார் பொறுப்பாய்..
வர்ஷினி இல்லை என்பதாய் தலையசைத்தாள்… அப்படியே ஏதோ பேச்சு சென்றது.. நேரம் செல்ல.. சுப்பு வந்தான்.. சுப்புவிடமும் இந்த செய்தி சொல்லப்பட.. அமர்த்தலான பார்வை பார்த்தான்… “எங்க பங்க்ஷன் செய்ய போறீங்க” என்றான்.
பானு “மண்டபம் இல்ல டா வீட்டில்தான்..” என்றார் சிரித்தபடியே.
“அதான் எந்த வீட்டில்…” என்றான்.
பானுமதிக்கு ஏதோ தட்ட “ஏன் நம்ம வீட்டில்தான்…” என்றார். தயங்கிய குரலில்.
“வேண்டாம்.. இந்த வீட்டிலேயே வைச்சிக்கலாம்” என்றான்.
“இதென்ன டா… எப்படி, அப்பா ஏதாவது சொல்லுவாங்க… அத்தோட அங்கதானே வைக்கணும்” என்றார்
“பரவாயில்லை இங்கேயும் வைச்சிக்கலாம்” என்றான் கடுமையான குரலில்.
“என்ன இப்படி பேசுற…” என்றார்
“எப்படியும் பேசல… இங்க நடத்திக்கலாம்… நான் எல்லா ஏற்பாடையும் பார்த்துக்கிறேன்… யார்க்கு எல்லாம் சொல்றீங்க அத்த.. இவங்க மாமா அவங்க மட்டும்தானே… பெருசா ஒன்னும் கூட்டம் இல்லையே.. இந்த வீடே அளவாய் இருக்கும்… போதும்…
சமையலுக்கு மட்டும் செண்பாக்கா கூட யாராவது ஒரு ஆள் போட்டுக்கலாம்… இங்க வெளிய அட்டானஸ் போட்டு சாப்பாடு போட்டுக்கலாம்.. போதும்.. “ என்றான் உடனடியாக திட்டம் போட்டு.
பானுமதி “இல்ல டா அன்னிக்கே… சாந்தி முகூர்த்ததுக்கு ஏற்பாடு செய்யலாம்னு” என்றார்.
சுப்பு அசரவில்லை “அதான்… எல்லாம் இங்கயே வைச்சிக்கலாம்..” என்றவன் எழுந்து உள்ளே சென்றுவிட்டான். ஒருபுறம் சந்தோஷம், என் மகன் மனைவிக்காக பேசுகிறான் என. இன்னொருபுறம் தன் கணவனை நினைத்தால் வயிறு கலங்கியது.. அவருக்கு.
ஒன்றுமே பேசவில்லை யாரும், வர்ஷினிக்கு சொல்ல முடியாத சந்தோஷம்.. ஏதோ.. அங்கே அழைப்பார்கள் என்ன செய்வது மீண்டும் இவர்களின் இழுப்புக்கெல்லாம் செல்ல வேண்டும் என எண்ணியவளுக்கு தன் கணவன் இப்படி சொல்லவும் அமைதியாக அமர்ந்திருந்தாள். இப்போது பானுமதியின் பாடுதான் திண்டாட்டம் ஆனது.

Advertisement