Advertisement

அத்தியாயம் 13
என்னைத் தவிர 
வேறு யாருக்கும் 
அனுமதி இல்லை உன் 
கூந்தல் கலைத்து விளையாட!!!
“என்ன அணு புரிஞ்சதா? படிச்சு முடிச்சிட்டு உங்க பிரண்டை  தயாரா இருக்க சொல்லுங்க. கழுத்தில் நான் கட்டும் தாலியை வாங்குறதுக்கு”, என்று சொன்னான் தர்மா.
சுயநினைவுக்கு வந்த அணு “அது அவளுக்கே தெளிவா கேட்டுருக்கும் சார்”, என்று சிரித்தாள்.
அவளை பார்த்து சிரித்தவன் பவித்ராவையே  காதலாக பார்த்தான்.
அவன் பார்வையில் கோபம் கொள்ளாமல் வெக்க  படும் பவித்ராவை  பார்த்தவள் ஆச்சரியமாகி “இதுக்கு மேல இங்க இருந்தா நல்லது இல்லை சார். நான் அவளை கடத்திட்டு  போறேன்”, என்று சிரித்தாள்.
“ஒரு நிமிஷம் அணு. நீங்க கொஞ்சம் வெளிய இருங்களேன். நான் அவ கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். ரெண்டு நிமிசத்தில் வந்திருவா”, என்றான் தர்மா.
சிரித்து கொண்டே வெளியே போக பார்த்தாள் அணு.
அவள் கையை பிடித்த பவித்ரா “போகாதே”, என்று கண்ணை காட்டினாள்.
“எப்ப தைரியத்தை வளத்துக்க போற? பேசிட்டு வா. சுத்தி எல்லா ஸ்டாப்பும்  இருக்காங்க. அப்புறம் என்ன?”, என்று சொல்லி விட்டு வெளியே வந்தாள்.
“இவ்வளவு பேர் முன்னாடி வச்சு உன்னை என்ன செய்ய போறேன் பவித்ரா?”, என்று ஆழ்ந்து ஒலித்தது தர்மாவின் குரல்.
அந்த குரலில் நிமிர்ந்து அவனை பார்த்தாள் பவித்ரா.
“அன்னைக்கு பிரின்சிபால் முன்னாடி தைரியமா என் மேல தான் தப்புன்னு நீ ஒத்துக்கிட்டு என்கிட்டயும் மன்னிப்பு கேட்ட தெரியுமா? அப்பவே என் மனசுல நீ வந்துட்ட.  இப்ப இங்க வேலை பாக்குற டீச்சரா இதை பேசலை. உன்னை விரும்பும் ஒரு ஆணா பேசுறேன். உன்னை மனசார விரும்புறேன் பவி. இன்னும் நீ படிச்சு முடிக்க மூணு வருஷம் இருக்கு. அது வரை நல்ல யோசி. காலேஜ் முடிக்கிற வரைக்கும் நான் உன்கிட்ட பேச கூட மாட்டேன். ஆனா படிச்சு முடிக்கும் போது என் காதலை நீ உணர்ந்தால் போதும். இப்ப நீ போய்ட்டு வா”, என்றான் தர்மா.
விழி விரித்து அவனை பார்த்தாள் பவித்ரா.
“இவ்வளவு அழகா இருக்கிறவன் என்கிட்ட காதலை சொல்றானா? இப்ப என்ன சொல்லணும்?”, என்று தெரியாமல் விழித்தவளை பார்த்து சிரித்தவன் “கிளாசுக்கு போ. டேக் கேர்”, என்று சிரித்தான்.
அவனை திரும்பி திரும்பி பார்த்த படி சென்றாள் பவித்ரா.
அன்று மாலையே போனில் அர்ஜுனிடம்  இவர்கள் காதல் கதையை ஒப்பித்தாள் அணு.
அவனுக்கும் அதிர்ச்சியே. “தர்மா சாரா லவ் பண்றார்?”, என்று அதிர்ச்சியாக கேட்டு சிரித்தான் அர்ஜுன்.
“ஆமா டா. நிஜமாவே தான்”
“சரி அதுக்கு உன்னோட பிரண்ட் ரியாக்சன் என்ன?”
“அவ ஆன்னு வாயை பிளந்து  பாத்துட்டு இருக்கா. கிளாசில் அவ கிட்ட கேட்டேன் அஜ்ஜு. அவ என்கிட்ட என்ன அணு, இந்த சார் இப்படி சொல்லிட்டார். அவர் சொன்னது கனவா, நினைவான்னு  கேக்குறா?”
“நீ என்ன சொன்ன?”
“அவர் சொன்னதுக்கு அவர் முகத்தையே சிலை மாதிரி பாத்துட்டு, வெக்கம்  வேற பட்டுட்டு  இப்ப என்கிட்ட கேக்குறன்ணு கேட்டேன். அப்பவும் முழிச்சிட்டு  இருந்தா. ஆனா அவளுக்கும் பிடிக்க தான் செஞ்சிருக்கு போல அர்ஜுன். அப்புறம் அவளோட தனிப்பட்ட விஷயம்னு நான் எதுவுமே கேக்கலை”
“எப்படியோ நல்லா இருந்தா சரிதான். அப்புறம் அணு செல்லம், இன்னைக்கு கிரீன் கலர் சுடிதார்ல செமையா  இருந்தீங்க தெரியுமா செல்லம்? அப்படியே கடிச்சு வைக்கணும் போல இருந்தது”
“ஏய் ஆரம்பிச்சிட்டியா டா? எந்த ட்ரெஸ்சும் போட விட்டுறாத? ஆமா  என்னை நீ எப்ப டா பாத்த? நான் உன்னை பாக்கலாம்னு வந்தப்ப, நீ லேப்ல இருந்த. நான் பாக்கலை தெரியுமா?”
“அதெல்லாம் நாங்க ஒளிஞ்சு இருந்து பாத்துட்டோமே”
“அட பாவி எதுக்கு ஒளிஞ்சு இருந்து பாக்கணும்? முன்னாடி வந்துருந்தா நானும் பாத்துருப்பேன்ல ?”
“எதுக்கு நம்ம அப்படியே கண்ணாலே சாப்பிடுற  மாதிரி ஒருத்தொருக்கொருத்தர்  பாத்துட்டு இருப்போம். எல்லாரும் நம்மலையே பாக்கவா ? ஏற்கனவே கூட இருக்குற ராகுல், கதிர் தொல்லை தாங்கலை. இதுல வேற யாரும் பாத்தா அவ்வளவு தான். சரி உங்க கிளாசில் யாருக்கும் தெரியுமா, நம்ம  லவ் பண்றது?”
“பவிக்கு சொல்லிட்டேன். மித்தவங்க  எல்லாருக்கும் சீனியர் அர்ஜுனும் , அணுவும் பிரண்ட்ஸ்ன்னு  தெரியும்”
“நான் உனக்கு பிரண்டா டி?”
“அதை கையை அங்க இங்க வைக்கும் போது கேட்டுருக்கணும். இப்ப கேக்குற பிரண்டானு. உனக்கு தெரியாதோ?”
“அது நேத்து மட்டும் தான? அது தான் கடைசி அணு. இனி கல்யாணம் முடியுற வரைக்கும் உன் பக்கத்துலே  வர மாட்டேன்”
“பாக்கலாம்”
“ஆனா அது உன் கைல தான் இருக்கு, தனியா கையில் சிக்கிறாத செல்ல குட்டி. அர்ஜுன் அப்பறம் பாவம்”
“ஹா ஹா போ டா. எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. நீ என்னை என்ன செஞ்சாலும் லிமிட் தாண்ட மாட்டேன்னு  தெரியும்”
“செல்ல குட்டி டி நீ. அப்படியே என்ன வேணாலும் செஞ்சிக்கோன்னு  பெர்மிஷன் கொடுத்துட்டியே”
“போதும் அஜ்ஜு. வேற பேசலாம். எனக்கு ஒரு மாதிரி இருக்கு. அத்தை என்ன செய்றாங்க?”
“அட பாவி அவங்க கிட்ட பேசிட்டு தான நீ எனக்கு கால் பண்ண? அப்புறம்  என்கிட்ட கேக்குற?”
“சரி சரி விடு”
இப்படியே இவர்கள் உரையாடல் தொடர்ந்தது.
அந்த வருட கல்ச்சுரல் புரோகிராம் வந்தது. கதிர், ராகுல் , அர்ஜுன் மூவரும் மற்ற மாணவர்களுடன் அமர்ந்திருந்தார்கள்.
அங்கே மேடை ஏறி வந்தாள் அணுராதா.
“டேய்  உன் ஆளு எதுக்கு டா  மேடை ஏறி வாரா. இவ சும்மாவே ஒரு எலிக்கு பய படுவா. அப்படி இருக்கிறப்ப இவ்வளவு  ஆள் இருக்குற கூட்டத்துக்கு நடுவுல மேடை ஏறிருக்கா?”, என்று கேட்டான் ராகுல்.
“டேய் அவ தான் டா, ஆர்கனைஸ் பண்றா. அன்னைக்கு  தர்மா சார் பிரச்சனைல முன்னாடி நின்னு கோசம் போட்டானு பிரின்சிபால் இம்ப்ரெஸ் ஆகி இந்த வேலையை கொடுத்துருக்காரு”, என்றான் அர்ஜுன்.
“என்னது ஆர்கனைஸரா? இப்ப கூட்டத்தை பாத்து தெரிச்சு ஓட போறா”, என்று சிரித்தான் கதிர்.
“இதுக்கெல்லாம் என் செல்லம் பயப்படாது. அது இவனுங்களுக்கு எங்க தெரிய போகுது?”, என்று நினைத்து கொண்டே அவளை பார்த்தான்.
“சேலை கட்டாதேன்னு நேத்து அவ்வளவு  சொல்லியும் கட்டிட்டு வந்துருக்கா. இன்னைக்கு  இவளுக்கு இருக்கு”, என்று மனதில் திட்டு  என்ற பேரில் அவளை இஞ்சு இஞ்சாக ரசித்து கொண்டிருந்தான் அர்ஜுன்.
அங்கே கம்பீரமாக, முகத்தில் சிரிப்புடன், தன் பேச்சு திறமையால் எல்லாரையும் வசீகரித்து வர வேற்று கொண்டிருந்தாள் அணுராதா.
“என்னமோ சொன்னீங்க? எப்படி தைரியமா பேசுறா? அவளை போய் பயந்து ஓட போறாணு சொன்னீங்க?”, என்று சிரித்து கொண்டே நண்பர்களை பார்த்த அர்ஜுன் திகைத்தான்.
இருவரும் மேடையை பாக்காமல் அவனையே முறைத்து கொண்டு இருந்தார்கள்.
“என்னை எதுக்கு டா  முறைக்கிறீங்க?”
“நீ அவ எலிக்கு  பயந்தான்னு சொன்னது பொய் தான?”, என்று கேட்டான் ராகுல்.
“என்ன டா உளறுற? இப்ப எதுக்கு அதை கேக்குற? அது நிஜமாவே நடந்தது தான்”
“பொய் சொல்லாத அர்ஜுன். நாங்க இந்த ஒரு வருசத்துல அணுவை பாத்துருக்கோம். ஒண்ணு யாரையாவது அடிப்பா. இல்லைனா  கோசம் போடுவா. இப்ப திறமையா மேடை ஏறி பேசுறா. ரொம்ப தைரியமானவ அவ. இவ எப்படி ஒரு எலிக்கு பயந்தானு சொல்ற?”, என்று கேட்டான் கதிர்.
“ஆமா டா. கதிர் சொல்றது தான் சரி. எனக்கு என்னமோ, அன்னைக்கு ஸ்போர்ட்ஸ் ரூம்ல இவன் முத்தம் கொடுத்தான்னு அவ சொன்னது தான் உண்மையா இருக்கும்னு தோணுது”, என்றான் ராகுல்.
“டேய்  அப்படி எல்லாம் இல்லை டா. நம்புங்க டா. நான் சொன்னது முழுக்க முழுக்க உண்மை தான்”, என்றான் அர்ஜுன்.
“எங்க என் தலைல அடிச்சு சத்தியம் பண்ணு பாக்கும். நீ அவளை கிஸ் பண்ணது இல்லைனு”, என்றான் ராகுல்.
இதுக்கு எப்படி அர்ஜுன் பொய் சத்தியம் பண்ணுவான்? கிஸ் மட்டுமா, மஹாபலிபுரம்  போன அன்று அவளை ஒரு வழி செய்தானே? இப்ப எப்படி இல்லைனு பொய் சத்தியம் பண்ண முடியும்?
“கேட்டது தான் கேட்டான். ஸ்போர்ட்ஸ் ரூம்ல வச்சு கிஸ் பண்ணலைன்னு சத்தியம் பண்ணுனு கேட்டுருக்கலாம்ல?”, என்று நினைத்து அமைதியாக இருந்தான்.
“பாத்தியா டா. சத்தியம் பண்ண மாட்டிக்கான். அப்ப அவ சொன்னது தான் டா உண்மை”, என்றான் கதிர்.
தன்னை பொய் சொன்னதாக நினைக்கிறார்களே என்று நினைத்து அவசரத்தில் “டேய் முத்தம் கொடுத்துருக்கேன் தான். ஆனா அன்னைக்கு இல்லை. அதுக்கு அப்பறம் தான்”, என்று உளறி நாக்கை கடித்து கொண்டான்.

Advertisement