Advertisement

அன்னம் அவன் முகம் பார்த்து நிற்க “அக்கா… அது தான் மாமா சொல்லுறார்ல நீங்க கிளம்புங்க” என்றாள் அன்பு  
ஜெய் மணிக்கு ஃபோன் செய்தவன் “மணிண்ணா நீங்க வாங்க” என்று அழைத்தான். மணி வர கார் சாவியை வாங்கியவன் “நீங்க இங்க இருங்க ஏதாவது வேணுன்னா ஃபோன் செய்ங்க” என்றவன் அவர் சாப்பிட பணம் தர “வேணாம் தம்பி அம்மா எனக்கும்  கட்டி கொடுத்துட்டாங்க”  என்றார்  மணி. 
ஜெய் காரை ஓட்ட, அமைதியான  ஓட்டம் தான்  உண்மையில் அது.  “என் மேல  நம்பிக்கை இல்லையா அன்னம்??” என்றான் அந்த அமைதியை கலைக்கும்  விதமாக ஜெய்.
அன்னத்தின் கவனம் சாலையில் இருந்ததால் திடீரென்று அவன் பேசவும் அது புரியாமல் “யாரு கைய புடிச்சு இழுத்தா..??” என்பது போல “என்ன நம்பிக்கை இல்லையா…!!” என்றாள்.  
ஜெய் திரும்பி அவளை முறைத்தவன் யாரும் இல்லாத அந்த சாலையில் வண்டியை நிறுத்தி பார்க்கிங் லைட்டை எரிய விட்டான். 
அது பெரிய சாலையும் இல்லாது வீதியையும்  மெயின் ரோட்டை இணைக்கும்படி இணைப்பு சாலையாக இருந்தது. அந்த சாலையில் சற்று தூரத்தில் டீக்கடையில் ஆட்கள் நட மாட்டமும் இருக்க கூப்பிடும் தொலைவுதான்.  மிக சத்தமா பேசினால் தான் கேட்க்கும். அதனால் அன்னத்திடம் பேச தோதாக வண்டியை அங்கு நிறுத்தினான் ஜெய்.
‘தாங்கள் கிளம்பியதும் வீராசாமி வீட்டிற்கு சொல்லி இருப்பார். அதனால் தேவகியோ இல்லை மங்களமோ தங்களுக்காக காத்திருப்பார்கள். அவர்கள் முன் எதுவும் பேச முடியாது என்பதால் இங்கயே பேசி விடலாம்’ என்று நினைத்து தான் வண்டியை நிறுத்தினான். 
அன்னம் “இங்கு எதற்கு??” என்பதை போல் இறங்கி நின்று சுற்றி பார்க்க, “நாம சுவிஸ்க்கு வந்து இருக்கோம்..!! பாரு எப்படி பனி விழுதுன்னு…. இங்க வந்து நின்னு நல்லா  பாரு..!!” என்றான் நக்கலாக. அவன் சொன்னதும் அன்னத்தின் முகம் அப்படியே விழுந்து விட்டது. எதுவும் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டாள்.
ஜெய்க்கு அப்படியே போய் எங்காவது முட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. கோபத்தில் என்ன செய்ய?? என தெரியமல் தரையை ஓங்கி உதைத்தவன் “அன்னம் என்னைய பாரு??” என்றான். 
அப்போது தான் அவனின் அழைப்பை கவனித்தாள் ‘அனு… எப்ப இருந்து அன்னம் ஆச்சு!!’ நினைக்கவும் கண்ணில் இருந்து நீர் வந்து விட்டது.
“ஏய்… எதுக்குடி இப்ப கண்ணுல தண்ணி… அழுதா கொன்னுடுவேன்…” என்றதும் அவசரமாக கண்களை துடைத்து கொண்டாள். 
‘அவளிடம் அதிகம் பேசிவிட்டோமா??’ என்ன நினைத்தவன் சிகரெட்டை எடுத்து பற்ற வைக்க  இமைக்காமல் பார்த்தாள் அவனை அன்னம்.!! 
“என்ன பாக்குற??” அவளின் பார்வைக்கு கேள்வி கேட்டவன் அவள் சிகரெட்டை பார்ப்பதை பார்த்து “தினமும் பிடிக்க மாட்டேன்… ரொம்ப டென்சன் ஆனா மட்டும் தான். இந்த ஒன்றை மாசமா இல்லை இன்னிக்கு தான்  நீ செஞ்ச வேலைக்கு இது வேணுன்னு தோனிச்சு… இன்னொன்னும் வேணும் அதை எடுத்தா நீ வேணுன்னு மனசு கேக்கும்…  இப்ப கிடைப்ப… திரும்ப நான் வரும் போது நீ இருப்பியா.. இல்லையான்னு… தெரியாம நான் தவிக்க முடியாது பாரு. அதுக்கு தான் இதோட நிறுத்திக்கிறேன்” என்றவன் சிகரெட்டின் கடைசி இழுவையை இழுத்து விட்டவன் அதை தூக்கி போட்டு மற்றொன்றை பற்ற வைத்தான். 
அவனை பார்க்க அய்யோ என்றானது அன்னத்திற்கு. அவன் சிகரெட் பிடிப்பதே இப்போது தான் அவளுக்கு தெரியும்… அதில் அவன் சொன்ன “இன்னொன்னும் எடுப்பேன்” என்றது தான் அவளின் இப்போதைய அதிர்ச்சிக்கு காரணம்.  
“நீ அன்னிக்கு  அமர் கிட்ட சொன்ன என் மேல இருந்த நம்பிக்கையில்ல தான் இங்க இருந்தன்னு… அது நீ வீட்டை விட்டு போகும் போது எங்கடி போச்சு” என்றான் ஆவேசமாக. ஜெயை சொன்னதிலேயே அவள் நின்று இருந்ததால்,  ஜெய் வந்த வேகத்தில் அன்னம் சற்று மிரண்டு  இரண்டு அடி பின்னால் வைக்க ஜெய் நிதானத்திற்கு வந்தான்.
“அவ்வளவு கேவலமாவா நான் நடந்து கிட்டேன்… எனக்கு புரியலை!! ஏன்டி நீ வீட்ட விட்டு போன??” என்றான் மீண்டும். அன்னத்திற்கு தான் எப்படியே ஆனது. அவள் நினைத்து வந்தது என்ன இவன் பேசுவது என்ன… 
அன்னம் அவனை பார்த்து இருக்கும் போதே மூன்றாவதையும் பற்ற வைக்க, சட்டென அதை பிடுங்கி எறிந்தாள். “ஏய்… எதுக்குடி அதை எறியுற… நீ தான் இல்ல அதாவது என்கிட்ட இருக்கட்டும்… உன்னைய பாத்தா என் புத்தி என் பேச்சு கேக்காதுன்னு தான நான் இத்தனா நாள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது… இப்ப திரும்ப ஒரு சொர்கத்துல இருந்துட்டு மறுபடியும் அதே தலை மறை வாழ்க்கை வாழனுமா…!!??” அன்னம் அவனை ஆச்சர்யமாக பார்க்க “அனு அப்படி பாக்காத இந்த பார்வைக்கு பயந்து தான் நான் ஓடினதே… நான் தப்பு செஞ்ச நிக்க வைச்சு கேளு… அடிக்க கூட செய் இப்படி என்னைய விட்டு போகத…. நிச்சயம் நீ இல்லாத இந்த வாழ்க்கை…. அத எப்படி உனக்கு நான் புரிய வைப்பேன்” என்றவன் அவளை அணைக்க போக இருக்கும் இடம் கருதி அமைதியாகியவன், மீண்டும் ஒன்றை பற்ற வைத்தவன் அதை உள் வரை இழுத்து விட்டான்.   
எத்தனை நேரமோ  அவர் அவர் சிந்தனையில் இருக்க மற்றொரு வண்டியின் ஹாரன் சத்ததில் தான் இருவரும் மீண்டனர்.  ஜெய் அன்னத்தை விட்டு விலகியவன் காரில் இருந்து தண்ணீரை எடுத்து முகம் கழுவ, காரில் அவனின் ஃபோன் ஒலித்தது. மங்களம் தான் அழைத்து இருந்தார். 
“ஜெய் எங்கப்பா இருக்கீங்க வர நேரம் ஆகுமா??” 
“இல்லம்மா… இன்னும் அஞ்சு நிமிசம் தான் வந்துடுவேம்” என்றவன் காரை எடுக்க அன்னம் எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டாள். மீண்டும் அமைதி அவர்களிடம். அவன் சொன்ன படி ஐந்து நிமிடத்தில் வந்து விட தேவகியும் மங்களமும் வாசலில் அமர்ந்து இருந்தனர். 
அவர்கள் இருப்பது மத்திய தர குடியிருப்பு. அதனால் இன்னும் வீதியின் மக்கள் உறக்கத்திற்கு செல்லவில்லை. இவர்களின் கார் வருவதை பார்த்தவர்கள் எட்டி “யார் இவங்க??” என பார்த்திருந்தனர். 
அன்னமும் ஜெய்யும் இறங்கி வர தேவகி தான் “ரெண்டு பேரும் இங்கயே நில்லுங்க” என்றவர் வேகமாக உள்ளே சென்றார். வீதியில் இருப்பவர்கள் இவர்களை பார்ப்பதை பார்த்தவன் “அம்மா என்னம்மா??” கேட்க, “இருடா தேவகி வரும்” என்று அமைதியானார். 
தேவகி சென்றவர் ஆரத்தி தட்டுடன் வர, ஜெய்யும் அன்னமும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து கொண்டனர் கேள்வியாக… 
தேவகி வந்தவர் இருவருக்கும் ஆலம் சுற்ற “என்ன அத்தை இது??” ஜெய். 
“கல்யாணத்துக்கு அப்பறம் இப்பதான் ரெண்டு பேரும் வர்றீங்க… அது தான் தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை..” என்று தயங்கி சொல்ல, மங்களமும் வேகமாக  “நானும் கூட மறந்துட்டேன் தேவகி…  நல்லது அப்படியே அந்த கால் மண்ணையும் கொஞ்சம் எடுத்து சுத்தி போடு” என்றார். மங்களம் சொன்ன படியே தேவகி செய்தவர்  இருவரையும் உள்ளே போக சொன்னார்.
ஜெய் உள்ளே வந்தவன் எங்கு போக?? என்று பார்க்க “அந்த ரூம்… நீங்க அங்க போங்க” என்றவள், அவனுக்கு பாலை சூடு செய்ய தேவகி வந்தார் “அன்னம் மாப்பிள்ளை சாப்பிட்டாரா.. இல்லை ஏதாவது செய்யவா??”  
“வேணாம்மா… அவர் சாப்பிட்டாரு நீங்க அத்தை சாப்பிட்டாச்சா??” 
“ம்ம்… நாங்க சாப்பிட்டோம்… உங்க அத்தை தான் ரெண்டு இட்லியோட நிறுத்திட்டாங்க பிடிக்கலையோ என்னமோ??” என்றார் பாவமாக.
தேவகியின் கவலையிலும் நியாயம் உண்டு. அவர்கள் வீடு இதுபோல் நான்கைந்து மடங்கு இருக்கும்.   இன்று தான் முதல் முறை இங்கு வந்து இருக்கிறார்கள் அந்த பயம் தான். இவர்கள் வீடு சிறியது என்றாலும் அத்தனை சுத்தமாக இருக்கும். மூன்று படுக்கை அறை ஹால் கிட்ச்சன் என்று அம்சமாக தான் இருக்கும். 
கவின் இப்போது தான் பதி லோன் போட்டு இதை வாங்கினான். தேவகியும் கேட்டார் “எதுக்குப்பா இப்ப வீடு??” என்று.
“அக்கா வந்தா நல்லா சௌகரியமா இருக்கனும்மா…  சின்னவளுக்கும் கல்யாணம் செஞ்சிட்டா நிறைய வேணும் தான…  இடம் வாங்கி கட்டலாம் தான் ஆனா…. அன்பு கல்யாணத்துக்கும் சேக்கனும். அதனால அது இப்ப முடியாது அதனால இப்ப இந்த வீட்டை வாங்கிக்கலாம். இன்னும் கொஞ்ச நாள் போன அப்பறம் புதுசா வீடு கட்டலாம்” என்று ஆறு மாத்திற்கு முன் தான் குடிவந்தனர்  இந்த வீட்டுக்கு. அன்னத்திற்காக வெறும் பால் மட்டும் தான் காய்ச்சினர். 
அன்னம் “கிரக பிரவேசம் செய்யலாம்” என்றதற்கும் “மாமா வந்துடட்டும் அப்பறம் கிராண்டா ஒரு நாள் செய்யலாம்” என்று விட்டான் கவி.
தேவகி அன்னம் முகம் பார்த்து நிற்க “அம்மா… அத்தைக்கு நைட்ல ரெண்டு இட்லி மட்டும் தான் கொடுக்கனும். கொஞ்சம் அதிகமா சாப்பிட்டாலும் நிறைய சிரம படுவாங்க. நான் உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன்” என்று சமாதானம் செய்தவள் அவறை அழைத்து கொண்டு வர மங்களம் ஹாலில் அமர்ந்து டீவியில் எதையோ முனைப்பாக பார்த்து கொண்டு இருந்தார். 
அன்னம் அவருக்கு பாலை தர அவளை பார்த்தவர் “இங்க பாரு… இந்த சீரியல்ல அந்த மருமக எவ்வளவு வினையமா இருக்கான்னு.. நீயும் இருக்குற!! எல்லாத்துக்கும் தலைய ஆட்டிக்கிட்டு… இனி இந்த சீரியல எல்லாம் பாத்து கொஞ்சம் புத்திய படி… யாருகிட்ட எப்படி நடந்துக்கனும் அப்படின்னு… வேலைய முடிச்சு வந்தா அப்படியே தூங்க போயிடுறது… எனக்கு பின்ன எப்படி நீ சமாளிப்பையே தெரியல போ!!” என்றவரை தேவகி அதிசமயாய் பார்த்து இருந்தார். 
அன்னம் “சரிங்கத்தை இனி பாக்குறேன்” என்றவளை “இல்ல… இல்ல… இனி என் கூட உக்காந்து பாரு அப்ப தான் எனக்கு தெரியும்” என்றவர் “போ அவனுக்கு கொடு” என்றவர் “தேவகி நீ ஏன் நிக்குற… வா… வந்து பாரு” என்றவர் தேவகியையும் தன்னுடன் இருத்தி கொண்டார்…..

Advertisement