Advertisement

“டேய் உனக்கு பிடிச்ச ரெட் சட்னி தான் வச்சிருக்கா. ஒழுங்கா தின்னு”
“இத்தனை நாள் பட்டினி போட்டுட்ட. இன்னைக்கு விருந்தே இருக்கும்னு பாத்தா இப்படி சொதப்புறியே அணு டார்லிங்”, என்று கொஞ்சினான் அர்ஜுன்.
“படுத்தாம தின்னு தொலையேன் டா”
“அப்ப ஊட்டி விடு. அப்ப தான் சாப்பிடுவேன். இல்லைனா வேண்டாம்”
“நீ அடங்க மாட்டியா அர்ஜுன்?”
“நீ தான் அடக்கேன்”
“விவகாரமா பேசாத. எதுக்கு எடுத்தாலும் டபுள் மீனிங். அடி வாங்க போற. இந்தா சாப்பிடு”, என்று சொல்லி கொண்டே அவனுக்கு ஊட்டி விட்டாள் அணு.
சிரித்து கொண்டே அதை வாங்கியவன், அவள் விரலையும் சேர்த்து சுவைத்தான்.
“ஒழுங்கா இட்லியை மட்டும் சாப்பிடாம என்ன வம்பு பண்றான்”, என்று மனதினுள் திட்டி தீர்த்தவள் அடுத்த வாயை ஊட்டினாள். அவனிடம் கேட்டால், இப்படியா செஞ்சேன்னு இன்னொரு தடவை செஞ்சி காமிப்பான் என்று நினைத்து கொண்டு அமைதியாக இருந்தாள்.
அப்படியே வம்பு செய்து கொண்டு சாப்பிட்டவன் அவளுக்கு ஒரு வாயை மறந்து போய் ஊட்டி விட்டு விட்டான்.
அவன் அப்படி செய்வான் என்று எதிர்பாராமல், அதை விட அவன் மட்டுமே சாப்பிடும் காரமான சிவப்பு சட்டினி, அவள் உதட்டில் பட்டு எரிந்தது. ஆ என்று கத்தி கொண்டே அவன் ஊட்டிய இட்லியை விழுங்கியவள், தண்ணீர் டம்ளரை எடுத்து குடித்தாள்.
அப்பவும் காரம் குறையாததால் இஸ் இஸ் என்று சத்தம் கொடுத்து கொண்டிருந்தாள் அணுராதா.
தன்னுடைய மடத்தனத்தை நொந்து கொண்டு “சாரி டா. மறந்துட்டேன். ஆசைல கொடுத்துட்டேன். ரொம்ப உறைக்கிதா? இந்தா இந்த சுவீட்டை சாப்பிடு”, என்ற படியே அருகில் இருந்த ஜாங்கிரியை பிய்த்து அவளுக்கு ஊட்டினான். 
அதிகமான காரத்தில் கண்கள் கலங்கி கொண்டே அந்த ஜாங்கிரியை விழுங்கினாள்.
அவள் கண்ணீரை பொறுக்காதவன், அவளை நெருங்கி அவள் உதடுகளை சிறை செய்தான். 
இத்தனை நாள் விலகி இருந்த ஏக்கம் தீர அவன் கொடுத்த முத்தத்தில் காரத்தையே மறந்தாள் அணு.
அவளுடைய மறுப்பை எதிர்பார்த்தவன் அது நடக்காததால் ஆனந்தமாக முத்தத்தை தொடர்ந்தான்.
“அம்மா எப்ப வேணும்னாலும் வெளியே வரலாம்”, என்று அறிவு தாமதமாக வந்து அவளை விட்டவன் “இப்ப பரவால்லயா?”, என்று கேட்டான்.
“கூட கொஞ்சம் தான் உறைக்கிது”, என்று முனங்கியவள் கையை கழுவ போனாள்.
“சே அதிர்ச்சில நான் சாப்பிட்டதையே மறந்துட்டேனே. சீக்கிரம் அவ வரதுக்குள்ளே பிரஸ் பண்ணனும்?”, என்ற படியே அறைக்கு ஓடி போனான் அர்ஜுன். 
வேகமாக அறைக்குள் வந்தவன் குளியல் அறைக்குள் ஓடி போய் பல்லை விளக்கி விட்டு, “அப்பாடி இனி அவளுக்கு உறைக்காது. எப்படி தான் இவ்வளவு சாஃப்டா இருக்காளோ தெரியலை. கொஞ்சம் காரம் அதிகமா சாப்பிட முடியலை. கொஞ்சம் அழுத்தி பிடிச்சா அப்படியே சிவந்து போறா. இந்த மாமனார், இப்படி வளத்து வச்சிருக்காரு. அடியே இன்னைக்கு நீ காலி. ரொம்ப ஏங்கி போய் இருக்கேன். இன்னைக்கு என்ன ஆக போறியோ?”, என்று நினைத்து கொண்டே கட்டிலில் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்தான் அர்ஜுன்.  
ஒரு கால் மணி நேரம் ஆன பின்னரும் அவள் வந்த பாடு இல்லை. 

“இன்னும் என்ன செய்றா? சீக்கிரம் வாயேன் டி செல்லம்”, என்று வாய் விட்டு புலம்பி கொண்டே இருந்தான்.

அப்படியும் வந்த பாடு இல்லை. மணி பத்தை தாண்டவும் தான் அவனுக்கு புரிந்தது. அவள் கொண்டுள்ள கோபத்தை நினைத்து பார்த்தான். “போச்சு, இன்னும் இதை இவ மறக்கலையா?  என்னைக்கு மலை இறங்குவான்னு தெரியலையே. ஆனாலும் என்ன தான் கோபமா இருந்தாலும், மேடம் இந்நேரம் வந்துருக்கணுமே”, என்று நினைத்து கொண்டே அமர்ந்திருந்தான். 

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. “வந்துட்டா”, என்று துள்ளி குதித்தது அர்ஜுன் மனம். 

கதவை திறந்து தலையை மட்டும் நீட்டி அவனை பார்த்த அணு, “என்னை தேடுவேன்னு தெரியும். அதான் இங்க வர மாட்டேன், பக்கத்துக்கு ரூம்ல இருக்கேன்னு சொல்றதுக்கு தான் வந்தேன். குட் நைட்”, என்று சொல்லி விட்டு பூட்டி விட்டு சென்று விட்டாள்.
அவள் போன பின்னர் வாய் விட்டே சிரித்தவன், “கோபா இருக்குறவ, வந்து சொல்லிட்டு போறா? இன்னைக்கு சிவ ராத்திரி தான். என்ன அலும்பு பண்ண போறாளோ? எப்படியும் தூங்க விட மாட்டா. அதுக்கு நாளைக்கு முடிக்க வேண்டிய ஆபிஸ் வேலையாவது பாப்போம்”, என்று நினைத்து தன்னுடைய லேப்டாப்பை எடுத்து வைத்து வேலை செய்ய ஆரம்பித்தான். 

பக்கத்து அறைக்குள் வந்த அணு, கதவை சாத்தினாள். “அங்க போனா, என்னை மயக்கிருவான். நான் தான் அவன் மேல கோபமா இருக்கேன்ல? அதனால இன்னைக்கு ஒரு நாளாவது இங்க தான் படுக்கணும்”, என்று நினைத்து அந்த கட்டிலில் அமர்ந்தாள்.

அந்த அறையில் பேன் இல்லாமல் வெறும் ஏ. சி மட்டும் தான் உண்டு.

அணுவுக்கு சிறு வயதில் இருந்தே பேன் சத்தம் இருந்தால் தான் அவளுக்கு தூக்கமே வரும். அப்படி அந்த இரைச்சல் இல்லாமல் இருந்தால், அந்த அமைதி அவளுக்கு பயத்தை கொடுக்கும். இது புரிந்ததால், அர்ஜுன் அவனுடைய அறைக்கு ஏ. சி இருந்தாலும் பேன் மாட்டி விட்டான். 
இப்ப அந்த சத்தம் இல்லாமல், அந்த அமைதி அவளை அச்சுறுத்தியது. 

தூக்கமும் வந்த பாடு இல்லை. “லைட் அமைச்சா செத்தே போவேன். பேசாம அவன் ரூமுக்கே போயிருவோமா?”, என்று நினைத்து கொண்டு வெளியே வந்தாள்.  அவன் அறை கதவை திறந்து, உள்ளே போனாள்.

“தனியா தூக்கம் வரலையா அணு? இங்க வந்துறேன்”, என்றான் அர்ஜுன்.

“பாத்தியா மயக்குறான்”, என்று நினைத்து கொண்டு “நான் ஒன்னும் இங்க தூங்க வரலை”, என்றாள்.

அவள் எதற்கு வந்திருப்பாள் என்று அவனுக்கு புரிந்தது. இது எப்போதும் நடப்பது தானே.  இப்படி சண்டை போட்டிருந்தாலும், போடாமல் இருந்தாலும் அர்ஜுன் போட்டிருக்கும் சட்டையோ, டீ சர்ட்டோ தான் அணுவின் இரவு உடை. 

அது புரிந்தும் வேண்டும் என்றே அங்கு மடித்து அயன் பண்ணி வைத்திருந்த சட்டையை அவளுக்கு எடுத்து கொடுத்தான்.

“என்னது இது?”, என்று கேட்டு அவனை முறைத்தாள் அணு.

“என் சட்டை தான வேணும் உனக்கு? அதான் கொடுத்தேன்”

“அது வேண்டாம். அது துவைச்சது. நீ போட்டிருக்கிறது தான் வேணும்”

“எதுக்கு?”
“தெரிஞ்சிகிட்டே வம்பு இழுக்கிறான் பாரு. உன் வாசனை எனக்கு வேணும். அதுக்கு தான் டா கேக்குறேன். அதை சொன்னா நீ ரொம்ப பண்ணுவ”, என்று நினைத்து கொண்டு “இப்ப தர போறியா, இல்லையா?”, என்று கேட்டாள்.

“யாராவது,  நாங்க போடுற சண்டையை பாத்தா காரி துப்பிருவாங்க”, என்று நினைத்து கொண்டு போட்டிருந்த டீ சர்ட்டை கழட்டி கையில் கொடுத்தான். 

அவன் வெற்று உடம்பை ஒரு பார்வை பார்த்து விட்டு, கூச்சத்துடன் தலையை திருப்பி விட்டு வெளியே சென்று விட்டாள்.
“இப்ப மறுபடியும் வருவா”, என்று நினைத்து கொண்டே வேலை செய்ய ஆரம்பித்தான். 

அறைக்குள் போனவள் “அவன் இல்லாமல் கண்டிப்பா தனியா தூங்க முடியாது”, என்று நினைத்து ஒரு தலையணையை தூக்கி கொண்டு இவனுடைய அறைக்கே வந்து விட்டாள்.
அவள் செய்கையை பார்த்தவன், சிரித்து கொண்டு அவளை கண்டு கொள்ளாமல் இருந்தான். 

அவனுக்கு மறு பக்கம் வந்து அமர்ந்தவள், அவனுக்கு முதுகு காட்டி படுத்து விட்டாள். 

வேண்டும் என்றே அவள் புறம் திரும்பாமல் அமர்ந்திருந்தான் அர்ஜுன்.

இரண்டு முறை தலையை மட்டும் திருப்பி அவனை பாத்து விட்டு திரும்பி கொண்டாள். அதையும் கவனித்து கொண்டு தான் இருந்தான்.

“எப்படி தான் இத்தனை நாளும் அவ வீட்ல தனியா இருந்தாளோ? மாமா பாவம். அவரை படுத்தி எடுத்துருப்பா. பகல் புல்லா, அப்படியே எல்லாரையும் அரட்டி ஆளுறது. நைட் வந்து இப்படி பம்முறது. சரியான பாப்பா”, என்று நினைத்து கொண்டே அமர்ந்திருந்தான்.

எழுந்து அமர்ந்த அணு அவனை பார்த்தாள்.

“என்ன அணு? ஏதாவது வேணுமா?”, என்று கேட்டான் அர்ஜுன்.

“நீ லைட் ஆப் பண்ணு. எனக்கு தூங்க முடியலை”
“ஆரம்பிச்சிட்டா”, என்று நினைத்து கொண்டு “சரி அமைச்சிறேன். தூங்கு”, என்று சொல்லி அணைத்தான்.  

“விடி பல்ப் போடு. ரொம்ப இருட்டா இருக்கு”

“சரி போடுறேன்”

“நீயும் கூட படு. எனக்கு தனியா தூக்கம் வராது”

“இதுக்கு தான காத்துட்டு இருந்தேன்”, என்று நினைத்து கொண்டு “இதோ படுக்குறேன்”, என்று சொல்லி எல்லாம் எடுத்து வைத்து விட்டு அவள் அருகே படுத்தான். 

அவளும் அவனுக்கு முதுகு காட்டி படுத்தாள். அதே போல் அவனும் படுத்தான்.

“எதுக்கு டா அந்த பக்கம் படுத்திருக்க? இங்க திரும்பு”, என்றாள் அணு.

“நீ மட்டும் படுத்திருக்க?”

“நான் உன் மேல கோபமா இருக்கேன்ல அதான்”

“சரி நான் உன் பக்கமே திரும்பி படுக்குறேன். நீ தூங்கு”, என்று சொல்லி திரும்பி படுத்தான். அவள் முதுகு தெரிந்தது.

சிரித்து கொண்டே படுத்திருந்தான். “நமக்கு ஒரு பாப்பா வந்தா கூட, அது இப்படி குழந்தை மாதிரி  செய்யாது டி செல்ல குட்டி”, என்று நினைத்தான் அர்ஜுன்.

அவன் புறம் திரும்பி படுத்தாள் அணுராதா. அவளையே தான் பார்த்தான்.

“அர்ஜுன்”, என்று அழைத்தாள் அணு.

“ம்ம்”

“தூக்கம் வரலை. ஒரு கதை சொல்லேன்”

“என்ன கதை சொல்ல?”

“எப்பவும் போல எதாவது சொல்லு”

“என்னனென்னமோ செஞ்சு தூங்க விடாம செய்ற நேரத்துல கதை கேட்டு தூங்க விடாம பண்ற டி செல்லம்? இரு டி உனக்கு இப்ப இருக்கு”, என்று நினைத்து கொண்டு “சரி சொல்றேன். ஒரு காடு இருந்துச்சாம்”, என்று ஆரம்பித்தான்.

“பேய் கதையா அஜ்ஜு?”

“ஐ அஜ்ஜுன்னு கூப்டுட்டா”, என்று நினைத்து கொண்டு “இல்லை. இல்லை. பேய் கதைன்னா நீ பயப்படுவியே. இது அணிமல்ஸ் கதை”, என்றான்.

“அப்ப சரி”, என்று சொல்லி விட்டு அவன் முகத்தை பார்த்தாள். 

“ஒரு நாள் நைட் ஒரு மானுக்கு ரொம்ப பசி எடுத்துச்சாம். உடனே வீட்ல யாருக்கும்  சொல்லாம தனியா புல்லு தேட போய்டுச்சாம்”

“ஐயோ, அது எப்படி இருட்டுல போச்சு. என்ன ஆச்சு அஜ்ஜு?”

“இருட்டுக்குள்ள நடந்து போச்சாம். அந்த காடே பயங்கரமா இருந்துச்சாம்”, என்று அவன் சொல்லும் போது கொஞ்சம் அவனருகே நெருங்கி படுத்தாள் அணு.

அதை குறித்து கொண்டவன், “காட்டுல உள்ள மரம் எல்லாம் பயங்கரமா ஆடுச்சாம். அந்த மானுக்கு அந்த சத்தம் கேட்டு பயமா இருந்துச்சாம்.  நரி எல்லாம்  ஊஊ ன்னு ஊளை இட்டுச்சாம். அந்த மானுக்கு பின்னாடி எதுவோ வரது மாதிரி சத்தம் கேட்டுச்சாம். பயந்து போய் பின்னாடி திரும்பி பாத்துச்சாம்”, என்று அவன் சொல்லும் போது அவனை கட்டி பிடித்து படுத்திருந்தாள் அணு. 

உருகுதல் தொடரும்…..

Advertisement