Advertisement

அத்தியாயம் 10
மும்பாய் இந்தியாவில் அதிக சனத்தொகையை கொண்ட பொழுதுபோக்கு நகரம். அதிகமான பணக்காரர்கள் வசிக்கும் நகரமும் கூட. 
ரிஷி யாழிசையையும் அழைத்துக் கொண்டு வீடு வர காலை ஒன்பது மணியை தொட்டிருக்க, பிரதீபன் ஆபீஸ் செல்ல தயாராகி வெளியே வந்தான். அந்நேரத்தில் ரிஷியின் கார் உள்ளே நுழைவதை கண்டவன் வராந்தாவிலே நிற்க 
வண்டி உள்ளே நுழையும் போதே யாழிசையின் மனம் அடிக்க ஆரம்பித்தது. “இனிமேல் இது தான் என் வீடா? கடைசி மூச்சு இருக்கும் வரை இங்கே தான் வாழணுமா? பார்க்க ரொம்ப பெரிய வீடா இல்ல. இல்லனா வீட்டை சுத்தம் செய்யவே ஒரு நாள் ஆகிடும்” அவள் எண்ணம் அவ்வாறிருக்க, 
வாயிற் கதவினூடாக நுழைந்த உடனே வண்டியை நிறுத்தவென  இடம் இருக்க அங்கே இன்னும் மூன்று வண்டிகள் நிறுத்தியிருந்தது. வலது புறமாக வீட்டின் பின்னாடி செல்ல ஒரு சின்ன நடைபாதை இருக்க இடது  புறமாக வீட்டின் முன்வாசலுக்கு செல்ல ஒரு நடைபாதை இருந்தது. 
வண்டியை நிறுத்தி இறங்கியவன் யாழிசையை இறங்கும் படி கூறியவாறே ப்ரதீபனிடம்  வந்து 
“சாரி டா. என்னால உனக்கு ரொம்ப வேல இல்ல” கண்ணடித்தவாறே கூற 
கடுப்பான பிரதீபன் ரிஷியை முறைத்தவாறே கண்ணில் மிரட்ச்சியோடு வரும் யாழிசையை கண்ணால் காட்டி “இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த” பற்கள் அரைப்பட கேட்டான். 
யாழிசையை உள்ளே போகும் படி ரிஷி சைகை செய்ய “புதுமறுமக வரும்போது வரவேற்க யாருமில்லையா?’ என்ற பார்வைதான் யாழிசையிடம்   
“என்ன பாக்குற உள்ள போறியா? இல்ல இங்கயே நிற்க உத்தேசமா?” அதட்டலாக சொல்ல 
யாழிசையோ ப்ரதீபனை ஏறிட்டு “இவரு யாரா இருக்கும்” என்ற யோசனையில் விழ முகத்தை சுளித்தான் பிரதீபன். 
யாழிசையை அவன் கூர்ந்து கவனித்திருந்தாளையே! அவளின் அப்பாவிக் குணம் புரிந்திருக்கும், பெண்களை ஒட்டு மொத்தமாய் வெருப்பவன் அவளை எங்கே பார்த்தான் அவள் பார்க்கும் போதே முகத்தை திருப்பி இருந்தானே!
ஒரு பெண் அவனை பார்த்தாலே! ஏதோ அவனை ஆர்வமாக பார்த்து  கொய்து கொண்டு போவதாக நினைப்பவன் பிரதீபன். நண்பனின் மனைவி என்று பாராமல் அவளை தப்பாகவே எடை போட
“ஒரு தடவ சொன்னா புரியாதா? உள்ள போ” ரிஷியின் கர்ஜனை குரலில் திடிக்கிட்டவள் உள்ளே ஓடி இருந்தாள்.  
“என்னடா இது வீட்டுக்கே கூட்டிட்டு வந்திருக்க? அப்படியே வழியனுப்பி வைச்சிட்டு வர வேண்டியது தானே!” எரிச்சலாக மொழிய
“சி ப்ரோ ஐ  நீட் ஹேர். உன் கண்ணு முன்னாடி வராம பாத்துக்கிறேன். ஓகே வா” 
“கடைசில உனக்கு வேண்டியதைத்தான் பண்ணுவ பண்ணித்தொல. இன்னைக்காவது ஆபீஸ் வரியா?” கைகளை மார்ப்புக்கு குறுக்காக கட்டியவாறே கேக்க 
“அதான் போன் பண்ணி வா னு சொன்னியே. வா போலாம்” உள்ளே சென்றவளை பற்றிய கவலை எதுவும் இல்லாமல் இருவரும் கிளம்பி சென்றனர். 
உள்ளே சென்ற யாழிசை  வீட்டை வியந்து பாத்திருந்தாள். வெளியே இருந்து பார்க்கும் பொழுது சாதாரணமான இரண்டு மாடி வீடாக தெரிந்த வீடு உள்ளே ஆடம்பரமான மாளிகை போலவே தோற்றமளித்தது. பெரிய வாசல் வாசலோடு இடது புறத்தில் இரண்டு அறைகளும் சின்ன பூஜையறையும் வலது புறத்தில் மாடிக்கான படிக்கட்டும் இருந்தது. 
பூஜையறையில் நுழைந்தவள் எந்த சாமி படமுமில்லாது ஒரு பெரியவரின் படம் மாத்திரம் இருப்பதை கண்டு திகைத்தாள். 
“என்ன இவங்க கடவுள் நம்பிக்கை இல்லாம இருக்காங்க? யாரிந்த பெரியவர்” என்ற யோசனையில் விழுந்திருக்க 
“ஆப் கோன் ஹோ?” {யாரு நீங்க?} என்ற குரலுக்கு திரும்பிப் பார்த்தவள் அங்கே இருந்த முதியவரை கண்டு அவர் என்ன கேட்டார் என்றும் புரியாமல் திருதிருவென முழித்தவள் 
“இவரு என்ன சொல்றாருனு புரியலையே!” என்று முணுமுணுத்தவாறே அவரை பாவமாக பார்க்க 
“தமிழாம்மா நீ? யார்மா நீ? யார் கூட வந்த? உன்ன எப்படி வீட்டுக்குள்ள விட்டாங்க?’ ஆயிரம் கேள்வியை முன் வைக்க 
“அவங்க..” என்று இழுத்தவள் ரிஷியின் பெயரை சொல்ல முடியாமல் கழுத்திலிருந்த தாலியை தூக்கிக் காட்ட அதிர்ச்சியடைவது அவர் முறையானது.
 “என் பேர் ராம்தாஸ். இங்க சமையல்காரனா இருக்கேன். பெரியய்யா இருக்கும் போதுதான் வந்தேன். அந்த போட்டோல இருக்கிறவர் தான் பெரியய்யா. பேர் மோகனசுந்தரம்” அதற்க்கு மேல் எதுவும் சொல்லாமல் “குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன் மா” என்றவர் “இந்த வீட்டுக்கு வந்த முதல் பெண் இவங்களாத்தான் இருக்கும்” என்று நினைத்தவாறே அகன்றார். 
யாழிசையும் வீட்டை வேடிக்கை பார்க்க பூயையறையிலிருந்த பெரியவரின் புகைப்படத்தை உற்றுப் பார்த்தவளுக்கோ அந்த கண்கள் நன்றாக பரிச்சயமான கண்கள் போல் தோன்றியது. பூஜையறையோடு இடது புறத்தில் ஆபீஸ் அறையிருக்க  ஒரு மேசையும், இரண்டு கதிரைகளும் மட்டுமே இருந்தது. வலது புறமாக இருந்த அடுத்த அறையை திறந்தவள் சிகரெட் வாடை வீசவே சட்டென்று கதவை சாத்தியவள் “இது அவர் அறையா இருக்குமோ?” என்று அஞ்சியவளாக யோசிக்க “இல்ல இல்ல அவர் தான் குடிக்க மாட்டேன் னு சொன்னாரே. அப்போ இது வெளிய நின்ற அவங்க அண்ணனோட அறையா இருக்கும். அண்ணானா தம்பியா?” ஆராய்ச்சியில் இறங்க 
“ரிஷித் தம்பி உங்கள எப்போ கல்யாணம் பண்ணிகிட்டாரு” என்றவாறே வந்த ராமு தாத்தா அவள் அருந்த குளிர்பானம் கொடுக்க அதை பெற்றுக் கொண்டவள் அவருக்கு கதை சொல்லியவாறே சமையல் கட்டினுள் புகுந்திருந்தாள். 
சிறிது நேரத்திலையே இருவரும் ஒன்றி விட யாழிசை அவரை “தாத்தா” என்றழைக்க, ரிஷியின் மனைவி என்றதும்  திமிரும், அகம்பாவமும்   நிறைந்தவளாக இருப்பாளோ என்றஞ்சியவர், அவளின் வெகுளியான பேச்சிலையே நற்குணம் தெரிய நிம்மதியடைந்தவராக அவளோடு சாதாரணமாக பேச ஆரம்பித்தார்.  
சமையலறையும்  சாப்பாட்டறையும் ஒன்றாக இருக்க அங்கேயும் பணத்தின் செழுமை நிறைந்திருந்தது. பின் வாசல் பக்கம் எட்டிப்பார்க்க கண்ணுக்கு எட்டிய தூரம் பெரிய தோட்டம் இருக்க கண்களை அகல விரித்துப் பார்த்தாள். இடது புறத்தில் வண்ண மலர்களும், வலது புறத்தில் மரக்கறி வகைகளும் என பயிரிடப்பட்டிருக்க, தன்னை கிண்டல் செய்தாலும் தன்னவன் ரசனையுள்ளவன் என்று மனதில் சிலாகித்தவள் தோட்டத்துக்குள் செல்லவென அமைத்திருக்கும் நடைபாதை வழியாக நடக்க தோட்டக்காரன் ஹேமந்த்தை அழைத்து யாழிசையை அறிமுகப்படுத்தி வைக்க அவனோடு  தோட்டத்தில் உலா வந்தாள். 
அவன் ஹிந்தியில் சொல்வதெதுவும் யாழிசைக்கு புரியவில்லை. மண்டையை ஆட்டியவாறே அவளுக்கு பிடித்த பூக்களை பறித்து தலையில் சூடி அழகு பார்த்தவள் ரிஷியின் சிந்தனையும் இல்லாது காலை பொழுதை தோட்டத்தில் கழிக்க காலை உணவும் தோட்டத்துக்கே வந்து சேர்ந்தது. 
அப்பொழுது ரிஷியின் நியாபகம் வந்தவள் “அவங்க எங்க” என்று ராமு தாத்தாவை ஏறிட 
“தம்பீங்க அப்போவே ஆபீஸ் போய்ட்டாங்க” சிரித்தவாறே சொல்ல 
“ஓஹ்” என்று மாத்திரம் விழித்தவள் மீண்டும் மலர்களோடு ஐக்கியமானாள். சூரியன் உச்சிக்கு வரவே! அவளை உள்ளே வரும் படி அழைத்த ராமு தாத்தா 
“மாடில வலது புறம் இருக்கும் அறை ரிஷி தம்பியோடது அங்க உங்களோட பெட்டியெல்லாம் வச்சிட்டேன்” 
“என்னது நீங்க தூக்கிட்டு மாடியேறினீங்களா?” இடுப்பில் கைவைத்து அவரை செல்லமாக முறைக்க 
அவளின் கரிசனத்தில் புன்னகைத்தவர் “மாடிக்கு ஒரு லிப்ட் சாப்பாட்டறையோடு இருக்குமா கவனிக்கலயா?” என்றவர் அவளை அதில் அழைத்து சென்று அறையில் விட்டார். 
ரிஷியின் அறை சுத்தமாக இருந்தது. பெரிய கட்டில், அலுமாரி, ஒரு சோபா, ஒரு பிரிஜ்,  குட்டி பால்கனி, அறையை ஒட்டியே! குளியலறை என்று சகல வசதிகளோடு இருக்க, 
“அப்பா ஹோட்டல் ரூம் போலவே! இருக்கே!” என்று வியந்தவள் குளித்து விட்டு ஒரு குட்டித் தூக்கம் போடலானாள். 
இங்கே ரிஷியின் ஆபீசில் மதியம் வரை வேலையில் மூழ்கி இருந்த ரிஷி அதற்க்கு மேல் தாக்கு பிடிக்காமல் ப்ரதீபனிடம் சொல்லி விட்டு கிளம்ப தலையில் அடித்துக் கொண்டான் பிரதீபன். 
“ஏகப்பட்ட வேல பெண்டிங் ல இருக்கு இவன் என்னடானா எவளோ ஒருத்தி பின்னால” இரண்டு கெட்ட வார்த்தைகளை சொல்லி ரிஷியை வசைபாடியவனின் மொத்த கோபமும் யாழிசையின் பக்கம் திரும்பியது. 
தூங்கி எழுந்த யாழிசை மாடியிலுள்ள அறைகளை திறந்து பார்க்க ஒரு அறை தொலைக்காட்ச்சி பார்ப்பதற்கும், இன்னொரு அறை உடல்பயிற்சி செய்வதற்கான பொருட்களுடனும், மற்ற அறை பயன் படுத்துவத்துக்கு ஏதுவாக மரசாமான்களோடு இருந்தது. கதவை திறந்து எட்டிப்பார்த்ததால் அந்த அறையின் கதவோடு இருந்த சுவரில் மாட்டியிருந்த புகைப்படங்களை யாழிசை கவனிக்கவில்லை.
“தோட்டத்துல காலாற நடக்கலாமா?” என்று யோசித்தவள் கீழே செல்ல 
அவளை புன்னகை முகமாக ஏறிட்ட ராமு தாத்தா “மதியம் ஒண்ணும் சாப்பிடலையே! பயண களைப்புல தூங்கிரியாக்கும் னு எழுப்பல. சாப்பிடுறியா?” எனக்கேட்க 
“நீங்க சப்ப்டீங்களா?” என்று கேட்டவாறே சமையல் கட்டினுள் புகுந்து பரிமாறிக் கொள்ள 
“என்னமா இது தம்பி பார்த்தா என்ன தான் சத்தம் போடுவாரு. மேசைல எல்லாம் எடுத்து வைக்கிறேன் அங்க உக்காந்து சாப்பிடு” 
“ஒருத்திக்காக எதுக்கு சிரம பட்டு கிட்டு. வேற வேல இருந்தா பாருங்க” என்றவள் சாப்பிடலானாள். 
“இரவுக்கு என்ன சமைக்கட்டும்” ராமுத்தாத்தா யாழிசையை ஏறிட 
“வழக்கம் போலவே பண்ணுங்க தாத்தா” என்றவள் சாப்பாட்டில் கவனமாக 
அவள் சாப்பிடும் அழகை ரசித்தவாறு  உள்ளுக்குள் சிரித்தார் ராமு தாத்தா. 
சாப்பிட்டு முடித்தவள் தோட்டத்தில் தஞ்சமடைந்தாள். 
வீட்டுக்கு வந்த ரிஷி யாழிசையை தேட அவள் தோட்டத்தில் இருப்பதாக ராமு தாத்தா கூற நடையை எட்டிப் போட்டவனுக்கு காணக் கிடைத்தது கொய்யா மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் கொய்யா பழமொன்றை பறிக்க குதித்துக் கொண்டிருப்பவளை 
கையை தூக்கியவாறே அவள் குதிக்கும் ஒவ்வொரு தடவையும் புடவை விலகி அவள் இடையும், முன்னழகும்  அவனுக்கு காட்ச்சித் தர கையை கட்டியவாறு அவளை ரசிக்க ஆரம்பித்தான் ரிஷி. 
யாழிசையோ முயற்சியை கைவிடாது உதடை கடித்தவாறே “இன்னைக்கு உன்ன பறிக்காம விடமாட்டேன்” என்று குதித்துக் கொண்டே இருக்க சட்டென்று அவள் மேலே தூக்கப் படவும் பயந்தவள் தன்னவனை கண்டு வெக்கப்பட்டவாறே புன்னகைக்க, 
“சீக்கிரம் பறி டி, செம்ம கனமா இருக்க” என்று கிண்டல் செய்ய கொய்யாவை பறித்துக் கொண்டு கீழே இறங்கியவள் அவனை முறைக்க 
அவளை தன்னோடு அணைத்துக் கொண்டே “என்ன முறைப்பு” புருவங்களை உயர்த்தி அதட்டலாக கேட்டான் ரிஷி.
அவ்வளவு நெருக்கத்தில் இருக்கிறதை உணராமல் “நா என்ன தூக்க சொல்லி உங்க கிட்டு சொன்னேனா?” யாழிசை கழுத்தை நொடிக்க 
“சுழுக்கிடும் டி” என்றவன்  அவளின் கன்னத்தில் முத்தமிட யாழிசை வெக்கப்பட்டவாறே விலக முயற்சிக்க மேலும் அவளை தன்னுள் இறுக்கிக் கொண்டவன் கழுத்து வளைவில் முகம் புதைக்க கூசி சிலிர்த்தவள் 
“என்னங்க யாரவது பாத்துட்டு போறாங்க” மெல்லிய குரலில் சொல்ல 
“யாரும் இந்த பக்கம் வர மாட்டாங்க டி” என்றவன் தன் வேலையை தொடர 
“அங்க அங்க” என்றவள் கை காட்ட ரிஷி தலையை திருப்பி பார்க்க கொய்யா மரத்தில் இருந்த அணிலொன்று கொய்யாவை கொறித்துக் கொண்டு இவர்கள் புறம் திரும்பி இருக்க, 
“ரொம்ப நேரமாகவே நம்மள மொறச்சி பாத்து கிட்டே இருக்கு” பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு யாழிசை சொல்ல     
அவளின் முகத்தில் தோன்றிய பாவங்களை ரசித்தவன் “அப்படியா” என்றவாறே அவளை கைகளில் ஏந்தியவாறே வீட்டினுள் நுழைந்தான் ரிஷி. 
பிரதீபன் வீடு வர இரவு எட்டை தொட்டிருக்க ராமு  தாத்தா சாப்பாடு எடுத்து வைக்கவா என்று கேக்க 
“ரிஷி எங்க? சாப்டானா?” கழுத்துப்பட்டியை தளர்த்தியவாறே அவரை ஏறிட அவரோ மாடியை பார்த்தார். 
அவர் சொல்ல விளைவதை புரிந்து கொண்டவன் ஒரு பெருமூச்சு விட்டவாறே தலையை உலுக்கிக் கொண்டு ரிஷியின் அலைபேசிக்கு அழைக்க 
அதை இயக்கி ரிஷி காதில் வைத்திருந்தாலும் யாழிசையின் கெஞ்சலும் ரிஷியின் கொஞ்சல்களும் காதில் விழ உள்ளுக்குள் புசுபுசுவென கோபம் கனன்றது. 
“சொல்லுடா” 
“சாப்பிட வரியா? இல்ல நா தனியா சாப்பிடவா?” விட்டெறியான குரலில் கூற 
“இருடா வரேன்” என்றவன் அலைபேசியை அனைத்து விட்டு கீழே வர பிரதீபன் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்தான். 
ரிஷியின் பின்னால் வந்த யாழிசையை கண்டு முகம் சுளித்தவன் எழுந்துக் கொள்ள 
“எங்கடா போற? சாப்பிட்டுட்டு போ” ரிஷி அவனின் கையை பிடிக்க 
வீட்டில் இருக்கும் போது இருவரும் ஒன்றாகத்தான் சாப்பிடுவார்கள் ஏனோ அதை மட்டும் பிரதீபன் வீட்டுக் கொடுக்க விரும்பாமல் யாழிசையை முறைத்தவாறே “கண்ட கழிசடைங்க கூடையெல்லாம் உக்காந்து சாப்பிட என்னால முடியாது” கையை உதறியவன் சாப்பாட்டறையை விட்டு வெளியேற 
அவனின் குரலில் இருந்த வெறுப்பின் தகிப்பால் யாழிசையின் உடல் சில்லிட்டது. பிரதீபன் ரிஷியின் அண்ணனென்று நினைத்து “அவரோட அண்ணனுக்கு அவர் என்ன கல்யாணம் பண்ணது பிடிக்கலையா?” உடல் நடுங்க சுய சிந்தனையில் உழன்றவளின் செவிகளில் ரிஷி அவளை அறைக்கு செல்லுமாறு சொன்னது விழவே இல்லை. 
“ஒரு தடவ சொன்னா புரியாதா? மரம் மாதிரி நின்னு கிட்டு. போ” என்று கத்தியவன் யாழிசையை இழுத்து மின்தூக்கியினுள் தள்ளி இயக்கி இருக்க, 
கணவனின் கோபமுகத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தவள் அவன் தள்ளவும் விழாத குறையாக நிற்க கண்களிலிருந்து கண்ணீர் அவள் அனுமதியில்லாமலே பெருக்கெடுத்தது. 
ப்ரதீபனின் அறையினுள் நுழைந்த ரிஷி 
“சாரிடா, இனிமேல் அவ உன் கண் முன்னாடி வராம பாத்துக்கிறேன்” என்றவன் அவனை இழுத்துக் கொண்டு வந்து சாப்பாட்டறையில் அமர்த்தி இருவரும் உண்டு விட்டு ஆபீஸ் அறையில் சென்னையில் கட்டிக்க கொண்டிருக்கும் நகைக்கடைக்கான கட்டிடத்தை பற்றி பேச ஆரம்பித்தனர். 
அறைக்குள் வந்த யாழிசை குளியலறைக்குள் புகுந்து குழாயை திறந்து குளிர்ந்த நீரால் முகத்தை அடித்து கழுவியவள் துவாயால் அழுத்தித்  துடைத்தாள். 
“அவங்க அண்ணன்னா ரொம்ப பாசம் போலும், பயமும் இருக்குமோ! அப்பா என்ன பார்வை அது” ப்ரதீபனின் பார்வையை நினைத்து பார்த்தவளுக்கு முதுகு தண்டில் குளிர் பரவியது. 
“அவங்க என்ன கல்யாணம் பண்ணது பிடிக்காம நம்மள பிரிச்சிடுவாங்களோ! இல்ல இல்ல அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு, அவரு சொன்னாலும் அவங்க செய்ய மாட்டாங்க” ஏதேதோ நினைத்தவள் குழம்பியவாறே அறையினுள் அடைந்து கிடக்க இரவு உணவை எடுத்துக் கொண்டு ராமு தாத்தா வந்தார். 
“அவங்க சாப்பிட்டாங்களா?” பொதுவாகவே கேக்க 
அவள் அழுது இருக்கிறாள் என்று அவள் முகமே காட்டிக் கொடுத்தாலும், குரல் சாதாரணமாகவே ஒலிக்க, ரிஷி, பிரதீபன் உறவை ரிஷியே சொல்லட்டும் என்று விட்டு விட்டவர்.
“ரெண்டு பேரும் சாப்டாங்க, ஏதோ முக்கியமா பேசிகிட்டு இருக்காங்க, நீ சாப்பிட்டுடு தூங்குமா” 
“சரி” என்று தலையசைத்தவள் உணவுப் பாத்திரத்தை திறந்து “என்னது இது” என்று அலறியே விட சில பற்கள் உதிர்ந்த நிலையில் அழகாய் சிரித்தார் ராமு தாத்தா. 
“நீதானேம்மா சொன்ன வழக்கமா என்ன செய்றேனோ அதையே செய்ய சொல்லி” அறியா பிள்ளை போல் சொல்ல முழிப்பது யாழிசையின் நிலையானது. 
அங்கே வேகவைத்த மரக்கறி மாத்திரம் இருந்தது. வித விதமாக சாப்பிடா விட்டாலும், வாய்க்கு ருசியாய் சாப்பிட்டவளுக்கு இது இறங்காது என்று தோன்ற “எனக்கு பசிக்கல தாத்தா இத கொண்டு போங்க” என்றவள் கட்டிலை நோக்கி செல்ல 
“கொஞ்சம் இருமா”  என்றவர் வெளியே வைத்திருந்த இன்னொரு பாத்திரத்தை கொண்டு வந்து வைத்து “மத்யானமே நீ சாப்பிட விதத்தை பாத்து இரவைக்கு உனக்கு இடியாப்பம் பண்ணேன். தம்பிங்க இப்படித்தான் சாப்பிடுவாங்க, உனக்கு என்ன வேணுமோ சொல்லு செய்ஞ்சி தரேன்” என்றவர் அகன்றார். 
“அவங்க சொன்னது போல நமக்கு பிடிச்சதுதான் சாப்பிடணும் அடுத்தவர்களுக்காக சாப்பிட கூடாது” தலையை தட்டிக் கொண்டவள் “நல்லவேளை ராமு தாத்தாவால பட்டினி இருக்க அவசியமில்லாம போகிருச்சு” என்றவள் ருசிச்சு சாப்பிட்டு விட்டு கட்டிலில் விழுந்தாள். 
 
ரிஷி வந்ததோ! அவளை முத்தமிட்டதோ! கட்டிக்க கொண்டு தூங்கியதோ! எதையும் அறியாமல் நன்றாக உறங்கினாள் யாழிசை.

Advertisement