Advertisement

அத்தியாயம் 3
ரிஷியின் நெற்றிக்காயம் ஆறவே நான்கு நாட்கள் சென்றிருந்தது. அந்த நான்கு நாட்களும் அறையிலேயே தங்கி இருந்தவன். முதலில் செய்தது யாழிசையின்  வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வீடு தேடியது. எல்லாம் சாதாரண வீடாக இருக்க அவனுக்கு ஏற்றது போல் சரிவர ஒரு வீடும் அமையவில்லை. அவன் அதிஷ்டமோ! துரதிஷ்டமோ! நாற்பது லட்சம் இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு வீடு யாழிசையின் வீட்டுக்கு அருகிலேயே விற்பனைக்கு வர வேறு வழியில்லாது வாங்கினான். 
“சே இவளுக்காக வந்ததே! பெருசு இதுல தண்டத்துக்கு வீடு வேற வாங்க வேண்டியதா போச்சு!”
 “கைல காசு இருக்குறத கண்டா தான் திரும்பியே பாப்பா டா” அவன் மனம் அவளை தப்பாக எடை போட
“அப்போ போகும் போது வீட்டை அவளுக்கே கொடுத்துட்டு போக வேண்டியதுதான்” உதட்டோரம் கேலிப் புன்னகை மலர 
யாழிசை முந்தியில் வீட்டு சாவிக்கொத்தை  முடிந்து வைத்துக்கொண்டு அதை சுழற்றியவாறு வளம்வருவது கண்ணில் தெரிய “யப்பா….. மகாராணி லுக்குத்தான் போ. அன்னக்காவடிக்கு வந்த வாழ்வ பாரேன்” மனக்கண் முன் தோன்றிய காட்ச்சியை பற்றி இகழ்ச்சியாக நினைத்துக் கொண்டவன், உண்மையிலேயே! மகாராணியாக அவனை ஆளவேண்டியவள் அவள்தான் என்பதை அறியவுமில்லை. ரிஷி உணரவுமில்லை. 
புதிதாக கட்டிய வீடாகவும், தேவையான மரச்சாமான்களும் இருக்க, நல்ல நேரம் பார்த்து,  ஒருவாறு வீட்டுக்கு குடிவந்தவன் யாழிசையின் வீடு தெரிகிற பக்கமாக மாடியில் உள்ள அறையில் தஞ்சமடைந்தான். 
அடுத்து அவன் செய்தது கோவில் தர்மகர்த்தாவையும், குருக்களையும் சந்தித்து பேசியது. பக்த்திப்பழமாய் வேட்டி சட்டையில் மழித்த தாடியோடு நெற்றியில் விபூதியிட்டு பார்க்க அழகாய் இருந்தவனை அவர்களுக்கும் பிடிக்கத்தான் செய்தது. புதிதாக குடிவருபவர்கள் ஊர் முறைப்படி பதிவாகி இருக்க வேண்டியது அவசியமானதாக இருக்க அவனுக்கும் அது தேவைப்பட்டது. 
அவனின் இத்தோற்றம் ஊர்மக்களும் அவன் மீது ஒரு மரியாதை கலந்த பார்வை பார்க்க செய்ய உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், யாழிசையை பற்றிய தகவல்களை திரட்டலானான். அதற்க்கு அவன் அணுகியது அவளின் ஊர் கோவில் தர்மகர்த்தாவை. கோவிலுக்கு நிதி உதவி செய்ய ஆசைப்படுகிறேன்.  ஊருக்கும், மக்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டுமா? என்றும் தூண்டில் போட்டான். 
கோவிலில் உள்ள குறைகளை கூற எல்லாவற்றையும் பொறுப்பெடுத்தவன், மக்களின் குறை என்னவென்று கேக்க, 
“நிறைய வீட்டுக்கு தகரக் கூரைதான் அடிக்கடி மழை வர்ரதால பறந்துடுது. மறு ஏற்பாடு செய்ய முடிஞ்சா நல்லா இருக்கும்” என்றவர் எல்லா குறைகளையும் முன்வைக்க தன்னால் முடிந்ததை செய்கிறேன் என்று ஒத்துக்க கொண்டவன், இளைஞ்சர்களை பற்றி விசாரிக்க 
எங்க சமூகத்துல ஆட்டோ ஒட்டுறவங்க, கூலித்தொழிலாளிங்க, மாணிக்க கல்லு வாங்கி, விக்குறவங்க தான் இங்க இருக்காங்க, குறைஞ்ச சதவீதம் தான் அரசாங்க வேலைல இருக்காங்க. பொண்ணுங்க பாடசாலைக்கு அப்பொறம் கல்யாணம் பண்ணி குடுத்துடுவாங்க, கல்லு வியாபாரத்தால பசங்க மேல படிக்க மாட்டேங்குறானுங்க” பெருமூச்சு விட்டவாறே சொல்ல   
அவன் எண்ணமெல்லாம் அவளுக்கு கல்யாணம் பேசி இருப்பார்களோ! என்றே இருக்க, 
“பேசி இருந்தா? ஊரப்பாத்து போய்டுவியா?”  மனசாட்ச்சி கேள்வியும் கேக்க, என்னசெய்வதென்று யோசிக்கலானான். 
அது ஒரு சின்ன ஊர் தமிழர்கள் ஐம்பது குடும்பங்களே! யாழிசையை பற்றிய தகவல்கள் அவனுக்கு கூடிய சீக்கிரமாகவே கிடைத்தது. பெயர் யாழிசை. வயது பத்தொன்பது என்றும் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். நடுத்தர வர்க்கத்துக்கும் கீழே உள்ளவர்கள். காசை விட மான, ரோஷம் பார்ப்பவர்கள். இதில் எதுவுமே அவனுக்கு சாதகமாக இல்லை. கண்டிப்பாக அவளை தனியாக சந்திக்க முடியாது. கோவிலில் விஷேஷம் என்றால் வருவாளோ! ஆனால் எந்த விசேஷமும் இல்லை போலும். என்ன செய்வது?
“பேசாம அவளை கடத்திக் கொண்டு போயிடு” மனசாட்ச்சி யோசனை சொல்ல 
“அதுக்கு அவ தனியா வெளிய வரணும்! வெள்ளிக்கிழமை மட்டும் தான் கோவிலுக்கு போறா. சே அன்னைக்கே அவள தூக்கி வண்டில ஏத்தி இருக்கணும்” அவளால் கிளர்த்தெழுந்த தாபமும், கோபமும் அவனை குரூரமாக யோசிக்க வைக்க தன்னை நினைத்தே சிரித்துக் கொண்டான். 
“அப்படி ஒண்ணும் அவள் பெரிய அழகியில்லயே! மும்பாயில் நா பார்க்காத பொண்ணா? கலர்வேற கம்மி, படிக்காத பட்டிக்காடு வேற, இவளையெல்லாம் கடத்த வேற பிளான் பண்ணனுமா?” மனசாட்ச்சியை அடக்கியவன் அவளை தன்னிடம் எவ்வாறு வரவைப்பது என்று எண்ணலானான். பாவம் தனது ஸ்டேடஸ்க்கு கொஞ்சமேனும் பொருத்தமற்றவள் என்று நினைப்பவளுக்காக தான் உள்ளம் ஏங்கி, அவளை காணாமல் தேடி அலையப்போகிறான் என்று அவன் அறியவில்லை. 
 இதுவரை அவன் எந்த பெண்ணையும் பலவந்தப் படுத்தியதில்லை. தானாக வந்து சிக்கியவர்கள் பலர். அது போலவே யாழிசையும் அவனுக்கு வேண்டும். அவனின் இப்போதைய லட்ச்சியம், குறிக்கோள் யாழிசையை அடைவது. ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே! அவனின் நிம்மதியை மொத்தமாய் யாழிசை அழித்தொழிக்க போகிறாள் என்று அவன் அறிந்திருந்தால் அவளுடன் சுமூகமான உறவை ஏற்படுத்தியிருந்திருப்பான். அல்லது அவள் பக்கம் தலை வைத்து கூட படுத்திருக்க மாட்டான். விதி யாரை விட்டது. அவன் வாழ்க்கையில் இவ்வாறெல்லாம் நடக்க வேண்டி இருப்பதை எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்யும் அவனாலையே தடுக்க முடியவில்லை.  
“எதுக்கும் இன்னொரு தடவ பாத்து சொல்லுங்க ஜோசியரே!” சீதா கலக்கமாக கேக்க அவரோ 
“பையனுக்கு கல்யாண யோகம் இருக்கு. பொண்ணுக்கு ஜாதகமே இல்லனு சொல்லுறீங்களே! பொருத்தம் எப்படி பாக்குறது?” 
“ஒரு நல்ல நாள் குறிச்சி கொடுங்க” மங்கம்மா தான் கேட்டாள்.
அவரும் பார்த்து விட்டு “அடுத்த வாரம் ஒரு முகூர்த்தம் அது இல்லனா… அடுத்த மாசம் பன்னிரண்டாம் திகதி  நாள் நல்லா இருக்கு, அன்னைக்கே பண்ணலாம்” 
சீதாவும், மங்கம்மாவும் முகம் மலர வெளியே வந்தார்கள். 
“இன்னும் இருவத்தியஞ்சு நாள் இருக்கு, நிறைய வேல இருக்கே! எல்லாம் பண்ண முடியுமா?” மங்கம்மா கேள்வியாக ஏறிட? 
“என்ன நீ, அவ எனக்கும் பொண்ணு தான். கல்யாண செலவு பாதிய நா ஏத்துக்க போறேன். நகைநட்டு, பாத்திரம் எதுவும் வேணா, என் மருமகளுக்கே…னு நா கொஞ்சம் செஞ்சி வச்சிருக்கிறேன். துணிமணி கூட சும்மா செலவு பண்ண வேண்டிய அவசியமில்லை, கல்யாண பட்டு மட்டும் வாங்கிடுவோம், கல்யாண சமையலை நம்ம கந்தசாமிக்கே கொடுக்கலாம். பொருளெல்லாம் வாங்கி கொடுத்தா, சமைக்க அவ்வளவு காசு கேக்க மாட்டாரு, அகமத் ஹாஜியார் மண்டபத்தை சும்மாவே தருவார். அப்பொறம் என்ன வேல இருக்க போகுது? உன் புருஷன் கூட பொறந்தவ நான் ஒருத்திதான் எங்க பக்கம் உள்ள சொந்தபந்தமெல்லாம் இங்கதான் இருக்கிறாங்க அழைக்க ஒருநாள் போதும். உன் அக்காவும், தங்கச்சியும் பதுள்ளைல இருக்குறாங்க, போன் பண்ணி சொன்னாவே பஸ்ஸ புடிச்சி வந்துட போறாங்க, ஊருக்குள்ள நாலு பெரியமனிசங்களை அழைச்சா போதும்” மளமளவென சீதா அடுத்து நடக்க வேண்டியவைகளை பட்டியலிட, மங்கம்மாவின் முகம் தங்கம் போல் ஜொலித்தது. 
தன் மக்கள் கொடுத்து வைத்தவர்கள் தான், யோகராஜை கல்யாணம் பண்ணி வந்த அன்றிலிருந்து பார்க்கிறாள். கணவனின் அக்கா என்ற எந்த பந்தாவும் இல்லாமல் சீதா எல்லாவற்றையும் அனுசரித்து இன்றுவரை நடந்துகொள்கிறாள். 
யாழிசையை முதலில் கையில் ஏந்தியவளும் அவளே!  அன்றே சொன்னது தான் இவ என் வீட்டு மகாலஷ்மின்னு. அதை நிறைவேற்ற இளவேந்தனுக்கே சின்னவயதில் பேசிமுடித்தாள். மகளின் கல்யாணம் என்றதும் அன்னையாய் மகங்கம்மா கலங்க யாழிசைக்கு மாமியாராக நினைக்காமல் இன்னொருத்தாயாகவே மாறிவிட்டாள் சீதாலட்சுமி.  
 
அன்னையும், அத்தையும் கல்யாணத்துக்கு நாள் குறிக்க சென்றதை கண்டு யாழிசையின் மனமோ உலைக்காமல் கொதித்துக் கொண்டிருந்தது. 
“அந்த சிடுமூஞ்சிக்கு இது தெரியுமோ? தெரியாதோ! தெரிஞ்சா ஒரு குத்தாட்டம் பார்க்கலாமே! ஒருவேளை அத்த பேசிப்பேசியே! சம்மதம் வாங்கி இருப்பாளோ!  இருக்காது இருக்காது” தனக்குள்ளேயே! மருகியவளின் பார்வை நாற்காட்டிலில் நிலைக்க
இன்றும் வெள்ளிக்கிழமை. போன வெள்ளிக்கிழமை நடந்த சம்பவம் ஓரளவு மனதில் இருந்து மறைய ஆரம்பிக்க கோவிலுக்கு சென்றால்? அங்கே அவன் வருவானோ! என்று அச்சம் தோன்றி மனதுக்குள் குளிரை பரப்ப, உடல் சில்லிட்டது. ஏனோ அவளால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அன்னையிடம் என்ன காரணம் சொல்லி கோவிலுக்கு செல்லாது தவிர்ப்பது. மாதவிடாய் என்று பொய் காரணம் சொல்ல முடியாது, இரண்டு பெண்கள் மீதும் எந்தநேரமும் கண்ணை வைத்திருப்பாள் மங்கம்மா.   
என்ன செய்வதென்று குழம்பிக்கொண்டு  யாழிசை நிற்க, உள்ளே நுழைந்தனர் சீதாவும், மங்கம்மாவும். சீதா அவளை கட்டி அணைத்துக் கொள்ள மங்கம்மா சமையல்கட்டுக்குள் நுழைந்து சீனியை {சக்கரை}அள்ளி யாழிசையின் வாயில் போட்டு
“யாழி கல்யாண தேதி முடிவாகிரிச்சிடி” என்று சந்தோசமாக சொல்ல அதை கேட்டவாறே வந்த இயலிசை துள்ளிக் குதித்தாள்.  
அக்காவை கட்டிக்கொண்டு சுற்ற, அவர்களின் சந்தோசமான முகங்களை கண்டு “அத்தானுக்கு தெரியுமா?” என்று நாக்கு நுனி வரை வந்த கேள்வி அவள் வாயிலிருந்து வெளியே வரவே இல்லை. 
“கிளம்பு கிளம்பு கோவிலுக்கு போலாம். விளக்கேத்தனும், உன் கல்யாணம் எந்த தடங்கலும் இல்லாமல் நடக்கணும்னு தானே இத்தனை வருஷமா உன் கையால வெள்ளிக்கிழமை விளக்கேத்த சொல்லுறேன்” மங்கம்மா சொல்ல யாழிசைக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது. 
“என்ன யாழ் முழிக்கிற, எல்லாரும் தான் போறோம்” சீதா சொல்ல அசுவாசமடைந்தவள் வெளியேற இயலிசை அறைக்குள் சென்றாள். 
அன்று போல் மழை வரும் காலநிலை இல்லாது வெயில் தணிந்து போகும் காலநிலையாக இருக்க மங்கம்மாவும், சீதாவும் கதையடித்தவாறே முன்னாள் நடக்க யாழிசை பின்னால் நடந்தாள். 
யாரோ தன்னை உற்று நோக்குவதை போல் இருக்க மெதுவாக தலை உயர்த்தி கண்களை சுழல விட்டவள் யாரையும் காணாது நிம்மதி பெருமூச்சு விட்டவாறே நடக்க, 
தனதறையிலிருந்து அவளையே வைத்த கண் வாங்காமல் பாத்திருந்த ரிஷி அவள் சுற்றும் முற்றும் பார்க்கவே பல்லைக்கடிக்கலானான். 
“அடியேய்!  இங்க நான் ஒருத்தன் உன்ன பாக்க நின்னா, நீ எவனையோ தேடுறியா?” கோவம் கணக்க “நீ மட்டும் என் கைல சிக்கினா காலி பண்ணிடுவேண்டி” சொல்லியவாறே படிகளில் இறங்கியவன் கோவிலை நோக்கி நடக்கலானான். 
கோவிலின் உள்ளே சென்று விளக்கேற்றி, இறைவனை வணங்கியவள் வேண்டிக்கொண்டது, தனது குடும்பத்தின் நிம்மதி, மற்றும் சந்தோசம் என்றும் நிலைக்க வேண்டும் என்பதே! 
கணவன் என்ற பெயரில் கயவன் ஒருவனிடம் அவள் படப்போகும் அவஸ்தைகளை எண்ணி “உனக்காகவும் கொஞ்சம் பிராத்தனை செய்திருக்கவேண்டாமா?”  என்று அங்கே வீற்றிருந்த அம்மன் அவளை இரக்கமாக பார்க்க, உள்ளே நுழைந்தான் ரிஷி.  
அவனின் கண்கள் யாழிசையை தேடி கண்டு பிடிக்க சீதா, மற்றும் மங்கம்மாவோடு பேசிக் கொண்டிருந்த குருக்களின் அருகில் நின்று கொண்டிருந்தாள் யாழிசை. அவளை பார்த்தவாறே ரிஷி வர அவளோ கையிலுள்ள செப்பு அர்ச்சனை தட்டை பாத்திருந்தாள். 
அதைக் கண்டு அவள் அடித்த அடியும், வலியும் நியாபகம் வரவே! கை தானகாவே நெற்றியை வருட அவளை கொலைவெறியோடு முறைக்கலானான் ரிஷி.
“அடடே வாங்க தம்பி, இந்த நேரத்துல வந்து இருக்கீங்க?” குருக்களின் குரல் கேட்டு முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்ட ரிஷி 
“சும்மா காலாற நடக்கணும்னு வந்தேன்” சொல்லியவாறே யாழிசையை பார்க்க அவளோ அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள். 
அன்று அவளிடம் தப்பாக நடந்து கொண்டவனின் குரல் பயத்தால் யாழிசையின் மனதில் பதியவே இல்லை. நியாபகத்தில் இருந்திருந்தால் ரிஷியை இன்றே கண்டு கொண்டிருப்பாள். அவள் அவனிடம் சிக்குண்டு சின்னா பின்னமாக வேண்டும் என்பது அவளின் விதி என்றிருக்க யாரால் அதை தடுக்க முடியும். 
அத்தை பசங்களில் தனாவிடம் மாத்திரம் கொஞ்சம் சகஜமாக பேசுபவள் பிற ஆண்களின் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்க மாட்டாள். தப்பித்தவரியாவது பார்க்க நேர்ந்தால் தலை கவிழ்வாள், இல்லையாயின் அதற்கும் மங்கம்மாவிடம் திட்டு கிடைக்கும். ரிஷியின் குரல் கேட்டதும் அனிச்சைச்செயலாக திரும்பி நிற்க, 
ரிஷிக்கோ அவள் வேண்டுமென்றே செய்கிறாள் என்று கோவம் தலைக்கேறியது. அவளின் பின்னழகை ரசித்தவனின் பார்வை இடைக்கு செல்ல யாழிசையின் கைகளால் அளவிட முடியவில்லை. இன்னும் கொஞ்சம் கண்ணை உயர்த்த
“முதுகை கூட காட்டாம, என்ன இவ்வளவு மறச்சி டிரஸ் போட்டு இருக்கா” என்ற எண்ணமே அவனிடம். 
அவனின் பார்வை யாழின் பக்கமிருப்பதை கண்ட குருக்கள். மங்கம்மாவையும், சீதாவையும் அறிமுகப்படுத்தி வைக்க, சட்டென்று அவர்களின் காலில் விழுந்தான் ரிஷி. 
அவன் குடிவந்து  இரண்டு நாட்களிலேயே! அவனை பற்றிய செய்தி ஊரெங்கும் பரவியது. பிறருக்கு உதவும் அவன் குணம் கண்டு ஊர் மக்கள் அவனிடம் மயங்கி இருக்க, காலில் விழுந்ததை கண்டு சீதாவும், மங்கம்மாவும் அதிசயித்து பார்த்தனர்.
“என்ன அம்மா அப்படி பாக்குறீங்க?” என்று சீதாவையும் “என்ன அத்த” என்று மங்கம்மாவையும் விழித்து  மேலும் அவர்களை வியப்புக்குள்ளாக்கினான் ரிஷி. 
“என்ன தம்பி நீங்க போய் எங்க கால்ல விழுந்து கிட்டு” மங்கம்மா தயங்க 
“காரியம் நடக்கணும்னா கால பிடிச்சி தானே ஆகணும்” என்றெண்ணியவாறே தலையை கோதியவன்.
“நா ஒரு அநாத, உங்கள  மாதிரி யாராவது பாத்து மனசுக்கு உறவா தோணினா கால்ல விழுந்துடுவேன்” யாழிசை தன்மீது அனுதாப பார்வையாவது வீச மாட்டாளா என்று பார்க்க, அவன் சொன்னது காதில் விழுந்தாலும் அவள் அசையவில்லை. 
ரிஷிக்கு யாருமில்லை என்று அறிந்தவுடன் “பாவம் யாருமில்லாமல் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாரோ!” இரக்கம் தோன்றினாலும் அவனை ஏறிட்டு பார்க்க அஞ்சியவள் உடனடியாக கடவுளிடம்  “அவர் ஆசைப்படுறதெல்லாம் அவருக்கு கிடைக்கணும், அவர் எப்போதும் சந்தோஷமாக இருக்கணும், தோல்வியே அவருக்கு வரக் கூடாது” என்ற கண்மூடி பிராத்தனை செய்யலானாள்.
அவளின் எண்ணங்களை அறியாதவனோ! அவளை கண்களால் எரித்தவாறே  “உடம்பு பூரா திமிர்” மனதில் சாடியவாறே  மங்கம்மாவின் புறம் திரும்பி “என்ன உதவினாலும் கேளுங்க கண்டிப்பா பண்ணுறேன்” யாழிசை தன் பக்கம் திரும்பாததால் கோபம் தலைக்கேற எங்கே இன்னும் அவ்விடத்தில் நின்றால் தன்னையறியாமல் ஏதாவது செய்து விடுவேனோ என்று அஞ்சியவன் விடை பெற 
“தம்பி பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன், கண்டிப்பா வந்து சாப்பிட்டுட்டு போங்க” என்று சீதா முகம்கொள்ளா புன்னகையினூடாகவே சொல்ல 
“யாருக்கு?” கொஞ்சம் அதிர்ச்சியாகவே யாழிசையை பார்த்தான் ரிஷி. 
“இதோ இவளுக்குத் தான் தம்பி. அடியே! யாழி” என்றவாறே அவளை அவன் புறம் மங்கம்மா திருப்ப அவளோ தலை குனிந்தவாறே! இருந்தாள் 
யாழிசை தனக்கில்லை என்ற ஏமாற்றம் நெஞ்சம் முழுக்க பரவி எதையோ பறி கொடுத்தவன் போல் மனம் துடிக்க, சுள்ளென்ற வேதனையோ அங்கே கோபமாக எட்டிப்பார்க்க “ஓஹ் கல்யாண பொண்ணுக்கு இப்போதே வெக்கம் வந்ததிருச்சோ!” அதற்கும் அவளை சாட, மங்கம்மாவும் சீதாவும் அவனிடம் விடைபெற, யாழிசையும் அவர்களை பின்தொடரலானாள். 
“என்னை மீறி உன் கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நானும் பாக்குறேண்டி” அவளின் முதுகை வெறித்தவன் கருவிக்கு கொண்டான்.
பாம்புக்கு பால்வார்ப்பார்களாம். அது போல் தான் இருந்தது யாழிசையின் பிராத்தினையும். தனக்கு என்னெல்லாம் காத்திருக்கிறது என்றறியாத யாழிசை அமைதியாக நடக்கலானாள்.

Advertisement