Advertisement

அத்தியாயம் 18
ஒருவாறு  மும்பை வந்து வீட்டையடைய மாலை மங்கி இருள் சூழ்ந்திருக்க கயல்விழியின் மனதில் வீட்டை பார்த்ததும் ரிஷியோடு முதல் முதலாக அந்த வீட்டுக்கு வந்த நியாபகம் மனதில் எழவே கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப் பார்த்தது. 
தூங்கும் ஸ்ரீராமை தூக்கிக் கொண்டு பிரதீபன் முன்னாள் நடக்க திலகாவின் கையை பிடித்துக் கொண்டு நடந்து வந்த கயல்விழிக்கு உள்ளே செல்ல முடியாமல் கால்கள் நடுங்க ஆரம்பித்தது. திலாகாவேறு அவளை இழுத்துக் கொண்டிருக்க திரும்பிப் பார்த்த ப்ரதீபனின் கண்ணில் இக்காட்ச்சி படவே அவளின் அருகில் வந்தவன் அவளின் கையை பிடித்து இழுக்காத குறையாக உள்ளே அழைத்து வந்து சோபாவில் அமர்த்தினான். 
யாழிசை இருந்த போது எப்படி வீடு இருந்ததோ!  இன்றும் அதே போல் பளிச்சென்று நேர்த்தியாக வீடு இருக்க அதெல்லாம் அவள் கவனத்தில் இல்லை. 
“குடிக்க ஏதாவது எடுத்து வர சொல்லவா? இல்ல சாப்பிட்டுடு அறைக்கே போய் தூங்குறீங்களா?” கேள்வி என்னமோ திலகாவை பார்த்துதான் கேட்டான் பிரதீபன் 
ஆனால் அது கல்விழியிடம் தான் கேட்டான் என்று புரிந்துக் கொண்டவள் அவனை ஏறிட ஸ்ரீராம் இன்னுமும் அவன் கழுத்தில் தூங்கிக் கொண்டிருந்தான். 
சங்கடமாக அவனை பார்த்தவள் அவன் அருகில் வந்து குழந்தையை வாங்க கை நீட்டி இருக்க 
“அம்மாவை அழைச்சிட்டு வா முதல்ல ரூமுக்கு போலாம்” என்றவன் முன்னாடி நடக்க கயல்விழியின் பார்வை மாடிக்கு செல்ல, கால்கள் பின்ன, இருந்த இடத்திலையே சிலையாய் நின்று விட்டாள். 
“அந்த அறைக்கா? என்னால் முடியுமா? அவங்க இல்லாம அந்த அறைல” அவளின் சிந்தனைகள் அவ்வறையில் நடந்த இன்பமான பொழுதுகளை, துன்பமான பொழுதுகளை ஒன்றாகவே நொடியில் கண்முன் கொண்டு வர 
அவளை திரும்பிப் பார்த்த பிரதீபன் “கயல்” என்று சத்தமாக அழைக்க திடுக்கிட்டு விழித்தவள் முழிக்கலானாள். 
“அம்மாவை அழைச்சிட்டு வா தூங்கிட போறாங்க, சாப்பாடு ஊட்டணுமில்ல” கொஞ்சம் அதட்டலாக சொல்ல அந்த குரல் வேலை செய்தது. 
திலகாவோடு மின்தூக்கியில் ஏறியவளை யோசிக்க விடாது பேசிக் கொண்டே வந்தவன் மோகனசுந்தரத்தின் அறையயை திறந்து “இங்கயே தங்கிக்க, ஸ்ரீராமுக்கு இன்னொரு அறைய ரெண்டு நாள்ல தயார் பண்ணிடலாம்” 
திலகா உள்ளே நுழைந்திருக்க கயல்விழி அங்கேயே நின்றாள். அவளின் பார்வை ரிஷியின் அறை கதவையே பாத்திருக்க, 
“இப்போ அந்த அறையில் அமுதன் தங்கி இருக்கான். அம்மாக்கு வேற ரூம் ஏற்பாடு பண்ணவா?” கயல்விழியின் முகத்தையே பாத்திருக்க 
“இல்ல வேணா நாங்க மூணு பேரும் அப்பா அறையிலையே தாங்கிக் கிறோம்” பதில் சொன்னவள் ஸ்ரீராமை தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்று கதைவடைத்துக் கொண்டாள். 
மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஊசலாட கைகளோ அதன் போக்கில் வேலைகளை செய்து கொண்டிருந்தது. ரிஷி இனி இல்லையென்று நினைக்கும் போதே தொண்டை அடைக்க, வழியும் கண்ணீரையும் பொருட்படுத்தாது ஸ்ரீராமின் உடைகளை களைந்து சுத்தம் செய்து இரவுடை அணியவைத்து சரியாக தூங்க வைத்தாள். 
திலகா சுவரில் உள்ள மோகனசுந்தரத்தின் புகைப்படத்தை வெறித்துப் பாத்துக்க கொண்டிருக்க 
“அம்மா குளிக்கலாமா? இல்ல துணி மட்டும் மாத்திட்டு சாப்பிடுறியா” உழன்று கொண்டிருந்த மனதை கட்டுப் படுத்தியவள் அன்னையை கவனிக்க அறையில் உள்ள போன் இசைத்தது. அதை எடுத்து பேசியவள் சாப்பாட்டை அறைக்கே அனுப்புமாறு சொல்லி விட்டு ஸ்ரீராம் எழுந்தால் ஊட்ட கூடியவாறு ஏதாவது அனுப்புமாறும் பணித்து விட்டு திலகாவை குளியலறைக்கு அழைத்து சென்றாள். 
பெண்ணாய் பிறந்தவளுக்கு நிம்மதியில்லாத வாழ்க்கை. கவலையோ! சந்தோஷமோ! அழவோ! ஆழ்ந்து அனுபவிக்கவோ முடியாத படி வேலைகள் இழுத்துக் கொள்ளும். கயல்விழியும் விதிவிலக்கல்ல. 
இரவு முழுவதும் தூங்காமல் “இனி என்ன” என்ற எண்ணப் போக்கிலேயே உழன்றவள் அதிகாலையிலையே எழுந்து வழக்கம் போல் குளித்து விட்டு பூஜையறையில் நுழைந்திருந்தாள்.  
“இனி என்ன? வாழ்க்கை என்னை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது? பெற்றவர்களின் வாழ்க்கையும் சிறக்கவில்லை. பொழப்பு தேடி போன ஊர்ல தொலைந்து விட்டேன். ரிஷி மாதிரி ஒருத்தன் கல்யாணம் என்ற பெயரில் ஏமாற்றி அழைத்து வந்தான். வந்த இடத்துல தான் யார் என்று தெரிய வந்தது. அம்மாவும் கிடைச்சாங்க. புருஷன் கூட இனிமேல் வாழ முடியாது என்று தானே போனேன். கணவனே உயிரோடு இல்லாத போது மீண்டும் இங்கே ஏன் வந்தேன்? இன்னும் யாரோ ஆட்டி வைக்கும் பொம்மை போல் பிரதீபன் சொன்ன உடன் வந்திருக்க கூடாதோ? இந்த வாழ்க்கையில் நான் இன்னும் பார்க்க மீதி இருக்கா? எதுக்கு நீ இப்படி எனக்கு கஷ்டத்தை மட்டும் வாரி வழங்கிக் கிட்டு நிக்குற?”
அவங்கள நல்லவரா மாத்த சொல்லி உன்கிட்ட பிராத்தனை தானே பண்ணேன். இப்படி ஒரேயடியா இல்லாம பண்ணிட்டியே! அவங்க குழந்தையே பிறக்க கூடாதுன்னு நினைச்சாங்க ஆனா நீ அதையும் முறியடிச்சிட்ட. குழந்தையையை தந்து அப்பாவை பிரிச்சிட்ட. நாளைக்கு என் அப்பா எங்கன்னு என் பையன் கேட்டா நா என்ன சொல்வேன். அவரை நல்லவரா மாத்தி என் கிட்ட திருப்பி தந்திருக்கலாம்!” 
பூஜையறையில் கண் மூடி பிராத்தனை செய்து கொண்டிருந்தாலோ! கடவுளோடு சண்டையிட்டு கொண்டிருந்தாலோ! அல்லது முறையிட்டுக் கொண்டிருந்தாலோ! அவளே அறிவாள்.
வெகு நேரத்துக்கு பின்னால் பூஜையறையை விட்டு வெளியே வர ப்ரதீபனின் அறை திறந்திருப்பதை கண்டு எட்டிப்பார்க்க  அன்று பார்த்ததை போல் இல்லாமல் நேர்த்தியாகவே இருக்க புன்னகைத்துக் கொண்டாள். பிரதீபன் வெளியே செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். அவன் எண்ணமெல்லாம் முதல் முதலில் யாழிசை இந்த வீட்டுக்கு வந்த போது மருண்ட பார்வையோடு இருந்ததையும் தற்போதைய அவளின் தோற்றமும்  கண்ணில் வர 
“இந்த ஐஞ்சு வருசத்துல நல்லாவே மாறிட்டா பயந்த சுபாவம் போய் நல்லாவே பேசுறா…” வாய் விட்டே முணுமுணுக்க 
“யாரு மாறினது” அவனின் அறை வாசலில் இருந்து கையாட்டியவாறே! கயல்  கேக்க 
அவளை அங்கே எதிர் பார்க்காத பிரதீபன் “நான் தான், நானே தான்” என்று நெஞ்சில் அடித்துக்கொள்ள வாய் விட்டே சிரித்தாள் விழி. 
அவள் சிரிப்பதையே ரசித்து பார்த்தவன் “இப்படியே சிரிச்சு கிட்டே இரு குட்டிமா..” என்றவன் அவளின் தலையை தடவ 
முகம் இறுகிய கயல்விழி “அவர் எப்படி…..” இறந்தார் என்று கேட்க முடியாமல் தொண்டையடைக்க 
“ஆக்சிடென்ட்” என்ற பிரதீபன் ஒரு பெருமூச்சு விட்ட படி அகல 
மாடிப்படிகளில் யாரோ தட தடவென இறங்கி வரும் சத்தம் கேக்கவே! தலை நிமிர்த்தி பார்த்தவள் அங்கே ரிஷி ஒரு பாடலை முணுமுணுத்த படி படிகளில் தாவி இறங்குவதும், மீண்டும் பின்னால் ஏறுவதுமாக ஆடிக் கொண்டு வருவதை கண்டு ப்ரதீபனை மறந்து
“என்னங்க…..” அதிர்ச்சியோடு ஆனந்த கூச்சலிட்டவள் அவனருகில் ஓடி இருக்க, 
கயல்விழியை கண்டு முகம் மலர்ந்தவன் “ஏஞ்சல்” என்று முணுமுணுக்க,  அவள் வரும் வேகத்துக்கு தன்னை அணைத்து விடுவாள் என்று அஞ்சி கை நீட்டி தடுத்தவாறே கைப்பிடியை பிடித்து மறு பக்கம் தாவியவன் 
“நா இன்னும் குளிக்கவே இல்ல, ஏன் பல்லு கூட விளக்கல கயல். அப்போரமா கட்டி புடிச்சி விளையாடலாமா” கண்சிமிட்டி குரும்புக் கூத்தாட சொல்லிச் சிரித்தான் அவன். 
நகைக்கடைக்கு செல்ல ஆயத்தமாகி வந்திருந்தவனை பிரதீபன் முறைக்க, அவனின் கேலிப்பேச்சு கயல்விழியின் கவனத்தில் இல்லை.
“என்னங்க.. நீங்க செத்துட்டதா…” மேலும் பேச முடியாத படி யாழிசை கீழ் உதடை அழுத்தி கடித்தவள் கண்களில் பெருகும் கண்ணீரை கட்டுப் படுத்தியவாறே! அவனை ஆராய 
” ஓஹ் ஓ…. என்ன நீ டாம திறக்குற? நா நல்லா தானே இருக்கேன்” என்றவன் தன்னையே! மேலும் கீழும் பார்த்தவன் தாடையில் கை வைத்து யோசிக்க 
“என்ன அமுதா… காலையிலையே எழுந்திருக்க” ஆபீஸுக்கும், கடைக்கும்  அவனை அழைத்துச் செல்ல பிரதீபன் படும் பாடு அவன் மட்டுமே அறிவான்.  
“என் அத்த பொண்ணு கயல்விழி வந்திருக்கிறதா பால்கனி பக்கம் இருக்குற மாமரத்து கிளி சொல்லிச்சு. அதான் பல்லு கூட விளக்காம ஒரு ஹாய் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்” புன்னகைத்தவாறே அமுதன் சொல்ல 
 ரிஷி இங்கிருக்க அவனை பிரதீபன் அமுதன் என்று அழைப்பதும், கண்ணில் குரும்புச் சிரிப்போடு அவளை அடையாளம் தெரியாதது போல் ரிஷி பேசுவதும் கயல்விழிக்கு குழப்பத்தை உண்டாக்க இருவரையும் புரியாத பார்வையோடு மாறி மாறி பார்க்கலானாள்.  
அவளை குழப்பமான முகத்தை பார்த்த பிரதீபன் 
“கயல் இது ரிஷியோட ட்வின் பிரதர் பெயர் கனி அமுதன்” பிரதீபன் அறிமுகப் படலத்தை நடாத்த 
பிரதீபன் சொன்னதை நம்பாமல் விழி விரித்து அமுதனை ஆராய “இவர் அவங்க இல்லையா? உண்மையிலயே! அவரோட சகோதரனான” இன்னும் குழப்பம் தீராமல்  அமுதனையே பாத்திருந்தாள்.
“என் அத்த பெத்த விழியழகியே! அத்தானுக்கு உன் கையாள ஒரு கப் காபி போட்டு தரியா?” அமுதன் குறும்பு கூத்தாட கவிதை நடையில் சொல்ல மெளனமாக சமயலறைக்கு நடையை கட்டியவளின் எண்ணமெல்லாம் 
“அவங்க இப்படியெல்லாம் பேச மாட்டாங்க, பாக்க அப்படியே அவங்கள மாதிரியே! இருக்காங்க” ஒரு முடிவோடு மூவருக்கும் காபியை கலந்து எடுத்துக் கொண்டு சென்றவள் இருவருக்கும் கொடுத்து விட்டு தானும் எடுத்துக் கொண்டு அங்கேயே அமர்ந்து விட்டாள். 
யாழிசை என்றால் இப்படி ஆண்களோடு சரிக்கு சமமாய் அமர்ந்திருக்க மாட்டாள். இவள் கயல்விழி அல்லவா. 
அவளை புன்னகை முகமாக ஏறிட்ட பிரதீபன் “கயல் உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்” 
காபி கப்பில் வாயை வைத்தவாறே அவனை ஏறிட்டவளின் பார்வை “சொல்லுங்க” என்றது 
“இந்த சொத்து முழுக்க உன் அப்பாவுக்கு சொந்தம். முறையா உனக்குத்தான் சேரனும். ரிஷி பேர்ல 60 % என் பேர்ல 40 %  இருக்கு” 
“அப்போ இவரு பெயர்ல ஒன்னும் இல்லையா?” என்று அமுதனை ஏறிட்டு கேட்டாள் விழி. 
என்ன செய்வதென்று பிரதீபன் முழிக்க “ரிஷி தான் மாமா கிட்ட வளந்தான் அதான் அவன் பேர்ல சொத்தை எழுதி வச்சிட்டாரு” அமுதன் அலுப்போடு சொல்ல 
“எல்லா சொத்தையும் எனக்கு கொடுத்துட்டு நீங்க ரெண்டு பேரும் என்ன செய்ய போறீங்க? அது மட்டுமில்லாம எனக்கு நம்ம பிசினசை பத்தி ஒண்ணுமே! தெரியலையே! ஏன் என்ன பிசினஸ் பண்ணுறோம் னு கூட தெரியல” உதட்டை பிதுக்கியவள் “என் பேர்ல எல்லா சொத்தையும் எழுதி வச்சிட்டு என் கிட்ட சம்பளத்துக்கு வேல பாக்க போறிங்களா?” குரலில் கிண்டலோடு சொல்ல அமுதன் அவளை ரசிக்கலானான். 
“உனக்காக இத கூட பண்ண மாட்டோமா?” பிரதீபன் இன்முகமாகவே சொல்ல 
இருவரையும் ஆழ்ந்து பார்த்தவள் “உங்க உழைப்பு இதுல இருக்கு வேணும்னா மூணு பங்கா பிரிச்சி எழுதிக்கோங்க” 
“இல்ல யாரும் உன்ன ஏமாத்திட கூடாதில்ல” பிரதீபன் அமுதனை பார்த்தவாறே சொல்ல 
அவர்களின் பார்வை மாற்றத்தை கவனியாது போல “என்ன செய்யலாம்” விழி அவர்களையே திருப்பிக் கேக்க
“எப்படியும் ரிஷியோட பங்கு உனக்குத்தான். நா வேணா என் பங்குல பாதிய அமுதனுக்கு கொடுக்குறேன்” இதுதான் சரி என்றது போல் பிரதீபன் சொல்ல அவர்களை கூர்ந்து நோக்கியவள் 
“உங்க விருப்பம் போல செய்ங்க. போற பயணத்த சாப்பிட்டுட்டு போங்க”என்று எழுந்தவள் சாப்பாட்டறையை நோக்கி செல்ல
 “என் போன ரூம்லயே வச்சிட்டு வந்துட்டேன்.  நா போய் எடுத்துட்டு வரேன்” என்று அமுதன் மாடிப்படிகளில் தாவி ஏற பிரதீபன் கயல்விழியின் பின்னால் சாப்பாட்டறைக்குள் நுழைந்து கதிரையில் அமர்ந்தான்.   
“ஏன் பொய் சொன்னீங்க” கயல் ப்ரதீபனை முறைக்க, 
அவள் எதை பற்றி கேக்கின்றாள் என்று புரிந்து கொண்டவன் “நீ தானே ரிஷியை விட்டுட்டு போயிட்ட?  ஏன் விட்டுட்டு போயிட்ட? என்ன காரணம்” அவளின் கேள்விக்கு பதில் சொல்லாது  எதிர் கேள்வி கேட்டவன் பாரிமாறிக்கொள்ள அமுதனும் மின்தூக்கியில் வந்து சேர்ந்தான்.
இருவரும் சாப்பிடும் வரை அமைதியாக இருந்தவள், அவர்கள் வாசலுக்கு வந்ததும் பின்னாலையே வந்து
“என் கணவர் இறந்து விட்டார் என்று ஊரு உலகத்துக்கு தெரியும். நா தாலியோட அலைஞ்சா நல்லாவா இருக்கு. அம்மாவும் சுயநினைவோடு இல்ல. தாலியருக்க மத்த சடங்குக்கெல்லாம் ஏற்பாடு பண்ணுங்க” என்றவள் புன்னகை முகமாகவே மாடிப்படிகளில் ஏறலானாள். அவள் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த இருவரின் முகத்திலும் எந்த மாற்றமும் இருக்கவில்லை.
யாழிசை மாடிக்கு சென்றுவிட்டாள்  என்று உறுதி படுத்திக் கொண்ட அமுதன் ஏதோ சொல்ல வர  அவனை கை நீட்டி தடுத்த பிரதீபன் முறைத்தவாறே
“என்ன பண்ணுற? நீ”
“நா என்ன பண்ணேன்” அமுதன் புரியாது பார்க்க 
“சைட்டா அடிக்கிற சைட்டு, தோலை உரிச்சு உப்பு போடுவேன்” மிரட்டல் குரலில் சொல்ல 
அதை அசால்ட்டாக விட்டவன் “அவ என் அத்த பொண்ணு நா அப்படித்தான் பார்ப்பேன். யார் அனுமதியும் எனக்கு தேவ இல்லை” 
“டேய் அவ கல்யாணமானவடா” 
“அதான் அவன் செத்து போய்ட்டானே! மறுதாலிய நா கட்டுறேன்” கண்சிமிட்டியவாறே புன்னகைக்க 
“அவ பக்கம் திரும்பின தொலைச்சி புடுவேன் தொலைச்சி” கர்ஜனை குரலில்லையே! கூறிய பிரதீபன் அமுதனை முறைத்தவாறே வெளியேற 
“யாரு கிட்ட”  பதிலுக்கு அவனை முறைத்தாலும் உள்ளம் நிறைந்த சந்தோசத்துடன் விசிலடித்தவாறே அவனை பின் தொடர்ந்தான் கனி அமுதன். 
ரிஷி இறந்து விட்டான் என்று பிரதீபன் சொல்வதும் அவளின் கணவன் கண் முன்னே வேறு ஒருவனாக நிற்பதும், எது நிஜம் என்று குழம்பியவள் சந்தேகம் தீராமல் மாடிக்குச் செல்வது போல் சென்று உடனே மின்தூக்கியில் வந்தது அவர்களை கண் காணிக்க. அவர்களின் பேச்சில்   
 “அப்போ நிஜமாவே அவர் அவங்க இல்லையா?” ஏதோ ஒரு பெரிய ஏமாற்றம்  மனதை அடைக்க நண்பர்கள் இருவரும் கிளம்பி செல்வதை பாத்திருந்தாள்.      
ரிஷியோடு நான்கு மாதம் வாழ்ந்திருப்பாளா? அவன் கோபமாக, முரட்டுத் தனமாக அரக்கனாக இருந்தது ஒரு மாதமென்றால்! இரண்டு மாதங்கள் அவனோடு சந்தோசமாக இருந்தாலே! தன் கணவனை அவளுக்கு அடையாளம் தெரியாதா?  ப்ரதீபனும் சேர்ந்து நடிக்கிறானா? ஏன் ஒன்றும் புரியவில்லை. இல்லை நான்தான் குழம்பி போய் இருக்கேனா? உண்மையிலயே அவங்க கூடப்பிறந்தவரா? அப்போ பிரதீபன் யாரு? 
நான் தான் கயல்விழி என்று சொல்லாமல் தானே! சென்றேன். கயல்விழி என்று அறிந்து கொண்டு தான் பிரதீபன் இன்முகமாக பேசினான். அம்மாவையும் தெரிந்திருக்கு. டயரின் படி அம்மாவை இவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லையே! ஒரு வேல அப்பா போட்டோ காட்டி இருப்பாரோ! தாலி அறுக்கனும் னு  சொன்னாலாவது உண்மையை சொல்வாங்கன்னு பாத்தா மரம் மாதிரி நிக்குறாங்க. புதுசா என்ன பண்ண போறாங்கன்னு தெரியலையே! பிரதீபன் அழைத்த உடன் வந்திருக்க கூடாதோ! குழம்பியவாறே மின்தூக்கியில் நுழைந்தாள் கயல்விழி.     
  “கயல்விழிக்கு சொத்தை கூடிய சீக்கிரம் மாற்றிக் கொடுத்து, மும்பாயில் இருக்கும் ஆறு நகைக்க கடைகள் பற்றியும், சென்னையில் இருக்கும் நகைக்கடை பற்றியும் மற்ற இதர சொத்துக்கள் பற்றிய விவரம் அனைத்தையும் சொல்லி வியாபாரத்தையும் கூடிய சீக்கிரம் கற்றுக் கொடுக்கணும்” பிரதீபன் யோசனையாக சொல்ல 
“இன்னைக்கே வக்கீல் கிட்ட பேசுறேன்” அமுதன் புன்னகைத்தான். 
“இவன் என்ன நினைக்கிறான் ஒண்ணுமே புரியல” ப்ரதீபனின் சிந்தனை இவ்வாறு இருக்க, 
“நீ இல்லாத இந்த மூணு நாளும் கடைல வேல பாத்து பெண்டு நிமிர்ந்து போச்சு. ரிலாக்ஸ் பண்ண சுவிஸ்லாந்துக்கு டிக்கட் போடு” கூலாக சொன்னவனை முறைத்து பார்த்த பிரதீபன் 
“இன்னும் ஒழுங்காகவே வேல பாக்க ஆரம்பிக்கல இப்போவே தொரைக்கு மூச்சு முட்டி ரிலாக்ஸ் பண்ண கேக்குதோ” மனத்தால் சாடியவன் 
“முதல்ல கயல் வேலைய முடிக்கலாம்” 
“ஓகே” என்று அமுதன் தலையசைக்க அதன் பின் வண்டியில் அமைதியே நிலவியது. 
 

Advertisement