Advertisement

அத்தியாயம் 26
ஏப்ரல் மாதம் தொடங்கும் போதே வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்க குயில் கூவும் இன்னிசை ரம்யமாக கேட்க ஆரம்பிக்கும். தொலைக்காட்ச்சியிலும் “அவ்ருது  கீத” எனும் நெஞ்சை மயக்கும் புத்தாண்டு மெல்லிசை பாடல்கள் ஒளிபரப்பப்படும்.  
நாடெங்கும் பட்டாசு வெடிக்க சிங்கள, தமிழ் புதுவருடத்தை வரவேற்றனர் நாட்டு மக்கள். தமிழர்கள் சித்திரை புத்தாண்டாக கொண்டாட சிங்களவர்கள் புது வருட பிறப்பாக கொண்டாடுவார்கள். புதிய துணியிலிருந்து சமையலுக்கென்று முக்கியமாக பால் காய்ச்ச என்று புது மண் பானை வாங்குவார்கள். 
எல்லாவற்றுக்கும் “நெகத்” எனும் மங்களகரமான நேரம் பார்த்தே ஆரம்பிப்பார்கள். பிறை பார்த்தல், பழைய ஆண்டுக்கான குளித்தல், புதுவருரட பிறப்பு, புண்யகாலய, சமைத்தல், வேலை செய்ய ஆரம்பித்தல், கொடுக்கல், வாங்கல், ஆகாரம் உண்ணுதல், தலைக்கு என்னை தடவுதல், தொழிலுக்காக வெளியேறி செல்லுதல் என்பன மங்கள நேரத்தில் செய்வார்கள். 
புத்தாண்டுக்கு துணி எடுக்க யார் யார் செல்வது என்ற பேச்சு எழுந்த போது
“புத்தாண்டுக்கு துணி எடுக்கும் போதே கல்யாணத்துக்கும் சேர்த்து துணி எடுத்துடலாம்” மங்கம்மா சொல்ல
பெரிய சூட்கேசோடு வந்த ரிஷி அதை திறக்க அங்கே நிறைய புதுத்துணிகள் இருந்தன. 
“எல்லாம் உங்க பொண்ணு பாத்து பாத்து வாங்கினதுதான். இன்னும் ஏதாவது வாங்கணும் என்றால் போய் வாங்கிக்கலாம்”
கயல்விழி யாருக்கு என்னென்ன வாங்கினாள் என்று பட்டியல் இட்டவாறே எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அதில் சாந்திக்கும், இளாக்கும் என்று தனியாக வாங்கியதை கொடுக்க, சாந்தி ஆசையாக பெற்றுக் கொள்ள சீதா இளவேந்தனை தான் கூர்மையாக பாத்திருந்தாள். அவனும் சந்தோசமாக தான் வாங்கிக் கொண்டான். வந்த அன்னைக்கே அவன் யாழிசையிடம் முழுமனதாக மன்னிப்பு கேட்டதை தான் சீதா அறிந்திருக்க வில்லையே! இளசுகளோடு ஒட்டாத இளாவும் அமுதனோடு சேர்த்து இயலையும், அகல்யாவையும் ஒரு வழி பண்ணிக்க கொண்டிருந்ததை கண்டு குடும்பம் ஒண்ணான சந்தோசமே அவர் முகத்தில் பிரதிபலித்தது. 
அகல்யா, சிவரஞ்சனி, சரவணன் மற்றும் அமுதனுக்கும் வாங்கி வந்திருந்தாள் கயல். அதை எதிர்பாத்திருக்காத அவர்களுக்கும் அப்படியொரு சந்தோசத்தை கொடுத்திருந்தது. அகல்யா கயலை கட்டிக் கொண்டு முத்தமிட சிவரஞ்சனி வாஞ்சையாக அவளின் தலையை தடவினார். 
அங்கே நடப்பவற்றை அமைதியாக பாத்திருந்த ரிஷி “எல்லார் மனசையும் கொள்ளையடிப்பது எப்படினு இவ கிட்ட கிளாஸ் எடுக்கணும் போல இருக்கு. அவளை கூட்டிக்கிட்டு ஷாப்பிங் போனா கொஞ்சம் நெருங்கி வருவான்னு பாத்தா அந்த பக்கம் நெருங்கிட்டா”   
“என்ன ப்ரோ?  அத்தனை பேர் இருக்கும் போது இப்படி பொண்டாட்டிய பச்சயா சைட் அடிக்கிற?” அமுதன் ரிஷியின் காலை வார 
அவ என் பொண்ணாட்டி டா நா தாராளமா சைட் அடிக்கலாம்” கயலிடமிருந்து கண்களை எடுக்காமல் கெத்தாக ரிஷி கூற அவன் பார்வையை சந்திக்க முடியாமல் அவள் தான் தலை குனிந்தது முகத்தில் வந்த வெட்கத்தையும் சிவந்த கன்னங்களையும் மறைக்க வேண்டி இருந்தது.
அடுத்து சித்திரை புத்தாண்டை கொண்டாட இனிப்புவகைகளை வீட்டிலேயே செய்ய ஆரம்பித்தனர் பெண்கள். உதவி செய்கிறேன் என்று ஆண்களும் சேர்ந்துக் கொள்ள பாட்டும் கூத்துமாக சிற்றுண்டிகள் தயாராக சூடென்றும் பாராமல் அகல்யாவும், அமுதனும் ருசி பார்க்கவென்று சொல்லி  சொல்லியே தட்டை காலி செய்து கொண்டிருந்தனர்.  
 
அதிரசம், சீட, முறுக்கு, பலகாரம் என்பதோடு சிங்களவர்கள் விஷேசமாக செய்யும், கொக்கிஸ், அலுவா, வெளிதளப, ஆஸ்மி, தொதொல் என்று எல்லா விதமான இனிப்புகளோடும் புத்தாண்டை கொண்டாட தயாரானார்கள்.  
 
காலையிலையே குளித்து விட்டு அமுதனும் ரிஷியும் ஒரேமாதிரி பட்டு வேட்டியும், நீலநிற சட்டையும் அணிந்திருக்க, இதில் யார் அமுதன், யார் ரிஷி என்று ஸ்ரீராமில் தொடங்கி அனைவரும் குழம்பிப் போய் நிற்க, கயல்விழிக்கு எந்த குழப்பமும் இல்லை. 
கோவிலுக்கு செல்ல சிவரஞ்சனியும், சரவணகுமரனும் வரவே “அப்பா இதுல யாரு ரிஷி அண்ணா யாரு அமுதன் அண்ணா?” பெற்றவருக்கு தன்னுடைய பிள்ளைகளை அடையாளம் தெரியாமல் போய் விடுமா? 
ஒரு சின்ன புன்னகையை சிந்தியவர் “அத நீயே கண்டு பிடிச்சா ஐயாயிரம் ரூபா தரேன்” என்றவர் அமுதனுக்கு கண்ணடித்து விட்டு வெளியேற அகல்யா சிவரஞ்சனியை பிடித்துக் கொண்டாள். 
  “அம்மா நீ சொல்லு” கேலி கிண்டலோடு அமுதனையும், அமைதியாக ரிஷியையும் பார்த்திருந்தவளுக்கு கொஞ்சம் குழப்பமாகவே இருக்க, 
“அதான் உன் அப்பா சொல்லிட்டாரே” என்று சரவணகுமரனை பின் தொடர்ந்தாள்.
“எதுல விளையாடுறதென்னே ஒரு விவஸ்தையில்லா போச்சு” என்று முணுமுணுத்தவாறே மங்கம்மா வெளியேற 
“வீட்டை பூட்டிட்டு பூஜைக்கு முன்னாடி கோவிலுக்கு வந்திடுவீங்களா?” என்றவாறு சீதாவும் செல்ல யோகராஜும் சிரித்தவாறே அவர்களோடு நடக்கலானார்.
பட்டுப் புடவையில்  தலை நிறைய அவளுக்கு பிடித்த கனகாம்பரம்  சூடி பொருத்தமான அணிகலன்களோடு கோவிலுக்கு செல்ல வாசலுக்கு வந்த  யாழிசை அங்கே அனைவரும் அவள் முகத்தை பாத்திருப்பதை கண்டு என்ன விஷயம் என்று கேக்க, 
“இதுல ரிஷி மாமா யாரு? அமுதன் அத்தான் யாரு? ஒரே குழப்பமா இருக்கு”  தலையை சொறிந்தவாறே இயல்.
“எனக்கே குழப்பமாத்தான் இருக்கு அகல்யா வேறு கண்ணை உருட்டி இருவரையும் பார்க்க, இருவருமே ஒரு சின்ன புன்னகையோடு அமர்ந்திருந்தனர். 
“அக்கா உன் புருஷன் யார்னு உன்னால கண்டு பிடிக்க முடியுமா?” அதி முக்கியமான சந்தேகத்தை இயல் கேக்க அங்கே வந்த சாந்தியும் யோசனையாக பாத்திருந்தாள். 
இளாவும், தனாவும் கூட இதுதான் ரிஷி, இதுதான் அமுதன் என்று மாறி மாறி சொல்லிக் கொண்டிருக்க, கையில் இருந்த அர்ச்சனை தட்டை பார்த்த கயல்விழி அந்த பித்தளை தட்டை இருவருக்குமே தூக்கிக் காட்ட அன்று வாங்கிய அடியின் நியாபகத்தில் ரிஷி நெற்றியை தடவிக் கொண்டான். மென்னகை புரிந்த அவனின் மனையாள் அர்ச்சனை தட்டை அவன் கையில் கொடுத்து ஸ்ரீராமை  தூக்கிக் கொண்டு  முன்னாள் நடக்க ரிஷியும் சிரித்தவாறே அவளின் பின்னால் நடந்தான். பாவம் மற்றவர்கள் தான் அங்கே என்ன நடந்தது என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பாத்திருந்தனர். 
குடும்பம் சகிதமாய் கோவிலுக்கு சென்று பூஜையில் கலந்துக் கொண்டு வீடு வந்தவர்கள் வித, விதமாக மேசையை அலங்கரித்திருந்த உணவுகளை சாப்பிடலானார்கள். கமரும் கணவன் குழந்தைகளோடு வந்திருப்பதையறிந்த கயல் இனிப்பு பண்டங்களோடு சென்று நலனும் விசாரித்து அரட்டையடித்து விட்டே வீடு வந்தாள்.
“எங்க ஊரில் என்றால் புதுப் படம் ரிலீஸ் பண்ணுவாங்க மாலையில் இங்க என்ன பண்ணுவீங்க? மூக்கு முட்ட சாப்பிட்டுடு குப்புற கவுந்தடிச்சு படுப்பீங்களோ?” அமுதன் கேலியாக ஆரம்பிக்க, 
“மாலையில் ஒரு இடத்துக்கு போலாம் அங்க உன் வீர, தீர சகாசங்கள் எப்படி இருக்கு னு பார்க்கலாம்” இளா தாடையை தடவியவாறே சொல்ல தனாவும் சத்தமாக சிரித்தான். 
“என்ன?” என்று அகல்யா கேக்க 
“நீயும் வா உனக்கும் வேல இருக்கு” தானா சொல்ல “அப்படி என்ன?” என்ற பார்வை தான் அவளிடம். 
மாலையில் அந்த விளையாட்டு மைதானமே நிரம்பி வழிந்தது புத்தாண்டு விளையாட்டுக்களை கொண்டாட ஆரம்பித்திருந்தனர். மத பேதமின்றி ஊர் மக்கள் அனைவரும் கலந்துக் கொள்ள கூடிய விழாவாக இருக்க, பெரியவர்களுக்கு, சிறியவர்களுக்கு, ஜோடிகளுக்கு என்று போட்டிகள் நடை பெற அவ்விடமே சந்தோசம் நிரம்பியுள்ள சொர்க்க பூமியாக காணப்பட்டது. 
சிங்களவர்களின் பாரம்பரிய உடையான “ரெத்ததை ஹெட்டை” எனும் உடையில் வயதுக்கு வந்த பெண்கள் “அரளியா மல” எனும் பூவை காதோரம் சூடி, பெரிய கொண்டையிட்டு.  பெரிய பேரிகையை அடித்தவாறே பாடி விழாவை ஆரம்பித்து வைக்க, முதலில் சிறுவர்களுக்கான போட்டிகள் ஆரம்பமாக ஆர்வமாக குழந்தைகள் கலந்து கொண்டனர். யானைக்கு கண் வைத்தல், பன் சாப்பிடுதல், கயிறிலுக்கும் போட்டி, பலூன் ஊதுதல், போன்றவை நடை பெற ஸ்ரீராம் பலூன் ஊதும் போட்டியில் மட்டும் கலந்துக்க கொண்டான். வெற்றி பெறவில்லையானாலும் குழந்தைகளுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட இனிப்புவகைகளும், பென்சில், பலூன் போன்ற சிறுவர்கள் விரும்பும் சின்ன சின்ன பொருட்கள் அதில் இருக்க,  ஸ்ரீராமும் அவனுக்கு கிடைத்த பரிசுப்பொதியை தூக்கிக் காட்டியவாறு துள்ளிக் குதித்தான்.
அதன் பின் பெரியவர்களுக்கான போட்டிகள் நடை பெற இருபாலாருக்கான போட்டிகளில் அனைவருமே கலந்துக் கொள்ள யானைக்கு கண்வைத்தல் போட்டியில் இயல் வெற்றி பெற்றாள். கல்யாண பொண்ணு என்று அவளுக்கு சத்தான ஆகாரங்களை சீதாவும், மங்கம்மாவும் ஊட்டியே இயல் கொஞ்சம் குண்டாகி இருக்க.
“அது சரி தன்னோட கண் எங்க இருக்குனு தனக்கு தானே தெரியும்” அமுதன் இயலை யானை குட்டி என்று வம்பிழுக்க அவனை முறைத்தவள் தனாவிடம் முறையிட்டாள். 
“இந்த அமுதன் அத்தான் எப்போ பாத்தாலும் ஏதாவது சொல்லி கிட்டே இருக்குறாரு போய் என்ன னு கேளு” இயல் கோபமாக சொல்ல 
சட்டையின் கையை மடித்தவாறே “என்ன சொன்னான் அவன்” தானாவும் கோபமாக கேக்க இயல் சொல்லலானாள்.
“டேய் தானா இயல் எனக்கு அத்த பொண்ணு கல்யாணம் ஆகும் வரை நா வம்பிழுப்பேன் நீ கண்டுக்க கூடாது” என்று  அமுதன் ஏற்கனவே சொல்லி இருக்க  
“என்ன செய்றது இயல் அத்த பொண்ணு, கட்டிக்க போறவ நா உன்ன யான குட்டின்னு சொன்னா கல்யாணத்துக்கு அப்பொறம் நீ என்ன தும்பிக்கையால் சி.. உன் ரெண்டு கையாலையும் அடிப்ப என் உடம்பு தங்காதில்ல அதான் நா சும்மா இருக்கேன். அவனாச்சும் உண்மைய சொல்லி சந்தோசப்படுறானே விடு” தானா சிரிக்காமல் சொல்ல அவனை எதனால் அடிக்கலாம் என்று இயல் சுற்றும் முற்றும் பார்க்க அந்த இடத்தை விட்டு நழுவினான் தனவேந்தன்.
தேசிக்காய், கரண்டி ஓட்டத்தில் அகல்யா வெற்றி பெற,  “உன் கழுத்து ஒட்டகசிவிங்கிமாதிரி நீட்டமா இருக்கு தலையை நீட்டிகிட்டே நடந்ததால் தான் நீ வெற்றி பெற்ற” அமுதன் அவளையும் வம்பிழுத்து சில அடிகளையும் பெற்றுக்கொள்ள 
“இன்னும் நல்ல போடு அகல்” தன்னால் அடிக்க முடியாத குறையை இயல் கோபமூச்சுக்களாக வெளியேற்றினாள்.
மண் பானை உடைத்தலில் இளா வெற்றியீட்டினான். கயிறிலுக்கும் போட்டியில் அமுதன், ரிஷி, இளா, தானா, என என அனைவரும் கலந்துக்க கொண்டு வெற்றியை தட்டிச்சென்றனர்.
ஆண்களுக்கு மட்டுமேயான போட்டிகளில் தலையணை சண்டை, சருக்கு மரம் ஏறுதல், சிறப்பாக நடந்துக்க கொண்டிருக்க, அதில் கலந்துக்க கொள்ள அமுதனுக்கு தெரியாமலையே அவன் பெயரை கொடுத்து விட்டிருந்தனர் இயலும், அகல்யாவும். தன் பெயரை அழைக்கவும் அமுதன் முழிக்க, ஒன்னும் அறியாதவர்கள் போல் அகலும், இயலும் ஆர்ப்பரித்து அவனை இப்போட்டிகளில் கலந்து கொள்ள அனுப்பியிருக்க, மைதானத்திலிருந்தே காணாமல் போனான் அமுதன்.
புத்தாண்டின் மிக விஷேசமான விளையாட்டு ஊஞ்சல் ஆடுவதேயாகும். உயரமான மரத்தில் கயிறு கட்டப்பட்டு ஊஞ்சல் அமைக்கப் பட ஆடுவதாக குழந்தைகள் தொடக்கம் குமரிகள் வரிசைகட்டி நின்றனர்.
பெண்களுக்கு ஓலை பிண்ணுதல் போட்டியில் கலந்துக்க கொண்ட மங்கம்மா வெற்றி பெற, தேங்காய் துருவல் போட்டியில் சீதா வெற்றி பெற்றார்.
ஜோடிகளுக்காக, மாறு கால் கட்டி ஓட்டப் போட்டியில் இளாவும் சாந்தியும் கலந்துக்க கொண்டனர். பெண்ணின் கண்ணை கட்டி ஆணுக்கு யோகர்ட் ஊட்ட, கை கட்ட பட்ட நிலையில் சிந்தாமல் சாப்பிடும் ஜோடியே யோகர்ட் ஊட்டும் போட்டி போட்டியில் வெற்றி பெறுவார்கள்.  இதில் ரிஷி, யாழிசை ஜோடியே வெற்றி பெற்றனர்.
வித்தியாசமாகவும், இனிமையாகவும் மாலை ஆறு மணி வரையும் நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளோடு வீடு திரும்பிய அனைவருக்கும் நெஞ்சில் நீங்க பசுமையான நினைவுகளாக பதிந்துப் போனது இவ்வருட சித்திரை புத்தாண்டு.
இலங்கை வந்த பின்னும் ரிஷி, கயல் உறவின் விரிசல் சீராகவில்லை. குடும்பத்தோடு இருக்கும் பொழுது சிரித்து பேசுபவள் ரிஷியை கணவனாக சந்திக்க தவிர்ப்பதை உணர்ந்துக் கொள்ள ரிஷிக்கே சில நாட்கள் எடுத்தது.
மருத்துவமணையில் இருந்து வந்த ரிஷியை கயல் பகல் முழுவதும் கவனித்துக் கொண்டாலும் இரவில்  ஸ்ரீராமை தூக்கிக் கொண்டு திலகாவின் அறையிலையே தங்கி விடுவாள். ரிஷியின் உடல் நிலையின் காரணமாக யாராவது அவன் கூடவே இருக்க வேண்டியதால் பிரதீபன், அமுதன், சரவணகுமரன் என ஆண்கள் மாறி மாறி இருக்க,  ரிஷியின் கண்களில்  மனைவியின் ஒதுக்கம் விழவில்லை. 
இலங்கை வந்த பின் திலகாவோடு சிவரஞ்சனி தங்கிக் கொள்ள அமுதனோடு சரவணகுமரன் தங்கிக் கொள்ள  தனதறையில் மனைவிக்காக ஆவலாக காத்திருந்த ரிஷிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆசை மனைவி அகல்யாவுடன் தூங்கி இருந்தாள். 
இதை பற்றி விசாரித்தால் “ஸ்ரீராம் அடிக்கடி இரவில் அழுவான் என்று ரிஷி உடம்பு முடியாமல் இருக்கும் போது சொன்னது போல் அகல்யா கூட தங்க கிடைக்கவில்லை அதான்” என்று நழுவி விடுவாள் கயல். 
அவளின் காதல் அவனை கல்யாணம் செய்த பின் வந்தது, அவன் என்னதான் அவளை படுத்தி எடுத்தாலும் கணவன் என்று பொறுமையாக இருந்தவளின் காதல் இன்று வரை மாறவே இல்லை. அவனை ஐந்து வருடங்கள் கடந்து  கண்ட பொழுது கூட கண்களில் காதல் வழிய பாத்திருந்தவள் தான். அவளின் குணத்திலோ, நடத்தியிலோ, பேச்சிலோ எந்த மாற்றமும் இல்லை. அன்பாக அரவணைப்பதில் அன்னையையும் மிஞ்சி விட்டவள். ஆறுதல் தேடும் போது தோழியாக தோள் கொடுப்பவள். மடி சாயும் நேரத்தில் காதலியாக காதலிப்பவள். மனையின் அவதாரத்தை மாத்திரம் தவிர்க்கிறாள்.  
முதலில் அதை கவனிக்காமல் விட்ட ரிஷி போகப் போக கயல்விழி தன்னை ஒதுக்குவதை உணர்ந்தான். அனைவரும் இருக்கும் போது நன்றாக சிரித்து பேசுபவள் தனிமையில் அவனை சந்திப்பதை தவிர்க்கின்றாள். ஏனென்று தான் அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அவளோடு தனியாக பேச சந்தர்ப்பம் பாத்திருந்தான். ஆனால் அதை அவனுக்கு அவன் மனையாள் வழங்கவே இல்லை.

Advertisement