Advertisement

அத்தியாயம் 9
யாழிசைக்கு இது முதல் விமானப் பயணம். ஏன் விமானத்தையே! இன்று தான் முதல் முதலாக நேரடியாக பார்க்கின்றாள். இராச்சத மீனின் வயிற்றுக்குள் இருப்பது போல் பிரம்மை தோன்றி மனதில் பயப்பந்தும் உருள ஆரம்பித்தது. ரிஷியின் கையை தனது கையால் இறுக பற்றிக்கொண்டு கண்களை மூடி கடவுளை அழைக்கலானாள். 
அவளை பார்த்த ரிஷிக்கோ சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வர “ஏய் பட்டிக்காடு. இங்க பாரு” யாழிசையின் புறம்  சாய்ந்து அவளை அழைக்க கண்களை பட்டென்று திறந்தவள் 
“நா ஒன்னும் பட்டிக்காடில்ல, எங்க ஊரு நல்லாத்தான் இருக்கு” முகத்தை சுருக்கியவாறே சொல்ல 
“ஊரு நல்லாத்தான் இருக்கு நீ தான் அசமஞ்சமா இருக்க, வீட்டுல இருந்து வரும் போது அழுது, அழுது உங்க ஊரையே! வெள்ளத்துல மூழ்கடிச்சிட்டு, ஏர் போர்ட்டுக்குள்ள நுழஞ்சத்திலிருந்தே! “பே….” னு வாய தொறந்து பாத்து கிட்டு நின்ன,  அப்பொறம் ப்லைட்டு ஏறும் போது பயந்து நடுங்கின, இப்போ கண்ண மூடி எந்த சாமிய கூப்டுற? கூப்பிட உடனே! வந்துடுவாரா” கிண்டலும் கேலியுமாக சொல்ல அவனை பாவமாக பார்த்தாள் யாழிசை. 
“அங்க பாரு” என்று ஜன்னலினூடாக வெளியே காட்ட விமானம் மேலெழுந்து பறந்து கொண்டிருப்பதால் மேகக்கூட்டத்தில் மோதியவாறு பயணிக்க, யாழிசை ஆனந்தமாக அக்காட்ச்சியை பார்க்கலானாள். 
“என்னங்க. என் பயம் போகணும்னு தானே! இப்படியெல்லாம் பேசுனீங்க? எனக்குத் தெரியும் சினிமால இப்படித் தான் ஹீரோ ஹீரோயின் கிட்ட சொல்வாரு” கண்கள் மின்ன அவனிடம் தான் பார்த்ததை பகிர 
“உண்மைய சொன்னா லூசு மாதிரி பேசுறாளே!” மனதுக்குள் அவளை அர்ச்சித்தவன் “விட்டா பேசியே சாகடிப்பா” மெளனமாக கண்களை மூடிக்கொள்ள யாழிசை மேகக்கூட்டங்களை ரசிக்க ஜன்னலின் புறம் திரும்பினாள். 
என்னதான் கிண்டல் அடித்தாலும்  ரிஷியின் கையோ யாழிசையின் கையை பற்றிப் பிடித்திருந்ததை அவன் உணரவே இல்லை. கண்களை மூடிக் கொண்டவனின் சிந்தனையில்  ப்ரதீபனிடம் அவன் பேசியவைகள் மனக்கண்ணில் தோன்றியது. 
“என்ன ரிஷி கொஞ்சம் நாளாவே! ஒரு மாதிரியா இருக்க. வாட் இஸ் ஈட்டிங் யு?” பிரதீபன் ரிஷியின் தோளில் கைவைத்து கேக்க 
“எ லிட்டில் பியூட்டி ஏஞ்சல் ஈட்டிங் மீ” என்று ரிஷி கண்ணடிக்க, 
பெண் என்றதும் முகத்தை சுளித்த பிரதீப் “ஏண்டா கண்ட கழிசடை பின்னாடியெல்லாம் அலையுற?” பல்லைக் கடித்தான் பிரதீப் என்று பலரால் அழைக்கப் படும் பிரதீபன். 
“டோன்ட் நோ. காசுக்கெல்லாம் மடியமாட்டா சோ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” ரிஷி யோசனையாக சொல்ல அதிர்ச்சியடைவது பிரதீப்பின் முறையானது. 
“டேய் என்னடா சொல்லுற? பொம்பளைங்களால நாம பட்ட கஷ்டம் போதாதா? ஏதோ உலகத்துல இல்லாத சுகம் அவளுங்க மடில எங்குறத போல அவளுங்கள நாடுற. கருமம் போதாதுக்கு கல்யாணம் வேற பண்ணி என்னடா?” ரிஷியிடம் என்ன கேட்பதென்று புரியாம புலம்ப 
“சந்தர்ப்பம் சூழ்நிலை கல்யாணம் பண்ணும் படியாகிருச்சு. ஒரு வார…..ம் ஒரு வாரம் நல்லா என்ஜோய் பண்ணி அவளை அவ வீட்டுலயே! விட்டுட்டு வந்துட்டேன்” ஏதோ கின்னஸ் சாதனை பண்ணியது போல் ரிஷி பெருமையடிக்க
“அதான் விட்டுத் தொலைச்சியே! மறுபடியென்ன” கண்களை சுருக்கியவாறே பிரதீபன் ரிஷியை ஏறிட
“ஐ நீட் ஹேர் அகைன்”  கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவன் தீவீரமாக சொல்ல
“லூசா நீ” என்று ரிஷியை நன்றாக பிரதீபன் முறைக்கலானான். ரிஷி பெண்களை நாடினாலும் பிரதீபன் திரும்பியும் பார்க்காத ரகம். 
ப்ரதீபனின் தாயும் தந்தையும் காதலித்து வீட்டையெதிர்த்து திருமணம் செய்தவர்கள். காதலிக்கும் போது இருந்த இனக்கவர்ச்சி கல்யாணத்தின் பிறகு கஷ்டத்தில் கரைந்தோட சதா சண்டையும் சச்சரவுமாக ப்ரதீபனின் ஐந்து வயது வரை தொடர பெற்றவர்களின் கோபம் அவன் மேல் அடியாக விழ அந்த பாலகன் அழுவதற்கு  கூட அஞ்சியவாறு நாட்களை கடத்தினான். 
அன்னை புதிய காதலனுடன் காணாமல் போக தந்தை வேறொரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வர சித்தியின் கொடுமைகளை பத்து வயது வரை தாங்கியவன் வீட்டை விட்டு வெளியேறினான். பசி மயக்கத்தில் மோகனசுந்தரத்தின் வண்டியின் முன் விழுந்தவன் தான் இன்று ரிஷிக்கு உறுதுணையாக இருக்கிறான். 
பெண்கள் என்றாலே! கருணை காட்டாதவன். அற்ப ஜந்துவை பார்ப்பது போல் பார்ப்பவன்.  ரிஷி ஆபீசில் அடிக்கும் கூத்து தெரிந்தாலும் கண்டும் காணாதது போல் இருப்பவன், ரிஷி ஒரு பெண்ணை மணந்தான் எனும் பொழுது அவளால்  ரிஷிக்கு ஏதாவது ஆபத்து வருமோ என்றஞ்சியவன். அவளை விட்டு விட்டு தான் வந்தேன் என்று சொன்ன போது நிம்மதியடைய மீண்டும் அவளை நாடி போகணும் என்பவனை என்ன செய்வதாம்? 
“ரிஷி லுக் அட் மீ. பொண்ணுங்க சகவாசம் நமக்கு வேணா சொன்னா கேளு” 
“லுக் ப்ரோ ஆசை அறுவது நாள் மோகம் முப்பது நாள்னு சொல்லுவாங்கல்ல இருந்துதான் பாக்குறேன்!” சவால் விடுவது போல் கூற 
தலையில் அடித்துக் கொண்டவன்  “வாட் இப் ஷி கெட்ஸ் ப்ரெக்னன்ட்?”
“ஆமால்ல” தாடையை தடவியவாறே யோசித்தவன் அவனுக்கு தெரிந்த டாக்டரையழைத்து வேண்டிய தகவல்களை பெற்றுக் கொண்டான். 
அதன் பின் தான் யாழிசையை அழைத்துவர இலங்கைக்கு பயணமானான். 
 
அவன் வாங்கிய வீட்டை யாழிசையின் பெயரில் மாற்றி யோகராஜின் கையில் ஒப்படைத்தான். அங்கே அவர்களை தங்கும் படி சொல்ல 
“இல்ல மாப்புள வாடகைக்கு விடுறோம். நமக்கு இந்த சின்ன வீடு போதும்” மங்கம்மா பாய்ந்து சொல்ல 
“உங்க இஷ்டம்” என்றவன் கணிசமான ஒரு தொகையை கையிலும் கொடுத்து விடைபெற்றான். யாழிசை அழுது கரைந்தவாறே விடை பெற விமானநிலையத்துக்கும் யாரையும் அவன் அழைக்கவில்லை.
அவனை பொறுத்தவரையில் பணம் கொடுத்து யாழிசையை வாங்கியாச்சு, அவள் பார்க்கும் வேலைக்கு சம்பளமும் கொடுத்தாச்சு இனி அவனின் உறவு யாழிசையோடு மாத்திரமே!   
மாறி மாறி அனைவரும் அழுது கரையவே! “விமான நிலையத்திலும் அழுகாச்சி சீனா முடியாது” மனம் வெறுத்தவன் ஏதேதோ காரணம் கூறி அவர்களை வரவிடாது யாழிசையுடன் கிளம்பி இருந்தான்.
சீதா யாழிசையை அழைத்துச் சென்று இத்தனை வருடங்களாக அவள் பத்திர படுத்தியிருந்த இரண்டு பொருட்களையும் யாழிசையின் கையில் கொடுத்தவள் புத்திமதிகளை சொல்லியே கட்டியணைத்து உச்சி முகர்ந்து விடை பெற்றாள்.  
மும்பை விமானநிலையத்தில் விமானம் தரையிறங்க,  விமானத்தில் இருந்து இறங்கியவர்கள் ரிஷியின் ஓட்டுனர் வண்டியோடு நிற்க வண்டியில் ஏறியிருந்தனர். ஓட்டுனரிடம் ஹிந்தியில் ஒரு மருத்துவமனையின் பெயர் சொல்லி போகும் படி சொல்ல ஓட்டுனரும் வண்டியை கிளப்பினான். 
“ஹாஸ்பிடல் எதுக்கு போறோம்” யாருக்கு என்னவாகிற்று என்று பயந்தவாறே யாழிசை கேக்க 
“கொஞ்சம் பேசாம வா” கடிந்தவாறே சொன்னவன்  “ஒருவாரம் பகல், இரவு பாரமா, நேத்து கூட பொறுமை இல்லாம பிரேக்னன்ட்டான என்ன செய்வது?”  தலையில் கைவைத்து யோசித்துக் கொண்டிருந்தவன் கொஞ்சமேனும் இறக்க பாசமில்லாமல் “அழிச்சிட வேண்டியதுதான். ஒத்துப்பாளா? எப்படி ஒத்துக்க வைக்கிறது” மனதுக்குள் பிரளயமே வெடித்துக் கொண்டிருக்க  
அதையறியாமல் யாழிசை கேள்வி கேட்க ரிஷி அவளின் முகத்திலடித்தது போல் பேச யாழிசையின் கண்களிலிருந்து கண்ணீர் முணுக்கென்று எட்டிப் பார்த்தது.
கணவன் எல்லாவற்றையும் தன்னிடம் பகிர வேண்டும் என்று யாழிசை எதிர் பார்க்கவில்லை. அவன் கலங்கி, பதற்றத்தோடு இருக்கவே அவளுக்கும் அந்த பதற்றம் தொற்றிக் கொள்ள கேட்டு விட்டாள்.   அவன் எறிந்து விழுவான் என்று எதிர்பார்க்கத்தவளின் சிறு இதயம் அதை கூட தாங்காது நெஞ்சம் அடைத்துக் கொள்ள, சோகம் தொண்டையை அடைக்க கண்களும் கலங்கியது. அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் ரிஷியும் இல்லை. அவனோ அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனமானான்.
ஒருவாறு மருத்துவமனைக்கு வந்து சேர முதலில் அவள் கர்ப்பமாக இருக்கிறாளா என்று பரிசோதிக்க, கர்ப்பம் தரிக்கவில்லை என்று பரிசோதனை முடிவுகள் வர நிம்மதி பெருமூச்சு விட்டான் ரிஷி. 
தனக்கு என்ன பரிசோதனை செய்கிறார்கள் என்றே யாழிசைக்கு தெரியவில்லை. கணவனை சந்தேகம் கொள்ளவும் அவள் மனம் இடமளிக்க வில்லை. அவனிடம் கேட்கவும் பயமாக இருக்க மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள். 
“மிஸ்டர் ரிஷி இந்த இன்ஜெக்சன போட்டா மூணு மாசம் கருத்தரிக்காது அதுக்கு பிறகு மீண்டும் போடணும்” டாக்டர் விலாவரியாக ஹிந்தியில் அவனுக்கு புரியவைக்க முகம் மலர்ந்தான் ரிஷி. 
பாவம் யாழிசைதான் பாஷை புரியாமல் கணவனையும், டாக்டரையும் மாறிமாறி பார்த்துக் கொண்டிருக்க தாதியொருவரையழைத்து அவளுக்கு ஊசியேற்றுமாறு சொல்ல அவரும் அவர் பணியை செய்யலானார். 
“ஊசியா? எதுக்கு” மிரட்ச்சியோடு ரிஷியை ஏறிட 
“நல்லவேளை இவளுக்கு ஹிந்தி தெரியல சமாளிப்போம்” என்று உள்ளுக்குள் குஷியானவன் “அது நீ தேசம் விட்டு வேற தேசம் வந்திருக்க, இங்க சூழ்நிலைக்கு உன் உடம்பு தாக்கு பிடிக்கணுமில்ல. அதுக்குதான்” 
“இதுக்கு எதுக்கு ஊசி. நல்லா சாப்டாவே சரி” ஊசி போடுவதை மறுக்க ரிஷியின் முகம் கோபத்தில் சிவந்தது. 
அவனின் சிவப்பேறிய கண்களை கண்டு உள்ளுக்குள் குளிரெடுக்க “இல்ல எனக்கு ஊசினா பயம்” திக்கித்திணறி பயந்தவாறே சொல்ல அந்த கல்நெஞ்சக்காரன் கொஞ்சமேனும் மனமிளகாமல் 
“நீ என்ன பச்ச குழந்தையா?  கைய அவங்க பக்கம் நீட்டிட்டு என் கண்ண பாரு” கொஞ்சம் அதட்டலாக சொல்ல யாழிசையும் அவ்வாறே செய்தாள். 
ஆறுதலாக அவன் அவளை பற்றிப்பிடித்திருந்தால் கூட பொறுத்திருப்பாள். ஊசியின் வலியை விட அவனின் கோபம் வலிக்க பல்லைக்கடித்து பொறுமைகாத்தாள் யாழிசை. 
அதன் பின் அவளை அழைத்துக்கொண்டு மீண்டும் விமானமேறியவன் தரைவழியும் பயணித்து ஊட்டியை  வந்தடைந்தான். அது அவர்களின் இரண்டாவது தேனிலவுப் பயணமாக இருந்தது.
புதிதாக வாங்கிய தேயிலை தோட்டம் அமைந்துள்ள நீலகிரியில் உள்ள விருந்தினர் இல்லத்துக்கு யாழிசையை அழைத்து வந்திருந்தான் ரிஷி.                  
“என்னங்க ஊட்டில நுவரெலியால மாதிரி பூவெல்லாம் இருக்கே எங்க இருக்கு கூட்டிட்டு போங்களேன்” யாழிசை கெஞ்சிக் கொண்டிருக்க 
“முதல்ல வந்த வேலைய பாக்கலாம் டி” யாழிசையை இழுத்து அணைத்தவன் அவன் வேலையை தொடர அவளின் ஆசைகள் பின்னுக்கு தள்ளப்பட்டன. 
அவளின் அருகாமையை மிகவும் ரசித்தான் ரிஷி. சொல்லிலடங்கா சந்தோசம் அவன் மனதை நிறைத்திருக்க முப்பொழுதும் யாழிசை ரிஷியின் அருகில் இருக்கும் படி பார்த்துக் கொண்டான். அவளை விட்டு ஒரு நொடியேனும் பிரிந்திருக்க அவனால் முடியவில்லை. அவன் செயல்களால் கவரப்பட்டு காதலில் கசிந்துருகி யாழிசை மயங்கி நிற்க,  
ரிஷியோ ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று மந்திரம் சொல்லிக்கொண்டிருந்தான். 
ப்ரதீபனும் ரிஷியை தொந்தரவு செய்யாது போகவே! அவன் ஆட்டம் அடங்கவே இல்லை.
யாழிசை கெஞ்சிக், கொஞ்சி அவன் சொல்பவற்றையெல்லாம் செய்ய ஒருவாறு ஊட்டியில் உள்ள விஜயநகரத்தில் எல்க் மலையின் சரிவுகளில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய ரோஜா தோட்டத்துக்கு யாழிசையை அழைத்து வந்தான் ரிஷி.
  கலப்பின தேயிலை ரோஜாக்கள், மினியேச்சர் ரோஜாக்கள், பாலிந்தாஸ், பாபகேனா, ஃப்ளோரிபூண்டா, ராம்ப்லர்ஸ், யாக்கிமோர் மற்றும் கருப்பு மற்றும் பச்சை போன்ற அசாதாரண வண்ணங்களின் ரோஜாக்கள் என வித விதமாக கண்டு ரசித்தவள், எல்லாவகையிலும் தனக்கு செடி வேண்டும் என்று அடம்பிடிக்க, 
“20,000க்கும் மேல வகை வகையான ரோஜாக்கள் இருக்கு டி, அதுக்கு பதிலா இந்த தோட்டத்தை அங்க கொண்டு போய்டலாம்” என்று நக்கலடித்தான். 
அதன் பின் ஊட்டி ஏரியின் விளிம்பில்  அமைந்துள்ள மான் பூங்காவுக்கு அழைத்து செல்ல, மானிடம் மயங்கியவள் மான் வளர்க்க ஆசைப்பட 
“மான் கறி நல்லா இருக்கும் டி. வளர்க்கவும் முடியாது, வெட்டவும் முடியாது” ஒரு பெருமூச்சு விட்டவாறே ரிஷி சொல்ல அவனை செல்லமாக முறைத்தாள் யாழிசை. 
யாழிசையின் அருகில் ரிஷியும் வெகுவாக மாறிப் போனான். உலகத்திலுள்ள  எல்லா செல்வத்தையும் கேட்டாலும் வாங்கி குவிக்க அவன் தார் நிலையில் நிற்க குழந்தையாய் அவள் கேட்க்கு ஐஸ், சோளப்பொரி, பஞ்சு மிட்டாய் என்பவற்றில் அவன் மனம் மேலும் அவள் பால் உருகியது.  
நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லாமல் செய்து கொண்டிருந்த ரிஷியும் அவன் யாழிசையின் மேல் வைத்த காதலை உணரவே  இல்லை.
தெருவோர கடைகளில் சாப்பிட்டவாறே ரிஷியின் கையை பிடித்துக்கொண்டு ஊரை சுற்றலானாள். அங்கே தான் அவள் திவ்யாவை சந்தித்தாள். 
தெருவோர சின்ன சின்ன பூக்கடைகளில் வித விதமாக பூக்கள் விற்பனைக்கிருக்க, ரிஷியோடு நடந்தவள் அதை ரசிக்கலானாள். ரிஷியின் அலைபேசி இசைக்கவே அவன் அதில் மூழ்கி விட கண்களை சுழற்றிய யாழிசையின் கண்ணில் சிக்கினாள் திவ்யா.
குழந்தை முகம், மருண்ட பார்வை. ஏதோ கவலையில் மூழ்கியவள், பலத்த யோசனையில் விரல்களில் உள்ள நகங்களை சப்பியவள் துப்பிக்க கொண்டிருந்தாள். மழையை சுமந்த மேகம் போல் விட்டா அழுது விடுவேன் போல் இருந்தது அவள் முகம். 
நீண்ட பாவாடையும் அதற்கேத்தால் போல் சட்டையும் குளிருக்கு ஏற்ற மேல் சட்டையும் போட்டிருந்தவள், முதுகு வரை இருந்த முடியை விரித்து போட்டு  ஹேர் பேண்ட் வைத்து முகத்தில் விழாதவாறு தடுத்திருந்தாள். பார்க்க பதினாறு தாண்டாமல் துருதுவென்று, அழகாய் இருந்தாள்.  ஆனால் அவளோ இருவது வயது மங்கை.  
ஏனோ அவளை பார்த்ததும்  இயலையும், கமரையும் ஒன்றாய் பார்த்தது போல் தோன்ற அவளருகில் சென்ற யாழிசை 
“உனக்கு என்ன பிரச்சினை” அவளின் கண்களை பார்த்து கேக்க 
யாழிசையின் தோற்றமும், உரிமையான பேச்சும் அவளை பேசத்தூண்டியதோ! “பாட்டிக்கு ஆபரேஷன் பண்ணனும், இல்லனா செத்துடுவாங்க” என்றவள் கண்களில் இருந்து கண்ணீர் துளித்துளியாய் வழிய 
“அதுக்கு எதுக்கு கண்ண கசக்குற? வீட்டுல உள்ளவங்க பார்த்துப்பாங்க” யாழிசை தன்மையாக சொல்ல 
 
“வீட்டுல யாருமில்ல. நானும் பாட்டியும் மட்டும் தான். அவங்க செத்து போய்ட்டா நா அனாதையாகிவிடுவேன்” அழக்கூடாது என்று அவள் திடமாக இருக்க முயற்சி செய்தாலும் அவளை மீறி தொண்டையடைக்க கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.    
அநாதை என்ற ஒற்றை சொல் யாழிசையை அசைக்க திவ்யா உண்மை சொல்கிறாளா? பொய் சொல்கிறாளா? என்ற ஆராய்ச்சி ஏதும் பண்ணாமல் கையிலிருந்த இரண்டு வளையல்களையும், கழுத்தில் இருந்த மாலையையும்  கழட்டியவள் திவ்யாவின் கையில் வைத்து 
“இதவச்சி பாட்டிக்கு மருந்து செய்” வேற எதுவும் யாழிசையின் வாயிலிருந்து வரவில்லை. 
“ஐயோ இல்லக்கா” திவ்யா மறுத்து பேச வாய் திறக்க 
“இது என் வீட்டுல போட்ட நகை, யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. நீ பாட்டிய பாரு” என்ற யாழிசை வேறேதும் பேசாமல் ரிஷி இருக்கும் இடத்துக்கு சென்றாள். 
ரிஷி செய்வது நகை வியாபாரம் என்றாலும், மனைவி என்ன நகை போட்டிருக்கின்றாள் எல்லாம் ஆராய்பவனல்ல. மொத்தமாக வாங்கி கொடுத்தாயிற்று, போடுவது அவள் விருப்பம் என்று விட்டு விட்டான். 
பலனை எதிர்பார்க்காத தர்மம் எங்கு சென்றாலும் வாழ வைக்கும் என்பது யாழிசையின் வாழ்வில் நடந்தேருமென்பதை அவள் அறியவில்லை.  
இங்கே ரிஷியை அலைபேசியில் வசை பாடிக்கொண்டிருந்தான் பிரதீபன். 
“நீ கிளம்பி வர போறியா? இல்ல நான் எல்லாத்தையும் விட்டுட்டு எங்கயாவது ஓடிடவா?” பிரதீபன் மிரட்ட 
“வரேன்  டா.. வரேன்” நெற்றியை தடவியவாறே சொல்ல  
“நாளைக்கு நீ மும்பைல இருக்கணும் இல்ல சத்தியமா நா எங்கயாவது போய்டுவேன்” என்றவன் அலைபேசியை அனைத்திருக்க 
“சொன்ன படியே செஞ்சு தொலைச்சுடுவானே! அப்பொறம் அவனை தேட நா வலை வீச வேண்டி இருக்கும்” என்று முணுமுணுத்த ரிஷி யாழிசை அருகில் வரவே அவளின் இடையில் கைபோட்டு அணைத்தவன் சேர்ந்து நடக்கலானான்.
பத்து நாட்கள் ஊட்டியில் கழித்து விட்டு யாழிசையை அழைத்துக் கொண்டு மும்பை வந்து சேர்ந்தான் ரிஷி. 
  

Advertisement