Advertisement

அத்தியாயம் 12
அடுத்து வந்த நாட்களில் எதுவுமே நடக்காத மாதிரி தான் ரிஷியின் நடவடிக்கைகள் இருந்தது. காலையில் ஆபீஸ் கிளம்பிச் செல்வபவன் இரவில் வீடு வருவதும், ப்ரதீபனுடன் அமர்ந்து சாப்பிடுவதும், யாழிசையோடு இழைவதும் என்று நாட்கள் செல்ல அவனின் கொஞ்சல் மொழிகள் முற்றாக காணாமல் போய் முகத்தில் ஒரு இறுக்கம் குடி கொண்டிருந்தது. 
யாழிசையின் மேல் இருக்கும் காதலை உணர மறுத்து, அவளை ஒதுக்கவும் முடியாமல், அதிகம் அவளோடு சிரித்து பேசாவிட்டாலும் வார்த்தையால் வதைக்காதவன் அவளின் அருகாமை தேவை படும் பொழுதெல்லாம் அவளை ரணப்படுத்தவென்றே! இப்பொழுதெல்லாம் அவள் எது பேசினாலும் அவளை வார்த்தையால் வதைக்க ஆரம்பித்திருந்தான். 
யாழிசையும் கணவனின் திடீர் மாற்றத்தினால் முற்றாக மௌனியானாள். அவன் எது சொன்னாலும் தாங்கி கொள்வபவள் இளாவையும், ஜகத்தையும் அவளோடு சம்பந்த படுத்தி பேசுவதை பொறுக்க முடியாமல் கதறிவிடுவாள். அவளையே குரூரமாக பாத்திருப்பவன் அவள் அழுவதை பார்க்க பிடிக்காமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடுவான். ஆனால் அவளை வார்த்தையால் வதைப்பதை நிறுத்தவே இல்லை. 
அவளின் பால் அவன் மனம் சாயாது இருக்க அவனுக்கும் அந்த வார்த்தைகள் தேவைப்பட்டிருந்தது. என்ன தான் அவளை வதைத்தாலும் அவளும் கணவனுக்காக கடவுளிடம் வேண்டுவதும், ஒரு மனைவியாக அவளின் கடமைகளை செய்வதை தவிர்க்காமல் சரியாகவே நிறைவேற்றினாள். 
ஒருவேளை வாயில்லா பூச்சியாக இருக்கும் யாழிசை கணவனை எதிர்த்து சண்டை போட்டிருந்தால் அவள் பக்கம் இருக்கும் நியாயத்தை சிறிதாவது யோசித்திருப்பானோ! பேசவே அஞ்சுபவளை மேலும் மிரட்டி பேசவிடாது செய்திருந்தான் ரிஷி.
தனக்கு கொடுக்கப்பட்ட கருத்தடை ஊசியால் மாதவிடாய் வராததை தான் கர்ப்பமடைந்த இருப்பதாக நினைத்த யாழிசை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒவ்வாமையால் வாந்தியெடுப்பதும், சில உணவுகளை வெறுப்பதும், சில உணவுகளை விரும்பிச் சாப்பிடுவதும், தலை சுற்றல் போன்ற கர்ப்பத்துக்கான அறிகுறி எதுவும் இல்லாததால் சற்று குழம்பினாலும் கணவனுடன்  மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று தீர்மானித்திருக்க, அவனோடு பேச நேரம் பாத்திருந்தாள். 
அன்று நடந்த சம்பவத்தின் பின் இரவில் வீடு வருபவன் அவளை பேச விடாது தனது தேவையை தீர்த்துக் கொள்வதும் அவள் ஏதாவது பேசினால் மனம் வலிக்க திருப்பி பேசுவதும் மங்கையின் கண்களில் கண்ணீரை வர வரவழைத்தாலும் குழந்தையென்றதும் எல்லாவற்றையும் மறந்து தங்களுக்குள் சுமூகமாக உறவு மீண்டும் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தாள் யாழிசை.  
குளித்து டிசைனர் புடவையொன்றை அணிந்தவள் அவனுக்கு பிடித்தது போல் அலங்காரமும் செய்து கொண்டு அன்றும் அவனுக்காக காத்திருந்தாள் யாழிசை. அவனின் வண்டி உள்ளே வருவது அறிந்திருந்தாலும் கீழே பிரதீபன் இருப்பதால் கீழே செல்லாமல் அவன் வரும் வரை அறையில் அமர்ந்திருந்தவள் அவன் மேலே வர தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இதயம் தாறுமாறாக துடிக்க, பொறுமை காற்றில் பறக்க அறையில் நடை பயின்றாள். 
ரிஷியிடம் எவ்வாறு சொல்வது? சொல்லும் பொழுது அவன் முகத்தில் ஏற்படும் சந்தோச புன்னகை, அதன் பின் அவளை அணைத்து கொஞ்சுவான், வயிற்றில் கைவைத்து குழந்தையோடு பேசுவான், பையனா? பொண்ணா? என்ன பேர் வைக்கலாம் என்று கேப்பானோ! கற்பனையில் மிதக்கலானாள் யாழிசை.  
அவன் மாடிக்கு வரும் பொழுது கற்பனையிலேயே கற்பகாலத்தை கடந்து குழந்தையையும் கையில் ஏந்தி அழகு பார்க்கலானாள். 
அறைக்கு வந்த ரிஷி யாழிசையின் தெளிவான முகத்தை கண்டு புருவம் உயர்த்தியவன் எதுவும் பேசாது குளியலறைக்குள் புகுந்திருக்க, அவன் வெளியே வரும் வரை காத்திருந்தாள். 
குளியலறையிலிருந்து துண்டோடு வெளியே வந்தவனோ அவளை கண்டு கொள்ளாது துணிமாற்ற அவனின் முறுக்கேறிய புஜங்களை பார்த்திருந்தவளின் எண்ணமெல்லாம் அவளின் செல்ல மகன் தந்தையை போல் இருப்பான் என்பதே. 
தன்னை கண்சிமிட்டாமல் பாத்திருக்கும் மனைவியின் விம்பத்தை கண்ணாடியினூடாக கண்டு கொண்டவன் “இன்னைக்கி என்னவாகிருச்சு இவளுக்கு”  என்ற சிந்தனையில் விழ அவனை பின்னால் அணைத்திருந்தாள் யாழிசை.  
அவளின் செய்கையால் கவரப்பட்டவன் உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டாலும்  “என்ன இன்னைக்கு நீயாகவே வந்திருக்க, ஏதாவது காரியம் ஆகா வேண்டி இருக்கா?” அவனின் குறுக்குப் புத்தி அவனை அவ்வாறு சிந்திக்க வைக்க  
அவனின் குரோதமான வார்த்தைகள் அவள் செவிகளில் விழுந்தால் தானே அவன் முதுகில் கன்னம் பதித்தவள் அவன் வயிற்றில் கைவைத்து மேலும் அவனுள் புதைய 
“ராட்சசி வேண்டுமே பண்ணுறாளே” என்ற முணுமுணுப்போடு அவளின் கைகளை பிரித்தவன் அவள் புறம் திரும்ப வெக்கப்பட்டு தலை குனிந்தாள் யாழிசை. 
வலது கையால் அவளின் முகத்தை நிமிர்த்தி ஆராய சிவப்பேறிய கன்னங்களும், வெக்கப் புன்னகையும்  நீண்ட நாட்களுக்கு பின் அவள் முகத்தில் குடிவந்திருக்க, கடந்த நாட்களை விட மிக அழகாகவே தெரிந்தாள் அவனின் மனையாள். 
“சும்மாவே கொல்லுறா இதுல இப்படி வெக்கப்பட்டா அவளை விட்டு தள்ளி நிற்க முடியாமலே போய்டும்” ரிஷியின் சிந்தனை இவ்வாறிருக்க அவனது இடது கையை அவளது வயிற்றி மேல் வைத்திருந்தாள் யாழிசை. 
“வார் பேபி இன்னைக்கு உனக்கு என்னவோ ஆச்சு” என்று அவளை முத்தமிட முயல அவனின் உதடுகள் மீது விரலை வைத்து தடுத்தவள் 
“முதல்ல நான் சொல்லிடுறேன் அப்பொறம்” என்றவள் மீண்டும் வெக்கப்பட்டு தலை குனிய 
“ஏதோ பெருசா வரப்போகுது” என்று உள்ளுணர்வு சொல்ல “என்ன விஷயம்” கொஞ்சம் கர்ஜனை குரலில் ரிஷி கேக்க 
மனம் முழுக்க சந்தோசத்தில் திளைத்தவளோ அந்த குரலை உணராமல் “அது வந்து… அது வந்து நாம அம்மா அப்பாவாக போறோம்  னு நினைக்கிறேன்” கண்கள் மின்ன அவனை பார்த்து கூற 
“வாட் கம் அகைன்” அதிர்ச்சியாக அவனை பார்த்தவன் மீண்டும் கேக்க 
அவனின் அதிர்ச்சியான முகபாவத்தை எதிர்பார்க்காதவளோ! கல்யாணமான பின் ரிஷி மும்பாயில் இருக்கும் பொழுது ஒரு தடவை மாதவிடாய் வந்ததாகவும் மும்பாய் வந்த பின் மாதவிடாய் வரவில்லை. ஒருவேளை கர்ப்பமாக இருக்கலாம் என்று வார்த்தைகளை கோர்த்துக் கோர்த்து திணறியவாறே சொல்ல வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்கலானான் ரிஷி. 
அவன் எதற்கு சிரிக்கின்றான் என்று புரியாதவளோ! பாவமாய் அவனை பார்க்க அவளின் முகத்தை பார்த்து மீண்டும் சிரிக்கலானான் ரிஷி. 
“பட்டிக்காடுன்..னு சொல்லுறது சரிதான். குழந்தை வேற வேணுமா? உனக்கு இந்த ஆச வேற இருக்கா? ரிஷி வரதன் வாரிசு போயும் போயும் படிக்காத ஒருத்தி சுமப்பதா? லுக் என் கூட இருக்குற வர உனக்கு குழந்தையே கிடையாது” அவ்வளவு நேரமும் சிரித்துக் கொண்டிருந்தவன் கண்கள் சிவப்பேறி கர்ஜனை குரலில் உரக்க கத்த
“அன்னையென்ற வரம் உனக்கு கிடையாது” என்ற அவன் வார்த்தைகள் அவளின் மனதை சுக்குநூறாக உடைக்க, இயல்பாகவே பெண்களுக்கு இருக்கும் தாய்மை உணர்வை ரிஷி சீண்டியதால் “என்ன சொன்னீங்க? பட்டிக்காடுன்னு தெரிஞ்சிதானே கல்யாணம் பண்ணீங்க? உங்க மனைவி நா உங்க புள்ளய சுமக்காம வேறு யார் சுமப்பதாம்” கோபமான மூச்சுகள் வெளியாக ரிஷியை நோக்கி வார்த்தைகளை வீச 
“ஏய் என்ன திமிரா? கொழுப்பு கூடி போச்சா? எனக்கு நீ வேணும், உன்ன எப்படியடையணும் னு யோசிச்சு கிட்டு இருந்த போதுதான் உன்ன கல்யாணம் பண்ண சொல்லி உன் அத்தையே கேட்டாங்க, பண்ணிக்கிட்டேன். இங்க வந்த உடனே ஹாஸ்பிடல் போய் இன்ஜெக்சன் போட்டேன் எதுக்கு நினைச்ச? நமக்குள்ள குழந்தைனு ஒண்ணு வரக்கூடாதுன்னு தான்” 
அவன் சொன்ன செய்தியில் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தாள் யாழிசை. நல்லவன் வல்லவன் என்று ஊரே புகழ்ந்தவன் ஒரு அரக்கனாக தெரிய 
“என்ன அடையவா? பொய் பொ…ய் சொல்லுறீங்க” அதிர்ச்சி அகலாமல் அவனையே ஏறிட்டாள். 
அவளை முதல் முதலில் சந்தித்ததையும் கோவில் வாசலை அவள் அவனை அடித்ததையும் கூறியவன் “உன்ன காதல்ல விழ வச்சி அனுபவிக்கணும் னு தான் பிளான் பண்ணேன். அதுக்குள்ளே உன் வீட்டுல உனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டாங்க. நல்ல வேல உன் அத்தான் உன்ன கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டான். ஒருவேளை புளிச்சு போய் தான் வேணாம்னு சொன்னானோ!” அவளை இளக்காரமாக பார்த்தவாறே “அன்னைக்கி நீ அடிச்ச அடிக்கி வட்டியும் முதலுமா வசூலிக்க வேணாமா?” அவள் உடலை கண்ணால் மொய்க்க
அவன் பார்வையிலும், வார்த்தை வீச்சிலும் உடல் கூச, தனது இருகைகளையும் கொண்டு காதை பொத்தியவள் “அம்மா” என்று கத்திவிட
“அவன் இல்லனா என்ன அந்த ஜகத் பய உன் பின்னாடி தானே அலையுறான். நீ திரும்ப போனா அவனே உன்ன ஏத்துப்பான்” நரசமாய் அவன் வார்த்தைகள் மூடியிருந்தாலும் யாழிசையின் காதுகளில் வந்து விழ அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள். 
“கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி எவ்வளவு சந்தோசமா இருந்தேன். குழந்தையையும் கண்ணுக்குள் பார்த்துட்டேன். ஒரே நொடியில எல்லாத்தையும் அழிச்சிட்டானே! ராட்சசன்” 
யாழிசையை மேலும் சிந்திக்க விடாது அவளை தூக்கி நிறுத்தியவன் “எனக்கு உன் உடம்பு மட்டும் தான் தேவ. ஒரே நாள்ல போரடிக்கும் னு நினச்சேன். ஆனா பாரேன் இன்னைக்குவரைக்கும் சலிக்கவே இல்ல. இன்னைக்கி வேற எக்ஸ்ட்ரா அழகா இருக்க வா” என்றவன் அவளை இழுத்துக் கொண்டு கட்டில் பக்கம் நகர 
“சீ…” என்று கத்தி இருந்தாள் யாழிசை. 
“என்ன நீ இவ்வளவு நாள்  இல்லாம இன்னைக்கி மட்டும் “சீ…” னு சொல்லுற. சீக்கிரம் வா” என்றவன் அவள் திமிர திமிர இழுத்து கட்டிலில் தள்ளி இருந்தான். 
 விஷம் தடவிய கத்தி இதயத்தில் பாய்ந்து, விஷம் உடல் முழுவதும் பரவி கனக் கொடூரமான வலியால் உடல் துடிப்பது போதாதென்று, இதயத்தில் பாய்ந்த கத்தியும் உயிரை எடுக்க,    உயிர் துடிக்கும் உச்ச  வலியை அனுபவிப்பது போல் இருந்தது அவளுக்கு. 
அவனோடு கழித்த  ஒவ்வொரு கணத்தையும் பொன்னேட்டில்  பதித்து பொக்கிஷமாக பாதுகாத்து, அவளின்  வாழ்நாள் முழுவதும் ரசிக்க தோன்றிய மிக இன்பமயமான  உணர்வுகளை கொடுத்த அவர்களின் மோகன பொழுதுகள் அவளுக்கு மட்டும் விஷயமாகிப் போனது ஏன்?
அண்ணனுக்கு பிடிக்காத கல்யாணம், அவன் சொல்வதால் நிம்மதியிழந்து மொத்த கோபத்தையும் தன் மேல் காட்டுகின்றான் என்று நினைத்து கொண்டிருக்க, குழந்தை பிறந்தால் நிலைமை சீராகும் என்று நம்பிக் கொண்டிருந்தவளுக்கு, இங்கே தனக்கு தாலி கட்டியவன் தப்பாகிப் போனான் என்பதே பேரதிர்ச்சியாக இருந்தது.  கணவன் எனும் கயவன் சொன்னவைகள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்க,  ஒரு பெண்ணையடைய எந்த எல்லைக்கும் செல்வானா? என் மனது முழுக்க இருப்பவன் ஒரு பெண் பித்தனா? அதற்க்கு மேலும் அதிர்ச்சியை தாங்க முடியாமல் அவனின் அத்து மீறல்களையும் தடுக்க முடியாமல் மயங்கி இருந்தாள் யாழிசை. 
  அடுத்து வந்த நாட்களெல்லாம் அவள் அனுமதியின்றே அவனை நெருங்கினான் ரிஷி. அவள் கெஞ்சினாலும், மிஞ்சினாலும் அவன் கண்டு கொள்ளவே இல்லை. அவன் உண்மையை சொல்லாமல் இருந்திருக்கலாமோ என்று எண்ணும் அளவுக்கு அவளை படுத்தலானான். 
இரவு வரும் போதே யாழிசையின் உடல் உதற, அருவருப்பே தோன்றலானது. பொறுத்துப் பொறுத்து பார்த்தவள் ரிஷியை பயமுறுத்தவென கத்தியை கையில் வைத்துக் கொண்டு மிரட்டலானாள். 
“என்ன விட்டுடு. நா எங்க ஊருக்கே போயிடுறேன். என்னால முடியல, உன்ன பார்க்கும் போது அருவருப்பாக இருக்கு” 
அவள் சொல்வதெதுவும் அவன் காதில் விழாதது போல் 
“நரம்பத் தான் கட் பண்ணனும், ஹவி பிளட் லாஸ் ஆகி உடனே மரணம். ஆனா நீ செத்துப் போய்ட்டா நா என்ன பண்ணுறது? உனக்கொரு தங்கச்சி இருக்கால்ல” தாடையை தடவியவாறே ரிஷி யோசிக்க யாழிசையின் கையிலிருந்த கத்தி நழுவியது. 
“குட்” என்றவன் அவளை கை நீட்டி அழைக்க பயத்தால் நடுங்கியவாறே அவனருகில் செல்ல  
அவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டவன் அவளில் கழுத்து வளைவில் வாசம் பிடித்தவாறே 
“வார் பேபி. நீ என்ன ரொம்..ப டாச்சேர் பண்ணுற டி. இங்க, இங்க, இங்க,” என்று தலையையும், கண்ணையும், மனதையும் தொட்டுக் காட்டியவன் “ஐ ரியலி ஹேட் தட் யு நோ. நீ என்ன விட்டு போனா நா பைத்தியமாயிடுவேனோ னு பயமா இருக்கு. அதுக்காக உன் காலடியில் எல்லாம் விழுந்து கிடக்க முடியாது. புரியுதா? சாவ பத்தி நெவெ….ர்,  எவ…ர் யோசிக்க கூடாது. நீ தப்பான முடிவெடுத்தா, என் முடிவுகள் பல விளைவுகளை ஏற்படுத்தும் ஓகே பேபி” ஒரு சைக்கோவை போல் பிதற்றிக்  கொண்டிருந்தவனை அச்சம் நிறைந்த விழிகளால் பாத்திருந்தாள் யாழிசை.  
தான் அழகாக பிறந்ததையெண்ணியும் ரிஷியின் கண்களில் விழுந்ததையெண்ணியும் நினைத்து நினைத்து அழுது கரைந்த  யாழிசை அறையினுள்ளேயே அடைந்து கிடந்தாள். அவன் முன் அழுது விடாமல் இருக்க ரொம்பவே போராடினாள். 
தப்பித்தவரியாவது அழுதால் “செம்மையா நடிக்கிறியே! உங்கம்மா சொல்லி கொடுத்தாளா? பொம்பளைங்க அழுதே காரியம் சாதிப்பாங்க டி. அதுக்கெல்லாம்  ஏமாற இந்த ரிஷி ஓன்னும் சரவணகுமரன் இல்ல. ரிஷி வரதன் டி” என்று கர்ஜிப்பவன் அவளின் கண்ணீர் துளியை விரலால் சுண்டி அவள் மீதே தெளித்து விட்டு நகர்வான். 
சிலசமயம் “யாழ் இது ஒரு கெட்ட கனவு விழிச்சிக்க” தனக்கு தானே சொல்லில் கொண்டவள் கையையும் கிள்ளிப் பார்ப்பாள்.  அதிக நேரம் தோட்டத்தில் கழிப்பவள் ராமு தாத்தாவுடனும் அதிகம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளவில்லை. அவரிடமும் ஒதுங்கியே போகலானாள். 
அவருக்கும் அது புரிந்தாலும், அவளின் சோகமான முகம் வீட்டாரை விட்டு வந்ததால் என்று அவர் நினைத்தாரே ஒழிய ரிஷியால் தான் என்று அவர் கிஞ்சத்துக்கும் நினைக்கவில்லை. அதற்க்கு காரணம் எந்த நாளும் ஆபீஸ் போன பின் அவரின் செல்லுக்கு அழைத்து யாழிசையை பற்றி விசாரிப்பான். அது அவனின் அக்கறை விசாரிப்புனு அவர் நினைத்திருக்க, அவள் என்ன செய்கிறாள் என்று வேவு பார்ப்பதற்கு அவர் நினைக்கவே இல்லை. 
சின்ன சந்தேகமாவது தோன்றியிருந்தால் ரிஷியை பற்றிய முழு உண்மையை யாழிசைக்கும். அவன் நடந்து கொள்ளும் முறையை ப்ரதீபனுக்கும் சொல்லி இருப்பார். 
சென்னையில் ஆரம்பிக்க இருக்கும் புதிய நகைக்கடைக்காக பிரதீபன் சென்னைக்கும் மும்பைக்கும் அலைந்து கொண்டிருக்க யாழிசையை பற்றி பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளாதவனுக்கு வீட்டில் நடந்தவையும் தெரியவரவில்லை.
சென்னையில் உள்ள வர்த்தக அமைச்சர் ரத்னவேலை சந்தித்து அதற்கான அனுமதியையும் வாங்கியவன். முறைப்படி கடைக்கான பத்திரம் அமைத்து பதிவும் செய்து ஏற்கனவே ரிஷி முடிவு செய்ததை போல் கடையை கட்டி முடிப்பதில் தீவீரமாக இறக்கினான். 
ரிஷிக்கு சென்னை செல்ல அவ்வளவு விருப்பம் இருக்கவில்லை. அவனின் கசப்பான அனுபவங்கள் அவ்வாறிருக்க, அவன் அங்கே செய்து முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கவே! முதல் படியாக கடையை நிறுவினான்.
எல்லா வேலைகளையும் ப்ரதீபனும் ரிஷியும் மாறி மாறி பார்த்துக் கொள்வதாக இருந்த போதிலும் அதிகமான வேலைகளை பிரதீபன் பார்க்க, கடை திறப்பு விழாவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்தது. இறுதியாக பார்க்க வேண்டிய வேலைகளை ரிஷி பார்க்க வேண்டி இருந்தமையால் அவன் சென்னைக்கு கிளம்பிச்சென்றிருக்க, பிரதீபன் மும்பையிலிருந்து வேலைகளை பார்க்கலானான்.
பத்து நாட்கள் சென்னையில் மும்முரமாக வேலை பார்த்தவனுக்கு யாழிசையின் அருகாமை வேண்டும் போல் இருக்க சொல்லாமல் கொள்ளாமல் விடியற்காலை பொழுதிலேயே விமானம் ஏறி இருந்தான். 
அவன் நெஞ்சம் முழுதும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ராட்சசியை காண வீடு வந்தவனுக்கு காணக் கிடைத்தது ப்ரதீபனை அணைத்துக் கொண்டு யாழிசை அவன் அறைக்குள்  போவதையே! 
அவளை கொல்லும் வெறியில் அறையில் புகுந்தவன் அவளை அறைந்தது மட்டுமில்லாது தர தர வென இழுத்து வந்து கண்டபடி பேசியவாறே அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தான். 
    
மனைவியையே பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்தவனோ! அன்று உருவாகப் போகும் குழந்தையை பற்றி சிந்திக்கவுமில்லை. அவன் அறியாமல் பிறக்க போகும் அவன் மகன் பிரசவிக்கும் நேரம் அவன் அருகில் இல்லாது வேறொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பான்  என்பதையும் அறியவில்லை.

Advertisement