Advertisement

“அட பாவி”, என்று சொல்லி இருவரும் வாயை பிளந்தார்கள்.
அவர்களை பார்த்து சிரித்தவன் “மஹாபலிபுரம் போனோம் டா ஒரு நாள். அன்னைக்கு தான்”, என்றான்.
“டேய் மச்சான். இது சும்மா கடலை, காலேஜ் முடிஞ்ச உடனே மறந்துரும்னு நினைச்சோம்  டா. அப்ப சீரியஸ் காதல் தானா?”, என்று கேட்டான் ராகுல்.
“லூசுங்களா ரெண்டு வீட்டிலயும் கல்யாணத்தையே பேசியாச்சு டா”
“அட பாவி. எங்க கிட்ட சொல்லவே இல்லை பாத்தியா?”
“அதான் இப்ப சொல்லிட்டேன்ல”, என்று சிரித்து  கொண்டே திரும்பி பார்த்தவனின் கண்ணில் பட்டாள் அணுவின் தோழி பவித்ரா.
“இவ என்ன ஸ்டேஜ் பாக்காம வேற எங்கயோ பாத்து பாத்து தலை குனியுறா ?”, என்று நினைத்து கொண்டே அவள் பார்வை போகும் பாதையை கவனித்தான்.
அங்கு சாட்சாத் நம்ம தர்மா சாரே தான் அமர்ந்திருந்தான். பக்கத்தில் இருந்த விமல் சாரிடம் பேசிய படியே  பார்வையை பவித்ரா மேல் வைத்திருந்தான் தர்மராஜ்.
அதை பார்த்து சிரித்தான்  அர்ஜுன்.
அர்ஜுன்  தங்கள் கேலிக்கு தான் சிரிக்கிறான் என்று நினைத்து நண்பர்கள் இருவரும் மேலும்  அவனை கேலி செய்தே ஒரு வழி ஆக்கினார்கள்.
அன்று மாலை, புரோகிராம் முடிந்த பின்னர்  அவள் எல்லா வேலையையும் முடித்து விட்டு வரும் வரை அவளுக்காக காத்திருந்தான் அர்ஜுன்.
நெற்றியில் வேர்வை வடிய, தலை முடி ஆங்காங்கே பறக்க அந்த நிலையிலும் தேவதை போல் அவனருகே ஓடி வந்தாள் அணுராதா.
“அழகு ராட்சஸி”, என்று மனதுக்குள்  கொஞ்சி கொண்டவன் “எதுக்கு டி என்னை வெயிட்  பண்ண சொன்ன? காலைல எப்படி வந்தியோ அப்படியே போயிருக்கலாம்ல?”, என்று கேட்டு கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
அவன் பின்னே அமர்ந்தவள் “காலைல அப்பா தான் விட்டாங்க டா. சேலையை கட்டிட்டு வண்டி ஓட்டிட்டு  வர கடுப்பா இருந்தது. நீ கூட்டிட்டு போனா குறைஞ்சிருவியா?”, என்று சிரித்தாள் அணு.
“நான் குறைய மாட்டேன் தான். ஆனா இம்சை படுத்துற டி”
“நான் உனக்கு இம்சையா டா?”
“இல்லையா பின்ன?”
“நான் என்ன செஞ்சேன்?”
நீ என்ன செஞ்சியா சேலையை கட்டிட்டு கண் முன்னாடி வராதேன்னு  சொல்லிருக்கேன்ல. பார்வை எங்க எங்கயோ போக பாக்குது அணு மா”
“போ அஜ்ஜு. சின்ன பொண்ணு கிட்ட போய் என்னென்னவோ பேசுற?”
“சின்ன பொண்ணு தான். ஆனா பாக்க  அப்படி இல்லையே”
அவன் மண்டையில் கொட்டினாள் அணு.
“எதுக்கு டி தள்ளி உக்காந்துருக்க? இன்னும் நெருங்கி உக்காறேன். இடையில் யாரை உக்காற வைக்க போற?”
“இவ்வளவு போதுமா?”, என்று கேட்டு கொண்டே நெருங்கி அமர்ந்தாள்.
“இன்னும்”
“போதுமா?”
“இன்னும்”
அவன் முதுகில் நான்கு சாய்ந்தவள், கையை அவன் வயிற்றை சுற்றி போட்டு இறுக்கி கொண்டாள்.
“அப்படியே ஜிவ்வுனு இருக்கு அணு குட்டி. எங்கயாவது தூக்கிட்டு போகணும் போல இருக்கு”
“ஒழுங்கா வீட்டுக்கு வண்டியை விடு டா அஜ்ஜு. இல்லைன்னா கொன்னுருவேன்”
“போடி”
“போடா”
இப்படி பேசி கொண்டே வரும் போது வீடு வந்து விட்டது. வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான் அர்ஜுன்.
“உள்ள வா டா”, என்ற படியே  கதவை திறந்தாள்.
“நான் வரலை, நீ உள்ள போ. நான் கிளம்புறேன்”, என்றான் அர்ஜுன்.
“ஏன்? ஏன்? ஏன் வரல?”
“லூசு. மாமா இல்ல. காரை காணும். நான் வரல”
“அப்பா வேற இல்ல. பயமா இருக்கு. உள்ள வா டா. நான் தனியா இருந்தா, அப்பா உன்னை எனக்கு துணைக்கு இருக்க சொல்லிருக்காங்க தான?”
“பாலுக்கு காவல் பூனை.  நிலைமை  புரியாம படுத்துவா”, என்று நினைத்து கொண்டு உள்ளே போனான்.
அடுத்த நொடி பாய்ந்து வந்து அவன் கழுத்தை கட்டி கொண்டாள் அணு.
“அணு மா. என்னது இது?”, என்று அவளை விலக்கினான் அர்ஜுன். அவளை தொட்டால் நிலைமை மோசமாகும் என்று அவன் அறிந்து வைத்திருந்த காரணத்தால் விலக நினைத்தான்.
“ப்ளீஸ்  டா. காலைல ஆடிட்டோரியம் மாடில வச்சு  தற்செயலா உன்னை பாத்தேனா? இந்த மெரூன் கலர்  சட்டைல  எப்படி இருந்த தெரியுமா? அப்படியே அங்கயே உன்னை கடிக்கணும்னு  தோணுச்சு”
“ப்ளீஸ் அணு மா விடு டா”
“அது எப்படி டா பிடிக்காத மாதிரியே சீன் போடுற?”
“அடிங்க.. சீன் போடுறேனா? ஐயோ பாவம்னு நினைச்சா? ரொம்ப பண்ற. அனுபவி டி”, என்று சொல்லி கொண்டே அவளை சோபாவில் கிடத்தியவன், ஒரு வழி செய்து விட்டு தான் விட்டான்.
“என்ன வேணாலும் செய்து கோ”, என்று தன்னிடம் சரணடைந்திருந்தவளை காதலுடன் பார்த்தான் அர்ஜுன்.
சேலை கசங்கி அங்கே இங்கே சுருண்டிருந்தது. சரி செய்து விடுகிறேன் என்று ஆரம்பித்து மறுபடியும் கசங்க வைத்தான்.
“போடா. ஆரம்பிச்சா விட மாட்ட. நான் டிரஸ் மாத்திட்டு வரேன்”, என்று ஓடி போனவள் ஒரு சுடிதாரை போட்டு கொண்டு வந்தாள்.
அவள் பாதுகாப்பு உணர்வை பார்த்து மெச்சி கொண்டவன் சிரித்தான்.
அவள் காபி போட்டு, அவனுக்கு கொடுத்து விட்டு அவளும் குடிக்கும் போது தான் வந்து சேர்ந்தார் வாசு தேவன்.
அவருடனும் கதை அளந்து விட்டு தன் வீட்டுக்கு சென்றான் அர்ஜுன்.
அடுத்து நாள்கள் வேகமாக றெக்கை கட்டி கொண்டு பறந்தது.
இரவு ஒன்பது மணி முதல், பத்து மணி வரை இருவரும் பேசணும் என்று கண்டிஷன் வைத்து அதன் படி செயல் பட்டார்கள்.
இந்த இடை  பட்ட காலத்தில் எங்கேயாவது பவித்ராவை  பார்த்தால் ஆழ்ந்த ஒரு பார்வையை அவளுக்கு கொடுத்து விட்டு சென்று விடுவான் தர்மராஜ்.
அந்த பார்வையையே  தாங்க முடியாமல் தலை குனிவாள் பவித்ரா.
அவளுக்கு கிளாஸ் எடுக்குற  வரைக்கும் அவள் புறம் பார்வையை திருப்பாத தர்மராஜ், நடத்தி முடித்து விட்டு கிடைக்கும் நேரத்தில் அவளையே நோட்டம் விடுவான்.
அடுத்து வந்த நாள்களில் பவித்ராவுக்கே அவனுடைய பார்வை இயல்பாக பழகி விட்டது.
அர்ஜுனுக்கு கிளாஸ் முடிந்தது. புராஜெக்ட்டுக்காக மட்டும் வந்துருந்தான்.
அவனுக்கு கைடு தர்மா சார். அதனால் அவனும் அவனுடைய டீம் மெம்பெர்ஸ்ம் தர்மாவுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள். அர்ஜூனுடன் அவனுடைய கிளாஸ் நண்பர்கள் திருவும், மோகனும் இருந்தார்கள்.
அப்படியே பேச்சு எங்க எங்கயோ போய் கடைசியில் “திருவை  ஒரு பொண்ணு விரும்புறேன்ணு சொல்லிருக்கா சார்”, என்று மோகன் சொல்வதில் முடிந்திருந்தது.
“டேய்  சார்  கிட்ட என்ன சொல்லிட்டு இருக்க?”, என்று பதறினான் திரு.
“நம்ம தர்மா சார் தான? அவரும் தெரிஞ்சிக்கட்டும். இவன் முடியாதுன்னு சொல்லிட்டு வந்துருக்கான் சார்”, என்றான் மோகன்.
“சும்மா இரு டா”, என்று பயந்தான் திரு.
“பயப்படாத திரு. நம்ம சாரும் லவ்க்கு  சப்போர்ட் தான் செய்வாங்க”, என்றான் அர்ஜுன்.
அர்ஜுனை கூர்மையாக சிறு சிரிப்புடன் பார்த்த தர்மா, திருவை பார்த்து  “எதுக்கு அந்த பொண்ணு கிட்ட நோ சொன்ன?”, என்று கேட்டான்.
அவர் சிரித்த பின்னர் தான் இயல்பான திரு, “எனக்கு கூச்சமா  இருந்தது சார். என்ன சொல்லன்னு  தெரியாம அமைதியா நின்னேன் . அவளும் வெக்க பட்டுட்டு  ஓடிட்டா. அதை தான் நான் வேண்டாம்ணு சொல்லிட்டேன்னு இந்த அழகில் மோகன் சொல்றான்”, என்றான்.
இப்படியே பேசி முடித்தவுடன் அனைவரும் எழுந்தார்கள். அர்ஜுன் தோளில் கை போட்டு தனியே அழைத்து சென்ற தர்மா  “அணுவுக்கும், உனக்கும் இடையில்  வெறும் பிரண்ட்ஷிப் மட்டும் தான் இருக்குன்னு இவ்வளவு நாள் நினைச்சேனே அர்ஜுன். ஆனா வேற ஏதோ ஒண்ணு இருக்கு போல? எதுக்கு கேக்குறேன்னா, என்னோட ரகசியம் எல்லாம் உங்கிட்ட ஷேர் பண்ணிருக்கா”, என்று சிரித்தான்.
“நீங்க  ஜீனியஸ் சார். சரியா கண்டு கண்டு பிடிச்சிடீங்க. அணு தான் எனக்கு எல்லாமே. வீட்டில எல்லாம் பேசி நான் எம்.பி. ஏ  முடிச்ச உடனே கல்யாணம்”
“வாவ் சூப்பர் டா “
“நீங்க எப்படி சார்  அணு தான் உங்க லவ் விசயத்தை சொன்னான்னு கண்டு பிடிச்சீங்க?”
“இது பெரிய விசயமா? நான் பவி கிட்ட காதலை சொல்லும் போது அணு மட்டும் தான் கூட இருந்தா. அவ மத்த ஸ்டுடண்ட்ஸ்  கிட்ட சொல்ல மாட்டானு என்னோட நம்பிக்கை. அந்த ரகசியம் உனக்கு தெரிஞ்சிருக்குன்னா, நீ அவளுக்கு ஸ்பெஷல்ன்னு புரிஞ்சது”
“ஹ்ம் ரொம்பவே ஸ்பெஷல் தான். சரி பவித்ரா உங்க கிட்ட காதலிக்கிறேன்னு  சொல்லிட்டாளா?”
“எங்க? என்னை பாத்தாலே பத்து அடி தூரம் தள்ளி ஓடுறா. பின்ன  எங்க காதலை சொல்ல? இன்னும் காலேஜ் முடிய  நாள் இருக்கே “, என்று சிரித்து விட்டு சென்று விட்டான் தர்மராஜ்.
உருகுதல் தொடரும்…..

Advertisement