Advertisement

அவர்களை பார்த்து சிரித்த அணு “என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை”, என்று காலில் விழுந்தாள்.

“அத்தையா?”, என்று அதிர்ச்சியாக பார்த்தாள் சந்திரிகா. அர்ஜுனை பார்த்து “என்ன டா இது? எப்ப இருந்து லவ் பண்ண ஆரம்பிச்ச”, என்று கேட்டாள்.

“ஆண்ட்டி அப்படிங்குறதை தான் அவ இந்த அழகில் சொல்றா மா. நீங்க எதுவும் தப்பா நினைக்காதீங்க”, என்றான்.

“அதானே  பாத்தேன். இவனாவது லவ் பண்றதாவது? அழகான மருமக வந்துட்டான்னு ஒரு நிமிஷம் சந்தோச பட்டேன். கெடுத்துட்டான்”, என்றாள் சந்திரிகா.

“அர்ஜுன் பொய் சொல்றான் அத்தை. நான் அப்படி அர்த்தத்தில் ஒன்னும் அத்தைனு கூப்பிடலை. வருங்கால மாமியார்னு நினைச்சு தான் அத்தைன்னு சொன்னேன்”, என்றாள் அணு.

அதிர்ச்சியாக அவளை பார்த்தான் அர்ஜுன்.

சந்திரிக்காவும் அப்படி தான் அவளை பார்த்தாள். அவள் பார்வையை உணர்ந்து “என்ன அத்தை என்னை உங்களுக்கு பிடிக்கலையா? இப்படி முழிக்கிறீங்க? இப்ப தான அழகான மருமகன்னு சொன்னீங்க?”, என்று கேட்டு கண்ணடித்தாள் அணு.

அவள் செய்கையில் சிரிப்பு வந்துவிட்டது சந்திரிகாவுக்கு.

“உன்னை எப்படி மா பிடிக்காம போகும்? வாழ்க்கைல அர்ஜுன் செஞ்ச உருப்படியான காரியம், உன்னை லவ் பண்ணது தான். அப்படியே மகாலக்ஷ்மி மாதிரி இருக்க. எனக்கு பிடிச்சிருக்கு”, என்றாள் சந்திரிகா.

“அம்மா”, என்று அலறினான் அர்ஜுன்.

“சும்மா இரு டா. முதல் தடவை வந்திருக்கா. என்ன சாப்பிடுற மா?”

“அதெல்லாம் வேண்டாம் அத்தை”

“அம்மா”, என்று அழைத்தான் அர்ஜுன்.

“சும்மா கிடையேன் டா. பார்வதி அணுவுக்கு டீ போடு”, என்றாள் சந்திரிகா.

“பாரு”, என்று அழைத்தாள் அணு.

திகைத்து போய் திரும்பி பார்த்தாள் பார்வதி.

“எனக்கு டீ வேண்டாம் பாரு. நான் சாப்பிட மாட்டேன்”, என்றாள் அணு.

“அப்பாடி ஒரு வேலை குறைஞ்சது”, என்று பார்வதி நினைக்கும் போதே “அதனால ஒரு ஜூஸ் மட்டும் கொண்டு வா”, என்றாள் அணு.

ஆ என்று வாயை பிளந்து விட்டு, உள்ளே சென்றாள் பார்வதி.

“அம்மா நான் சொல்றதை கேளுங்களேன்”, என்றான் அர்ஜுன்.

“அவன் கிடக்கான். நீ வா. உக்காரு அணு மா. சரி உங்க வீடு எங்க இருக்கு? யாரெல்லாம் இருக்கா வீட்ல?”, என்று கேட்டாள் சந்திரிகா.

“அப்பா மட்டும் தான் அத்தை. அம்மா சின்ன வயசில் இறந்துட்டாங்க. இங்க பக்கத்துல தான் வீடு இருக்கு. பத்து நிமிஷம் ஆகும். அப்பா பிசினெஸ் தான் பண்றாங்க”

“அம்மா இல்லாம ரொம்ப கஷ்ட பட்டுடியா கண்ணா. இனி கவலை பட கூடாது. எதுனாலும் அத்தை இருக்கேன் சரியா?”

“சரி அத்தை”

“அம்மா ப்ளீஸ் மா. நான் சொல்றதை கேளுங்களேன்”, என்றான் அர்ஜுன்.

“நீ சொல்றதை அப்புறம் சொல்லு டா. முக்கியமா பேசிட்டு இருக்கேன்ல. ஓலை பாயில நாய் நோண்ட மாதிரி கத்திக்கிட்டு”, என்றாள் சந்திரிகா.

வாயை கப் சிப் என்று மூடி கொண்டான் அர்ஜுன்.

“எப்படி மா அர்ஜுனை உனக்கு தெரியும்?”, என்று கேட்டாள் சந்திரிகா.

“எங்க காலேஜ் அத்தை, தெரியாம போகுமா?  சார் வேற ரொம்ப அழகான ஹீரோ. அப்படி இருக்கும் போது, லவ் வராம இருக்குமா? பாத்த முதல் பார்வையிலே விழுந்துட்டேன்”, என்று ஆக்சன் காட்டியவள் சிரித்து கொண்டே “இப்படி எல்லாம் சொல்லுவேன்னு எதிர்பாக்காதீங்க அத்தை. உங்க பிள்ளை கிட்ட இன்னைக்கு தான் பேசவே செஞ்சிருக்கேன்”, என்றாள்.

அதிர்ச்சியாக அர்ஜுனை பார்த்தாள் சந்திரிகா.

“இதை தான் சொல்ல வந்தேன்”, என்ற பதில் பார்வையை பார்த்தான் அர்ஜுன்.

“என்ன அர்ஜுன் இது? அப்ப நீயும், அணுவும் லவ் பண்ணலையா?”

“அம்மா, இதை தான் சொல்ல வந்தேன். எங்க நீங்க என்னை சொல்ல விட்டீங்க? உடனே மருமக மாதிரி கொஞ்ச ஆரம்பிச்சிடீங்க. இவ சரியான பிராடு. உங்க கிட்ட பொய் சொல்லி ஏமாத்தி விளையாடுறா”, என்று சிரித்தான். 
அணு சிரித்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவள் தலையில் கொட்டிய சந்திரிகா, “இப்படியா விளையாடுறது அணு? ஒரு நிமிசத்துல, நான் என்ன என்ன கனவோ கண்டு எங்க எங்கயோ போய்ட்டேன்”, என்றாள்.
அவள் காதருகே குனிந்த அணு எதையோ சொன்னாள். அதில் சந்திரிகா முகம் மலர்ந்தது மட்டும் இன்றி மறுபடியும் ஒரு கொட்டு கொட்டினாள்.
“இப்படி கொட்டுனீங்கன்னா, அப்புறம் உங்க கூட சண்டை போட்டுருவேன் அத்தை”, என்று சிரித்தாள் அணு.
“ஐயோ அதெல்லாம் வேண்டாம் மா. இனி கொட்ட மாட்டேன்”, என்ற சந்திரிகா “அப்படி சொல்லுவேன்னு நினைக்காத. பண்ற சேட்டைக்கு கொட்டிக்கிட்டே இருப்பேன்”, என்றாள்.
“அட பாவிகளா? லவ் பண்ணலைன்னு தான் தெரிஞ்சிட்டே. அப்புறமும் கொஞ்சிக்கிறாங்க, எப்படி?”, என்று நினைத்து கொண்டே “அம்மா அவ உங்க கிட்ட என்ன சொன்னா?”, என்று கேட்டான்.
“அது எங்களுக்குள்ள விஷயம். நீ எதுக்கு கேக்குற அர்ஜுன்?”, என்று கேட்டாள் அணு.
“அம்மா சொல்லுங்க  மா. என்ன சொன்னா?”
“நான் அத்தையை ரொம்ப லவ் பண்றேன்னு சொன்னேன் போதுமா? அப்படி தான அத்தை?”, என்று கேட்டாள் அணு.
ம்ம் என்று மண்டையை ஆட்டினாள் சந்திரிகா.
குழம்பி போனவன், “என்னமும் செய்ங்க. நான் டிரெஸ் மாத்த போறேன்”,  என்று சொல்லி விட்டு மேல சென்றான்.
“டேய் அணு கிளம்பனும் டா”, என்றாள் சந்திரிகா.
“உங்களை லவ் பண்றாள்ள? நீங்களே அனுப்பி வைங்க”
“பாருங்க அத்தை. உங்க பிள்ளைக்கு பொறாமை”, என்று சிரித்தாள் அணு.
“அப்படியா டா?”, என்று கேட்டாள் சந்திரிகா.
“இது வரைக்கும் ஒரு லூசை சமாளிச்சேன். இப்ப இன்னொண்ணையும் சமாளிக்கணும். இப்ப வந்துருவேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
“பாத்தியா அணு? பெத்த அம்மாவை லூசுன்னு சொல்லிட்டு போறான்”, என்று வராத கண்ணீரை முந்தானையில் துடைத்து கொண்டாள் சந்திரிகா.
“இந்த அழுகாச்சி சீன் உங்களுக்கு செட்டே ஆகலை அத்தை”, என்று சிரித்தாள் அணு.
சந்திரிக்காவும் சிரித்தாள்.
“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு அணு. நீ தான் இந்த வீட்டுக்கு மருமக”
“தேங்க்ஸ் அத்தை. எனக்கும் உங்களை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு”, என்ற படியே சந்திரிகா நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் அணு.
அந்த காட்சியை பார்த்தவாறே திகைத்து போய் வந்தாள் பார்வதி.
அவள் கொடுத்த ஜூசை வாங்கி கொண்ட, அணு ஒரு மடக்கு குடித்து விட்டு “ஜூஸ் சூப்பர் பாரு”, என்றாள்.
பார்வதியும் அவளை பார்த்து சிரித்தாள்.
“ஜூஸ் நல்லா இருக்கா? எனக்கு மட்டும் நல்லா இல்லாத ஜூஸை தருவா. இதே ஜூஸை எனக்கும் கொடேன்”, என்றாள் சந்திரிகா.
“எதுக்கு மறுபடியும் சுகரை ஏத்தி ஹாஸ்பிடலில் படுத்துக்கவா?”, என்று கேட்ட படியே அங்கு வந்தான் அர்ஜுன்.
“என்னது? அத்தை, உங்களுக்கு சுகர் இருக்கா?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் அணு.
“கொஞ்சம் இல்லை. நிறையவே இருக்கு”, என்றான் அர்ஜுன்.
“அவன் பொய் சொல்றான் அணு மா. நாக்கு செத்து போய் இருக்கு. அப்புறம் பார்வதி. நம்ம அணு முதல் தடவை நம்ம வீட்டுக்கு வந்திருக்கா. நீ எதாவது சுவீட் செய்”, என்றாள் சந்திரிகா.
“அத்தை, என் பேரை சொல்லி நீங்க சாப்பிடவா? அதுக்கு வழியே இல்லை. பார்வதி, அத்தைக்கு எதையும் கொடுக்க கூடாது சரியா? நீ தான் கவனமா பாத்துக்கணும்”, என்றாள் அணு.
“எங்க மா பாத்துக்க? நான் பகலில் பாத்துக்குறேன். நைட் பாத்துக்க தான் ஆள் இல்லை. சீனி, சுவீட் எல்லாம் ஒளிச்சு வச்சாலும் அடுத்த நாள் வந்து பாத்தா இருக்குறது இல்லை. இதனால ஐயா காபி குடிக்கிறதே நிப்பாட்டி சீனியே வாங்குறது இல்லை”, என்றாள் பார்வதி.
அவளை முறைத்தாள் சந்திரிகா.
“பாத்தீங்களாமா என்னை முறைக்கிறாங்க. நம்ம அர்ஜுன் தம்பி தான் பாவம். அவங்க படுத்துக்கிட்டா ரொம்ப கஷ்ட படுறாரு. அவர் காலேஜ்க்கு போகணும். நைட் எல்லாம் தம்பி தூங்கவே தூங்காது. என்ன பண்ண? என் வீடு கிட்டக்க இருந்துச்சுன்னா கூட நான் நைட் அப்ப, அப்ப வந்து பாத்துக்குவேன்”, என்றாள் பார்வதி.
ஒரு நொடி யோசித்த அணு, “நீ வாடகை வீட்டில் இருக்கியா? சொந்த வீட்டில் இருக்கியா பார்வதி?”, என்று கேட்டாள்.
“சொந்த வீடு வாங்க எல்லாம் இப்ப எங்க மா முடியும்? வாடகை வீடு தான். அதுக்கே செலவு ரொம்ப ஆகிருது”
“அத்தை எனக்கு ஒரு ஐடியா தோணுது. இங்க நம்ம வீட்டுக்குள்ள இருக்குற அந்த பழைய கட்டடத்தை, புதுப்பிச்சு இங்க வேலை செய்றவங்களுக்கு கொடுத்தா என்ன? அது மட்டும் இல்லாம, அவங்க பேருக்கே அந்த இடத்தை கொடுத்துருங்க. எல்லாரும் இங்கயே இருப்பாங்க. வீனா போற இடம் தான? உங்களுக்கும் துணையா இருக்கும். அதிகமா பேசிட்டேனா? வேண்டாம்னா விட்டுருங்க. உங்க கூடவே இருக்குற மாதிரி ஒரு நர்ஸ் போடலாம்”
“அதெல்லாம் இல்லை டா அணு. இந்த ஐடியா எங்களுக்கு தோணலை பாரேன். அர்ஜுன் என்ன டா சொல்ற?”, என்று கேட்டாள் சந்திரிகா.
அவன் வியப்பாய் அணுவை ஒரு பார்வை பார்த்து விட்டு, ” நல்ல யோசனை தான். நாளைக்கே ஏற்பாடு பண்ணிறேன் மா. அப்புறம் அதை ஒரேடியா இடிச்சிட்டே  கட்டிறலாம். நைட் உங்களுக்கு உடம்பு சரி இல்லைனா, பாத்துக்க ஆள் இல்லாம நான் கஷ்ட பட வேண்டாம்”, என்றான்.
“அப்ப பார்வதி எல்லாரும் இங்கயே வந்துட்டா, எனக்கு நிறைய சுவீட் கிடைக்கும்ல. உடம்பு சரி இல்லைனா கூட அவளே பாத்துக்குவா”, என்று சிரித்தாள் சந்திரிகா.
மூவரும் சந்திரிகாவை முறைத்தார்கள்.
“சரி அத்தை நேரம் ஆகுது, நான் கிளம்புறேன்”, என்று எழுந்து கொண்டாள் அணு.
“அடிக்கடி வா மா வீட்டுக்கு”, என்றாள் சந்திரிகா.
“ஹ்ம்ம் கண்டிப்பா வரேன் அத்தை. போயிட்டு வரேன் பார்வதி. பை அர்ஜுன்”
“எப்படி மா தனியா போவ? இருட்டிருச்சே? நம்ம அர்ஜுனை கொண்டு வந்து விட சொல்றேன்”, என்றாள் சந்திரிகா.
“ஆமா, நான் அர்ஜுனை டிராப் பண்ண வந்தேன். அவன் என்னை கொண்டு வந்து விடட்டும். மாத்தி மாத்தி இதுவே நடக்கும். பக்கத்துல தான அத்தை? நான் போய்க்குவேன். போய்ட்டு போன் பண்றேன்”
“ஆமா மா, மேடம் ரொம்ப தைரியசாலி. உலகத்தையே வித்துருவா. நானும் இப்ப வெளிய போய்ட்டு வந்துறேன் மா. ஒரு புக் வாங்கணும்”, என்று அவளுடன் கிளம்பினான்.
உருகுதல் தொடரும்…..

Advertisement