Advertisement

அத்தியாயம் 8
எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றமடையும் பெண்ணின் மனதில் மேலும் பாரம் ஏறிக்கொண்டாள் அவளின் நிலை? 
ரிஷி சென்று ஐந்து நாட்களாகி இருக்க, அவனின் அருகாமையும், வசீகர குரலும், சில்மிஷங்களும் இல்லாமல் தவிக்கலானாள் யாழிசை. சொல்லாமல் சென்றது கூட அவளின் மனதை பாதிக்க வில்லை. சென்றவனிடமிருந்து எந்த தகவலும் இல்லாது போகவே சதா கண்களில் கண்ணீர் வழிந்தவாறே இருந்தாள் பாவையவள். 
அவன் விட்டுச் சென்றிருந்த அவனது சில பொருட்களே அவளுக்கு துணையாகின, அவைகளுடனையே பேசியவாறு பொழுதை கழிக்கலானாள். 
“என்னங்க மாப்புள போனது, போனதே தான் எந்த தகவலும் இல்லையே!” மங்கம்மா கவலையாக யோகராஜை ஏறிட 
  
“சரியாக விசாரிக்காமல் செல்ல மகளை கட்டிக் கொடுத்துட்டோமோ! ஏமாத்துகாரனா இருப்பானோ! என் பொண்ண ஒரேயடியா விட்டுட்டு போய் இருப்பானோ!” ஒரு தந்தையாய் கவலைக்குள்ளான யோகராஜின் மனமோ! 
“ஏமாத்துக்காரன் காச புடுங்கத்தான் பாப்பான். செலவு பண்ண மாட்டான். போன இடத்துல மாப்புளைக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமோ!” மனம் அப்படியும் இப்படியும் மாறி மாறி அலைக்கழிக்க என்ன பதில் சொல்வதென்று புரியாமல்  மௌனம் காக்கலானான் யோகராஜ். 
“இந்த இளா பய யாழ கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு தெரிஞ்சு தான் உங்கக்கா, அவசரமா கல்யாணம் பண்ண நாள் பாத்தாங்க. கடைசில யாருன்னே தெரியாத ஒருத்தருக்கு பொண்ண கட்டிக் கொடுத்துட்டோமே! யாழ பாக்கவே முடியலைங்க, அழுது கிட்டே இருக்கா, போனவர் ஒரு போன் செய்ஞ்சி அங்க நிலைமையை சொல்லணும் இல்ல” ஆதங்கமாகவே மங்கம்மாவின் குரல் ஒலிக்க
அறையிலிருந்து எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த யாழிசை “நாம அழுது எல்லாரையும் கஷ்டப்படுத்துறோமா? அவரு ஏதாவது  வேலைலமாட்டி போன் பேச கூட நேரமில்லாம இருக்கும். நா தான் புரிஞ்சிக்காம சும்மா அழுது கிட்டே இருக்கேன்” தன்னை தானே சாமாதானப் படுத்திக் கொண்டவள்
சுருண்டு படுத்திருந்த கட்டிலை விட்டு இறங்கி அறையை ஒழுங்கு படுத்தி விட்டு நல்லதொரு சுடிதாரோடு குளியலறைக்குள் புகுந்து குளித்து விட்டு வந்தவள் சீதாவை காணவென சீதாவின் வீட்டை நோக்கி கொல்லைப்புறம் வழியாக சென்றாள். 
வாழ்க்கையில் எதிர்பாராதது நடக்கும் போதுதான் சுவாரஸ்யம் கூடும் என்பார்கள். சிலவிஷயங்கள் மனக்கஷ்டத்தையும், மனக்கசப்பையும் மாத்திரமே கொடுக்கும். 
 “மாப்புளைய என் பையனா ஏத்துக்கிட்டு தான் டி உன்ன கல்யாணம் பண்ணி வச்சேன். நீ எனக்கு பொறக்காத பொண்ணு டி. பாவம் என்ன வேலைல மாட்டிக்கிட்டாரோ வந்துடுவாருடி, நீ இப்படியே அழுது கிட்டு இருந்தா அவர் வந்து எங்களைத்தான் ஏசுவாரு” {திட்டுவான்}  சீதா வந்து எந்தநாளும் யாழிசையை ஆறுதல் படுத்தி விட்டு செல்பவள் தான் 
ஏனோ மனம் சமாதானம் அடைந்த உடன் சீதாவை காண வேண்டும் போல் இருக்க, யாழிசை அங்கு சென்றாள். அவள் செல்லாமல் இருந்திருக்கலாமோ! 
கொல்லைப்புற கதவு திறந்திருக்கவே “அத்த” என்று அழைக்க போனவள் உள்ளே இளவேந்தனின் குரல் கேக்க மௌனமானாள். 
“ஐயோ உள்ள சிடுமூஞ்சி இருக்கான் போலயே! உள்ள போனா முறைச்சிக்கிட்டே திரிவான்! யாழ் இப்படியே வீட்டுக்கு நடையை கட்டு” மனம் கூவ அடுத்த அடி எடுத்து வைக்க போனவள் அவள் பேர் அடிபடுவதை கேட்டு அங்கேயே நின்று விட்டாள். 
“சில ஜென்மங்களுக்கு நல்லவங்க யாரு கெட்டவங்க யாருனு பிரித்தறிய தெரியிறதில்ல” சீதா இளக்காரமாக பேச 
“அம்மா அமைதியா இருமா. அதான் யாழுக்கு நல்லபடியா கல்யாணம் ஆகிரிச்சில்ல” தனவேந்தன் அன்னையை சமாதானப்படுத்த. 
“மனசு ஆரல  டா. என் பொண்ணா அவள பாத்துக்கணும் னு ஆச பட்டேன். நடக்காம போச்சே. மஹாலக்ஷ்மி  டா அவ. தொட்டதெல்லாம் துலங்கும். அவளை போய் வேணான்னு சொல்லிட்டு, நாம இருக்கோமா? செத்தோமான்னு திரும்பியும் பாக்காத இடத்துல பொண்ணெடுக்கணுமாமே! யார் போய் பொண்ணு கேக்க போறா? நான் போக மாட்டேன் என்னால அசிங்கப்பட முடியாது” சீதா இறுகிய குரலில் கூற 
“அத்த வீட்டுக்கு போய் சாந்தியை பொண்ணு கேளுங்க” என்று இளவேந்தன் சொல்லும் போது தான் யாழிசை வந்திருந்தாள். 
சீதா மனதிலுள்ள ஆதங்கத்தை வார்த்தைகளாக்கி தனவேந்தனிடம் கொட்டிக் கொண்டிருக்க,  
தனவேந்தன் மற்றும் அன்னையின் சம்பாஷணையை உள்ளறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த இளவேந்தன் கோபம் கணக்க அன்னையின் முன் வந்து 
“அதான் அந்த அநாத கழுதைய ஒரு அநாத பயலே! கல்யாணம் பண்ணிக்கிட்டானே! அப்பொறம் என்ன பேச வேண்டி இருக்கு. சாந்தியை எப்படி கல்யாணம் பண்ணனும்னு எனக்குத் தெரியும். அத பத்தி நீங்க கவலை படாதீங்க” பல்லை கடித்தவாறு சொல்ல சீதா அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள்.
வெளியே இளவேந்தன் சொன்னதை கேட்டு யாழிசை ஸ்தம்பித்து நிற்க, 
“யாரை பாத்துடா அநாதனு சொன்ன. அவ என் வீட்டு குலவிளக்குடா.. அவள பத்தி பேசின நாக்கை அறுத்து புடுவேன். உன்ன பெத்ததுக்கு கருவருத்திருக்கணும்” சீதா காளியாவதாரம்  எடுத்திருந்தாள். 
வேறெதுவும் பேசாது இளவேந்தன் கோபமாக சமயலறைக்குள் வர அங்கே நின்றிருந்த யாழிசையை கண்டு அதிர்ச்சியடைந்தான். சாந்தியை கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் போகுமோ! என்ற அச்சமும், அன்னை யாழிசையை புகழ்வதும் எரிச்சலை தர கோபத்தில் பேசியிருக்க அந்த நேரத்தில் யாழிசையை அவன் சத்தியமாக அங்கே எதிர்பாத்திருக்கவில்லை. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று பெரியவர்கள் சொன்னது சரிதான்.
இளவேந்தனுக்கு யாழிசையின் மேல் எந்த ஒரு ஆசையும் எப்போதுமே இருக்கவில்லை. மாறாக கோவமும் பொறாமையும் தான் இருந்தது. அதற்க்கு ஒரு காரணம் பெண் குழந்தைக்காக ஏங்கும் சீதா எப்பொழுதும் யாழிசையை கொஞ்சுவது. மறு காரணம் அப்பா வழி அத்தை பங்கஜம். 
சீதா சதா யாழிசையை கொஞ்ச அதை பங்கஜம் அவன் மனதில் “யாழ் ஒரு அநாத, அவளால தான் அம்மா உன்ன ஒதுக்குறாங்க” என்று வெறுப்பை  வளர்த்து விட மாமாவின் மூத்த பெண்ணின் மேல் வெறுப்பே வளர்ந்தது. வெவ்வேறு ஊரிலிருந்து வருடத்துக்கு ஒரு தடவை சந்தித்திருந்தால் இந்த எண்ணம் மாறி இருக்குமோ! கூடவே இருந்ததால் ஆசையோ! ஆர்வமோ! வரவே இல்லை. 
பிஞ்சுமனத்தில் விதைக்கப் பட்ட நஞ்சு நாளாக நாளாக வளர்ந்து பொறாமையாக எரிந்துக் கொண்டிருக்க, யாழிசையை காணும் போதெல்லாம் மண்டையில் கொட்டுவதும், அடிப்பதும் தொடர அப்பாவியான யாழிசை அழுது கரைய இயலிசை இளாவுடன் சண்டைக்கு நிற்க்க மாமா பொண்ணுங்க மேல் துவேசத்தை வளர்த்துக் கொண்டவன் இகழ்ச்சியாக பார்க்கலானான்.  
யாழிசை வயதுக்கு வந்த பின் இளவேந்தனுடன் எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் இருந்தாலும் ஏனோ யாழிசையை பிடிக்காமல் போன ஒரே காரணத்துக்காக அவளை தனியாக சந்திக்க நேர்ந்தால் இளவேந்தன் வார்த்தைகளால் குதறியெடுக்க தவறவில்லை. இயலிசை அவனை முறைத்தவாறு திரிந்தாலும், அக்காவை கட்டிக்க போறவன் என்று அறிந்த பின் அவனிடம் எந்த வம்புக்கு போகாமல் மரியாதையாக ஒதுங்கி  இருக்க, அக்காவை அவன் வார்த்தையால் வதைப்பதை அறியத்தவறினாள். 
தான் என்ன பிழை இளைத்து விட்டேன் என்று அறியாமளையே யாழிசை இளவேந்தனுக்கு எதிரியாகிப்போக, யாழிசை யாரிடமும் இதை பற்றி பகிராதது இளாக்கும் யாழிசைக்கும் வீட்டார் முடிச்சுப் போட,  அதுவே ரிஷி அவள் வாழ்வில் வர இடமளித்திருந்தது. 
இளவேந்தன் அடிக்கடி சாந்தியை சந்திக்கிறான் என்ற செய்தி சீதாவின் காதை எட்டவும் உடனே யாழுக்கும்  இளாவுக்கும் திருமணத்தை பண்ணவேண்டும் என்று சீதா முடிவெடுத்திருக்க,  நடந்ததோ! யாழ், ரிஷி திருமணம். எல்லாம் கடவுள் செயல் என்று இருந்த சீதாவால் யாழ் அழுது கொண்டு இருப்பது பிடிக்காமல் கோபத்தை மகன் மேல் காட்ட அவன் வார்த்தையை விட்டிருந்தான். 
“அப்போ  நான் அனாதையா? என் அப்பா எனக்கு அப்பா இல்லையா? என் அம்மா எனக்கு அம்மா இல்லையா? இயல், அத்த யாருமே! என் சொந்தமில்லையா?”  சமையலறை வாசப்படியிலையே! கால்மடித்து தரையில் அமர்ந்து யாழிசை விசும்ப 
“அதான் அம்மா என்ன விட இயலுக்கு அதிகம் செல்லம் கொடுக்குறாங்களா? அவளுக்கு மட்டும் பாத்து பாத்து பண்ணுறாங்களா?” எல்லாவற்றையும் நினைத்து குழம்பியவளின் கண்ணில் ரிஷியின் விம்பம் வர தன்னவனின் நியாபகம் மேலோங்கியது.
“எல்லாரும் இருந்தும் யாருமில்லாமல் போய்ட்டேன்! அப்போ அவர் நிலைமை என்னவா இருக்கும். யாருமில்லாம் எப்படி தனியா இருந்தாரோ!” அவள் நிலையையும் மறந்து ரிஷிக்காக கதறலானாள். 
யாரோ அழும் குரல் கேட்டு தனவேந்தன் வர யாழிசையை கண்டு சீதாவை அழைக்க, ஓடி வந்த சீதா அவளை தூக்கி உள்ளே அமர்த்தி 
“யாழ் எதுக்கு டி அழுது கரையிற, அதான் உன் புருஷன் வந்துடுவான்னு சொன்னேன்ல?” அவளின் கண்களை துடைத்தவாறே ஆறுதல் படுத்த 
“ஏன் அத்த நா அனாதையா? உங்க வீட்டு பிள்ளை இல்லையா? இளா அத்தான் பொய்தானே சொல்லுறாரு” வலி நிறைந்த முகமாய் கேக்க சீதாதான் அதிர்ச்சியடைந்தாள். 
யாழிசை ஒரு அனாதை என்று தம்பியின் மனதில் விஷத்தை ஏற்ற அவனோ “கோபத்தில் சொல்கின்றான்” என்று அண்ணனை கிஞ்சத்துக்கும் கண்டுகொள்ளவில்லை. அவனால் இன்று யாழ் அழுவதை பார்த்து,   தனவேந்தனுக்கு அண்ணன் மேல் கட்டுக்கடங்காத கோபம் வர அதிர்ச்சியின் யாழிசையை பார்த்தவாறே நின்றிருந்த இளவேந்தனை முறைத்தவன்
“லூசு மாதிரி பேசாத யாழ். அவன் ஒரு அரவேக்காடு அவன் சொன்னதை பெருசா எடுத்துக்கிட்டு” தனவேந்தன் இளையவனாக இருந்தாலும் அவளை அதட்ட 
சீதாவின் கையை பட்டென்று தனது தலையில் வைத்தவள் “என் மேல சத்தியம் பண்ணுங்க அத்த” யாழிசை பிடிவாதமாக கேக்க வாயடைத்து போனாள் சீதா.
சீதாவிடம் உண்மையை கேட்டறிந்த யாழிசை அடுத்து வந்த ஐந்து நாட்களும் தனக்காக அழுது கரையலானாள்.  
“பேசாம வெள்ளத்துலயே! நாம செத்து போய் இருந்திருக்கணும். எல்லாருக்கும் கஷ்டத்தை தவிர வேற எதுவும் கொடுக்கவே இல்ல, அவருக்கும் நம்மள புடிக்காம போய் தான் என்ன பாக்க வராம இருக்காங்களோ! ஒரு வேல நா அநாதனு தெரிஞ்சிதான் என்ன ஒதுக்கிட்டாங்களோ!” காயமடைந்த மனதை மேலும் ரணமாக்கிக் கொண்டிருந்தாள் யாழிசை. 
சரியான சாப்பாடில்லாமல், தூக்கமில்லாமல் சதா புலம்பியவாறே அறையை விட்டு வெளியே!  வராமல் இருக்க பயந்து போனாள் மங்கம்மா.
“என் பொண்ண இப்படி என்னால பாக்க முடியலையே! நா என்ன பண்ணுவேன். கடவுளே! நல்ல வழிய காட்டு” காலையும் மாலையும் கோவிலே! கதியென்று மங்கம்மா இருக்க, 
தன்னால் தான் யாழிசைக்கு இந்த நிலமையென்று சீதாவும் புலம்ப வீடே மரண வீடு போல் சோகத்தில் முழ்கி இருக்க அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் துக்கம் விசாரிக்காத குறையாக வீட்டுக்கு படையெடுத்து புறணி பேச, அவர்கள் பேசுவதை கேட்டு துடித்து போனாள் யாழிசை. வாழ்வதை விட சாவதே மேல் என்ற எண்ணம் தோன்ற சாவதற்கு தைரியம் தான் வரவில்லை. மாறாக கட்டிலே! கதியென்று அழுது கரைந்தாள். நாட்கள் நகர்ந்தாலும் வீட்டார் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு மாறிக் கொண்டிருக்க, யாழிசையிடம்  மாற்றம் எதுவுமில்லை. 
“வார்…. வார் பேபி” வண்டியிலிருந்து இறங்கிய ரிஷி கத்தாத குறையாக யாழிசையை அழைத்தவாறே வீட்டுக்குள் வர வாசலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த மங்கம்மாவும் யோகராஜும் ஆச்சரியத்துடன் முகம் மலர 
“வாங்க மாப்ள” யோகராஜ் எழுந்துக் கொள்ள,
“வாங்க” மங்கம்மா புடவை முந்தியை தோளில் போட்டவாறே முன்னறையில் பக்கம் நகர  
அவர்களை பொருட்படுத்தாது “வார்…. யாழ் எங்க” ரிஷி கத்தாத குறையாக யாழிசையை தேட அவனின் பரிதவிப்பான குரலில்,  முன் அறையில் படித்துக் கொண்டிருந்த இயலிசை எட்டிப் பார்க்க, 
அறையில் சோகக் கடலில் மூழ்கி இருந்த யாழிசை ரிஷியின் குரல் கேக்கவே! கனவோ என்று விழிக்க மீண்டும் அவன் குரல் காதில் தேனாய் பாய கதறியவாறே தாவி எழுந்து கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தவள் ரிஷியின் மார்பில் தஞ்சமடைந்து அழுது கரையலானாள். 
மங்கம்மா இயலிசையை இழுத்துக் கொண்டு முன் அறைக்குள் புகுந்து கொள்ள, யோகராஜ் வாசல் கதவை சாத்திக் கொண்டு வெளியேறினான். 
“எங்க போனீங்க, என்ன விட்டுட்டு எங்க போனீங்க” என்று கேட்டவள் கண்களில் நீர் வழிய  ரிஷியின் முகமெங்கும் முத்தமழை பொழிய, அவளை இறுக்கி தன்னோடு சேர்த்து அவளின் எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு அணைத்திருந்தான் ரிஷி வரதன்.
மும்பை சென்ற ரிஷிக்கு யாழிசை கிடைத்தது அவன் வாழ்க்கையில் அடைந்த மிகப்பெரிய வெற்றி என்றும். அவளோடு இருந்த ஒரு வாரத்தை இன்பமான கனவாக மீட்டிக்கொண்டிருக்க, சந்தோசமாக அவனின் வியாபாரத்தில் மூழ்கியவன், மூன்று நாள் கூட தாங்காது யாழிசை அவன் அருகில் வேண்டும் என்று அவனின் நாடி நரம்பெல்லாம் துடிக்க ஆரம்பித்தது. 
“சே என்னடா இது. அப்படியென்ன உலக அழகியா அவ? பாத்தேன் பிடிச்சிருந்தது அனுபவிச்சேன். விட்டுத் தொலையாம மனசு பூரா நிறைஞ்சி இம்ச பண்ணுறா. ரிஷி அடங்கி இரு ஷீ இஸ் எ பாசிங் க்ளவுட். ப்ரோகட் ஹேர்” தன்னையே கடிந்தவன் 
நிலுவையில் இருந்த வேலைகளையும் இரவு பகல் என்று பாராது செய்து கொண்டிருக்க, ப்ரதீபனும் அவனை கடிய புன்னகைத்தவன் யாழிசையின் நினைவுகளை துரத்த வழி தெரியாது தவிக்கலானான். 
தனக்குள் வந்திருக்கும் காதலை உணரத்தவறியவன் “அவளை தொட்டிருக்க கூடாது டா ரிஷி. இல்ல, இல்ல நீ அவளை பாத்திருக்கவே கூடாது. அவ ஒரு ராட்சசி. கொஞ்சம் கொஞ்சமா உன்ன ஆளணும்னு நினைக்கிறா” மூளை அவனுக்கு பலவிதமாக ஆலோசனை செய்ய தன்னை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று மட்டும் யோசிக்கலானான். 
காதல் ஒரு போதை அதில் மூழ்க, மூழ்க வெளியே வரவே முடியாதபடி சுழியாய் உள்ளேயே இழுத்துக் கொண்டு போகும் என்றறியாதவனோ! யாழிசை கிடைத்து விட்டால் அவளால் எழும் தாபம் அடங்கி விடும் என்று தவறான கணக்கு போட்டு அவளை கல்யாணம் என்ற பெயரில் அடைந்திருக்க, அந்தோ பரிதாபம் அவன் அவளுள் மேலும் மூழ்கிப் போனான். 
பத்து நாட்களை ஒருவாறு கடத்தியிருக்க இதற்க்கு மேலும் பொறுக்காது ப்ரதீபனிடம் பேசியவன் அவனின் அறிவுரையை ஏற்காது யாழிசையை காண இலங்கையை வந்து சேர்ந்தான். 
அவளின் முத்தங்களை கிறங்கி நின்றவன் எங்கே இருக்கிறோம் என்பதையும் மறந்து அவளின் இதழ்களை சுவைக்க மனதில் உள்ள பாரமெல்லாம் கரைவது போல் மேலும் அவள் வேண்டும் என்று தோன்ற அவளை கைகளில் ஏந்திய ரிஷி அறைக்குள் நுழைந்தான். 
கணவனை கண்டத்தில் மனக்கவலையும் தீர்ந்து போக அவனின் அருகாமையில் முத்தம் தந்த ஆறுதலில் கவலைகள் எல்லாம் தூர ஓடிப்போக  பந்தமாக அவனோடு அடங்கிப்போனாள் யாழிசை.
பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்ததால் காதல் பொங்கி வழிய முத்த சத்தம் அறைமுழுவதும் ஒலிக்க, ரிஷியின் தேடல்கள் யாழிசையிடம் அன்று போலவே புதிதாய், வேகமாய் அரங்கேற ஆனந்தக் கண்ணீரோடு கணவனோடு இழைந்தாள். 
அடுத்து வந்த நாட்களில் யாழிசை இந்தியா செல்வதற்கான கடவுச்சீட்டு மற்றும் விசா பெறப்பட்டு ரிஷியோடு மும்பை நோக்கி பயணிக்கலானாள். 
“என் வாழ்வில் இனி எல்லாம் நீதான்” என்றெண்ணிய யாழிசை ரிஷியை  பார்த்து புன்னகைக்க  
“ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் டி வார்… பேபி. அதுக்கு பிறகு என் வாழ்க்கையில் நீ தேவையில்லை” மனதில் நினைத்து உள்ளுக்குள் சிரித்தவன் கண் சிமிட்ட அவன் விம்பத்தை யாழிசை கண்களில் நிரப்பிக் கொண்டாள்.

Advertisement