Advertisement

அத்தியாயம் 2
காதல் எங்கே?  எப்போது? எவ்வாறு? ஏற்படும் என்பதை முன் கூட்டியே அறிந்திருந்தால் அதிலிருந்து தப்பிக்க வழியையும் கண்டு பிடித்திருந்திருப்பார்களோ!   
ரிஷியின்  மனமோ கொதித்துக் கொண்டிருந்தது. யாழிசை அவனை அடித்ததில் தாங்க முடியாத வலியோடு தட்டுத்தடுமாறி வண்டியை ஓட்டிக்கொண்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தவன் நர்ஸை அழைத்து மருந்து போட சொல்லி ஆங்கிலத்தில் சொல்ல 
எப்படி காயமாச்சு, முதல்ல டாக்டர் பாக்கணும் என்று அவர் சட்டம் பேச காயத்தின் வலியை விட அவனுக்கு தலை கனக்கவே, கண்டமேனிக்கு வசைபாடலானான். அவன் தமிழில் திட்ட அவரோ முழிக்க 
“சே பாஷை தெரியாம அல்லாட வேண்டி இருக்கு” நொந்து கொண்டவன் “ரொம்ப வலிக்குது முதல்ல டாக்டர் கிட்ட என்ன அனுப்புங்க”
“அவன் வலி கண்களில் கொஞ்சமேனும் இல்லை. சிவப்பேறிய கண்களில் கோபமே! கனன்றது. ரிஷியை சந்தேகமாக ஏறிட்டவாறே டாக்டர் இருக்கும் அறைக்குள் நுழைந்தவர் வெளியே வந்து ரிஷியை உள்ளே அனுப்பி வைத்தார்.
டாக்டர் எப்படி அடிபட்டது என்று வினவ “வழுக்கி விழப்போகும் போது கரண்ட் கம்பத்தில் இடிச்சி கிட்டேன்” என்றவன் அருந்துவதுக்கு வலி நிவாரணி மாத்திரைகளையும் பெற்றுக்கொண்டு நர்ஸிடம் சென்று மருந்திட்டுக்கொண்டு அவன் தங்கி இருக்கும் அறையை அடைந்தான். 
வலிநிவாரணி மாத்திரைகள் இரண்டுக்கு பதிலாக நான்கை முழுங்கியவன் கட்டில் விழ யாழிசையின் முகம் அவன் கண்முன் வந்து இம்சிக்க 
“ஆசையாசையாய் உன்ன பாக்க வந்தா என்னையே அடிக்கிறியா? நா தொட்டா நீ கரைஞ்சி போய்டுவியா? இருடி” என்று கருவியவனின் எண்ணமெல்லாம் அவளை சந்தித்த நாட்களுக்கு  பயணித்தது. 
ரிஷி வரதன் மும்பையில் வசிக்கும் இருபத்தி ஐந்தே வயதான இளம் தொழிலதிபர். நகைகளை வடிவமைப்பதும், விற்பதும் அவன் தொழில். உழைப்பும், விடாமுயற்சியும் அவனை இந்த வயதில் இந்த நிலையில் வைத்திருக்க, அதற்க்கு முழு அடித்தளமும் அவனை வளர்த்த அப்பா மோகனசுந்தரையே சாரும். வைர நகைகள் போலவே, மாணிக்க கற்கள் பதித்த நகைகளுக்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட பங்கோக்கில் மாணிக்க கற்களை கொள்முதல் செய்து கொண்டிருந்தவன். கற்களை பற்றி அறிந்து கொள்ள இருபத்தி மூன்றாம் வயதில் இலங்கை வந்து சேர்ந்தான். 
சிங்கள மொழி தெரியாததால், கொழும்பிலிருந்தே ஒரு உதவியாளனை பெற்றுக் கொண்டவன், கொழும்பிலிருந்து நூறு கிலோமீட்டர் தரைவழி பயணித்து இரத்தினபுரியை அடைய அது மே மாதமாக இருப்பதால் வெசக் திருவிழா கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது.  தெருவெல்லாம் வெசக் விளக்குகள் தொங்க விடப்பட்டிருக்க பாதையில் கவனத்தை செலுத்தியவன் அறையை வந்தடைய இரவானது.
{இலங்கையில் முக்கிய பௌத்த  மத விழாவாக வெசக் உள்ளது. இந்த சமயத்தில், புத்தரின் மூன்று ஆண்டு நிறைவுகளை மக்கள் கொண்டாடுகிறார்கள் – அவருடைய பிறப்பு, அறிவொளியை அடைதல் மற்றும் இறப்பு. 
வண்ணமயமான மூங்கில் கட்டப்பட்ட விளக்குகள் ஒவ்வொரு வீட்டின் உட்புறத்தையும் அலங்கரிக்கின்றன மற்றும் ஒளிரும் காட்சிகள் பெரும்பாலான நகரங்களின் தெருக்களை அலங்கரிக்கின்றன.
வெசக் புத்த நாட்காட்டியின் முதல் மாதத்தைக் குறிக்கிறது. மக்கள் உலக நோக்கங்களை நிறுத்திவிட்டு, மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் இது பிரதிபலிப்பு ஜெபத்தில் கழித்த நாள். பக்தியுள்ள பௌத்தர்கள் விடியற்காலை முதல் சாயங்காலம் வரை கோவில்களில் பிரார்த்தனை செய்கிறார்கள். சூரியன் மறையும் போது, பக்தர்கள் ஊர்வலங்களில் கலந்துகொண்டு மாலை நேரத்தில் கோயில்களுக்குத் திரும்பி, துறவிகள் புனித நூல்களிலிருந்து கதைகளைப் படிப்பதைக் கேட்கிறார்கள்.
சாலையோர ஸ்டால்கள் வழிப்போக்கர்களுக்கு இலவச புத்துணர்ச்சியை விநியோகிக்கின்றன, மேலும்  தெரு நாடக நிகழ்ச்சிகள் உள்ளன, அவை நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ள கோயில்களுக்கு அருகில் உயரமான தளங்களில் நடத்தப்படுகின்றன}
நகரம் முழுவதும் இரவிலும் மக்கள் நிரம்பி வழிய வந்த வேலை நடக்குமா என்ற சந்தேகம் எழும்ப உதவியாளனை விசாரிக்க 
“ஒருவாரம் தான் சார். பொர்ணமி இரவில் கூட்டம் அதிகம். காலையில் போய் நாம் சந்திக்க வேண்டியவரை பார்க்கலாம்” என்று சொன்னவன் விடை பெற்று செல்ல  பயணக்களைப்பில் சாப்பிட்டதும் தூங்கி விட்டான். 
அடுத்து வந்த நாட்களில் காலையில் போய் பார்க்க வேண்டியவரை பார்த்து பேசி அவனுக்கு தேவையான மாணிக்க கற்கள் பற்றிய தகவல்களையும் பெற்றுக் கொண்டவன்  சுரங்க மற்றும் குவாரி, வெட்டி மெருகூட்டும் இடம் {cut and polish} என்பவற்றை அவரோடு பார்வையிட்டு, நகரத்திலுள்ள சில கடைகள். வியாபாரிகள் என்று சென்று சந்தித்தான். 
அவனது இப்பயணம் திருப்தியகரமாக  இருக்கவே! அடிக்கடி வரவேண்டி இருக்கும் என்று அவனோடு வந்தவரிடம் விடைபெற 
“நாளை நண்பகல் தானே விமானம்.  திருவிழா பார்க்க போலாமா” என்று அவர் அழைக்க மறுக்கவும் முடியாமல் “சரி” என்று சம்மதம் சொல்ல அவன் தங்கி இருக்கும் அறைக்கு இரவில் வந்து அழைத்து செல்வதாக கூற அவனும் விடைபெற்றான். 
அவரின் வரவுக்காக தயாராகி காத்திருந்தவனை அழைத்து செல்ல வந்தவர் அவரின் குடும்பத்தோடு வரவே சற்று ஆச்சரியமாக புருவம் தூக்கி பார்த்தவன் அவரோடு சேர்ந்து நடக்கலானான். 
வாகனங்களில் செல்ல முடியாது சனத்திரலால்  பாதை நிறைந்து வழிய நடந்து சென்றால் தான் என்று அவர் ஏக்கனவே சொல்லி இருக்க ஒரு ஜீன்சும், டி ஷர்ட்டையும் அணிந்த்துக் கொண்டவன் கால்கள் மிதிப்படாமல் இருக்க, ஷூ அணிந்துக் கொண்டான். 
அவரின் மனைவியும் இரண்டு மகன்களும் முன்னே செல்ல அவரோடு பேசியவாறே நடந்தவன் அவர் சொல்லும் வெசக் பற்றிய தகவல்களையும் கேட்டுக் கொண்டான். 
நகரத்திலிருந்து நடந்து வந்தவர்கள் கிளை பாதையூடாக யாழிசை வசிக்கும் பகுதிக்கு வர, அப்பகுதி மக்கள் மட்டும் பாதையில் இருந்தனர். நடந்து வந்து கொண்டிருந்தவனின் கண்களில் விழுந்தாள் யாழிசை. 
 கோவிலிலும் வெசக் விளக்குகளை ஏற்றுகிறார்கள் போலும் கையில் ஒரு வெசக் விளக்கை ஏந்தி இருந்தாள். அந்த இரவு விளக்குகளின் ஒளியில் மிகவும் அழகாய் அவள். நீண்ட பாவாடை மற்றும் டி ஷார்ட் போன்ற ரவிக்கை மாத்திரம் அணிந்திருக்க தாவணி இல்லாமல் அவளின் செழுமைகள் அவனின் கண்ணுக்கு விருந்தாகின. குழந்தை முகம். குட்டி கறுப்புப் பொட்டோடு கனகாம்பரம் சூடியிருக்க ரசனைக்காரனாக இருந்தாள் தேவதை கையில் விளக்கு என்று வர்ணித்திருப்பானோ! அல்லது ஒளியிலே தெரிவது தேவதையா என்று பாடி இருப்பானோ! அவன் பார்வை முழுவதும் அவள் மேனியை மொய்த்தது. அது அவனுடைய வயதின் ஹார்மோன்களின் பார்வையோ! அவனை உள்ளே இழுக்கும் ஆழிச் சுழியாய்  அவளின் பெரிய கண்கள். சிரித்துக் கொண்டே யாருடனையோ பேசிக்கொண்டு விளக்கை கொடுக்க மேலே இருந்தவர்கள் கட்டிக் கொண்டிருந்தனர். 
அவளின் அருகில் வர வர அவள் தன்னை பார்க்க மாட்டாளா? என்ற எண்ணம் அவன் மனதில் ஏக்கமாக எட்டிப் பார்க்க அவளோ வேலையில் கண்ணாக இருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டு வந்தவன் அருகில் வர அவள் திரும்ப அவன் மேல் மோதி நின்றாள் யாழிசை. 
அவளின் வாசமும், மென்மையும் அவனின் ஏக்கங்களை தீர்த்து வைக்க, அவளின் தோள்களில் கைவைத்து பிடித்து நிறுத்தியவன் விரல்கள் வரை தடவியவாறே விடுவித்தான். பார்ப்பவர்களுக்கு சாதாரண செயலாக இருக்க யாழிசை அவன் தொடுகையில் சிலிர்த்து விலக, அவனோ அவளை திரும்பியும் பாராது சென்றிருந்தான். 
அதன் பின் அவளை நினைக்க கூட அவனுக்கு நேரம் இருக்கவில்லை. ஆனால் இரவில் அவனை தூங்க விடாமல் இம்சித்துக் கொண்டிருந்தாள் யாழிசை. அது காதல் என்ற எண்ணமெல்லாம் ரிஷிக்கு இல்லை. அவனை பொறுத்த மட்டில் அவள் மேல் மோகம், கொஞ்சம் நாளில் சரியாகிடும் என்றிருந்தவனுக்கு இரண்டு வருடங்களாக இரவில் இம்சித்துக் கொண்டிருந்தாள் யாழிசை.  கடந்த ஒரு மாதமாக அவளின் நினைவுகளே! அவளை பார்த்தால் மட்டும் அது அடங்காது. இருகைகளாலும் அணைக்க வேண்டும், மோகம் தீர அனுபவிக்க வேண்டும். மொத்தமாக அவளை அடையவும் வேண்டும். அப்பொழுதுதான் அவனின் மனதில் அவளால் எழுந்துள்ள ஆசைகள் அடங்கும். இதற்க்கு மேலும் பொறுக்க முடியாது என்றெண்ணியவன் எல்லா வேலைகளையும் ப்ரதீபனிடம் ஒப்படைத்து விட்டு யாழிசையை இந்த ஊரை சேர்ந்தவளா? எங்கே போய் தேடுவது என்ற சிந்தனையெல்லாம் இல்லாமல் அவளை காணவென்றே வந்து சேர்ந்தான். 
வியாபர விஷயமாக அடிக்கடி இலங்கை வந்திருந்தால் ஒரு வேலை யாழிசையை பாத்திருப்பானோ! அவனுக்கு வேண்டிய மாணிக்க கற்கள் அவன் இருக்கும் இடத்துக்கு வரவே அவன் இலங்கை வருவது அவசியமற்றதாகின.
ஜீப்பிலிருந்து அவளை பார்த்திருந்தவனின் எண்ணமெல்லாம் அவளை எப்படி அடைவது. அவன் பழகும் பெண்கள் போல் அழைத்த உடன் வந்து விடுவாளா? காசு கொடுத்தால் வருவாளா? என்றிருக்க அவனின் அடிமனதில் அவளுக்கான காதல் ஜகத்  என்பவனால் சீறியெழுந்து  
“நீ எனக்கு மட்டும் தாண்டி சொந்தம். உன் மனசுல நா மட்டும் தான் இருக்கணும்”  என்று சொல்ல வைத்திருந்தது. 
அவளின் உடல் மட்டும் தான் தனக்கு தேவை என்பதில் உறுதியாக இருந்தவன் அறியவில்லை. அவன் மனதில் முளைத்திருக்கும் காதலை. ஆனால் அதை புரிந்துக் கொள்ளதான் அவனால் முடியவில்லை. முயற்சிக்கவுமில்லை.  உணரும் போது காலம் கடந்து விடுமோ! 
காலணியை கழட்டி வீசாத குறையாக வீடு வந்து சேர்ந்த  யாழிசை நேராக சென்றது கொல்லைபுரத்தில் உள்ள குளியலறைக்கு. கதவை சாத்தி விட்டு கீழே சரிந்தவள் “பொறுக்கி, பொறுக்கி” ஏதோ ஸ்லோகம் சொல்வது போல் ரிஷியை திட்டியவாறே ஒருமூச்சு அழுது தீர்த்தாள். 
தேவைக்காவது அதிகம் பேசாதவள் ஒருவனை திட்ட வார்த்தை எங்கிருந்து தேடுவாள். அவள் அறிந்தது அவ்வளவுதான். 
உள்மனம் சொன்னது போல் விபரீதம் நடந்து விட்டது. அவன் தொட்ட இடமெல்லாம் எரிய, அவன் பூசியிருந்த வாசனை திரவியமும் அவளை சுற்றுவதைபோல் மாயை தோன்ற,  ஏதோ சாக்கடையில் விழுந்தவள் போல் அருவருத்து குளியலறையில் இருந்த பக்கட்டில் உள்ள தண்ணீரெல்லாம் முடியும் வரை ஜல அபிஷேகம் செய்து தன்னை சுத்தப்படுத்தினாள். 
உடுத்தியிருந்த தாவணிக்கு மேலே சோப்பையும் பரபரவென பூசியவள் தலையிலிருந்து தண்ணீரை ஊற்ற, ஊற்ற அவனின் வாசமும் மேனியில் இருந்து கரைந்து வழிவது போல் தோன்ற ஆசுவாசமடைந்தாள். 
குளித்து முடித்தவள் அப்பொழுதுதான் மாற்றுத்துணி கொண்டுவரவில்லை என்பதையே உணர்ந்தாள். மலைக்கு மேலேயும் சில வீடுகள் இருப்பதால் மேலிருந்து பார்த்தால் இவளின் கொல்லைபுறம் நன்றாக தெரியும். அதனாலயே குளியலறையில் துணிமாற்றி விட்டு உள்ளே செல்வாள்.
குளியல் அறையில் இருந்து எட்டிப்பார்த்தவள் வெளியே யாருமில்லை என்றதும் வீட்டுக்குள் ஓடி இருந்தாள். மங்கம்மா இன்னும் வீடு வந்திருக்கவில்லை. யாழினி ஈரம் சொட்ட, சொட்ட வீட்டுக்குள் வருவதை கண்டிருந்தால் நன்றாக வார்த்தையால் தாளித்திருப்பாள். 
அறைக்குள் வந்தவள் உடுத்தியிருந்த துணியை பரபரவென கழற்றி கையில் கிடைத்ததை  அணிந்துக் கொண்டவள் தங்கையை பார்க்க அவள் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். கழற்றி போட்ட துணியை பின்கட்டிலுள்ள துணி போடும் கூடையினுள் போட்டவள் வீட்டிலுள்ள விளக்குகளை எரியவிட்டு வாசலுக்கு வர மங்கம்மா பக்கத்து வீட்டு வாசலில் கதையடிப்பது தெரிந்தது. 
தாயை காணும் போது எரிச்சலும், கோபமும் ஒன்று சேர்ந்து கண்ணீராக பெருக்கெடுத்தது. 
“யாழி…. அம்மா எங்க? ” என்றவாறே பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்தாள் சீதா. 
சீதாவின் குரல் கேட்டதும் கண்களை துடைத்துக் கொண்டவள், சிரமப்பட்டு குரலை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து “வெளிய பேசிக்கொண்டு இருக்கிறாங்க” தலையை குனிந்தவாறே சொல்ல
“நில்லு. என்ன இப்போ தலைக்கு குளிச்சு இருக்க” யாழிசையிடம் எதுவும் கேக்காது தலையை துவட்டி விடலானாள். 
சீதாவிற்கு யாழிசை என்றால் உயிர். அது பெண்குழந்தை இல்லை என்ற ஏக்கமா? அல்லது யாழிசையின் அடக்கமான குணமா அதை சீதாவே அறிவாள். 
மங்கை உள்ளே நுழையும் போது இக்காட்ச்சியை பார்த்தவாறே வர 
“என்ன டி இந்த நேரத்துல தலைக்கு குளிச்சி இருக்க” 
யாழிசை என்ன பதில் சொல்வாள்? கோவிலுக்கு போனவள் குளிக்கும் படி என்னவாகிற்று. உண்மையை சொன்னால் அன்னை அவளைத்தான் சாடுவாள். அடிக்கக் கூட செய்வாள். என்ன சொல்வதென்று யாழிசை யோசிக்க 
அடிக்கடி மழை பெய்வதால் பாதை தண்ணீர் நிறைந்தும், சகதியுமாகவே இருக்க “வரும் போது வழியில இருந்த சேத்து குழியில {சகதி}  விழுந்துட்டியா?”
அன்னையே காரணம் சொல்லவும் “ஆமாம்” என்று தலையை ஆட்ட 
“வாய தொறந்து பேசுறியா? எல்லாத்தையும் நானே கண்டு பிடிச்சி கேக்க வேண்டி இருக்கு” மங்கம்மா பெருமையாகத்தான் சொன்னாளோ! 
“நீ அதட்டுற அதட்டல்ல புள்ள பயந்து நடுங்கும் இதுல எங்க பேச. அன்பா கேளு” என்றவாறே சீதா யாழிசையின் தலையை வாரி பின்னலிட்டாள். 
“என்ன சீதா இந்த நேரத்துல வந்திருக்க” மங்கம்மா ஏதோ விஷயமிருக்கும் என்றவாறே கேக்க 
“யாழி நீ உள்ள போ” என்று அவளை அனுப்பி விட்டு “யாழிக்கும், இளாக்கும் வர்ற முகூர்த்தத்திலேயே கல்யாணம் பண்ணனும். தம்பி வந்தா சொல்லு. அப்போ நா வரேன்” வேறெதுவும் பேசாமல் சீதா செல்ல மங்கம்மா யோசனைக்குள்ளானாள். 
யாழிசைக்கு இளவேந்தனையும், இயலிசைக்கு தனவேந்தனையும் அவர்கள் பேசி வைத்தது தான். சீதா இந்தநேரத்தில் வந்து திடுதிடுப்பென்று சொல்லிவிட்டு செல்வதில் ஏதோ விஷயமிருக்கு. கத்திரிக்கா முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகணும் பாக்கலாம்” என்றெண்ணியவள் இயலை எழுப்ப சென்றாள். 
இவர்கள் பேசியது யாழிசையின் காதில் விழத்தான் செய்தது. ஏனோ அப்பேச்சு அவளுக்கு இனிக்கவில்லை. அது இளவேந்தனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்று தெரியும் என்பதால். ஆனால் மற்றுமொரு காரணமாக இன்று நடந்த சம்பவமும் நெஞ்சில் ஏறி அமர்ந்து கொள்ள இளவேந்தனுக்கு தான் பொருத்தமில்லை என்றே தோன்றியது. 
அவள் எண்ணம் போகும் திக்கை கண்டு வியந்தவள் “ஒரு கேடு கெட்ட பொறுக்கி பண்ணதுக்கு நா எப்படி காரணமாக முடியும். எனக்கென்ன குறைச்சல் இளா அத்தானுக்கு என்ன விட யார் பொருத்தமாக இருக்க முடியும்” தனக்குள் சொல்லிக் கொண்டவள் இரவு சாப்பாட்டுக்கு தேங்காய் ரொட்டி செய்ய மாவை பிசைய ஆரம்பித்தாள். 
“அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கோணும். கோவில் முன்னாடி இப்படி கேவலமா நடந்துக்க, சே.. பயத்துல அவன் முகத்தை கூட பாக்காம வந்துட்டேன். கால்ல இருக்குற செருப்பை கழட்டி நல்லா நாலு சாத்தி இருக்கணும். அவனை இங்க பாத்தா மாதிரி நியாபகம் இல்லையே! கண்டிப்பா வெளியூருக்காரனா தான் இருப்பான்” மனதுக்குள் எரிமலை குழம்பாக ஆத்திரத்தை வார்த்தைகளாக்கி ரிஷியை சாடிக்கொண்டிருந்தாள் யாழிசை. அவள் கைகளில் சிக்குண்டு ரொட்டி மாவுதான் அடிபட்டுக்கொண்டிருந்தது.
தன்னை ஒருத்தி வசைபாடிக்கொண்டிருக்கிறாள் என்று அறியாத ரிஷியோ யாழிசையோடு கனவில் உறவாடிக்கொண்டு நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தான். யாழிசையின் உண்மையான குணம் என்ன என்பதே! அவள் அறியாள். மங்கம்மாவின் அடக்குமுறையால் சாதுவாக இருக்கிறாள். அவளின் வேகம், வீரம் ஓர் நாள் ரிஷியிடம் வெளிப்படும். 

Advertisement