Advertisement

அத்தியாயம் 14
கடவுளின் கைகளில் ஆடும் பொம்மைகள் நாம். அவனோ பெரிய பொம்மலாட்டக்காரன். அவனுக்கு யாரை ரொம்ப பிடிக்குமோ அவர்களுக்கு கஷ்டத்தை கொடுத்துக் கொண்டே சோதிப்பான்.  
 
யாழிசை எழுந்துக்கொள்ளும் போது மதியம் தாண்டி இருக்க திரைசீலைகள் மூடி இருந்தமையால் அறை இருட்டாகவே இருந்தது. கை வலியும் கொஞ்சம் மட்டுப் பட்டிருக்க, மெதுவாக கண்விழித்தவளுக்கு முதலில் தான் எங்கே இருக்கின்றோம் என்று கிரகிக்கவே சில நிமிடங்கள் எடுத்திருக்க ஞாபக அடுக்கின் தாழ்கள் ஒன்றொன்றாக திறக்கப்பட அது கொடுத்த அதிர்ச்சியின் உணர்வலைகள் தாளமுடியாது உடலெல்லாம் வியர்த்து வழிய  கை கால்கள் எல்லாம் நடுநடுங்க அன்று அதிகாலையில் அவள் கணவன் அவளிடம் பேசியவைகளும் அதன் பிறகு நடந்த அனைத்தும் தீவிரமாக யோசிக்க அவள் மூளையில் அடுத்தடுத்த நொடிகளில் வந்து முட்டி நின்றது.
 அறை இருட்டாக இருக்கவும் தட்டுத்தடுமாறி மின் விளக்கை ஒளிரச்செய்து மீண்டும் கட்டிலில் அமர்ந்து கொண்டு ஒருவாறு சுதாரித்தவள் தலை வலிக்கவே இரு கைகளையும் கொண்டு தாங்கி பிடித்து முழங் காலிலேயே! தலையை புதைத்துக் கொண்டாள். 
எள்ளளவு நேரம் அவ்வாறு இருந்தாலோ! ஒரு பெருமூச்சு விட்டவள் யாரும் தன்னை தேடவுமில்லை என்ற எண்ணம் தோன்றி மேலும் கண்ணை கரித்துக் கொண்டு வர கண்களை துடைத்துக் கொண்டு வெளியே செல்லலாம் என்று எழுந்துக்கொள்ள அப்பொழுதுதான் சுவர் முழுக்க இருக்கும் புகைப்படங்களை கவனிக்கலானாள். எல்லாமே அவளுடைய புகைப்படங்கள். அதில் இருந்த ஒரு புகைப்படத்தை கண்டு திகைத்தவள் மீண்டும் மீண்டும் கண்களை துடைத்துக் கொண்டு அந்த புகைப்படத்தையே! பார்க்க அது அவள் ஆறு மாத குழந்தையாக இருக்கும் பொழுது எடுக்கப்பட்டிருந்தது. 
“என்னோட புகைப்படம் இங்க எப்படி வந்தது. இது…” என்று யோசித்தவள் ரிஷியின் அறைக்குள் ஓடி சீதா கொடுத்த இரண்டு பொருட்களையும் எடுத்து வந்தாள். 
ஒன்று ஆறு மாத குழந்தையாய் அவள் காணாமல் போன போது யாழிசை அணிந்திருந்த கவுன். ஒரு பொலித்தீன் கவரில் இட்டு தூசி போகாத அளவுக்கு முத்திரையிட்டு இருந்தாலும் துணி சேதமடைந்து இருக்க யாழிசை புகைப்படத்தில் அணிந்திருந்த அதே கவுன். 
மற்றது சீதா கொடுத்த சின்ன மாலையும் அதன் பதக்கமும். வட்ட வடிவான பதக்கம் அதில் KV என்று பொறிக்க பட்டிருந்தது. 
அங்கே இருந்த மற்ற புகைப்படங்களும் அவள் பிறந்தது முதல் ஆறு மாதம் வரை ஒவ்வொரு மாதமும் எடுக்கப்பட்டிருக்க, பூஜையறையில் இருந்த பெரியவர் அவளை தூக்கிக் கொண்டிருக்கும், கொஞ்சிக்க கொண்டிருக்கும், முத்தமிட்டுக் கொண்டிருக்கும் புகைப்படங்களும் இருக்கவே! 
“இவர் அவங்க {ரிஷியோட}  அப்பா இல்ல? அவர் கைல நா எப்படி” யோசிப்பதற்க்கே மண்டை வெடித்து விடும் போல் இருந்தது. உள்ளுக்குள் பயம் வேறு வந்து ஒட்டிக் கொண்டது. அது ரிஷி தனது அண்ணனோ என்ற அச்சம் தான். 
“சி, சி இருக்காது. கடவுள் அவ்வளவு இரக்க மற்றவர் இல்ல” என்றவள் மேலும் அவ்வறையை ஆராய மோகன சுந்தரத்தின் டயரி சில அவள் கையில் கிடைத்தன. வாசிக்கலாமா? வேண்டாமா? என்று மனதோடு பட்டிமன்றம் நடாத்தியவள்  1993 வருட டயரியை கையில் எடுத்தாள். 
ஏனோ யாழிசைக்கு தான் யார் என்று அறிந்துக் கொள்ளும் ஆர்வம் மேலோங்க அந்த டயரியை மாத்திரம் எடுத்துக் கொண்டு மற்றவற்றை இருந்தது போல் மேசை ட்ரொவரில் வைத்தவள், அவள் கையேடு கொண்டு வந்த இரண்டு பொருட்களையும் அங்கையே வைத்து விட்டு டயறியோடு சமையலறையை கடக்க, ரிஷியும், ப்ரதீபனும் ஆபீஸ் கிளம்பினார்கள் என்ற தகவலை ராமு தாத்தா சொன்னாலும் காதில் வாங்கியவள் ஒரு தலையசைப்போடு புன்னகைத்து விட்டு,  தோட்டத்தில் உள்ள மாமர நிழலில் அமைத்திருக்கும் சீமெந்து பெஞ்சில் சென்று அமர்ந்தாள். 
டயரியை படிக்கணும் னு எடுத்து வந்தாலும் யாழிசையின் கைகள் நடுங்க ஆரம்பித்தது. முதல் பக்கத்தை பிரட்ட அங்கே மோகனசுந்தரத்தோடு ஒரு பெண் கல்யாணக் கோலத்தில் இருந்த புகைப்படம் இருக்க, யாழிசையின் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தது. 
“இந்த வீட்டில் இவங்க புகைப்படம் ஒன்றாவது இல்லையே! இவங்க தான் இவரோட மனைவியா?” தனது பெற்றோருடைய புகைப்படத்தியே! யாரென்று அறியாமல் சிந்தித்துக்  கொண்டிருந்தவள். அடுத்த பக்கத்தை திருப்ப, 
“திலகாவுக்கு குழந்தை பிறந்திருப்பதாக நண்பன்  ரத்னவேல் அலைபேசி மூலம் தகவல் தர அவளை காண ஆசையாக சென்னை சென்ற என்னை சரவணகுமரன் திலகாவை பார்க்க விடவில்லை. அவனோடு சண்டைக்கு போன என்னை அடித்து  விரட்டி விட்டான். 
வெளியே வந்த நான் என்ன செய்வதென்று ஒன்னும் புரியாமல் இருக்கும் பொழுது சரவணகுமரன் யாருடனோ போனில் பேசுவது காதில் விழுந்தது. 
“திலகா செத்துட்டா, குழந்தைய அனாத ஆசிரமத்துல விடவேண்டியதுதான்” 
திலகா செத்துட்டாளா? இல்ல, இல்ல பொய் சொல்லுறான்” என் மனதுக்குள் பூகம்பமே வெடிக்க,  “என் குழந்தையை அனாதை ஆசிரமத்துல விடுவதா? ” அவன் அங்கிருந்து சென்றதும் இரவென்றும் பாராமல் உள்ளே நுழைந்து குழந்தையை தேடலானேன். 
ஒருவாறு அறையை தேடி கண்டு பிடித்த போது திலகா அறையில் இல்லை. அப்போ சரவணகுமரன் சொன்னது உண்மையா? என் திலகா உண்மையிலயே! இறந்து விட்டாளா? அழுவதற்கு கூட நேரம் இல்லாமல் குழந்தையை தூக்கிக் கொண்டு நண்பன் ரத்னவேலை தேடித் சென்றேன். 
அந்த வீட்டுக்கு நான் எப்போதேயானாலும் போக முடியும் என்ற ஒரே காரணத்தால் காவலாளி வாயிலை திறந்து விட குழந்தை தூங்குவதால் காரிலையே வைத்து காரையும் வெளியேயே நிறுத்தி விட்டு உள்ளே சென்றேன்.  
வாசக் கதவில் கால் வைக்கும் போதே! ரத்னவேலும் அவன் தங்கை கீதாராணியும் பேசுவது கேட்டது. 
“அந்த சரவணகுமரன் வாழ்க்கையை பாலடிச்சது பத்தாதன்னே! அவன் தங்கச்சி வாழ்க்கையும் பாழடிக்கணும்” கீதாராணி. 
“நா அவளை காதலிச்சு ஏமாத்தலாம்னு பாத்தேன், அதுக்குள்ளே மோகன காதலிக்க ஆரம்பிச்சிட்டா, மோகன் வேற நண்பனா போய்ட்டான்” ரத்னவேல்
“ஹாஹாஹா நீ இப்படி சொல்வேன்னு தெரிஞ்சி தான் சரவணனுக்கு கால் பண்ணி மோகன் திலகாவை ஏமாத்திட்டான், அதுவும் நாங்க சொல்லி தான் செஞ்சான் னு சொல்லிட்டேன்” கீதாராணியின் குரலில் வஞ்சம் இழையோட 
வெளியே இருந்த எனக்கு நன்றாக புரிந்தது, இவர்களின் குடும்பப் பாகையில் அநியாயமாக நான் மாட்டிக் கொண்டேன் என்பதே! பகைவர்கள் என்று தெரிந்தும் திலகாவை கல்யாணம் செய்த பின் ரத்னவேலுடன் நடப்பு பாராட்டியதை எண்ணி மனம் கசந்தேன்.     
என் குழந்தை, என் தேவதை திலகாவின் மறு உருவம், ஆனால் கண்ணு மட்டும் என்னை போல, திலகாவின் ஆசைப் படி அவளுக்கு கயல்விழி என்று பெயரிட்டேன். 
திலகாவும் உயிரோடு இல்லாததால் இந்தியாவில் இருக்கப் பிடிக்காமல் இலங்கைக்கு போனேன். கொழும்பில் சின்னதா ஒரு நகைக்க கடை ஆரம்பித்து அங்கேயே இருந்தேன். எல்லாம் நல்ல படியாக போய் கொண்டிருந்த சமயம் மாணிக்க கல் வாங்கவென இரத்தினபுரிக்கு கயலையும் தூக்கிக் கொண்டு சென்றேன்.  
93இல் திடீரென பெருக்கெடுத்த பெருவெள்ளத்தில் நானும், கயலும் மாட்டிக் கொண்டோம். முன்ன பின்ன வெள்ளத்தை கண்ண்டிராத நா என்ன செய்வதென்று தவிக்கும் போது வெள்ளம் வீடு புகுந்தது. கயலை பத்திரமாக ஒரு மரப்பெட்டியில் படுக்க வைத்து  தோணி வரும் இடத்துக்கு தள்ளிக் கொண்டு போன போது சுழியில் சிக்கி நான் அடித்து செல்ல பட்ட போது கயல் மறுபக்கம் சென்றாள். தோணியில் வந்த சிலர் என்னை காப்பாற்றி தூக்கி எடுக்க கயலை காப்பாற்றும் படி அவர்களிடம் கெஞ்சினேன். அவர்கள் எங்கு தேடியும் கயல் கிடைக்கவில்லை. கயல் காணாமல் போய்விட்டாள். 
நிலைமை சீரானதும் அவளை தேடித் பார்த்தேன். பெட்டியோடு ஆற்றில் அடித்து சென்றிருந்தால் பிழைக்க வாய்ப்பில்லை என்று நிறைய பேர் சொல்ல, அவர்கள் மறை முகமாக சொன்னது கயல் உயிரோடு இல்லையென்பதே! அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் ஒரு மாதம் எல்லா வேலைகளையும்  விட்டு விட்டு என் மகளை தேடியலைந்தேன்.
 மண் சரிவாலும் பல உயிர்கள் போய் இருக்க, போலீஸின் உதவியும் எனக்கு கிட்டவில்லை.  திலகாவை இழந்து, கயலை இழந்து யாருக்காக வாழ எல்லா கோபமும் ரத்னவேல் மற்றும், கீதாராணியின் மேல் தான் திரும்பியது, அவர்களை கொன்றொழிப்பதே சரி என்ற எண்ணம் தோன்ற மீண்டும் சென்னை கிளம்பினேன். 
அங்கே தான் ரிஷி எனக்கு கிடைத்தான், பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு, அவனை அழைத்துக் கொண்டு மும்பாய் வந்தேன்” 
அத்தோடு அந்த டயரி முடிவடைந்திருக்க, அப்போ என் பெயர் கயல்விழியா? அப்போ அந்த பதக்கத்தில் இருந்த KV  கயல்விழியா? தான் யார் என்று அறிந்துக் கொண்டவள் ஆனந்தமாக அதிர்ந்தாள் யாழிசை வார்குழலி. 
ரிஷி தனது அண்ணன் இல்லையென்று நிம்மதியடைந்தவள், மீண்டும் முதல் பக்கத்தை திரும்பி “அம்மா, அப்பா” என்று கண்கள் கலங்க  ஆசை தீர அழைத்தவள் கண்கள் நிறைத்து  தனது பெற்றோர்களின் புகைப்படத்தை பார்த்து ரசித்தாள்.
அன்று இளவேந்தன் தான் ஒரு அனாதையென்று சொன்ன போது சீதாவின் கையை பிடித்து தலையில் வைத்துக் கொண்ட யாழிசை 
“என் மீது ஆணையாக சொல்லுங்க அத்த நான்  இந்த வீட்டு பொண்ணா? இல்ல அனாதையா?”
கண்கள் கலங்கியவாறே சீதாவின் முகம் அழுகையை தத்தெடுக்க தனவேந்தன் தாயையும், யாழிசையையும் மாறி மாறி சமாதானப் படுத்த யாழிசை அவன் சொல்வதை கிஞ்சத்துக்கும் கணக்கில் எடுக்காது பிடிவாதமாக சீதாவை ஏறிட்டு 
“இப்போ நீங்க உண்மைய சொல்லலைனா நா சாகுற வரைக்கும் உங்க கூட பேச மாட்டேன்” உறுதியான அவளின் குரலும், பார்வையும் சீதாவை அசைக்க  யாழிசையின் கையை பிடித்துக் கொண்டு அறைக்குள் சென்று கதவை தாளிட்டவள் அலுமாரியை திறந்து ஒரு சிறு பெட்டியை கையில் எடுத்தாள்.     
யாழிசையை கட்டிலில் அமர்த்தி அந்த சிறு பெட்டியை கையில் கொடுக்க யாழிசை திறந்து பார்க்கும் போதே சீதா யாழிசை அவர்களிடம் எவ்வாறு வந்து சேர்ந்தாள் என்பதை சொல்ல ஆரம்பித்தாள். 
“93 ல பெரிய வெள்ளமும், மண்சரிவு ஏற்பட்டிருச்சு மண்ணுக்கடியில் சிக்கி இருக்குறவங்களையும், இறந்தவர்களையும் வெளியே எடுக்க, எங்க ஊர்ல இருந்து ஆண் பெண் என்று எல்லாரும் போனோம். 
அங்க போக வெள்ளத்தை தாண்டி போக வேண்டி இருந்ததால தோணில போகும் போது ஒரு குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்டது. சுற்றி முற்றி பூரா வெள்ளம். குழந்தை எங்க னு தேடும் பொழுது ஒரு மரக்கிளைல சிக்கிய மரப்பெட்டியை நா உங்கப்பாவுக்கு காட்டினேன். 
ராஜும் ஒரு கணம் யோசிக்காம வெள்ளத்துல குதிச்சி மரப்பெட்டியை தள்ளிக் கொண்டு வந்தான். தோணில இருந்தவாறே நா உன்ன என் கைகளில் ஏந்தினேன். தேவதை மாதிரி இருந்த. நா தூக்கினதும் அழுகையை நிறுத்திட்டு என் முகம் பார்த்து சிரிக்க ஆரம்பிச்ச. அப்போவே முடிவு பண்ணேன். நீ தான் என் பொண்ணுன்னு. 
உன்ன தூக்கிட்டு நானும் ராஜும் வீட்டுக்கு வந்தோம். மங்கா வேற உன்ன கண்டு சந்தோஷத்துல அழுதே விட்டா. அவளுக்கு கல்யாணமாகி மூணு வருஷமா குழந்தையில்ல. கடவுள் தந்த என் பொண்ணுன்னு சொல்லி உன்ன கட்டிக்கிட்டு முத்தமிட ஆரம்பிச்சா. 
அப்போ நீ என் பெண்ணில்லையா என்ற ஏக்கம் எனக்குள் வந்து மனசு அடிக்க ஆரம்பிச்சது. 
“மங்கா நான் தான் குழந்தையை கண்டு பிடிச்சேன். அவ எனக்குத்தான் சொந்தம்” சீதா கறாராக சொல்ல 
“மங்கா, அக்கா யார் குழந்தைனே! தெரியல பெத்தவங்க குழந்தையை காணாம பரிதவிச்சு கிட்டு இருப்பாங்க, நீங்க ரெண்டு பேரும் ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடி கிட்டு” யோகராஜ் அதட்டலாக சொல்ல 
“ஏன் டா ஊரு முழுக்க வெள்ளம். மண்சரிவுல வேற நிறைய பேர் இறந்துட்டாங்க, குழந்தையாவது தப்பித் பொழைக்கட்டும் னு தானே! மரப்பெட்டில பத்திரமா வச்சி வெள்ளத்துல அனுப்பி இருக்காங்க” சீதா சொல்ல 
“சரி ஒரு வாரம் பத்து நாள் பாப்போம் யாரும் தேடி வரலைனா நாமளே! வச்சிப்போம்” யோகராஜ் இறங்கி வர மங்கம்மா கணவனுக்கு கட்டுப்பட்டு தலையசைத்தாலும்,
“யாரும் குழந்தையை தேடி வரவே! கூடாது” சீதா உடனடியாக கடவுளுக்கு பிராத்தனை செய்து. நேர்ச்சையும் வைக்க, மோகனசுந்தரம் கயல்விழியை எங்குதேடியும் கிடைக்காமல் போனது,  கடவுளும் அதை ஏற்றுக் கொண்டார் போலும். 
சீதாவும், மங்கம்மாவும் குழந்தையை மாறி மாறி கவனிக்க இருவரிடமும் ஒட்டிக் கொண்ட கயல்விழிக்கு யாழிசை வார் குழலி என்று பெயரிட யார் அம்மா என்ற கேள்வி எழுந்தது. 
மங்கம்மா அழுது கரைய சற்று மனம் இளகிய சீதா யாழிசையை இளாவுக்கு மணமுடித்து கொடுத்து காலம் பூரா வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு அன்றே இளா, யாழ் திருமணமும் பேசப்பட்டது. 
உண்மையை கூறி முடித்த சீதா “அன்னைக்கு நீ உடுத்தி இருந்த துணியும், மாலையும் தான் இது” என்று அவள் கையில் கொடுத்திருக்க, பத்திரமாக அதை மும்பைக்கு கொண்டு வந்தாள் கயல்விழி எனும் யாழிசை வார் குழலி.  
எல்லாவற்றையும் நினைத்துப்பார்க்க யாழிசை “கடவுளின் எல்லா செயல்களுக்கும் பின்னால் ஒரு வலுவான காரணம் இருப்பதாக நினைத்தவள். தன் வாழ்க்கையில் ரிஷியை கொண்டு வந்ததுக்கு இதுதான் காரணமா? என்று பூஜையறையில் கடவுளின் முன் தஞ்சமடைந்தாள். 
2018  ஆம் வருடம் 
கடந்த ஐந்து வருடங்களில் கயல் ரிஷியை நினைக்காத நாளே இல்லை. அது நல்லதாகவும் கெட்டதாகவும் ஒவ்வொரு விஷயத்திலும் அவன் நியாபகம் அவளை வாட்டி எடுத்தது. 
அவளின் காதல் மனம் அவன் மீதுள்ள காதலை வாடவிடாமல் பார்த்துக் கொண்டால், காயம் பட்ட உள்ளமோ அவனின் செயல்களை நியாபகப்படுத்தி மாறி மாறி அவனின் நியாபகங்கள் மறையாது பார்த்துக் கொண்டன.
அன்னைக்கி அவங்க திடீரெண்டு வந்து என்ன சென்னைக்கு கூட்டிட்டு போனதால அத்த கொடுத்த ரெண்டு பொருளையும் அங்கையே மறந்து வச்சிட்டேன்.  அவங்க பாத்திருப்பாங்களோ! அவங்கள சென்னைல இருந்து கூட்டிட்டு வந்ததா தானே அப்பா டயரில் எழுதியிருந்தாரு. அப்போ பிரதீபன் யாரு? ரெண்டு போரையும் அப்பா தத்தெடுத்து இருப்பாங்களோ! 
அவங்களுக்கு நா யாருன்னு தெரிஞ்சிதான் என்ன பிளான் பண்ணி கல்யாணம் பண்ணங்களா? நானே சொத்தெல்லாம் எழுதி கொடுத்துட்டு போகணும்னு தான் என்ன கொடும படுத்தீனாங்களா? எந்தநாளும் தூங்கும் போது கயல்விழியின் மனதில் எழும் கேள்விகள் இவை.
ஹிந்தி தெரியாததால் அந்த பத்திரத்துல என்ன இருக்குனு தெரியாம கையொப்பம் போட்டு கொடுத்துட்டு வந்தது தப்போ! என்ன இருக்குனு கேட்டிருக்கணுமோ! 
“ஆமா நீயும் அதட்டி, மிரட்டி கேட்டிட போற, நீ கேட்ட உடனே உன் புருஷன் சொல்லிடப் போறான். அவனை கண்டாவே நடுங்குற, நல்லா வாயில வருது” அவளின் மனசாட்ச்சி அவளை தூற்ற 
“அது பயமில்லை, மரியாதை. கணவன் என்கிற மரியாதை” மனசாட்ச்சியை அடக்க, 
“ரொம்பத்தான்” மனசாட்ச்சியும் “இவளை திருத்த முடியாது” என்று ஓலமிட அது திவ்யாவுக்கு கேட்டதோ  
“என்ன விழி இன்னும் தூங்கலையா?”  திவ்யா கேக்க, 
தலையணையும் ஈரமாகி, கண்ணீரும் கோடாக கன்னத்தில் விழுந்து காய்ந்தே போய் இருக்க, கைகளால் கண்களை அலுத்தித் துடைத்துக் கொண்ட கயல்விழி “இல்ல தூக்கம் வரல” என்றவள் அன்னையை பார்க்க திலகா நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்க, அவளின் செல்ல மகன் ஸ்ரீராம் தந்தையை உரித்து வைத்து குட்டி ரிஷியாகவே அவளின் நெஞ்சோடு ஒட்டி அசந்து தூங்கிக் கொண்டிருக்க அவன் இன்று கேட்ட கேள்விதான் மீண்டும் அவள் நியாபக அடுக்கில் வந்து போனது. 
“அம்மா…… என் அப்பா எங்கம்மா…” 
“அம்மா…… என் அப்பா எங்கம்மா…”
        

Advertisement