Advertisement

                        
மங்களத்திற்கு இந்த ஊர் அத்தனை பிடித்தம் இல்லை. இருந்தாலும் அன்னதிற்காக ஜெய் சொல்லுவதை எல்லாம் கேட்டு அமைதியாக இருந்தார். இந்த ஆறு மாத காலமாக அவனின் அலம்பல் சொல்ல முடியாது. அன்னத்தை சாப்பிட வைத்தே அவளுக்கு உணவின் மீதான ஆசையே வெறுத்து போனது.
“டேய் இப்படியா அவளுக்கு சாப்பிட கொடுப்ப…  ஜீரணம் ஆகாதுடா…அவளுக்கும் அது நல்லதில்ல..” என்றாலும் கேட்க மாட்டான். அவளுக்கு உடம்பு வருவதை  பார்த்த மங்களமே பயந்து தான் போனார். 
“ம்மா சும்மா இரு… டெலிவரி ஆன பிறகு டயட்ல இருக்கலாம்… உடம்ப குறைச்சுக்கலாம்… இப்ப அவள விடுங்க…” என்று  ஆரம்பித்து விடுவான் டயர்ட் சார்ட்டுடன். 
சென்ற முறை செக்அப்பிற்கு சென்ற போது டாக்டர் சொன்ன “இவ்வளவு வெயிட் டெலிவரி அப்ப கஷ்டம்” என்ற பின் தான் சற்று அமைதியானான். அதனால் தான் மங்களம் இந்தனை வீம்பாக நிற்பது. தேவகியும் “அண்ணி மாப்பிள்ளை தான் இவ்வளவு சொல்லுறார்ல விடுங்க நான் இங்க இருந்து பாத்துக்குறேன்” என்றார். 
“தேவகி நீ சும்மா இரு… புள்ள பிறந்த பின்னாடி இவன் சின்ன குழந்தைக்கு தர்றது போல ஐஸ்கிரீம் சாக்லேட் வாங்கிட்டு வந்து அதுக்கும் சாட்ட நீட்டுவான்… நாம இவள அங்க கூட்டிட்டு போறது தான் சரி” என்று முடித்து விட்டார். 
இவர்கள் இங்கு வாக்குவாத்தில் இருக்க, அவர்களின் அறைக்கு அன்னம் போக, அங்கு தலையணையில் முகம் புதைய படுத்து இருந்தான் ஜெய். 
அவனின் முதுகில் அன்னம் சாய்ந்து கொள்ள, அவளுக்கு தோதாக உடலை திருப்பி கொடுத்தவன் எதுவும் பேசாமல் இருக்க “என்னங்க.. எது இப்ப இவ்வளவு கோபம்??” 
“எதுக்கு உனக்கு தெரியாதா… உன்ன நான் பார்த்துகிறேன்னு செல்லுறேன்… நீ எனக்கு சப்போர்ட் செய்யாமா அம்மாவ பாத்துகிட்டு இருக்குற… அப்ப நீ ஊருக்கு போக ரெடியாகிட்டியா…??” 
“நிஜமா சொல்லுங்க நீங்க அதுக்காக தான் ஊருக்கு போக வேண்டான்னு சொல்லுறீங்களா…??” அவன் முகம் பார்த்து கேட்டாள் அன்னம். 
அவனின் காரணம், அத்தைகள் தான் என்பது அவளுக்கும் நன்கு தெரியும்  வீட்டினருக்கும் தெரியும்.
மூர்த்தியும், பிரதாப்பும் வாங்கிய பணத்திற்கு வீராசாமி கொடுத்த ஜாமீனை  ரத்து செய்ய பேங்குக்கு அன்றே கவியை வைத்து லெட்டர் அனுப்பிவிட்டான் ஜெய். பேங்க் மேனேஜர் உள்ளூர்காரராக இருக்க, அவரை பார்க்க தான் அன்று காலையிலேயே கவியை அழைத்து கொண்டு சென்றது. அவர் சொன்ன படியே லெட்டர் தர,  பேங்க் அவர்களுக்கு ஜப்தி நேட்டீஸ் அனுப்பி விட்டது. 
நோட்டீஸ் வரவும் சாந்தியும், வள்ளியும் வீட்டிற்கு வர, வீராசாமி “இதில் தன்னால் எதுவும் முடியாது சொத்துக்கள் அனைத்து பிரிக்க பட்டு விட்டதால் அவன் பங்குக்கு அவனிடம் தான் கேட்க வேண்டும்” என்றிட அதற்கு அவன் இங்கு இருந்தால் தானே அவனிடம் பேச. அவர்கள் எத்தனை முயற்சி செய்தும் அவனிடம் பேச முடியவில்லை. 
சத்தியனிடம் கேட்டதற்கு “அது என் பங்குல இல்லை அத்தை என்னால எதுவும் செய்ய முடியாது..” என்று விட்டான். ரம்யாவிடம் “நீயாவது சொல்லு” என்று கேட்டதற்கும் “நீங்க பேசுனதுக்கு செஞ்சதுக்கு எல்லாம்  ஜெய் மாமா இதோட விட்டாருன்னு நினைச்சுக்குங்க… எனக்கு தெரிஞ்சு நீங்க அன்னம் அப்படின்னு சொன்னாகூட நீங்க அவ்வளவு தான்” என்று மிரட்டிவிட்டே சென்றாள். 
ராகவிடம் கேட்டதற்கும் “அப்பா எனக்கு தெரியாம வாங்குன பணத்தையே நான் லோன் போட்டு தான் கொடுத்து இருக்குறேன்… நீங்க உங்க பிஸ்னஸ் சர்க்குள்ள பாருங்க சித்தப்பா…” என்று முடித்து விட்டான்.
கடைசியில்  அவர்களையே பணம் கட்ட வைத்தான் ஜெய். அதில் இருந்து இருவீட்டுக்குமான உறவு ரம்யாவின் பிறந்த வீடு என்றதோடு நின்று கொண்டது. 
ரம்யாவை அன்று ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு அனுப்பும் போதே சத்தியனிடம் சொல்லி தான் அனுப்பினான். “இது எனக்கும் அவங்களுக்குமானது… இதுல வீணா ரம்யாவை இழுந்து விடாத… அவ அவங்களுக்கு ஒரு சீட்டு மட்டும் தான். அவங்கள வைச்சு உன் வாழ்கைய வீணாக்காத… எந்த நிலையிலும் அவள வீட்டை விட்டு போ சொல்ல கூடாது… அதை விட அவமானம் உனக்கு வேற இல்லை… எதுன்னாலும் ரெண்டு பேரும் யோசிச்சு முடி செய்ங்க..” என்றவன் வார்த்தை “சரி” என்று பட அதில் இருந்து ரம்யாவும் அவர்களிடம் இருந்து ஒதுங்கி நின்று கொண்டாள். 
இப்போது அங்கு சென்றால் அவர்கள் ரம்யாவினை வைத்து வருவார்கள். தன் மனைவியையோ, குழந்தையையோ அவர்கள் பார்ப்பது அவனுக்கு பிடித்தம் இல்லை என்பதால் தான் அன்னம் ஊருக்கு போவதை வேண்டாம் என்று நின்று இருந்தான் ஜெய். 
“எத்தனை நாள் இப்படி இருக்க முடியும்…. என்ன தான் இங்க நம்ம தொழில் இருந்தாலும் அது தான நமக்கு நிரந்தரம். அத்தையும், மாமாவும் எத்தனை நாள் இங்கயும் அங்கயும் ஓடுவாங்க… அதுவும் இப்ப ரூபிக்கும் பாக்கனும்… நமக்காக இந்த ஆறு மாசம் அவங்க பட்டதே போதும் அங்க போகலாங்க…” என்றவளை அவனும் யோசனையுடன் தான் பார்த்து இருந்தான். 
“என்னங்க நான் சொன்னது தப்பா…” 
“எனக்கு கொஞ்சம் யோசிக்க நேரம் கொடு..” என்றவனை முறைத்தவள் “யோசிக்குறது எல்லாம் இல்லை.. நாம ஊருக்கு போறோம்” என்றவள் தரை அதிர நடந்து போக… சிரித்தபடி “அதெல்லாம் முடியாது..” என்றவனுக்கு “அப்ப நீங்க மட்டும் இங்க இருங்க..” என திரும்பாமல் சொல்ல இரண்டே எட்டில் அவளை பிடித்தவன்., 
“அன்னிக்கு ஹாஸ்பிட்டல டாக்டர்கிட்ட என்ன செய்துன்னு சொல்ல தெரியாத புள்ளபூச்சி எல்லாம் என்னைய இப்ப மிரட்டுது… எங்க என்னைய விட்டு போ பாக்கலாம்”  என்றவன் அவளை இதமாய் அணைத்து நின்று “போய் தான் ஆகனுமா…” என்றான். “ஆம்” என அன்னம் தலையை மட்டும் அசைக்க “என்னிக்குன்னு கேளு டிக்கெட் புக் செய்றேன்…” அவள் உச்சியில் முத்தம் பதித்து. 
ஜெய் சொன்னதும் திரும்பியவள் “உண்மையா..” முகம் சிரிக்க கேட்க அவளை தான் கண் எடுக்காமல் பார்த்திருந்தான் ஜெய்.
“சொல்லுங்க… உண்மையா…’ அன்னம் சிணுங்க “இங்க ஒன்னு குடு உண்மையா.. இல்லையான்னு… சொல்லுறேன்” என்றவன் அவளிடம் கேட்டதை வாங்க குனிந்தான். இப்பெழுது எல்லாம் அவன் முகம் அவளுக்கு எட்டுவது இல்லை. அவர்களின் அறை கதவினை தட்டும் சத்தம் கேட்டது “யார் அந்த கரடி..’ என பார்க்க மங்களம் தான் வந்தார்.
“என்னம்மா…??” ஜெய் 
“வளைகாப்பை  இங்கயே முடிச்சுடலாம் ஜெய்…”  என்றவர் மகன் மனம் புரிந்தவராய்  பேச, “சரிம்மா” என்றான். 
பச்சை பட்டில் மரகத சிலையாய் அன்னம் அமர்ந்து இருக்க, அவளின் அருகில் பட்டு வேட்டி சட்டையில் ஜெய். வீட்டு ஆட்கள் மட்டும் இருக்க எளிமையாகவே வளைகாப்பை செய்தனர் யாருக்கும் சொல்லவில்லை. 
சாந்தியிடமும், வள்ளிடமும் பேசுவது இல்லை என்றாலும் உள்ளூரில் விசேசத்தை வைத்து கொண்டு அவர்களை அழைக்காமல் செய்தால் மற்றவர்கள் கேட்கதானே செய்வார்கள். அதனால் இங்கேயே வளைகாப்பை முடித்து விட்டால் யாருக்கும் பதில் சொல்லும் அவசியமும் இல்லை. அதனால் புது பிரச்சனை வேண்டாம் என்று விட்டனர் ஒரு மனதாக.  
காலையில் கவியும், வீராசாமியும் வந்து விட, வீடே அதிர அதிர ரூபியும், அன்புவும் செய்தவை அனைத்தும் அமீரின் கை கேமிரா பதிந்து கொண்டது.
“அமர்ண்ணா… நீங்களும் வாங்க” என்று அவனையும் சேர்த்து கொண்டு ஆடி தீர்த்தனர்.
அன்னத்திற்கு வளையல் போட்டு முடிக்க, அடுத்து ரம்யாவை மனையில் அமர வைக்க ராகவும், விசாகாவும் வந்து விட்டனர்.  ரம்யாவிற்கு அவர்களை பார்த்தும் அதிர்ச்சி தான். பயத்துடன் அவள் சத்தியனை பார்க்க… அன்னம் தான் அவளின் கைகளை பிடித்து கொண்டாள். “நான் தான் அம்மாவுக்கு சொல்லி அண்ணாவை வர சொன்னோன்” என்றதும் ரம்யா நிஜத்தில் அழுதுவிட்டாள்.
“ஏய்… என்ன இது… அழுகாத ரம்யா எல்லாரும் உன்னத்தான் பாக்குறாங்க…” என அவளை சமாதானம் செய்ய “தேங்ஸ்க்கா…” என்றாள் மனதில் இருந்து ரம்யா.
ரம்யாவிற்கும் வளையல் போட, அடுத்து விசாகவிற்கும் அதே சடங்கு செய்யபட்டது. “எதுக்கு பெரியம்மா…??” விசாக மங்களத்திடம் கேட்க, “அடுத்து நீங்க எல்லாம் நல்ல விசயம் சொல்லனும் அதுக்கு தான்” என்றவர் மூவரையும் அமர வைத்து கலவை சாதம் வைக்க அன்னதிற்கு தான் ஒரு மாதிரி இருந்தது. 
“என்ன அனு என்ன செய்து??” அவள் முகம் பார்த்தே ஜெய் கேட்க “சாப்பிட முடியலிங்க இந்தனை வகைய பார்த்தும் வயிறு நிறைஞ்ச மாதிரி இருக்கு”என்றாள் அன்னம். 
“சரி சாஸ்திரத்துக்கு ஒரு வாய் மட்டும் சாப்பிடு மிச்சத்தை நான் சாப்பிடுறேன்” என்றவன் ஒரு வாய் மட்டும் அவளுக்கு வைத்து மற்றதை அவனே சாப்பிட்டான். இருவரையும் பார்த்திருந்த அனைவருக்கும் “எப்படி இருக்கும் இவர்களின் வாழ்க்கை என்பது போய் இப்படி தான் இருக்க வேண்டும்” என்ற நினைப்பு வர மங்களம் இருவரையும் நிற்க வைத்து திருஷ்டி எடுத்தார். 
வளைகாப்பு நடந்த மூன்றாம் நாள் அனைவரும் ஊருக்கு வர அன்றே வந்து விட்டனர் சாந்தியும் வள்ளியும். பேசவில்லை என்றாலும் அவர்களின் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை. ‘சில நபர்களை திருத்த முடியாது அவர்கள்  கண்டுகொள்ளமல் இருப்பதே நமக்கு நல்லது’ என்ற மனம் தான் ஜெய்க்கும் அன்னத்திற்கும். 
இப்போழுது எல்லாம் நாட்கள் மெதுவாகதான் நகர்ந்தது அன்னதிற்கு. நாள் நெருங்க  நெருங்க ஏதே பயம் மனதில்.  ஜெய் வேண்டும் எப்போதும் என்று ஆனது. 
ஜெய்யும் அதை புரிந்தவன் அவன் வேலைகளை அமர் அமீரிடம் கொடுத்தவன் அன்னத்துடனே இருந்து கொண்டான். 
காலையில் எழும் போதே இடுப்பில் சிறு வலி எடுக்க, ஜெய்யை எழுப்பி விட்டாள் அன்னம். அவள் முகம் பார்த்தே வலியை தெரிந்து கொண்டவன் மங்களத்தை எழுப்ப,  சூடுநீர் வைத்தவர் அவளின் இடுப்பிற்கு ஊற்றி கசாயம் தர வலி அதிகம் ஆக அப்போதே மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட்டனர்.
லேபர் வார்டில் அன்னதின் பக்கத்தில் ஜெய்.  இங்கு வந்ததுமே செக் அப் வந்த அன்றே டாக்டரிடம் தன் கோரிக்கையை வைத்து விட்டான். “அன்னத்தின் பிரசவ சமயம் தான் உடன் இருக்க வேண்டும்” என்று. இந்த காரணத்திற்காக தான் அவன் மும்பையில் டெலிவரி செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. டாக்டர் முதலில் தயங்கியவர் “அப்ப வேற பொண்ணுங்களும் இருப்பாங்க ஜெய். அவங்களுக்கு அது அன்னீசியா இருக்கும்” என்றவறை பார்த்தவன், “என் மனைவி கூட நான் இருக்கனும் அவ்வளவு தான். வேணுன்னா அவங்க புருசன்கள அவங்க கூட வந்து நிக்க சொல்லுங்க. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்றவன் பதிலில்  சிரித்து விட்டார் அந்த மருத்துவர்.
அன்னத்துடன் லேபர் வார்டில் நிற்கும் ஜெய்யை தான் அவளும்  பார்த்து இருந்தாள். இப்போது அவள் மனதில் பயம் இல்லை. அன்னம் ஜெய் முகம் பார்த்தவள் கண்ணில் துளி கண்ணீர் ஆனந்ததில். ஜெய் கண்ணீரை துடைத்து அவள் நெற்றியில் இதழ் ஒற்றியவன் “இதுக்கு தான் அங்கயே பாக்கலாம் சென்னது மத்தவங்களுக்கு பயந்து இல்லை” என்றவன் அவள் முடி ஒதுக்கி அவளின் வலிகளை இவன் கை கொடுத்து தாங்க… சிறிது நேரத்தில் “ங்குவா… என்ற சத்ததில் வந்தான்  அன்னலட்சுமி ஜெய்தேவின் மகன்.
தாளத்தில் சேராமல் தனித்து இருந்தவ(ன்)ள் இன்று முழுமையான இசை கோர்வையாய் தங்களின் உலகத்தில் சஞ்சரிக்க அவர்களின் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாய்  இருக்க  அந்த தெய்வங்கள் ஆசிர்வதிக்க நாமும் வாழ்த்துவேம். 

Advertisement