Advertisement

“கள்ளி முழிச்சிட்டு  தான் இருக்கியா? அப்புறம் என்ன சொன்ன பல்லு விளக்காமலா? நைட் நடு ராத்திரில என் உதட்டை கடிச்சு வைக்கும் போது தெரியலையோ பல்லு விளக்கலைனு”
“சி போடா, அது நைட்”
“செல்ல குட்டி”
“ம்ம்”
“எங்கயாவது வெளிய போகலாமா?”
“ஹ்ம் போகலாமே  எங்க? பேமிலி டூர் போகலாமா?”
“உங்க அப்பாவையும், எங்க அம்மாவையும் கூப்பிட்டா வர மாட்டாங்க. நாம ரெண்டு பேரும் தான் பேமிலியா போகணும் “
“போ அஜ்ஜு. உன் கூட வந்தா ஒரே போர்”
“அடி பாவி ஏண்டி?”
“நீ ஒண்ணுமே சாப்பிட வாங்கி தர மாட்ட. அத்தை தான் செமையா வாங்கி தருவாங்க”
“கொன்னுருவேன்  டி, சாப்பிட வாங்கி கொடுக்க எங்க வண்டியை நிறுத்தினாலும், அந்த கடை காரன் கிட்ட சண்டை போடுறது, இல்லை அவனை அடிக்கிறது. இப்படி செஞ்சா எப்படி”
“சரி சரி. அழுவாத போகலாம். நீ பேக்டரி போகலையா?”
“நாளைக்கு போய்க்கிறேன் டா”
“ஹ்ம் சரி. நான் குளிச்சிட்டு வரேன்”
“நான் முதுகு தேச்சி விட வரவா?”
“எதுக்கு? ஒரு மணி நேரம் பாத்ரூம் குள்ளேயே  கிடக்கவா? கொன்னுருவேன். இங்கயே இரு”
“சரிங்க மகாராணி. போங்க”
அவள் போகும் போது அவனுக்கு போன் வந்தது. எடுத்து பார்த்தவன் புருவம் உயர்த்தினான்.
அந்த பக்கம் சொன்ன பதிலில் முகம் மலர்ந்தவன் சந்தோசமாக கீழே  இறங்கி சென்றான்.
“அம்மா அம்மா”
“என்ன அர்ஜுன்?”
“கார் வந்துட்டு  வாங்க”, என்று சொல்லி அழைத்து கொண்டு காட்டியவன் சந்திரிகாவை பார்த்து சிரித்தான்.
“அழகா இருக்கு டா  அர்ஜுன். நல்ல கலர். இந்த கார்லயாவது எவளையும் ஏத்தாம இரு. பின்ன மறுபடியும் அணு காரில் ஏற மாட்டா. நீ புது கார் வாங்கணும். போய் குளிச்சிட்டு அணுவை கூட்டிட்டு வா. ஆரத்தி எடுக்கணும்”, என்று ஒரு குத்தல் பேச்சை பேசிவிட்டு சென்றாள் சந்திரிகா.
சிரிப்புடன் தன் அறைக்கு சென்றான் அர்ஜுன். அப்போது தான் குளித்து முடித்து துண்டை கட்டி கொண்டு வெளியே வந்தாள் அணு.
அவளை பார்த்து எப்போதும் போல் இப்பவும் மயங்கியவன் “அப்படியே செம பிகர் டி”, என்று சொல்லி அவளிடம் ஒரு கொட்டு  வாங்கி கொண்டு குளிக்க சென்றான்.
அவன் குளித்து முடித்து வெளியே வரும் போது புடவை கட்டி கொண்டிருந்தாள்  அணு.
“வெளிய போறோம்னு சொன்னேன்ல டி? சேலை கட்டுற?”, என்று கேட்ட படியே  அவளை பின்னால் வந்து அணைத்தான் அர்ஜுன்.
அவன் தலையில் இருந்த நீர் துளிகள் அவள் கழுத்திலும், காதிலும் பட்டு  அவளுக்கு சிலிர்ப்பை தந்தது.
“சும்மா இரு டா கூசுது”
“மாட்டேன்”, என்றவனின் உதடுகள் அவள் காதில்  பயணித்தது.
“அடங்க மாட்டியா அஜ்ஜு நீ?”
“நீ தான் அடக்கேன்”
“அடங்கிட்டு  தான் மறுவேளை பாப்ப. சரி நான் சேலை கட்டினா  பிடிக்கும்னு சொல்லுவன்னு தான் கட்டினேன். வேண்டாமா?”
“இருக்கட்டும் இருக்கட்டும், அப்ப தான் கை அங்க அங்க பிரியா சுத்தும்” என்றவனின் கைகள் அவள் வெற்றிடையில் பதிந்தது”
அவன் தொடுகையில்  மயங்கி நின்றாள் அணு.
அவளிடம் இருந்து விலகிய அர்ஜுன் “உனக்கு பொறுப்பே  இல்லை டி. கிளம்பனும்னு சொல்றேன். நீ அசையாம  ரொமான்ஸ்  பண்ணிட்டு இருக்க?”, என்று கேட்டு சிரித்தான்.
“நானா  டா  ஆரம்பிச்சேன். பன்னி “, என்ற படியே   அவன் கன்னத்தை கடித்து வைத்தாள்.
இருவரும் கிளம்பி கீழே  வருவதை பார்த்து பார்வதியிடம் ஆரத்தி தட்டை  கரைக்க சொன்னாள் சந்திரிகா.
அணுவை கை பிடித்து தோட்டத்துக்கு அழைத்து சென்றான்.
“சாப்பிட கூட இல்லை. எங்க டா  கூட்டிட்டு போற?”
“வா சொல்றேன். வந்து சாப்பிடுவோம்”, என்று சொல்லி கார் அருகே கூட்டி  சென்றான். அவள் கண்கள் வியப்பால் விரிந்தது.
“இனி உன்னை தவிர யாரும் இந்த சீட்டில் உக்காற மாட்டாங்க அணு. அன்னைக்கு உன்னை காய படுத்துனதுக்கு  மன்னிச்சிரு “
“தப்பு செஞ்சிட்டு கார் வாங்கி கொடுத்து காக்கா பிடிக்கிறியா?”, என்று கேட்டவளின் குரலில் குதூகலம் நிறைந்திருந்தது.
“காக்காவை பிடிக்கலை. என் அணுவை பிடிக்க தான் ஆசை வருது. சேலைல  வேற கும்முன்னு  இருக்க? வெளியே எல்லாம் வேண்டாம். ரூம்கு போவோமா?”
“இவ்வளவு நேரம் என்ன செஞ்சியாம்? சும்மா  இரு  டா.  சூப்பரா இருக்கு அஜ்ஜு கார். தேங்க்ஸ்”
“லூசு எதுக்கு தேங்க்ஸ் சொல்றதுன்னு இல்லையா? அம்மா ஆரத்தி கரைச்சு  எடுத்துட்டு வராங்க  பார்”, என்று சிரித்தான் அர்ஜுன்.
அதன் பின் ஆரத்தி முடித்து சாப்பிட்டுவிட்டு இருவரும் ஊரை சுற்ற கிளம்பினார்கள்.
ஒன்றரை  வருடம் கழித்து…..ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்  அணு.
பூக்குவியலை போல இருந்த மகளை கையில் தூக்கிய அர்ஜுனுக்கு  மேனி சிலிர்த்தது.
சந்திரிகாவும் , வாசுதேவனும் பூரிப்புடன்  பேத்தியை  கொஞ்சினார்கள்.
சோர்ந்து போய் படுத்திருந்த அணுவின் முகத்தில் தாய்மை மிளிர்ந்தது. அவள் அருகில் சென்ற அர்ஜுன் யாரையும் கவனிக்காமல் அவள் முகத்தில் முத்தமழை  பொழிந்தான்.
குழந்தைக்கு நிவேதிதா என்று பெயர் வைத்தார்கள்.
நிவி  வளர வளர நிவி நிவி என்று அனைவரும் அவளைத் தாங்கினார்கள். அதுவும் குட்டி அணு மாதிரியே இருந்ததை பார்த்த வாசு தேவனுக்கு அவள் உயிராகி போனாள்.
ஆனால் பார்க்க மட்டும் அணு மாதிரி இல்லாமல் குணத்திலும் அணு மாதிரியே இருந்த நிவியை பார்த்து திகைத்தான் அர்ஜுன்.
அம்மா, அப்பா என்று பார்க்காமல் அனைவரையும் அடித்து தாக்கும் நிவி, சிறு ஈயை பார்த்தா கூட அப்பா என்ற படியே  பயத்துடன் அர்ஜுனை கட்டி கொள்வாள்.
சில நேரம் “பிள்ளையா பெத்து வச்சிருக்க? பாரு அப்படியே உன்னை மாதிரி”, என்று கடுப்படிப்பான் அர்ஜுன். அவன் கவலை அவனுக்கு. தினமும் கதை சொல்லு என்று மனைவி உயிரை வாங்குவது பத்தாது என்று மகளும் அதையே செய்தால் அவனும் கதைக்கு எங்க தான் போவான்.
அதுவும் அந்த கதை வேண்டாம், இந்த கதை வேண்டாம் என்று மகளும், மனைவியும் அடித்து கொள்ளும் போது சிரிப்பாக வந்தாலும் பாதி உயிரை எடுத்து விடுவார்கள் அவனிடம் இருந்து.
அந்த கடுப்பில் இந்த கேள்வியை அவன் கேக்கும் போது எல்லாம் அவன் அருகில் வரும் அணு “என்னமோ அவளை பெத்ததுக்கு நான் மட்டும் தான் காரணம் மாதிரி பேசுற அஜ்ஜு. நீ ஒண்ணுமே செய்யலையா?”, என்று மயக்க குரலில் கேட்டவுடன் அவன் கடுப்பெல்லாம் எங்கோ மறைந்து மாயமாகி விடும்.
நிவி பக்கத்தில் இருந்த கிரஸ்க்கு போகும் போது அணு அடுத்த கருவை தன் மணிவயிற்றில் சுமந்தாள்.
அன்று மதியம் பன்னிரண்டு மணி…. பேக்டரியில்  இருந்த அர்ஜுன் போன்  ஒலித்தது. 
எடுத்து பார்த்தவன் புன்னகைத்தவாறே  “சொல்லு அணு, எந்த நேரமும்  என் பொண்டாட்டிக்கு  என்கிட்ட பேசிக்கிட்டே இருக்கணும் போல?”, என்று சிரித்தான்.
“வேலையை பாக்காம பேசிட்டே இருந்தா அப்ப எப்படி சாப்பிடுறது சார்?”, என்று பல்ப் கொடுத்தாள் அணு.
“அப்புறம் எதுக்கு டி போன் பண்ண?”
“லூசு அஜ்ஜு மணி பன்னிரெண்டு ஆகிட்டு . இப்ப கிளம்புனா தான் நீ கரெக்ட் டைம்ல ஸ்கூல்ல இருக்க முடியும். லேட்டா போனா, உன் பொண்ணு கிட்ட நீ தான் வாங்கி கட்டிக்கணும்”
“ஐயோ , வேலை பாத்ததுல அவளை மறந்துட்டேன். தேங்க்ஸ் டி அணு. கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு ஓடியே போனான்.
“அப்பாடி இன்னும் அஞ்சு நிமிசம் இருக்கு பெல் அடிக்க. அதுக்குள்ளே வந்துட்டேன்”, என்று நிம்மதியாக அந்த பெஞ்சில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் பெல் அடித்தது. குழந்தைகள் வெளியே வரும் அரவம் கேட்டது. நிவியை அவன் கண்கள் தேடியது.
குட்டி பூந்தோட்டமாக ஓடி வந்த மகளை பார்த்தவன் வாரி அனைத்து கொண்டான். “நிவி  பாப்பா, சமத்தா இருந்தீங்களா இன்னைக்கு?”
“ஹ்ம் ஆமா பா “, என்று மண்டையை ஆட்டும் மகளை ரசித்தவன்  அவளுடைய குண்டு கன்னங்களில்  தன் இதழ்களை பதித்தான் .
சந்தோசமாக அவளை தூக்கி கொண்டு நிமிரும் போதே அவன் எதிரே அவனை முறைத்த  படி நின்றார்கள் நிவியின்  மிஸ். பக்கத்தில்  ஒரு பையன் நிவியை முறைத்த  படி  நின்றான்.
“போச்சு இன்னைக்கு டார்கெட் இவன் தான் போல?”,  என்று நினைத்து கொண்டான் அர்ஜுன். அவன் நினைத்த படியே அந்த ஆசிரியை அவனிடம் பொரிய ஆரம்பித்தார்கள். 
“இன்னைக்கு இந்த பையனை உங்க பொண்ணு அடிச்சிருக்கா?”
“எதுக்கு அடிச்சா? நிவி பாப்பா, எதுக்கு இவனை அடிச்ச?”
“நான் இங்க கம்பளைண்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க உங்க பொண்ணை கொஞ்சிட்டு இருக்கீங்க?”
“இங்க பாருங்க மேம். என் பொண்ணை பத்தி எனக்கு தெரியும். அவ தேவை இல்லாம எதுவும் செய்ய மாட்டா. நான் தான் விசாரிக்கிறேன்ல? அப்பறம் என்ன?”, என்று கடுப்புடன் சொன்னவன் மகள் புறம் திரும்பி சிரித்தான்.
“அவன் என்னை எந்த கடைல அரிசி வாங்குறன்னு கிண்டல் பண்றான்ப்பா. நானும் போடா புளிமூட்டைன்னு சொன்னேன். அதுக்கு என்னோட பிரண்ட் இல்ல, வினி. அவ சிரிச்சாளா. இவன் அவளை கிள்ளி வச்சிட்டான். அவ கை சிவந்துட்டு. அழுதுட்டே  இருந்தா. அதான் இவனை அடிச்சேன். தப்பாப்பா?”
“தப்பே இல்லை டா குட்டி. அவன் மேல தான் தப்பு”, என்று நிவியை கொஞ்சியவன் “என்ன நடந்துச்சுன்னு விசாரிச்சிட்டு அப்புறம் முடிவு எடுங்க மேடம்”. என்று சொல்லி அந்த ஆசிரியை முறைத்து விட்டு அந்த பையன் அருகில் குனிந்தவன் “நீ விஸ்வா தான? நிவி உன்னை பத்தி தினமும் பேசுவா. நீ நல்லா படிப்பியாம். உனக்கு ரொம்ப டேலண்ட் இருக்காம். நீ தான் கிளாஸ் பர்ஸ்ட்டாம். இப்படி எல்லாம் சொல்லி உன்னை பாராட்டுவா தெரியுமா? அவ கூட நீ சண்டை போடலாமா? அவளை பிரண்டா ஏத்துக்கலாம்ல?”, என்றான்.
அவனை பத்தி பெருமையாக அவள் சொன்னாள் என்பதை கேட்டு விஸ்வா முகம் ஒளிர்ந்தது. “சாரி அங்கிள். இனி நிவியை கிண்டல் பண்ணி அவ கூட சண்டை போட மாட்டேன். நிவி கூட பிரண்டா இருக்கேன். சாரி நிவி”, என்றான்.
“பரவால்ல விஸ்வா”, என்று பெரிய மனுசி தோரணையுடன் சொன்னாள் நிவி.
“உன்னை இனி எந்த கடையில் அரிசி வாங்குறன்னு கேக்க மாட்டேன் நிவி”
“நீ அது கேட்டது எனக்கு கோபமே இல்லை டா. சிரிப்பு தான் வந்தது. நீ அவளை அழ வச்ச உடனே தான் கோபம் வந்துட்டு. கிண்டல் பண்ணா நான் எல்லாம் கோப பட மாட்டேன். இனிமே நாம பிரண்ட்ஸ். அப்பா வீட்டுக்கு போலாமா ?”
“போலாம் டா குட்டி. பை விஸ்வா”, என்று சொல்லி விட்டு அங்கு நின்று அனைத்தையும் பிரமிப்பாய் பார்த்து கொண்டிருந்த மிஸ்ஸையும் பார்த்து முறைத்து விட்டு நிவியை தூக்கி கொண்டு சென்றான் அர்ஜுன். 
அதன் பின் நிவியின் உலகத்தில் நுழைந்து இருவரும் அதனுள் ஒன்றி போனார்கள். அவள் கேக்கும்  எல்லாத்துக்கும் பதில் சொல்லி கொண்டு வந்தான் அர்ஜுன்.
வீட்டுக்கு போனவுடன் அணுவும் நிவியை அள்ளி கொண்டாள்.
“தூக்காத மா. உன் வயித்துக்குள்ள குட்டி இருக்கு. அப்புறம் வலிக்கும். பாட்டி சொன்னாங்க. முகம் கழுவிட்டு வரேன். சாப்பாடு தா. வா ப்பா”, என்று சொல்லி விட்டு தங்கள் அறைக்குள் சென்றாள்.
இருவருக்கும் அவளை பார்த்து பெருமையாக இருந்தது.
அவளுடன் சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்து விட்டு ஆபிஸ் கிளம்பி சென்றான் அர்ஜுன். 
அன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு போகும் போது வாசுதேவன் நிவியுடன் விளையாடி கொண்டிருந்தார். அணு தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள். தினமும் இரவு மட்டும் தான் வாசுதேவன் வீட்டுக்கே போவார். வேலை முடிந்து நேரா அணு வீட்டுக்கு தான் வருவார்.
எல்லாரையும் பார்த்து சிரித்து விட்டு அவர்கள் அருகே அமர்ந்தான்.
“அத்தை, இன்னும் மூணு கோயில் பாக்கணுமாம் அஜ்ஜு. இன்னும் ஒரு வாரம் கழிச்சு தான் வருவாங்களாம்”, என்றாள் அணு.
“என்னது இன்னும் ஒரு வாரமா? தாங்காது அணு மா”, என்று அலறினான் அர்ஜுன்.
“என்ன அர்ஜுன்?”, என்று கேட்டார் வாசு தேவன்.
“நீங்களாவது ஒரு அணுவை தான் சமாளிச்சீங்க. நான் ரெண்டையும் மேய்க்க வேண்டி இருக்கு. அம்மா இருந்தா நிவி அம்மா கூட தூங்க போயிருவா. ஒரு குட்டி பிசாசை சமாளிச்சா போதும். ஆனா இந்த ரெண்டு வாரமும் நொந்தே போய்ட்டேன் மாமா. இப்ப தான் நீங்க வீட்டுக்கு முன்னாடி குடிச்சிட்டு ஏன் வந்தீங்கன்னு புரியுது. நானும் அதை செய்யலாம் போல “, என்றான் அர்ஜுன்.
அவன் தலையில் நங்கென்று கொட்டினாள் அணு.
“எதுக்கு மா அப்பாவை கொட்டுற?”, என்று கேட்டாள் நிவி.
“அப்பா தண்ணி அடிக்க போறாங்களாம் டா நிவி குட்டி. அது தப்பு தான?”, என்று போட்டு கொடுக்கும் வேலையை செவ்வனே செய்தாள் அணு.
அடுத்த நொடி சப்பென்று அவன் கன்னத்தில் அறைந்தாள் நிவி.
“பாத்தீங்களா மாமா என் நிலைமையை”, என்று சிரித்தான் அர்ஜுன்.
“விடு அர்ஜுன். உனக்கு துணைக்கு இன்னும் மூணு மாசத்தில் உன் புள்ளை வந்திருவான். அவனை வச்சு நீ இவங்களை மிரட்டு”, என்றார் வாசு தேவன்.
சொன்ன மாதிரியே அவளுக்கு மகன் பிறந்தான். அவனுக்கு முகில் என்று பெயர் வைத்தான் அர்ஜுன்.
சந்தோசம்  மட்டுமே அவர்கள் வாழ்வில் தொடரும்……

Advertisement