Advertisement

அத்தியாயம் 13
ரிஷி சென்னைக்கு சென்று பத்து நாட்களாகி இருக்க அவனிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. போனாவது பண்ணி யாழிசையிடம் பேசவுமில்லை. அவன் இருக்கும் போது உடல் ரணமாவதென்றால் இல்லாத போது மனம் ரணமாக துடிதுடித்துத் தான் போனாள் யாழிசை. 
அவன் எங்கே போய் இருக்கின்றான் என்பதும் அவளுக்கு தெரியாது. ப்ரதீபனிடம் சென்று கேட்கவும் பயமாக இருந்தது. நேரத்துக்கு சாப்பிட்டானா? தூங்கினானா? என்று அவள் மனம் அவனுக்காக பதற அவளின் எண்ணப் போக்கை நினைத்து தன்னையே நொந்து கொண்டாள் யாழிசை. 
“உன்ன ஏமாற்றி கல்யாணமும் பண்ணி கொடுமை படுத்துபவனின் மேல் உனக்கு இவ்வளவு கரிசனமாகாது” அவளின் மனசாட்ச்சி அவளை தூற்ற, 
ரிஷியின் மேல் காதல் கொண்ட இதயமோ “அவர் என்ன காதலிக்கிறாரு, அவங்க அண்ணன்  தான் ஏதோ சொல்லி அவரை குழப்பி என் கிட்ட இருந்து பிரிக்க பாக்குறாங்க” என்று அவனுக்காக வாதிட 
“அவன் வாயாலேயே ஒத்து கொண்ட பின்னும் அதை ஏற்க தயாராகாத உன்னையெல்லாம்” மனசாட்ச்சி காறித்துப்ப 
இரவுத் தூக்கத்தை தொலைத்து சிந்தித்துக் கொண்டிருந்தவள் அதை கிடப்பில் போட்டு கணவனுக்கு “நல்ல புத்தியை கொடு” என்று வேண்டிக் கொள்ள  கீழே உள்ள பூஜையறைக்குள் சென்றாள்.  
சத்தம் வரமால் பூஜையை முடித்துக் கொண்டவள் பிரதீபன் எழுந்துக் கொள்வானோ என்று வழக்கம் போல் அஞ்சியவாறே மாடிக்கு செல்லலாம் என்று பூஜையறையை விட்டு வெளியே வர ப்ரதீபனின் அறையில் அவன் வாந்தியெடுக்கும் சத்தம் கேக்கவே ஒரு கணம் நின்றவள் மாடிக்கு செல்ல அடுத்த அடியை எடுத்து வைக்க பிரதீபன்  முனகும் சத்தம் கேக்கவே! காதை தீட்டியவள் அவன் வலியில் கதறுவது போல் தோன்ற உள்ளே! செல்வோமா? வேண்டாமா? என்று மனதுக்குள் பட்டி மன்றம் நடத்தலானாள். 
 ராமு தாத்தா வெளியே இருக்கும் வீட்டில் இந்நேரம் தூங்கிக் கொண்டிருப்பதால் அவரை எழுப்ப இந்த இருட்டில் செல்ல பயந்தவள், ரிஷியும் இல்லாத பட்ச்சத்தில் உள்ளே சென்று தான் பார்ப்போம் என்று முடிவெடுத்து கதவை மெதுவாக திறந்தாள். 
அவள் அங்கே கண்ட காட்ச்சி பிரதீபன் அவன் மீதும், அறை முழுவதும் வாந்தியெடுத்து சோபாவில் சுருண்டு கிடப்பதும், மதுபான பாட்டில்கள் அறை முழுவதும் தாறு மாறாக கிடப்பதே! 
வாந்தியின் நாற்றமும், மதுபான மற்றும் சிகரெட்டின் நாற்றமும் சேர்ந்து கெட்ட வாடை வீச யாழிசைக்கு குடலை பிராட்டிக்கு கொண்டு வரவே கதவை மூடிக் கொண்டு வெளியே ஓடினாள். 
“சே என்ன நாத்தம் நாறுது, உள்ள இருந்தா செத்துடுவேன்” என்றவள் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு மின் விசிறையையும் இயக்கி அமர்ந்து விட்டாள். 
“ஐயோ அவரு மயக்கத்துல இருக்கிறாரா? தூங்குறாறாண்ணே தெரியலையே! அதுக்குள்ளே இருந்தா சத்தியமா செத்துடுவாரு” ப்ரதீபனுக்காக வருந்தியவள் மேலே சென்று ரிஷியின் காஸ்டலியான பெர்பியூமை எடுத்துக் கொண்டு வந்து அவள் மூக்கையும், வாயையும் துணியால் கட்டியவள் முதலில் செய்தது அறை முழுவதும் வாசனை திரவியத்தை தெளிப்பதே! 
ப்ரதீபனை பார்க்க அவன் போதையில் உளறியவாறு இருக்க ஜன்னல்களை திறந்து விட்டவள் அவனை தூக்கி அமர்த்த சுயநினைவில்லாது புலம்பிக் கொண்டிருந்தான். 
அவன் புலம்பல்கள் அவளின் காதில் தெளிவாக விழ வில்லையானாலும், அவனின் பிறப்பை நினைத்து வருந்துகிறான் என்பதை யாழிசை புரிந்துக் கொண்டாள். 
“இவரோட பிறப்புக்கு பின்னால் ஏதாவது கத இருக்கும் போல, அதுக்காக இப்படி குடிச்சா சரியா?” மனதில் நினைத்துக் கொண்டவள் “அப்போ அவங்களுக்கும் ஏதாவது பிரச்சினை இருக்குமோ?”
பார்க்க பரிதாபமான நிலையில் அவனிருக்க ரிஷியை பற்றி யோசிப்பதை விட்டவள் “என்னடி பண்ண போற இப்போ” யாழிசையின் மனம் கேள்வி எழுப்ப 
“ஆபத்துக்கு பாவமில்லை” என்றவள் ப்ரதீபனை இழுக்காத குறையாக தூக்கி நிறுத்தியவள் அவன் எடுத்து வைத்திருக்கும் வாந்தி மிதிப்படாமல் அவனை குளியலறைக்குள் கொண்டு சென்று அங்கிருந்த பிளாஸ்டிக் பெஞ்சில் அமர்த்தி அவனின் டீஷர்ட்டில் கை வைக்க யாழிசையை தள்ளி விட்டிருந்தான் பிரதீபன். 
திடீர் தாக்குதலில் சுவரோடு வந்து மோதியவளின் தோள் பட்டையில் பலமாக அடி பட வலியில் “அம்மா” என்று  கத்தியவள் ஷவரை திறந்து ப்ரதீபனை தண்ணீரில் நனைக்க அவன் அமைதியடைந்தான். 
“இந்த ராமு தாத்தா என்னத்த சுத்தம் செஞ்சாருன்னே புரியல? இவர பாத்தா தினம் குடிக்குறவர் போலவும் தெரியல. சிகரெட் கூட கைல வச்சிருந்ததை பாத்ததும் இல்ல. ஒரு வேல ரூம்ல மட்டும் குடிக்கிறாங்கா இருக்கும்” தனக்குத்தானே பேசிக் கொண்டவள், வெளியே வந்து ஒரு துண்டையும், கைலியையும் எடுத்து வந்து, குளியலறையில் வைத்து அவனை குளிப்பாட்டலானாள். 
அவனுடன் போராடி அவனின் டிஷர்ட்டை உருவியவள் அவன் அணிந்திருக்கும் ஷோர்ட்டை கழட்டுவதெப்படியென்று யோசிக்க அவளுமே நீரில் முற்றாக நனைந்திருந்தாள்.  
“யாழ் ரொம்ப யோசிக்காத, ஒரு நர்ஸ்சா இருந்தா இதெல்லாம் பண்ணி இருப்பல்ல” தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் ஒரு குழந்தையாக அவனை நினைத்து குளிப்பாட்டி துவட்டி கைலியையும் அணிவித்து கண்ணை மூடி அவனின் ஷோட்டையும் கழற்றி முடிக்க ஒலிம்பிக்கில் ஓடியது போல் மூச்சு வாங்கி நின்றாள். 
ப்ரதீபனுக்கும் யாழிசை அவனோடு மல்லு கட்டுவது தெளிவில்லாமல் புரிந்தாலும், தடுக்க உடம்பில் வழு இல்லை  என்பதை விட மனதில் தெம்பில்லை என்றே சொல்லவேண்டும்.  பந்தமாக அவளுக்கு அடங்கி போனவன் அவள் சொல்வதையெல்லாம் மந்திரத்துக்கு கட்டுண்டவன் போல் செய்யலானான்.
மீண்டும் அவனை இழுக்காத குறையாக குளியலறையிலிருந்து வாசலுக்கு அழைத்துக் கொண்டு வந்து சோபாவில் கிடத்தி  சூடாக டி போட்டு அதை பருக வைத்து அவனை தூங்க வைத்தவள் அவனின் அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். 
எத்தனை வருடங்களாக அவ்வறை தும்புத்தடியை பார்த்திருக்காதோ என்று சந்தேகம் கொள்ளுமளவு சிகரெட் துண்டுகள்  நிறைந்திருக்க, கட்டிலுக்கு கீழேயும் பாட்டில்கள் 
“கேக்க யாருமே இல்லனா அண்ணனும், தம்பியும் நல்லாவே கூத்தடிக்கிறாங்க” பொறுமியவாறே அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தவள் படுக்கை விருப்பு முதல் ஜன்னல் திரைசீலை வர மாற்றி அவன் வாந்தியெடுத்த துணியையும் துவைத்து, குளியலறையையும் சுத்தம் செய்து,  அறையை ஒழுங்கு படுத்தி முடிய இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் சென்றிருக்க அடி பட்ட கையில் சுள்ளென்று வலியை அப்போது தான் உணர்ந்தாள். 
வலியையும் பொருட்படுத்தாது சாம்பிராணி புகையை அறை முழுவதும் பரப்பி விட்டவள் விடிகாலை பொழுது என்பதால் வாசற் கதவை திறந்து வைத்து  “குளித்து விட்டு வந்து கோலம் போடலாம்” என்ற முணுமுணுப்போடையே மாடியேறி குளித்து விட்டு மீண்டும் கீழே வர அந்நேரம் தான் விமான நிலையத்திலிருந்து டாக்சியில் வந்த ரிஷிக்கு காவலாளி வாயிலை திறந்து விட்டிருந்தான். 
குழந்தையாய் தூங்கிக் கொண்டிருக்கும் ப்ரதீபனை பார்த்தவள் நிம்மதியாக தூங்கட்டும் என்று நினைத்து மீண்டும் அவனை தூக்கி அவனது கையை அவளின் தோளில் போட்டுக் கொண்டு அணைவாக அவனை பிடித்துக் கொண்டு ப்ரதீபனின் அறைக்கு அழைத்துச் செல்ல அதை கண்டு ரிஷி வாசலிலேயே திகைத்து நின்று விட்டான். 
அறைக்குள் சென்று ப்ரதீபனை கட்டிலில் கிடத்தி போர்வையையும் போர்த்தி விட்டு நிமிர ருத்ர மூர்த்தியாக நின்று கொண்டிருந்த ரிஷி அவளை அறைந்தது மாத்திரமல்லாது வலித்துக் கொண்டிருந்த கையை பிடித்து யாழிசை கத்த கத்த தர தரவென இழுத்துக் கொண்டு சென்றவன் அவளை பேச விடாது வார்த்தைகளை தணலாக்கி  அவள் மேல் கொட்டலானான். 
 
“என்னடி பத்து நாளா ஊர்ல இல்லனதும் பொறுக்க முடியாதோ! அரிப்பெடுத்து அலையிரியா?  புருஷன்காரன் தான் ஊர்ல இல்லையே! யாருக்காக இப்படி சீவி, சிங்காரிச்சு கிட்டு நிக்கிற?” 
குளித்து சாதாரண புடவைதான் அணிந்திருந்தாள். பூ கூட தலையில் இல்லை. கண்மை கூட தீட்ட நேரமில்லை. வேலையை தொடங்கலாம் என்றவளுக்கு  கை வலி உயிர் போகும் அளவுக்கு இருக்க வளமை போல் ரிஷி பேசுவதை மரத்துப் போன மனதோடு பொறுமையாக கேட்டிருந்தாள் யாழிசை. 
“பிரதீபன் மயக்கத்தான் இந்த வேசமா? அவன் ஒண்ணும் பொம்பளைங்க கிட்ட மயங்க மாட்டான் அவன் வலி அப்படி. நீ தலையால தண்ணி குடிச்சாலும் என்ன தவிர யாரும் உன்ன நெருங்கமாட்டாங்க, நா நெருங்கவும் விடமாட்டேன்”
ரிஷியின் பேச்சு அளவுக்கு மீறி போய் கொண்டிருப்பது மட்டு மல்லாது, சொந்த சகோதரனையும் மனைவியையும் சம்பந்தப் படுத்தி பேசுபவனின் மேல் கொலைவெறியே வர 
“சீ.. இப்படியெல்லாம் பேசாதீங்க” பொறுமை எல்லை கடக்க யாழிசை வாய் திறந்தாள். 
யாழிசையின் கழுத்தை தனது வலது கையால் இறுக்கிய ரிஷி “என்ன டி திமிரா? நீ பண்ணத நா கண்டு பிடிச்சா இப்படித்தான் பேசுவியா? நீ எனக்குத்தான் டி. இந்த ஜென்மத்துல மட்டும் இல்ல, இன்னும் எத்தன ஜென்மம் எடுத்தாலும் நீ எனக்கு மட்டும் தான்” 
அவன் நெஞ்சம் முழுக்க பயம், பயம், பயம் என்ற ஒன்றே ஆட் கொண்டிருந்தது. அது யாழிசை தனக்கு இல்லாமல் போய் விடுவாளோ என்ற பயம் என்று அவன் உணர்ந்தானில்லை. அந்த பயம் தான் அவனை பேச வைத்து அவள் மீது அமில மழையை சதா பொழிந்துக் கொண்டிருக்கிறது என்று அவன் என்று உணர்வானோ! 
 ப்ரதீபனின் மேல் அவனுக்கு துளியளவும் சந்தேகம் இல்லை. யாழிசையை அவனால் சந்தேகப் படவும் முடியாது. அவன் கோபமெல்லாம் அந்த நிலையில் அவர்களை கண்டதுதான். அவள் எவ்வாறு நண்பனே!ஆனாலும் இன்னொரு ஆண்மகனை தொடுவது. ஏற்கனவே! அவளை விடமுடியாமல், மனதளவில் அவன் உணர்வுகளை ஏற்க முடியாமல் அல்லாடுபவன், அவள் மேல் பொழியும் காதலை கட்டுப்படுத்த தெரியாமல், அவளை ரணப்படுத்திக் கொண்டிருக்க, என்ன நடந்திருக்கும் என்ற யோசிக்கத் தோன்றாமல் அவளை காயப்படுத்தவென்று பேச ஆரம்பித்தவன் தன்னை அறியாமல் மனமுருகி சொல்ல வேண்டிய வசனங்களை கர்ஜனை குரலில் கோபம் அனல் கக்க சொல்லி விட்டான். 
“சீ.. இப்படி பேச உங்களுக்கு வெக்கமா இல்ல? அவர் உங்க அண்ணன் தானே! என்ன நிலமைல இருந்தார்னு தெரியுமா?” மூக்கு சிவக்க கோப மூச்சுக்களை விட்டவாறே ரிஷி கழுத்தை  இறுக்கிக் கொண்டிருந்த கையை இழுத்தாள் யாழிசை. 
ரிஷி கழுத்தை இறுக்கி இருந்தாலும் அவனின் பிடி இறுகி இருக்க வில்லை. அதனாலயே அவளால் பேச முடிந்தது.  
அவள் கழுத்திலிருந்து கையை எடுத்தவன் “ஹா ஹா ஹா என்னது அண்ணனா?” ரிஷி அவளை பார்த்து பார்த்து சிரிக்க 
“அண்ணன் இல்லையா அப்போ தம்பியா? ஆனா தம்பிக்கு எதுக்கு இவர் இப்படி பயப்படுறாரு?” மனதில் உதித்தாலும் வாய் வார்த்தையாக கேக்காமல் அவனை முறைத்துக் கொண்டு நிற்க அவளின் முகபாவங்களை கண்டு, அவனின் சிரிப்பு இன்னும் அதிகமானது. 
“வார் பேபி நீ இன்னும் குழந்தையாகவே இருக்க” என்றவன் அவளை மூச்சுத்திணற முத்தமிட அவனை தள்ள கூட முடியாமல் கை வலிக்கவே!  யாழிசையின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. 
“ஐ நீட் யு பேபி நீ இப்படி இருக்குறது தான் எனக்கு உன்ன ரொம்ப புடிக்குதோ! என்னமோ!” குரல் இளகி உருக காதல் கசியும் அவனின் குரலை இருவருமே உணரவில்லை. அவளை கைகளில் ஏந்தியவாறே கட்டிலிக்கு செல்ல அவனை விட்டு விலக்குவதிலேயே குறியாக இருந்தவள் அவன் பேசியவைகளால் ஆத்திரம் தீர அவனின் தோள்களில் ஒரு கையால் அடிக்க அவனோ அவளை கட்டிலில் கிடத்தி அவளை  மென்மையாகத்தான் ஆள ஆரம்பித்தான் ஆனால்… 
கணவனேயானாலும் அவனின் முரட்டுத்தனங்களை பொறுத்தவளுக்கு அவனின் பேச்சை பொறுக்கும் மனவலிமை இருக்கவில்லை. எந்தநாளும் இளாவை அல்லது ஜகத்தை  சம்பந்தப் படுத்தி அவள் நெஞ்சை வாள் கொண்டு அறுத்துக் கொண்டிருந்தாலும் தொலை தூரத்தில் அவர்கள் இருக்க அதை அவள் பொருட்படுத்தவில்லை. இன்று கூடப் பிறந்த சகோதரனுடனே சம்பந்தப் படுத்தி கண்ட படி பேசி விட்டான் என்றதும் யாழிசையால் மனம் தாள முடியவில்லாமல் அவனின் செயலுக்கு எதிராக போராடினாள்.    
அந்தோ பரிதாபம் அவளால் அவனை வெற்றி கொள்ள முடியாமல் மாறாக படுதோல்வியையே! தழுவினாள்.
ஒரு சூறாவளி சுழற்றி அடித்தது போல் இருந்தது யாழிசைக்கு. சுழன்ற தலையை தன் கைக் கொண்டு அழுத்தி  பிடித்து சுயநினைவுக்கு வர முயன்ற யாழிசைக்கு கண்களில் அப்போதுதான் விழுந்தான் அவள் அருகிலேயே இன்னும் உறக்கத்தின் பிடியில் இருக்கும் ரிஷி. 
அவளின் சேலையை போர்த்தியபடி  அதனுள் சுருண்டு உலக இன்பத்தில் மொத்தமும் என்னிடமே . என்னும் விதமாக குழந்தை போல் தூங்கும் போதும்  சிரித்த முகத்தோடு உறங்கி கொண்டிருக்கும் அவள் கணவன் ரிஷியை பார்த்தவளின் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிய ஆரம்பித்தது.
அவனையே பாத்திருந்தவளின் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் முளைக்க “தன்னால் இவனோடு கடைசி வரை வாழ முடியுமா?” என்ற கேள்வியே பிரதானமாக தோன்றியது.
தினம் தினம் செத்துப் பிழைப்பதை விட ஊருக்கே போய் விடலாம் என்று எண்ணியவள் எப்படி செல்வது என்ற கேள்வி எழும்ப கண்கள் கலங்கி நின்றாள். எங்கே பிறந்தேன் என்று அறியாவிட்டாலும் வளர்ந்த ஊரை விட்டு பெற்றோர்கள் இல்லாமல் தனியாக எங்கேயும் சென்றிராதவளுக்கு கடல் கடந்து எவ்வாறு செல்வதென்று ஒன்றும் புரியவில்லை. தன்னை ஒரு கோழையாக  வளர்த்து விட்ட வளர்ப்பு பெற்றோர் மீது கோபமும், ரிஷியை பற்றி முழுசாக விசாரிக்காமல் திருமணம்  செய்து கொடுத்த சீதாவின் மீதும் வெறுப்பே வந்தது. 
இந்த வீட்டை விட்டு வெளியேறி சென்று விட மனம் சொன்னாலும் எங்கே செல்வது? இந்த நாட்டில் ரிஷியை தவிர அவளுக்கு யாரை தெரியும்? அப்படியே சென்றாலும் தன் கணவனை போன்ற ஆண்கள் தான் அதிகம். அப்படித்தானே! மங்கம்மா சொல்லி சொல்லி வளர்த்தாள்.  
ஆண்களின் பார்வையில் படாத, சிரிச்சி பேசி ஏமாத்திட்டு போய்டுவான்னு. மகளுக்கு சொன்ன அறிவுரையை ஏன் தாங்கள் கடைபிடிக்க வில்லை. ஒரு குடும்பத்தையே ஏமாற்றி அவளை கல்யாணம் செய்து, வேறொரு நாட்டுக்கு அழைத்து வந்து, அவள் பெற்றோரோடு பேசும் போது ஒட்டுக் கேட்டு, அவளை இந்த வீட்டிலேயே சிறை வைத்திருக்கின்றானே! 
டிவியிலும், பத்திரிக்கையிலும் வரும் செய்திகள் போல் பெண்களை ஏமாற்றி மணந்து விற்று விடும் பேர்வழிகள் நிறைந்து வழியும் சமூகத்தில் தன்னை ஒருவனுக்கு திருமணம் முடித்து கொடுக்கும் போது அவனை பற்றி தீர விசாரிக்க தோன்றாமல் போனது ஏன்? 
பத்து மாசம் சுமந்து பிரசவத்தில் கஷ்டப்பட்டு பிறந்த மகளாக இருந்தால் எல்லாவற்றையும் யோசித்து இருப்பார்களோ! யாரோ பெத்த அநாதை பொண்ணு னு தான் விட்டு விட்டார்களோ! பாதிக்கப் பட்டவளின் மனம் பலவாறு சிந்திக்க அவளை மேலும் சிந்திக்க விடாது பசி வேற படுத்தலானது. 
ரிஷி என்ன தான் வார்த்தையால் வதைத்தாலும், அவன் இல்லாமல் அவளால் ஒழுங்காக சாப்பிடக் கூட முடியவில்லை. என்றுமில்லாத கோரப்ப பசி அவளின் வயிற்றை பிரட்ட, குளியலறைக்குள் புகுந்தவள் குளித்து ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு கீழே வர ராமு தாத்தா தோசை வார்த்துக் கொண்டிருந்தார். அமைதியாக போய் சாப்பிட்டாள் யாழிசை. 
இரவில் சரியாக உறங்காது போகவே வயிறு நிறைந்ததால் என்னவோ! தூக்கமும் கண்ணை சொக்க ரிஷி இருக்கும் அறைக்குள் போகப் பிடிக்காமல் மாடியிலுள்ள மோகனசுந்தரத்தின் அறைக்குள் புகுந்து கதவை தாளிட்டவள் கட்டிலில் போய் விழுந்து கண்ணை மூடிக் கொண்டாள்.  
தன்னை நினைத்தே கண்களில் இருந்து கண்ணீர் பெறுக, பெறுக அதை துடைக்கவும் தோன்றாமல் அழுது தீர்த்தவள் எப்போது உறங்கினாள் என்பதையே! அறையாமல் நன்றாக உறங்கி விட்டாள். 
வெகு நேரமாக உறங்கியவள் கண்ணை திறக்க, அந்த அறையில் சுவர் முழுக்க அவளுடைய புகைப்படங்கள் அதுவும் அவள் பிறந்ததிலிருந்து ஆறு மாதங்கள் வரையிலான புகைப்படங்களை கண்டு யாழிசை கண்களை அகல விரித்தவாறே திகைத்து நின்று விட்டாள்.
         

Advertisement