Advertisement

மங்களம் அவடம் பேசிய படி இருந்தாலும் அவளின் கவனம் அங்கு இல்லை. கண்கள் மூடிய படி இருந்தாளும் அதில் ஏதோ தேடுவதை போல கண்மணி உருண்ட படி இருந்தது.
அவனின் சத்ததில் அன்னம் கண் திறந்ததும், அவன் அவளை பார்த்தும்… அவள் முகத்தில் தெரிந்த ஏக்கம் உடனே அது மறைந்து போனது  அவனை ஏதோ செய்ய.. “அம்மா ரூம் புக் பண்ணி இருக்குறேன் நீங்க எல்லாம் அங்க போங்க…” என்றவன், சத்தியனை தேவகியை அழைத்து வர அனுப்பி இவர்களை ரூம்புக்கு அனுப்ப, 
“அத்தை நான் இங்கயே இருக்குறேன், நீங்க அன்புவை கூட்டிக்கிட்டு போங்க” என்றவளை, மங்களம் “வேண்டாம்… காலைல இருந்து இங்க தான் இருக்க கொஞ்ச நேரம் உள்ள வா..” என்று அழைத்து சென்று விட்டார். அன்னம் போவதை தான் பார்த்து இருந்தான் ஜெய். அவள் நடையில் சிறு தடுமாற்றம்… 
கவி எதுவும் பேசாமல் இருக்க  “கவி என்ன ஆச்சு??” என்றான் ஜெய். வீராசாமியும் கவியின் முகத்தை தான் பார்த்து இருந்தார். அவருக்கு அன்னம் இங்கு வந்ததால் தான் ஹார்ட் அட்டாக் என்று நினைத்து இருந்தார்.
இது நாள் வரை அன்னம் ஜெய் பற்றி எந்த கேள்வியையும் ஈஸ்வரன் வீராசாமியிடம் கேட்டதே இல்லை. இப்போது அப்படி இல்லையே அவள் வீட்டை விட்டு வந்து விட்டாள். இதோ இப்போது அவர் ஐசியூவில் அவர் கேட்டால் என்ன பதில் சொல்ல?? மனம் படபடத்தாலும் கவியின் பதிலுக்காக காத்திருந்தார் வீராசாமி. 
“மாமா  வீட்டுல யாருக்கும் விசயம் தெரியாது..” கவியின் ஒரே வாக்கியத்தில் மூன்று பேர் மனதிலும் அத்தனை நிம்மதி. “அப்பறம் எப்படி??” சத்தியன் கேட்க 
“இல்ல மாமா… நாங்க வரும் போதே அப்பா மயக்கமாகிட்டார். அக்காவும் எதுவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டாங்க”  என்றவன் அமைதியானவன், ஜெய் என்ன சொல்வான் என்று அவன் முகம் பார்க்க “கவி நான் டாக்டர பாத்துட்டு வந்துடுறேன்” என்றவன் போக, எதிரில் அன்னம் வந்து கொண்டு இருந்தாள்.
ஜெய் “என்ன??” என பார்க்க,  அவள் சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கொள்ள அவள் அருகிலே ஜெய்யும் அமர்ந்து கொண்டான். இவர்களை பார்த்தவர்கள் சற்று தள்ளி வெளியே வந்து நின்றுகொண்டனர். 
‘பேச்சு வேண்டாம்… உன் அருகில் இருப்பதே போதும்’ என்று அவளும், ‘பேசினால் எங்கு அவளை காயபடுத்தி விடுவோமே!!’ என்று அவனும் பேச்சற்ற மௌனம் மட்டுமே இருவரிடமும். 
மங்களத்துடன் அறைக்கு சென்றவளுக்கு மனதே இல்லை.  அவனை பார்த்து இருபது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவன் வருவான் என்று எத்தனை எதிர்பார்ப்பு அது. இப்போது  மங்களம் கேட்ட எதுவும் அவள் காதில் விழவே இல்லை. 
அன்னம் மங்களம் அவளை உலுக்கவும் தான் “அத்தை எனக்கு இங்க என்னமோ போல இருக்கு வெளிய இருக்குறேன்” என்றவள் ஜெய்யை தேடித்தான் வந்தாள். அறைக்கு முன்னாள் கவி ஜெயிடம் பேசுவதை பார்த்த படிதான் வந்தாள். அவனின் முகமே சொன்னது அவனின் மன நிலையை அதனால் பேசாமல் சென்று அமர்ந்து கொண்டாள்.
மங்களம்  வந்தவர் “என்ன இங்க வந்துட்டியா…” கேட்ட படி அன்னம் பக்கத்தில் அமர்ந்தார். அவருக்கு ‘எங்கு அன்னமும் ஜெய்யும் பார்த்தால் இருவருக்கும் சண்டை வந்து விடுமோ??’ என்று அதனால் அன்னம் வந்த நிமிடத்திற்கு எல்லாம் பின்னாலேயே வந்து விட்டார். 
சத்தியனுக்கு தான் சிரிப்பாக இருந்தது. கவி அவனை பார்த்தவன் “என்ன மாமா நீங்களா சிரிக்குறீங்க??” என்றான். 
“கவி எங்க அம்மா பயந்து இப்ப தான் பாக்குறேன்!! பாறேன் அங்க அண்ணி கைய எப்படி புடிச்சு இருங்காங்கனு..”  என்று மங்களத்தை காட்டினான். 
அவர்கள் பேச்சு வீராசாமிக்கும் கேட்க அவரும் அப்போது தான் அவர்களை பார்த்தார். ‘அன்னம் வந்த போது இருந்த மங்களமா இது!!!’ என்று. அன்று மகன் சென்ற போது ‘யாரோ இவள்’ என்று நினைத்து இருந்தவர் இன்று அவள் இல்லாமல் இல்லை என்ற நிலைக்கு வந்து இருந்தார்.  
யாரும் பேசவில்லை ஹாஸ்பிட்டல் என்றாலும் இதமான மனநிலை தான் அங்கு.  அறையில் சில நிமிடம் இருந்த அன்புவும் தேவகியும் இங்கு வந்து விட்டனர். சத்தியன் தான் “அப்பா இன்னும் யாரும் சாப்பிட்டு இருக்க மாட்டாங்க… வாங்க கேன்டீன் போயிட்டு வரலாம்”  என்றான்.
அன்பு “நான் இருக்குறேன் மாமா… நீங்க போயிட்டு வாங்க” என்றிட “இவ்வளவு நேரம் அழுதுட்டு இப்ப என்ன பேச்சு??? போ… முதல்ல நீ சாப்புடு” என்றவனை தான் ஆ….வென பார்த்தாள் அன்பு.
சத்தியன் “என்ன பாக்குற.??” அன்பு “மாமா இத்தனை நாள்ல நீங்க பேசி இப்ப தான் கேக்குறேன்!! இன்னும் ஜெய் மாமா பேச்ச கேக்க  நானே ஹாஸ்பிட்டல அட்மிட் ஆகனும் போல…!!!” என்றாள் ஜெய்யை பார்த்த படி மெதுவாக.  “இது என்ன பேச்சு வாலு..” என்று தலையில் தட்டினான் ரூபி போல தான் அன்புவும். 
சத்தியனை சில முறை பார்த்து இருக்கிறாள் அன்பு. ஆனால் அவன் பேச்சை கேட்டதே இல்லை அன்னத்துடன் வருபவன் அவளை வாசலிலேயே விட்டு விட்டு வந்து விடுவான். அவ்வளவே ரூபி வந்தாள் மட்டும் இரண்டு நாள் அவர்களுடன் தங்கி இருந்து வருவாள். அதனால் ரூபிக்கும் அன்புவுக்கும் நல்ல பழக்கம் தான்.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதோ நாராயணன், அவர் மனைவி நல்லசாமி, அவர்கள் பின்னால் ரம்யா, அவளின் அம்மா, அப்பா, சாந்தி, வள்ளி, மூர்த்தி, பிரதாப் என அனைவரும் வர,  அன்னத்தின் கை தன்னால் ஜெய்யின் கைகளை பிடித்து கொண்டது. 
அதுவரை சிந்தனையில் இருந்தவன், அன்னத்தின் தொடுகையில் அவளை திரும்பி பார்க்க அவளின் பார்வை எதிரே நடந்து வந்தவர்கள் மீது இருந்தது. 
அவர்கள் வரும் முன் சத்தியன் போக, அன்னத்தின் கைகளை எடுத்து விட்டவன் அவனுக்கு முன்னால் சென்றான். பின்னலே மங்களமும் வந்தார்.
“என்ன ஜெய்… என்ன ஆச்சு..” நாராயணன் கேட்க, “மைல்ட் அட்டாக் தான் சித்தப்ப அப்சர்வேசன்ல வச்சு இருக்காங்க” 
மங்களம் தான் “ஏன் தம்பி… வீட்டுல பேசுனது பத்தாதுன்னு  அக்காங்கள இங்கயையும் கூட்டிட்டு வந்துடீங்களா..?? இவங்களால பட்டது எல்லாம் போதும். அங்கயே தான் சொல்லியாச்சுல திரும்ப எதுக்கு வந்தாங்க??”
“அக்கா… என்னக்கா நீங்களே இப்படி பேசுறீங்க..??” நாராயணன் மனைவி கேட்க, 
“நீ சும்மா இரு வாணி… இவங்களுக்கு இப்படி பேச இடம் கொடுத்து என் தப்பு…  முதல்லயே கண்டிச்சு வச்சு இருக்கனும். அன்னிக்கு நல்லசிவம் வீட்டுல பேசுன்னப்பவே சொன்னேன் இனி இவங்க வரக்கூடதுன்னு உங்க மாமா கேக்கலை… இப்ப என் பசங்க வாழ்க்கைதான் அந்தரத்துல நிக்குது” 
சத்தியன்  “நீங்க வந்தீங்க சரி… இவங்கள எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க??” ரம்யாவின் வீட்டினரை பார்த்தான் “இங்கையும் வந்து பேசி கொஞ்மா  ஒட்டிட்டு இருக்குறத மொத்தமா முடிச்சுடலான்னு வந்தீங்களா..”  சத்தியன் குரல் உயர்த்த
ஜெய் “ம்மா… இது என்ன சந்தை கடையா நீங்க இஷ்டத்துக்கு சத்தம் போட.. பாருங்க எல்லாரும் இங்க தான் பாக்குறாங்க… போங்க அங்க போய் உக்காருங்க. அமைதியா இருக்குறதுன்னா இருங்க… இங்க இருக்க பிடிக்கலையின்னா ரூம்புக்கு போங்க.. டேய் உனக்கு தனியா சொல்லனுமா… சித்தி நீங்க ரம்யாவை கூட்டிட்டு போங்க..” என்றதும் ரம்யா மங்களத்தின் பக்கத்தில் சென்று நின்று கொண்டாள்.
தேவகி இவர்களின் பேச்சை வெறும் பார்வையாளராக பார்த்துகொண்டுதான் இருந்தார். எந்த கேள்வியும் கேட்கவில்லை. அன்னம் அவர்களிடம் பேசாமல் இருக்கும் பொழுதே கண்டுகொண்டார் இவர்கள் தான் பிரச்சனை என்று.  
ரம்யாவின் அம்மா தேவகிடம் பேச அவர் அதற்கு மட்டும் பதில் சொல்லி கொண்டு இருந்தார். ரம்யா, மங்களத்தின் அருகில் நின்று இருந்தாலும் பார்வை முழுதும் சத்தியனிடம் தான். சத்தியன் “வீட்டை விட்டு போ” என்றது அவளுக்கு வருத்தம். அங்கு நடந்ததில் அவளின் பங்கு எதுவும் இல்லை… பாட்டியை அழைத்து வந்ததை தவிர. அவளுக்கு அன்னத்திடம் பேச பயமாக இருந்தது தான் அதனால் பேசாமல் நின்று கொண்டாள்.
சாந்தி, வள்ளி யாரிடமும் பேசவில்லை. அவர்களின் மாமியார்  செய்து வைத்த காரியத்திற்கு. ‘ஜெய் வந்து என்ன செய்வான்??’ என்பதே இப்போது இவர்களின் கவலை. அனைவரும் அமர்ந்து இருக்க வீராசாமி தான் “பசங்களா எவ்வளவு நேரம் இங்கயே இருப்பீங்க… அங்க ரூம்புல போய் இருங்க… சத்தியா என்ன வேணும் பாரு” என்று 
“அப்பா..” என்று சத்தியன் பல்லை கடிக்க,  “டேய்… வந்த இடத்துல பிரச்சனை வேண்டாம் அவங்களுக்கு விசயம் தெரியாது.. நாமளே காட்டி கொடுக்கனுமா?? போடா…” என்று சொல்ல 
நேரம் தான் போனது யாரும் இடத்தை விட்டு அசையவில்லை. ஈஸ்வரனுக்கு செக் அப் முடிய, டாக்டர் வந்தவர் “பயம் இல்லை ரெண்டு நாள் ஹாஸ்பிட்டல இருக்கட்டும்”என்றார் 
ஜெய் “டாக்டர் அவர எப்ப பாக்கலாம்…”  
“அஞ்சு நிமிசத்துல வார்டுக்கு மாத்திடுவாங்க அப்பறம் போய் பாருங்க… ரொம்ப பேச வேண்டாம் பாத்துகுங்க” என்றவர் சென்று விட, சிறிது நேரத்திலேயே ஈஸ்வரன் அறைக்கு மாற்ற பட்டார். 
கட்டிலில் படுத்து இருந்தவரை அனைவரும் விசாரிக்க, அவர் பதில் சொன்னாலும் அவர் கண் முழுதும் மகள், மருமகன் மீது தான் இருந்தது. 
“ஏன் சார்… இப்ப தான் அவர ஐசியூவுல இருந்து இங்க மாத்தி இருக்காங்க… நீங்க பேசியே அவர திரும்ப ஐசியூக்கு மாத்திடாதீங்க… போங்க அவர் ரெஸ்ட் எடுக்கட்டும்” என தனது வழக்கமான வசனத்தை மாற்றாமல் டுயூட்டி நர்ஸ் சொல்ல செய்ய, ஈஸ்வரனை தூங்க சொல்லி அனைவரும் வெளியே வந்தனர்.  
“அப்பா..” ஜெய் வீராசாமியை அழைத்தவன் “நீங்க எல்லாரையும் அழைச்சுட்டு வீட்டுக்கு போங்க நான் மாமா கூட இங்க இருக்குறேன்” 
கவி தான் “மாமா வேண்டாம்… நீங்க போங்க நான் அப்பா கூட இருக்குறேன்” என்றான். 
“கவி… இன்னிக்கு உனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு தான… இப்பவே லேட் ஆகிடுச்சு நீ கிளம்பு நான் பாத்துகுறேன்” என்றதும், அவன் அன்னத்தின் முகம் பார்க்க “அவர்  சொல்லுறதை செய் கவி” என்று முடித்து விட்டாள். 
‘பாருங்கடா…!! இப்ப மட்டும் அவர்… இந்த சுவர் காலையில எங்க போயிருந்தார் தெரியலையே??’ மனதிற்குள் ஜெய் அன்னதிடம் கேள்வி கேட்க, அவனின் மனதின் வார்த்தை அவளுக்கு கேட்டதோ நிமிர்ந்து பார்த்தாள் ஜெய்யை. அவனும் அவளை தான் பார்த்தான். அதில் அத்தனை உக்கிரம். அவனின் பார்வைக்கு அவள் தான் தலைகுனிய வேண்டிதாகியது.
ஜெய் ரம்யாவின் அப்பாவிடம் வந்தவன் “மாமா இங்க எந்த பேச்சும் வேண்டாம் இப்ப இவங்கள அழைச்சுகிட்டு போங்க வீட்டுல வந்து பேசிக்கலாம்” 
“தம்பி… ரம்யா இங்க அன்னத்துக்கு துணையா இருக்கட்டும்”  ரம்யாவின் அம்மா சொல்ல “இல்லை அத்தை… நீங்க போங்க ரம்யா கூட வீட்டுல இருங்க நாங்க வர்ற வரைக்கும்” என்றதும் தான் அவருக்கு உயிரே வந்தது. ‘எங்கே ரம்யாவை தங்கள் உடன் அழைத்து சென்று விடு என்றிடுவானே’ என நினைத்து பயந்து இருந்து அவருக்கு தானே தெரியும்.   
“சத்தியா, நீ இவங்கள வீட்டுல விட்டுட்டு ரூபிய இங்க கூட்டி வா…” என்றான். ஜெய்க்கு நன்கு தெரியும் ரூபியை இவர்களுடன் விட்டால் ரம்யாவை ஒரு வழி ஆக்கி விடுவாள் என்று. அதற்கு தான் அவளை இங்கு அழைத்து வர சொன்னது. சத்தியன் “சரி” என்று முன்னே போக அனைவரும்  தேவகிடம் சொல்லி கொண்டு சென்றனர்.
கவி, மங்களம், அன்பு, தேவகியை வீட்டில் விட்டு செல்வதாக சொல்ல, ஜெய் “உங்க அக்காவையும் அழைச்சுகிட்டு போ” என்றதும் மீண்டும் அங்கு அமைதி……. 

Advertisement