Advertisement

அத்தியாயம் 9
வாசிக்க நீயின்றி வாடிக் 
கிடக்கின்றன, உன்னை 
நினைத்து நான் 
எழுதிய கவிதை துளிகள்!!!

அவரை பார்த்து சிரித்தவன் “அணு…”, என்று இழுத்தான்.
“இதோ மேல தான் இருக்கா. அணு மா. அர்ஜுன் வந்திருக்கான் பாரு. இங்க வா”
“இதோ பா”, என்ற படியே மாடியில் இருந்து இறங்கி வந்தவளை சத்தியமாக அப்படி ஒரு கோலத்தில் அவன் எதிர் பார்க்க வில்லை. தலையை விரிச்சு போட்டு நைட்டியுடன் வந்தாள் அனுராதா.
“அட பாவி கிளம்பிட்டேனு சொன்னா. இவ இன்னும் குளிக்கவே இல்லை போல”, என்று நினைத்து அவளை முறைத்தான்.
அவன் பார்வையை உணர்ந்தவள், அதை கண்டு கொள்ளாமல் “அப்பா இது அர்ஜுன்”, என்று அறிமுக படுத்தினாள்.
“அது தான் பல தடவ சொல்லிட்டியே. சரி இது அர்ஜுன். ஆனா உனக்கு யாருனு சொல்லலையே”, என்று வம்பிழுத்தார் வாசு தேவன்.
அர்ஜுனுக்கு மூச்சடைத்து. “என்ன இப்படி கேட்டுட்டார்? இவ என்னனு சொல்லுவா?”, என்று அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
அவள் “நீயே கண்டு பிடிப்பா”, என்றாள்.
தாடையை தடவிய வாசு தேவன் “உன்னோட பிரண்டு தானே? எப்படி கண்டு பிடிச்சேன் பாத்தியா?”, என்றார்.
நிம்மதியாக மூச்சு விட்டான் அர்ஜுன்.
அவனுக்கு ரத்த அழுத்தத்தை எகிற வைப்பதுக்காகவே “தப்பு பா. நாங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்”, என்று சொன்னாள் அணு.
அதிர்ச்சியாக விழித்த அர்ஜுன் “ஐயையோ அப்படி எல்லாம் இல்லை”, என்றான்.
அவனை பார்த்து அப்பாவும், மகளும் சிரித்தார்கள்.
“என்ன அணு குட்டி? அர்ஜுன் லவ் இல்லைனு சொல்றான்?”, என்று கேட்டார் வாசுதேவன்.
“ஆமா. எதுக்கு டா லவ் இல்லைனு சொல்ற? நாம தான் லவ் பன்றோம்ல?”, என்றாள் அணு.
“ஐயோ அப்படி எல்லாம் இல்லை. அணு பொய் சொல்றா அங்கிள்”, என்று அலறினான் அர்ஜுன்.
“அவன் தான் பா பொய் சொல்றான். நேத்து அவங்க வீட்ல வச்சு முத்தம் எல்லாம் கொடுத்தான்”, என்று சொல்லி வாசு தேவனை பார்த்து கண்ணடித்தாள்.
“ஐயோ அங்கிள் சத்தியமா இவ நேத்து எங்க வீட்டுக்கே வரலை. நான் அப்படி எல்லாம் செய்யலை. நீங்க நம்புங்க. நான் கிளம்புறேன்”, என்று வெளியே போக கால் எடுத்து வைத்தான்.
அவன் கையை பிடித்து இழுத்த வாசு தேவன் “அவ விளையாடுறானு எனக்கும் தெரியும் அர்ஜுன். நீ உக்காரு”, என்றார்.
“அப்பாடி”, என்று மூச்சு விட்டான் அர்ஜுன்.
“அப்பா அர்ஜுனுக்கு காபி கொடு”, என்றாள் அணு.
“சரி மா”, என்ற படியே எழுந்தார் வாசு தேவன்.
“ஐயோ நீங்க போய். அதெல்லாம் வேண்டாம் அங்கிள். நான் வீட்ல சாப்பிட்டுட்டு தான் வந்தேன்”, என்று தடுத்தான்.
“அதெல்லாம் சிரமம் இல்லை. நானும் இப்ப  தான் போடணும்னு நினைச்சேன். நீ உக்காரு. இப்ப வந்துறேன்”, என்று சொல்லி விட்டு போய் விட்டார்.
வந்த கடுப்பில் அருகில் நின்றவளை தலையில் ஒரு கொட்டு கொட்டினான் அர்ஜுன்.
தலையை தடவி கொண்டவள் “எதுக்கு டா கொட்டுன?”, என்று கேட்டாள்.
“எதுக்கு இப்படி அவர் கிட்ட சொன்ன? நான் பயந்தே போய்ட்டேன்”, என்று சொன்னவன் மறுபடியும் ஒரு கொட்டு கொட்டினான்.
“இப்ப திருப்பியும் எதுக்கு அஜ்ஜு கொட்டுற? வலிக்குது டா”
“பின்ன வீட்ல அப்பா இருக்காருன்னு சொல்ல வேண்டியது தானே?  எதுக்கு யாரும் இல்லைனு சொன்ன?”
“யாரும் இல்லைன்னு சொன்னதுக்கே நீ வர மாட்டேன்னு சொன்ன. அப்பா இருக்காருன்னு சொல்லிருந்தா ஓடியே போயிருப்ப. அதான் சொல்லலை”, என்று சிரித்தாள் அணு.
“சரி கிளம்பிட்டேன்னு சொன்ன? இப்ப இந்த கோலத்தில் இருக்குற? இது தான் கிளம்புறதா?”
“நீ போன் பண்ணப்ப தான் எழுந்தேன் அஜ்ஜு. இப்ப வந்துருவேன். நீ காபி குடி”, என்று சொல்லி விட்டு துள்ளி குதித்து ஓடினாள்.
அவளையே பார்த்து கொண்டிருந்தவனுக்கு அவள் ஓடும் போது அவளுடைய பின் புறம் கண்ணில் பட்டு கருத்திலும் பதிந்து இம்சித்தது.
“என்ன செய்றேன் நான்?”, என்று நினைத்து முகத்தை திருப்பி கொண்டான் அர்ஜுன்.
அந்த வீட்டையே கண்களால் அளவெடுத்து கொண்டு அமர்ந்திருந்தான் அர்ஜுன்.
வாசு தேவன் காபியுடன் வந்தார். அவனுக்கு கொடுத்து விட்டு அவரும் பருக துடங்கினார்.
“என்னோட பொண்ணு சொன்னது எல்லாம் உண்மை தான் அர்ஜுன்”, என்று ஆரம்பித்தார் வாசு தேவன்.
“இவர் அவ சொன்னதுல எதை சொல்லறாருனு தெரியலையே”, என்று விழித்தவன் “நீங்க எதை சொல்றீங்க அங்கிள்?”, என்று கேட்டான்.
“அவ உன்னை லவ் பண்றேன்னு சொன்னதை தான் சொல்றேன். அது உண்மை தான். உனக்கு அது புரியலையா?”
“அங்கிள் ….”
“என்ன அதிர்ச்சியாகுற அர்ஜுன்? அணுவை உனக்கு பிடிக்கலையா?”
“நானே இப்ப தான் அவளை லவ் பண்றேன் அப்படிங்குறதையே உணர்ந்திருக்கேன். இப்ப போல இவர் இப்படி கேக்குறாரே. இவர் நல்லவரா? கெட்டவரா?”, என்று யோசித்தவன் “அவ விளையாட்டுக்கு சொல்லிட்டு போறா”, என்றான்.
“இல்லை அர்ஜுன். அவ உண்மையா தான் சொல்லிட்டு போறா”
“இல்லை அங்கிள் நேத்து கூட”, என்று ஆரம்பித்து தர்மராஜ் சாரை பற்றி சொல்ல ஆரம்பித்தவன் “அவளுடைய ஹஸ்பண்டை தான் விரும்புவாளாம். அவளே சொன்னா”,. என்று முடித்தான்.
“அது சரி தான். ஆனா அவ உன்னை தான் ஹஸ்பண்டா நினைக்க ஆரம்பிச்சிட்டானு தோணுது”
“இது தான் டா நல்ல சந்தர்ப்பம். அவர் கிட்ட சொல்லிரு டா”, என்று குரல் கொடுத்தது மனசாட்சி.
தைரியத்தை வரவழைத்து கொண்டு “நான் அவளை லவ் பண்ண கூடாதா அங்கிள்?”, என்று கேட்டான் அர்ஜுன்.
“இதை தான் எதிர் பாத்தேன்”, என்று நினைத்து கொண்டு அவனை பார்த்தார் வாசு தேவன்.
“நீ கேக்குறது சரி தான் அர்ஜுன். ஆனா அவ உனக்கு வேண்டாமே. வேற நல்ல பொண்ணு உனக்கு கிடைப்பா பா”
“அங்கிள்….”
“ஆமா அர்ஜுன். அணு உனக்கு வேண்டாம். அவளை எல்லாம் உன்னால சமாளிக்க முடியாது.  குழந்தை மாதிரி சிணுங்குவா. நான் அவளை இப்படி வளத்துட்டேன் போல. உனக்கு அவ பண்றதுல வெறுப்பு கூட வரலாம். அது உங்க ரெண்டு பேரோட வாழ்க்கைக்கு சரி பட்டு வராது”
“அவ இப்படி சின்ன பிள்ளை மாதிரி நடந்துக்குறது எனக்கு பிடிச்சிருக்கு அங்கிள். அவ என்னை இப்படி எல்லா விசயத்துக்கும் சார்ந்து இருக்கணும்னு தான் நான் விரும்புறேன்”
“என்ன பா சொல்ற?”
“எனக்கு தெரியும் அங்கிள் அணுவை பத்தி. அவ உங்க கிட்ட மட்டும் தான் செல்லம் கொஞ்சுவா. மித்தவங்க எல்லார் கிட்டயும் ஆளுமையா தான் நடந்துக்குவா. இப்ப உங்க கிட்ட மாதிரியே என்கிட்ட நடந்துக்குறா. நேத்து கதை சொல்லி நான் தான் அவளை தூங்க வச்சேன் தெரியுமா?”, என்று தாஜ்மகால் கட்டியது போல பெருமையாக சொன்னான் அர்ஜுன்.
அவனை பார்த்து சிரித்தார் வாசு தேவன்.
“காலேஜ்ல எல்லாரும் அவளை பாத்து மிரண்டு ஓடுவாங்க. ஆனா அவ பயந்து என்கிட்ட ஓட்டிகிட்டா. அப்ப தான் அவ குணம் புரிஞ்சது. அப்புறம் தான் உங்க கிட்டயும் அப்படி இருப்பான்னு புரிஞ்சிக்கிட்டேன். அதுல தான் எனக்கு தெளிவா ஆச்சு. உங்கள மாதிரியே அவ என்னை நினைக்கிறானு. அவளை நானும் உங்களை மாதிரியே பாத்துக்குவேன் அங்கிள்”
“இதை விட அழகாக யாராலும் பொண்ணு கேக்க முடியுமா?”, என்று நினைத்து கொண்ட வாசு தேவனுக்கு மனம் நிறைவாக  இருந்தது.
“என் பொண்ணோட சந்தோசம் தான் எனக்கு ரொம்ப முக்கியம் அர்ஜுன். உனக்கு தான் அவ உன்னை விரும்புறானு புரியல. ஆனா எனக்கு புரியுது. நைட் தூக்கத்துக்கு கூட அவ இப்ப எல்லாம் என்னை தேடுறது இல்லை. உங்க அம்மாவும் என்கிட்ட பேசுனாங்க. எனக்கு ரொம்ப சந்தோசம். நீ மாப்பிள்ளையா வரதுக்கு கொடுத்து வச்சிருக்கணும் அர்ஜுன்”
“என்னது அம்மா பேசுனாங்களா? எப்ப அங்கிள்?”
“நேத்து நைட் அணு கூட பேசிட்டு இருந்தாங்க. அப்ப என்கிட்ட கொடுத்தா. என்கிட்டயும் பேசுனாங்க”
“என்ன சொன்னாங்க அங்கிள்?”
“நீ இப்ப சொன்னதை தான் சொன்னாங்க. அவங்க கிட்ட நேத்தே நான் சம்மதம் சொல்லிட்டேன் அர்ஜுன். ஆனா மனசுக்குள்ள அவளை பத்தி உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன். இப்ப தான் நிம்மதியா இருக்கு எனக்கு”
“அங்கிள்”, என்று திகைப்பாய் அழைத்தான் அர்ஜுன்.
அவனை சிரிப்புடன் பார்த்தவர் “இது பைனல் இயர் தானே? படிச்சு முடிச்சிட்டு என்ன செய்ய போற அர்ஜுன்?”, என்று கேட்டார்.
திகைப்பிலிருந்து வெளியே வந்தவன்  “எம்.பி.ஏ பண்ண போறேன் அங்கிள். அப்புறம்  அப்பா வோட ஆபிசை நான் தான் பாத்துக்கணும். இப்போதைக்கு மேனேஜர் தான் பாத்துக்குறார்”, என்றான்.
“என்ன ஆபிஸ் பா? எங்க இருக்கு? அம்மா கிட்ட அதெல்லாம் நான் பேசலை. நல்ல குடும்பம்னு மனசுக்கு பட்டது. அது மட்டும் இல்லாம என்னை விட பல மடங்கு அதிகமா யோசிச்சு தான் அணு ஒருத்தங்க கூட பழகுவா. தப்பானவங்களை சுலபமா கண்டு பிடிச்சிருவா. அவளே அத்தை அத்தைனு உங்க அம்மா கிட்ட உருகும் போது, என்னால எப்படி உங்க குடும்பத்தை சந்தேக பட முடியும் அர்ஜுன்”
“பொண்ணு மேல இவருக்கு இவ்வளவு நம்பிக்கையா?”, என்று நினைத்து கொண்டு “இங்க ஏ. எஸ். ஆர் லெதர் பேக்டரியும், ஷூ, பேக், பெல்ட் எல்லாம் தயாரிக்கிற பேக்டரியும் அப்போவோடது தான். கேள்வி பட்டுருக்கீங்களா?”, என்று கேட்டான் அர்ஜுன்.
அதையும் அவனோடது என்று சொல்லாமல் அப்பாவோடது என்று சொல்லும் அவனை வியப்புடன் பார்த்தவர் சிரித்த முகத்துடன் “கேள்வி பட்டிருக்கேன் பா. ஆனா உங்களோடதுனு தெரியாது”, என்றார்.
…..
“அப்ப எம். பி. ஏ முடிச்ச உடனே கல்யாணம் வச்சிக்கலாமா? அதுக்குள்ள அவளும் டிகிரி வாங்கிருவா”
“ஹ்ம்ம் சரி அங்கிள். என் கல்யாணம் இவ்வளவு சீக்கிரம் முடிவாகும்னு நானே யோசிக்கல”, என்று சிரித்தான் அர்ஜுன்.
“எல்லாம் கடவுள் சித்தம் பா. நீயும், உங்க அம்மாவும் அணுவை நல்லா பாத்துக்குவீங்கன்னு முழுசா நம்புறேன். இப்ப தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு. இவ்வளவு நாளும் எனக்கப்புறம் அவளை யார் பாத்துப்பாங்கனு கவலை பட்டிருக்கேன். இப்ப அந்த கவலையே இல்லாம நிம்மதியா இருக்கு”
“நீங்களும் எனக்கு அப்பா மாதிரி தான் அங்கிள். உங்களையும் நான் நல்லா பாத்துக்குவேன்”
“ரொம்ப சந்தோசம் அர்ஜுன். இன்னும் என்ன அங்கிள்? மாமான்னு சொல்லு”
“சரி மாமா”, என்று சிரித்தான் அர்ஜுன்.
இவர்கள் உலக விஷயங்களை அலசி ஆராயும் போது தான் வந்து சேர்ந்தாள் அணு.
அவளை பார்த்து அசந்து விட்டான் அர்ஜுன்.
தினமும் காலேஜ்க்கு சாதாரண சுடிதாரில் வருபவள் இன்று கொஞ்சம் கிராண்டான சுடிதார் அணிந்திருந்தாள்.
அவன் பார்வையை அணு உணர்ந்தாலும் கண்டு கொள்ளாமல் “அப்பா நாங்க வெளிய போயிட்டு வரோம். நீயும் வரியா? அர்ஜுன் பைக் வாங்கினதுக்கு ட்ரீட் தாரான்”, என்றாள் அணு.
“உனக்கு தான் தெரியுமே அணு மா. நான் வெளிய சாப்பிட மாட்டேன்னு. நீங்க போய்ட்டு வாங்க. பத்திரமா போய்ட்டு வரணும். எவ்வளவு நேரம் ஆகும் அர்ஜுன்?”, என்று கேட்டார் வாசு தேவன்.
“எட்டு மணிக்குள்ள வந்துருவோம் மாமா”, என்றான் அர்ஜுன்.
“ஏய் நீ என்ன எங்க அப்பாவை மாமான்னு சொல்ற?”, என்று கேட்டு புருவம் உயர்த்தினாள் அணு.
அவள் செய்கையை ரசிக்க சொன்ன மனதை அடக்கியவன் “நீயும் தான் எங்க அம்மாவை அத்தைன்னு சொல்ற? அதே மாதிரி தான் இது. அப்படி தான  மாமா?”, என்று கேட்டான் அர்ஜுன்.
“ஆமா அணு. அர்ஜுன் சொல்றது தான் சரி”, என்றார் வாசு தேவன்.
“ஹ்ம்ம், சரி எப்படியோ கூப்பிட்டுக்கோ அர்ஜுன்”, என்று அவனிடம் சொன்னவள் வாசு புறம் திரும்பி “அப்பா அர்ஜுனை நாளைக்கு என்னை வெளிய கூட்டிட்டு போக சொல்லு பா”, என்றாள்.
“சேட்டையை பாத்தியா இவளுக்கு, என்கிட்ட கூட்டிட்டு போன்னு சொல்லாம மாமா கிட்ட சொல்றா”, என்று நினைத்து கொண்டான்.
நாளைக்கு என்ன நாள் என்று யோசித்தவர், “அர்ஜுன் நாளைக்கு அணுவோட பிறந்த நாள். அவளை எங்கயாவது கூட்டிட்டு போ”, என்றார்.
பிறந்த நாள் என்ற வார்த்தையிலே கனவுக்கு போனவன் அவர் கொடுத்த இந்த சலுகையை  ஏற்காமல்  இருப்பானா என்ன? உடனே சரி என்றது அவன் உதடுகள்.
“தேங்க்ஸ் பா. நீ சொன்னதுனால தான் அவன் சரினு சொன்னான். டாட்டா. நீ எதாவது சாப்பிடு. வரணும்னா எங்க கூட வா”, என்றாள் அணு.
“நீங்க போய்ட்டு வாங்க. நான் வீட்ல செஞ்சு சாப்பிட்டுக்குறேன்”, என்றார் வாசு தேவன்.
“சரி மாமா. போயிட்டு வரோம். அப்புறம் இனி அவளுக்கு நானே கதை சொல்லி தூங்க வச்சிக்குறேன். நீங்க குடிக்க எல்லாம் வேண்டாம்”, என்று சிரித்தான் அர்ஜுன்.
“இதை விட நிம்மதி வேற வேணுமா? இந்த உலகத்துல ரொம்ப சந்தோச படுறது நான் தான். எவ்வளவு பெரிய பிரச்சனை என்னை விட்டு விலகிட்டு”, என்று சிரித்தார் வாசு தேவன்.
“நான் உனக்கு பிரச்சனையா பா. உன்னை வந்து வச்சிக்குறேன். வா அர்ஜுன் போகலாம்”, என்று சொல்லி விட்டு வெளியே நடந்தாள் அணு.
அவரை பார்த்து சிரித்தான் அர்ஜுன்.
“இந்த வாலை உன் தலைல கட்டிட்டேன். இனி என்ன பாடு பட போறியோ அர்ஜுன்”
“வாழ்க்கை இத்தனை நாளும் சாதாரணமா போச்சு மாமா. அணுவை பாத்த பிறகு விறு விறுப்பா போகுது. எனக்கு பிடிச்சிருக்கு. போய்ட்டு வரோம்”
“பத்திரம் பா. சந்தோசமா போயிட்டு வாங்க”, என்று சிரித்தார் வாசு தேவன்.
அங்கே மரத்தடியில்  இருந்த பைக்கை தடவை பார்த்து கொண்டிருந்தாள் அணு.
சிரித்து கொண்டே அவள் அருகே சென்றான்.
“பைக் செமையா இருக்கு டா”
“தேங்க்ஸ் அணு”
“அதை விட நீ ரொம்ப அழகா இருக்க டா அஜ்ஜு. முகம் புல்லா சிரிப்பா இருக்கு. அப்படியே பாக்க ஹீரோ மாதிரி இருக்க?”
“வாழ்க்கைல நடக்கவே நடக்குதுன்னு நினைச்ச பைக் கிடைச்சிருக்கே? சந்தோசம் இல்லாம இருக்குமா? போகலாமா?”
“ஹ்ம்ம் வண்டியை எடு”
அவன் ஸ்டார்ட் செய்ததும் இரு பக்கம் கால் போட்டு அமர்ந்து அவனை திகைக்க வைத்தாள் அணு.
உருகுதல் தொடரும்…..

Advertisement