Advertisement

“எதுக்கு வைக்க போற?”
“நீ தானே அணு தூக்கம் வருதுன்னு சொன்ன? அதான் போன் வைக்கிறேன்”
“லூசு தூக்கம் வருதுன்னா, அணுவுக்கு இப்ப கதை சொல்லணும்னு அர்த்தம். கதை சொல்லு”, என்று குண்டை தூக்கி போட்டாள்.
“என்னது பத்து மணிக்கு கதையா?”, என்று திகைத்தான் அர்ஜுன்.
“எதுக்கு அதிர்ச்சியாகுற? எனக்கு அப்ப தான் தூக்கம் வரும்”
“எனக்கு அதெல்லாம் சொல்ல தெரியாது அணு”
“இப்பவே பழகிக்கோ. பின்னாடி யூஸ் ஆகும்”
அவள் சொன்னதை கேட்டு சிரித்து கொண்டே கதை சொல்ல ஆரம்பித்தான் அர்ஜுன்.
அவளிடம் இருந்து சத்தம் வராமல் போகவும் தான் போனை வைத்து விட்டு படுத்தான் அர்ஜுன்.
“காதலிக்கிற எல்லாரும் மிட் நைட்ல என்னனென்னவோ பேசுவாங்க. நான் நாய் கதை பூனை கதை சொல்லிட்டு இருக்கேன்”, என்று நினைத்த அர்ஜுன் அடுத்த நிமிடம் திகைத்து விட்டான்.
“இப்ப எதுக்கு நான் லவ் பண்றவங்களை பத்தி நினைச்சேன். அவங்க கூட எதுக்கு நாங்க பேசுவதை கம்பேர் செஞ்சேன். அப்ப அணுவை நான் லவ் பண்றேனா? அதனால தான் அவளை பாத்ததும் எனக்கு சந்தோசமா இருக்கா? அவளை ஆர்வமா நான் பாக்குறது இதுனால தானா?”, என்று வாய் விட்டே கேட்டான் அர்ஜுன்.
“உனக்கு இப்ப தான் புரியுதா? ஸ்போர்ட்ஸ் ரூம்ல அவ உன் மேல விழுந்தப்ப, சீக்கிரம் விலகுறாளேன்னு நீ நினைச்சப்பவே எங்க எல்லாருக்கும் தெரிஞ்சிட்டு. நீ அவளை லவ் பண்றேன்னு. ஆனா இப்ப தான் நீ கண்டு பிடிச்சிருக்க. நீ வேஸ்ட் அர்ஜுன்”, என்று சிரித்தது மனசாட்சி.
“ஆமால்ல. நான் ஏன் அப்படி நினைச்சேன்? எப்ப இருந்து அவளை ஆர்வமா பாத்தேன். அவ அந்த பையனை முதல் நாள் அடிக்கும் போது அவ முகத்தை கூட நான் ஒழுங்கா பாக்கலை. அவளை நல்ல பாத்தது அந்த டென்னிஸ் டிரெஸ்ல சந்தோசமா நடந்து வந்தப்ப தான். அப்ப தான் அவளை ஆர்வமா பாத்தேன். ஆனா அப்ப லவ் இருந்ததா? இல்லையே அதுக்கப்புறம், அவளை ஸ்போர்ட்ஸ் ரூம் குள்ள வச்சு கிட்டக்க பாத்தப்ப தான் என் மனசுல பாதிப்பு வந்துருக்கு. எதனால வந்துச்சு?”, என்று யோசித்து பார்த்தவனுக்கு விடை கிடைத்தது.
அவள் கண்களை பார்த்த நொடி அவன் விழுந்தே விட்டான். “அவ கண்ணு கண்ணு.. கண்ணா அது? அப்பா… எப்படி இருக்கு? அதுக்கப்புறமும் அவ கண்ணை பாத்துட்டே நான் பேசுனதுக்கு காரணம் இது தானா? கண்ணை பாத்து காதல் வருமா? இது காதல் தானா? சரி இது காதல்னு வச்சிக்கிட்டாலும் அவளுக்கு என் மேல என்ன பீலிங் இருக்கு? அவ எதனால எங்க அம்மாவை அத்தைனு கூப்பிட்டா? எதனால அன்னைக்கு வீட்டுக்கு வந்தா அவ்வளவு தான்னு சொன்னா? அப்ப அவளும் என்னை விரும்புறாளா? இல்லை சும்மா நட்பா தான் பழகுறாளா? இப்ப ஹஸ்பண்டுன்னு சொன்னது என்னை தானா? அன்னைக்கு அம்மா கிட்ட என்ன சொன்னா? இப்ப என்னோட காதலை சொன்னா அவ என்ன செய்வா? என்னோட நட்பே வேண்டாம்னு விலகி போயிருவாளா? அணு மா என்னை விட்டு போயிருவியா?”, என்று யோசித்து விடை தெரியாமல் தலையை பிய்த்து கொண்டான் அர்ஜுன்.
அதே நேரம் எந்த கவலையுமில்லாமல் ஒரு தலையணையை கட்டி பிடித்து நன்கு தூங்கி கொண்டிருந்தாள் அணுராதா.
அடுத்த நாள் காலை பதினோரு மணிக்கே போன் செய்து விட்டாள் அணு. சாப்பிடும் நேரம் தவிர, பகல் முழுவதும், அவனுடன் பேசி கொண்டே இருந்தாள். அவள் குரலில் இருந்த உற்சாகம், அவனுடைய மன குழப்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு அவளுடன் பேச வைத்தது.
அவளுடன் பேசி முடித்து விட்டு நான்கு மணிக்கு அம்மாவிடம் சொல்லி விட்டு, கிளம்பினான் அர்ஜுன்.
“இந்தா இந்த போனை கொண்டு போ டா. அணு உன்கிட்ட கொடுக்க சொன்னா”, என்றாள் சந்திரிகா.
“உங்க போனை தாறீங்க. நீங்க என்ன மா செய்வீங்க?”, என்று கேட்டான் அர்ஜுன்.
“ஆமா நான் வயசு பையன் பாரு? போனும் கையுமா திரியுறதுக்கு. கொண்டு போ டா. அதான் வீட்ல லேண்ட் லைன் இருக்கே”
“ஹ்ம்ம் சரி மா. அப்புறம் அணுவுக்கு ட்ரீட் கொடுத்துட்டு தான் வருவேன் மா”
“சரி டா பாத்து போய்ட்டு வா”
“அம்மா”
“என்ன அர்ஜுன்?”
“அன்னைக்கு உங்க காதுல அணு என்ன சொன்னா?”
“ஹா ஹா, இதை அவ கிட்டயே கேளு. பாத்து பத்திரமா போகணும் வரணும்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள் சந்திரிகா.
“என்ன சொல்லிருப்பா?”, என்று நினைத்து கொண்டே ஒரு ஆட்டோ பிடித்து ஷோ ரூம் சென்றான்.
அங்கே எல்லா வேலையும் முடிக்கவே ஒரு மணி நேரம் ஆனது. ஐந்தரைக்கு வண்டியை வெளியே எடுத்து வந்தவனுக்கு மனம் எல்லாம் உற்சாகமாக இருந்தது. சந்தோஷத்தில் மிதந்தான் என்றே சொல்லலாம். அவனோட கனவு, அவனுக்கே அவனுக்குன்னு ஒரு பைக். சந்தோசமாக அதை தடவி கொடுத்தவன் “நீ எனக்கு கிடைச்சதுக்கு  அணுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்”, என்று நினைத்து அவள் வீட்டை நோக்கி செலுத்தினான். 
வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தியவன் அவளை போனில் அழைத்தான்.
“என்ன டா பைக் வாங்கிட்டியா?”, என்று சந்தோசமாக கேட்டாள் அணு.
“வாங்கிட்டேன். நீ கிளம்பிட்டியா? வா போகலாமா?”
“கிளம்பிட்டேன் டா. இன்னும் கொஞ்ச நேரம் ஆகும். நீ உள்ள வா”
“என்ன விளையாடுறியா? உள்ள எல்லாம் வர முடியாது. நான் வெளிய நிக்குறேன்”
“கொன்னுருவேன் அஜ்ஜு. ஒழுங்கா உள்ள வா. நீ உள்ள வரலைனா நான் வரவே மாட்டேன். நாங்க என்ன தீண்ட தகாதவங்களா? எங்க வீட்டுக்கு எதுக்கு வர மாட்ட?”
“அது இல்ல அணு. நான் உள்ள வந்தா யாரவது எதாவது நினைப்பாங்க”
“யாரு என்ன நினைப்பா? வீட்ல யாருமே இல்லை. நான் மட்டும் தான் இருக்கேன் வா”
“ஐயோ அப்ப வரவே மாட்டேன். நீ மட்டும்னா?”
“லூசு அர்ஜுன். உன்னை என்ன கடிச்சா திங்க போறேன். உள்ள வா டா. நான் கிளம்பனும்”
“பக்கத்து வீட்ல யாராவது எதாவது நினைப்பாங்க அணு மா”
“அதெல்லாம் நினைக்க மாட்டாங்க. இப்ப நீ வீட்டுக்கு வெளிய நின்னு இவ்வளவு நேரம் போன் பேசி, அப்புறம் நான் வெளிய வந்து உன்கூட பைக்ல ஏறி போனா தான் தப்பா நினைப்பாங்க. சும்மா கெஸ்ட் மாதிரி வா டா”
“நான் வர மாட்டேன்”
“அப்ப சரி. என் வீட்டுக்கு கூட வர மாட்டிக்கல்ல. இனி என்கிட்ட பேசவே செய்யாத. பை”
“ஏய் இரு இரு வச்சிறாத. எதுவும் பிரச்சனை வராது தானே?”
“அதெல்லாம் வராது. நீ வா. கேட் திறந்து தான் இருக்கு. நான் வைக்கிறேன்”, என்று சொல்லி வைத்து விட்டாள்.
காதலை மனதுக்குள் உணர்வதுக்கு முன்னாடி இப்படி ஒரு சூழ்நிலை வந்திருந்தா கூட தைரியமா உள்ளே போயிருப்பானோ என்னவோ? இப்போது அவனுக்கு கை கால்கள் எல்லாம் நடுங்கியது.
அவ கூட தனியா இருந்தாலும் காதலை சொல்லாமல் அவள் விரலை கூட அவன் தொட போறது இல்லை தான். ஆனால் மனதுக்குள் வந்த கள்ளம் அவனை பயங்கரமாக நடுங்க வைத்தது.
வேறு வழி இல்லாமல் தைரியத்தை வர வளைத்து கொண்டு “சீக்கிரம் அவளை கூட்டிட்டு வெளிய ஓடிறனும்”, என்று வாய் விட்டு புலம்பி கொண்டே உள்ளே சென்றான் அர்ஜுன்.
காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தான்.
“இப்ப வருவா. அப்படியே அவளை கூட்டிட்டு போயிறணும்”, என்று நினைத்து தயாராய் நின்றான் அர்ஜுன்.
ஆனால் கதவை திறந்த ஆளை பார்த்ததும் திகைத்தே விட்டான்.
அங்கே நின்றிருந்தது வாசு தேவன், அணுவின் அப்பா.
ஒரே நேரத்தில் நிம்மதியும், கொஞ்சம் பட படப்பும் வந்தது அர்ஜுனுக்கு.
“வா பா அர்ஜுன். என்ன திகைச்சு போய் நிக்குற? உள்ளே வா”, என்றார் வாசு தேவன்.
மேலும் திகைத்து விட்டு  அவருடைய குரலிலும், முகத்தில் இருந்த அவருடைய சிரிப்பையும் பார்த்தவன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனான். அவரை பார்த்து அவன் உதடுகளும் விரிந்தது,
“இவரை உள்ள வச்சிட்டு தான் யாரும் இல்லைன்னு சொன்னாளா?”, என்று நினைத்து கொண்டே அவர் பின்னே சென்றான் அர்ஜுன்.
“உக்காரு அர்ஜுன்”, என்று சொன்னவர் அவன் அமர்ந்ததும் அவன் எதிரே அமர்ந்தார்.
“என்னை உங்களுக்கு தெரியுமா அங்கிள்?”, என்று எச்சில் விழுங்கி கொண்டு கேட்டான் அர்ஜுன்.
“எங்க வீட்டு சர வெடிக்கு கிடைச்சிருக்க பிரண்டை பத்தி தெரியாம போகுமா? அர்ஜுன் புராணம் பாடி எனக்கு காது வலியே வந்துருச்சு”, என்று சிரித்தார் வாசு தேவன்.
அவர் சிரித்தாலும் அவனை அவருடைய எக்ஸ்ரே பார்வை கூர்மையாக அளவிட்டது.
உருகுதல் தொடரும்…..

Advertisement