Advertisement

அத்தியாயம் 28
சீதா வீட்டுக்கும். கயலின் வீட்டுக்கும் பொதுவாக இருந்த கொல்லைப்புறத்தில் இளசுகளும், தூங்காத பெருசுகளும் பாட்டுக்கு பாட்டு, பாட்டு கச்சேரி நடாத்திக் கொண்டிருந்தனர். காதல் பாடல்களும், பழைய பாடல்களும் மாறி மாறி ஒலிக்க  அந்த இரவில் சத்தம் மைக் செட் போட்டது போல் தெருவெல்லாம் ஒலித்தது.
ரிஷியின் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி தான் யாழிசையின் வீடு இருந்தது. நடையை எட்டி போட்டால் பத்தடியில் வந்து சேர்ந்த்து விடமுடியும். ஓடோடிவந்த ரிஷியின் எண்ணமெல்லாம் தனா, இயல் முதலிரவை அங்க ஏற்பாடு பண்ணதே! இங்க யாழிசையோடு தனியாக பேசணும் என்று தான். தூங்கி இருப்பாளோ!” என்று வந்தவனின் எண்ணத்தை பொய்யாக்காமல் முன் அறையில் தூங்கி இருந்தாள் அவனின் மனையாள்.
முன் அறை சின்ன அறையாக இருக்க ஒருவர் தூங்க கூடிய கட்டிலே போடப்பட்டிருந்தது. சுவரோரமாக ஸ்ரீராமை கிடத்தி குழந்தையை அணைத்தவாறு தூங்கி இருந்தாள் அவனின் வார் பேபி. இருந்த சின்ன இடைவெளியில் கட்டிலில் சாய்ந்து மனைவியை அணைத்தவனுக்கு அவளின் பிரத்தியேக வாசமும், கனகாம்பரத்தின் வாசமும் நெஞ்சம் நிரப்ப கன்னத்தில் முத்தமிட எட்டியவன் காதில் முத்தமிட தூக்கத்திலும் கணவனை உணர்ந்துக் கொண்ட கயல்விழியின் மேனி சிலிர்த்தது. 
அதை உணர்ந்து கொண்ட ரிஷி அவள் தூங்குவது போல் நடிக்கிறாள் என்று நினைத்து மேலும் மேலும் முத்தம் வைக்க, தூக்கம் தூர ஓட பட்டென்று கண்களை திறந்த கயல்விழி கணவனை கண்டு இதயம் தடதடக்க
“இங்க என்ன பண்ணுறீங்க?” என்றவாறே எழுந்து கொள்ள ரிஷியும் எழுந்தமர்ந்தான். புடவையை மாற்றி ஒரு நைட்டி அணிந்திருந்தாள் கயல்விழி. ஆனாலும் தலையில் இருந்த பூவை கழட்டாமலையே தூங்கி எழுந்த நிலையிலும் அவளின் அழகு அறையின் மங்கலான விளக்கொளியில் கூட, அவன் கண்களை நிறைக்க மனைவியைத்தான் ரசித்துக் கொண்டிருந்தான். 
அவள் கேட்ட கேள்விக்கு பதில் வராமல் போகவே “நீங்க ஸ்ரீராமோடு மேல தூங்குங்க நா கீழ படுத்துகிறேன்” என்றவாறே பாய் விரித்து போட்டு தலையணையையும் கீழே போட்டவள் படுத்துக் கொள்ள அடுத்த கணம் ரிஷியும் தலையணையை அவள் அருகில் போட்டு அவளை அணைத்துக் கொண்டு கண் மூடி இருந்தான். 
கணவனின் கைவளைவில் நிம்மதி இதமாக பரவ இதயத்தின் ஓசையும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது.  கயல்விழி எதுவும் பேசவுமில்லை. அவன் செயலை எதிர்க்கவுமில்லை. அமைதியாக கண்மூடி இருந்தாள். அவளும் தான் எத்தனை நாள் அவனை தவிர்ப்பாள்? என்றோ ஒருநாள் கணவனை தனிமையில் சந்திக்க நேரிடும் என்று அறிந்து தானே இருந்தாள். இப்பொழுது கூட அவன் அடுத்த கட்டத்துக்கு முன்னேறினால் மறுக்க மாட்டாள். 
கண் மூடி படுத்திருந்த மனைவியையே பாத்திருந்த ரிஷி அவள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதே அவளின் பிறவி குணம் என்று உணர்ந்தவன் அவளின் முகத்தில் விழுந்திருந்த முடிகளை அவளின் காதோரம் ஒதுக்கியவாறே “வார் பேபி கண்ண திறந்து என்ன பாக்க மாட்டியா?” காதல் கொஞ்சும் குரலில் கெஞ்ச கண்களை திறந்து அமைதியாக கணவனையே பாத்திருந்தாள். 
“என் செல்ல பொண்டாட்டிக்கு என் மேல அப்படி என்ன கோவம் னு மண்டைய பிச்சி கிட்டு இருந்தேன். அப்பொறம் தான் புரிஞ்சது நா வேற கல்யாணம் பண்ணிக்க னு சொன்னது தான் அவ மனச ரொம்ப காய படுத்தி இருக்குனு. அது தெரியாம நா ஒரு மடையன், பொண்டாட்டி மனச புரிஞ்சிக்காம, அவ ஏன் என்ன விட்டு தூரமா போறான்னு தெரியாம முழிச்சு கிட்டு இருந்தேன்” மனைவியின் கண்ணை பார்த்தவாறே சொல்ல அவள் கண்களில் இருந்து கண்ணீரை துளி முணுக்கென்று எட்டிப் பார்த்தது. 
சிறு புன்னகையினூடே அவளின் கண்ணீரை துடைத்து விட்டவன் “இன்னும் எத்தனை நாள் மனசுல உள்ளத என் கிட்ட சொல்லாம ஒதுங்கி இருக்க போற? எதுவானாலும் சொல்லலாம் இல்ல. உனக்கு பிடிக்காத விஷயம்னா சண்டை போடு, இல்ல என்ன ரெண்டு அடி கூட அடிச்சிக்க. இப்படி ஒதுங்கிப் போய் தனியா வருந்திக்கிட்டு என்னத்த சாதிக்க போற” குரலை உயர்த்தாமல் கடிந்தவன். 
“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? கோமால இருக்கும் போது ஒரே இருட்டு தூரத்துல ஒரு வெசக் விளக்கு எரிஞ்சி கிட்டு இருக்கு நானும் அத நோக்கி போய் கிட்டே இருக்கேன் கிட்ட வர வர அந்த விளக்க  ஒரு பொண்ணு தன் முகத்துக்கு நேரா பிடிச்சி கிட்டு இருக்கா, அவ எவ்வளவு அழகா இருந்தா தெரியுமா? கண்ணுல அன்பு மட்டும் தான். உதட்டுல மெல்லிய புன்னகை. அந்த விளக்கொளியில் தேவதை மாதிரி இருந்தா. கண் முழிச்சி பிறகும் அவ முகம் என் மனச விட்டு போகவே இல்ல. அவ யாரு? அவளுக்கும் எனக்கும் என்ன உறவுன்னு னு யோசிக்க ஆரம்பிச்சேன். தல பயங்கரமா வலிக்கும் ஆனாலும் அவளை பத்தி யோசிக்காம இருக்க முடியல அப்பொறம் கொஞ்சம் கொஞ்சமா அவளோட நியாபங்கள் எனக்கு வர ஆரம்பிச்சிருச்சு. அவளை கல்யாணம் பண்ணினது போல அவ கூட சந்தோசமா இருந்த நாட்கள்” என்றவன் மனைவியின் முகம் பார்த்து மூக்கோடு மூக்கை வைத்து உரசியவன் குறும்பாக புன்னகைக்க 
இவ்வளவு நேரமும் யாரோ ஒருத்தியை பத்தி சொல்கிறான் என்று நினைத்துக் கொண்டு வேண்டா வெறுப்பாக கேட்டிருந்தவள், அன்றும் அவன் இதே போல் சொன்னதை மறந்திருந்தாள். தன்னைத்தான்  சொல்கிறான் என்றதும் விழி அகல பார்த்தவள் பேச்சற்றது நிற்க,
“இதாண்டி உன் கிட்ட எனக்கு பிடிக்காத விஷயம் யாரோ னு நினச்சியே அப்போவே வாய தொறந்து கேக்கணும், உனக்கு பிடிச்சதை சாப்பிடுறது போல பிடிக்காததை வேணானும் சொல்லணும். உன் உரிமையை நீ எந்த இடத்திலும் விட்டு கொடுக்க கூடாது. புரிஞ்சுதா” அந்த இரவிலும் பாடம் நடாத்த 
“எதுக்கு நீங்க அமுதனை கல்யாணம் பண்ண சொன்னீங்க? மும்பாய் போகும் போது கூட என் சார்பா அமுதன் எல்லா வேலையையும் பார்த்துப்பான்னு வேற சொல்லுறீங்க” பாடம் கற்ற மாணவியாக கோப மூச்சுக்கலை வெளியிட்டவாறே தைரியம் வரப்பெற்று வாய் திறந்தாள் யாழிசை. 
“ஏன் டி நா இல்லனா என் இடத்துல இருந்து நீ தான் எல்லா வேலைகளையும் பாத்துக்கணும். ஒரு ஆம்புல பாக்குற வேலைகள்னு சிலது இருக்கே அத அமுதன் பாத்துப்பான்னு சொன்னது ஒரு குத்தமா?” அவளின் நெற்றியில் முட்டியவாறே கேக்க 
அமுதனை கல்யாணம் பண்ணிக்க என்று கணவன் சொன்னது மனதை கத்தி கொண்டு கீறி இருக்க, கல்யாண வேலைகளை பார்ப்பான் என்று சாதாரணமாக சொன்னது கூட அவளுக்கு வலித்திருந்தது. அதை ஏற்றுக்கொ கொள்ள பிடிக்காமல் “அப்போ எதுக்கு என்ன அமுதனை கல்யாணம் பண்ண சொல்லி சொன்னீங்க” கணவனை முறைக்கலானாள். 
அவளின் புருவம் நீவியவாறே “எல்லாம் என்  மோகன் மாமா பொண்ணு நல்லா இருக்கணும் என்ற எண்ணம் தான். உன் நியாபகங்கள் வந்த பிறகு நீ யார் என்ற கேள்வியோடு நா உன்ன கொடும படுத்தினதும் கொஞ்சம் கொஞ்சமா நியாபகத்துல வர ஆரம்பிச்சது. நானா அப்படி பண்ணேன்? ஏன்? என்ற கேள்விகள் என் மண்டைய குடஞ்சி கொண்டிருக்கும் நேரத்துல தான் பிரதீபன் உன்ன கண்டு பிடிச்சி கூட்டிட்டு வந்தான். உன் போட்டோவை அனுப்பி உன் பேர் கயல்விழி என்றும், என் மனைவி என்றும் அமுதன் சொன்ன பிறகுதான் நீ என் மாமா பொண்ணு என்பதே நியாபகத்துல வந்தது. அதிகமா நான் தூங்கி கிட்டு இருக்குறதால என்னால அடுத்து என்ன செய்யணும் னு யோசிக்க முடியல. 
ஒரு நாள் கண் முழிச்சு இருந்தப்போ கண் மூடி யோசிச்சு கிட்டு இருந்த நேரம் அங்க வந்த ரெண்டு நர்ஸ் என் நிலைமையையும் நா பொழைக்க மாட்டேன்னு சொன்னதையும் கேட்டு அதிர்ச்சியானாலும் அத நம்பாம என் மெடிக்கல் ரிப்போர்ட்டை கேட்டேன் அத அமுதன் வீட்டுல வச்சிருக்கிறதா சொல்ல அத எடுக்கத்தான் அன்னைக்கி வீட்டுக்கு வந்தேன். உன்ன பார்த்த பிறகு என்னையே நான் மறந்துட்டேன். நீ மயங்கி விழவும் உன்ன கட்டில்ல கிடத்தி  உன் முகத்தை தான் பாத்திருக்கேன். செத்து போனதாக இருக்கும் நான் செத்து போனதாகவே இருக்கட்டும் நீ ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக்கணும் னு உன்ன விட்டு ஒதுங்கி போக முடிவு பண்ணினேன். 
அப்பொறம் நீயும் ப்ரதீபனும் நாடகம் ஆடி என்ன வர வச்சிட்டீங்க, என் நிலைமை உனக்கு முழுசா தெரியல னு அமுதன் சொன்னான். உன்ன கோனார் பண்ணனும் னு தான் சத்தியம் வாங்கி அமுதனை கல்யாணம் பண்ண சொல்லி கேட்டேன். என் வார் பேபி நா இல்லாம இருந்துடுவா. ஆனா என் மாமா பொண்ணு கடைசி வரைக்கும் சந்தோசமா இருக்கணும் னு நா ஆச பட்டு தான் மனச கல்லாகி கிட்டு உன் கிட்ட சத்தியம் வாங்கிட்டேன். அப்போ கூட என் நிலைமையை பத்தி யோசிச்சேன் ஒழிய, அமுதன் மனசையோ! உன் மனசையோ! காய படுத்திடும் னு யோசிக்கல. சாரி எல்லாம் கேக்க மாட்டேன். பிறப்பு, இறப்பு இல்லாருக்கும் உண்டு. நீ சந்தோசமா இருக்கணும் தான் நான் நினச்சேன். என்ன நினைச்சி அழுது கிட்டு இருக்கிறது எனக்கு பிடிக்கல” 
“அதுக்காக அமுதனை கல்யாணம் பண்ண சொல்லி சொல்வீங்களா” அவனின் தோளில் ரெண்டு அடி போட
“யார் டி இவ? உன்ன கல்யாணம் பண்ண சொல்லி சொன்னது தப்பில்ல, அமுதனை பண்ண சொன்னது தான் தப்பா?” கேள்வியாக அவளை பார்க்க அவளும் தன் மனதோடு ஆராய்ச்சியில் இருந்தாள். 
“ஒரு வேல அவன் என்ன மாதிரியே இருக்குறது தான் பிரச்சினையா? அப்போ யாரையாச்சும் கல்யாணம் பண்ண சொல்லி இருந்தா உனக்கு இவ்வளவு கோபம் வந்திருக்காதா! நான் தான் தப்பு பண்ணிட்டேனா?” குறும்பாகவும், கிண்டலாகவும் பேசி அவளை குழப்பி விட 
கணவன் சொன்னதிலும் உண்மை இருந்தது. யாரையாவது கல்யாணம் பண்ணி வேறு வாழ்க்கையை அமைத்து கொள் என்று கூறி இருந்தாள் இவ்வளவு வலித்திருக்காதோ! கணவனை போல் அமுதன் அச்சு அசலாக இருப்பதால் தான் இந்த கோபமா? அப்போ வேற யாராவது என்றால் கல்யாணம் பண்ணி இருப்பேனா? சுய சிந்தனையி இருந்தவள்  “சி, சி இல்ல” என்று வாய் விட்டே சொல்ல சிறு சத்தத்தோடு ரிஷி நகைக்க அவன் குழப்பி விட்டது புரியவே மேலும் சில அடிகளை வாரி வழங்கலானாள் அவனின் வார் பேபி.  
அவளின் கைகளை  தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துப் பிடித்துக் கொண்டவன் “தேங்க்ஸ் டி வார் பேபி. என் கண்ணுல விழுந்த விம்பமாய் நான் என்ன மறந்த நிலையிலையும் என் நெஞ்சுல ஆழமாய் பதிஞ்சு என் மனசு முழுக்குக நிறைஞ்சி உன் காதலால் சாக போன என்ன, அந்த எமன் கிட்ட இருந்து காப்பாத்தி இழுத்து கிட்டு வந்தியே! ரொம்ப தாங்க்ஸ் டி” என்றவன் அவளின் கைகளில்  முத்தமிட அவனை வியப்பாக பாத்திருந்தாள் யாழிசை. 
“என்ன டி மாமாவை இப்படி சைட் அடிக்கிற? என் விம்பத்தை உன் கண்ணுல தேக்கி வைக்கும் திட்டமோ!” 
“உங்களுக்கு இப்படியெல்லாம் பேச வருமா?”
“அமுதன் பேசுறதுக்கு இது ரொம்ப குறைவுதான். அவன் கூட பொறந்தவன் இல்ல கொஞ்சமாச்சும் பேச வேணாமா? இப்படியெல்லாம் பேசினாத்தான் பொண்டாட்டி மடங்குவானு அவன் தான் டிப்ஸ் கொடுத்தான்” தீவிரமான முக பாவத்தோடு சொல்ல யாழிசைக்கும் சிரிப்பு பீறிட்டு வரவே அவன் நெஞ்சில் முகம் புதைத்தவள் சிரிக்க, 
“எதுக்கு சிரிக்கிற?” 
“உங்களுக்கு டிப்ஸ் சொல்லிக் கொடுத்த உங்க குருநாதர் கம்பனி ரகசியங்களை வெளியே சொல்ல கூடாதென்று சொல்ல மறந்துட்டாரா?” கேட்டவாறே மீண்டும் நகைக்க 
“அட ஆமாமில்ல”  நாக்கை கடித்தவாறே தலையில் அடித்துக் கொள்ள 
“நீங்க இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க” என்றவள் கண்ணடிக்க அவளை அறியாமல் செய்த செயலை இரவு விளக்கொளியில் கண்டவன் சொக்கி நிக்க 
“அப்போ இதுக்கெல்லாம் சரிப்பட்டு வருவேன்னு உனக்கு தெரியுமா? ஐஞ்சு வருஷ காப்புல எல்லாம் மறந்துட்டேன்னு சொல்றியா?” அவள் அருகில் மேலும் நெருங்கியாறே தாபம் நிறைந்த குரலில் “ஸ்ரீராம் வேற தனியா இருக்கான் பாவமில்லை. ஒரு தங்கச்சியோ! தம்பியோ! ஏற்பாடு பண்ணி கொடுத்திடலாமா?”
கணவனின் குரலில் இருந்த பேதம் உணர்ந்தவள் அவன் முகம் பார்க்க வெக்கப் பட்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.
“தாலிபெருக்கு சடங்கு முடியட்டும் வாழ்க்கையை புதுசா முதல்ல இருந்து ஆரம்பிக்கலாம். செகண்ட் ஹனிமூனுக்கு எங்க போலாம்” ஆசையாக மனைவியை நோக்க 
“ஊட்டி போலாம் அப்படியே! பிரதீபன் அண்ணாக்கு பொண்ணு பார்த்தா மாதிரியும் இருக்கும்” என்றவள் திவ்யாவை பற்றி சொல்லலானாள்.  
அவள் ஊட்டி போலாம் என்றதில் மனம் சிறகில்லாமல் பறக்க அவள் சொல்வதை அமைதியாக கேட்டிருந்தவன், அவளை இறுக அணைத்துக் கொண்டு “வார் பேபி கோபம் எல்லாம் போய்யிருச்சா?” அவள் தலையில் கன்னம் பதித்தவாறே கேக்க 
“கோபம் இல்ல வருத்தம் தான் இருந்தது. நீங்க பேசினத்துல சரியாகிருச்சு” 
“நா பேச எவ்வளவோ ட்ரை பண்ணேன் நீதான் பேச விடாம ஓடி ஒளியிற” 
“பயம் தான் காரணம். எங்க நீங்க திரும்பவும் ஏதாச்சும் சொல்லிடுவீங்களோனு” என்றவாறே அவன் முகம் பார்க்க அவள் மனநிலையை புரிந்து கொண்டவன் 
“ம்… பிரச்சினைனு வந்தா ஓடி ஒளியவும் கூடாது, அமைதியாகவும் இருக்க கூடாது சண்டை வந்தா கூட பரவால்ல பேசி தீர்த்துக்கலாம் ஓகே வா” அவள் கண் பார்த்து நிற்க 
“சண்டையா எனக்கு சண்டை போட தெரியாதே” 
“ஆமா நான் டைலியும் வாள் சண்டை, கத்தி சண்டை போடுறேன் பாரு. வாய் சண்டை தான் டி.  தோசை கரண்டி,  பூரி கட்ட இந்த மாதிரி வெப்பன்ஸ் எல்லாம் கைல எடுக்க கூடாது சரியா. மாமா பாவம் இல்ல” 
அவன் சொன்ன விதத்தில் யாழ் சத்தமாக சிரிக்க, அவள் வாயை கை கொண்டு மூடியவன் “இந்த நேரத்துல இப்படி சிரிச்சா மோகினி பிசாசு வந்துருச்சுனு எல்லாரும் பயந்திட போறாங்க டி” 
“நீங்க நல்லா பேசுறீங்க”
“இன்னம் கொஞ்சம் நாள்ல நீயும் பேசுவ. பேச வச்சுடுறேன். பேசாத வாய்க்கு தண்டனை கொடுத்து பேச வைச்சிடலாமா?” 
“அதிகமா பேசினா தானே தண்டனை கொடுப்பாங்க?” 
“நா வித்தியாசமா ட்ரை பண்ணுறேன்” என்றவன் அவள் இதழ் நோக்கி முன்னேறினான்.
“எல்லா குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில்  பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே அன்னை வளர்ப்பினிலே!” ஒரு பெரியவர் பாட காற்றோடு  கலந்து சொன்ன செய்தியும் ரிஷிக்கு பொருத்தமாகவே இருந்தது. 
பழிவாங்கும் உணர்ச்சியில் பெற்ற பிள்ளையென்றும் பாராமல் பாலகனாய் ரிஷியடைந்த இன்னல்கள் அவன் வாழ்க்கையை எப்படி எப்படியோ திசை மாற்றி இருக்க,  
ரிஷியின் கண்ணில் விழுந்த கயலின் விம்பம் அவன் தன்னை மறந்த நிலையிலும் அவனின் நெஞ்சை விட்டு நீங்காமல் பசுமரத்தாணி போல் பதிந்து போன மாயத்தால் அவன் வாழ்வில் காதல் கைகூடியது. 
அவர்கள் வாழ்வில் இனி நிம்மதியும், சந்தோஷமும் என்றென்றும் நிலைக்கட்டும் என்று வாழ்த்தி விடை பெறுவோமாக.
                                                                    சுபம்

Advertisement