Advertisement

                              ஓம்  நமச்சிவாய
தாளம் 8
ஜெய் ஆயின்மென்டை தடவ அவள் புடவையை விலக்க “ஐயோ…!!” என்று கத்திவிட்டால் அன்னம்.
“ஏய்… எதுக்கு கத்துற??” 
அவன் கை மீது கை வைத்தவள் “புடவை…” என்று இழுக்க, “ஆமா, புடவை தான். அதுக்கு என்ன?? புடவை மேலயா போட முடியும்” என்றவன் கை மீண்டும் புடவையை தூக்க “நானே போட்டுக்குறேன் நீங்க குடுங்க” என்று அன்னம் கை நீட்டினாள். 
“ஏன் நான் போட்டா நீ கரைஞ்சுடுவியா..” ஜெய் கேட்க
“இல்ல கூச்சமா இருக்கு…” என்றவள் மனம் மட்டும் ‘கரைஞ்சுடுமா!!!’ அவளையே கேட்டது. 
“வலிக்கு அப்ப இருந்து அனத்திட்டு இப்ப இவளே போட்டுப்பாளாம். சும்மா வாய் பேசாம காலை நீட்டு” என்றவன் வாகாக அமர்ந்து மருந்தினை தடவ, அவனை தான் நெளிந்தவறோ பார்த்துக்கொண்டு இருந்தாள் அன்னம். அவன் மனமோ ‘கரைஞ்சா நல்லா தான் இருக்கும்’ என்றவாறே கைகள் மருந்து தடவும் வேலையை செய்தது. 
இவன் துறையில் உடை என்பது கணக்கில் எடுத்து கொள்ளபடாத ஒன்று. ஜெய்க்கு அவர்களை அப்படியே பார்த்து பழக்கம் என்பதால் அன்னத்தின் புடவை மீது கை வைக்கும் போது தவறாய் எதுவும் தெரியவில்லை ஜெய்க்கு. மருந்து போடனும் அதனால் சற்றே புடவையை விலக்க வேண்டும் அவ்வளவே. 
அன்னத்திற்கோ அது எத்தனை பெரியது!! கணவனே ஆனாலும் உடை என்று வரும் போது அவனின் பரிசம் சொல்ல முடியாத உணர்வு… அவள் அதை வகைபடுத்தியது கூச்சத்தில்.  இப்போதுதான் சேர்ந்தார் போல் இரண்டு வார்த்தை வருகிறது இதில் அவன் தொடுகை!! 
இப்போது அவளின் நெளிவு அவனுக்கு சற்று சிரிப்பாக தான் இருந்தது. அவளின் கூச்சத்தை மாற்றவே பேச்சு கொடுத்தான் அவளிடம்.
“கடையில சொன்னியே என்ன அது??” என்றான் ஜெய். 
“கடையிலா… நான் என்ன சொன்னேன்?? நான் எதுவும் சொல்லியே..” கேட்டாள் அன்னம்.  
“இதுவரைக்கும் கடைக்கு போனதே இல்லைன்னு சொன்ன தான நீ…” 
“ஓஓ….. அதுவா… ஆமா இது வரைக்கும் இது போல நான் கடைக்கு போய் துணி எல்லாம் வாங்குனதே இல்லை…” 
“ஏன்  உங்க அப்ப அவ்வளவு ஸ்டிரிக்ட்டா??? வெளிய கூட பொண்ணுங்கள விடாம வீட்டுகுள்ளயே வைக்குற அளவுக்கு” 
“அப்படி எல்லாம் இல்லை… நான்னா எங்க அப்பாவுக்கு செல்லம் தான்” என்றவள் குரல் என் அப்பாவை பேசாதே என்றது. முதன் முதலாக செல்ல கோபம் அவளுக்கு அவன் மீது. ஜெய்க்கு புரிந்தது அன்னத்திற்கு புரியவில்லை. “ம் சரி மேல சொல்லு” ஜெய் எடுத்து கொடுக்க….
“அவரு நல்லா இருந்த வரை எங்கள கூட்டிட்டு போய் வாங்கி தருவாங்க. அவருக்கு உடம்பு சரியில்லாம போனதுக்கு அப்பறம் அம்மா எது தர்றாங்களோ அது தான் எங்களுக்கு” 
“ஏன் உங்க அப்பாவுக்கு என்ன ஆச்சு??” 
“தெரியல…. எனக்கு அப்ப ஆறு வயசு இருக்கும். ஒரு நாள் போலீஸ் ஸ்டேசன்ல இருந்து ஆள் வந்தாங்க உங்க வீட்டுக்கார்ருக்கு ஆக்ஸிடண்ட் அப்படின்னு. போய் பாத்தா ஹாஸ்பிட்டல்ல உடம்பு முழுக்க ரத்தம் வர போட்டு வச்சு இருந்தாங்க” 
“என்னன்னு கேட்டதுக்கு,  லாரியில அடிபட போன  ஒரு குட்டி பொண்ண காப்பத்த போய் இவருக்கு அடிபட்டுச்சுன்னாங்க. அந்த  பொண்ண காப்பாத்துன்னதுக்கு அவங்களே அப்பாவோட வைத்திய செலவை ஏத்துகுறதா சொன்னாங்க அம்மா அதுக்கு ஒத்துக்கல. இருந்த வீடு சொத்து எல்லாம் வித்து தான் ஹாஸ்பிட்டல்ல பாத்தாங்க முடியல…” 
“முதுகுல அடிபட்டதாதால டிஸ்க் கொலாப்ரேசன் அப்படின்னு எங்களுக்கு புரியாத எதையோ சொன்னாங்க. எங்களுக்கு புரிஞ்சுது அவரால எழுந்துக்க முடியாது படுத்த படுக்கையாதான் இருக்கனும் அப்படின்றது. முயற்சி செஞ்சா கொஞ்ச நாள்ல சரி ஆகலாம் அப்படின்னு சொன்னாங்க” 
“அம்மாவும் எவ்வளவே முயற்சி பண்ணி பாத்தாங்க முடியல. இப்ப கொஞ்ச நாளா தான் நடக்க ஆரம்பிச்சு இருக்காரு” 
“சரி இங்க வந்துட்ட இல்லை போக வேண்டியது தான??”   
“எப்படி போக??” என்றாள் கேள்வியாக அவனை பார்த்து.
ஜெய் அவள் முகம் பார்க்க “அண்ணா சாப்பாடு” என்று ரூபிணியின் குரல் கேட்டது வெளியில் இருந்து. 
ஜெய் சென்று கதவினை திறந்தவன் அவளின் கைகளில் இருந்ததை வாங்கி “வா உள்ள” என்றான். “வலி எப்படி இருக்கு அண்ணி?? என்றவள் அன்னத்திற்கும் ஜெய்க்கும் தட்டில் இட்லியை வைக்க, “நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க நான் கீழ போய் சாப்பிடுறேன்” என்றவன் இருவருக்கும் வைத்து தர… 
அன்னம் தான் அவனை பரிதாபமாக பார்த்தாள் “என்ன??” அவன் கேட்க “வாந்தி வரும்” என்றாள் அன்னம். 
“இப்ப மணி ஏழு தான் ஆச்சு இப்ப சாப்பிட்ட ஜீரணம் ஆகிடும் வாந்தி வராது” என்று சொல்லியும் அவன் முகம் பார்த்து இருக்க “வாந்தி வந்தா திரும்ப சாப்பிடலாம்” என்றவன் பிடிவாதம் “நீ சாப்பிட்டு தான் ஆக வேண்டும்” என்று இருந்தது.
ஜெய்க்கு பயந்து இரண்டு இட்லிகளை உள்ளே தள்ள அதற்கு மேல் அவளால் முடியவில்லை. மாத்திரை போட இது போதும் நினைத்தவன் “போதும் குடு” என்று கை கழுவ ஃபிங்கர் பவுல், துண்டை தந்தவன் சற்று நேரம் அவளுக்கு தெந்தரவு ஏதாவது இருக்கிறதா என்று தான் பார்த்து இருந்தான்.
ரூபியும் இவர்களை பார்த்து கொண்டே இரவு உணவை முடித்தவள், “அண்ணா டிரஸ் சூப்பர். அண்ணி நாளைக்கு நீங்க எந்த புடவை கட்டுறீங்க??” என ரூபி நாளைக்கு போடுவதற்கு உடைகளை தேட,  “நான் வரலை ரூபி நீங்க போயிட்டு வாங்க” என்றாள் அன்னம் தலைகுனிந்து. 
 
அண்ணன் தங்கை இருவரும் அன்னத்தை பார்த்தனர். ஜெய் எதற்கு?? என்று ரூபிணி சங்கடமாக.  ரூபிணி தான் சொன்னால் “அண்ணா வர்றான். யார் என்ன சொல்லு வாங்கன்னு  பாக்கலாம்…” என்றவள் சத்தியன் திருமணத்தில் ரம்யாவின் பாட்டி, அன்னத்திடம் “புருசன் கூட இல்லாதவ எல்லாம் என் பேத்தி கல்யாணத்துல எதுவும் செய்யகூடாது” என்று பேச, அதில் இருந்து அன்னம் ரம்யாவின் முன் செல்வதை கூட குறைத்து கொண்டாள் என்று…
ரூபிணி ஜெய்யிடம் சொல்லி முடிக்க, தன் செய்த செயலின் வீரியம் என்ன என்பதை உணர ஆரம்பித்தான்.  “அப்பா, அம்மாக்கு தெரியுமா.??”  “அந்த கிழவி அண்ணிய மட்டும் கூப்பிட்டு தனியா சொல்லுச்சி நான் ஸ்டோர் ரூம்புல இருந்ததால எனக்கு மட்டும் தெரியும். அண்ணி தான் யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னு  சொல்லிட்டாங்க நான் என்ன செய்ய??” 
“அப்பாக்கு மட்டும் தெரிஞ்சு இருந்தா கல்யாணமே நின்னு இருந்து இருக்கும். இந்த அத்தைங்க தொல்லை இல்லாம இருந்து இருக்கலாம்” என்று 
“ஏன் அவங்க என்ன சொன்னாங்க?? என்று அன்னத்தை பார்க்க அவள் “சொல்ல வேண்டாம்” என்று சைகை செய்து கொண்டு இருந்தாள் ரூபிணியிடம். 
ஜெய் “அன்னம்” என்று அதட்ட, “அவங்க சொல்லுறதுல என்ன தப்பு இருக்கு… அவங்க பொண்ணு நல்லா இருக்கனும் அப்படின்னு தான ஆசை படுவாங்க.. எல்லாத்துக்கும் நான் போய் நின்னா அவங்களுக்கு கஷ்டமா தான இருக்கும்” 
“வேலை விசயமா வெளியில இருக்குறவன் பொண்டாட்டி எல்லாம்  எங்கையும் போறது இல்லையா??” ஜெய் 
“அது பொண்டாட்டி கூட வாழ்ந்துட்டு போறவங்களுக்கு… என்ன மாதிரி இல்லை” இதை அவள் அவனுக்காக சொல்ல வில்லை. அவன் கேட்ட கேள்விக்கு பதிலாக  சொல்ல அது ஜெய்யை சாடுவதாக  அமைந்துவிட்டது.
“அப்ப நான் உன் கூட வாழ்ந்துட்டு உன்னைய விட்டுட்டு போயிட்டா நீ போனா ஒத்துப்பாங்களா??!!” என்ற ஜெய்யின் கேள்வியில்  ரூபிணிக்கு தான் ‘தேவையில்லாமல் பேசிவிட்டோமா??’ என்று இருந்தது.
ஜெய்யிடம் கத்தி பேசும் பழக்கம் எல்லாம் இல்லை. ஆனால் அவன் பேசும் தெனியிலேயே எதிரில் இருப்பவர் தவறே செய்ய வில்லை என்றாலும் ‘செஞ்சு இருப்போமோ!!’ என்று எண்ண தோன்றும் . 
அன்னதிற்கும் இப்போது அப்படி தான் இருந்தது. அவள் அவனையே பார்த்து இருக்க, ஜெய் “ரூபி போய் எனக்கு சாப்பிட எடுத்து வை நான் வர்றேன்” என்றவனுக்கு தலையை ஆட்டியவள் அன்னத்தை பார்த்தபடியே சென்றாள். அன்னத்திற்கு  அவள் விட்ட வார்த்தைகளுக்கு  எப்படி அவனிடம் பேச?? என்ற சிந்தனை 
‘அவனுக்கு கோபம் வந்தால்  யோசிக்க கூட மாட்டான் வார்த்தையாகட்டும், வாழ்க்கையாகட்டும். அதற்கு தங்களின் வாழ்க்கையே உதாரணமாக இருக்கும் போது இப்போது தான் பேசி வைத்த வார்த்தைகள் அவனை எந்த அளவுக்கு காய படுத்தி இருக்கும் என்று தெரியவில்லையே??’ 
அன்னம் ஜெய்யை பார்த்தும் பார்க்காமல் இருக்க, ஜெய் ஜன்னல் அருகில் சென்றவன் ஆத்திரத்தில் வின்ட்சைன்னை தட்டிவிட அது அதீத சத்தில் ஒலி எழுப்ப சட்டென அதனை நிறுத்தினான். 

Advertisement