Advertisement

அத்தியாயம் 19
மாலை வீடு வந்த அமுதன் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே வர ஓடி வந்த ஸ்ரீராம் அவன் மேல் மோதி விழப்போக, குழந்தை விழாது தூக்கி பிடித்தவன் ஸ்ரீராம் “தேங்க்ஸ் டாடி”  என்றதில் கண்கள் கலங்கி ஸ்ரீராமை முத்த மழையில் நனைய வைத்தான்.  
“இன்னும் எத்தனை நாள் அமுதானா இருக்கப் போற?” உன்னை நானறிவேன் என்று பிரதீபன் அவனை முறைத்துப் பார்க்க 
“குழந்தை விசயத்த ஏன் மறச்ச” திருப்பி ப்ரதீபனை முறைக்கலானான் ரிஷி.
இவர்களையே கைகட்டி  முறைத்துக் கொண்டிருந்தாள் கயல்விழி. 
வண்டி நகைக் கடைக்கு முன் நின்றும் இறங்காமல் ஏதோ யோசனையில் இருக்கும் பிரதீபனை உலுக்கிய அமுதன் 
“என்ன யோசனை?” 
“ஆ..” என்று விழித்தவன் “சே கனவா?” தலையை உலுக்கியவன் “கற்பனை” வாய்விட்டே முணுமுணுத்து “ஒன்றுமில்லை” என்று தலையாட்டியவாறே இறங்கி நடக்க அவன் மனதில் கேள்விகள் ஆயிரம் 
“கயலை கண்டதும் ரிஷி நிலைதடுமாறுவான்னு பாத்தா பய அசையவே இல்ல. பொண்டாட்டியையே சைட் அடிக்கிறான். உண்மையிலையே அவனுக்கு பழசெல்லாம் மறந்து போச்சா? குழந்தையை கண்டாலும் ரியாக்சன் காட்ட மாட்டானா?” நிஜமாலுமே இவன் ரிஷி இல்லையா?  தனது அறைக்குள் நுழைந்தவனுக்கு அதற்க்கு மேலும் யோசிக்க முடியாமல் வேலை இழுத்துக் கொண்டது.
ப்ரதீபனின் பிறந்தநாளன்று அவனோடு இருக்கவும் முடியாமல், பிறந்த நாளையே மறந்து விட்டதுமில்லாமல் யாழிசை ப்ரதீபனுக்கு உதவியதை தப்பாக பேசியதுமில்லாமல் அவளிடம் மூர்க்கத்தனமான நடந்து கொண்டதை எண்ணி மனம் வருந்தினான் ரிஷி. அவனின் ஆண் என்ற அகங்காரம் அவளிடம் மன்னிப்பு கேக்க விடவுமில்லை. அவனின் வேலைப்பளுவும் அவனை அவளோடு இருக்கவிடவில்லை. 
யாழிசையை சென்னைக்கு அழைத்து சென்ற ரிஷி கடை திறப்பு விழாவில் பிஸியாகிவிட அந்த இரண்டு நாட்கள் அவன் தங்கி இருந்த ஹோட்டல் ரூமுக்கு கூட வரவில்லை. ஆனாலும் யாழிசைக்கு தேவையான அனைத்தையும் கவனிக்குமாறு ஹோட்டல் மேனேஜரிடம் பேசி விட்டே சென்றிருந்தான்.
ப்ரதீபனும் சென்னை வந்து சேர நகைக்கடை திறப்பு விழாவும் சிறப்பாகவே நடைபெற யாழிசையை அவன் அங்கு அழைத்து செல்லவுமில்லை. ப்ரதீபனும் யாழிசையை பற்றி விசாரிக்க ரிஷி அவனை முறைத்துப் பார்த்தானே ஒழிய பதில் சொல்லவில்லை. 
“ஓஹ் ஐயாவுக்கு அந்த பொண்ணு வேணாம்னு தோணி இருக்கு போல” பிரதீபன் காரணம் கண்டு பிடிக்க அதன் பின் யாழிசையை பற்றி அவனும் கேட்கவில்லை. 
அடுத்த நாளே சென்னையில் ஒரு பிளாட்டு வாங்கி யாழிசையோடு குடியேறி சுமூகமாகவே நடந்து கொண்டான். சட்டென்று போய் மன்னிப்பும் கேக்க அவனால் முடியவில்லை. அவளோடு மனம் விட்டு பேச அவனை ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டே இருந்தது. அது அவன் அவளுக்கு இழைத்த கொடுமையால் வந்த குற்ற உணர்ச்சியா? அவனே அறிவான். 
சென்னையில் இருந்த ஓர் நாள் யோகராஜுக்கு அழைத்து யாழிசையின் கையில் அலைபேசியை கொடுத்தவன் இன்றாவது அவள் தனியாக பேசட்டும் என்று பால்கனியில் போய் அமர்ந்து கொள்ள பழக்க தோஷத்தில் யாழிசையே! அலைபேசியை ஸ்பீக்கர் மூடில் போட்டுவிட்டிருக்க மறுமுனையில் இயல் பேசுவது ரிஷிக்கும் தெளிவாக கேட்டது. 
“அக்கா ஜகத் அண்ணா உனக்கு லெட்டர் கொடுத்தாரா?” 
தங்கை கேட்ட கேள்வியில் விதிர் விதைத்து போனாள் யாழிசை 
“இப்போ எதுக்கு இவ இதை கேக்குறா?” மனம் அடிக்க “எதுக்கு இப்போ வீண் பேச்சு” தங்கையை அதட்ட இயலும் விடுவதாய் இல்லை. 
“கமர் அக்காவ பொண்ணு பக்க வந்திருக்கும் போது இந்த ஜகத் அண்ணா இல்ல… நல்….லா குடிச்சிட்டு போய் அவரு கமர் அக்காவ லவ் பண்ணுறதாகவும் உன் கிட்ட கடிதம் கொடுத்து விட்டதாகவும் சொல்லி ரகள பண்ணிட்டாரு. ராஷித் அண்ணா ஜகத்தை போட்டு அடிக்க, அவங்க அப்பா மாப்புள வீட்டார் முன்னாடி கமர் அக்காவ பெல்ட்டாளையே விளாசிட்டாரு”
“ஐயோ……. கோவில்ல சாமி கும்பிட்டு வெளிய வரும் போது அந்த லூசு கைல கடிதத்தை திணிச்சுட்டு போய்ட்டான். பாவம் கமர் அவளுக்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது” இயலிசையின் பேச்சில் குறுக்கிட்டு தோழிக்காக மனம் வருந்தலானாள் யாழிசை.
“அந்த லெட்டரை அவரு உனக்கு கொடுத்ததாக நீ நினைச்சி இருப்பான்னு உன்ன வேற கண்ட படி பேசிட்டான் கா… ஆமா அந்த லெட்டர் என்ன ஆச்சு?”    இயல் ஆர்வமாக கேக்க 
தன் கணவன் தான் அதை பிடுங்கி எடுத்தான். இன்று வரை அந்த ஜகத்தை சம்பந்த படுத்தி பேசி கிட்டு இருக்கின்றான்” என்று சொல்ல முடியாமல் தொண்டையடைக்க மௌனமானாள். 
ஜகத்தின் பெயர் சொன்னதும் ரிஷியின் புலன்கள் விழித்துக் கொள்ள இயல் சொன்ன தகவலில் தன்னையே நொந்து கொண்டான்.
“பாவம் டி கமர் பொண்ணு பாக்க வந்தவங்க என்ன நினைச்சி இருப்பாங்களோ” மேலும் வருந்த 
“வந்த மாப்புள அவங்க அப்பாவை அடிக்க விடாம ஜகத் கிட்ட விசாரிக்காம கமர் அக்காவையே கேள்வி கேட்டு இருக்குறாரு” 
“ஐயோ…” 
“இருக்கா சொல்லி முடிச்ச பிறகு கத்து” கடுப்பானவள் கதை சொல்ல “அவங்க பயந்து அழுது கிட்டே இத பத்தி ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லி இருக்காங்க, அவரும் இந்த பொண்ண தான் கட்டுவேன்னு உறுதியா சொல்லிட்டாரு. அவரு அம்மாவும் நல்லவங்களா இருப்பாங்க போல ஆறுதலா பேசிட்டு போய் இருக்காங்க, சூப்பர் சினிமா பாத்தா மாதிரி ஊரெல்லாம் இதே பேச்சு தான்” சந்தோசமா இயல் முடிக்க,
தங்கை சொன்ன விதத்தில் நிம்மதியாக சிரித்தாள் குழலி. 
 
“அக்கா இளா அத்தான் அந்த சாந்தி அக்காவ யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டாரு” ரகசியமான குரலில் அக்காளுக்கு தகவல் சொன்னாள் தங்கை. 
“அத்த போய் பொண்ணு கேக்கலையா?” கவலை குரலில் யாழ் கேக்க, 
“உன்ன கட்ட மாட்டேன். சாந்தி அக்காவ லவ் பண்ணுறேன் னு சொன்னதில இருந்து அத்த முகத்தை தூக்கி வச்சி கிட்டே இருந்தாக, இவரே போய் சாந்தி அக்கா அம்மா கிட்ட பேசி இருக்காரு போல அவங்க திட்டி துரத்தவும், சாந்தி அக்கா வீட்டை விட்டு வந்துட்டாங்க போல அப்பொறம் கல்யாணம் பண்ணி இப்போ அத்த வீட்டுல தான் ரெண்டு பேரும் இருக்காங்க. அந்த அக்காவோட அம்மா வந்து அத்த கூட சண்டை வேற போட்டாங்களா? அத்தையும் உங்க பொண்ண கூட்டிட்டு போங்க, எனக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டமில்லன்னு பட்டுனு சொல்லிட்டாங்க” 
“இந்த அத்த ஏன் இப்படி பண்ணுறாங்க, இளா அத்தான் சாந்தியை பிடிச்சிருக்குனு சொல்லிட்டாங்களே! கட்டி வைக்கலைனாலும், அந்த பொண்ண ஏத்து கிட்டு இருக்கணும்” ஆதங்கமாகவே யாழ் சொல்ல 
“கொஞ்சிகுலாவாட்டியும் அத்த நல்லா தான் பாத்துக்கிறாங்க. அத்த அப்படி பேசியதும் அந்த அக்கா முகம் தொங்கி போச்சு ஆனாலும் அவங்க அம்மா வாய் சவுண்டு அடங்கிருச்சு. அப்பொறம் சமாதானமாக பேசாட்டியும் அத்தைய பத்தி குற்றப்பத்திரிக்கை இளா அத்தான் கிட்ட வாசிச்சிட்டு தான் போனாங்க. அத்த அப்படி பேசலனா சண்டை இன்னும் கலைகட்டி இளா அத்தான் தல உருண்டு இருக்கும்” கிழுக்கிச் சிரித்தாள் இயல்.
“உன்ன…” யாழும் தங்கையை அதட்ட 
“பின்ன என்ன அக்கா… அந்த சிடுமூஞ்சி  இளா அத்தானை எங்க ரெண்டு பேருக்குமே புடிக்காது. அத்தைக்காக தான் நீ கல்யாணத்துக்கே சம்மதிச்ச இதுல அவரு உன்ன வேணான்னு சொல்வாங்களாம், நாங்க அழணுமா? யாரு கிட்ட இப்போ நீ சந்தோசமா, வசதியா இருக்குறத பாத்து நல்லா வயிறு எரியட்டும்”  இயல் பொறித்துத்தள்ள 
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ரிஷிக்குத்தான் என்ன பேசுவதென்றே புரியவில்லை. எங்கே யாழ் யாரையாவது விரும்பி இருப்பாளோ! அவனுடைய பணத்தையும், வசதியையும் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணாலோ!  என்றிருந்த சிறு சந்தேகத்தினால் ஜகத், இளா இருவரையும் சம்பந்த படுத்தி கடுமையாக பேசி வைக்க, இங்கே கதையே மாறி இருந்தது.
ரிஷி தன்மனதை உணர்ந்தானோ இல்லையோ  யாழிசை இல்லாமல் அவனால் வாழமுடியாதென்று அவனுக்கு புரிந்தது விட்டது. அந்த உணர்வு என்னவென்று அறியாதவனுக்கு அது காதல் என்ற எண்ணமெல்லாம் தோன்ற வில்லை. யாழிசை அவன் அருகில் இருந்தால் போதும் என்று மட்டும் நினைத்தான். 
அவளை வெறுக்கவும் முடியாமல், விட்டு விலகவும் முடியாமல் அவளின் மனதையும், பூப் போன்ற தேகத்தியும் வதைக்கு கொண்டிருந்தவனுக்கு பிரதீபன் “அவளுக்கு நீ கொஞ்சமேனும் பொருத்தமில்லை” என்று சொன்னது சம்மட்டியால் அடித்தது போன்றிருந்தது. 
தனக்கு இருக்கும் பணம், அந்தஸ்து, அழகு, படிப்பு எல்லாவற்றுக்கும் யாழிசை பொருத்தமற்றவள் என்று எண்ணி இருக்க, உயிர் நண்பனே “அவளின் அன்புக்கும், கருணைக்கும் முன் நீ தூசி” என்று சொல்லாமல் சொல்ல தான் அவளோடு நடந்து கொண்ட முறை மிருகத்தனத்தையும் மிஞ்சி விடும் என்று உணர அவனின் மனமோ 
“அது சரி உன் உடம்பில் ஓடுவது உன் அம்மாவின் இரத்தம் தானே!” கேலியாக நகைக்க கல்மனதாக இருந்த ரிஷியின் கண்களிலும் கண்ணீர் சுரந்தது.
அவன் என்ன பாடு படுத்தி இருந்தாலும் பொறுத்து போன மனைவியை எண்ணி, அவள் அவன் மீது வைத்திருக்கும் அன்பை எண்ணி “ஒரு தேவதையை அடைந்திருக்கின்றேன் அவளை நல்லா பாத்துக்கணும்னு கூட தோணல” தன்னையே நொந்து கொண்டான்.   
ரிஷி அவளை தொந்தரவு செய்யாது இருப்பதே போதும் என்ற நிலையில் இருக்க, திடீரென ஒரு நாள் பகல் பொழுதில் வந்தவன் ஒரு சில பத்திரங்களை  கொடுத்து அதில் கையொப்பமிட சொல்ல 
அவை ஹிந்தியில் இருக்க “விவாகரத்து பத்திரமா” பயந்தவாறே அவனை யாழிசை ஏறிட முகம் இறுகியவன் 
“முதல்ல சைன் பண்ணு” அவனின் இறுகிய குரலும் அவளுக்கு அதட்டலாகவே தெரிய தொண்டையடைக்க எதுவும் பேசாது கையொப்பமிட்டு கொடுத்தாள். 
அதன் பின் யாழிசையை விட்டுவிட்டு சிலபல திட்டங்களோடு மும்பாய் சென்றான்.
மும்பை வந்தவனை ராமு தாத்தா உடனே வீட்டுக்கு வரும் படி சொல்ல என்ன ஏதோ என்று சென்றவன் ப்ரதீபனும் அங்கே இருக்க ராமு தாத்தா யாழிசை மோகனசுந்தரத்தின் அறையில் வைத்து விட்டு சென்ற இரண்டு பொருட்களையும் கொடுக்க, கயல்விழி கிடைத்த சந்தோசத்தில் பிரதீபன் “குட்டிமா” என்று கத்திவிட்டு, “அம்மு” என்று ஆனந்த்தத்தில் ரிஷியும் துள்ளிக் குதிக்க அடுத்த விமானத்திலையே இருவரும் சென்னை வந்து சேர்ந்தனர். 
வந்தவர்களை வெறும் வீடே வரவேற்றது. யாழிசை கடிதம் எழுதிவிட்டு வெற்றுப் காகிதத்தில் கையொப்பமிட்டு விட்டு காணாமல் போய் இருந்தாள். 
தன்னால் தான் யாழிசை சென்றால் என்று தான் செய்தவற்றை ரிஷி சொல்லிப் புலம்ப பிரதீபன் அவனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தான். ரிஷி அவனை தடுக்கவே இல்லை. கை வலிக்கும் அளவுக்கு அடித்து ஓய்ந்தாலும் அதன் பின் ரிஷியிடம் அவன் ஒரு வார்த்தியேனும் பேச வில்லை. ஆனால் ஒரு மாதமாக இருவரும் ஒன்றாகவே யாழிசையை தேடி தேடி அலைந்தனர். 
போலீஸ் கம்பிளைனும் கொடுத்தாச்சு. ஆனால் அவளை என்குதேடியும் கிடைக்க வில்லை. ஒரு தகவலும் கிடைக்காது இருந்தாலும் போலீஸ் தரப்பில் அடிக்கடி மோச்சரிக்கு அழைத்து இறந்து போன பெண்களின் உடலை காண்பிக்கும் போதோ ரிஷி மனமுடைந்து பாதி உயிரானான். 
ப்ரதீபனும் அவனோடு சண்டையிட்டு, கோபித்துக்கொள்ள மீதி உயிரும் போனவனாய் நடை பிணமானான். மும்பாயில் வேலைகள் போட்ட படி வந்திருக்க அங்கே பிரச்சினை தலைத் தூக்க பிரதீபன் மும்பாய் கிளம்பிச் சென்றான். அன்று தான் அவன் ரிஷியை கடைசியாகப் பார்த்தான். அதன் பின் ஒருவாரம் கடந்து ரிஷி அவனுக்கு அழைத்து பேசியபின் அவனின் மரணச் செய்தியே ப்ரதீபனை கிட்டியது. மலையின் மேலிருந்து விழுந்த கார் வெடித்துச் சிதறியதால் பாடி கூட முழுவதாய் கிடைக்க வில்லை.
 
நான்கு வருடங்கள் கழித்து மும்பாயில் ரிஷியை மீண்டும் பிரதீபன் சந்திக்க அவனோ தான் கனிஅமுதன் என்று சொல்ல முற்றாக குழம்பியவன் அவனை பற்றி மேலும் விசாரிக்க அவனின் தாய் தந்தையின் பெயரை மாத்திரமன்றி மோகனசுந்தரம், திலகா என்று அனைவரையும் பற்றி சொல்லவே ஒரு வேலை ரிஷியின் இரட்டையோ என்று சந்தேகம் கொண்டவன் அவனை கூடவே வைத்திருந்தான். 
தோற்றத்தில் ரிஷியை போலவே இருந்தாலும் அவனின் குணத்திலும், நடத்தையிலும் வேறு பட்டிருக்க, சில சமயம் ரிஷி போலவும் நடந்து கொண்டு அடிக்கடி ப்ரதீபனையே குழப்பினான். 
கயல்விழியை ஊட்டியில் வைத்து கண்ட போது கூட ரிஷி இறந்து விட்டான் என்று சொன்னது அவள் மனதில் ரிஷி இருக்கானா இல்லையா என்று தெரிந்துக் கொள்ளவே! அவள் அழுது கரைந்ததில் அவள் மனம் புரிந்தாலும், வீட்டில் இருப்பவன் ரிஷியா, அமுதனா என்று தெரியாமல் அவள் மனதில் நம்பிக்கையை வளர்க்க விரும்பாதவன் அமுதனை பற்றி பெரிதாக எதுவும் சொல்லவில்லை. 
சாப்பாட்டறையில் கயல்விழி “ஏன் பொய் சொன்னாய்” என்று கேட்டதும் தனக்கே குழப்பம் இருக்கும் போது அவன் எதை சொல்ல. 
கயல்விழியின் வரவை பிரதீபன் அமுதனிடம் சொல்லி இருக்கவுமில்லை. மாடிப்படிகளில் இறங்கி வந்தவன் அவளை கயல் என்று அழைத்ததுமில்லாது, கொஞ்சிப் பேச கடுப்பான பிரதீபன் அவனை அடக்க அவன் எதிர்பார்த்த உண்மை வரவில்லை. “ஒரு வேலை பழசை மறந்து விட்டானோ” என்ற எண்ணம் தோன்றினாலும் திலகாவின் மகள் காணாமல் போனால் என்று அறிந்தாலும், யாழிசைதான் கயல்விழி என்று அவன் எவ்வாறு கணித்தான்? வந்த சந்தேகத்தை மறைத்துக் கொண்டவன் மாலை வீடு சென்றால் ஸ்ரீராமை கண்டு தந்தையென்ற பாசம் தலைத்தூக்கும் என்று நம்பினான். ஆனால் அவன் நம்பிக்கையில் தீயை வைத்தான் கனிஅமுதன்.
ரிஷியாக இருப்பின் தனியாக வண்டி ஒட்டி இருப்பான். ஆனால் அமுதன் ப்ரதீபனோடு நகைக்க கடைக்கு சென்று, வந்து கொண்டிருந்தான். பிரதீபன் அதை பற்றி கேக்க 
“இந்த ட்ராபிக்ல வேண்டிய உருட்டிட்டு போறதுக்கு பதிலா போய் சேரும் வரை ஒரு குட்டி தூக்கம் போடலாம்” ஆனால் அவன் ஒரு நாளும் தூங்க வில்லை மாறாக ப்ரதீபனோடு கதை பேசுவான். 
இன்றும் அதே போல அவன் வளவளத்துக் கொண்டு வர ப்ரதீபனின் எண்ணம் முழுக்க காலையில்  கண்ட கற்பனை கனவு போல் ஸ்ரீராமை கண்டால் அமுதனின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்ற சிந்தனையிலையே உழன்றான்.
வீடும் வந்து சேர வண்டியில் இருந்து இறங்கிய இருவரும் வீட்டுக் குல செல்ல திலகா சோபாவில் அமர்ந்திருந்தாள். 
“அத்த” என்று கத்திய அமுதன் அவளை கட்டிக்க கொண்டு கன்னத்தில் முத்தம் வைக்க திலகாவும் “அமுதா” என்று கன்னம் வருடினாள். 
வெளியே இருந்து வந்த ப்ரதீபனுக்கும் அமர்ந்திருந்த கயல்விழிக்கும் சப்பென்றானது. 
“அப்போ இவன் ரிஷி இல்லையா?” என்ற ஏமாற்றம் ப்ரதீபனை ஆட்டிப் படைக்க, “அப்போ இவரு அவங்க இல்லையா? உண்மையிலயே! இரட்டையா” அவள் மனம் ஏமாறினாள். 
ஸ்ரீராமும் பாலை தூக்கிக் கொண்டு வர “டேய் குட்டிப் பையா என்னை போலவே இருக்கியே! உன் பேரென்ன” அமுதன் சாதாரணமாக விசாரிக்க மேலும் வெறுத்து பெருமூச்சு விட்டான் பிரதீபன்.

Advertisement