Advertisement

“நல்லவர் மட்டுமா? இந்த காலேஜ் பொண்ணுங்க நம்மளை பாக்குதுங்களோ இல்லையோ அவரை தான ஹீரோ மாதிரி சைட் அடிக்கிறாங்க. அவரை போய் எதுக்கு இப்படி சொல்றாங்கன்னு தெரியலையே. மாஸ் ஹீரோ மச்சி அவர். அவர் கிளாஸ்ல மட்டும் தான் நான் தூங்கவே மாட்டேன். நானே சைட் அடிச்சிருக்கேன்னா பாத்துக்கோயேன்”, என்றான் ராகுல்.
“வாங்க டா என்னனு பாப்போம்”, என்று கதிர் சொன்னவுடன் மூவரும் அவர்கள் பின்னே சென்றார்கள்.
அங்கே பிரின்சிபால் வாசல் முன்னர் கூட்டம் குழுமி விட்டது.
“இன்னைக்கு என்ன பிரச்சனையோ?”, என்று தனது சொட்டை தலையை தடவிய படியே வெளியே வந்தார் பிரின்சிபால் ராஜகோபால்.
அவர் கண்ணில் “தர்மா சாரை சஸ்பேண்ட் செய்யவும்”, என்று கோஷமிட்டு கொண்டிருந்த அணு தான்  பட்டாள்.
அவர்கள் அருகில் சென்றவர் “என்ன மா  என்ன ஆச்சு? என்ன பிரச்சனை?”, என்று கேட்டார்.
“தர்மா சாரை சஸ்பேண்ட் செய்யணும் சார்”, என்றாள் அணு.
பிரின்சிபால் பீயுனை அழைத்து, தர்மா சாரை அழைத்து வர சொல்லி விட்டு அவளிடம் திரும்பியவர் “இப்ப தெளிவா  சொல்லு மா. என்ன பிரச்சனை?” என்று கேட்டார்.
“அவர் கிளாசில் நடந்து கிட்டது சரி இல்லை சார்”, என்றாள் அணு.
“தர்மா அப்படி பட்டவர் இல்லை மா. நீங்க எல்லாரும் எந்த இயர்? என்ன டிபார்ட்மென்ட்?”
“நாங்க பர்ஸ்ட் இயர்  பி. பி. ஏ சார்”
“ஓகே, தர்மா  சார் என்ன செஞ்சாங்க?”
“இல்லை  சார். அவர் கிளாசில் பேசுறது எங்களுக்கு பிடிக்கலை. இதோ இருக்காளே பவித்ரா”, என்று அருகில் இருந்த பெண்ணை கை காட்டினாள் அணு.
அவள் அழுது கொண்டிருந்தாள்.
“எதுக்கு இந்த பொண்ணு அழுதுட்டு இருக்கு?”, என்று கேட்டார் பிரின்சிபால்.
“தர்மா  சார்  எங்களுக்கு எந்த சப்ஜெக்ட்டும் எடுக்கலை சார். சீனிவாசன் சார்க்கு பதிலா இன்னைக்கு தர்மராஜ் சார் வந்தாங்க. வந்து சும்மா ஜாலியா பேசுறேன் அப்படிங்குற பேர்ல, இவளை எழுப்பி விட்டு நைட் பன்னிரண்டு மணிக்கு தனியா போற, சுத்தி நாலு பசங்க வந்து நின்னுட்டா என்ன பண்ணுவேன்னு கேட்டார். பசங்க முன்னாடி கேட்டு, இவ ஒரே அழுகை. நான் சாக போறேன். எல்லாரும் என்னை பாத்து சிரிச்சிட்டாங்கன்னு சொன்னா. அவரும் எதுக்கு சார் கிளாசுக்கு வந்து அந்த மாதிரி பேசணும்? அதுவும் ரேப் அது இதுன்னு பேசி… நாங்க எல்லாரும் தலை குனிஞ்சு உக்காந்துருந்தோம் சார்”, என்று முடித்தாள் அணு.
அவள் சொல்லி முடிக்கவும் தர்மராஜ் அங்கு வரவும் சரியாக இருந்தது. இருபத்தி எட்டு வயது அழகான இளைஞன் தான் தர்மராஜ். அந்த காலேஜில் அவரை பிடிக்காத பெண்களே இல்லை என்று சொல்லலாம்.
“என்ன தர்மராஜ் இது?”, என்று கேட்டார் பிரின்சிபால்.
“என்ன ஆச்சு சார்?”, என்று திருப்பி கேட்டார் தர்மராஜ்.
“நீங்க பர்ஸ்ட் இயர் பி.பி. ஏ க்கு  போய் என்ன என்னவோ பேசிருக்கீங்க? என்ன நடந்தது?”
“இல்லை சார் சீனிவாசன் சார் ஒரு பீரியட் பர்ஸ்ட் இயர் பி.பி. ஏ வை பாத்துக்க சொன்னார். அப்ப சும்மா பேசிட்டு இருந்தோம். ஆனா விளையாட்டுக்கு பேசுனது இப்படி இந்த பொண்ணுங்களை ஹர்ட் பண்ணும்னு தெரியாது சார்.  சாரி”, என்றார் தர்மராஜ்.
“அதை அவங்க கிட்ட சொல்லுங்க தர்மராஜ். ரேப் பத்தி எல்லாம் பேசுனீங்களா?”
“தப்பா எல்லாம் பேசலை சார். பொண்ணுங்க தைரியமா இருக்கணும். எந்த சூழ்நிலைலயும் எதுத்து நிக்கனும்னு அப்படிங்குற மீனிங்க்ல தான் பேசுனேன். ஆனா அதை தெளிவா அவங்களுக்கு புரிய வைக்கிறதுக்குள்ள டைம் முடிஞ்சிருச்சு. ஆனா அவங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைச்சேன். தப்பு என் மேல தான் சார். இனி அப்படி நடக்காது”
“ஸ்டுடண்ட்ஸ் கிட்ட என்ன பேசணும்னு தெரிஞ்சிருக்கணும்  தர்மராஜ். அவங்க எப்ப எதை சீரியஸா எடுப்பாங்கன்னு தெரியாது. அதனால தான் எல்லா டீச்சர்சும் பாடத்தை மட்டும் நடத்துறாங்க போல”, என்றார் பிரின்சிபால்
“இப்படி நடக்கும்னு எதிர் பார்க்கலை சார். அவங்களை ஹர்ட் பண்ணத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்”, என்றார் தர்மராஜ்.
அவர் அப்படி உடனே மன்னிப்பு கேட்டதும், அணுவுக்கும் மற்ற பெண்களுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது.
பவித்ராவுக்கு தான் செஞ்ச தப்பும் புரிஞ்சது. “பரவால்ல சார். மன்னிப்பு எல்லாம் வேண்டாம். இப்ப தான் ஸ்கூல் முடிஞ்சு வந்துருக்கேன். அதுவும் பொண்ணுங்க படிக்கிற ஸ்கூல்ல தான் படிச்சேன். பசங்க கூட அவ்வளவா
பழகினது  கிடையாது. அதனால தான் நீங்க அப்படி எல்லார்  முன்னாடியும் என்னை எழுப்பி விட்டு பேசுனது என்னை தான் ஏதோ சொல்லி சிரிக்கிறீங்கன்னு எடுத்து கிட்டு இப்படி நடந்துகிட்டேன். என்னை மன்னிச்சிருங்க”, என்றாள் பவித்ரா.
“ஆமா சார், நாங்க இதை பெருசா எடுத்திருக்க  கூடாது. பவி அழுதுட்டு இருந்தா. அதுவும் சாக போறேன்னு அழுத உடனே என்ன செய்யனு தெரியாம இப்படி செஞ்சிட்டோம். இப்ப யோசிச்சு பாக்குறப்ப தான் தெரியுது. இது சின்ன விசயம்னு. வாழ்க்கைல இதை விட பெருசா நிறைய பிரச்சனை  வரும். இதையே எங்களால தாங்க முடியலைன்னா நாங்க பின்னாடி எப்படி சமாளிப்போம். இதை தான் சார் எங்களுக்கு சொல்லிருந்துருக்காரு.
நாங்க தான் தப்பா நினைச்சிட்டோம். எங்களை மன்னிச்சிருங்க தர்மா  சார்”, என்றாள் அணு.
“இல்லை மா. என் மேல தான் தப்பு. வயசு பசங்க. கொஞ்சம் இன்டெரெஸ்ட்டா, இப்ப நடக்குற பிரச்சனையை மைய படுத்தி பேசணும்னு ஆரம்பிச்சது உங்க மனசை புண் படுத்தும்னு தெரியாது. அதுவும் பசங்க சின்சியரா கவனிச்ச உடனே, இது அவங்களை நல் வழி படுத்தும்னு நினைச்சு இப்படி செஞ்சேன். இந்த பொண்ணு பாக்க அமைதியா இருக்குறானு, கொஞ்சம் தைரியம் வரட்டும்னு நினைச்சு அப்படி இருக்குற பொண்ணுங்களையா பாத்து எழுப்பி கேள்வி கேட்டேன். பட் அடுத்தவங்க நிலைமையையும் புரிஞ்சிக்கணும்னு இப்ப தான் எனக்கு புரிஞ்சிருக்கு. என்னோட ஸ்டுடண்ட்ஸ் கிட்ட இருந்து நான் கத்து கொண்ட பாடம் இது”, என்றார் தர்மராஜ்.
பின்னர் பிரின்சிபாலிடம் திரும்பிய  தர்மராஜ்   “என் மேல இப்படி ஒரு புகார்  வர காரணமா இருந்ததுக்கு   என்னை மன்னிச்சிருங்க சார். இனி இப்படி நடக்காது”, என்றார்.
“எனக்கு தெரியும் தர்மா  உங்களை பத்தி. உங்க கிளாஸ் மட்டும் தான் நூறு சதவீதம் ரிஸல்ட் இருக்கு. இப்படி திறமை சாலி மேல ஒரு கம்பளைண்ட்  வந்தது எனக்கும் ஒரு நிமிசம் என்ன செய்யன்னு தெரியலை. இவங்க கிளாஸ்க்கு நீங்க எந்த சப்ஜெக்ட்டாவது  எடுக்குற   வாய்ப்பு இருக்கா?”, என்று  கேட்டார்  பிரின்சிபால்.
“அடுத்த செமஸ்டர்ல  இருக்கு சார்”
“அப்ப அது நீங்க  எடுக்க  வேண்டாம். உங்களுக்கும் அந்த கிளாசுக்கு  போக சங்கடமா இருக்கும். வேற ஸ்டாஃப் போட்டுக்கலாம்”, என்று தர்மராஜிடம் சொல்லி விட்டு அணுவிடம் திரும்பிய பிரின்சிபால்  “இவர் இனி உங்களுக்கு கிளாஸ் எடுக்க வரமாட்டார் மா. அப்புறம்  ஒழுக்கத்துலயும், பசங்க கூட ஒரு  நண்பனா  பழகுறதுலயும்  நான்  இவர்  தான்  பெஸ்ட்ன்னு  சொல்லுவேன். ஆனாலும், உன்  கூட  படிக்கிற  பொண்ணுக்கு  ஒரு  பிரச்சனைன்னு  எல்லாரும்  கூடி  வந்து  தைரியமா  பேசுனதுக்கு  என்னோட  பாராட்டுக்கள். இதே  மாதிரி  தைரியமா  இருங்க.  இனி நீங்க அவரை பாக்க வேண்டிய அவசியம் வராது. அடுத்த செமஸ்டர்ல உங்களுக்கு வேற ஸ்டாஃப் வருவாங்க. நான் சொல்றது சரி தான தர்மா?”, என்று கேட்டார் பிரின்சிபால்.
“சரி தான் சார்”, என்றார் தர்மராஜ்.
“சார் ப்ளீஸ் . தப்பா புரிஞ்சிக்கிட்டு, நான் தான் பிரச்சனையை கிளப்பிட்டேன். எங்க கிளாசில்  இவர் பீரியட்ல  எல்லாருமே சந்தோசமா இருந்தாங்க. என்னோட அவசரத்துல  நல்ல சாரை நாங்க இழக்க  விரும்பலை. எங்களுக்கு சார் தான் கிளாஸ் எடுக்கணும்”, என்றாள் பவித்ரா.
அவளை முதல் முறை ஆர்வமாக பார்த்தார் தர்மராஜ்.
“நீங்க  என்ன சொல்றீங்க தர்மா?”, என்று கேட்டார் பிரின்சிபால்.
சிரித்தார் தர்மராஜ். அவர் சிரிப்பே அவர் அந்த கிளாஸ்க்கு போக சம்மதம் என்று சொன்னதாய் எடுத்து கொண்டு எல்லாரும் அவரிடம் இன்னொரு தடவை மன்னிப்பு கேட்டு விட்டு விலகி சென்றார்கள்.
ராகுல், கதிர், அர்ஜுன் மூவரும் அங்கு நடந்தததை பார்த்து கொண்டு தான் இருந்தார்கள்.
“எப்பா மழை பெஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கு”, என்றான் ராகுல்.
“ஆமா டா. எல்லாத்துக்கும்  இந்த ரவுடி அணு தான் காரணம் போல? நம்ம தர்மா  சாரை ஒழிக ஒழிகன்னு கத்திட்டு வாரா. போயும் போயும் அவ கூட வா டா  நீ பிரண்ட்ஷிப் வச்சுக்கணும்?”, என்று கேட்டான் கதிர்.
“அவளை எதுக்கு திட்ற கதிர்? அவ எவ்வளவு தைரியமா ஆள் சேத்து தப்பை எதுத்து கேட்டுருக்கா. ? கூட இருக்குற பிரண்ட் அழுதான்னு இவ்வளவு பெரிய விசயம் செஞ்சிருக்கா? அதுவும் அவர் மேல தப்பு இல்லைனு புரிஞ்சு மன்னிப்பும் கேட்டுட்டாளே? அதுக்கு பாராட்டாம திட்டுறீங்க?”, என்று கேட்டான் அர்ஜுன்.
அவனை வியப்பாக பார்த்த இருவரும் “இவனுக்கு முத்தி போச்சு டா அணு பைத்தியம்”, என்று சொல்லி சிரித்தார்கள்.
அப்போது அவர்கள் அருகே வந்தாள் அணு.
அவளை பார்த்ததும் மூவரும் வாயை மூடி கொண்டார்கள்.
ராகுல் சும்மா கிடக்காமல் எதுக்கு இப்படி செஞ்ச? தர்மா சார் எவ்வளவு நல்லவர் தெரியுமா?”, என்று சொன்னான்.
அவனை முறைத்த அணு “அது தான் அவர் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன்ல அப்புறம் என்ன? அர்ஜுன் உன் பிரண்டை வாயை மூட சொல்லு”, என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு ராகுலுக்கு கோபம் வந்தது. “ஏய் என்ன கத்துற? பெரிய தைரியசாலின்னு நினைப்போ? இந்த சவுண்டு விடுற வேலை எல்லாம் என்கிட்ட வச்சிக்காத”, என்றான்.
“நீ என்ன டா ஓவரா பேசுற? நான் தைரிய சாலி தான் இப்ப என்னங்குற?”
“என்னவா? நேத்து யாரோ எலியை பாத்து இருட்டை பாத்து பயந்தாங்களாம். இவங்க தைரிய சாலியாம்”, என்று பற்ற வைத்தான் ராகுல்.
அர்ஜுனை எரித்து விடுவது போல முறைத்தாள் அணு.
“போச்சு டா”, என்று நினைத்து அசடு வழிந்தான் அர்ஜுன்.
“என்ன அவனை முறைக்கிற? அவன் உண்மையை தான சொன்னான். பாத்தியா கதிர் இந்த தைரியசாலியை?”, என்று சிரித்தான் ராகுல்.
“சும்மா இரு டா ராகுல்”, என்றான் அர்ஜுன்.
அர்ஜுன் தலையில் கொட்டிய அணு, “உன்னை சொல்ல கூடாதுன்னு சொன்னேன்ல டா எருமை. எதுக்கு சொன்ன?”, என்று கேட்டாள்.
“இல்லை எப்படி உன்னை தெரியும்னு கேட்டாங்களா? அதான் சொன்னேன்”
“நீ அது மட்டும் தான் சொன்னியா? வேற எதுவும் சொல்லலையா?”
“வேறயா? என்ன அர்ஜுன் அது? எங்க கிட்ட இருந்து மறைச்சிட்ட பாத்தியா?”, என்று கேட்டான் கதிர்.
“வேற ஒண்ணுமே இல்லை டா. அவ சும்மா சொல்றா”, என்றார் அர்ஜுன்.
“நான் சும்மா சொல்லலை. உண்மையை தான் சொல்றேன்”, என்றாள் அணு.
“என்னது அணு?”, என்று கேட்டான் ராகுல்.
“உன் பிரண்ட் எதுக்கு என்னை ஸ்போர்ட்ஸ் ரூம்ல வச்சு கட்டி புடிச்சு முத்தம் கொடுத்தான்னு கேளு”, என்றாள் அணு.
“அட பாவி”, என்று வாயை பிளந்தான் அர்ஜுன்.
ராகுலும் கதிரும், கண்ணிமையே வெளியே வரும் அளவுக்கு அதிர்ச்சியாக விழித்தார்கள். அவர்கள் பார்வையை உணர்ந்து “அவ பொய் சொல்றா டா”, என்றான் அர்ஜுன்.
“இது பொய்யின்னா அர்ஜுன் சொன்ன எலி விஷயம் எல்லாம் பொய் தான், அவன் கிட்டயே விசாரிச்சிக்கோங்க டா லூசுங்களா”, என்று சொல்லி விட்டு ஓடியே விட்டாள் அணு.
கடைசியில் அர்ஜுனை விசாரணை நடத்தியே கொன்று விட்டார்கள். “அம்மா மேல சத்தியமா நான் முத்தம் எல்லாம் கொடுக்கலை டா”, என்று சொன்ன பின்னர் தான் அவனை விட்டார்கள்.
“சொன்னதை செஞ்சிட்டாளே”, என்று நினைத்து பல்லை கடித்து கொண்டு கிளாசுக்கு வந்தவனுக்கு சிறிது நேரத்திலே சிரிப்பு வந்து விட்டது.
உருகுதல் தொடரும்….

Advertisement