Advertisement

அத்தியாயம் 9

என்னை பார்த்து

கண் சிமிட்டும்

விண்மீன் என்று

உன்னை எண்ணி

உயிர் உருக

காதல் செய்வேன் அன்பே!!!!

வினோதினி அட்ரஸ் தெரியுமாததால் அங்கே சென்றார்கள். அங்கே இருந்தது வீடு அல்ல. அரண்மனை. கீர்த்தியின் வீட்டைப் போல் நான்கு மடங்காவது இருக்கும்.

வினோதினி வீட்டுக்குள் நுழைந்ததும் மகேந்திரன் கண்களில் பட்டது மாலை போட்டிருந்த அந்த புகைப்படம் தான். பார்க்க சிறு வயது போல தான் இருந்தாள் அந்த புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்த பெண்.

“மகி இங்க இருந்து போய்ருவோமா? நீ தான் செத்துட்டியே”,என்று கேட்டாள் கீர்த்தி.

“இரு டி, ஒரு ஹாய் தான் சொல்ல முடியலை. அட்லீஸ்ட் அவ யாருன்னாவது பாப்போம். சும்மா இல்லை கீர்த்தி. அதிக பரப்பளவில் விவசாயம் பண்ணுறதுக்கு என்ன என்ன விளைய வைக்கணும்னு டீட்டெயில் கேட்டு அப்ளை பண்ணிருந்தா. இரு பாப்போம். கீர்த்தி அங்க பாரு. அந்த போட்டோல இருக்குறது யாரு? நம்மளை மாதிரி அந்த பொண்ணும் செத்துட்டு போல. அது வினோதினியோட தங்கச்சியா இருக்குமோ?”, என்று கேட்டான் மகேந்திரன்.

“எனக்கு என்ன தெரியும்? இங்க இருக்க பயமா இருக்கு மகி. வா போகலாம்”

“இரு டி, அவளை பாத்துட்டு போய்றலாம். இன்னுமா நீ பொறாமை படுற? நான் அவளை பாக்க மட்டும் தான் செய்ய முடியும்? அவ கூட வாழவா முடியும்?”,என்று கேட்டு சிரித்தான்.

“அவ கூட வாழுற ஆசை எல்லாம் உனக்கு இருக்கா? இருந்தா அதையெல்லாம் மூட்டை கட்டி வச்சிரு. என் மகி எனக்கு தான்”

அவள் குரலில் அவள் உரிமையில் மொத்தமாக அவளிடம் தன்னை தொலைத்தான் மகேந்திரன். ஒரு சிரிப்போடு அவளை பார்த்தவன்  “இவ்வளவு தூரம் வந்துட்டோம், பாத்துட்டு போய்ருவோம் வா”, என்று சொல்லி உள்ளே அழைத்து சென்றான்.

அந்த வீட்டில் பல இடங்களில் அந்த பெண்ணின் புகைப்படம் மட்டும் தான் மாட்ட பட்டிருந்தது. 

“இங்க வினோதினி யாரா இருக்கும்? அவ எங்க இருப்பா?”, என்று எண்ணிக் கொண்டே வீட்டுக்குள் சென்றான். 

உள்ளே ஒரு அறையில் பூஜை செய்பவர்கள் ஹோமம் வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை சுற்றி ஆட்கள் இருந்தார்கள்.

எல்லாருமே அழுது கொண்டு தான் இருந்தார்கள். “அந்த பொண்ணுக்கு சாந்தி செய்றாங்களோ?”,என்று எண்ணிக் கொண்டு அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான் மகேந்திரன். 

கீர்த்தியோ முள் மேல் நிற்பது போல உணர்ந்தாள். “இறந்து போன பொண்ணோட பேர் சொல்லுங்க”, என்று கேட்டார் பூஜை செய்யும் ஐயர்.

“பொண்ணு பேரு வினோதினி சாமி”, என்று சொன்ன அந்த பெரியவர் “இந்த வயசுலயா மா எங்களை விட்டுட்டு போகணும்? ஐயோ, நீ இந்த உலகத்தையே சுத்தி வருவேன்னு நினைச்சேனே?”, என்று கத்தி அழுதார்.

அதைக் கேட்டு அதிர்ந்து போனான் மகேந்திரன். “வினோதினி தான் இவளா? செத்து போய்ட்டாளா?”, என்று அதிர்ச்சியானான். “இவர் தான் வினோதினி அப்பா போல?”, என்று எண்ணிக் கொண்டான்.

பூஜை முடிந்து அனைவரும் சென்றதும் ஒரு ஆள் வீட்டுக்கு வந்தார். “இன்னைக்கு தான் வினு பாப்பா இறந்துட்டானு தெரிஞ்சது. எப்படிங்க ஐயா நடந்தது?”, என்று அந்த ஆள் கேட்டதும் “ஆக்ஸிடெண்ட் ரங்கநாதா. என் மக நல்ல கார் ஒட்டுவா. ஆனா எதனால அவ லாரி ஒட்டிட்டு போனான்னு தெரியலை”, என்றார் வினோதினியின் அப்பா.

“என்னது லாரியா?”

“ஆமா, எங்க கம்பெனி லாரியை தான் ஒட்டிட்டு போயிருக்கா. லாரி டிரைவர்க்கு கூட ஏன்னு தெரியலை. சின்னம்மா என்கிட்ட வந்து சாவி கொடுன்னு கோபமா கேட்டாங்க. நான் கொடுத்ததும் நான் தடுக்க தடுக்க கேக்காம ஓட்டிட்டு போய்ட்டாங்கன்னு சொன்னான்”

இதைக் கேட்டு மகேந்திரனுக்கும் குழப்பமாக இருந்தது. “வினோதினி பாவம் கீர்த்தி”, என்றான் மகேந்திரன்.

“எதுக்காம்? எதுக்கு உனக்கு இந்த கரிசனை?”, என்று கோபமாக கேட்டாள் கீர்த்தி.

“இல்ல, செத்து போய்ட்டாளே, அதான்”

“நாம மட்டும் என்ன வாழ்ந்துட்டா இருக்கோம்? நம்ம நிலைமையே அந்தரத்தில் தொங்கிக்கிட்டு இருக்கு. இதுல அவளுக்கு பாவம் பாக்க வந்துட்டான். அவ யாருக்கு என்ன துரோகம் செஞ்சாளோ? என்ன பாவம் செஞ்சாளோ?”

“தெரியாதவங்களைப் பத்தி அப்படி சொல்லாத கீர்த்தி”

“எனக்கு முதல்ல இங்க இருந்து போகணும். இனி அவளைப் பத்தி என்கிட்ட பேசாத. எனக்கு எரிச்சலா வருது”

“சரி சரி டென்ஷன் ஆகாத. ஆனா கடைசி வரை அவளை பாராட்ட முடியாமலே போச்சே. ஆள் வேற அழகா இருக்காள்ல?”, என்று சொன்னதும் அவனை முறைத்தவள் அவனை விட்டு விட்டு நடக்க ஆரம்பித்தாள்.

அவள் பின்னேயே சென்று அவளை சாமாதான படுத்தினான் மகேந்திரன். 

அடுத்து வந்த இரண்டு நாட்கள் இருவரும் இணை பிரியாமல் இருந்தார்கள். அவன் கைகளை பிடித்து கொண்டு இந்த உலகத்தை சுற்றி வந்தவள் மனதுக்குள் வெகுவாக அழுதாள். 

காதல் என்று சொன்னால் அவன் கண்டிப்பாக மனசு கஷ்ட படுற மாதிரி பேசுவான் என்பதால் அதை பற்றி அவனிடம் பேசுவதை தவிர்த்தாள். 

அவனுக்கும் அதே அளவு வலி இருந்தது. இருவரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சந்தோஷமாக இருந்தார்கள். 

அன்று அவர்கள் வாழ்வின் கடைசி நாள். கடவுள் அவர்களுக்கு கொடுத்த கெடு இன்றோடு தான் முடிகிறது.

“என்னோட வீட்டுக்கு ஒரு தடவை போவோமா?”, என்று கேட்டாள் கீர்த்தி.

அவன் “சரி”, என்று சொன்னதும் அங்கு சென்றார்கள். இப்போது அவ்வளவு பெரிய மாளிகையில் எவருமே இல்லை. 

மூர்த்தியின் பிள்ளைகள் எங்கு சென்றார்கள் என்றே தெரிய வில்லை. 

“இது தான் மகி, அம்மா அப்பா ரூம். இது தான் அவங்க போட்டோ. இது என்னோட ரூம். பாத்தியா என்னோட பெயிண்டிங்க்ஸ். எல்லாம் நல்லா இருக்கா?”, என்று ஒவ்வொன்றாக சலசலத்துக் கொண்டு வந்தாள் கீர்த்தி.

புன்னகையுடன் அனைத்தையும் பார்த்துக் கொண்டே வந்தான் மகி. அதுவும் அவளுடைய போட்டோக்களை வெகுவாக ரசித்தான்.

அவள் சிறு வயது குழந்தை புகைப் படத்தை பார்த்த போது “எங்களுக்கு மகள் பிறந்தா இதே மாதிரி தான் இருப்பா”, என்று அவனை அறியாமலே அவன் மனது எண்ணியது. 

அதன் பின்னர் தான் கீர்த்தி அவன் மனதில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறாள் என்று புரிந்தது.

“எங்களுக்கு வாழ ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்க கூடாதா?”, என்று எண்ணி ஏக்கம் வந்தது. 

“இங்க தான் மகி என்னை கொன்னாங்க”, என்ற அவளின் கலங்கிய குரலில் நடப்புக்கு வந்தவன் அவளை இறுக்கி அணைத்து அமைதி படுத்தினான். 

அந்த வீட்டை விட்டு அவளை அழைத்துச் சென்றவன் அவளை சிரிக்க வைத்தான். 

“சரி மகி நான் முதல்ல இந்த உலகத்தை விட்டு போறேன்”, என்றாள் கீர்த்தி.

அவன் கண்களில் அடுத்த நொடி கண்ணீர் வந்தது. அந்த கண்ணீரில் சந்தோஷமாக சிரித்தவள், “எனக்கு இது போதும் மகி, எனக்காக இந்த கண்ணீர்னு நினைக்கும் போது எனக்கு இதை விட வேற என்ன வேணும்?”, என்றாள்.

“நாம ரெண்டு பேரும் ஒண்ணா போகலாம் டி”, என்று கண்ணீருடன் சொன்னான் மகேந்திரன்.

“நீயில்லாத உலகத்தில் நான் இருக்க கூடாது மகி. நான் பாக்குற கடைசி விஷயம் அது நீயா தான் இருக்கும்”, என்று சொல்லிக் கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

“என் மேல கோபா படாத மகி. ஒரு தடவை மட்டும் பிளீஸ்”, என்று சொல்லிக் கொண்டே அவன் முகம் நோக்கிக் குனிந்தவள் அவன் உதடுகளில் அழுந்த முத்தமிட்டாள்.

அவள் முத்தமிட்டு விலகிய அடுத்த நொடி அவளை இறுக்கி அணைத்தவன் அவள் உதடுகளில் புதைந்தான்.

இனி அவளை காணவே முடியாது என்ற ஏக்கம், அவளுடன் வாழ முடியாத தாகம் அனைத்தும் சேர்ந்து அவனுள் அவள் மீது மொத்த காதலையும் மோகத்தையும் தூண்டி விட அவள் உதடுகளை பிய்த்து தின்று விட்டான். 

அவள் இடுப்பில் பதிந்த அவனுடைய கைகள் ஆங்காங்கே நகர்ந்து அவள் பெண்மையை உணர்ந்தது. 

அவன் தொடுகையில் நெகிழ்ந்து, அவன் முத்தத்தில் கரைந்து கொண்டிருந்தாள் கீர்த்தி. 

சிறிது நேரம் கழித்து அவன் விட்டதும் அவனிடம் இருந்து விலகியவள் “முன்னாடியே இத மாதிரி பண்ணிருக்கலாம்ல டா? இவ்வளவு நாள் வேஸ்ட் பண்ணிட்ட? நீ சரியான லூசு மகி”, என்று சொல்லி அவனையும் சிரிக்க வைத்து விட்டு அவன் கண்ணில் இருந்து மறைந்தாள்.

அவள் மறைந்த திசையை பார்த்துக் கொண்டே அதே இடத்தில் அமர்ந்தான் மகேந்திரன். 

அவனும் செல்லலாம் என்று முடிவெடுக்கும் போது தான் அவனுக்கு ராம் நினைவு வந்தது.

கடைசியாக அவனை பார்த்து விட்டு செல்லலாம் என்று நினைத்து ராமின் வீட்டுக்கு சென்றான்.

Advertisement