Advertisement

அத்தியாயம் 11
கணவன், மனைவி உறவு புரிதலினாலையே நிம்மதியாக பயணிக்கும் என்றால், அங்கே காதல் அவசியமற்றதா? காதலால் கசிந்துருக புரிதல் அவசியமா?  
இரண்டு மாதம் கடந்த நிலையில் பெரிதாக எதுவும் மாறவில்லை. யாழிசையின் வாழ்க்கை ரிஷியோடு அவன் வீட்டிலேயே தொடர்ந்தது, ரிஷி அவளை வெளியே எங்கும் அழைத்து செல்லவுமில்லை. அவளும் செல்ல வேண்டும் என்று சொல்லவுமில்லை. அவளை பொறுத்த வரையில் ரிஷி ரொம்ப பிஸி. ஆபீஸ் வேலைகளை பார்க்கவே அவனுக்கு நேரம் பத்தாது. எல்லா வேலைகளையும் முடித்து விட்டு அவளுக்கா நேரங்காலத்தோடு வீடு வருவதே பெரிய விஷயம் என்று பெருமையாக எண்ணிக் கொண்டிருந்தாள் அப்பாவிப் பெண் யாழிசை. 
பூஜையறையில் அவளுக்கு தேவையான சாமி படங்களை வைத்து பூஜை செய்ய ஆரம்பித்திருந்தாள். காலையிலேயே எழுந்து கீழே சென்று சத்தம் வராமல் சாமி கும்பிட்டு, கோலமும் போட்டு, மீண்டும் மேலேறி வருபவள் பிரதீபன் கிளம்பிய பின் தான் கிழே செல்வாள். மாலை ஆறுமணிக்குள் கீழே உள்ள வேலைகளை முடித்துக் கொண்டு பிரதீபன் வரும் முன் மாடியில் தனதறையில் தஞ்சமடைவாள். அதிகமான நேரத்தை தோட்டத்தில் செலவழித்து விடுவாள். மரம், செடி, கொடி மற்றும் பூக்களுக்கு உரமிடுதல் என்று எல்லாவற்றிலும் அவளின் பங்கிருக்க நேரம் போவது தெரியாமல் ஈடுபடுவாள். 
வீட்டை சுத்தம் செய்ய கிளம்பியவளை தடுத்த ராமு தாத்தா எக்காரணத்தை கொண்டும் பெரிய அய்யாவின் அறைக்கு செல்ல வேண்டாம். ரிஷி தம்பி அல்லது பிரதீபன் தம்பி பார்த்து விட்டால் வீண் பிரச்சினை வரும் என்று தன்மையாக சொல்ல, மண்டையை ஆட்டியவள் 
“அப்போ சுத்தம் செய்ய வேணாமா?” என்று கேக்க 
“அத நா பாத்துக்கிறேன் மா… முடிஞ்சா அந்த இரும்பு அறைல இருக்குற சமான நல்லா துடை” யாழிசை புரியாது முழிக்க 
“அதான் மா உடற்பயிற்சி செய்ய பெரிய இரும்பெல்லாம் கொண்டு வந்து போட்டு இருக்காங்களே!” அவர் சொன்ன விதத்தில் சிரிப்பு வர சிரித்தவாறே அகன்றாள். 
பிரதீபன் சில சமயம் அவ்வறைக்கு செல்வதை பாத்திருக்கின்றாள். ரிஷியும் அவளுக்கு எக்காரணத்தை கொண்டும் அவ்வறைக்கு செல்லக் கூடாதென்று சொல்லி இருக்க, ராமு தாத்தா  தன்மையாக சொன்னதால் மோகனசுந்தரத்தின் அறைக்கு அவள் செல்லவே இல்லை. சென்றிருந்தால் அவள் வாழ்க்கையில் பெரிய மாற்றமே வந்திருக்கும்.
வாரத்துக்கு ஒருநாள் யோகராஜின் அலைபேசிக்கு ரிஷியின் அலைபேசியிலிருந்து அழைத்து அனைவரிடமும் பேசி விடுவாள். அதுவும் ஞாயிறு அன்று ரிஷி அவளை மடியில் இருத்திக் கொண்டு அலைபேசியை இயக்கி இருவருக்கும் கேட்க்கும் படி மேசையில் வைத்து விட்டு அவளை பேச வைப்பான்.  
அவனின் சில்மிசங்களினூடாகவே சிரித்தவாறு நலம் விசாரிப்பவள் அநேகமாக வீட்டார் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயங்குவாள். 
“மாப்புள உன்ன நல்லா பாத்துகிறாரா?” 
“எங்க எல்லாம் போனீங்க” 
“யாழிமா ஏதும் விஷேசம் உண்டா?” 
“மாப்பிளையை நல்லா பதுக்கம்மா”  என்று அவர்களின் கேள்விகள் இருக்க, ஒருவாறு பேசி விட்டு வைப்பாள். அவன் அருகில் இருப்பது ஒட்டுகேர்ப்பதற்கு என்று அறியாதவளோ! தன்னை விட்டு ஒரு நொடியும் அவன் பிரிந்திருக்க மாட்டான், அந்த அளவுக்கு தன்னை காதலிக்கின்றான் என்று பெருமையாக எண்ணலானாள். 
சில நேரம் ஏன் பதில் சொல்லவில்லையென்று அவளை குடைந்தெடுத்து விடுவான். யாழிசையின் பெயரில் எழுதி வைத்த அவனின் வீட்டு வாடகை பணம் வருவதால் செலவுக்கு காசு அனுப்பும் தேவை இருக்கவில்லை. வீட்டு வாடகையை அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றும் அவன் கேட்கவுமில்லை. தப்பித்தவறி காசு கேட்டிருந்தால் அதுக்கு சுள்ளென்று பதிலை யாழிசையிடம் சொல்லி இருப்பான்.  பணத்தை பற்றி அவர்கள் பேசாது ரிஷியின், வீட்டை பற்றியும், அவனை பற்றியும் சில கேள்விகள் கேக்க, ரிஷி எரிச்சலடைந்தான் என்றால், அவனின் சொத்து விவரங்கள் உட்பட அவனை பற்றியே முழுசாக அறியாத யாழிசை முழிக்கலானாள்.     
யாழிசை தனது வாழ்க்கையில் வந்த பின் ரிஷியும் வேறெந்த பெண்னிடனும் நெருங்க யோசிக்கவே இல்லை. அவன் சிந்தை முழுக்க யாழிசை என்ற தேவதை ஆட்கொண்டிருந்தாள்.
  “கண்டவளோடு போறதை விட ஒருத்தியோடு நிறுத்திக் கொண்டானே! வீட்டுக்கும் நேரங்காலத்தோடு வர்றான்” என்ற நிம்மதி ப்ரதீபனின் மனதில் எழ ரிஷியை  அவன் வழியில் விட்டு விட்டவன் யாழிசையை பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. அவன் அறையில் வீசும் சிகரெட் வாடை வாசலுக்கு வரும் போது காணாமல் போய் சாம்பிராணி மணம் வீசுவது, சாப்பாட்டில் வித விதமான கீரைகளும் இருக்க, வாசலில் பெரிய மாக் கோலம். எப்பொழுதும் வீடு சுத்தமாக பளிச்சென்று.  அவள் வந்த பின் வீட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் அவன் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியவில்லை.  
அன்று வளமை போல் தோட்டத்தில் இருந்தவள் வல்லாரை கீரையை பிடுங்கி கொண்டு வந்து அவளே! சுத்தம் செய்யலானாள். 
“நா செய்றேன் மா” ராமு தாத்தா சொல்ல 
“இல்ல நானே சுத்தம் செஞ்சி, கழுவி, ஆஞ்சி வெங்காயம், தேங்க, தேசிக்க சாறு, உப்பு, பச்சமொளகா நறுக்கிப் போட்டு பிசைஞ்சி சாப்பிட போறேன். உங்க வேலைய மட்டும் நீங்க பாருங்க” என்றவள் சுத்தம் செய்த கீரையை கழுவலானாள். 
அறுவாவை கால் பெருவிரல் கொண்டு பிடித்தவாறு கீழே அமர்ந்து கீரையை அரிய ஆரம்பித்தாள். ராமு தாத்தா அவள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி அவளுக்கு முதுகு காட்டியவாறு அவளோடு கதைத்தவாறே சமையலில் ஈடுபட யாழிசையும் பதில் சொல்லியவாறே தனது வேலையில் கவனமாக இருந்தாள். 
அந்த நேரம் பார்த்து ஏதோ பைலை எடுக்க வீட்டுக்கு வந்த ரிஷி யாழிசையை அறையில் இல்லாது போகவே டிவி அறையில் தேடியவன் அங்கும் இல்லையென்றதும் தோட்டத்தில் இருப்பாள் என்றெண்ணி தோட்டத்துக்கு செல்ல சமயலறைக்குள் வர யாழிசையின் சிரிப்புச் சத்தம் கேட்டு 
“யாரோடு இப்படி சிரிக்கிறா” என்று யோசித்தவன் சமயலறை வாசலில் நின்று பார்க்க ராமு தாத்தா வலது புறம் திரும்பிப் பார்த்தாலே! இவனை காண முடியும் அவர்களின் பேச்சு சுவாரசியமாக போக யாழிசையை பார்த்தவனுக்கு கோபம் சுறு சுறுவென ஏறியது.
புடவை முந்தியை இடுப்பில் சொருகி புடவையையும் கொஞ்சம் தூக்கி இடுப்பில் சொருகி அமர்ந்திருந்தவளின் வாழை தண்டு கால்கள் பளிச்சென்று தெரிய “வார்” என்று கத்தினான் ரிஷி. 
அவனின் சத்தத்தில் திடுக்கிட்டவள் கீரையையும் கை விட்டு கையை கழுவிக் கொண்டு அவனருகில் வர 
“உங்களுக்கு சம்பளம் தர்றது இந்த வேலைய பண்ண தான். இனி இவ இங்க வந்தா உங்களுக்கு வேலை போய்டும்” கர்ஜனை குரலில் ராமு தாத்தாவை மிரட்டியவன் யாழிசையை இழுத்துக் கொண்டு மின் தூக்கியில் நுழைந்தான். 
ராமு தாத்தாவுக்கும் யாருமில்லாத நிலையில் மோகனசுந்தரம் இறக்கும் போது அவரை விட்டுட வேண்டாம் என்று மகன்களிடம் சொல்லி இருக்க, அவரும் ஒரு வேலைக்காரனாக பாராமல் எல்லா வேலைகளையும் பார்க்க, ரிஷி அவரை வேலைக்காரனாக சம்பளத்தை பற்றி பேசி தூர நிறுத்தியது வலிக்கவே செய்தது. 
பிரதீபன், ரிஷி விஷயத்தில் அவர் தலையிடுவதுமில்லை. ஆனால் மோகனசுந்தரம் இருக்கும் போது அவரின் வலது கையாக இருந்தவர் ராமு தாத்தா. 
யாழிசையை இழுத்துக் கொண்டு அறையினுள் தள்ளி கதவை சாத்தியவன் 
“ஏன் உனக்கு நான் பத்தலயா? அந்த கிழவனை மயக்க இப்படி சீவி சிங்காரிச்சுக்கிட்டு திரியிரியா?” அவன் வார்த்தை அமிலமாக அவள் மேல் வீச ஒரு கணம்  அவன் சொல்வது புரியாமல் முழித்தவள் 
“என்ன சொல்றீங்க” என்று அவனையே ஏறிட 
“ஒண்ணும் தெரியாத பாப்பா, முதல்ல புடவைய கீழ இறக்குடி” சொல்லியவாறே அவன் கை கொண்டு புடவையை பிடித்து இழுத்தவன் அவளின் இடையில் கை கோர்த்து தன்னோடு சேர்த்தணைத்தவாறே  அவளின் இதழ்களை வன்மையாக முத்தமிட ஆரம்பிக்க மூச்சுத்திணறவும் திமிறியவளை கட்டிலில் தள்ளி 
“அந்த ஜகத் உன் பின்னாடி சுத்தினானே! இல்ல அவனை உன் பின்னாடி சுத்த விட்டியா? எல்லா ஆம்பளைகளும் உன் பின்னாடி சுத்தணும்னு தான் கண்மை பூசி மயக்குறியா?” வார்த்தைகளை சரமாரியாக கொட்டியவாறே அவள் மேல் சரிந்தான். 
“பிரதீபன் பத்தி எந்தநாளும் கேக்குற அவனை மயக்க முடியலையேன்னு வருத்தமா இருக்கா?” அவளை ஆளத்துவங்கினான்.
கணவன் எதற்க்காக கோபம் கொண்டு பேசுகிறான் என்று புரியாது முழித்தவள், ப்ரதீபனிடம் நல்ல முறையில் நடந்துக்க கொள்வதற்காக ப்ரதீபனை பற்றி அவள் சாதாரணமாக விசாரித்ததை திரித்துக் கூறியதை கேட்டு கணவனின் மறுமுகம் கண்டு திடிக்கிட்டவள் பேச்சற்று திகைக்க 
அவளை பேச விடாது வார்த்தைகளால் அவளின் மனதை ரணப்படுத்தியவன் உடம்பையும் புண்ணாக்க வலி தாங்க முடியாமல் யாழிசையின் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென பெறுக தனது தேவையை தீர்த்துக் கொண்டவன் அவளை திரும்பியும் பாராது ஆபீஸ் கிளம்பிச்சென்றிருந்தான். 
எந்த ஒரு முக்கியமான கோப்பையும் ரிஷி வீட்டில் வைக்க மாட்டான். நடந்ததோ அவனின் பி ஏ அம்ரிதா வேண்டுமென்றே அவன் மேல் மோதி அவனை முத்தமிட முயல அவளை தள்ளி விட்டவன் தூக்கி நிறுத்தி கன்னம் கன்னமாக அறைந்திருந்தான் ரிஷி. அதை இருவருமே எதிர் பார்க்கவில்லை. கடந்த மூன்று மாதமாக ரிஷி அவளை திரும்பியும் பாராதிருக்க, அவனிடம் நேரடியாக கேக்க முடியாமல் அவள் செய்த செயலால் ரிஷியின் அறிவு விழித்துக் கொண்டது. 
அது அவன் யாழிசையின் மேல் முழுப் பத்தியமாக விழுந்து கிடப்பது. அவளை சந்தித்த பின் அவன் வேறு எந்த பெண்ணையும் நெருங்க யோசிக்கவே இல்ல. ஆசை அறுபது நாள் கணக்கு முடிந்து பத்து நாட்களுக்கும் மேலாக இன்னும் அவளை முதல் நாள் நெருங்குவது போலவே அவனுக்கு தோன்ற அது காதலால் என்று புரிந்து கொள்ளாதவனோ அந்த உணர்வை முற்றாக வெறுத்தான். 
எல்லாம் யாழிசையை மீண்டும் பார்த்ததால் தான். அவள் தான் தன்னை இவ்வாறு மாற்றி வைத்திருக்கின்றாள் என்று என்று வாய் விட்டே முணுமுணுத்தவன்  கோபம் தலைக்கேற யாழிசை அணிவித்த நிச்சயதார்த்த மோதிரத்தை கழட்டி மேசை ட்ரோவரில் போட்டான்.
அம்ரிதா அழுதவாறே அவளுடைய இருக்கையில் அமர அவளை சமாதானப் படுத்தும் நோக்கமில்லாது வீட்டுக்கு கிளம்பி இருந்தான். வழியில் அவனை கண்டு பிரதீபன் கேக்க, வீட்டில் ஒரு கோப்பை விட்டு விட்டு வந்ததாக கூறியவன் கிளம்பி வந்திருக்க, யாழிசையின் சிரிப்பு சத்தமும், தோற்றமும் அவனை அவளின் பால் இழுக்க பெருக்கெடுத்த காதலை கோபமான வார்த்தைகளாக மாற்றி அவள் மேல் வீசி அவளை காயப்படுத்தி விட்டு சென்றான். 
அவன் அவ்வாறு ஏன் நடந்து கொண்டான் என்று அவனுக்கே புரியவில்லை. அதற்காக அவன் வருந்தவும் இல்லை. “ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் எல்லாம் பொய்யா? ராட்சசி இப்படி என் நெஞ்சுக்குள்ள புகுந்து ஆட்டிப் படைக்கிறாளே!” எங்கே அவனால் யாழிசையை விட்டு விட முடியாமல் போகுமோ என்ற பயம் அவன் மனதில் ஏறிக் கொண்டது.
யாழிசையை காயப்படுத்தும் எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லை. அவனை ஆட்கொண்டு ஆட்டிப் படைக்கும் அவளை, அவள் அழகை, அவளின் குழந்தை தனமான பேச்சை, அவளின் காதல் கசியும் விழிகளை முற்றாக வெறுத்தான். அதை சொல்லத் தெரியாமல் வார்த்தையில் அனல் நிரப்பி அவள் மீது கொட்டி,  அவளின் மனதையும் உடம்பையும் ரணப்படுத்தி இருந்தான். 
வண்டியில் அமர்ந்து தலையை சாய்த்து “என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. கேவலம் ஒரு பெண்ணிடம் இந்த ரிஷி வரதன் அடிமையாவதா நெவெர். கண்டிப்பா நா இன்னொரு சரவணகுமாரனா இருக்க மாட்டேன்” தலையை உலுக்கியவன் வண்டியை ஆபீஸ் நோக்கி கிளப்பியிருந்தான். 
இங்கே யாழிசை கணவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நினைத்து நினைத்து அழுது கரையலானாள். 
அன்று பிரதீபன் வந்தும் ரிஷி வீடு வந்து இருக்கவில்லை. அவனுக்கு அழைத்து, அழைத்து பார்த்தவன் எடுக்காமல் போகவே ராமு தாத்தாவை அழைத்தவன்
“பகல்ல ரிஷி வந்தானே! என்ன நடந்தது?” கண்களை கூர்மையாக்கி கேக்க சொல்வதா? வேண்டாமா? என்ற யோசனையில் விழுந்தார் ராமு தாத்தா. 
“ரிஷி இன்னும் வீட்டுக்கு வரல, அந்த பொண்ணு வந்ததிலிருந்தே! நேரங்காலத்தோடு வீட்டுக்கு வந்தான். இன்னைக்கி அவன் வீட்டுக்கு வந்தது எனக்குத் தெரியும். என்ன நடந்ததுன்னு நீங்க சொன்னா தான் அவன் எங்க போய் இருப்பான்னு என்னால தேட முடியும்” அமைதியாக விளக்க ராமு தாத்தாவும் நடந்தவற்றை சொல்லலானார். 
“அந்த பொண்ண போய் வர சொல்லுங்க”
“பாவம் தம்பி அவ. ரிஷி தம்பி போனதிலிருந்து கீழ சாப்பிட கூட வரல”
“போய் வர சொல்லுங்க” கண்ணை சுருக்கி வேங்கையாய்  பார்க்க ராமு தாத்தா யாழிசையை அழைத்து வர சென்றார். 
“என்ன அவங்க ஒதுக்க நினைக்கிறாங்களா? இப்படியெல்லாம் பேசுறாங்க,  அவங்க அண்ணன் சொல்லுற படி என்ன ஒதுக்கத்தான் இப்படி பேசுறாங்களா இருக்கும்”  அவ்வளவு நேரம் அழுது கரைந்தவள் தன்னவனின் பேச்சுக்கு அர்த்தம் தேடித் கொண்டு குளித்து அழகாக புடவையை உடுத்தி அலங்காரமும் செய்து கொண்டவள் தன்னவனுக்கா காத்திருக்க ராமு தாத்தா வந்து பிரதீபன் அழைப்பதாக சொல்லவே! மனம் மீண்டும் அடித்துக் கொண்டது. 
அவனின் அறையில் இருந்து வந்த சிகரெட் வாடையின் நியாபகம் வரவே “ஐயோ அந்த அறைக்குள்ள எப்படி போவதாம்? சுத்தம் செய்ய கூட போக கூடாதுனு தாத்தா சொன்னாங்க” உடல் நடுங்க, பயப்பந்து வயிற்றில் உருள, வியர்வையும் வழிய ஆரம்பிக்க எவ்வளவு மெதுவாக அடியெடுத்து போனாலும் மின்தூக்கி அவளை அவசரமாக கொண்டு வந்து விட பிரதீபன் வாசலில் சோபாவில் அமர்ந்திருந்தான். 
நிம்மதி பெரு மூச்சு விட்டவள் அவனை எவ்வாறு அழைப்பதென்று யோசிக்க ராமு தாத்தாவே அவளின் வரவை சொல்ல எழுந்துக் கொண்டவன் யாழிசையை நன்றாக பார்த்தான் 
அழுது சிவந்து வீங்கிய கண்கள். இமைகளும் தடித்திருக்க, மூக்கு நுனியும் சிவந்திருந்தது. கையிலும் கழுத்திலும் கன்றிச் சிவந்த அடையாளங்கள். ரிஷியின் முரட்டுத்தனத்தை பறை சாற்ற ஒரு பெரு மூச்சு விட்டவன் 
“உனக்கு ரிஷியை எத்தனை நாளா தெரியும்” 
பரதீபனின் என்னமோ ரிஷிக்கு கல்யாணம் செட் ஆகாது சொல்லி புரிய வைத்து யாழிசையை அவன் வாழ்க்கையில் இருந்து அனுப்பி விட வேண்டும் என்பதே! 
“ஐயோ எங்கள பிரிச்சிடாதீங்க, நீங்க என்ன சொல்லுறீங்களோ! நா கேக்குறேன். இந்த வீட்டுல ஒரு வேலைக்காரியா ஒரு மூலைல இருந்துட்டு போயிடுறேன், அவர் கிட்ட இருந்து என்ன பிரிச்சிடாதீங்க” அவன் காலடியில் விழுந்து கதற முகம் மாறினான் பிரதீபன். 
அதே நேரம் ரிஷியின் வண்டி உள்ளே நுழைய  இருவருமே வாசலுக்கு போக நன்றாக குடித்து விட்டு வந்திருந்தான் ரிஷி. அவன் எந்த ஆபத்துமில்லாம வண்டியை ஒட்டி வந்ததே பெரிய விஷயமாக பிரதீபன் நினைக்க யாழிசை அவனிடம் ஓடி அவனை தாங்கிப் பிடிக்க அவள் மேலையே வாந்தி எடுத்திருந்தான் ரிஷி. 
கொஞ்சமேனும் அருவருப்பில்லாமல் கணவனை தாங்கிக் கொண்டு வர பரதீபனும் அவனருகில் சென்று பிடித்தவாறு உள்ளே அழைத்து வர 
“என்ன ப்ரோ எதுவுமே சொல்லாம இருக்க, என்ன திட்ட மாட்டியா? இவளால் தான் எல்லாம் இவளால் தான். நான் இன்னைக்கி சரக்கடிச்சது இவளால் தான்” குளறியவாறே சொல்ல 
அவன் பேச்சை பொருட்படுத்தாது அவனின் அறைக்கு அழைத்து சென்று கட்டிலில் படுக்க வைக்க யாழிசை அவனை சுத்தம் செய்ய அவனின் துணியை கழற்ற கை வைத்தாள்
“தொடாத வார் பேபி. என்ன தொடாத, நீ என் வாழ்க்கைல  வந்திருக்கவே கூடாது. நா உன்ன பாத்திருக்கவே கூடாது. கண்ண மூடினாலும் உன் விம்பம் தான், கண்ண தொறந்தாலும் உன் விம்பம் தான் என் கண்ணுக்குள்ள வந்து அப்படியே நிக்குற. ஐ லவ் யு டி மை பொண்டாட்டி”  மனதில் உள்ள காதலை போதையில் மனம் விட்டு சொல்லி இருந்தான் ரிஷி. அவன் காதலை உணரவுமில்லை, உணர்ந்து சொல்லவுமில்லை.
யோகராஜ் குடித்து விட்டு கலாட்டா செய்யும் பேர்வழியில்லை. இருந்தாலும் நண்பரின் மகனின் திருமணத்துக்கு சென்று நன்றாக குடித்து விட்டு வந்து அவர் ஆடிய ஆட்டம் யாழிசையால் மறக்கவே! முடியவில்லை. பக்கத்து வீட்டில் சிலர் குடித்து விட்டு வந்து சண்டை போடுவதை பாத்திருக்கிறாள். பிரதீபன் தங்கள் கல்யாணத்தை ஏற்றுக் கொள்ளாத கோபம் தான் பகலில் ரிஷி அவ்வாறு நடந்து  கொண்டதும் இப்பொழுது குடித்து விட்டு வந்திருப்பதும் என்று அவனின் பேச்சில் புரிந்துக் கொண்டாள் யாழிசை. உண்மையான காரணத்தை அவனே சொல்லும் போது அவளின் நிலை என்னவோ! கண்களில் கண்ணீருடனையே அவனை சுத்தம் செய்யலானான் யாழிசை. அன்றிலிருந்து யாழிசையின் வாழ்வு மாறிப்போனது. ரிஷியும் ரொம்பவே மாறிப் போனான்.
அவளை அமைதியாக பாத்திருந்த பிரதீபன் யோசனையாக ரிஷியின் அறையை விட்டு வெளியேறி இருந்தான்.  

Advertisement