Advertisement

அத்தியாயம் 7
அழகான ஊர், இதமான காலநிலை, காதலிக்க ஏற்ற சுகமான பொழுதுகள். மனதுக்கு பிடித்த பெண் எல்லாம் ஒரே நேரத்தில் அமைந்தால் வரம் தான்.     
அறை வாசலிலேயே ஹோட்டல் ஊளியர்களுக்கு காசை கொடுத்து அனுப்பி விட்டு ரிஷி யாழிசையை அணைத்தவாறே அறைக்குள் வந்து கதவை தாளிட்டான். 
அவ்வறை சின்ன வரவேற்பறையோடு இடது பக்கத்தில் குளியலறையும், வலது பக்கத்தில் படுக்கையறையுமாக மூன்று பகுதிகளை கொண்டதாக இருக்க, வரவேற்பறையில் ஜன்னல் கண்ணாடியினூடாக மழைமேகங்கள் மலையை முத்தமிடுவதை பார்த்து ஆனந்தமாக கூச்சலிட்ட யாழிசை துள்ளிக் குதிக்காத குறையாக ஜன்னலின் அருகே ஓடி இருந்தாள். 
குழந்தை போல் ஓடியவளை புருவம் உயர்த்தி வினோதமாக பார்த்த ரிஷி அவள் பின்னால் இருந்து “அப்படி என்ன இருக்கிறது” என்று பார்க்க அவனுக்கோ அதில் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. 
“என்னங்க இந்த ஜன்னலை திறக்க முடியுமா?” குழந்தை போல் கெஞ்சுபவளை தலையசைத்து தடுத்தான் ரிஷி. 
“நாம வந்திருக்கிறது டிசம்பர் மாதம். குளிர் அதிகமா இருக்கும். நீ தாங்க மாட்ட” சிரித்தவாறே சொல்ல முகத்தை சுருக்கிய யாழிசை மௌனம் காக்க
 
“இங்கயே இருக்க உத்தேசமா? அறை அங்கே இருக்கு” இரட்டை அர்த்தத்தில் கூறி அவளுக்கு அழைப்பு விடுக்க 
“சரி” என்று தலையசைத்தவள் அமைதியாக அவனை பின்தொடர்ந்தாள். அறையை அடைந்தவள் கண்களை விரித்து, அலங்காரத்தை வியந்து பார்த்தவள் “ரொம்ப அழகா இருக்கு” என்று சத்தமாகவே கூற அவளை வித்தியாசமாக பார்த்தான் ரிஷி. 
அறையில் படுக்கை நடுவிலும் சுவரில் மின் விளக்குகளுக்கு பதிலாக ஊதா நிற மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருக்க, லாவெண்டர் மலர்களின் இதழ்கள் அறைமுழுவதும் பறந்து மலர்களின் வாசம் அறையெங்கும் வீச தேனிலவுக்காகவென்றே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறை யாழிசையை  வேறு உலகத்துக்கே கொண்டு சென்றது. 
இப்படியெல்லாம் அவள் சினிமாவில் கூட பாத்திருப்பாளா? என்றால் சந்தேகம் தான். அவளின் வியப்பை தன் வசமாக்கிக் கொண்ட ரிஷி, யாழிசையின் பின்னாலிருந்து அணைத்துக் கொண்டு 
“பிடிச்சிருக்கா?” காதுமடல் உரச கிசுகிசுத்தவன் தாபமாக கேக்க 
“ரொம்ப பிடிச்சிருக்கு, ரொம்ப அழகா இருக்கு, ஹோட்டல் ரூம் எல்லாம் இப்படி தான் இருக்குமா? இதுதான் முதல் தடவ வரேன்” அதிகமாக பேசாத யாழிசை கூட வெகுளியாக வாய் திறந்தாள். 
சத்தமாக சிரித்தான் ரிஷி. அது அவளின் அறியாமையை நினைத்தா அல்லது “நா இல்லனா இந்த ஜென்மத்துல நீ இதெல்லாம் பாத்திருக்க மாட்ட” என்ற ஏளனமா? அவனே அறிவான். 
“உனக்காகத்தான். உனக்கு பிடிச்சிருக்கில்ல” என்றவாறே அவள் கழுத்து வளைவில் முத்தம் வைக்க ஒரு நொடியில் யாழிசைக்கு அன்று கோவிலில் வைத்து ரிஷி முத்தமிட்டது நியாபகத்தில் வரவே அவனை விட்டு விலக முயற்சித்தாள். 
அவள் விலக முயற்சிப்பது எரிச்சலை தர “தாலி கட்டி கூட்டிட்டு வந்திருக்கேண்டி” என்றவன் கோபமாக அவளை இழுத்து தன் புறம் திருப்ப அவனின் கோபக்குரலில் மலங்க மலங்க விழித்தாள் யாழிசை. 
“பாவமாய் அவனை பாத்திருக்க “இப்படி பாத்து பாத்தே என்ன கொல்லுறியே!  இப்போ என்ன பிரச்சினை உனக்கு” தன்மையாக ரிஷியின் குரல் ஒலிக்க 
உடனடியாக “ஒன்றும் இல்லை” எனும் விதமாக தலையசைத்தாள் யாழிசை.  
“டயடா இருக்கா?” 
“….”
“தூக்கம் வருதா?”
“…..”
“பசிக்குதா?”
“……” 
அவன் ஏன் கோபம் கொண்டான் என்று புரியாமல் அவன் திடிரென்று கேக்கும் கேள்விகளும் புரியாமல் யாழிசை குழம்பியவாறே அவனை பார்க்க
 
“விட்டா இவ லுக்கு விட்டு கிட்டே இருப்பா போலயே! எதுவானாலும் நாம இறங்கி அடிக்க வேண்டியதுதான்” உள்ளுக்குள் சிரித்தவன் அவளை விட்டு கட்டிலில் அருகில் இருந்த மேசையில் உள்ள அலைபேசியை கையில் எடுத்து  அலைபேசியலியாக குடிக்க சூடாக டி கொண்டு வரும் படி உத்தரவிட்டவன் 
“டி சாப்பிடுவல்ல” அதற்கும் யாழிசை பலமாக தலையாட்ட “இவள ஹாண்டல் பண்ணுறது ரொம்ப ஈஸியா இருக்கும் போலயே” கண்ணை சுருக்கி யோசித்தவன்
“போய் ரிப்ரெஷ்  பண்ணிக்க” என்றவன் கட்டிலில் அமர்ந்து கொள்ள தயங்கி தயங்கி அவனருகில் வந்தவள் 
‘நா ஏதாவது தப்பு பண்ணேனா?” பயந்தவாறே கேக்க தலை நிமிர்த்தி  அவளை பார்த்தவன் 
“வாட்” யோசனையாக அவளை ஏறிட்டு அவள் எதற்கு அப்படி கேட்டாள் என்று நொடியில் புரிந்துக் கொண்டு அவளின் கையை பிடித்து தனதருகில் அமர்த்திக் கொள்ள 
யாழிசையும் தயங்கியவாறே அமர்ந்து “என்ன சொல்வானோ” என்று ஏறிட்டாள். 
“லுக் உன் பேர் என்ன?”
“யாழிசை வார்குழலி” 
“வார்” {war} கம் அகைன் 
“யாழிசை வார்குழலி”
“ஹாஹாஹா நல்லா இருக்கு இனிமேல் உன்ன வார்…..னே கூப்பிடுறேன். ஆனா நீ தான் சைலண்டா இருக்க, சண்டையெல்லாம் போடுவியா?”
அவன் எதுக்கு சிரிக்கின்றான், என்ன சொல்கின்றான் என்று யாழிசைக்கு புரியாவிடினும் “கோபம் போச்சா?” முகம் மலர வினவ 
“கோபமா? உன் மேலயா? இன்னும் ஒரு வாரத்துக்கு நீ என்ன பண்ணாலும் உன்ன கோவிக்கவே மாட்டேன். வேணும்னா சத்தியம் பண்ணி கொடுக்கவா?” அவனின் இரட்டை அர்த்தங்களை புரிந்துக் கொள்ளாதவளோ! அவன் கூற்றில் குஷியாக டியும் வந்து சேர்ந்தது. 
ரிஷி எதிர்பார்த்தது அவன் கை தொடும் தூரத்தில். அவசர பட எந்த அவசியமும் இல்லாது இருக்க, அவன் புரிந்துக் கொண்டது யாழிசை ஒரு வெகுளி, அப்பாவி. அவள் குடும்பமும் பெரிதாக பிரச்சினை செய்யப் போவதில்லை. இந்த ஒரு வாரம் சொர்க்கமாக இருக்க போவது உறுதி. 
“டின்னெர் என்ன சாப்பிடுவ” 
“…..”
“உனக்கென்ன பிடிக்கும்”
யாழிசையிடம் யாருமே இப்படி கேட்டதில்லை. விதவிதமான உணவுகளும் அவளுக்கு தெரியாதே! என்ன சொல்வதென்று யோசித்தவள் 
“உங்களுக்கு என்ன சொல்லுறீங்களோ! அதையே சொல்லுங்க” 
“நா கொஞ்சம் ரம் சாப்பிடலாம்னு இருக்கேன். ஓகேவா” சாதாரண முக பாவத்தில் கேக்க யாழிசையும் “சரி” என்று தலையசைத்தாள். 
“சரக்குமா சரக்கு” ரிஷி சத்தமாக சிரித்தவாறே சொல்ல 
“நீங்க குடிப்பீங்களா?” அவனை பயந்தவாறே பார்க்க 
“ஆமாம், இல்லை” என்று இரண்டுவிதமாக ரிஷி தலையசைக்க யாழிசையின் கண்களில் அதிர்ச்சியும், பயமும் போட்டிப்போட 
அவளின் கோலிக்குண்டாய் உருளும் கண்களில் பயத்தை கண்டவன் “காரியத்தை கெடுக்காதடா ரிஷி” என்று மனதுக்குள் சொல்லியவாறே 
“சும்மா சொன்னேன். உனக்கு என்ன வேணுமோ அத தான் நீ சாப்பிடணும். மத்தவங்களுக்கு பிடிச்சதை அவங்க சாப்பிடுவாங்க சரியா?’ குழந்தைக்கு புரியவைப்பது போல் சொன்னவன் சத்தியமாக யாரிடமும் இப்படி பேசியதே! இல்லை. 
அவனின் கரிசனத்தில் யாழிசையின் மனம் அவன் பால் சாய கண்களில் காதலை நிறைத்து அவனை பாத்திருந்தாள். 
அவளின் காதல் பார்வையில் கவரப்பட்டு “கீழ போய் சாப்பிட்டுட்டு வரலாமா? இல்ல இங்கயே! கொண்டு வர சொல்லலாமா?” ஏனோ ரிஷியின் மனம் அவளுக்காக பார்த்து பார்த்து செய்யத் தூண்ட அவனையும் மீறி செய்து கொண்டிருந்தான். 
அதற்கும் யாழிசையை அவன் முகத்தையே! பாத்திருக்க “கெட் ரெடி” என்றவன் அவளின் தலையை தடவியவாறே சென்று குளியலறைக்குள் புகுந்திருந்தான். 
பொண்ணு பொருளும், கொட்டிக் கொடுத்தாலும் அடையமுடியாததை காதல் அடைந்து விடும். அவனின் இந்த செயலில் மொத்தமாக அவன் புறம் சாய்ந்தாள் யாழிசை.
அடுத்த அரை மணிநேரத்தில் இருவரும் ஹோட்டலில் இருந்த உணவகத்தில் இருக்க, யாழிசைக்கு என்ன வேண்டும் என்று கேட்டு, இது நல்லா இருக்கும் என்று சொல்லி வரவழைத்து அவளுக்கு பார்த்து பார்த்து பரிமாறலானான். 
“ரிஷி ஒரு பட்டிக்காட்ட மடக்க என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு, பாத்தியா?” மனசாட்ச்சி கைகொட்டி சிரிக்க, 
“இவள மாதிரி ஒருத்திய அடைய என்னவேனாலும் செய்யலாம் தப்பே இல்ல” மனசாட்ச்சியை குட்டியவன் அவளுடன் பேச்சு கொடுத்தவாறே சாப்பிடலானான். 
“வேறேதாவது வேணுமா?”
“என்ன ஹக்கல கார்டானுக்கு கூட்டிட்டு போறீங்களா?. அங்க பெரிய ரோஜா பூவெல்லாம் இருக்காம். என் பிரென்ட் கமர் ஸ்கூல் ட்ரிப் போன போது பாத்துட்டு வந்து சொன்னா” யாழிசையின் தயக்கமும் ரிஷியால் நீங்கி இருக்க, கண்களை சுருக்கி குழந்தை போல் கெஞ்ச 
“சாப்பிட ஏதாவது வேணும்னு கேட்டா, வேறேதோ கேக்குறாளே! பேபி தான் போ” மனதில் நினைத்தவாறே புன்னகைத்தவன் 
“அங்க கூட்டிட்டு போனா எனக்கு என்ன தருவ?” கைதேர்ந்த வியாபாரியாய் பேரம் பேச 
அவனையே பார்த்தவாறு யோசித்தவள் “ஐஸ் கிரீம் வாங்கித்தரேன்” என்று சொல்ல ரிஷிக்கு புரையேறியது. இப்படியொரு பெண்ணை அவன் வாழ்நாளில் சந்தித்தது இதுவே முதல் தடவை
“ஐயோ பாத்து, பாத்து” அமர்ந்திருந்தவள் உடனே எழுந்து அவன் புறம் சென்று தலையை தட்டியவாறே தண்ணீரை புகட்ட 
“தேங்க்ஸ்” என்றவன் அவள் கையை பிடித்துக் கொண்டு “ஐஸ் கிரீம் வேணா ஒரே ஒரு கிஸ் கொடுப்பியா?” காரியத்தில் கண்ணனாக அந்த கள்வன் கோரிக்கையை முன் வைக்க பெண்ணவள் தான் வெக்கிச் சிவந்தாள்.
ஒரு பெண்ணை எவ்வாறு அணுகினால்? அவளை நெருங்க முடியும் என்று நன்கறிந்திருந்த ரிஷிக்கு யாழிசையின் மனதை கொள்ளையடிப்பது பெரிய விஷயமாக இருக்க வில்லை. கிராமத்துக்காரி, அப்பாவி என்பதே அவனுக்கு போதுமாக இருக்க, அவனின் செய்கைகளால் அவளை மகாராணியாக உணர்த்தினான். கணவன் என்ற உரிமையை நிலை நாட்ட தாலியென்ற உரிமை அதிகாரம் போதுமாக இருக்க அவளை கட்டாயப்படுத்தி அடைவதை அவன் மனம் விரும்பவில்லை. அவள் இஷ்டப்பட்டு அவனை நாடி வரவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தான்.  கல்யாண செலவிலிருந்து அனைத்தையும் தனதாக்கியவன் ஒரே நாளில் மனதிலும் இடம் பிடித்திருக்க அவள் தயக்கமில்லாமல் அவனுடன் பேசுவதே யாழிசையை நெருங்க போதுமாக இருந்தது.
அறைக்கு வந்த உடனையே யாழிசையை கைகளில் ஏந்தி இருந்தான் ரிஷி. பயந்து அவன் தோள்களிலேயே! தஞ்சமடைந்தவள் கீழே இறக்கி விடும் படி கெஞ்ச, மஞ்சத்தில் அவளை படுக்க வைத்தவன் அவள் மேல் சரிய 
“நல்லா பயந்துட்டேன். ஏன் இப்படி பண்ணுறீங்க?” இன்னும் அவனை நெருங்கியவாறே யாழிசை கேக்க
“எனக்கு ஏதோ கொடுக்கிறதா சொன்னியே! இப்போவே கொடு” அவள் இடையில் கை போட்டு தன் புறம் இழுத்தவன் இடையில் கோலம் போட
இடுப்பில் ஊரும் அவன் கையை தன் கை கொண்டு தடுக்க முயற்சித்த வாறே “அது ஹக்கல கார்டன் கூட்டி போன பிறகுதான் கொடுக்க சொன்னீங்க இப்போவே இல்ல” குழந்தையாய் சிணுங்க அதை ரசித்தவன் பொறுத்தது போதும் என்று எண்ணினானோ! 
 
“அப்படியா? அப்போ நா இப்போ கொடுக்கவா?” கண்ணடித்துக் கூற 
திருதிரு என்று முழித்த யாழிசை என்ன பதில் சொல்வதென்று அவனை ஏறிட அவனோ! அவள் பதிலை எதிர்பார்க்காது அவளின் செவ்விதழ்களை தனது முரட்டு தடித்த உதடுகளால் சிறையெடுத்து முத்த யுத்தத்தில் களமிறங்கி இருந்தான். 
முத்தமிட்ட மொத்தத்தையும் கொள்ளையடித்து செல்பவனுக்கு கண்ணில் மையலோடு கிறங்கி உருகி நின்றவளை ஆளுவது சிரமமாக இருக்கவில்லை.
கணவன், என்னவன் என்ற உரிமை யாழிசைக்கு அவனை தடுக்க எந்த காரணமும் இருக்கவுமில்லை.
வெக்கம் அங்கே அவளுள்  எட்டிப்பார்த்தாலும் “வார் மை பேபி” என்ற அவன் பிதற்றலுடனே அவன் தேடல்கள் பயணிக்க, கணவனின் மெல்லிய தீண்டலாலும், தேடல்களாலும் காதல் ஊர்றேடுக்க தன்னையே அர்பணிக்கலானாள் யாழிசை.  
கூடலால் உருவான காதலா? காதல் நிறைந்த கூடலா என்று பிரித்தறிய முடியாத நிலையில் அவர்கள்.
அவர்களின் கூடலுக்கு சாட்ச்சியாக இருக்கப் பிடிக்காமல் மார்கழிமாத முழு நிலவும் நுவரெலியாவில் தலை காட்டவே இல்லை.
“என்னங்க… எந்திரிங்க” ரிஷியை எழுப்பிக் கொண்டிருந்தாள் யாழிசை. 
“தூங்க விடு டி. நைட் ல தூங்க விடாம தொல்லை பண்ணுற, காலைலயுமா?”  கண்களை திறக்காமல் பதிலளித்தவன் திரும்பி படுத்துக்க கொள்ள 
“யாரு நானா?” பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு “இன்னைக்காவது ரோஜா பூ பாக்க ஹக்கல கார்டன் கூட்டிட்டு போங்க. மூணு நாளா நாளைக்கு, நாளைக்குன்னு ரூமை விட்டு எங்கயும் போகாம” அதற்கு மேல் சொல்ல முடியாமல் உதடு கடித்து சிவக்கும் கன்னங்களை கையால் தேய்த்துக் கொண்டாள். 
“என்ன வார் சைலன்ட் ஆகிட்ட மேல சொல்லு” அவள் புறம் திரும்பியவன்  ஒற்றை கண்ணை திறந்து அவளை பார்த்தவாறே கேக்க 
“விளையாடாதீங்க, எந்திரிச்சு வாங்க” இயல்பு நிலைக்கு வந்தவள் மீண்டும் கெஞ்ச 
“கொடுக்க வேண்டியதை கொடுத்தா நா பாட்டுக்கு நல்ல பையனா எந்திருக்க போறேன். எங்க சீக்கிரம் கொடு” காரியத்தில் கண்ணாக பிடிவாதம் பிடிக்க 
“ஐயோ முடியல பா” என்றவள் கணவன் கேட்டதை கொடுக்க அவளை மொத்தமாய் எடுத்துக் கொண்டே விடுவித்தான் ரிஷி. 
யாழிசையின் அருகில் எல்லாவற்றையும் மறந்து சந்தோசமாக ரிஷி இருக்க, அவளை விட்டுச்செல்வதை கூட மறந்திருந்தான். அந்த அளவுக்கு அவனின் வார் பேபி அவனை ஆட்டிப் படைக்க அவள் என்ன சொன்னாலும் செய்ய காத்திருந்தவன் அவள் ரோஜா பூக்களை பார்வையிட ஹக்கல பூந்தோட்டத்துக்கு அழைத்து செல்லுமாறு சொல்லவும். மூணு நாட்களாக நாளை, நாளை என்று சொல்லிக் கொண்டு நாளை கடத்த, நாலாவது நாளே அவனிடம் கெஞ்சிக், கொஞ்சி  அவனை கிளப்பி இருந்தாள் யாழிசை.
பூந்தோட்டத்தில் இருந்த வித விதமான பூக்களை கண்களை அகல விரித்து ரசித்தவள், புகைப்படமும் எடுத்துக் கொண்டு, 
“என்னங்க இங்க இருக்குறவங்க கிட்ட கேட்டு இந்த மஞ்ச ரோஜா செடி ஒண்ணு மட்டும் கேட்டு தாங்க வீட்டுல நாட்டனும்” என்று சிணுங்க 
“அதெல்லாம் தர மாட்டாங்க”
அப்போ யாராவது வாரங்களானு பாருங்க. ஒரு கிளையை மெதுவா ஒடச்சிக்கிறேன்” என்றவள் செடியிடம் நெருங்க 
“தூக்கி உள்ள வச்சிடுவாங்கடி. நா வேற வாங்கித்தாரேன்” 
“இல்ல, இல்ல எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. இதுதான் வேணும்” கண்களை சுருக்கி கெஞ்ச 
“உங்க ஊர் காலநிலைக்கு வளராதுடி. செத்துடும்” 
“பொய் சொல்லுறீங்க” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள். 
அவளின் சிறுபிள்ளை போன்ற செயல்களினாலையே! ரிஷியை கட்டிப்போட்டு வைத்திருக்க,  சிரித்தவாறே “சத்தியமா. வேணும்னா அங்க ஒரு செக்யூரிட்டி இருக்காரே அவர் கிட்ட கேக்கலாமா?” 
அவரிடம் போய் விசாரிக்க அவரும் செழுமையாக வளராததுக்கான காரணங்களை சொல்ல தலையசைத்தவாறே கேட்டுக் கொண்டாள் யாழிசை.
தேனிலவை இன்பமாக கழித்து மணமக்கள் ஊர் திரும்ப, இந்த ஒரு வாரமாக சொர்க்கத்தில் வாழ்ந்தது போல் உணர்ந்தான் ரிஷி. வரும் பொழுது வண்டியில் பேசாமல், தூங்கி இருந்த யாழிசை போகும் போது ரிஷியை ஒட்டியமர்ந்தவாறே கதையடித்துக் கொண்டிருந்தாள். 
கண்களை அகல விரித்து பேசும் அவளை ரசித்தவன், அவனும் அவளை விட்டு செல்வதால் மேலும் நெருங்கி சில்மிஷங்களை செய்து கொண்டே வண்டியை இரத்தினபுரியை நோக்கி செலுத்தியவன் வீடு வர மாலையாக சந்தோசமாக வந்திறங்கியவர்களை ஆலம் சுற்றியே! வரவேற்றாள் மங்கம்மா. 
இன்முகமாகவே அனைவரிடமும் பேசியவன் யோகராஜை அழைத்து நாளை காலை மும்பாய் புறப்பட்டு செல்ல வேண்டும் என்றும் யாழிசையை பார்த்துக் கொள்ளுமாறும் கூறியவன் யாழிசையிடம் அவனின் பயணத்தை பற்றி ஒரு வார்த்தியேனும் கூறவில்லை. 
அடுத்த விடியல் தனக்கு எவ்வாறு இருக்கும் என்று அறியாமல் கண்விழித்தவள் கணவனை தேட, அவனோ விமானத்தில் மும்பை பறந்துகொண்டிருக்க, கணவன் தன்னிடம் சொல்லாமல் சென்றது வாழ்க்கையிலிருந்தும்  தான் என்பதை அவள் எப்பொழுது உணர்வாளோ! 
ரிஷி மும்பை சென்று பத்து நாட்களுக்கும் மேலாகி இருக்க, அவனிடமிருந்து எந்த தகவலும் வராது கண்ணீரில் கரையலானாள் யாழிசை.
காதல் என்ற பெயரால் ஏமாறும் பெண்கள் தான் எத்தனை பேர் இவ்வுலகில். யாழிசையின் ஏமாற்றம் எவ்வகையை சேர்ந்தது?  

Advertisement