Advertisement

“எங்க காணும்? கண்டிப்பா வெளிய போயிருக்க வாய்ப்பில்லை”, என்று நினைத்து “அணு”, என்று அழைத்தான் அர்ஜுன்.
அவன் குரலே எக்கோ அடித்து மறுபடி மறுபடி கேட்டது.
ஆனால் அவளுடைய சத்தமே அங்கு இல்லை.
“எங்கயாவது மயங்கி விழுந்துட்டாளோ?”, என்று நினைத்து டென்னிஸ் செல்ப் அருகே போனான்.
அப்போது தான் அவன் கண்ணில் பட்டாள் அணு. அதுவும் சுவரில் பல்லி போல ஒட்டி கொண்டு கண்களை இரு கைகளாலும் மூடி நின்றிருந்தாள்.
அதை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.
சிரிப்பை அடக்கியவன் “அணு பவர் கட் ஆகியிருக்கு. வெளிய வா. ரூம் பூட்டனும்”, என்று சொன்னான்.
கையை எடுத்து கண்களை திறந்து பார்த்தாள் அணுராதா. எதிரே
அர்ஜுன் நிற்பது புரிந்தது.
அவனை பார்த்து கொண்டே நின்றவள், முகம் முழுவதும் பயத்தில் வேர்த்திருந்தது.
அதே நேரத்திலும் அவள் கண்கள் சுற்றி இருந்த இருட்டை பார்த்து தான் பயந்ததே தவிர, அவனை பார்த்து பயப்பட வில்லை.
“ஆள்க்கு பயம் இல்லை போல. இருட்டு தான் பயம் இவளுக்கு”, என்று நினைத்து “நேரம் ஆகிருச்சு அணு. வெளிய வா”, என்றான்.
“இருட்டா இருக்கு”, என்றாள் அணு.
“அதான் சொன்னேனே பவர் இல்லைன்னு. இப்ப வருமான்னு சொல்ல முடியாது. மணி ஆறு மேல ஆகுது. வா”
“நீங்க போங்க. நான் அப்புறம்  போறேன்”
“நீ போனா தான், நான் பூட்ட முடியும். ரூம் மூடி சாவி கொடுக்கணும். இப்ப எதுக்கு உனக்கு பயம்? வெறும் இருட்டு தான். வேற ஒன்னும் இல்லை. நான் தான் கூட இருக்கேன்ல வா”
“நான் ஒன்னும் பயப்படலை”, என்று அந்த நேரத்திலும் சொன்னாள் அணு.
சிரித்த அர்ஜுன் “சரி நீ பயப்படலை. எனக்கு பயமா இருக்கு. கொஞ்சம் வெளிய என்னை கூட்டிட்டு போயேன்”, என்று சொன்னான்.
மெது மெதுவாக அந்த சுவரை விட்டு நடந்தவள், அவன் கைகளை இறுக்கமாக பற்றி கொண்டாள்.
அவள் முகத்தை பார்த்தான் அர்ஜுன்.
“நீங்க பயமா இருக்குன்னு சொன்னீங்கள்ள. அதனால தான் உங்களை பிடிச்சிருக்கேன்”, என்றாள் அணு.
“ஹா ஹா நீ ரொம்ப தைரிய சாலி தான் வா” என்று நடந்தான்.
அவனை ஒட்டி கொண்டே வந்தவளின்  காலில் பட்டு எதுவோ ஓடியது. 
அடுத்த நிமிடம் “ஐயோ”, என்ற அலறலுடன் அவனை கட்டி கொண்டாள் அணு.
அவள் செய்கையில் அதிர்ச்சியானான் அர்ஜுன். அப்படியே அவனுடைய நாடி, நரம்பு எல்லாமே உறைந்தது போல இருந்தது. அவன் அம்மாவை தவிர அவன் உணர்ந்த மற்றொரு பெண்ணின் தொடுகை அணுவினுடையது தான்.

தன்னை சமாளித்து கொண்டவன் “என்ன ஆச்சு அணு?”,  என்று கேட்டான்.

“காலில்  எதுவோ ஓடுது”, என்று பயத்துடன் சொன்னாள் அணு.

“எலியா இருக்கும். நீ  இதுக்கெல்லாமா பய  படுவ?”
“இதுக்கு தான் பய  படுவேன். ப்ளீஸ் என்னை  சீக்கிரம் வெளிய கூட்டிட்டு போய்ருங்க”

“நீ இப்படி இறுக்க பிடிச்சிருந்தா, எப்படி நடக்க முடியும் சொல்லு”, என்று சிரித்தான் அர்ஜுன்.

அவன் கேட்ட பிறகு தான் உண்மை நிலையையே உணர்ந்தாள் அணு.

சிறு கூச்சத்துடன் அவனை விட்டு விலகியவள், அவன் கைகளை மட்டும் பிடித்து கொண்டாள்.

ஒரு வழியாக அவளை வெளியே அழைத்து வந்தான் அர்ஜுன்.

வெளிச்சத்தை பார்த்த பின்னர் தான் அவன் கையை விட்டாள் அணு.  “இன்னும் கொஞ்ச நேரம் பிடிச்சிருக்கலாம்”, என்று நினைத்தது அர்ஜுனின் மனது.
“ச்சே, இப்படி இவன் முன்னாடி போய் பயந்து  அசிங்க பட்டுட்டோமே? என்னை பத்தி என்ன நினைப்பான்?”, என்று நினைத்து கொண்டே அவனை பார்த்தாள்.

அவன் அவளை தான் பார்த்து சிரித்து கொண்டிருந்தான்.

“ஐயோ சிரிக்கிறானே”
“யாரோ அன்னைக்கு ஒருத்தனை தைரியமா கன்னதுல  அடிச்சாங்க. ஆனா இப்ப எவ்வளவு தைரியம் அவங்களுக்குன்னு இன்னைக்கு தான தெரியுது “, என்று நக்கலடித்தான்  அர்ஜுன்.
அவன் கேலியில் அவனை முறைத்தவள், “அவன் தப்பு செஞ்சான். இனி அப்படி செய்ய கூடாதுன்னு தான் அடிச்சேன். ஆனா இப்ப அப்படி இல்லையே?  ப்ளீஸ் யார் கிட்டயும் இங்க நடந்ததை சொல்லிறாதீங்க”, என்று கெஞ்சினாள்.

அவளிடம் வம்பிழுக்க ஆசை வந்தது அர்ஜுனுக்கு. அது ஏனென்று அவனே அறியான்.
“சொன்னா  என்ன பண்ணுவ?  கண்டிப்பா என் பிரண்ட்ஸ் கிட்ட சொல்லுவேன். அவனுங்க தான் உன்னை பெரிய தைரியசாலினு சீன போட்டானுங்க”

“பாத்தீங்களா அவங்களே என்னை பத்தி கெத்தா நினைச்சிருக்காங்க. நீங்க மானத்தை வாங்கிராதீங்க. எனக்கு சில விசயத்துக்கு மட்டும் பயம் வரும். இன்னைக்கு உங்க முன்னாடி மாட்டிகிட்டேன். ப்ளீஸ்  சொல்லிராதீங்க. சொல்ல கூடாது சொல்லிட்டேன். இப்ப கிளம்புறேன்”, என்று திரும்பினாள் அணு.
“கண்டிப்பா சொல்லுவேன். அப்படி சொன்னா என்ன பண்ணுவ? என்னமோ மிரட்டுற?”
போக காலை முன்னே எடுத்து வைத்தவள்  அவன் அப்படி சொல்லவும் நின்று அவனை பார்த்து திரும்பி “சொல்ல கூடாது சொல்லிட்டேன்”, என்று விரலை நீட்டி மிரட்டினாள்.

“பழைய  அணு வந்துட்டா போல?”

“ஆமா என்னோட பேர் உங்களுக்கு எப்படி தெரியும்?”
“உன்னை பத்தி என் நண்பனே புகழ்ந்து பேசி தள்ளிட்டான். சரி அதுவா முக்கியம்? நாளைக்கே எல்லாரும் உன்னை பாத்து சிரிக்க போறாங்க. அப்ப உன் முகம் எப்படி போகணும்னு பாக்கணும் “
“அப்படி சொன்னா உங்களை கொன்னுருவேன்”

“ஏய், என்ன மிரட்டுற? அன்னைக்கு ஒருத்தனை அடிச்சியே, அவனை மாதிரி எல்லாம் நான் பய பட மாட்டேன். கண்டிப்பா சொல்லுவேன்”

“என்னை பத்தி  சொல்றதுல உங்களுக்கு என்ன லாபம்?”
“ஜாலியா கொஞ்ச நேரம் சிரிக்கலாம்ல?”

“நீங்க சிரிக்க நான் தான் கிடைச்சேனா? சொல்ல கூடாது. வீணா  வம்பு இழுக்காதீங்க சொல்லிட்டேன். அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”
“அதை தான நானும் கேக்குறேன்? என்ன செய்வ?”

ஒரு அடி அவனை நோக்கி அடி எடுத்து வைத்தவள், அவன் கண்ணை பார்த்து, “நீ அப்படி சொல்லி பாரு. அப்புறம் இந்த அணு யாருன்னு  தெரியும்”, என்று ஒருமைக்கு தாவினாள்.

அவள் தைரியத்தையும், தெனாவெட்டையும் பார்த்து  பார்த்து வியந்தவன் “நாளைக்கு எனக்கு அது தான் முதல் வேலை”, என்றான்.

“சரி சொல்லிக்கோ. நீ அவங்க கிட்ட அப்படி சொன்னா, நான் என் பிரண்ட்ஸ்  கிட்ட வேற ஒண்ணு சொல்லுவேன்”
“வேறயா? என்ன?”

“சீனியர் அர்ஜுன், என்னை லவ் பண்றாங்களாம். நேத்து ஸ்போர்ட்ஸ்  ரூம்ல வச்சு என்னை கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்துட்டாங்கன்னு  சொல்லுவேன்”

தன்னுடைய பெயர் எப்படி அவளுக்கு தெரியும் என்று யோசிக்காமல் அவள் சொன்னதை கேட்டு “அட பாவி”, என்று வாயை பிளந்தான்.

“பொண்ணா நீ? இப்படியும் சொல்லுவியா?”

“பின்ன நான் இவ்வளவு சொல்லியும் நீ வம்பு பண்ணா, நான் அப்படி தான் சொல்லுவேன். அப்புறம்  இந்த காலேஜ் முழுவதும் நம்ம ரெண்டு பேரும்   லவ் பன்றோம்னு  பரவிரும். எப்படி வசதி”, என்று சொல்லி கண்ணடித்தாள்.
அப்போது தான் அவள் முகத்தை ரசனையாக பார்த்தான் அர்ஜுன்.

நெற்றியில் ஒரு சின்ன கருப்பு போட்டு, கழுத்தில் ஒரு குட்டி செயின், காதில் சின்ன கம்மல்  மட்டும் தான் போட்டிருந்தாள்.

இப்போது அவனை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள் அணுராதா. 

உதடு மட்டும் புன்னகையை சிந்தாமல் அவள் கண்களும் சேர்ந்து சிரித்தது.

“அழகான மீன் விழிகள்னு  இப்படி இருக்குறதுனால  தான் சொல்றாங்களோ? இவ்வளவு ஷார்பா இமைகள் இருக்குமா? அழகு ரதி இப்படி தான் இருப்பாளோ? மோகன சிலைக்கு உயிர் வந்தா இப்படி தான் இருக்குமோ?”, என்று வியந்தான் அர்ஜுன்.

யோசனையில் இருந்தவனின் காதில் அவள் “எப்படி வசதி?”, என்று 
அவள் கேட்பது  விழுந்தது.

அவள் பேச்சை  கேட்ட பின்னர் தான், நிகழ் காலத்துக்கு வந்தான் அர்ஜுன்.

“பொண்ணா  நீ? எப்படி பேசுற? உன் பேரும் சேந்து தான கெடும்”

“கெட்டா கெட்டுட்டு போகுது? நீ ஒண்ணும் மோசமா இல்லையே. அழகா ஹேண்ட்ஸம்மா  தான இருக்க அர்ஜுன்? நீ எனக்கு பெட்டர் சாய்ஸ் தான். அப்புறம்  என்ன கவலை”
அவளின் புகழ்ச்சியில் அவன் மயங்கினான் என்பது மட்டும் உண்மை. அதை மறைத்து “உனக்கு நான் பெட்டர் தான். ஆனா எனக்கு நீ பெட்டரா இருக்கணும்ல?”, என்றான்.
“ஏன் எனக்கு என்ன குறைச்சல்?”, என்று சண்டை போடுவது போல கேட்டாள் அணு.
“பொறுமை மா. எதுக்கு இப்படி கோப படுறீங்க?”
“என்னது அம்மாவா? என்னை பாத்தா ஆண்ட்டி மாதிரி இருக்கா?”
“அதுவா முக்கியம்? இப்ப மேட்டருக்கு வா. எனக்கு வர போற ஜோடிக்கு  அப்படியே அழகு வடியும்னு நான் நினைப்பேனா, மாட்டேனா? இங்க என்ன வழியுது?”
அவன் பதிலில் தான் அழகே இல்லையோ என்று சந்தேகமே வந்தது அணுவுக்கு. 

அவள் முகம் போகும் போக்கை பார்த்தவன் மனதுக்குள் சிரித்து  கொண்டு “என்ன சத்தத்தையே காணும்?”, என்று கேட்டான்.
தன்னை சுதாரித்து கொண்டவள், “சரி எனக்கு அழகு இல்லை. நான் ஒத்துக்குறேன். அப்புறம் என் பேரு உன் பேர் கூட சேந்து பரவுவதை  நீ எப்படியும்  விரும்ப மாட்ட. அப்ப இங்க நடந்தததை சொல்லாம இரு. நானும் எதுவும் சொல்ல மாட்டேன்”, என்றாள்.
“இது நல்ல ஐடியா  தான். சரி நான்  சொல்லலை. நேரம் ஆகிட்டு. கிளம்பு “
“இதை தான முதலிலே சொன்னேன். சரியான லூசு அர்ஜுன் நீ”
“ஏய் நான் உனக்கு சீனியர். நீ பேர் சொல்லி கூப்பிடுற?”
“உன்னை அண்ணன்னு  சொன்னா நல்லா இருக்குமா சொல்லு? உனக்கே ஏற்கனவே அழகு வழியுது. அப்புறம்  எந்த பொண்ணாவது அழகான  பையனை  பாத்து  அப்படி சொல்லுவாளா? இனி நாம பிரண்ட்ஸ்  ஓகே  வா?”, என்று சொல்லி கை கொடுத்தாள்.
அவள் கைகளை சிரித்து  கொண்டே பிடித்து குலுக்கினான் அர்ஜுன்.

“சரி உங்க வீடு எங்க இருக்கு?”, என்று கேட்டான் அர்ஜுன்.

“இங்க இருந்து அரை மணி நேரம் போகணும். சரி நீ எப்படி போவ?”

“பஸ்ல  தான்”
“நானே வண்டி வச்சிருக்கேன். பையன் நீ. வண்டி வாங்கலையா?”
“அதை யாரு எங்க அம்மா கிட்ட சொல்றது? வீட்டில நாலு கார் நிக்குது. ஆனா வண்டி வாங்கி தர மாட்டேன்னு  சொல்லிட்டாங்க. அவங்களுக்கு எனக்கு என்ன ஆகுமோன்னு  பயம்”

“அப்ப கார்ல வர வேண்டியது தான அர்ஜுன்?”
“கார்ல வந்தா, பிரண்ட்ஸ் ஏதோ பணக்காரன் ரேஞ்சுக்கு  பாத்து தள்ளி வைப்பாங்க. அதான்”

“சோ சுவீட் அர்ஜுன் நீ. சரி வா நான் உன்னை டிராப்  பண்றேன்”

“என்ன கிண்டலா?”

“ஏய் நிஜமா தான். டபுள்ஸ்  அடிப்பேன். எங்க அப்பாவையே வச்சி ஓட்டிட்டு  போவேன்”

“பெரிய சாதனை தான். எனக்கு இங்க ரூம் பூட்டி சாவியை ஆஃபீஸ் ரூம்ல கொடுக்கணும். நேரம் ஆகும் அணு”

ஒரு நிமிடம் யோசித்தவள், “சரி நீ கொடுத்துட்டு மெயின் பிளாக் கிட்ட நில்லு. நான் ரெஸ்ட் ரூம் போயி, டிரெஸ் மாத்திட்டு வறேன்”, என்றாள்.
“ஹ்ம் சரி”

“பத்து நிமிசத்துல  வந்துரு. இல்லை மண்டைல  கொட்டுவேன்”, என்று சொல்லி விட்டு நடந்து போனாள் அணுராதா.
“கொஞ்ச நேரம் முன்னாடி பயந்து என் தோளில் தொத்துனது என்ன? இப்ப அரட்டிட்டு  போறது என்ன?”, என்று நினைத்தவன் அவளை, அவள் செய்கையை, அவள் பேச்சை நினைத்து ரசித்து சிரித்து கொண்டே, ரூமை பூட்டி சாவியை கொடுக்க போனான்.

அவள் வரும் முன்பு மெயின் பிளாக் கிட்ட நின்று கொண்டிருந்தான் அர்ஜுன்.
“ஒரு பொண்ணு பின்னாடி உக்காந்து போகணுமா? அதுவும் ஸ்கூட்டில? வேண்டாம்ணு சொல்லிறலாமா?”, என்று யோசிக்கும் போதே “அர்ஜுன் வா போகலாம்”, என்று வண்டியோடு வந்தாள் அணு.
அவள் அருகில் சென்றவன் “நீ போயேன் அணு. நான் பஸ்ல  போய்க்கிறேன்”, என்றான்.
அவனை முறைத்தவள், “ஒழுங்கா ஏறு டா “, என்றாள்.
“டா  வா”
“அதெல்லாம் அப்படி தான் ஏறி தொலை”

“எனக்கு கூச்சமா இருக்கு”

“இது உனக்கே ஓவரா தெரியலை? சரி பொழைச்சி போ. உனக்கு வண்டி ஓட்ட தெரியும் தான? நீயே ஓட்டு. நான் பின்னாடி உக்காருறேன்”

அதுக்கு மேல் மறுக்க முடியாமல் சரி என்று மண்டையை ஆட்டினான் அர்ஜுன். 

“யாரோ பத்து நிமிசத்துல வரலைன்னா மண்டைல கொட்டுவேன்னு சொன்னாங்க. இப்ப அவங்களே லேட்டா வந்திருக்காங்க”, என்று கேட்டு கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தான் அர்ஜுன்.

“நீ ஒரு லூசு அர்ஜுன்”, என்றாள் அணு.

“என்னது லூசா?”

“ஆமா, நீ லேட்டா வந்தா கொட்டுவேன்னு சொன்னேன். நானும் லேட்டா வந்தா நீ கொட்டிருக்க வேண்டியது தான?”

“அட பாவி நீயே உன்னை கொட்ட சொல்ற?”

“என்ன இருந்தாலும் நியாயம் நியாயம் தான்”

“நீ ரொம்ப நியாயவாதி தான். சரி ஏறு. நேரம் ஆகிட்டு”
“ஹ்ம்ம் நீ ரொம்ப நல்லவன் அர்ஜுன்”, என்ற படியே ஏறி அவன் பின்னே அமர்ந்தாள் அணு ராதா. 

உருகுதல் தொடரும்…..

Advertisement