Advertisement

அத்தியாயம் 7
அமாவாசை அன்று நிலவுக்கு
கூட விடுதலை உண்டு,
உன் நினைவுகளைச் சுமக்கும்
என் மனதுக்கு விடுதலை உண்டோ?!!!
“ஹ்ம்ம் நீ எழுதுனதை மறந்து வச்சிட்டு வந்துறாத அர்ஜுன்”
“இப்பவே எடுத்து பேக்ல வச்சிட்டேன். டோன்ட் ஒரி அணு”
“ஹ்ம்ம் ஓகே அர்ஜுன். குட் நைட்”
“அணு”, என்று அழைத்து அவளை நிறுத்தினான் அர்ஜுன்.
“என்ன அர்ஜுன்?”
“தேங்க்ஸ். அம்மா கிட்ட பைக் வாங்கி கொடுங்கன்னு பேசுனதுக்காக”
“தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம். அதுக்கு பதிலா டிரீட் கொடு அர்ஜுன்”
“கொடுத்துட்டா போச்சு”
“அப்ப சரி. என்னைக்குன்னு நான் யோசிச்சு சொல்றேன்”
“ஓகே அணு. பை குட் நைட்”
“பை டா”, என்று சொல்லி விட்டு அவளும் வைத்து விட்டாள்.
அடுத்த நாள் காலையில் காலேஜ் கேட் பக்கத்திலே அவளுக்காக நின்றான் அர்ஜுன்.
அவனை பார்த்ததும், அவள் முகம் தன்னால் மலர்ந்தது. அவன் அருகில் தன்னுடைய வண்டியை நிறுத்தினாள் அனுராதா.
அவள் புன்னகையை பார்த்து ரசிக்க தோன்றியது அர்ஜுனுக்கு.
அவனும் அவளை பார்த்து சிரித்து விட்டு, “இந்தா நீ கேட்ட அசைன்மென்ட்”, என்று அவள் கையில் கொடுத்தான்.
“தேங்க்ஸ் அஜ்ஜு”, என்ற படி அதை வாங்கி கொண்டவள் அதை திருப்பி பார்த்தாள்.
பின்னர் அதை பார்த்து, அதிர்ச்சியாகி “லூசு அர்ஜுன்”, என்று திட்டினாள்.
அவன் புரியாமல் அவளை பார்த்து முழித்த அர்ஜுன் “கஷ்ட பட்டு  எழுதிட்டு வந்துருக்கேன். எதுக்கு என்னை திட்ற?”, என்று கேட்டான்.
“பின்ன நான் உன்னை என்ன சொன்னேன்? அழகா எழுதாத. அசிங்கமா கோழி கிண்டுனது மாதிரி எழுத சொன்னேன்ல? இப்படி எழுதிட்டு வந்துருக்க?”
“அட பாவி. உனக்காக உக்காந்து வேலை மெனெக்கெட்டு, கண்ணு முழிச்சு எழுதிட்டு வந்திருக்கேன். ஏன் சொல்ல மாட்ட? எனக்கு தேவை தான். இதை விட கேவலமா உன் எழுத்து இருக்கும்னு எனக்கு எப்படி தெரியும்? இதே கண்றாவியா இருக்கு”
“சரி சரி கோச்சிக்காத. அடுத்த தடவை சரியா எழுதிரு. இந்த ஒரு தடவை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்”, என்று சொன்னவளை பார்த்து முறைத்தான் அர்ஜுன்.
அவனை பார்த்து சிரித்தவள் “அத்தை என்ன செய்றாங்க?”, என்று கேட்டாள்.
“அம்மா வீட்டில ரெஸ்ட் எடுக்குறாங்க. சரி நீ கிளாஸ்க்கு  போ. அப்பறம் பாக்கலாம்”
“அப்புறம்னா எப்ப அர்ஜுன்?”
“அர்ஜுன் அர்ஜுன்னு கத்தாதே. எல்லாரும் என்னை பத்தி என்ன நினைப்பாங்க? ஜூனியரா இருந்துட்டு என்னை பேரை சொல்லி கூப்பிடுற?”
“நான் பேர் சொல்லி கூப்பிடுறது உனக்கு பிடிக்கலையா அர்ஜுன்?”
அவள் கேள்வியில் அவன் உதடுகளில் புன்னகை விரிந்தது. ஆனாலும் காலேஜ்ல யாரும் பாத்தா கிண்டல் பண்ணுவாங்க என்று புரிந்ததால் பிடிக்கலை என்று சொல்ல வந்தான்.
“ஆனா நீ பிடிக்கலைன்னு சொன்னா கூட நான் பேரை சொல்லி தான் கூப்பிடுவேன். பை அர்ஜுன்”, என்று சொல்லி விட்டு வண்டியை கிளப்பி கொண்டு சென்று விட்டாள் அணு.
“திமிர் பிடிச்சவ”, என்று சொல்லி விட்டு  சிரித்து   கொண்டே அவனும் அவனுடைய கிளாஸ் நோக்கி  சென்றான்.
அடுத்த சந்திப்பு நடந்த போது அவனை பீதியாக்கினாள் அணு. அதுவும் அன்றே.
தன்னுடைய நண்பர்கள் ராகுல், மற்றும் கதிருடன் காலேஜ் கேன்டீனில் உக்காந்திருந்தான் அர்ஜுன். எல்லாரும் சந்தோசமாக பேசி சிரித்து கொண்டிருந்த போது “அர்ஜுன் அர்ஜுன்”, என்று அணு கத்தும் குரல் கேட்டது. அதிர்ச்சியாக திரும்பி பார்த்தார்கள் மூவரும்.
அர்ஜுன் திகைத்தே போனான். “ஐயோ இந்த லூசு இப்படி கத்துதே. இவனுங்க கிட்ட மாட்டி விட்டுருவாளே! ரெண்டு பேரும் கிண்டல் பண்ணியே சாகடிப்பானுங்களே”, என்று நினைத்து முழித்தான்.
அங்கே இருந்து “இப்ப வறேன்”, என்று சைகை செய்தாள் அணு.
அப்போது அவன் அருகில் இருந்த ராகுல் “மச்சி என்ன டா இது? அந்த பத்திரகாளி உன்னை பேர் சொல்லி கூப்பிடுது. அடுத்த அடி உனக்கா? எங்களுக்கு தெரியாம அவ கிட்ட ஏதும் வம்பு செஞ்சியா என்ன?”, என்று சிரித்து  கொண்டே கேட்டான்.
“என்ன பதில் சொல்ல?”, என்று தெரியாமல் யோசித்தான் அர்ஜுன்.
அவன் பக்கத்தில் இருந்த கதிர், “அவ கிட்ட எதுவும் வம்பு பண்னியா அர்ஜுன்? இங்க வரேன்னு  சொல்றா. எனக்கு பீதியாகுது டா”, என்றான்.
“எப்படி எல்லாரையும் பயமுறுத்தி வச்சிருக்கா? ராட்சசி”, என்று நினைத்து கொண்டு “சும்மா இருங்களேன் டா. இருங்க நான் போய் அவ கிட்ட கேக்குறேன்”, என்று எழுந்த அர்ஜுனின் கைகளை பிடித்து உக்காற வைத்த ராகுல் “நீ எதுக்கு எந்திச்சு  போற? அவ தான் வரேன்னு  சொல்றாள்ல? அவளே வரட்டும். என்ன செய்றான்னு பாப்போம்”, என்றான்.
“உனக்கு நாங்க இருக்கோம் டா. அவ உன்னை என்ன செய்றான்னு பாத்துருவோம்”, என்று இருவரும் பெருமையாக சொன்னார்கள்.
“நிலைமை தெரியாம பாசத்தை பொழியுறானுங்களே. அவ என்ன சண்டைக்கா டா வாரா? இன்னைக்கு செத்தோம்  இவனுங்க கிட்ட. கண்டிப்பா அந்த அரை லூசு என்னை பிரண்டுன்னு இவனுங்க கிட்ட போட்டு கொடுத்துருவாளே. எப்படி தப்பிக்க? “, என்று அவன் நினைக்கும் போதே அவள் இவர்கள் அருகே வந்து விட்டாள்.
அவளிடம்  “எதுவும் சொல்லாத”, என்பது போல் கண்ணை காட்டினான் அர்ஜுன்.
அதை கவனித்து விட்டு “உனக்கு கண்ணு வலியா அர்ஜுன்?”, என்று லூசு தனமாக கேட்டாள் அணு.
“சரியான லூசு தான் இது. நான் சொல்லாதேன்னு  கண்ணை காட்டுறேன். அவ கண்ணு வலியான்னு கேக்குறா”, என்று நினைத்து  பல்லை கடித்தான்.
“என்ன அர்ஜுன் பல்லை கடிக்கிற? உனக்கு பல்லு வலியா?”, என்று அடுத்த கேள்வியை அறிவாளித்தனமாக கேட்டாள் அணு.
ராகுலும், கதிரும்  அவனை குழப்பமாக ஒரு பார்வை பார்த்தார்கள்.
“என்ன டா  அர்ஜுன்? உனக்கு எப்படி பர்ஸ்ட் இயர் அணுவை தெரியும்?”, என்று கேட்டான் கதிர்.
அர்ஜுன் என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக நெளிந்து கொண்டு இருந்தான்.
“அவன் கிட்ட எதுக்கு டா  கேக்குற? அந்த பொண்ணு கிட்ட கேளு. நானே கேக்குறேன். ஏய் நீ பர்ஸ்ட் இயர் தான? எதுக்கு அர்ஜுனை பேர் சொல்லி கூப்பிடுற? அது மட்டும் இல்லாம பல்லு வலியா, கண்ணு வலியானு தெரிஞ்சவ மாதிரி விசாரிக்கிற? உனக்கு எப்படி அர்ஜுனை தெரியும்?”, என்று கேட்டான் ராகுல்.
அவன் பேரு “அர்ஜுன் தான? அர்ஜுனை அர்ஜுன்னு கூப்பிடாம வேற எப்படி கூப்பிட? என்னடா உன் பிரண்டுக்கு மூளையே இல்லை”, என்று நக்கலாக கேட்டாள் அணு.
மூவரும் அவளை  முறைத்தார்கள். அதை  பார்த்து  பயப்படாமல்  நின்றாள்  அணு.
“ஏய்  என்ன  திமிரா?”, என்று கேட்டான் ராகுல்.
“நீங்களும் தான் அவனை பேர் சொல்லி கூப்பிடுறீங்க? அப்ப என்னை மட்டும் ஏன் கேள்வி கேக்குறீங்க? அர்ஜூனே சும்மா தான் இருக்கான்”, என்று கேட்டாள் அணு.
“நானும் நீயும் ஒண்ணா? நான் அவனோட பிரண்ட்”
“நானும் அர்ஜுனுக்கு பிரண்ட்”
“பிரண்டா? இது எப்ப இருந்து? பாத்தியாடா கதிர்?”
“பாத்துட்டு தான இருக்கேன்? என்ன அர்ஜுன் இது?”, என்று கேட்டான் கதிர்.
“அதை நான் சொல்றேன். நானும் அர்ஜுனும் திக்க்க்க் பிரண்ட்ஸ்”, என்று சொன்ன அணு, அந்த திக்கில் கொஞ்சம் அழுத்தி சொன்னதை பார்த்து அர்ஜுன் பயந்தே போனான்.
“அவளோட பைக்கில் உக்காந்து  போனது, இவ என்னோட  வீட்டுக்கு வந்தது, எல்லாத்தையும் சொல்லிட்டான்னா என்ன செய்றது “, என்று நினைத்து “அவ சும்மா ஏதோ சொல்றா டா . சரி அணு எதுக்கு இப்ப இங்க வந்த?”, என்று கேட்டான்.
“நீ எழுதி கொடுத்த அசைன்மெண்ட்க்கு புல் மார்க் போட்டுட்டாங்க அர்ஜுன். அதை சொல்ல தான் வந்தேன். அப்புறம் இன்னைக்கும் நேத்து மாதிரியே என்னோட வண்டில வந்துரு என்ன? பை டா. பை அண்ணா “, என்று சொல்லி விட்டு ஓடியே போனாள்.
“ஐயோ உளறிட்டா. இப்ப என்ன சொல்ல”, என்று தெரியாமல் திரும்பி பார்த்தான் அர்ஜுன்.
அங்கே கதிரும், ராகுலும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள்.
அவர்களை ஒரு பார்வை பார்த்தவன் “அது வந்து டா?”, என்று ஆரம்பித்தான்.
“நீயா டா  அர்ஜுன் அவளுக்கு அசைன்மென்ட் எழுதி கொடுத்த? என்னைக்காவது எனக்கு எழுதி கொடுத்துருக்கியா? இதெல்லாம் ரொம்ப ஓவர்டா”, என்றான் ராகுல்.
“அதை விடு டா ராகுல். அவ கூட வண்டில போனானாம். ரெண்டு பேரும் திக்க்க் பிரண்ட்ஸாம். அதை என்னன்னு கேட்டியா?”, என்றான் கதிர்.
“டேய் டேய் பெருசா எதுவும் நினைக்காதீங்க டா. அப்படி எல்லாம் இல்லை”, என்றான் அர்ஜுன்.
“எப்படி எல்லாம் இல்லை?”, என்று சிரித்தான் ராகுல்.
“சொல்லலைனா எதாவது விவகாரமா நினைப்பாங்க”, என்று நினைத்து நேற்று சாயங்காலம் அவளை ஸ்போர்ட்ஸ் ரூமில் வைத்து பார்த்ததையும், அவள் பயத்தையும் சேர்த்து சொல்லி விட்டு “நேரம் ஆனதுனால என்னை வீட்ல விட்டா டா”, என்று முடித்தான் அர்ஜுன்.
“நம்பிட்டோம் டா நம்பிட்டோம். எல்லாம் நல்லா நடந்தா சரி தான். எதுக்கும் நீ இன்னும் ரெண்டு கன்னம் வாங்கி வச்சா நல்லது டா”, என்றான் ராகுல்.
“என்னது கன்னத்தை வாங்கணுமா? என்ன ராகுல் சொல்ற?”, என்று கேட்டான் அர்ஜுன்.
“எப்ப அடி விழும்னு தெரியாதுள்ள? பூனை மாதிரி இருக்குற உனக்கு புலி மாதிரி இருக்குற அவ ஜோடியா?”, என்று சிரித்தான் ராகுல்.
“டேய் என்ன ஜோடின்னு எல்லாம் பேசுற? அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது”, என்றான் அர்ஜுன்.
“அதான் நம்பிட்டோம்னு சொன்னோம்ல. அப்படி தான டா கதிர்?”, என்று கேட்டான் ராகுல்.
“ஆமா டா. நம்பிட்டோம் நம்பிட்டோம். ஆனா பாரேன். இவ எலியை பாத்து, இருட்டை பாத்து பயந்திருக்கா. இவளை பாத்து தான் ஊரே பயப்படணும். செகண்ட் இயர் அருண் இருக்கான்ல அவனையும் சப்புன்னு வச்சிருக்கா டா. எதுக்கும் அவ கிட்ட கொஞ்சம் கவனமா இரு டா அர்ஜுன்”, என்று கதிர் சொல்லி வாயை மூடும் முன் “தர்மா சார் ஒழிக! தர்மா சார் ஒழிக!”, என்ற ஒரு பெண்ணின் சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்த்தார்கள்.
அது அணுவே தான். அவளுடன் இன்னும் பத்து பெண்கள் இருந்தார்கள்.
எல்லாரும் பிரின்சிபால் ஆஃபீஸ் நோக்கி போவது கண்ணில் பட்டது.
“பாத்தியா சொல்லி வாயை மூடலை. எப்படி படையை திரட்டிட்டு போறா பாரு”, என்றான் கதிர்.
“எதுக்கு டா தர்மா சாரை போய் திட்டிட்டு போறாங்க. அவர் ரொம்ப நல்லவர் ஆச்சே டா”, என்று கேட்டான் அர்ஜுன்.

Advertisement