Advertisement

அத்தியாயம் 10
உன் அருகாமைக்காக 
காத்திருக்கின்றன என் 
விழிகள் கண்ணீருடன்!!!

“இது என்ன சோதனை?”, என்று மனதுக்குள் அலறினான் அர்ஜுன்.
“அணு”
“என்ன அர்ஜுன்?”
“ஒரு சைடா கால் போட்டு உக்காறேன்”
“இது தான் வசதியா இருக்கு. அன்னைக்கு இப்படி தான உக்காந்தேன்”
“அன்னைக்கு இதெல்லாம் நான் யோசிக்கலையே?”
“என்னது யோசிக்கலையே?”
“ஒன்னும்  இல்லை பிடிச்சுக்கோ. கிளம்பலாம்”
“சரி டா”, என்று சொல்லி அவன் தோளில் ஒரு கையும் அவன் இடுப்பில் ஒரு கையும் வைத்தாள் அணு.
“இன்னைக்கு என்னை சோதிக்காம விட மாட்டா போல? என்ன ஆக போகுதோ?”, என்று நினைத்து கொண்டே வண்டியை ஓட்டினான்.
தவழ்ந்து வரும் தென்றலை ரசித்த படி, அவனுடைய காதில் சில சில விசயங்களை பேசிய படி சிரித்து கொண்டே வண்டியில் அமர்ந்திருந்தாள் அணு. அவனும் இந்த தருணத்தை ரசித்தான்.
ஒரு ரெஸ்டாரண்ட் முன்பு வண்டியை நிறுத்தியவன் அவளை இறக்கி விட்டுவிட்டு பார்க் பண்ணி கொண்டு வந்தான். இருவரும் உள்ளே சென்றார்கள். அவள் எதிரே அமருவாள் என்று நினைத்து ஒரு இருக்கையில் அமர்ந்தான் அர்ஜுன்.
ஆனால் அவளோ எதிரே அமராமல், “உள்ள தள்ளி உக்காரு அர்ஜுன்”, என்றாள்.
“அங்க உக்காரலையா அணு?”
“பக்கத்துல உக்காந்து பேசிட்டே சாப்பிட்டா தான் நல்லா இருக்கும்”
அவனோ “எதிரே உக்காந்தா அவ முகத்தை ஆசை தீர பாக்கலாம். என்னை கட்டி இழுக்கிற அந்த கண்ணை ரசிச்சிட்டே இருக்கலாம்னு நினைச்சேனே. சொதப்புறாளே”, என்று நினைத்து கொண்டே சோகமாக உள்ளே தள்ளி அமர்ந்தான்.
அவளுக்கு பிடித்ததை சொல்ல சொன்னான் அர்ஜுன்.
தனக்கு வேண்டியதை சொன்னவள், அவனிடம் நீட்டினாள். அவனும் சில ஐட்டங்களை சொல்லி அனுப்பினான்.
“நிறைய சொல்லியாச்சு. வீணாகிருமா அர்ஜுன்?”
“ஷேர் பண்ணி சாப்பிட்டுக்கலாம். வேஸ்ட் ஆகாது. சாப்பாடு வேஸ்ட் பண்றது எனக்கு பிடிக்காது அணு. அதனால காலி ஆகிரும் கவலை படாத”
“அப்ப சரி”, என்றவள் அவனுடைய கையை டேபிளுக்கு கீழே இறுக்கி பிடித்து கொண்டாள்.
ஆனந்த அதிர்ச்சியில் அவளை திரும்பி பார்த்தான் அர்ஜுன்.
அவள் அவனை பார்க்காமல் சுத்தி பார்வையை ஓட்டினாள்.
அவளையும் அவள் பிடித்திருந்த கையையும் மாறி மாறி பார்த்து ரசித்து கொண்டிருந்தான் அர்ஜுன்.
“சும்மா சைட் அடிக்கலாம்னு நினைச்சேன். இப்படி ஒரு அருகாமை கிடைக்கும்னு தெரிஞ்சா எந்த லவ் ஜோடியும் எதிர் எதிரே உக்கார மாட்டங்களோ”, என்று நினைத்தான்.
பேரர் எல்லாம் எடுத்து வந்தார்.
“இப்ப கையை விட்டுருவாளோ?’, என்று அவன் யோசிக்கும் போதே அவள் அவன் கையை விட்டு விட்டு தனக்கும் அவனுக்கும் சாப்பாடை எடுத்து வைத்தாள்.
“இடது கையை தான பிடிச்சிருந்தா. அப்படியே பிடிச்சிருக்க வேண்டியது தான? ஏன் விட்டா?”, என்று சிணுங்கியது அர்ஜுனின் மனது.
எல்லாம் எடுத்து வைத்து விட்டு மறுபடியும் கையை கொண்டு போய் அவன் இடது கையை இழுத்தவள் அதை பற்றி கொண்டு அவனுடைய தொடையிலே கையை வைத்து கொண்டாள்.
விதிர்த்து போனான் அர்ஜுன். ஏ. சி அறையிலும் அவனுக்கு வியர்த்து விட்டது. “கடவுளே காலில் வச்சிருக்க கையை அசைக்காம வச்சிருக்கணும்”, என்று கடவுளுக்கு ஒரு வேண்டுதலை வைத்து விட்டு சாப்பிட ஆரம்பித்தான்.
மறந்தும் கூட தன்னுடைய கையை பிடித்திருக்கும்,  அவளுடைய கையை தொடையில் இருந்து தட்டி விடணும் என்று யோசனை கூட வராதது அவனுக்கும், அவன் மனசாட்சிக்கும் தெரிந்த உண்மை.
மனதுக்கு பிடித்தவள் கூட இருக்கும் தருணம், வாழ்க்கையில் மறக்க முடியாத பொக்கிஷம் என்று இந்த நாள் உணர்ந்தான் அர்ஜுன். அதை உணர்த்தியவளை காதலுடன் பார்த்தான் அர்ஜுன்.
அவன் மனதில் இருந்த காதல், அவள் கை அசைய கூடாது என்ற தவிப்பு, இப்படியே இவளுடனே இருக்கணும் என்ற ஆசை எதையுமே உணராமல் இயல்பாய் அவனுடன் உரையாடினாள் அணு. இதில் அவள் பிடித்திருந்த அவன் கையை வைத்தே தொடையில் அடித்து அடித்து வேற பேசி கொண்டிருந்தாள்.
“இவ ஆர்க்யூ  செய்றேன்னு பேர்ல என்னை ஒரு வழி ஆக்குறாளே. இனி இவ கூட எங்கயும் போக கூடாது. எப்பா முடியலை. உடனே வீட்டுக்கு ஓடிறனும்”, என்று நினைத்தான்.
திடிரென்று ஒரு வாய் உணவை எடுத்து அவன் வாயருகே கொண்டு சென்றாள் அணு.
திகைத்து போய் அவளை பார்த்தான் அர்ஜுன்.
“என்ன டா முழிக்கிற? வாயை திற?”, என்று சொல்லி அவனுக்கு ஊட்டி விட்டாள் அணு.
அவளையே பார்த்து கொண்டிருந்தான். “பாத்தது போதும் சாப்பிடு. இப்ப புரியுதா? நான் ஏன் இங்க பக்கத்துல வந்து உக்கந்தேன்னு? எதிரில் உக்காந்து உனக்கு ஊட்ட முடியுமா?”, என்று சிரித்தாள் அணு.
“இவ தெரிஞ்சு தான் எல்லாம் பண்றாளா? எதுக்கு ஊட்டி விடணும்னு நினைக்கிறா? எதுக்கு என் கையை பிடிச்சிக்கணும்னு நினைக்கிறா? இதுக்கெல்லாம் காதல் தான் காரணமா? அந்த காதலை இவ உணர்ந்திருக்காளா?”, என்று குழம்பினான் அர்ஜுன்.
சாப்பிட்டு கொண்டிருந்தவள் அவன் உதட்டில் ஒட்டி இருந்த ஒரு பருக்கையை அவன் அதை தட்டி விடும் முன்னர் தன் விரலை கொண்டு போய் அவன் உதட்டில் வைத்து விட்டு, “சின்ன பையன் மாதிரி சாப்பிடுற?”, என்று சொல்லி கொண்டே அதை தட்டி விட்டுவிட்டு உதட்டில் மெதுவாக ஒரு கிள்ளு கிள்ளினாள்.
அந்த தொடுகையில் சிலிர்த்தான் அர்ஜுன். அவனுடைய புலன்கள் அனைத்தும் விழித்து கொண்டது.
அவனுடைய காதலை உணராமல் கல்யாண பேச்சும் நடக்காமல் இருந்திருந்தால் இப்படி எல்லாம் தோன்றி இருக்குமா என்று தெரிய வில்லை. ஆனால் இப்போது அவளுடைய அருகாமை அவனுக்கு ஏதேதோ எண்ணங்களை தோன்ற வைத்து பாடாய் படுத்தியது.
அவள்  கேட்ட புரூட் சேலட்டை ஆர்டர் செய்தான் அர்ஜுன்.
அது ஒவ்வொன்றாக அவள் வாய்க்குள் செல்வதை ரசித்து பார்த்து கொண்டிருந்தவனின் கண்கள் அவள் உதட்டில் நிலைத்தது.
“என்னுடைய உதட்டில் அவள் கை வைத்த மாதிரி நானும் அவள் உதட்டில் வைத்தால் எப்படி இருக்கும். அப்படியே அந்த உதடை
சுண்டி விடணும். பிடிச்சு இழுக்கனும்”, என்று நினைத்து நினைவு போகும் பாதையை உணர்ந்து தன்னை கட்டு படுத்தவே சிரம பட்டான்.
திடிரென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் “வேணுமா டா?”, என்று கேட்டாள்.
“இவ எதை கேக்குறா? பழத்தையா? உதட்டையா?”, என்று விழித்தான்.
அதுக்குள் அவள் சாப்பிட்டு கொண்டிருந்த ஸ்பூனை வைத்தே அவனுக்கும் ஊட்டி விட்டாள் அணு.
அவள் எச்சில் பட்ட ஸ்பூன்,  அவன் நாக்கில் பட்ட போது ஜிவ்வென்ற உணர்வை அடைந்தான் அர்ஜுன்.
அதுக்கு மேல் அவளுடைய அடாவடியை  பொறுக்க முடியாமல் “அணு மா போகலாமா?”, என்று கெஞ்சலாக வெளி வந்தது அர்ஜுனின் குரல்.
அவன் குரல் வித்தியாசத்தை உணர்ந்து திரும்பி பார்த்தவள் சிரித்து  விட்டு “சரி போகலாம்”, என்றாள்.
பார்க்கிங்கில்  இருந்து வண்டியை எடுத்து வந்தான் அர்ஜுன். மனதில்  எழுந்திருக்கும்  உணர்வுகளை  அடக்க  அவனுக்கு  தனிமை   தேவை   பட்டது. அது  பொது  இடத்தில்  கிடைக்காது. அவனுக்கு  அவன்  வீட்டுக்கு, அவனுடைய  அறைக்கு  போக வேண்டும்.
“அடுத்து எங்க அஜ்ஜு போறோம்?”, என்று கேட்டாள் அணு.
“என்னது அடுத்தா? மணி ஏழு ஆகிட்டு  மா. வீட்டுக்கு போகலாம். ப்ளீஸ் டா. எனக்காக”
“உனக்கு என்னமோ ஆச்சு அர்ஜுன்”, என்று சிரித்தாள் அணு.
“என்னென்னவோ  ஆகிடுச்சு “, என்று மனதில் நினைத்தவன் அவளை பாவமாக பார்த்தான்.
“சரி வா போகலாம்”, என்று சொல்லி அவனுடன் வண்டியில் ஏறி கொண்டாள்.
மறுபடியும் அதே மாதிரி அவள் அமர, “கடவுளே உனக்கு இரக்கமே இல்லையா? இன்னைக்கு என்னோட ஆண்மைக்கு  பெரிய சோதனை”, என்று நினைத்து விட்டு கவனத்தை வலுக்கட்டாயமாக ரோட்டில் வைத்தான்.
அவளுடையே வீட்டில் இறக்கி விட்ட அர்ஜுன் வண்டியில் அமர்ந்தே “பை”, என்று சொன்னான்.
“என்ன டா  பை சொல்ற? உள்ள வா. அப்பா கிட்ட சொல்லிட்டு போலாம்”, என்றாள்.
“அணு நீ என் செல்லம் தான? இன்னைக்கு ஒரு நாள் என்னை விட்டுரு. மாமா கிட்ட நீயே சொல்லிறேன். ப்ளீஸ் டா”
விட்டாள் அழுது விடுபவன் போல் சொல்லிய அவனை வித்தியாசமாக பார்த்தவள் “சரி போய்ட்டு போன் பண்ணு”, என்றாள்.
“ஹ்ம் சரி”, என்று சொல்லி விட்டு விட்டால் போதும் என வண்டியை திருப்பி கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான்.
“வண்டி  வாங்கிட்டேன் மா. அணு கூட சாப்பிட்டுட்டேன். நீங்க சாப்பிடுங்க. இந்தாங்க போன். அவ  இப்ப  பண்ணுவா”, என்று சந்திரிகா விடம்   சொல்லி விட்டு அறைக்குள் வந்து கதவை அடைத்தான்   அர்ஜுன். அணு அப்பா சொன்னதை சந்திரிகா விடம்   கேக்கும் அளவுக்கு கூட அவனுக்கு பொறுமை இல்லை.
அவனுக்கு தனிமை வேணும். தனியாக அவளுடைய ஒவ்வொரு செய்கையையும் அசை போடணும். அவள் வீட்டுக்கு போனதும் போன் பண்ணுன்னு சொன்னதை கூட மறந்து கட்டிலில் குப்புற படுத்தான் அர்ஜுன்.
அவளை அந்த சுடிதாரில் பார்த்தது முதல் கொண்டு ஒவ்வொரு வினாடியையும் யோசித்தான்.
பைக்கில் அமர்ந்திருந்த போது, அவளுடைய நெருக்கத்தை இப்போது நடப்பது போல அனுபவித்தான். பைக்கில் அவன் முதுகில் பட்ட பெண்மையை உணர முயன்றான். அவளுடைய விரல் பட்ட இதழ்களை தன் விரலால் தொட்டு பார்த்தான்.
அந்த அளவுக்கு அவளுடைய செய்கையை இப்போது நடப்பது போல ஆழ்ந்து அனுபவித்தான் அர்ஜுன். அதுவே அவனுக்கு பெரும் சோதனையை கொடுக்க, “இதுக்கு தான் இந்த வயசுல பொண்ணையும், பையனையும் தனியா விட மாட்டிக்காங்க போல. என்னோட உணர்வுகள் பேயாட்டம் போடுதே. இன்னும் யோசிச்சேன்னா  மெண்டல்  ஆகிருவேன். படுத்துற டி அணு குட்டி. இதுக்கு மேல யோசிச்சா தாங்காது”, என்று புலம்பி கொண்டே குளிக்க சென்றான்.

சிறிது நேரம் ஷவரில் நின்றவனுக்கு உணர்வுகள் மட்டு பட்டது.
சிரித்து கொண்டே வெளியே வந்தவன் “வாழ்க்கையில் முதல் தடவை என்ன செய்யன்னு தெரியாம தவிச்சிருக்கேன் இவளால. இன்னும் ரெண்டு வருசம் தாக்கு பிடிக்க முடியுமா தெரியலை. அணு மா, எங்கயும் என்னை தனியா கூட்டிட்டு போகாத டி”, என்று புலம்பியவனுக்கு நாளைக்கு முழுவதும் அவளுடன் இருக்கேன்  என்று  சொன்னது  நினைவு வந்தது.
“ஐயோ , சத்தியமா முடியாது பா”, என்று சொல்லி கொண்டே அவளை போனில் அழைத்தான். அவள் குரல் தேன் போல் அவன் காதில் பாய்ந்தது. ” யோசிக்காத டா”, என்று கண்ட்ரோல் செய்து விட்டு அவள் பேச்சை கவனித்தான்.
“சொல்லு அஜ்ஜு”, என்று வாயில் மிச்சரை போட்டு கொண்டே கேட்டாள் அணு.
“இல்லை வீட்டுக்கு வந்துட்டேனு சொல்ல தான் போன் செஞ்சேன்”
“லூசு, நீ போய் முக்கா மணி நேரம் ஆகிட்டு. இப்ப தான் போன் செய்ற?”
“உனக்கு எப்படி தெரியும்?”
“அத்தை தான்  போன்  செஞ்சாங்க டா”
“ஓ குளிச்சிட்டு பண்ணலாம்னு நினைச்சேன்”
“சரி டா. காலைல எப்ப கிளம்ப? எங்க போறோம்? ஒண்ணுமே  சொல்லாம  போய்ட்ட?”
“அணு நான் சொல்றதை கேப்பியா?”
“சொல்லு அஜ்ஜு”
“நாளைக்கு எனக்கு முக்கியமான வேலை இருக்கு. ஆபிஸ் விசயமா பேச போகணும். அதனால இன்னொரு நாள் போகலாம் சரியா?”
அவளிடம் இருந்து பதில் இல்லை.
“என்ன அணு அமைதியாகிட்ட? முக்கியமான வேலை அதான்”
“என்னை உனக்கு பிடிக்கலைல அர்ஜுன்?”
“லூசு அப்படி எல்லாம் இல்லை. ரொம்ப பிடிக்கும். ஆனா முக்கியமான வேலை அதான்”
“நிஜமா வா?”
“ஆமா அணு”
“சரி. இன்னொரு நாள் போகலாம். ஆனா ஒரு கண்டீசன்”
“என்னது அது?”

“என்னை டி சொல்லி கூப்பிடு. என் பிரண்ட்ஸ் எல்லாம் என்னை அப்படி தான் கூப்பிடுவாங்க. நீயும் கூப்பிடு”
“எதுக்கு? அதெல்லாம் வேண்டாம்?”
“நான் மட்டும் டா சொல்றேன்ல? கூப்பிடு டா”
“அதெல்லாம் முடியாது. அது நான் என்னோட பொண்டாட்டியை மட்டும் தான் டி சொல்லி கூப்பிடுவேன். வேற  எதுவேனாலும் கேளு செய்றேன்”
“சரி அர்ஜுன். வேற ஒண்ணும் இல்லை. குட் நைட்”
“என்ன அதுக்குள்ள போற? கதை சொல்லலை”
“அணு மூட் அவுட். சோ போறா. பை”, என்று சொல்லி வைத்து விட்டான்.
அவளை கஷ்ட படுத்தி விட்டோமே என்று அர்ஜுன் தான் தவித்து போனான். “என்னோட மனசை அலை பாய விட்டுட்டு, அவளை நோகடிச்சிட்டேன் . சமாதான படுத்திறலாமா?”, என்று யோசித்தான்.
அடுத்த நொடி “சமாதான படுத்துனா, நாளைக்கு அவ கூட போகணும். ஒரு மணி நேரத்துக்கே தாங்க முடியலை. ஒரு நாள் முழுவதும்னா தாங்கவே செய்யாது”, என்று சொல்லி விட்டு பதினொன்னே முக்காலுக்கு அலாரம் வைத்து விட்டு படுத்தான்.

அது சரியான நேரத்தில் அடிக்க, தூக்க கலக்கத்தில் அதை அனைத்தவன் அவளை அழைத்தான். ரெண்டு தடவை அழைத்து எடுக்காமல் மூணாவது தடவை யும்  அவளை  அழைத்தான் அர்ஜுன். 
அவள் எடுக்கவும் பன்னிரெண்டு ஆகி ஒரு நிமிசம் ஆகவும் சரியாக இருந்தது.
“என்ன அர்ஜுன்?”, என்று தூக்க கலக்கத்தில் கேட்டாள் அணு.
“ஹேப்பி பர்த்‌டே அணு மா “, என்று தன் முதல் வாழ்த்தை சொன்னான் அர்ஜுன்.
அவள் தூக்கம் பறந்தோடியது. “அஜ்ஜூஊஊஊஊஊ”, என்று சந்தோசமாக அழைத்தாள் அணு.
“என்ன அணு?”
“அப்பாவும் நானும் பர்த்‌டே அன்னைக்கு தான் செலிபிரேட் பண்ணுவோம்.  இப்படி எல்லாம் நடு ராத்திரில விஷ் பண்ண மாட்டோம். பிரண்ட்ஸ்சும் எனக்கு அந்த அளவுக்கு கிடையாது. அதனால அவங்களும் முழிச்சிருந்து எல்லாம் விஷ் பண்ண மாட்டாங்க. இப்படி நாள் பொறந்த உடனே விஷ் பண்ணது நீ மட்டும் தான் அஜ்ஜு. தேங்க் யூ, தேங்க் யூ சோ மச்”
“இதுக்கெல்லாமா  தேங்க்ஸ்? சரி தூக்கத்தில எழுப்பிட்டேன். காலைல பேசுறேன். தூங்கு சரியா?”
“அர்ஜுன்”
“என்ன மா”
“மிஸ் யூ சோ மச்”
“நானும் தான். தூங்கு டா அணு. காலைல கால் பண்றேன்”, என்றான் அர்ஜுன்.
உருகுதல் தொடரும்…..

Advertisement