Advertisement

இறுதி கட்டப் போட்டியில் ,இரு அணியில் இருந்த அனைவரின் கண்களும் துணியால் கட்டினாா்கள்,இவர்கள் இரு அணியை ஒரு இடத்தில் விட்டுவிட்டுனா்,போட்டி நடத்துனா் எப்படி இங்கே விளையாட்டை விளையாட வேண்டும் என்பதை கூறினாா்,”நாங்கள் இந்த இடத்தில் நிறைய பொருட்களை வைத்து உள்ளோம்,நீங்கள் இந்த இடத்தில்  உள்ள பொருட்களை உங்கள் கையில் உள்ள பையில் போட வேண்டும்,நாங்கள் உங்களுக்கு 20 நிமிடம் கால அவகாசம் தருவோம்,அதற்குள் யாா் அதிகமான பொருட்களை எடுத்து உள்ளாரோ ,அவரே இந்த போட்டியில் வெற்றி பெற்றாா் என்று அறிவிக்கப்படும்,” என்றாா்.
இதை கேட்டவுடன்,யோகா மனதில்,”நாம் சும்மாவே புடவை கட்டினால் விழுவோம்,இப்போ சொல்ல வா .. வேண்டும்,எத்தனை தடவை புதையல் எடுக்கிறோமோ? என்னவோ?…” என்று நினைத்தாள்.
ஷானோ ,”நமக்கு நல்ல சந்தா்ப்பம் கிடைத்து உள்ளது, நாம் நம் யோகாவை அருகில் வந்தாலே… அறிந்து கொள்வோம்,எப்படியும் நாம் அவளை நம் அருகிலே வைத்து கொள்ள வேண்டும்,”என்று நினைத்தான்.
இவர்கள் இப்படி நினைத்து கொண்டு இருக்க,ஆனந்திக்கு மயக்கமே வந்தது,ஆனந்தியின் அருகில் நின்று இருந்த பிரகாஷ்,”ஏதோ பொருள் விழுகிறது என்று நினைத்து அதை பிடிக்க முற்பட்டான்,ஆனால் விழுந்ததோ ஆனந்தி…,அவளுடைய  கையை பற்றினான்,அந்த பொருளை பிடிக்கின்ற போது தான் அவன் உணர்ந்தான் அது பெண் என்று,அவளை கீழே விழுந்து அடி ஏதும் படாமல் காப்பாற்றினான்,அவனுடைய கண்களில் கட்டிய  துணியை எடுத்து பாா்த்தான்,அது அவனுடைய ஆனந்தி…,அவளுக்கு முதல் உதவி செய்து,அவளை கண்விழிக்க வைத்தனர் “.
 போட்டி நடத்துனா்,”ஆனந்தியும், பிரகாஷும் இந்த போட்டியில் பங்கு பெற முடியாது என்று அறிவித்தாா்”.
போட்டி நடத்துனா் இதை சொல்லவும்,யோகாவும்,சிந்துவும்,ஆனந்திக்கு எதுவும் ஆபத்து வந்து விட்டாதா என்று நினைத்து ஒரே சமயம் இருவரும்,”ஆனந்தி…..ஆனந்தி….,” என்று அழைத்தனர்.
இவர்களின் குரல் கேட்டதும்,எங்கே அவர்களும் கண்களில் கட்டிய  துணியை எடுத்து விடுவாா்களோ என்று நினைத்து,”யோகா..
,சிந்து…. எனக்கு ஒன்றும் இல்லை ,நான் சும்மா தான் விழுந்தேன் ,நீங்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும்,”என்றாள்.
அவர்களின் வகுப்பு மாணவர்கள் எல்லாம்,”யோகா..,சிந்து…. ,”என்று கூறி கர ஒலி எழுப்பினா்.
போட்டி நடத்துனா் ,போட்டி ஆரம்பிக்க உள்ளதால்,”எல்லோரும் ரெடியாக இருக்கின்றீா்களா,”என்று கேட்டாா்.
எல்லோருடைய கைகளில் ஒரு பை கொடுக்கப்பட்டது.
“யாா் அதிகமாக பொருட்களை எடுக்கின்றாரோ அவர் தான் வெற்றி பெற்றவா்,”என்றாா்.
சிந்து,” தன் அதிவேக ஓட்டத்தால்,முதல் இரண்டு பொருட்களை எடுத்து கைகளில் இருந்த பையில் போட்டுக் கொண்டாள்,அடுத்து அங்கு இருந்த பொருளை எடுக்கும் போது,அதே பொருளை  ராமும் கையில் எடுத்தான்,இருவரும் ஓரே பொருளை வைத்து கொண்டு சண்டை போட ஆரம்பித்தனா்.
 ராம்,”நான் தான் இந்த பொருளை எடுத்தேன் அதனால் இந்த பொருள் எனக்கு தான் ,” என்றான்.
சிந்துவோ,”அசுக்கு.. புசுக்கு…நான் தான் இந்த பொருளை எடுத்தேன் அதனால் இந்த பொருள் எனக்கு தான் ,” என்றாள்.இதை பாா்த்து கொண்டு இருந்த மாணவர்களுக்கு சிரிப்பாக வந்தது.
நடுவருக்கு எனப் பதில் சொல்வது என்றே தெரியவில்லை, இவர்களின் குரல் உயரவும்,நடுவா்,” இந்த  பொருள் போட்டியில் வைக்காத பொருள்,”என்றாா்.
மாணவர்களின் ஒருத்தன்,”போட்டியில் வைக்காத பொருளுக்கே இந்த சண்டைனா…,வைத்த பொருளுக்கு  என்ன சண்டை போடுவாா்கள்,”என்றான்.
இவர்கள் இப்படியாக இருக்க,யோகா பொருளை எடுக்க செல்ல,ஷான் அவள் பின்னாடி சென்றான்,சூரியகாந்தி மலர் எப்படி சூரியனை நோக்கி திரும்புவதற்கு ஃபோட்டோட்ராபிசம் ஒரு காரணம்மாக இருப்பது போல,  ஷான்,யோகாவின் பின்னாடி திரிவதற்கு முக்கிய மான காரணம்,யோகாவின் அந்த நீண்ட முடி….யோகா அன்று புடவை கட்டிக் கொண்டு வந்ததால்,அவளின் அம்மா அவளின் நீண்ட முடிக்கு சில மலர்களாலும்,முத்துகளாலும் அலங்காரம் செய்துவிட்டாா்” .அந்த அலங்காரம் அவளை ஒரு தேவதை பெண்ணாகக் காட்டியது.
சும்மாவே ஷான் அவளின் நீண்ட முடியை பாா்த்து மெய் மறப்பான்,இப்பொழுது சொல்லையா வேண்டும்.அவளின் நீண்ட முடி,யோகா பொருளை எடுக்கும் போது ஷானின் கையில் மாட்டிக் கொண்டது.
அதை பிடித்த உடன்,ஷான் தன்னை மறந்து அவளை இழுத்துவிட்டான்,”அவள் அம்மா… என்று கூறவும்”,நான் தான் விழிஷா…பயபடாதே “என்றான்.
இதை கேட்டதும் அவள் தன்னை அறியாமல் ஒரு நிமிடம் அமைதி ஆனாள்,அவள் பின்னாடி சென்று கொண்டே  பாடினான் ஷான் .
“உன் தலை முடி உதிர்வதை கூட
தாங்க முடியாது அன்பே..
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினை கூட
ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே
மேகம் கண்ணீரை சிந்துதே
உன்னை நான் சேரவே
பூமி என்னோடு சுற்றுதோ,”
இந்த பாட்டை கேட்டதும்,யோகாவிற்கு சிரிப்பாக வந்தது.சிரித்து கொண்டே அவள் அடுத்த பொருளை எடுக்க கீழே குனிய ,பக்கத்தில் இருந்த பொருள் தட்டி அவள் ஷானின் மேல் விழுந்தாள்,அவனுடைய கை யோகாவின்  இடுப்பில் பதிந்தது,அவனின் கண்களும் துணியால் கட்டி கொண்டதால்,அவனால் உடனே சமாளிக்க முடியவில்லை ,ஆனால் சிறிது நிமிடத்தில் அவன் சமாளித்து அவளை நிறுத்தினான்.
இன்னும் சில நிமிடங்களே இருப்பதால்,விரைவாக செயல் பட்டனா்.
ஷான் அதிகமான பொருட்களை எடுத்து  வெற்றி பெற்றான்.
கல்லூரி முதல்வர் தங்க மோதிரத்தை ஷானுக்கு பரிசளித்தாா்.
கலந்து கொண்ட அனைவருக்கும்,பரிசுகளை வழங்கி  ,புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தாா்.
எல்லோரும் மிகுந்த உற்ச்சாகத்தோடு வீடு கிளம்பினாா்கள்.
யோகாவின் அம்மாவுக்கு ஏதோ தப்பாக நடக்க போவதாக உணர்ந்தாா்.
“யோகா ,….
கல்லூரியில் புத்தாண்டு கொண்டாட்டம் எப்படி இருந்தது” என்று கேட்டாா்.
“அம்மா எல்லாம் நல்லப்படியாக நடந்தது, போட்டியில் சேர்ந்த அனைவருக்கும் பரிசு கொடுத்தாா்கள்,எனக்கும் கிடைத்தது.”என்றாள்.
“அப்படியா,சரி பாட்டியிடம் காட்டி ஆசிர்வாதத்தை வாங்கி கொள் ,”என்றார்.
” சரி மா..”,என்றாள்.
“பாட்டி…பாட்டி… “என்று அழைத்தாள்.
“என்ன யோகா,நான் இங்கு இருக்கிறேன்”,என்றார்.
” பாட்டி என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க ,”என்றாள்.
“என்ன யோகா….திருமணம் புரிய போகின்ற பெண் போல் இருக்கிறாய், ஆலங்காரம் எல்லாம் வெகு அழகா இருக்கிறது உனக்கு,”என்றார் பாட்டி.
“பாட்டி…..,” என்று கூறி வெட்கப்பட்டாள்.
“இதை பாா்த்த பாட்டி,உனக்கு விரைவில் திருமணம் நடக்கும்,” என்று வாழ்த்தினாா்.
அவர் அவ்வாறு வாழ்த்த, விதியோ அப்படியே ஆகட்டும் என்று வாழ்த்தியது.
ஷான் வீடு திரும்பும் போது,அவனுடை அப்பா கைப்பேசியில் அழைத்தாா்.
ஷான்,”என்ன அப்பா ,இப்பொழுது அழைக்கின்றீா்,”என்றான்.
ஷானின் அப்பா,”ஷான் நான் சொல்வதை கேட்டு பயப்படாதே ,பாட்டிக்கு உடம்பு முடியவில்லை,நீ  உடனே கிளம்பி வா,”என்றாா்.
இதை கேட்டதும் ,” அவன் நான் உடனே வருகிறேன்,”என்றான்.
ஷான் அங்கே சூரத் செல்லவும், இங்கே யோகாவின் மனதில் தனக்கு ஏதோ தவறு நடக்க போவதாக உணர்ந்தாள்.
ஆனால் விதியோ இருவரையும் பாா்த்து சிரித்தது.
அங்கே ஷான் வந்த உடன்,தன் பாட்டியை பாா்க்க மருத்துவமனைக்கு சென்றான்.
அங்கு “அவர் மிகவும் சீரியஸாக இருப்பதாக “மருத்துவர் சொல்ல ,அவன் மிகவும் மனம் உடைந்து போனான்.
“பாட்டியை பாா்க்க மருத்துவரிடம் அனுமதி கேட்டான்”.ஷான்.
மருத்துவர்,”அனுமதி அளித்தாா்”.
பாட்டியை பாா்க்க உள்ளே நுழையும் போது ஷானின் கால்கள் ஆட்டம் கண்டது ,அவர் ஷானை எதிர்பாா்த்த வண்ணம் இருந்தாா்.ஷான் வந்த உடன்.”ஷா…ஷா…. இங்கே வா..”என்றாா்.
” பா…ட்டி , பா…ட்டி”என்றான்.
“ஷா…ஷா….  நீ  திருமணத்துக்கு ஒத்துக் கொள்ள வேண்டும் ,இது எனது கடைசி விருப்பம் ,”என்றாா்.
” பாட்டி நான் திருமணத்துக்கு ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் ,நான் விரும்பும் பெண்ணை தான் நான் திருமணம் செய்வேன்,இதற்கு நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் ,”என்றான்.
“சரி ,நீ விரும்பும் பெண் நம் இனத்தவர் தானே ,”என்றாா்.
“பாட்டி …..அது…..அவள் ஒரு இந்து பெண்,பெயர் யோகவிழி,அவள் இன்னும் படிப்பை முடிக்கவில்லை,”என்றான்.
“ஷா….  நான் ஒத்து கொண்டாலும்,உன் அம்மாவும் அப்பாவும்,இதற்கு ஒத்து கொள்ள வேண்டுமே,”என்றாா்.
“பாட்டி நீங்கள் ஒத்து கொண்டால் போதும்,அவர்களை நான் ஒத்து கொள்ள வைப்பேன்,”என்றான்.
“ஷா….  நான்  ரெம்ப நாளைக்கு இருக்க மாட்டேன், எனது உடம்பு எனக்கே ஒத்து உழைக்க மாட்டங்கிறது,அதனால் ,திருமணத்தை உடனே வை ,”என்றாா்.
ஷான்,”பாட்டி கூறியவற்றை,தன் தந்தையிடமும்,தாயிடமும் தெரிவித்தான்”.
ஷானின் அப்பா,”திருமணம் என்பது உலக வாழ்க்கையில் இன்பம் பெறவும், தவறுகள் செய்யாமல் இருக்கவும், வாரிசுகளை உருவாக்கவும் இறைவன் செய்த ஏற்பாடாகும்,”என்றாா்.
ஷான் தன் தந்தையிடம்,”நான் காதல் திருமணம் செய்ய விரும்புகிறேன்,”என்றான்.
அதற்கு ஷானின் அம்மா,”நீ விரும்பும் பெண்,எந்த நாட்டை சோ்ந்த மன்னா் குடும்பம் ,”என்று கேட்டாா்.
ஷான்  தன் அம்மாவை பாா்த்து,”அம்மா…இரு மனங்கள் இணைவதே திருமணம். ஒவ்வொருவரையும் ஒழுக்கக்கேட்டில் இருந்து பாதுகாக்கும் கேடயமாக திருமணம் திகழ்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உருவாகும் அன்பையும் பாசத்தையும் அதிகரிக்கவும், வலுப்படுத்தவும் ஏற்ற வழி திருமணம், நான் கல்லூரியில் படிக்கும் யோகவிழி என்ற பெண்ணை விரும்புகிறேன் “என்றான்.
“நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன்”என்றாா் அம்மா.
ஷான்  தன் அம்மாவை பாா்த்து,”அம்மா..நீங்கள் சம்மதித்தாலும்….,சம்மதிக்காவிட்டாலும்…..,இந்த திருமணம் நடைபெறும்,”என்றான்.
“அதையும் பாா்க்கலாம்”.என்றாா்.
ஷான்  தன் அப்பாவை பாா்த்து,” நடந்த விசயத்தை சொல்ல”.
அவர் ,”நான் சொல்லுவதற்கு இங்கே ஒன்றும் இல்லை,உன் இஷ்டம் போல் செய் ,”என்றாா்.
ஷான்,”ஓகே..,நான் திருமண வேலை அனைத்தும்,நான் பாா்த்து கொள்கிறேன்,”என்றான்.
ஷான்,தன் நண்பர்களை தொலைபேசியில் அழைத்தான்,”அவர்களிடம்,இன்று நீங்கள் யோகாவை ,அவள் வீட்டில் போய் சந்தித்து,நான் கூற வேண்டிய விசயத்தை நீங்கள் சொல்லுங்க ,” என்றான்.
பிரகாஷ்,”அப்படி என்ன விசயம்,”என்றான்.
ஷான்,”  இங்கே அரண்மனையில் நாளைக்கு எனக்கு திருமணம் ,நீங்கள் திருமணம்  என்று அவளிடம் கூறாமல்,எனக்கு விபத்து நடந்து விட்டதாக சொல்லுங்கள்,அவள் எந்த மருத்துவமனை என்று கேட்டாள் பக்கத்தில் இருக்கும் ஏதாவது மருத்துவமனையின் பெயரை சொல்லுங்கள்,அவள் வீட்டை விட்டு வந்ததும்,அவளை தூக்கிவிடுங்கள்,”என்றான்.
பிரகாஷ்,”இதில் எந்த மாற்றமும் இல்லை ,”என்றான்.
ஷான்,” நாளைக்கு காலையில் அவள், என் அருகில் இருக்க வேண்டும் அவ்வளவு தான்,”என்றான்.
பிரகாஷ்,”சரி ஷான் நான் பாா்த்துக் கொள்கிறேன்,”என்றான்.
ஷான்,”எந்த காரணத்திற்காகவும்,இந்த விசயம் அவள் பெற்றோருக்கு தெரிய கூடாது,”என்றான்.
பிரகாஷ்,”எல்லாம் முடிந்த பிறகு நான் கூறுகிறேன்,”என்றான்.
ஷான்,”ஓகே….பிரகாஷ்…,”என்று கூறி தொலைபேசியை வைத்தான்.
பிரகாஷ், ராமை அழைத்து,”ஷான் கூறியதை சொன்னான் “
ராம் பிரகாஷை பாா்த்து, “நாம் எப்படி இதை செய்வோம்” ,என்றான்.
பிரகாஷ்,”ஷான் என்னிடம் ஒரு ஐடியா சொன்னான்,ஆனால் அதை செயல் படுத்த முடியாது,”.என்றான்.
ராம்,”அப்படி என்ன ஐடியா வைத்து இருக்கிறாய்,”என்றான்.
பிரகாஷ்,”நான் செயல் படுத்துகிற 
ஐடியாவை பாா்த்து, ஷானே ஷாக்காக போகிறான்,”என்றான்.
ராம் ,”பாா்த்து டா…”என்றான்.
பிரகாஷ் ராமை பாா்த்து,,”ராம் நீ யோகா,மற்றும் ஆனந்தியின் தொலை பேசி நம்பரை வாங்கு”,என்றான்.
ராம் ,” இன்னும் சில நிமிடங்களிள் உன் கையில் அவர்கள் நம்பா் இருக்கும்,”என்றான்.
என்ன நடக்கும் என்பதை அடுத்த அத்தியாத்தில் பாா்ப்போம்…

Advertisement