Advertisement

அத்தியாயம் 15
இரவில் வெகு நேரமாக கண்விழித்திருந்த கயல்விழி எப்பொழுது தூங்கினாலோ அவளின் செல்ல மகன் அவளை முத்தமிட்டு எழுப்பிக் கொண்டிருக்க, ஊட்டி குளிர் வேறு அவளை மேலும் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கச் சொல்லி கட்டளையிட்டுக் கொண்டிருந்தது. 
“மா எந்திரிமா. மா எந்திரிமா” ஸ்ரீராம் அவளை எழுப்ப அவனையும் இழுத்து போர்வைக்குள் புகுத்தி அணைத்தவள் அவனின் நெற்றியில் முத்தமிட்டவாறே 
” சூரியன் வேற நல்லா தூங்குறான் நாமளும். இன்னம் கொஞ்சம் நேரம் தூங்கலாம்”   
ஸ்ரீராமும் சமத்தா அவளின் கழுத்தை கட்டிக்க கொண்டு கண்களை மூடிக் கொண்டான். 
ஸ்ரீராம் முத்தமிட்ட போதே கண்களை திறந்து மணியை பார்த்தவளுக்கு “இன்னும் ஐஞ்சுமணி கூட இல்ல, காலைலயே எழுந்து ஸ்கூலுக்கு போக என்ன ஆர்வம்” என்று நினைத்து சிரித்துக் கொண்டவள் எண்ணமெல்லாம் ரிஷி மீண்டும் வந்து தொல்லை செய்ய, 
“அவங்கள விட்டு வந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக போகுது. இன்னும் அவங்கள மறக்க முடியல” ஒரு பெருமூச்சு விட்டவாறே நினைக்க 
” மறக்க விடாத படி அவனையே உரிச்சு வச்சி உன் செல்ல மகன் பிறந்திருக்க, அவன நீ மறந்தாதானே!” அவளின் மனசாட்ச்சி கைகொட்டி சிரிக்க ஆரம்பித்தது. 
“அவங்க என்ன செய்திருந்தாலும் நா அவங்க மேல வச்ச அன்பு உண்மையானது. அது என்றைக்கும் பொய்யாகாதே! அவங்க தப்பானவங்களா  இருந்தாலும் அவங்களால தான் எனக்கு என் அம்மா கிடைச்சாங்க” தூங்கும் திலகாவை கண்கள் திறந்து பார்த்தவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள். 
“என்ன கொடும படுத்தினாலும் பொறுத்து போனவ? விவாகரத்து பாத்திரத்துல கையெழுத்து வாங்கிட்டான்னு தானே நீ அவனை விட்டு வந்த?” மனசாட்ச்சி கேட்ட கேள்விக்கு
“அப்பா சம்பாதிச்ச சொத்து நியாய படி அவங்களுக்கு தானே சேரனும், அத நா வந்து உரிமை கொண்டாடுவேன்னு அவங்க தப்பா நினைச்சி, என்ன கல்யாணமும் பண்ணி தரம் தாழ்ந்து நடந்து கிட்டாங்க, என்ன தான் கொடும படுத்தி, கேவலமா பேசினாலும் அவங்க கண்ணுல ஒரு வலி தெரியும் அதுக்காக தான் பொறுத்துப் போனேன். கேட்டிருந்தா நானே சொத்தை எழுதி கொடுத்திருப்பேன்.  அவங்க என்ன சென்னைக்கு கூட்டிட்டு வந்ததால தான் அம்மா கிடைச்சாங்க, அதுக்காகவே அவங்கள மன்னிக்கலாம்” ரிஷிக்காக சப்பைக்கட்டியது அவளின் காதல் மனம்.
யாழிசை ஊட்டி வந்து ஐந்து வருடங்கள் கடந்திருக்க, ஸ்ரீராம் பிறந்ததும் இங்கே தான்.  இலங்கைக்கு போக முடியாது. போகும் வழியும் தெரியாது. எங்கே செல்வது? என்று திலகாவோடு அநாதரவாக நின்றவளுக்கு ரிஷியோடு ஊட்டிக்கு வந்தது நியாபகத்தில் வரவே ஊட்டிக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து, ஒருவாறு வந்தும் சேர்ந்தாள். 
வந்திறங்கியவள் எங்கே செல்வது, என்ன செய்வதென்று முழிக்க, திலகா பசியென்று சொல்ல அவளை அழைத்துக் கொண்டு சாப்பிட ஒரு ஹோட்டலுக்குள் புகுந்தவள் சாப்பிட்டு விட்டு திலகாவை கூட்டிக் கொண்டு ரோஜா தோட்டத்துக்கு சென்றாள். 
யாழிசைக்கு நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. சரியான படிப்பும் இல்லாமல் வேலை தேட முடியாது. அதுவும் அவள் இலங்கையை சேர்ந்தவள். கடவுச் சீட்டும் கையில் இல்லை. திலகாவின் நிலையும் மோசமாக இருக்கும் போது அவளை தனியாக விட்டு விட்டு வேலைக்கும் செல்ல முடியாது. கையில் கொஞ்சம் பணமும், நகைகளும் இருக்க முதலில் வாடகைக்கு ஒரு வீடு தேடலாம் அப்பொறம் வாழ்வாதாரத்துக்கு வழி செய்யலாம் என்றெண்ணியவள் திலகாவை அழைத்துக் கொண்டு வீடு தேடலானாள்.
சிலர் அவளின் கழுத்தில் தொங்கிய தாலியை கண்டு கணவன் எங்கே என்று கேக்க, அதை ரவிக்கைக்குள் மறைத்தவாறு மீண்டும் களமிறங்க, சிலர் ஆதார் அட்டை மற்றும் ஆவணங்களை கேக்க செய்வதறியாது திகைத்து நின்றாள்.  
அன்றிரவு ஒரு லாட்ஜ் இல் தாங்கிக் கொண்டவள் மீண்டும் திலகாவை அழைத்துக் கொண்டு வீடு தேட முந்தைய நாள் போலவே கேள்விகள் எழ
“என்ன செய்வது இப்படியே போனால் கையில் இருக்கும் காசு கரைஞ்சிடுமே” என்ற பயம் அவளை தொற்றிக் கொள்ள “வேலையாவது தேடலாம், எந்த வேலையென்றாலும் செய்யலாம்” என்று  நினைத்தவாறே அடுத்து வேலை தேட கையில் பொம்மையை வைத்துக் கொண்டிருக்கும் திலகாவை கூட வைத்திருப்பதால் யாரும் வேலை கொடுக்கவுமில்லை. உதவ முன் வரவுமில்லை. 
ஒரு வாரம் பத்து நாள் கடந்திருக்க இதே நிலை “அவங்கள  விட்டு விட்டு வந்ததால் தான் கடவுள் சோதிக்கிறாரா?” அந்த பேதை பெண் நினைக்க, கோவிலை நோக்கி நடந்தாள். 
“ஈஸ்வரா அவருக்கு தான் என்னை பிடிக்கலையே! அப்பாவோட சொத்துக்காக தான் என்ன கல்யாணம் பண்ணாங்கன்னு சொன்னாங்களே! எந்த சொத்தும் வேணாம், விவாகரத்து வேணும்னாலும் பெற்றுக் கோங்க னு கடிதம் எழுதி வைத்து விட்டு, வெற்று பேப்பரில் கையெழுத்து போட்டுட்டு அவர் நிம்மதியா இருக்கட்டும் னு தானே வந்தேன். இன்னும் என்ன எதுக்கு சோதிக்கிற?” கண்ணை மூடி வேண்டிக் கொண்டவள், கோரிக்கைகளையும், முன் வைத்து விட்டு கண்களை திறக்க திலகாவை காணவில்லை. யாழிசையின் மனம் அடிக்க ஆரம்பித்தது. 
தாயும், தந்தையும் இறந்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த யாழிசைக்கு திலகா உயிரோடு கிடைத்தது பாக்கியமென்றால் அவள் மனநிலை பாதிக்கப் பட்டு இருந்ததும் தனக்கு ஒரு மகள் இருக்கின்றாள் என்ற உணர்வே! இல்லாமல் இருந்ததும் யாழிசையை பெரிதும் வாட்டியது. 
திலகாவை தேடி கோவில் முழுக்க அலைய யாரோ ஒரு பாட்டியுடன் அமர்ந்து தேங்கா சாப்பிட்டு கொண்டிருந்தாள் திலகா. அன்னையை நோக்கி ஓடியவள்
“எங்கம்மா போயிட்ட, சொல்லாம எங்கயும் போக கூடாதென்று சொல்லி இருக்கேனுள்ள” திலகாவின் முகத்தை வாஞ்சையாக தடவியவாறே யாழிசை சொல்ல பார்த்துக் கொண்டிருந்த பாட்டிக்கு அவளை ரொம்ப பிடித்து போனது.
“பசிச்சது அதன் தேங்கா சாப்பிட வந்தேன்” திலகா குழந்தை போல் சொல்லியவாறே கையிலிருந்த பொம்மைக்கும் ஊட்டலானாள்.  
நாலெழுத்து படித்த உடனே தனக்கு எல்லாம் தெரியும் என்று பெற்றவர்களை எடுத்தெறிந்து பேசும் பிள்ளைகளுக்கு மத்தியில் மனநிலை பாதிக்கப் பட்டிருக்கும் அன்னையை காணாது அவள் பதைபதைத்து  ஓடிவந்து கடிந்து பேசாமல் தன்மையாக சொல்லும் விதம் அவரின் மனதை உருக்க 
கலையான முகம் தான். கவலையிலா? களைப்பாலையா? களையிழந்து அவர் கண்களுக்கு தெரிய “உன் பேரென்னமா?”  அன்பாக அவளை பார்த்தார் சுந்தரி பாட்டி. 
“கயல்விழி. கயல்விழிதானே உன் பெயர்” திலகா தான் சொன்னாள். 
அன்னை தன்னை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்று அடிக்கடி திலகாவிடம் 
“நா உன் பொண்ணு மா… கயல்விழிமா…. கயல்மா  …. ” என்று சொல்ல இன்றுதான் அவள் பெயரையும் சொல்லி அதையே யாழிசையிடம் உறுதி  படுத்திக்க கொண்டாள் திலகா. அன்று முதல் யாழிசை கயல்விழி ஆனாள். {இனி யாழ கல்விழி என்றே கூப்பிடலாம் கியூட்டிபாய்ஸ்} 
“அக்கா நீங்களா?… இது உங்க அம்மாவா?” அங்கே ஒரு யுவதி கயல்விழியை ஆனந்தமாக வியந்தவாறு கேக்க யாரிவள் என்ற பார்வைதான் கயல்விழியிடம். 
“என்னக்கா என்ன தெரியலையா? நா திவ்யா” சொல்லியவாறே கயல்விழியின் கைகளை பிடித்துக் கொண்ட திவ்யா “ரொம்ப நன்றிக்கா அன்னைக்கி நீங்க உதவி பண்ணதால தான் இன்னைக்கி என் பாட்டி என் கூட இருக்காங்க” என்று கண்கள் கலங்க மேலும் குழம்பினாள் கயல்விழி.
கயல்விழி திவ்யாவுக்கு உதவி செய்ததையே சுத்தமாக மறந்திருக்க, அவளின் குழப்பமான முகத்தைக் கண்டு அன்று நடந்ததை நியாபகப் படுத்தி சுந்தரி பாட்டிக்கு கயல்விழியை அறிமுகப் படுத்தினாள் திவ்யா. 
சுந்தரிப் பாட்டியும் நன்றி கூறி விட்டு அவர்கள் எங்கு தங்கி இருக்கிறார்கள் என்று விசாரிக்க, வீடு தேடி கொண்டிருப்பதாகவும், கூடவே வேலையும் என்று கயல்விழி மெதுவாக கூறி உதவ முடியுமா என்று கேட்டாள். 
எதுவும் பேசாமல் “என் கூட வாங்க” என்று இருவரையும் அழைத்துக் கொண்டு பாட்டியும் பேர்த்தியும் கொஞ்சம் மலையேறி நடந்தவர்கள் அந்த சிறிய முற்றத்தோடு இருந்த வீட்டை அடைந்தனர். மூன்று அறைகளை கொண்ட சாதாரண வீடு. பின்னாடியும் சிறு இடம் இருக்க,  முன்னாள் பூ செடிகளும், பின்னால் சுத்தம் செய்யாததால் காடுமாக சுற்றியும் தேயிலை மரங்கள். பார்க்கவே இதமான, கண்ணுக்கு குளிர்ச்சியான சூழல். 
“ரொம்பவே! அழகாக இருக்கு” யாழிசைக்கு கொஞ்சம் இரத்தினபுரியின் நியாபகமும் வர கூடவே இயல், சீதா, மங்கம்மா, யோகராஜ்  என்று அனைவரினதும் நியாபகம்  வந்தது. அவளை மேலும் யோசிக்க விடாது சுந்தரி பாட்டியின் குரல் அவளை அழைக்க 
“விழி இது எங்க வீடு தான். நீக்க ரெண்டு பேரும் இங்கயே தங்கி கோங்க, நானும் இவளும் தன்னந்தனியா யாருமில்லாம அனாதையா கிடக்கிறோம், உறவென்று நீயும் எங்க கூடவே! இருந்துடு” அவர் மறுக்க முடியாதவாறு சொல்ல, வாடகை பற்றி வாய் வரை வந்த வார்த்தையை  உள்ளேயே முழுங்கிக் கொண்டாள் கயல்விழி. 
ஆபரேஷனுக்கு பிறகு சுந்தரிப் பாட்டி இப்பொழுதுதான் சற்று தேறி இருந்தார். கணவன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தேயிலை தோட்டத்தோடு இந்த வீட்டையும் வாங்கி இருக்க, அவருடைய மகன் பிறந்ததும் இந்த வீட்டில் தான். திவ்யா பிறந்த பின் நேர்த்திக் கடனை நிறை வேற்ற சென்ற அவர்களின் வண்டி விபத்துக்குள்ளாகி உயிர் பிழைத்தது பாட்டியும், பேர்த்தியும் மட்டுமே! அன்றிலிருந்து திவ்யாவை தனியாக விட்டதே இல்லை. அதனால் அவளும் உலகம் அறியாது பாட்டியே கதியென்று இருந்து விட்டாள். 
தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு கொடுத்து கொஞ்சம் காசு வர பாட்டி பேர்த்தி இருவரினதும் வயிறு வாடாமல் பார்த்துக் கொள்ள, வேறெந்த தேவையும் அவர்களுக்கு இருக்க வில்லை. திவ்யாவின் கல்யாணத்துக்காக என்று பாட்டி சிறுது பணம் மாதாந்தம் வங்கியில் போட்டு வந்தாலும், அதை பற்றி திவ்யாவிடம் சொல்லவுமில்லை. 
அதற்க்கு ஒரே காரணம் பதினாறு வயதிலிருந்து அவளுக்கு வரன்கள் வர “நா கல்யாணம் பண்ணி உன்ன விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன்” என்று திவ்யா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவதே! 
அவளை சமாதானப் படுத்தியவர் “முதல்ல படி” என்று அதட்டி விட்டு நகர்ந்து கொள்வதோடு அவள் இன்னும் சிறு பிள்ளை, வயதோடு பக்குவம் வர புரிந்துக் கொள்வாள் என்று விட்டு விட்டார். 
பாட்டியையே சுற்றி வந்தவளுக்கு பூக்கள் மீது ஆர்வம் இருக்க, மாலை நேரமும், பாடசாலை விடுமுறை தினங்களிலும், சுற்றுலா பயணிகள் வந்து போகும் இடத்தில் பூக்கடையொன்று ஆரம்பித்தாள். சொற்ப வருமானமேயானாலும், மனத்திருப்திக்காக செய்ததால் பாட்டியும் அவள் வழியில் விட்டு விட சுந்தரிப் பாட்டியும் அவளோடு கடையில் சில சமயம் இருப்பார். 
கடையில் இருந்த ஒருநாள் சுந்தரிப் பாட்டி  திடீரென மயங்கி விழவும்  சுற்றி இருந்தவர்களின் உதவியோடு அவரை மருத்துவ மனையில் அனுமதித்தவள்  அவருக்கு இதயத்தில் சின்ன பிரச்சினை இருக்கு ஆப்ரேசன் பண்ணனும் னு டாக்டர் சொல்ல அவளுக்கு தெரிந்தது பணம் கட்டவில்லையென்றால் பாட்டி செத்துப் போய் விடுவார் என்பது மாத்திரமே!  
பாட்டியை தவிர யாருமில்லை, யாரிடம் உதவி கேட்பது, பாட்டி சேமித்து வைத்திருக்கும் பணத்தை பற்றியும் அறியாதவள் பூ கடையில்  கருத்த மேகம் போல் அமர்ந்திருந்தவளுக்குத்தான் கயல்விழி, மாலையையும், வளையல்களையும் கழட்டிக் கொடுத்து உதவியது. 
ஆபரேஷன் நல்ல படியாக முடிந்து பாட்டி கண்களை திறந்த பின் தான் திவ்யாவுக்கு  உயிரே வந்தது. பாட்டியின் உடம்பும் கொஞ்சம் தேற ஆபரேஷன் பண்ண பணத்துக்கு என்ன பண்ணணு கேக்க, கயல்விழி உதவி செய்ததை சொல்ல, இப்படியும் மனிதர்களா? என்று ஆச்சரிய பட்டவர், திவ்யாவை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து விட்டேனோ! என்ற எண்ணம் மேலோங்க அவளை எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்கும் பாக்கும் வர என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கலானார். 
கயல்விழியை சந்தித்ததும், திலகாவின் நிலையையும் அறிந்த பின் அவர்களை தனியாக விட மனமில்லாது கூடவே கூட்டிட்டு வந்து அடைக்கலமும் கொடுத்தார். யாழிசை அன்று செய்த உதவி இன்று அவளுக்கு கை கொடுத்தது.
வீட்டுக்கு பின்னாடி இருந்த காட்டை சுத்தம் செய்து காய்கறிகளை பயிரிட தொடங்கினாள் கயல்விழி. ரிஷியின் வீடு என்று நினைத்துக் கொண்டிருந்த அவளின் அப்பாவின் வீட்டுத் தோட்டத்தில் அவள் பெற்ற அனுபவமும், பயிற்ச்சியும் அவளுக்கு கை கொடுக்க, முன்வாசலில் அவளுக்கு பிடித்த மஞ்சள் ரோஜாவும் பூத்துகுலுங்க திவ்யாவும் அவளுக்கு உதவ, அவளின் முயற்ச்சியால் தோட்டம் சிறப்பாக அமைந்தது. கயல்விழி தன்னை விட ஒரு வருடம் இளையவள் என்று அறிந்த பின் அக்கா என்று அழைத்ததற்கு அசடு வழிந்த திவ்யா விழி என்றே அழைக்கலானாள்.
 
கொஞ்சம் நாட்களாகவே தலை சுற்றல் இருக்க அதை கண்டு கொள்ளாமல் வேலை பார்த்தவள் சுந்தரி பாட்டிதான் அவள் உண்டாகி இருப்பதாக கண்டு கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். 
ரிஷி செய்த கொடுமைகளுக்கு அவள் குழந்தையை கருவிலையே! அழித்திருக்கலாம். ஆனால் அது அவள் குழந்தை பெற்றேடுப்பேன் என்று உறுதியாக நின்று பெற்றேடுத்தவள் ஆண் குழந்தை என்றதும் மேலும் சந்தோஷமடைந்தாள். கணவன் என்ன தீங்கு இழைத்திருந்தாலும் அவனை அவளால் முற்றாக வெறுக்க முடியவில்லை. கணவனை உரித்து வைத்தது போல் பிறந்த செல்ல மகனுக்கு “ஸ்ரீராம்” என்று பெயர் சூட்டியது கணவனிடம் இருந்த பல பெண்களை அடையும் குணம் அவனிடம் வரவே கூடாதென்பது அவள் மட்டும் அறிந்த ரகசியம். 
 குழந்தையே பிறக்க கூடாதென்று சொன்னவனுக்கு குழந்தையை பற்றி தகவல் சொல்ல அவளின் மனம் இடம் கொடுக்க  வில்லை. சொல்லி இருந்தாலும் அவன் வந்திருக்க மாட்டான். 
வாழ்க்கையில் நடந்த பெரிய விஷயங்களை பொறுத்து போன யாழிசை, கணவனின் உரையாடலின் ஒரு சிறிய பகுதியை கேட்டு விட்டு, அதை தப்பர்த்தம் கொண்டு அவனை பிரிந்து விட்டால் என்று அறிந்துக் கொள்ளும் போது காலம் கடந்து சென்றிருக்குமோ!
தன் தப்பை உணர்ந்த பின்னும், யாழிசையிடம் மன்னிப்பு கேட்க்காமல், மனம் திறந்து பேசாததது ரிஷியின் தவறென்றால்? பேச வேண்டிய நேரம் பேசாமல் அமைதியாக கணவனை விட்டுவந்தது முறையா?
தனக்கு பிடித்தமான தையல் வேலைகளையும் ஆரம்பித்து வீட்டிலிருந்தே துணிகளை தைத்து கொடுக்க ஆரம்பித்தவள் இந்த ஐந்து வருடங்களில் மூன்று பேரை வேலைக்கும் அமர்த்தி உடைகளை தைக்கும் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றாள்.
வாழ்க்கையில் எல்லாம் நன்றாக போய் கொண்டு இருக்கிறது என்று ஆனந்தமாகவும், நிம்மதியாகவும் இருந்த கயல்விழிக்கு ஐந்து வருடங்கள் கழித்து ரிஷியை பற்றிய செய்தி கிட்டியது, அதுவும் அவன் உயிரோடு இல்லை இறந்து விட்டான் என்பதே! கால்கள் பலமிழக்க தரையில் மடிந்து சரிந்தாள் கயல்விழி.
 

Advertisement