Advertisement

அத்தியாயம் 12
நான் யார் என்று 
தெரியாத நிலையிலும் 
தெளிவான உன் 
நினைவுகள் என் மனதில்!!!
மோன நிலையில் கட்டுண்டவள் போல அவன் கன்னத்தில் தன் கன்னத்தை வைத்தவள் “ம்ம் போகலாம் “, என்று முணங்கினாள்.
அவள் செய்கையில், இப்ப என்ன செய்ய என்று தெரியாமல் அவனுக்கு கோபம் வந்தது. அவளுடைய  நெருக்கத்தை அனுபவிக்க முடியலையே என்ற கோபம். எந்த உரிமையில் அவளை தொடுவது என்ற தவிப்பு கோபமாக மாறி “அணு விடு”, சற்று சத்தமாக சொன்னான்.
அப்பவும் அவள் விலகாமல் இருக்க “அணு  உன்னை தான் சொல்றேன். விடு. விடு டி”, என்று கத்தினான்.
“அன்னைக்கு பொண்டாட்டியை தான் டி ன்னு  சொல்லுவன்னு சொன்ன? இப்ப எதுக்கு என்னை சொல்ற?”, என்று அவன் காதில் உதடு பதிய  கேட்டாள் அணு.
“ஆமா அப்படி தான் சொன்னேன். அது உண்மை தான். இப்பவும் உன்னை பொண்டாட்டியா நினைக்க போய் தான் டி சொல்றேன் போதுமா? இப்ப என்னங்குற? விடு கிளம்பலாம்”
“பொண்டாட்டின்னு  சொல்லிட்டு ஏன் டா அஜ்ஜு விலகுற?”
“அணு, அப்ப நீ….?”
“லூசு அஜ்ஜு. இன்னுமா உனக்கு புரியலை? நான் ஹஸ்பண்டா நினைக்கிறது உன்னை தான். எப்படா புரிஞ்சிக்க போற? நீ தான் என் மனசுல இருக்கேன்னு, இப்படி சொன்னா புரியுமா?”, என்று கேட்டு கொண்டே அவன் கண்களை பார்த்தாள்.
அதில் இருந்த அவன் காதலையும், ஒரு அதிர்ச்சியையும் உணர்ந்தவள் அவன் கன்னத்தில் பட்டும் படாமலும் ஒரு முத்தத்தை பதித்தாள்.
அவளையே இமைக்க மறைத்து பார்த்து கொண்டே இருந்தான். அவள் அவன் பதிலுக்காக காத்திருப்பது புரிந்து பேச ஆரம்பித்தான் அர்ஜுன்.
“நான் உன்னை முதல் தடவை பாத்ததே அந்த பையனை நீ  அடிக்கும் போது தான். ஆனா அப்ப கூட நான் உன் முகத்தை சரியா பாக்கவே இல்லை. அப்புறம் மூணு வாரம் கழிச்சு ஸ்போர்ட்ஸ் ரூம்ல வச்சு பாத்தது தான். நாம பேசினதே இந்த ஒரு வாரம் தான். ஆனா அன்னைக்கு முதல் தடவை பாத்தப்பவே நான் மயங்கிட்டேன் அணு.
அன்னைக்கு எலிக்கு பயந்து என்னை கட்டி பிடிச்சப்பவே நீ என் மனசுக்குள்ள வந்துட்ட. ஆனா அதை நான் உணர்ந்ததே நேத்து தான் தெரியுமா?”
“தெரியும் அர்ஜுன். உனக்கு என்னை பிடிக்கும்னு தெரியும். அதை நீ உணரலைன்ணும் தெரியும். ஆனா நான் உன்னை எப்ப பாத்தேன் தெரியுமா? இந்த காலேஜ்க்கு  ஃபீஸ் கட்ட வந்தப்ப?”
“அப்பவே வா?”
“ஹ்ம் ஆமா. அப்பாவும், நானும் ஃபீஸ் கட்டிட்டு கேன்டீன்  வந்தப்ப தான் உன்னை பாத்தேன். பாத்த உடனே உன்னை ரொம்ப ரசிச்சேன். நீ போற வரைக்கும் பாத்துட்டே இருந்தேன். உன்னை கடவுள் என் கண்ணுல காட்டினதுக்காக  நன்றி சொன்னேன். அன்னைக்கு மனசு உற்சாகமா இருந்தது. நீ என் கண்ணுக்குள்ளே நின்ன அர்ஜுன்”
…..
“அப்புறம் சாதாரண ஈர்ப்புன்னு  நினைச்சு தான் வீட்டுக்கு கிளம்புனேன். ஆனா காலேஜ் ஆரம்பிக்கிற அந்த நாள் வரைக்கும் வீட்டில இருந்து ரொம்ப தவிச்சேன். உனக்காகவே எப்படா காலேஜ் திறப்பாங்கன்னு இருக்கும். சாயங்காலம் ஆச்சுன்னா, மொட்டை மாடில  வரும் அந்த காற்றை சுகமா அனுபவிக்கும் போது, காதில் கெட்செட் மாட்டிட்டு பாட்டு கேக்கும் போது நீ என் பக்கத்துல இருந்து உன் தோளில் சாஞ்சிக்கணும்னு ஏக்கமா இருக்கும். உன் பேர் கூட அப்ப எனக்கு  தெரியாது அஜ்ஜு. ஆனா அந்த அளவுக்கு மயக்கம்.  நான் உன்கிட்ட மயங்கிட்டேன் அர்ஜுன். அந்த மயக்கம் எனக்கு புடிச்சிருந்தது. மனசுக்குள்ள சலனத்தை ஏற்படுத்துனது நீ தான். பாத்த  உடனே காதல் வருமானு எல்லாம் தெரியாது. ஆனா உன் மேல, பாத்த உடனே வந்த மயக்கம் தீராமலே இருந்தது”
“அப்புறம் காலேஜ் ஆரம்பிச்ச அன்னைக்கே நீ எந்த கிளாஸ்ன்னு  கண்டு பிடிச்சிட்டேன். அன்னைக்கு அவனை அடிக்கும் போது, நீ கேன்டீன்ல இருக்கும் போதே உன்னை பாத்துட்டேன். ஆனா உன்னை ரசிக்க விடாத படி அவன் என்னை மூட் அவுட் பண்ணிட்டான். அதான் போய்ட்டேன். தினமும் உன்னை பாக்க வருவேன்.  கிரவுண்ட்ல, கிளாஸ்ல, லைப்ரரில, கேன்டீன்ல அடிக்கடி உன்னை பாப்பேன். பாக்கும் நேரம் எல்லாம் என்னையே மறந்துருவேன் அஜ்ஜு. உன்மேல இருந்த அந்த மயக்கம் எப்ப காதலா மாறுச்சுன்னு கேட்டா எனக்கு தெரியாது. ஆனா நீ தான் எல்லாமேன்னு நான் உணர்ந்துட்டேன்.  இப்ப சொல்றேன் உன்னை முழுசா, காதலிக்கிறேன் அர்ஜுன். நீ தான் என் உலகமே. உன்னை தவிர யாரும் என் மனசுக்குல வர முடியாது. ஐ லவ் யூ அர்ஜுன்”
அவள் சொல்வதை பிரமிப்பாய் கேட்டு கொண்டிருந்தவன் “அணு குட்டி அப்ப இருந்து என்னை பிடிக்குமா?”, என்று அதிர்ச்சியாக கேட்டான்.
“ஹ்ம் ஆமா. ரொம்ப பிடிக்கும். உன் பேர் தெரியாது. நல்லவனா, கெட்டவனான்னு  தெரியாது. உன்னை பத்தி  எதுவுமே தெரியாது. தெரிஞ்சது எல்லாம் நீ மட்டும் தான். அப்புறம் உன் பிரண்ட்ஸ்  கூப்பிடுறது  வச்சு உன்னோட பேர் தெரிஞ்சுகிட்டேன். மனசுக்குள்ள அஜ்ஜு அஜ்ஜுன்னு  கூப்பிட்டு சந்தோச படுவேன். ஆனா நேர்ல வந்து எப்படி பேசன்னு தெரியலை. அப்புறம் அன்னைக்கு கடவுளா வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். அதை கெட்டியா பிடிச்சுக்கிட்டேன். நீ ஸ்போர்ட்ஸ் ரூம் பூட்ட  வெயிட் பண்றதா செகண்ட் இயர் பொண்ணு சொல்லுச்சு. உன்னை பாக்க சந்தோசமா ஓடி வந்தேன். கிட்ட பாக்க போறோம்னு ஆசையா இருந்தேன். ஆனா நீ என்னை கவனிக்காம எங்கயோ பாத்துட்டு இருந்த.  அப்புறம் நடந்தது தான் உனக்கு தெரியுமே. சின்ன வயசுல இருந்தே இருட்டுனா எனக்கு பயம். ஆனா அந்த இடத்துல நீ இல்லாம வேற யார் இருந்திருந்தாலும் அவங்க கிட்ட பயமா இருக்குன்னு சொல்லி வெளிய கூட்டிட்டு போக சொல்லிருப்பேனே ஒளிஞ்சு அவங்க கையை பிடிச்சிட்டு அப்படி ஒட்டிக்கிட்டு நின்னுருக்க மாட்டேன். பயத்துல  அவங்க தோள்ல, உன் மேல சாஞ்ச மாதிரி சாஞ்சிருக்க மாட்டேன். ஆனா அன்னைக்கு சந்தோசமா இருந்தது”
….
“இது தான் சாக்குன்னு உன் கிட்ட ஒட்டிகிட்டேன்ல? அப்ப உன் முகத்துல என் மேல பிடிக்காத மாதிரி எந்த பீலிங்கும் தெரியலை. அப்புறம் தான் நீ வம்பு இழுத்த? பேச வாய்ப்பு கிடைச்சதுன்னு உற்சாகமா ஆனேன். அப்புறம் நானும் உன்கிட்ட வம்பு இழுத்து, உன்னை எனக்கே எனக்குனு வச்சிக்கிட்டேன்”, என்று சிரித்தாள் அணு.
“அணு….”
“என்ன டா? இதெல்லாம் உண்மை தான். அப்புறம் உன் கூட வண்டில வந்தது. வேணும்னே உன் முதுகுல உரசுனது, இதெல்லாம் உன்னை சலன படுத்த இல்லை. எனக்கு உன்னோட அருகாமை வேணும்னு தோணுச்சு. உன்னை தொட்டுட்டே இருக்கணும்னு ஆசையா இருந்தது அதான். என்னோட வீடு அப்படிங்குற உரிமைல தான் சிவாவை அடிச்சேன். அன்னைக்கு அத்தை காதுல என்ன சொன்னேன் தெரியுமா? அர்ஜுன் எனக்கே எனக்குனு வேணும் அத்தை. அவன் தான் எனக்கு எல்லாமும். என்னையும் உங்க வீட்டில சேத்துக்கோங்கன்னு  சொன்னேன். அவங்களுக்குமே என்னை பாத்த உடனே பிடிச்சது தெரிஞ்சது. அப்புறம் நீ என்னை விட வந்தப்ப உன்னை வீட்டுக்குள்ள கூப்பிட்டா, வேணும்னே நானே உன்னை கட்டி புடிச்சு முத்தம் கொடுத்துருவேனோன்னு  பயம். அதான் உள்ள வந்தா அவ்வளவு தானு சொன்னேன். அன்னைக்கே அப்பா கிட்ட உன்னை பத்தி  பேச ஆரம்பிச்சேன். ஆனா வெளிப்படையா சொல்லலை. ஆனா அத்தை கிட்ட, அப்பா  சம்மதம் சொன்னதா அத்தை என்கிட்ட சொன்னாங்க”
….
“அன்னைக்கு ஹோட்டல்ல உன் கையை பிடிச்சிட்டே  இருக்கணும், உனக்கு ஊட்டி விடனும்னு தோணுச்சு. உன் உதட்டுல இருந்த சாப்பாடை என் விரலால எடுக்கும்  போது எனக்கு புல்லரிச்சது  அர்ஜுன். உன் முகத்தை பார்த்து, உனக்கும் என்னை பிடிக்கும்னு புரிஞ்சது. ஆனா அது லவ்வான்னு  தெரியலை. அதை நான் யோசிக்கவும் இல்லை. எனக்கு உன்னோட அருகாமை இப்படியே கிடைச்சா போதும்னு தோணுச்சு அர்ஜுன். ஆனா நீ ஏன் அன்னைக்கு சீக்கிரம் என்னை விட்டுட்டு ஓடின?”
“சொல்லவா என்னன்னு ?”
“ஹ்ம்”
“அதை அப்புறம்  சொல்றேன்.  பர்த்டே பேபி ஆசை பட்டதை கொடுக்க வேண்டாமா? அதுவும் எனக்காக ஏங்கி தவிச்ச உன்னோட ஏக்கத்தை நிறைவேத்த வேண்டாமா”, என்ற படி அவளை நெருங்கினான்.
“போடா “, என்று சிணுங்கினாள் அணு.
அவள் வெக்கத்தை ரசித்தவன்  அவள் கன்னத்தில் இரண்டு கைகளை வைத்து முகத்தை தூக்கினான்.
அவனையே பார்த்து கொண்டிருந்தவள், கண்களை மெதுவாக மூடினாள்.
முதலில் அவள் கண்களில் தன் உதடுகளை பதித்தான். அடுத்து நெற்றி, கண், காது என்று பயணித்த அவன் உதடுகள் அவள் இதழ்களில் வந்து இளைப்பாறியது.
இடைவெளி விட்டு விட்டு அவள் உதடுகளை மீண்டும் மீண்டும் முத்தமிட்டான் அர்ஜுன்.
சிவந்து போய் இருந்தாள்  அணு.
ஏற்கனவே அவளை ஈர சேலையில் பார்த்த போது ஏற்பட்ட தாகம், இப்போது கிடைத்த நெருக்கத்தில் அதிகமானது. அதுவும் அவள் காதலை உணர்ந்து சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தான் அர்ஜுன்.
மீண்டும் மீண்டும் முத்தத்தை பதித்தவனை பார்த்து “நான் ஒன்னும் இத்தனை கேக்கலையே”, என்று சிரித்தாள்.
“இனி கணக்கே கிடையாது”, என்று சொல்லி விட்டு  அவளை இழுத்து தன் மேல் போட்டு கொண்டவனின்   கைகள் அவள் வெற்றிடையில் பதிந்தது. அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் அவள் காதை பல்லால் வருடினான்.
அவன் செயலை தாங்க முடியாமல் அவன் முதுகில் அவள் கைகள் படர்ந்து பரவி இறுக்கி கொண்டது.
“நீ முழுசா எனக்கு மட்டும் தான சொந்தம் அணு?”, என்று கேட்டான் அர்ஜுன்.
இவ்வளவு சொன்ன பிறகும் இது என்ன கேள்வி என்று அவன் முகம் பார்க்க அவனை விட்டு விலக பார்த்தாள்.
“அப்படியே இருந்து சொல்லு”, என்றான் அர்ஜுன்.
ஆமா என்று மண்டையை ஆட்டினாள் அணு.
“அப்ப உன்னை என்ன வேணா செய்யலாம் தான?”
“ம்ம்”
அடுத்த நொடி அவள் வயிற்றில் இருந்த கை தாறுமாறாக அவள் உடம்பில் பயணித்தது.
“அஜ்ஜு”, என்ற படியே  திண்டாடி போனாள் அணு.
“ப்ளீஸ்  டி”, என்றவன் அவளை பேசவே விடாமல் செய்தான்.
“இப்படி செய்ய தோன போய் தான் டி அன்னைக்கு அப்படி ஓடி போனேன். என்னால என்னையே கண்ட்ரோல் பண்ணிக்க முடியாம தான் கோழை மாதிரி ஓடி போனேன்.  உன்னோட ஒவ்வொரு நொடியையும் கழிக்கணும்னு நினைக்கிற நான், நீ ஆசை பட்டு கேட்டும், உன்கூட வரலைனு சொன்னேன். அது எதுக்கு தெரியுமா? இதனால தான். உன் காதல் தெரியும் முன்னாடி விலகி இருக்கணும்னு நினைச்சேன். கல்யாணம் வரைக்கும் என்னை விட்டு தள்ளியே இரு அணு. இப்ப உனக்கு கல்யாண வயசும் ஆகலை. ஆகிருந்தா கூட கல்யாணம் அடுத்த நிமிசமே பண்ணிக்குவேன். இன்னைக்கு தான் கடைசி நாள் என்கூட நீ தனியா இருக்குறது. சரியா? மனசும் கையும் சொன்ன பேச்சு கேக்க மாட்டிக்கு டி”, என்று சொல்லி கொண்டே  அவளை முத்தத்தால் மூச்சு திணற வைத்தான்.
அவள் உடம்பில் அவன் கைகள் அத்து மீறியது. அவன் வேகத்தில் “எப்பா கண்டிப்பா இவன் கிட்ட சிக்க கூடாது”, என்று முடிவு எடுத்தாள் அணு.
“இன்னும் சேலை கட்டினேன்னு வச்சிக்கோ, அன்னைக்கே முதலிரவு கொண்டாடிருவேன்”,  என்றான் அர்ஜுன்.
“ஏன் நான் நல்லா  இல்லையா அஜ்ஜு?”, என்று குழப்பமாக  கேட்டாள் அணு.
“நல்லா இல்லையாவா? எதுக்கு இந்த சேலை? இடைஞ்சலா இருக்குன்னு  கழட்டி எறிய  தோணுது டி”, என்றவனின் வாயை பொத்தியவள் “அர்ஜுன் ப்ளீஸ்  நாம வீட்டுக்கு போகலாம்”, என்று கொஞ்சினாள்.
“இந்த பயம் இருக்கணும். உன்னோட அர்ஜுன் பாவம். இன்னைக்கு நடந்ததுக்கே எத்தனை நாள் தூங்காம  இருக்க போறேனோ தெரியலை.  சின்ன பொண்ணு மாதிரியா டி இருக்க? இவ்வளவு சாப்டா இ …?”
அவன் வாயை பொத்தியவள் அவன் தோளிலே  சாய்ந்து கொண்டாள்.
கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி, இன்னும் முத்தம் கொடுத்து, அடுத்த தேடுதல் வேட்டையை  அவன் துடங்கி, அதை அவள் தடுத்து, சமாதான படுத்தி, அங்கே இருந்து கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம் ஆனது.
எல்லை இல்லா  அமைதியுடன் அவன் தோள்களில் சாய்ந்திருந்தாள் அணு.
“அடுத்த தூக்கமா?”, என்று கார் ஓட்டி கொண்டே கேட்டான் அர்ஜுன்.
“உன்னோட தோளில்  சாஞ்சிருக்குற இந்த தருணத்தை  ஆழ்ந்து அனுபவிச்சு ரசிச்சிட்டு  வரேன் டா. தூக்கம் எல்லாம் வருமா?”, என்று சிரித்தாள் அணு.
இப்போதும் அவள் தலையில் தன் தலையால் இடித்தவன் சிரித்து கொண்டே காரை ஓட்டி சென்றான்.
வாழ்க்கையில் இந்த நாளை மறக்கவே முடியாது என்று நினைத்து கொண்டாள் அணு. அவளை வீட்டில் விட்டவன், வீட்டில் இருந்த வாசு தேவனிடமும்  சிறிது நேரம் பேசி கொண்டிருந்தான்.
அழுக்காகி  இருந்த சேலையை மாற்றி கொண்டு நைட்டியுடன்  வந்தாள் அணு.
அதிலும் அவன் மயங்கி தான் போனான்.
வாசு தேவன் எழுந்து போனதும் “ஏன் டி  இப்படி  எல்லாம் ட்ரெஸ் போட்டுட்டு வந்து சாகடிக்கிற?”, என்று கேட்டான் அர்ஜுன்.
“சேலை கட்டினாலும் திட்ற. நைட்டிக்கும் திட்ற. வேற நான் எது தான் போட?”, என்று கேட்டாள் அணு.
“ஒண்ணுமே போடாம…”, என்று சொல்ல வந்தவனின் வாயை கைகளால் மூடியவள் “இன்னும் சுடிதாரை  தவிர வேற எதுவுமே போட்டுட்டு உன் முன்னாடி  வர மாட்டேன். நீ இப்ப கிளம்பு”, என்று சொல்லி பத்தி விட்டாள்.
அடுத்து வந்த நாள்கள் வழக்கம் போல சென்றது.
அர்ஜுன் சொன்னான் என்பதுக்காகவே தர்மராஜ் சாரை தனியாக பார்த்து மன்னிப்பு கேக்க கிளம்பினாள் அணு.
அவள் கிளம்புவதை பார்த்ததும்  “எங்க அணு போற? கேன்டீனுக்கா ?”, என்று கேட்டாள் பவித்ரா.
“இல்லை பவி தர்மா சாரை பாத்து மன்னிப்பு கேக்க போறேன். அர்ஜுன் பேச சொன்னான்”, என்றாள்.
“எல்லாமே என்னால தான? நானும் வரேன் “, என்றாள் பவித்ரா.
“சரி வா”, என்று அணு சொன்னவுடன் இருவரும் கிளம்பினார்கள்.
அவருடைய ஸ்டாப் ரூம்  சென்று அவரை பார்த்தார்கள்.
அவர்களை பார்த்து புருவம் உயர்த்திய தர்மராஜ் “என்ன விசயம்?”, என்று கேட்டான்.
“இல்லை சார், அது வந்து மன்னிப்பு கேக்கலாம்னு?”, என்று இழுத்தாள் அணு.
“அது தான் அன்னைக்கே கேட்டுடீங்களே? அப்புறம்  என்ன விடுங்க”, என்றவன் பவித்ராவை  கூர்மையாக பார்த்தான்.
“பவித்ராவும் உங்க கிட்ட மன்னிப்பு கேக்கணுமாம் சார்”, என்றாள் அணு.
“என் மேலயும் தப்பு இருக்கே. அதெல்லாம் வேண்டாம்”, என்று சொன்னவன் அணுவிடம் திரும்பி “இவங்க உங்க ப்ரண்டா?”, என்று கேட்டான்.
“ஹ்ம்ம்  ஆமா சார். எனக்கு பவித்ரா மட்டும் தான் இந்த காலேஜ்ல  ப்ரண்ட்”, என்றாள் அணு.
“அப்ப நீங்க இருந்தா பரவால்ல”, என்றவன் “பவித்ரா என்கிட்ட என்னைக்குமே மன்னிப்பு கேக்க கூடாது”, என்றான்.
அவனை புரியாத பார்வை பார்த்தாள்  பவித்ரா.
அணுவுக்கும் குழப்பமாய் இருந்தது. பவித்ராவும், தர்மராஜும் பார்வை பரி மாற்றம் நடத்தி கொண்டிருக்க என்ன என்று புரியாமல் “சார்…”, என்று சொல்லி அவன் சிந்தனையை கலைத்தாள் அணு.
அதில் நிமிர்ந்தவன் “என்ன புரியலையா? இனிமே உங்க பிரண்டும், நானும் வேற வேற இல்லை. இந்த இடத்தில் இருந்துட்டு நான் இதை சொல்ல கூடாது. ஆனா  சொல்லாம இருக்க முடியலை. எப்படி கை, வாய்க்கு நன்றியோ, மன்னிப்போ சொல்லாதோ அதே மாதிரி அவ என்கிட்ட சொல்ல வேண்டியது இல்லை”, என்றான்
இருவரையும் அதிர்ச்சியாக பார்த்தாள் அணு.
பவித்ரா அதிர்ச்சியில் அவனை பார்த்து ஆ என்று வாயை பிளந்து கொண்டிருந்தாள். பவித்ரா முகத்தை பார்த்த தர்மா  மனதுக்குள் சிரித்து  கொண்டான்.
உருகுதல் தொடரும்….

Advertisement