Advertisement

அத்தியாயம் 4
என்னைப் காணாதே என்று
கண்ணுக்கு தடை போட்ட நீ
என்னை நினைக்காதே என்று
என் மனதுக்கும் தடை போடு!!!
“அப்பாடி வந்துட்டா”, என்று நினைத்து கொண்டவனின் கைகளும் அவளை அணைத்து கொண்டது. 
என்னமோ அவளுக்கே ஆபத்து போல அவனை ஒண்டி கொண்டு படுத்திருந்தாள் அணுராதா.
“அப்புறம் அந்த மான் திரும்பி பாத்துச்சாம். பின்னாடி யாருமே இல்லையாம். மறுபடியும் சத்தம் கேட்டுச்சாம். அப்பவும் திரும்பி பாத்துச்சாம். பாத்தா அதோட அப்பா மான் தான் அது பின்னாடியே காவலுக்கு வந்துச்சாம். அப்பாவை பாத்த உடனே அதுக்கு ரொம்ப சந்தோசம். அந்த அப்பா மான், இந்த பக்கம் புல் இருக்காது டா குட்டி. அந்த பக்கம் போகலாம்னு கூட்டிட்டு போச்சாம். அவ்வளவு தான் கதை”, என்று முடித்தான் அர்ஜுன்.
“பயமான கதை சொல்லுவேன்னு நினைச்சேன். மொக்கை கதையா சொல்ற போடா”
“பயப்படாம தான் இப்படி இறுக்கி கட்டிட்டு படுத்துருக்கியோ?”
“போடா, எங்க வீட்ல நீ இல்லாம எனக்கு தூக்கமே வரல தெரியுமா?”
“அப்படியா? அப்ப  என்ன செஞ்ச?”
“தூக்கம் வர வரைக்கும், அப்பாவை தூங்க விடாம உக்கார வச்சு பேசிட்டு இருப்பேன். அப்புறம் தூங்கிருவேன்”
“பாவம் மாமனார். இருபத்தி அஞ்சு வருஷம், இவளால என்ன பாடு பட்டிருப்பாரோ?”, என்று நினைத்தவனுக்கு  “எனக்கு அணுவை பிடிச்சிருக்கு அங்கிள்”, என்று அவன் சொன்ன போது அவர் சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்தது.
“உங்க காதலை எதிர்க்குறதுக்காக நான் சொல்லலை தம்பி. ஆனா அணு உங்களுக்கு வேண்டாம். அவளை ஹேண்டில் பண்றது கஷ்டம். அவளை சரியா வளர்க்கலையோன்னு  இப்ப  கவலை படுறேன். அவளை பிரேடிக்ட் பண்றது கஷ்டம் பா. வேற நல்ல பொண்ணை கட்டிக்கோ”, என்றார் அவர். 
அதை நினைத்து பார்த்தவனுக்கு, “ஏன் அப்படி சொன்னார் அவர்?  அணுவோட குணம் மித்த பொண்ணுங்க மாதிரி இல்லாம கொஞ்சம்  வித்தியாசமா இருக்க தான் செய்யுது. ஆனா அவ இப்படி என்னை சார்ந்து இருக்குறது தான் எனக்கு பிடிச்சிருக்கு”, என்று நினைத்து கொண்டே அவளை இறுக்கி கொண்டான். 
“மூச்சு முட்டுது அஜ்ஜு”, என்றாள் அணு.
“சாரி டா. கோபம் போயிருச்சா, என் செல்லத்துக்கு?”
“ஹ்ம்ம்”
“சாரி, இனிமே அப்படி நடக்காது சரியா கண்ணம்மா? என்னோட செகரட்ரி லதா அன்னைக்கு பஸ் வரலைன்னு, நின்னாங்க டா. ஐயோ பாவம்னு நினைச்சு தான் கார்ல கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன். ஆனா அவ முன்னாடி ஏறுவான்னு நினைக்கல. எப்படி இறங்க சொல்லனு தான் அமைதியா ஓட்டிட்டு போனேன். ஆனா அப்புறம் தான் அவ ஒரு மாதிரி ரியாக்ட் பண்ணா. என்ன செய்யன்னு தெரியாம தான், காரை நிப்பாட்டுனேன். அப்ப தான் நீ வந்த.  அவ மேல தப்பு இருக்கு தான். ஆனா எல்லார் முன்னாடியும் வச்சு நீ அவளை அடிச்சியா. அதான் கண்ணம்மா தப்புன்னு சொன்னேன். உடனே உனக்கு கோபம் வந்துருச்சு. இனி யாரும் என் பக்கத்துல உக்கார மாட்டாங்க. நான் விட மாட்டேன் சரியா?”
“ஷாப்பிங் போயிட்டு வந்துட்டு இருக்கும் போது, நீ அவ கூட கார்ல போனா எனக்கு எப்படி இருக்கும் அர்ஜுன்? அதுவும் என் சீட்ல அவ உக்காந்தா எனக்கு கடுப்பா ஆகாது? திட்டணும்னு தான் வந்தேன். ஆனா அவ எப்படி சேலை கட்டி உன்னை பிடிச்சிட்டு இருந்தா பாத்த தான? அதான் அடிச்சேன். நீ என்னை திட்டுற? போடா”
“அதான் கோடி தடவ சாரி சொல்லிட்டேன்ல டா. அவளையும் வேலையை விட்டு நிப்பாட்டிட்டேன். அப்புறம் என்ன மா?”
“ஹ்ம்ம் போ” 
“என் அணுவை விட்டு எங்கயும் போக மாட்டேனே”
“என்னை உனக்கு பிடிக்குமா அர்ஜுன்?”
“உனக்கு தெரியாதா?”
“தெரியும் தான். சரி நீ அப்பாவுக்கு போன் போட்டு திட்டு”
“எதுக்கு டா?”
“என்னை அடிச்சிட்டாரு?”
“ஐயையோ அப்படியா? எங்க டா?”
“இங்க கன்னத்துல”
“நாளைக்கு மாமா கிட்ட போய் சண்டை போடுறேன். எப்படி நீங்க என் அணுவை அடிக்கலாம்னு சரியா? இப்ப ஐயோ பாவம் அவர் தூங்கட்டும். உனக்கு ரொம்ப வலிச்சதா கண்ணம்மா?”
“ஹ்ம்ம் ஆமா. நான் அழுதேன். உன்கிட்ட சொல்லிருவேன்னு மிரட்டினேன். உன்னை வச்சி அடிக்க வைப்பேன்னு சொன்னேன்”
“இனி உன்னை அழ விட மாட்டேன் சரியா டா குட்டி. கன்னத்துல முத்தம் தரவா?”
“ம்ம்”
“கன்னத்துல மட்டும் கொடுத்தா போதுமா அணு?”
“அஜ்ஜு”, என்று சொல்லி கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் அணு. 
இந்த உலகத்தை பொறுத்த வரைக்கும் அணு, ரொம்ப தைரியமான பொண்ணு. ஆனால், அவளுடைய அப்பா, மற்றும் அர்ஜுனிடம் மட்டும் குழந்தையாக மாறி விடுவாள். அவளுடைய கண்ணீரை பார்த்தவர்கள் கூட இவர்கள் இருவராக தான் இருக்கும். 
அவர்கள் அவளை குழந்தையாக தாங்குவதை அதிகமாக விரும்புவாள் அணு. மற்றவர்களிடம் கம்பீரமாக உலா வருவாள். தப்பை தட்டி கேட்பதில், முதல் ஆளாக இருப்பாள். எதாவது போராட்டம் என்றால் முன்னால் நின்று குரல் கொடுப்பாள். 
“ஏன் டி வெளிய எல்லார் கிட்டயும், எப்படி ரவுடி மாதிரி நடந்துக்குற. என்கிட்ட மட்டும் பம்முற? இன்னைக்கே ரெண்டு பேரை அடிச்சு வச்சிருக்க”, என்று கேட்டான் அர்ஜுன்.
“எல்லார் கிட்டயும் நம்ம வீக்நசை காட்ட முடியுமா சொல்லு அர்ஜுன்? அவங்க முன்னாடி எல்லாம் பயந்து போய் நடந்தா என்ன நினைப்பாங்க. அவங்க முன்னாடி எல்லாம் என்னோட பயத்தை காட்ட தெரியாது. என்னோட கண்ணாடியா நீ தான் இருக்க அர்ஜுன். உன்கிட்ட மட்டும் தான் நான் எல்லா உணர்வுகளையும் காட்டுவேன். மித்தவங்க எல்லாருக்கும் நான் அணுராதா தான். அவ எப்பவும் கம்பீரமா இருப்பா. என்னோட உணர்வுகளை வேற யாரும் படிக்க முடியாது. ஆனால் நீ அப்படியா? நீ எனக்கு இன்னொரு அப்பா அர்ஜுன். அதனால தான், உங்க ரெண்டு பேர் கிட்ட மட்டும் நான், நானா இருப்பேன். அழுகை வந்தா அழுவேன். கோபம் வந்தாலும் காட்டுவேன். ஏன்னா நீங்க ரெண்டு பேரும் என்னோட செல்ல பொம்மைஸ்”, என்று சிரித்தாள் அணு. 
“நீ தான் டி மெழுகு பொம்மை. அப்படியே எப்படி இருக்க தெரியுமா? தொட்டாலே வழுக்குது. மென்மையா இருக்க? உன்னை பாத்து, பைத்தியமா இருக்கேன் அணு. உன்னை இப்படி ஒட்டிட்டே இருக்கணும்னு, ஒவ்வொரு செல்லும் ஏங்குது. இத்தனை நாள் எப்படி கஷ்டமா இருந்துச்சு தெரியுமா? உன்னை தூக்கிட்டு வந்துரலாம்னு நினைச்சேன். அப்புறம் தப்பு என் மேலன்னு, நினைச்சு நீயா வந்திருவன்னு நினைச்சேன். நீ வேணும் டி. இன்னைக்கு தூக்கம் கட். ப்ளீஸ் டி”, என்று கேட்டவனின் முகம் அவள் கழுத்தில் ஊர்ந்தது. 
கண்களை மூடி அவன் தொடுகையை அனுபவித்தாள் அணு. 
“இப்ப எதுக்கு இந்த சட்டையை போட்ட, தொந்தரவா இருக்கு”, என்ற படி பட்டனில் கை வைத்தான் அர்ஜுன்.
அங்கு தனியே கிடந்த போர்வையை எடுத்து தங்கள் மேல் மூடினாள் அணு. 
அவன் வெற்று மார்பில் முகம் புதைத்தவள் “அஜ்ஜு”, என்று அழைத்தாள்.
“என்ன டா?”, என்ற படியே அவள் காதை கடித்தான்.
“அப்பாவுக்கு, குட்டி அர்ஜுன் வேணுமாம்”
அதிர்ச்சியாக அவளை பார்த்தான் அர்ஜுன்.
“என்ன டா இப்படி முழிக்கிற?”
“கொஞ்சம் என்னோட நிலைமையை யோசிச்சு பாரு டா அணு குட்டி. உனக்கும் கதை சொல்லி தூங்க வைக்கணும், அவனுக்கும் கதை சொல்லி தூங்க வைக்கணும்னா? ஒரே நேரத்தில் ரெண்டு குழந்தைகளை  எப்படி என்னால சமாளிக்க முடியும் சொல்லு?”
“கிண்டலா பண்ற? நான் ஒன்னும் எப்பவும் அப்படி கிடையாது. எப்பவாது தான். அப்புறம் குழந்தைன்னு சொல்லிட்டு, எதுக்கு டா இப்படி எல்லாம் பண்ற? கையை எடு. தள்ளி படு. சேம் சேம் பப்பி சேமா இருக்கு”
“முதலுக்கே மோசம் பண்ணாத கண்ணம்மா”,  என்று சொன்னவனின், கைகள் அவள் வெற்றிடையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அவள் கைகளும் அவன் முதுகில் பதிந்து அழுந்தியது. 
அவளை பார்த்து சிரித்தவன், “கொஞ்ச நாள் போகட்டும் செல்லம். கல்யாணம் முடிஞ்சு மூணு மாசம் தான் ஆகுது. அதுக்குள்ளே ஒரு சண்டை வந்து, அங்க போயிட்ட. கொஞ்ச நாள் உன்னை அணு, அணுவா அனுபவச்சிக்கிறேன் லட்டு. குழந்தை கொஞ்ச நாள் கழிச்சு பாக்கலாம்”, என்ற படியே அவள் உதடுகளை சிறை செய்தான் அர்ஜுன். 
தன் நெஞ்சில் குழந்தை போல் தலை வைத்து உறங்கும் அணுவை பார்த்தவனுக்கு புன்னகை வந்தது. அவன் கைகள் சிறிது அவளை இறுக்கியது. இன்னும் நெருங்கி படுத்தாள் அணுராதா.

முதல் நாள் அவளை பார்த்த நினைவு வந்தது அர்ஜுனுக்கு.
அர்ஜுன் மூன்றாவது வருடம் பி. பி. ஏ படித்து கொண்டிருந்தான்.

“என்ன டா சிவா, இவ்வளவு நேரம் ஆகியும் ஸ்டாப் யாரும் வரலை. ஏதும் பங்க்சனா?”, என்று கேட்டான் அர்ஜுன்.

“நீ ரெண்டு நாள் காலேஜ் வரலைல? அதான் உனக்கு தெரியலை. இன்னைக்கு தான் பர்ஸ்ட் இயர் வாரங்க. அதான் அவங்க கிட்ட பீஸ் வசூலிக்க எல்லாரும் போயிருக்காங்க. ஆமா நீ எதுக்கு அர்ஜுன் வரலை?”, என்று கேட்டான் அவனுடன் படிக்கும் சிவா. 

“அம்மாக்கு உடம்பு சரி இல்லை டா. கொஞ்சம் சுகர் கூடிருச்சு அதான். ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக வேண்டி இருந்தது”

“ஐயையோ! இப்ப பரவால்லயா?”

“பரவால்ல சிவா. ஆனா எப்ப சுவீட் சாப்பிட்டு ஏத்தி வைப்பாங்களோ தெரியாது”

“அவங்களை பாத்துக்க ஒரு ஆள் வைக்கலாம்ல டா?”

“வேலைக்கு ஆள் இருக்காங்க. ஆனா எந்நேரமும் அவங்க கூடவே இருக்க முடியுமா? அவங்களும் அவங்க வீட்டுக்கு போகணும்ல? சரி வா. கேன்டீன் போயிட்டு வரலாம்”
“ஏய் அருண் கேன்டீன் போறோம் வரியா டா?”, என்று கேட்டான் சிவா.
“நீங்க போயிட்டே இருங்க டா. நான் பின்னாடியே வரேன். ஒரு முக்கியமான விஷயம், நம்ம விஷ்ணு கிட்ட கேக்க வேண்டி இருக்கு”, என்றான் அருண்.
“அப்படி என்ன முக்கியமான விஷயம் கேக்க போறான் சிவா?”, என்று கேட்டு கொண்டே நடந்தான் அர்ஜுன்.
“வேற என்ன கேப்பான்? எந்த பொண்ணோட போன் நம்பரையாவது பிச்சை வாங்குவான்”, என்று சிரித்தான் சிவா.
இருவரும் கேன்டீன் சென்று, ஆளுக்கொரு சமோசாவும் டீ யும் வாங்கி கொண்டு அங்கு இருந்த டேபிளில் அமர்ந்தார்கள்.
அப்படியே கதை பேசி கொண்டிருந்தார்கள் இருவரும்.
ஆங்காங்கே சிலர் கூட்டமாக அமர்ந்து பேசி கொண்டும் சிரித்து கொண்டும் உக்காந்திருந்தாள்.
சப்பென்று அறையும் சத்தம் கேட்டு சிவாவும், அர்ஜுனும் திரும்பி பார்த்தார்கள்.
அங்கே ஒரு பெண் ஒரு பையனின் கன்னத்தில் அறைந்திருந்தாள். இவர்கள் பார்க்கும் போது மற்றொரு அறையும் வைத்தாள்.
அதிர்ச்சியாக எல்லாருமே திரும்பி பார்த்தார்கள்.
“அடி வாங்குனது, நம்ம எம். எஸ். சி அண்ணன் மாதிரி இருக்கு டா”, என்று சொன்னான் அர்ஜுன்.
“அந்த கடன் காரன் டேவிட் தான் டா. ஆனா செம பொண்ணு டா. காலேஜ் ரவுடியையே அடிச்சிட்டாளே. என்ன வம்பு செஞ்சானோ?”, என்றான் சிவா.
“இந்த தப்பை இன்னொரு தடவை செஞ்ச, அடிக்க மாட்டேன். கொன்னுருவேன்”, என்று சொல்லி விட்டு சென்றாள் அணுராதா.
“செம போல்ட் டா இந்த பொண்ணு”, என்றான் சிவா.
“சரியான திமிர் பிடிச்சவ டா, இந்த பொண்ணு”, என்றான் அர்ஜுன்.
“எதுக்கு அடிச்சான்னு கேக்காம சொல்ல கூடாது அர்ஜுன். டேவிட் சும்மா இருந்திருக்க மாட்டான். சரியான பொறுக்கி. அதோ நம்ம கேங் அங்க விசாரிக்கிறாங்க. இப்ப வந்து என்னனு சொல்லுவாங்க பாரு”, என்றான் சிவா.
இவர்களுடைய நண்பர்கள் வந்து, அர்ஜுன்  மற்றும் சிவா அருகில் அமர்ந்தார்கள்.
“என்ன ராகுல், அங்க பிரச்சனை?”, என்று கேட்டான் அர்ஜுன்.
“அது ஒன்னும் இல்லை அர்ஜுன். நம்ம டேவிட் தல, சும்மா இருக்காம, அந்த பொண்ணோட துப்பட்டாவை பிடிச்சு விளையாட்டுக்கு இழுத்துருக்கான். அவ திரும்பி முறைச்சிருக்கா. இவன் சும்மா கிடந்துருக்க வேண்டியது தான? என்ன முறைக்கிறன்னு சவுண்ட் விட்டுருக்கான். அப்பவும் அவ சும்மா தான் இருந்திருக்கா? இவன் தான் அவளை பயமுறுத்தணும்னு சொல்லி, லைட்டா இழுத்ததுக்கு இப்படி முறைக்கிற, மொத்தமா இழுத்தா என்ன செய்வன்னு கேட்டு வம்பு பண்ணிருக்கான். அதான் ரெண்டு அறை விட்டுருக்கா. எல்லாரும் அந்த பொண்ணை தான் பாராட்டுறாங்க மச்சி”
“நான் சொன்னேன்ல அர்ஜுன். இவன் தான் வம்பு பண்ணிருப்பான்னு. ஆனா அந்த பொண்ணு எந்த கிளாஸ் டா? நான் பாத்ததே இல்லை”, என்றான் சிவா.
“நம்ம ஜூனியர் தான் டா. பி. பி. ஏ பர்ஸ்ட் இயராம். பேரு அணுராதாவாம்”, என்றான் ராகுல்.
“இப்ப தான டா வந்த? அதுக்குள்ளே எப்படி விசாரிச்ச?”, என்றான் சிவா.
“அழகான பொண்ணை பத்தி, விவரம் சேகரிக்கிறது அவ்வளவு கஷ்டமா?”, என்று சிரித்தான் ராகுல்.
அவள் அழகா, அழகு இல்லையா அது எதுவுமே அர்ஜுன் பார்க்கவே இல்லை. அது தான் அவளை பற்றி முதல் முறையாக அறிந்தது. அர்ஜுன் ஒருவன் இருக்கிறான் என்று அணுவுக்கு தெரியவே தெரியாது.
அதற்கு அடுத்து அவளை அதிக நாள் அவன் பார்க்கவே இல்லை.
“முதல் நாளே ஒருத்தனை வச்சி அடி பிச்சிருக்கா”, என்று நினைத்து பார்த்த அர்ஜுனுக்கு இரண்டாவது சந்திப்பு நினைவு வந்தது.
பேஸ்கட் பால் டீம் கேப்டன் அர்ஜுன் தான். அன்றைய பிராக்டிஸ் முடிந்து, எல்லாவற்றையும் எடுத்து வைத்து கொண்டிருந்தான். அவனுடைய கோச் வந்து “எனக்கு ஒரு பங்க்சன் வீட்டுக்கு போகணும் அர்ஜுன். டென்னிஸ் டீம் மட்டும் தான் இன்னும் திங்ஸ் வைக்கலை. அவங்க வச்ச பிறகு ஸ்போர்ட்ஸ் ரூம் பூட்டி, சாவியை ஆபிஸ் ரூமில் கணபதி சார் கிட்ட கொடுத்துறியா?”, என்று கேட்டார்.
ஒரு நொடி யோசித்தவன் “ஓகே சார். நான் பாத்துக்குறேன். நீங்க கிளம்புங்க”, என்று சொல்லி விட்டு ஸ்போர்ட்ஸ் ரூம் வெளியே இருந்த மரத்தடியில் அமர்ந்தான்.
அப்படி அவன் அந்த ஸ்போர்ட்ஸ் ரூமை பார்த்து கொண்டிருக்கும் போது, ஒரு பெண் பாதி பேட்டுகளும், மற்றும் பால் எடுத்து கொண்டு அந்த அறைக்குள் சென்றாள்.
அவள் வெளியே வரும் வரைக்கும் அவளை பார்த்து கொண்டு தான் இருந்தான் அர்ஜுன்.
“பாதி பேட் தான வந்துருக்கு. மீதியை காணும்”, என்று நினைத்து அந்த பெண்ணிடம் விசாரித்தான்.
“பர்ஸ்ட் இயர் அணு கொண்டு வாரா அண்ணா. சார் பேசிட்டு இருந்தாங்க. அதான் லேட் போல. இப்ப வர சொல்றேன்”, என்று சொல்லி விட்டு போனாள் அவள்.
“பர்ஸ்ட் இயர் அணு”, என்றவுடன் அன்னைக்கு அறைந்தவள் தான் என்று புரிந்தது.
“எதுக்கு வம்பு?”, என்று நினைத்து அதே மரத்தடியில் அமர்ந்து கொண்டான்.
அதே போல டென்னிஸ் உடையில், கம்பீரமாக நடந்து வந்தாள் அணுராதா.
“அவளே தான். எப்படி பந்தாவா வாரா பாரு? திமிர் பிடிச்சவ”, என்று நினைத்து கொண்டே அவளை பார்த்து கொண்டே அமர்ந்திருந்தான்.
அறை வாசலுக்கு வந்தவள், தலையை மட்டும் நீட்டி உள்ளே எட்டி பார்த்தாள்.
பிறகு முடிவு செய்தவள் போல உள்ளே போனாள்.
“அவ போன பிறகு பூட்டனும்”, என்று நினைத்து தயாராய் இருந்த அர்ஜுன் அறை வாசலையே பார்த்து கொண்டிருந்தான்.
அவள் வெளியே வந்த பாடாய் இல்லை. “உள்ள தான போனா? இன்னும் காணும். எங்க வைக்கன்னு தெரியாம நிக்குறாளோ?”, என்று நினைத்து மணியை பார்த்தான்.
“சரி போவோம்”, என்று நினைத்து அவனும் தலையை நீட்டி உள்ளே பார்த்தான்.
அப்போது தான் அது புரிந்தது. பவர் கட் ஆகி இருந்தது.
அந்த அறையே இருட்டாக தான் இருக்கும். ஒவ்வொரு ஸ்போர்ட்ஸ்க்கும் தனி தனி செல்ப் வைக்க பட்டிருப்பதால், மொத்தமாக வெளிச்சத்தை மறைத்து கொண்டு இருக்கும் அந்த அறை. பகலிலே லைட் இல்லாமல் உள்ளே போகவே முடியாது.
அதை பார்த்தவன் “இருட்டுக்குள்ளே எங்க இருக்கா?”, என்று ஒரு நிமிடம் பார்த்தவனுக்கு, சிறிது சிறிதாக வெளிச்சம் கண்ணுக்கு புலப்பட்டது. அந்த வெளிச்சத்தை வைத்தே உள்ளே பார்வையை ஓட விட்டான்.

Advertisement