Advertisement

மங்களம் “ஜெய்” என்று அழைக்க ஜெய் அவனைவரையும் பார்த்தவன் “இது வரை எங்க வாழ்க்கைய விமர்சனம் செஞ்சது போதும். அதனால தான் நான் அங்க எதுவும் பேசல.. நான் பேசி இருந்தா அது அவங்களுக்கு இன்னும் பேச  வாய்ப்பா தான் இருந்து இருக்கும்.  அதுவும் இல்லாம நாம போனது விசேசத்துக்கு  சண்டை போட இல்ல” என நிறுத்தினான்.
அவர்களுக்கு  புரிந்தது அவன் தங்களின் வாழ்க்கையை மற்றவர்கள் பேசுவதையோ, விவாதிப்பதையோ விரும்பவில்லை என்று அதோடு அன்னத்தையும் தான்.
 
வீராசாமி பெருமையாக மகனை பார்க்க… அவனோ அன்னத்தை தான் பார்த்து கொண்டு இருந்தான். அவளின் வார்த்தைக்காக தானே அவன் அங்கு அமைதியாக இருந்தது.  
ஜெய்யை பற்றி கேட்டால் அவர்கள் சொல்வது “அவன் வாய் பேசும் முன் கை பேசும்” என்று இன்று நடந்ததற்கு?? அதிலும் ஜெய் அமைதியாக இருக்கிறான் என்றால் அது அன்னதின் வேலை தான் என்று.
 
அன்னத்தின் முகத்தில் இருந்த சந்தேசமே சொன்னது ஜெய்யின் பேச்சு எந்த அளவிற்கு உண்மை என்று. அவள் தான் சொன்னாள். ஆனால் எங்கும் அவளின் பெயர் இல்லை. அனைத்திலும் கணவன் தான் இதோ இப்போது அவளை தாங்கி பேசியதும் அவன் தான். 
அன்னம் அனைவருக்கும் சாப்பாடு எடுத்து வைக்க “மாமா” என்று வந்தனர் ரம்யாவின் வீட்டு மனிதர்கள் உடன் ரம்யாவும். 
அனைவரும் சாப்பிட அமர்ந்து இருந்ததால் அன்னம் தான் வந்தாள் “வாங்க பெரியப்பா… வாங்க பெரியம்மா” என்று அனைவரையும் அழைத்தவள் ரம்யாவையும் ராகவ்யும் கூட விடவில்லை. அனைவரையும் வீட்டு பெண்ணாய் அழைத்தவள் அனைவருக்கும் குடிக்க தண்ணீர் தர, சாந்தி, வள்ளி தவிர மற்ற அனைவருக்கும் தான் எப்படி அந்த சூழ்நிலையை எப்படி கடந்து வர…?? என தெரியமல் அமர்ந்து இருந்தனர். 
ராகவிற்கு மட்டும் தட்டில் சிறிது இனிப்புடன் தந்தவள் “அவன் வேண்டாம்” என்றதற்கு “கல்யாண  மாப்பிள்ளை முதல் முறையா  வீட்டுக்கு வந்து இருக்கீங்க இனிப்பு சாப்பிடுங்க”  என்றதும் அவனுக்கு முகத்தை எங்கு மறைப்பது என்று தெரியவில்லை… 
ரம்யாவின் திருமணத்திற்கு முன்பும் வந்து இருக்கிறான் சாந்தி, வள்ளியுடன். ஆனால் ரம்யா திருமணம் முடிந்து அவன் வரும் போது எல்லாம் ரம்யாவிற்கு மட்டுமே வாங்கி வருவான். ரூபிணி இருந்தால் அதில் ஏதாவது ஒன்றை அவளுக்கு தருவான். அதற்கும்  ரம்யாவிடம் முறைப்பு மட்டுமே கிடைக்கும் “என்னோடத அவளுக்கு எப்படி நீ தரலாம்??” என்று. 
ஒரு முறை கூட… அன்னம் என்று ஒருத்தி அந்த வீட்டில் இருக்கிறாள் வாங்கும் போது அவளுக்கும் ஏதாவது வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது இல்லை அவனுக்கு.           
ஏன்… தன் திருமணத்திற்கும் சத்தியன், ரம்யா, வீராசாமி, மங்களம், ரூபிணி என அனைவருக்கும் உடை எடுத்தவன் கூட அன்னத்திற்கு எடுக்கவில்லை. இன்று காலையில் தன் வீட்டு மனிதர்கள் செய்தது எத்தனை பெரிய அவமானம். தாங்கள் மதிக்காத ஒருத்தி,  இப்போது அதே பெண் தன்னை வாய் நிறைய “அண்ணா” என்று அழைத்து மரியாதை செய்வதை எப்படி ஏற்று கொள்ள?? இதற்கு பதில் அவள்  சண்டை போட்டோ இல்லை “உள்ளே வராதே” என்று கூட சொல்லி இருந்து இருக்கலாம். இப்படி எதுவும் நடக்காதது போல் வந்தவர்களை உபசரித்தது அவ்வளவு வெட்கமாகி விட்டது ராகவ்விற்கு. 
ராகவ் அமைதியாக இருக்க வந்தவர்களை அன்னம் “சாப்பிட சொல்ல” ரம்யாவின் அம்மா தான் ரம்யாவை பார்த்து திட்டிக் கொண்டு இருந்தார். “வந்தவங்கள அவ எப்படி பாக்குறா… நீ இன்னும் சின்ன பொண்ணு போல என் கிட்ட உக்காந்து இருக்குற… போ போய் உன் புருசன் சாப்பிடுறாரு சாப்பாடு வை” என்று 
“உன் சித்தி பேச்சை கேட்டுகிட்டு ஆடுன அப்பறம் என்ன செய்வேன்னு தெரியாது??” என்றதும் வேகமாக டைனிங்க ஹாலுக்கு சென்று விட்டாள் ரம்யா.
அனைவரும் சாப்பிட்டு வர, எப்படி பேச்சை ஆரம்பிக்க?? என்று ரம்யாவின் அப்பா தயங்கி அமர்ந்து இருந்தார்.
“என்ன சம்பந்தி  குடும்பமா வந்து இருக்கீங்க??” வீராசாமி பேச்சை ஆரம்பித்தார் வந்தவர்களை “வா” என்று அழைக்க வில்லை கேள்வி மட்டுமே இருந்தது.
“அது ஏதே தெரியாம…” என்று அவர் வார்த்தைகளை மென்று விழுங்க “அது எப்படி மாமா அத்தை தெரியாம பேசி இருப்பாங்க??” வந்தான் சத்தியன். 
வீராசாமி சத்தியனை பார்க்க, அவன் ஜெய்யை முறைத்தான். “இப்ப நீ பேசுவியா… இல்லையா..??” என்று
மூர்த்தி “மாப்பிள்ளை உங்க அத்தைய பத்தி உங்களுக்கு தெரியாதா…?? ஏதாவது வாய் துடுக்கா பேசிடுவா… ஆனா மனசுல ஒன்னும் இருக்காது… நீங்க அதை எல்லாம் மறந்து வரனும்” 
“எப்படி மாமா… நான் அங்க இல்லையின்னு தெரிஞ்துக்கு அப்பறமா வந்த நீங்க அத்தை அங்க பேசும் போதே தடுத்து இருக்கலாம்… இல்ல அங்கயே மன்னிப்பு கேட்டு இருக்கலாம்??” என்றதற்கு அவரிடம் பதில் இல்லை.
“உங்க வீட்டு விசேசத்துல நான் இல்லையின்னா உங்களுக்கு அவமானம். அதே எங்க வீட்டு பொண்ண சொன்ன நாங்க எதுவும் கேட்க கூடாது??” சத்தியன் கேட்க அனைவரும் தலை குனிந்து தான் இருக்க வேண்டியது ஆகியது. 
“உங்களுக்கு உங்க கவுரவம் முக்கியம் அப்படின்னா… எங்களுக்கு எங்க பொண்ணு  முக்கியம். அது அன்னமா இருந்தாலும்.. ரம்யாவா இருந்தாலும் ஒன்னு தான்” வீராசாமி
வீராசாமிக்கு சொந்தங்களிடம் எப்போதும் அனுசரிப்பு இருக்கும். பட்டென எதையும் பேசிவிட மாட்டார். நாளை அவர்கள் முகம் பார்க்கவேண்டும் என்று நினைப்பவர் இன்று அவரே “எங்கள் பெண்” என்னும் போது “என்ன சொல்ல??” அமைதியாக தான் இருந்தார்கள்.
அன்னத்துடன் ரம்யாவை சேர்த்து சொன்னதிலேயே அவர்களுக்கு நன்கு தெரிந்து விட்டது  அன்னம் தான் அவர்களுக்கு முக்கியம் என்று. எங்கும் அவர்கள் அவளை விட்டு விட மாட்டார்கள் என்பதையும் விட விட்டுதர மாட்டார்கள்  என்று .
அனைவரும் இப்போது ஜெய்யை பார்க்க அவன் “இது உங்கள் பிரச்சனை நீங்கள் தான் பேசி தீர்த்து கொள்ள வேண்டும்” என்ற ரீதியில் தான் அமர்ந்து இருந்தான். இதுவரை அவன் யாரிடமும் பேசவில்லை  அமைதியாக தான் இருந்தான். 
“ஜெய்  நீயாவது சொல்லுப்பா??” என்று ரம்யாவின் அம்மா கேட்க “அத்தை அப்பா சொன்னது தான்… ரம்யாவோட கௌரவம் எங்கயும் பாதிக்காது சத்தியன் வருவான்” என்றதும் 
“சத்தியன் வருவான்” என்று ஜெய் சொன்னதும் சத்தியன் தான் ஜெய்யை முறைத்து பார்த்தான். 
“அப்ப மத்தவங்க” என்று கேட்டார் மூர்த்தி. ஜெய் “அதை அவங்க தான் முடிவு செய்யனும்” என்றதும் யாருக்கும் புரியவில்லை… 
பிரதாப் தான் கேட்டார் “என்ன ஜெய்.. சத்தியன் வருவான்னா… மாமா, அக்கா, நீ” என்று நிறுத்தினார். அப்போதும் “அன்னம் தனிதான்” என்றார். அன்னத்தை அப்போதே சொல்லி இருந்தால் அதோடு முடிந்து இருக்குமோ??? 
“அவங்களுக்கு அழைப்பு இருந்தா அவங்க வருவாங்க இதில நான் சொல்ல என்ன இருக்கு” 
பிரதாப்… வீராசாமி முகம் பார்க்க “உங்க மாப்பிள்ளைய முறையா நீங்க அழைச்சு இருக்கீங்க அவன் வருவான் மாப்பிள்ளை”  என்று நிறுத்தியவரை 
“என்ன மாமா.. உங்களுக்கும் தான நாங்க அழைப்பு கொடுத்து இருக்கோம் அப்ப நீங்க இல்லயின்னா சபையில எல்லாம் என்ன பேசுவாங்க??”
“சத்தியன  யாரும் பேசிட கூடதுன்னு தான் நாங்க இன்னிக்கு வந்தோம். இனி நாங்க அங்க இல்லயின்னாலும் யாரும் கேட்க போறது  இல்லை..  ஜெய்யும் என் மகன் தான்.  நான் பசங்களுக்கு சொத்தை மட்டும் தான் பிரிச்சு குடுத்து இருக்கேன் இன்னும் எங்க வீட்டுல ஒரே அடுப்பு தான்” என்றார் வீராசாமி.
பிரதாப் அண்ணன்கள் முகம் பார்க்க ரம்யாவின் அம்மா தான் “ஜெய்க்கு இன்னும் நாம அழைப்பு கொடுக்கலை…” என்றதும் தான் ஜெய்யும் வீராசாமியும் பேசியது புரிந்தது. 
மூர்த்தி வேகமாக சென்று பழம் தட்டுடன் வந்தவர் ஜெய்யிடம் முறையாக அழைப்பை விடுக்க ஜெய் அதை தொடக்கூட இல்லை.  சத்தியன் தான் “மாமா அவன் ஜெய்தேவ் வீராசாமி இல்லை திரு.அன்னலட்சுமி ஜெய்தேவ்” என்று 
அனைவரும் சத்தியனை ஆஆஆவென பார்க்க “எனக்கு அப்பாக்கு கொடுக்கும் போது ரம்யாவ அம்மாவ வைச்சு தான கொடுத்தீங்க….  முறை எதுவே அதை செய்ங்க” என்றான்  
இப்போது அன்னத்தை அழைப்பது யார்?? இதுவரை அவளிடம் முகம் கொடுத்து கூட பேசியது இல்லை. இப்போது அன்னத்தை அழைக்காமல் யாரும் வர மாட்டார்கள் என்ற நிலை அதன் பிறகு ரம்யா??? 
 
ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க ஜெய்யோ “என் மனைவிக்கு உண்டான மரியாதை இல்லை என்றால் நீ யாராக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை” என்று  இருந்தான்.
மகளின் வாழ்க்கையா… இவர்களின் வரட்டு பிடிவாதமா என்று பார்க்க ரம்யாவின் வாழ்க்கை தான் என்று முடிவாக, ரம்யாவின் அம்மா தான் தட்டினை வாங்கினார் மூர்த்தியிடம் இருந்து. 
“அன்னம் வாம்மா..” என்று அழைக்க, வந்தவள் ஜெய்யுடன் நிற்க “ஜெய் அன்னம் ராகவ்க்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு புருசனும் பொண்டாட்டியும் முன்ன நின்னு இந்த கல்யாணத்தை நல்ல படியா முடிச்சி கொடுக்கனும்” என்றதும் ஜெய் அன்னத்தை தட்டை வாங்க சொன்னான் 
யாரிடமும் சண்டை இல்லை, கேள்வி கேட்கவில்லை,  விளக்க உரை இல்லை ஆனால்…… இவள் தான் எனக்கு முக்கியம் என்பதை அனைவருக்கும் உணர்த்திவிட்டான் ஜெய்….
“புரியாத மந்திரம் சொல்லி
உறவுகள்… நண்பர்கள் சபை நிறைத்து 
லட்சம் கோடி செலவு செய்தால் மட்டும் 
திருமணம் ஆகி விடுமா??? 
இவள் (இவன்) என்னில் சரி பாதி
என்று ஊருக்கு மனதில் இருந்து சொன்னால் தான்
அது திரு(மனம்)மணம் !!!!!                   
தாளத்தில் சேராத தனி பாடல்……………………….

Advertisement