Advertisement

அத்தியாயம் 23
மெதுவாக கண் திறந்தான் ரிஷி. மருந்தின் நெடியிலையே தான் எங்கே இருக்கின்றேன் என்பதை நொடியில் அறிந்துக் கொண்டவன் கண்களை திறக்கவும் பிடிக்காமல் மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். 
கடந்த  நாட்களாக அவனது வாழ்க்கை மருத்துவமனையோடு தான் கடக்கிறது.  செத்தும் சாகாமல். பிழைத்தும் வாழ முடியாத அவலநிலை. ஏன் பிறந்தேன்? யாருக்காக வாழனும்? என்று பலரது கேள்விகளுக்கு மத்தியில் அவளுக்காக நான் பிழைக்க மாட்டேனா? அவளோடு சந்தோசமாக வாழ முடியாதா? என்றே ரிஷியின் மனம் அல்லாடும். 
மனைவியின் சுகந்தமும் நாசியை நிரப்ப பட்டென்று கண்களை திறந்தவனுக்கு காணக் கிடைத்தது எங்கே அவன் தன்னை விட்டு மீண்டும் சென்று விடுவானோ என்றஞ்சி தனது இரு கைகளாலும் அவனது கையை இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டு அதன் மேலையே கன்னம் பதித்து தூங்கும் மனைவியையே! அவளின் செயல் ரிஷியின் முகத்தில் புன்னகையை வரவழைக்க தூங்கும் மனைவியையே பாத்திருந்தான். 
பிளாஸ்டிக் கதிரையில் அமர்ந்தவாறு இடுப்பை வளைத்து நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். கணவனை விட்டு சென்றதில் சரியான தூக்கம் இல்லாமல் கண்ணீரில் கரைந்த இரவுகள் ஏராளம்.  இறந்து விட்டான் என்று செய்தி கேட்ட பின் முற்றாக தொலைத்த தூக்கத்தை இன்றுதான் தொடர்கிறாள். 
அவள் சிரமப் பட்டு தூங்குவது ரிஷிக்கு கவலையை கொடுக்க மெதுவாக எழுந்து அமர்ந்தான். அவன் எழுந்து அமர்ந்த அசைவில் கண்விழித்தாள் அவனின் வார். 
“ஏதாவது வேணுமா?  பாசிக்குதா?  குடிக்க ஏதாவது கொண்டு வரவா?  காபி? ஜூஸ்? தண்ணீர் தரவா?” கடகடவென ஒப்பிக்க அவளின் கைகளை பிடித்துக் கொண்டவன் 
“நா உன்ன கட்டி பிடிச்சிக்கட்டா?”
“ஆ..” என்று விழித்தவளின் முகம் மென்மையை தத்தெடுக்க தலை தானாக ஆடியது. 
அந்த மருத்துவமனை சிறிய கட்டிலில் அவளின் கால்களோ அவனின் கால்கள் மீது இருக்க அவள் விழுந்து விடாமல்  அவனின் வலது கையை அவளின் முதுகை சுற்றியும் இடது கையை இடுப்பை சுற்றியும் போட்டு யாழிசையின் நெஞ்சின் மீது தலை வைத்து கண்மூடி படுத்துக்க கொண்டான் ரிஷி. 
அந்த நள்ளிரவில் மனைவியின் அருகாமை அவனின் நினைவலைகளை தூண்ட “வார் என்ன நீ மன்னிச்சிட்டியா?” கண்களை திறவாமலையே கேள்வி எழுப்பி இருந்தான் ரிஷி.
நீண்ட நாட்களுக்கு பிறகு கணவனின் தொடுகையில் உடல் சிலிர்க்க, அவன் தலை வைத்து தூங்கும் இடம் குறுகுறுக்க, வெட்கத்தால் முகமும் சிவந்து இருந்தவள் அவன் கேட்ட கேள்வியில் கண்கள் கலங்க அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். 
அவள் கண்களில் வழியும் கண்ணீர் ரிஷியின் கன்னம் நனைக்க, தலை தூக்கி அவளை பார்த்தவன் தனது உதடுகளாலையே அவளின் கண்ணீரை துடைக்க அவன் செய்கையால் மேலும் சிவந்தாள் விழி. 
கயல்விழிக்கு ரிஷியிடம் ஆயிரம் கேள்விகள் கேட்க வேண்டி இருந்தது. அவனின் உடல் நிலைகூட அவளுக்கு சரியாக தெரியாது. ஏதாவது கேட்கப் போய் அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று அவளின் சிறு இதயம் நினைக்க, ரிஷியே அவளிடம் கேள்வியை தொடுத்தான். 
“ஏன் வார் என்ன விட்டு போன. நீ இல்லனா நா இல்லனு சொன்னேனே” அவள் நெஞ்சில் இன்னும் முகத்தை புதைத்தவாறே தான் செய்த அனைத்தையும் நொடியில் மறந்து பேசுபவனை என்னவென்று சொல்ல? பதில் சொல்ல முடியாமல் யாழிசை தான் திணறினாள். 
“நீ என்ன விட்டு போனதும் பைத்தியமாகிட்டேன். உன்ன எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா? ஒவ்வொரு நாளும் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து போன் பண்ணி மோசரிக்கு வா னு சொல்லும் போது செத்துட்டேன் டி…” அந்த நாட்களின் நினைவுகளால் அவனின் உடல் உதற ஆரம்பித்தது. 
ரிஷியை தன்னுள் இறுக்கிக் கொண்ட கயல் “பேசாம தூங்குங்க, வீட்டுக்கு போய் பேசலாம்” 
“இல்ல நா பேசியே ஆகணும்” என்றவன் தன் பாட்டுக்கு ஏதேதோ சொல்ல ஆரம்பித்தான். 
“என் அம்மா யார்னு தெரியுமா? ஒரு ராட்சஷி. அவங்க சிரிச்சி பேசி நா பார்த்ததே இல்ல. முகத்துல எப்போவுமே ஒரு கோபம் இருக்கும். அவங்களுக்கும் அப்பாக்கும் ஏதோ குடும்ப பிரச்சினை. தவறுதலான நாங்க பொறந்துட்டோம்.  நினைவு தெரிஞ்ச நாளல்ல இருந்து வேட்ட நாய்ங்க கூட அதனோட கூட்டுல தான் தூங்குவேன். தூக்கம் என்று சொல்ல முடியாது ரெண்டு காலையும் மடக்கி ஒரு மூலைல.. எங்க அதுங்க என்ன கடிச்சி கொதறிடுமோ என்ற பயத்துலையே சின்ன சத்தத்துக்கு திடுக்கிட்டு, தூங்கவும் முடியாம, வெளிய செல்லவும் முடியாம அந்த சின்ன கூட்டுக்குள்ள  தான் என் இரவுகள் செல்லும். பயத்துலையே யூரின் கூட பேண்ட்டுலயே போய்டும். அவங்க ஹாபியே ஒரு நாளைக்கு இரண்டு அடி பெல்ட்டால என்ன விளாசுவது தான்.  ” 
ரிஷி சொல்லும் போதே கண்களில் மிரட்ச்சியுடன் கயல்விழியின் கண்களுக்குள் வந்து போனது அக்காட்ச்சிகள். 
காலைல எழுந்ததிலிருந்து அவங்களுக்கு அடிமையா நா வேல பாக்கணும். காபி, சாப்பாடு எல்லாம் மேல அவங்க அறைக்கு கொண்டு போகணும். என்னால தூக்க முடியுமோ முடியாதோ,  சூடா இருந்தாலும் நான் தான் கொண்டு போகணும். ரெண்டு நிமிஷம் லேட் ஆனாலும் கொண்டு போனதை என் தலையிலேயே கொட்டுவாங்க. 
அந்த சின்ன வயதில் என்னெல்லாம் அனுபவித்திருக்கிறான் என்ற எண்ணம் போக அவன் கடைசியாக சொன்னதில் விழியின் உடல் உதறியது. காபி போடும் போதோ, சமைக்கும் போது தவறாக கொஞ்சம் சுடுநீரோ, சட்டியில் கை பட்டாலோ! சூடு தாங்காமல் அலறுவாள். தலையில் ஊற்றுவதென்றால் உடல் முழுக்க வலிந்து கடவுளே! 
“ஆனா நா அவங்கள அம்மா னு தான் கூப்பிடனும். அது மட்டும் ஏன் னு எனக்கு இன்னைக்கி வர புரியல. இங்க நடக்குறதெல்லாம் வாரத்துக்கு ஒருக்கா அப்பா வீட்டுக்கு செல்லும் போது சொல்லணும். அங்க இருந்து வந்த உடனே! அப்பா என்ன சொன்னார்? அழுதாரா? என்றெல்லாம் கேப்பாங்க. முதல்ல ஏன் கேக்குறாங்கனு புரியாததுனால பயத்துலையே எல்லாம் சொல்வேன். 
“அந்த சரவணன் கண்ணுல ரேத்த கண்ணீர் வடியானும்” னு ஆணவமா சிரிப்பாங்க.   
போக போகத்தான் புரிஞ்சது அப்பாவ அழ வைக்கத் தான் என்ன இப்படி கொடும படுத்துறாங்கனு. அதனாலயே! அப்பா வீட்டுக்கு போனா என்ன நடந்ததுன்னு சொல்லாம மறைக்க ஆரம்பிச்சேன். என்ன கேட்டாலும் மழுப்பி பதில் சொல்ல கத்துக்கிட்டேன். அப்போ எனக்கு ஏழு வயசுதான். என் அனுபவங்கள் அந்த வயசுலயே என்ன மேம்படுத்திருச்சு.”
“என்ன மாதிரி பொம்பளயா இருப்பாங்க ஒருத்தர பலி வாங்க பெத்த பையனையே” என்ற எண்ணம் தான் கயல்விழியிடம் 
அமுதனை பார்க்கும் போது பொறாமையா இருக்கும். ஆனா எனக்கு அவனை ரொம்ப புடிக்கும். அவன் என் கூட பேசவே மாட்டான். நானா போய் பேசினாலும் முகத்தை தூக்கி வைச்சுப்பான். அத்தையும், அப்பாவும் என்ன நல்லா பாத்துப்பாங்க அம்மா செய்றதெல்லாம் சொல்லுறப்போவே அழுது கிட்டுதான் கேப்பாங்க. 
அவங்க கொடுமையெல்லாம் தாங்கிக்க பழகிக்கிட்டேன். அப்படி ஒருநாள் அப்பா வீட்டுக்கு போன போது அமுதன் என்ன பாத்ரூம்ல பூட்டிட்டு அவன் அம்மா வீட்டுக்கு போய் இருக்கான்.  அப்பா என்ன கூட்டிக் கிட்டு போகும் போது ட்ரெஸ் எல்லாம் மண்ணோட மயங்கி விழுந்திருந்தான். நாய்களும் அவனை சுத்தி இருந்தது. அதுங்களுக்கு தெரிஞ்சி போச்சு போல அது நா இல்லனு பயத்துல இவன் வேற ஓடி விழுந்து உடம்பெல்லாம் காயம். அம்மா வேற அது நா இல்லனதும் அப்பாவை பலி வாங்க அவனை பெல்டால் விளாசி இருக்காங்க போல தாங்காம தான் மயங்கி விழுந்துட்டான். 
ஆனா அப்போ அப்பா ஒரு வார்த்த சொன்னார் “உன் பையன நீ வச்சிக்க என் பைய நா கூட்டிட்டு போறேன்னு” அப்போ நா அவர் பையனில்லையா? ஒரு நாள் அமுதனுக்கு நடந்தது தினம் தினம் எனக்கு நடக்குதே! என்ன பாக்கும் போது மட்டும் அழுது அரவணச்சா சரியா? மொத்த கோவமும் அவர் மேல தான் திரும்பிருச்சு. அதன் பின் நா அப்பா வீட்டுக்கு போகவே இல்ல.
அப்பாவ அம்மா எப்படி ஏமாத்தி கல்யாணம் பண்ணாங்க, பழிவாங்க என்னெல்லாம் பண்ணாங்க னு என் கிட்டயே சொல்வாங்க. அப்போ எல்லாம் அப்பா பாவம் னு தோணி இருக்கு. ஆனா அவர் என்ன உன் பையன்னு பிரிச்சி பேசினப்போ அவர் மட்டும் ஒரு பொம்பள கிட்ட ஏமாறாம இருந்திருந்தா இது எதுவுமே நடக்காம இருந்துருக்கும் என்ற எண்ணம் என் மனசுல ஆழமா பதிஞ்சி போச்சு.
எல்லார் மீதும், எல்லாம் மீது வெறுப்பு மட்டும் தான் வந்துச்சு. அங்க இருந்து தப்பி போகணும் னு யோசிச்சேன். நாய்களை தாண்டி போக முடியாது. என் பின்னாடியே தான் சுத்திக்கு கிட்டு இருக்கும். என்ன பண்ணலாம் னு யோசிச்சேன். ஒன்னும் தோணல மாசமும் ஓடிக்கிட்டு இருந்தது. வழக்கம் போல எல்லாவேலையும் நடந்து கிட்டு தான் இருந்தது.  
அப்போ தான் மலர்விழி வந்தா. என் மாமா பொண்ணு என் கூட சிரிச்சி பேசி விளையாட கூப்பிட்டா. நா அவளை கண்டுக்காம போய்ட்டேன். ஏன்னா பயம் அவளோட பேசப் போய் அதுக்கும் அடி விழுமோ னு பயம். மாமா மட்டும் அடிக்கடி தனியா வருவாரு வந்தா அவரோட கால பிடித்து விடுறதுல இருந்து, சரக்கூத்தி கொடுக்குற வர நா செய்யணும். 
அண்ணனும், தங்கச்சியும் என் முன்னாடியே அவங்க செய்யும் அநியாயமெல்லாம் அவுத்து விடுவாங்க. அத்த அதான் மலர்விழியோட அம்மா அவங்க கண்ணுல பாசம் தெரியும் காட்டிக்க மாட்டாங்க. அத்தையும் அம்மா குணம் தெரிஞ்சி இங்க வராம இருக்காங்கனு அவங்கள பாத்தா அன்னைக்கி தெரிஞ்சிக்க கிட்டேன். ஒரு நாள் எனக்கு சாப்பாடு போட்டாங்கனு அம்மா அவங்கள அறைஞ்சிட்டாங்க. 
 மலர்விழினா மாமாக்கு மட்டுமில்ல என் அம்மாக்கும் உயிர். அவ கூட விளையாட சொல்லி நச்சரிக்க ஆரம்பிச்சா. அத பாத்துட்டு மாமா போய் விளையாடுன்னு கத்திட்டாரு.  
பெரிய பந்த அவ தூக்கி போட நா பிடிக்கணும். அந்த நேரம் காவலாளி கேட்ல இல்ல கேட் வேற  திறந்திருக்க பந்து ரோட்டுக்கு போய் இருச்சு. போய் எடுத்துட்டு வர சொல்லி அழ ஆரம்பிச்சா. வெளிய போனா நாய்ங்க என்ன கடிச்சி கொதறிடும் னு பயந்து அப்படியே நின்னேன். அவளும் அழுறத விடல.   
அவளை அழ வச்சா அடிப்பாங்கனு வேற வழி தெரியாம வெளிய போனேன். நாய்ங்களும் என்ன ஒன்னும் பண்ணல. பால எடுத்துக் கிட்டு வரும் போது மலர்விழி கேட்ட பூட்டிட்டா. கேட்ட திறனு சொல்லி கிட்டு இருக்கும் போது அம்மா துப்பாக்கியோடு அங்க வந்தாங்க.
அம்மா கைல துப்பாக்கியை பாத்ததும் சர்வமும் நடுங்கிருச்சு. அவங்க சுட்டது நாய்களை. மலர்விழிக்கு என்ன புரிஞ்சது தெரியல அதிர்ச்சில நா பாத்துக் கொண்டிருக்கும் போதே மலர்விழி இங்க இருந்து எங்கயாவது போய்டு னு சிரிச்சி கிட்டே சொன்னா.
அப்போ ஒன்னும் புரியல. போ சீக்கிரம் போ. ஓடிடு னு அவ சொல்ல சொல்ல ஓட ஆரம்பிச்சேன். தலைதெறிக்க ஓடினேன். எங்க போறதுன்னு தெரியாம இருக்கும் போது தான் மோகன் மாமா என்ன கண்டு 
“அமுதா இங்க என்ன பண்ணுறன்னு கேட்டாரு?” 
நா அமுதன் இல்ல ரிஷி னு சொன்னேன் 
“அந்த பேய் கிட்ட இருந்து தப்பிச்சிட்டியா?” என்றவர் என்ன மும்பை கூட்டிட்டு வந்தாரு. 
அவரை நா அப்பா வீட்டுல போட்டோல பாத்திருக்கேன். அத்தைய பாக்கணும் னு சொன்னப்போ செத்துட்டாங்கனு சொன்னாரு. 
மாமா என்ன நல்லா தான் பாத்துக் கிட்டாரு. ஆனா மனசுல ஒரு வித ரணம் இருந்து கிட்டே இருந்தது. மாமா உயிரோட இருக்குற வரைக்கும் எல்லாம் ஒழுங்காதான் போய் கிட்டு இருந்தது. அவர் இறந்த பின் தனிமையும், விரக்தியும் பழைய சம்பவங்களும் என்ன ஆட்கொள்ள ஆரம்பிச்சது. 
பணத்துக்காக, பதவிக்காக என்ன வேணாலும் செய்ய நினைக்கும் பெண்கள் என்ன அணுகும் போது அவங்க எதுக்காக என்ன அணுகுரங்களோ அத கொடுக்காம அவங்கள அனுபவிச்சு ஏமாத்துறதுல ஏதோ அவங்கள பலி வாங்கின திருப்பதி கிடைச்சது. ஏன் இப்படி பண்ணுறேன்னு எனக்கே தெரியல.
உன்ன பாத்த பிறகு ரெண்டு வருஷம் உன் விம்பம் என் கண்ணுக்குள்ளயே இருந்தது. நீ அந்த மாதிரி பொண்ணு இல்லனு மனம் சொல்லும். உன்ன என் நினைப்புல இருந்து துரத்த முயற்சி பண்ணேன். முடியாமத்தான் உன்ன தேடியும் வந்தேன். வந்த அன்னைக்கே அந்த ஜகத் உனக்கு லெட்டர் கொடுக்கவும் நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறீங்களோ னு சந்தேகம் வந்திருச்சு. 
ஆனா உனக்கு வீட்டுல கல்யாணம் முடிவு பண்ணப்போ இளாவை லவ் பண்ணுறியோ னு தோணிருச்சு. ஆனா அவன் உன்ன வேணாம் னு சொன்ன போ உங்க அத்த பேசினத்துல நா உன்ன அடைய கல்யாணம் பண்ண முடிவு பண்ணேன். 
கல்யாணத்து பிறகு உன்ன அடஞ்சி அங்கேயே விட்டுட்டு போகணும் னு முடிவு பண்ணி தான் மும்பாய் வந்தேன். ஆனா நீ இல்லாம என்னால இருக்க முடியல. திரும்பவும் வந்து உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன். அதுவும் என் ஆச அடங்கின பிறகு உன்ன திருப்பி அனுப்ப பார்த்து தான்” சொல்லி விட்டு மனைவியின் முகம் பார்க்க எந்த அதிர்ச்சியும் அவளுக்கு இல்லை போலும். நிர்மலான முகத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள். 
“நமக்குள்ள குழந்தைனு வந்தா குழந்தையால் நா உன்ன ஏத்துப்பேன்னு பயம் இருந்துச்சு  அப்படியும் உன்ன நா விட்டுட்டேனா? இன்னொரு ரிஷி வேணாம் னு முடிவு பண்ணி  ஊசி போட்டேன்”
அவன் பக்க காரணங்களை அடுக்க யாழிசையின் உள்ளம் வெம்பிக் கொண்டிருந்தது. 
“ரெண்டு மாசம் கடந்தும் உன்ன விட முடியாம போக, எங்கே உன்ன என் கூடயே வச்சிப்பேனோனு பயந்து தான் அன்னைக்கி…” அவன் குரலிலும் இறுக்கம் இருந்தது. 
“போதும் மணி வேற நாலு தாண்டிரிச்சு.  நாளைக்கு பேசலாம்” நடந்ததை நினைக்கும் போது வலிப்பதை விட அவனே சொல்லும் போது அதிகம் வலிக்க யாழிசை நிறுத்துமாறு தன்மையாக சொன்னாள். 
“இல்ல வார் நா இப்போவே எல்லாம் சொல்லணும். இதெல்லாம் சொல்ல எனக்கு இன்னொரு சந்தர்ப்பம் அமையுமானு தெரியல” அதை சொல்லும் போது அவனின் கண்கள் சற்று கலங்கி இருந்தது. 
அவன் ஏன் அப்படி சொல்கிறான் என்று அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. பேசியே ஆகா வேண்டும் என்பவனை என்ன செய்வது. அவன் சொல்வதெல்லாம் கேட்டால் ஆரிய புண்ணில் அசிட் ஊத்தினது போல் தான் இருக்கும். இருந்தாலும் கேட்டே ஆகா வேண்டிய நிலை அவளுடையது. “சொல்லுங்க” என்ற ஒற்றை சொல்லோடு அமைதியாக ரிஷி மீண்டும் தொடர்ந்தான். 
“எங்க உன் பக்கம் என் மனசு சாய்ஞ்சிடுமோ! நீ என்ன ஏமாத்தி போய்டுவியோ! என் காசுக்குத்தான் நீ என்ன கல்யாணம் பண்ணி கிட்டியோ! இப்படியெல்லாம் என் மனசு அலைக்கழிக்க ஆரம்பிச்சது. உன்ன விட்டு என்னால இருக்கவும் முடியல. நீ இல்லாம இருக்க முடியும் னும் தோணல. என் மனசு உன் பக்கம் சாஞ்சிட கூடாதென்றே உன்ன வார்த்தையால வதைக்க ஆரம்பிச்சேன். நா என்ன சொன்னாலும் நீ எதிர்த்து பேசாம அமைதியாக இருக்க அது என்ன இன்னும் சீண்டிப் பார்த்தது. அதனாலையேன் உன் உடம்பையும் காய படுத்தினேன். 
அன்னைக்கி நீ பிரதீபன் அணைச்சி கிட்டு அவன் ரூமுக்கு போனத பார்த்ததும் அப்படியொரு கோபம் வந்துச்சு. கண்மண் தெரியாத கோபம். நீ எனக்கில்லை என்கிற கோபம். அன்னைக்கி ஒரு பைத்தியகாரன் போல தான் நடந்து கிட்டேன். 
காலைல கண் விழிச்சி பாத்தப்போ நீ என் பக்கத்துல இல்ல. ஜகத்தையோ, இளாவையோ சம்பந்த படுத்தி பேசினப்போ தோணானது பிரதீப்பை சம்பந்த படுத்தி பேசினது நியாபகத்துல வந்ததும் ரொம்ப வலிச்சிருச்சு. அவனுக்கு தெரிஞ்சா என்ன கொன்னுடுவான். ஆனா அவன் சொன்ன வார்த்த என்ன கொன்னுருச்சு. நா உனக்கு கொஞ்சமாலும் பொருத்தம் இல்லனு சொன்னான். உண்மைதான். 
சத்தியமா உங்க ரெண்டு பேர் மேலையும் சந்தேகப்பட்டு அன்னைக்கி நா பேசல. அப்பொறம் உன்ன நெருங்கவே பயந்தேன். உன்ன ரொம்ப நோகடிச்சிட்டேன். எப்படி உன் முகத்தை பாக்குறது எப்படி எல்லாத்தையும் சரி செய்றது. இது தான் என் மனசுல ஓடி கிட்டு இருந்துச்சு. அந்த நேரத்துல தான் சென்னை நகைக்க கடை திறப்பு விழாவும் இருந்தது.  
சூரியன் தனது கதிர்களை பரப்பிக் கொண்டிருக்க, நர்ஸ் ஒருவர் கதவை தட்டிக் கொண்டு உள்ளே வர அவர்களின் பேச்சும் தடை பட்டது.
 

Advertisement