Advertisement

ஓம் நமச்சிவாயா
தாளம் 15
அன்னம் அவர்களின் அறையின் உள்ளே வர குளியல் அறையில் சத்தம் கேட்டது. கட்டிலில் இருந்த போர்வையை மாற்றியவள் அவன் தூங்க ஏசியை அதிகபடுத்தினாள். ஜெய் குளியல் முடித்து வந்தவன் அப்போது தான் அறையினை பார்த்தான். அவனுக்காவே தயர் செய்ய பட்டது போல் இருந்தது அந்த அறை. 
எதுவும் பேசாமல் படுத்து கொண்டவனை  பார்த்த படி நின்று இருந்தாள் அன்னம். 
அவள் இன்னும் படுக்கைக்கு வராமல் இருக்கவும் ஜெய் திரும்பி பார்க்க, அன்னம் அவனை தான் பார்த்து நின்று இருந்தாள். 
ஜெய், அன்னத்தை பார்த்தவன் “நீ செஞ்சது சரியா.. தப்பான்னு… இங்க நான் பேச விரும்பலை… எதுன்னாலும் நம்ம வீட்டுல போய் பேசிக்கலாம்… இங்க பேசுனா அது எல்லாரையும் பாதிக்கும்… ரெண்டு பேரும் இப்ப தான் வந்து இருக்குறோம் நம்மல பாத்து சந்தோசமா இருக்குறாங்க அதை கெடுக்க வேண்டான்னு நினைக்குறேன்” என்றவன் பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்தான்.  
அவன் பேசிய பேச்சுக்கு அன்னத்திடம் ஒரு மூச்சு சத்தம் மட்டுமே… அதுவும் கூட மெதுவாக தான். ஜெய்க்கு தான் அவளை என்ன செய்ய…!! என புரியவில்லை. ‘இத்தனை பேசுறேனே என்ன… ஏது?? ஒரு பேச்சு பேசுறாளா… இல்ல சண்டை போட தான் செய்றாளா’ நினைத்தவன் திரும்பி படுத்துகொண்டான். 
அன்னம் விளக்கை அணைக்க ‘தான் பேசியதற்கு தன்னை சமாதானம் செய்யவாவது அணைப்பாள்’ என்று ஜெய் எதிர் பார்க்க, வந்தவள் சத்தம் செய்யாமல் படுத்துக்கொண்டாள். 
ஜெய்க்குதான் என்னவோ போல் ஆனது.  ‘கார்ல அவகிட்ட தான சொன்னேன்…  அவ இல்லாம இருக்க முடியாதுன்னு…  நான் சொன்னதுக்கு அப்பறமும் என் பக்கத்துல வரலையின்னா…. அப்ப நான் கோபமா இருந்தாலும் இவளுக்கு பரவாயில்லையா??? பேச தான் இல்ல பக்கத்துலயாவது வரலாம் இல்லையா…’ என்று அவளுக்கும் அவனுக்குமான தூரத்தை கணக்கிட அது போதுமானதாக இல்லை என்றாலும் இப்போதைய கோபத்திற்கு போதுமானதாக இருந்தது. 
அவனே அவளை அணைத்து இருக்கலாம் தான் ஏனோ அவள் வந்து அணைக்க மனம் ஏங்கியது. 
‘என்கிட்ட சொல்லாம வீட்ட விட்டு வந்தது இவ நான் தப்பு செஞ்ச மாதிரி பேசாம இருக்கா… நான் தான் காலைல இருந்து பேசிக்கிட்டு இருக்கேன்’ என அவனுக்கு அவனே காரணத்தை நினைத்தவன், கோபத்தில் போர்வையை எடுத்து கீழே விரித்தான். அந்த சத்ததில் அன்னம் திரும்பியவள் “என்ன செய்றீங்க??”  என்றாள் பதறி போய்.
ஜெய் அவளை பார்த்தவன் எதுவும் பேசாமல் கீழே படுத்துக்கொள்ள… அன்னம் ஜெய் பக்கத்தில் வந்தவள் “உங்களுக்கு கீழ படுத்தா தூக்கம் வராது… நீங்க மேல படுங்க… நான் பக்கத்துல இருக்குறது சிரம்மா இருந்தா நான் கீழ படுத்துக்குறேன்” 
‘பக்கத்துல படுத்தா சிரமமா!! பேசுற இவ வாய கடிச்சு வச்சா என்ன??’ சிறு பிள்ளைகள் கடித்து வைப்பதை போல் யேசித்தவன்,  பேசாமல் முகத்தை போர்வையால் மூட, அவன் அருகில் அமர்ந்தவள் “ஏங்க சொல்லுறேன்ல மேல வந்து படுங்க நான் இங்க படுத்துக்குறேன்” மீண்டும் அதையே சொல்ல,  அன்னம் சொன்னதும் ஜெய் போர்வையை விலக்கிய வேகத்தில்  இரண்டு அடி பின்னால் போக நெற்றியை கட்டிலின் காலில் முட்டிக்கொண்டாள்.
“ஸ்ஸ்…” அன்னம் சொல்ல “என்ன ஆச்சு??” அனு அவள் நெற்றியை தடவ “இல்ல விடுங்க… ஒன்னும் இல்ல…” என அவன் கைகளை விலக்க “ஏன்?? என் கை  படக்கூடாதா…!!!” என்று கண்கள் சுருக்கி அன்னத்தின் முகம் பார்க்க அன்னதிற்கு தான் ‘என்ன  திரும்பவும் முதல்ல இருந்தா!!’ என்று இருந்தது.   
‘காலையில்  இருந்து பேச்சுக்கள் அடை மழைதான். அவனின் பேச்சு இப்போது தான் முடிந்தான் என்று நினைத்தால் மீண்டும் ஆரம்பித்ததில் வந்து நிற்கிறான். இதற்கு பேசாமல் அங்கு வீட்டிலேயே இருந்து இருக்கலாம்… அவங்கள கூட சமாளிச்சுடலாம் இவரை என்ன செய்ய??’  என்று தான் சிந்தித்து இருந்தாள்.
ஜெய் பேசியதில் கட்டிலில் மோதிய வலி கூட மறந்து விட்டது… ஆனால் மோதிய இடம் லேசாக வீங்கி விட்டது.  
ஜெய்யின் பேச்சுக்கு அன்னம் பதில் சொல்லாமல் அவனையே பார்த்து இருக்க “நீ இப்ப பேசி தான் ஆகனும்” என்று அவளையே பார்த்து இருந்தான் சட்டமாக… அனைத்தும்  முரண் தான் அவனிடம் “பேசவேண்டாம்” என்றதும் அவனே இப்போது “பேசினால் தான் அடுத்து” என்பதும் அவனே.
சிறிது நேரம் பார்த்தவள் அவன் இடம் விட்டு அசைவதாய் தெரியாததால் “ஏங்க வீம்பு செய்றீங்க… எழுந்து மேல படுங்க பிளீஸ்” என்றாள் மெலிந்த குரலில்.  “நான் கேட்டதுக்கு பதில் சொல்லுறதா இருந்தா மட்டும் பேசு இல்லையா… போ அந்த பக்கம் மனுசன கோபடுத்தாம…!!”  
அன்னம் ஜெய்யை நெருங்கி அமர “என்ன??” என பார்த்தான். அன்னம் தலையை “இல்லை” என்னும் விதமாக அசைக்க “பாட்டி காலையில பேசுனதும் எனக்கும் புரியலை… ஏதோ கோபத்து பேசுறதா தான் நினைச்சேன். ஆனா… அவங்க சொன்ன மயக்கிட்டேன் வார்த்தைய தான் என்னல ஏத்துக்க முடியலை…” அன்னம் நிறுத்த,
“அவங்க சொன்ன… நீ பதில் சொல்ல வேண்டியது தான… என் புருசன் நான் மயக்குறேன்னு… அதுக்காக நீ வீட்ட விட்டு வருவியா… அது தான் உன் இடம்னு எதுக்குடி உனக்கு புரியாம போச்சு…” அவள் வீட்டை விட்டு வந்த வலி அவன் வார்த்தைகளில். 
ஜெய் பேச அன்னம் அவனை பார்த்தவள் ‘நான் பேசுற வரைக்கும் பொறுமையா கேட்டுக்கனும் அப்பறம் பதில் சொல்லனும்… இப்படி இடையில பேசுனா  நான் எப்படி பேச…” என்றதும் “சரி சொல்லு” என்றான் முகத்தை திருப்பி.
உர்ரென்று வைத்திருத்த முகத்தை அவள் புறமாக திருப்பியவள் கலைந்து இருந்த முடியை கோத, அவள் கைகளை பிடித்து கொண்டான் ஜெய். “என்ன??” அன்னம் கேட்க “பேச்ச விடாம பேசி முடி”  ஜெய் சொல்ல., 
“அதுவும் இல்லாம…..  நான் உங்களுக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி வரவச்சு மில்லை என் பேருக்கு எழுதிட்டேன்னு  சொன்னதும் எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலை…. உங்களை மாமா கட்டாய படுத்தி தான் வர வைச்சாங்களா… அவங்க கட்டாயத்துக்காக தான் என்கூட வாழ்றீங்களா…” என்னும் போதே அன்னத்தின் கண்ணில் இருந்து கண்ணீர் வர, அவளை காற்று கூட புக முடியாத படி இறுக்கமாக அணைத்து கொண்டான் ஜெய். 
காலையில் இருந்து அவள் அவனிடம் இதை தான் எதிர்பார்த்தாலோ…!!! அந்த ஒற்றை அணைப்பு அனைத்தையும் மறக்க செய்ய அவன் மடி மீது விழுந்தவள் சத்தம் வரமல் குழுங்க ஆரம்பித்தாள்.
ஜெய்க்கும் ‘அவள் இப்படி யோசிப்பாள்’ என்று நினைக்க வில்லை. ‘நான் அவளுடன் அடுத்தவர் கட்டாயத்தில் வாழுவதாகவா நடந்து இருக்கிறேன்…’ நினைத்தவன் அதை அப்படியே அன்னத்திடம் கேட்டும் விட்டான்.                                  
“அனு என்னைய பார்த்தா அடுத்தவங்க கட்டாய படுத்தி உன் கூட வாழ்றது போலவா இருக்கு…??” 
அன்னம் ஜெய் முகம் பார்க்க “சொல்லுடி… அடுத்தவங்க கட்டாயத்தால புருசன் பொண்டாட்டிக்கிட்ட சேரமுடியுமா…” கேட்ட ஜெய்யின் குரலில் அத்தனை இயலாமை.  அவள் தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்று….
அன்னம் “இல்லை” என தலை அசைக்க, “அப்ப நீ எப்படி இப்படி என்னைய நினைச்ச??” என்ற அவனின் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. 
“எந்த இடத்துல அனு உன் நம்பிக்கைய நான் உடைச்சேன்… நாம சேர்ந்து இருந்த நாட்களில்ல எப்பவாவது அடுத்தவங்க கட்டாயத்தை நீ பார்த்து இருக்குறியா… இல்ல நான் அப்படி நடந்து இருக்கேனா…. உன் கழுத்துல தாலி கட்டும் போது கூட என்னைய யாரும் கட்டாய படுத்தல மேடையில நின்னு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லி இருந்தா, யாரால என்ன செஞ்சு இருக்க முடியும்??” 
அன்னம் சடக்கென நிமிர்ந்து பார்க்க “உன்ன பிடிச்சதால தான்டி தாலி கட்டுனேன்… உன்னை விட்டு போனது தப்பு தான்… அப்பா மேல இருந்த கோபத்தை உன் மேல காட்டிட்டேன்…. அதுக்கு தண்டனைய நீ வேற எப்படி கொடுத்து இருந்தாலும் ஒத்துக்கிட்டு இருப்பேன்… இப்படி என்னைய…”  என்னும் போதோ அவன் குரல் உள்ளே போக, அவன் பேச்சை நிறுத்த அவளுக்கு வேறு வழி இல்லாத்தால் அவளின் இதழால் அவன் பேச்சை நிறுத்தினாள் அன்னம். 
வெகு நேர முத்த தண்டனை. இருவருமே பேசி வாய்க்கு தண்டணை கொடுக்க முடிவுறாத தண்டனை படலம் அது.  வெளியில் சத்தம் கேட்கவும் தான் இருவரும் உணர்வுக்கே வந்தனர். 
“யாரு??” ஜெய் கேட்க “கவி வந்திருப்பான்” என்றவள் வெளியே போக பின்னாலேயோ சென்றான் ஜெய். 
தேவகி கதவை திறக்க  கவி தான்  நின்று இருந்தான்… கவி உள்ளே வர ஜெய் “கவி எதுக்குடா நைட் டிராவல் செய்ற… தங்கிட்டு காலையில வர வேண்டியது தான…” என்ற படி அறையில் இருந்து வர, “மாமா… டிஸ்டர்ப் பண்ணிடேனா??? சாரி…” என்றான். 
அன்னம் அவனுக்கு குடிக்க காபி தர “இந்த நேரம் எதுக்கு காபி… ஏன் சாப்பிடலையா??” கேள்வியாக ஜெய். அவனை பார்த்தும் தெரிந்தது வேலைகளை முடித்து விட்டு அவசரமாக திரும்பி இருக்கிறான் என்று.  “அனு அவனுக்கு சாப்பிட ஏதாவது குடு”  ஜெய் சொன்னதும், கையில் எடுத்த காபியை கீழே வைத்தவன் “அக்கா சாதம் இருந்தா வை” என்று சாப்பிட அமர்ந்தான். 
ஜெய்யும் அவன் பக்கத்தில் அமர “மாமா நீங்க போய் தூங்குங்க… நான் பாத்துக்கிறேன்” என்றவனை “நான் முடிச்சாச்சுடா.. உன் சாப்பாட்டுக்கு பங்குக்கு வர மாட்டேன்” என்றிட லேசான புன்னகை கவி முகத்தில்.  இன்னும் கொஞ்சம் அவன் தட்டில் ஜெய் சாதம் வைக்க “அன் டைம் மாமா… போதும்” என்றவன் சாப்பிட்டு முடிக்க, இவர்களை தான் பார்த்து கொண்டு தேவகியும் அன்னமும் நின்று இருந்தனர்.
விடியல் அன்று அனைவருக்கும் இனிமையாக தான் இருந்து. கவியிடம் பேசி முடித்து உறங்க போக இரவு நேரம் ஆனதால் காலையில் அன்னம் சற்று நேரம் கழித்து தான் கண் விழித்தாள். 
ஜெய் வழக்கம் போல் படுக்கையில் இல்லை. எழுந்தவள் குளித்து வெளியில் வர தேவகியும், மங்களமும் சமையல் கட்டில் பேசிய படி காலைக்காக தயார் செய்து  கொண்டு இருக்க, ஜெய்யும், கவியும் அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தனர். 
“என்ன கவி தூங்கலையா??” அன்னம். 
“இல்லக்கா தூங்கிட்டு தான் இருந்தேன்… மாமா எழுந்த சத்தம் கேட்டுச்சா அது தான் முழிப்பு வந்துடுச்சு… அப்படியே அவர் கூட போயிட்டேன்” என்றவன் பேச்சு நம்பும் படி இல்லை. அன்னத்திற்கு நன்கு தெரியும் கவி எப்படி தூங்குவான் என்று. வேலை என்று இருந்தால் நேரம் பார்க்கமல் செய்பவன் வேலை முடிந்தது என்றால் தூங்கினால் ஒரு நாள் முழுதும் உறக்கத்தில் தான் இருப்பான். 

Advertisement