Advertisement

                           ஓம் நமச்சிவாய
தாளம் 13
மருத்துவமனையின் ஐசியூ முன் அன்பு, அன்னத்தின் மடியில்  தலை சாய்த்து இருக்க கவி மருத்துவர் எழுதி கொடுத்த மருந்தினை வாங்க சென்று இருந்தான். தேவகி எதிரில் இருந்த சுவரை வெறித்த படி இருந்தவர் எழுந்து மெதுவாக வாசலை நோக்கி சென்றார்… போகும் அவரை தான் பார்த்து இருந்தாள் அன்னம். 
 
அன்னத்தின் நினைவு முழுதும் ஈஸ்வரன் மட்டும் தான். வாழ்கையின் முக்கால் பாகம் படுக்கை தான் அவர் வாசம். எழுந்து நடமாட ஆரம்பித்திருந்த சமயத்தில் மீண்டும் மருத்துவமனை.  இதுவரை மகிழ்ச்சி என்ற ஒன்றை பார்த்திருப்பார் என்றால் அது இப்போது சில நாட்களாக தான்…. 
கவியுடன் கோபமாக வந்தவளுக்கு வீட்டுக்கு வரும் வரை எதுவும் தோன்றவில்லை. வீதிக்குள் கார் நுழையும் போது தான் ஈஸ்வரனின் நினைவே வந்தது… ‘அப்பா கிட்ட என்ன சொல்ல… நான் வந்துட்டேன்னு சொன்ன என்ன சொல்லுவார்… என்ன எதுக்குன்னு கேட்ட என்ன பதில் சொல்ல’ நினைத்தவள் “கவி காரை நிறுத்துடா…” என்றாள். 
“என்னக்கா… என்ன ஆச்சு?? வீடு வந்துடுச்சுல போயிடலாம்” கவி பதில் சொல்ல, “இல்ல வேணாம் நிறுத்து இங்கயே” என்றதும்  வண்டியை கவி நிறுத்தினான்.  “கவி இப்ப வீட்டுல எதையும் சொல்லாத… நான் பேசிக்குறேன்.” 
“என்னக்கா..!!” எதுக்கு  என  புரியாமல் அன்னத்தின் முகம் பார்க்க “சொன்னதை மட்டும் செய் கேள்வி கேக்காத..” என்றாள் சற்றும் கோபம் மட்டு படாத குரலில். “சரி” என்று தலையை ஆட்ட மட்டுமே முடிந்தது கவியினால்.  இது வரை அன்னத்தை எதிர்த்து பேசியது இல்லை. அன்னம் ஏதாவது சொன்னால் தானே இவன் பேச. இவர்கள் கேட்கும் அனைத்தையும் எப்படியாவது செய்து விடுவாள் அன்னம். 
கவியும் விபரம் தெரியும் வரை தான் அந்த பிடிவாதம். அவனுக்கு விபரம் தெரியும் போதே அன்னத்தின் திருமணம் முடிந்து விட்டது.   பின்பு தாய் வீடு போகும் போது கவிக்கும் அன்புக்கும் வேண்டியது வந்து விடும்.  கவி  பத்தாம் வகுப்பு முடிந்ததும் மெக்கானிக்கல் கடையில் சேர்ந்து விட்டான். அதற்கு தோதாக தான் மெக்கானிக்கல் இஞ்சினியர் படித்தது. கடையில் சேர்ந்ததும் சொல்லி விட்டான் அன்னத்திடம் “அக்கா இனி குடும்பத்தை நான் பாத்துக்குறேன்” என்று… 
வீராசாமியும் “எதுக்கு கவி வேலைக்கு போயிட்டு… நீ படி… நான் பாத்துக்குறேன்” என்று. கவி “இல்ல மாமா வேண்டாம்.. இனி நான் பாத்துக்குறேன்” என்றான் தன் சுய மரியாதை தலை தூக்க.
“அன்னம் சொல்லுமா” வீராசாமி சொல்ல, “இல்ல மாமா அவன் சொன்னது சரி தான் இனி அப்பா அம்மாவை அவன் பாத்துப்பான்” என்றாள் தம்பியை புரிந்தவளாக.
வீட்டிற்கு முன் கார் நிற்க, வேகமாக வந்தாள் அன்பு ஃபோன் பேசிய படி. அவளின் பதட்டத்தை பார்த்தவன் காரைவிட்டு இறங்க “அண்ணா… அப்பா மயக்கம் ஆகிட்டாரு அட்டாக்னு நினைக்கிறேன் ஆம்புலன்ஸ் வந்துடும்” என்றவள்  அன்னத்தை கவனிக்கவில்லை.
“என்ன அன்பு… என்னாச்சு???” அன்னம் கேட்க அவளை பார்த்தவள் “அக்கா…” என அழ ஆரம்பித்து விட்டாள். 
“ஏய்… என்னடி… எதுக்கு அழற… என்ன ஆச்சு??” என்றவளுக்கு வீட்டினுள் கை காட்ட அவளை விட்டு விட்டு உள்ளே சென்றனர்.
அங்கு ஈஸ்வரன்  நெஞ்சை பிடித்து கொண்டு தேவகி பேச்சு கொடுத்தாலும் பேச முடியாமல் மயக்க நிலைக்கு செல்ல உனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். 
டாக்டர்கள் “மைல்ட் அட்டாக் தான் பிரச்சனை இல்லை ஒரு நாலு மணி நேரம் கண்காணிப்பில் இருக்கட்டும்” என்று விட தேவகி அங்கேயே அமர்ந்து விட்டார். 
அன்னத்திற்கு தான் அவரை எப்படி சமாதானம் செய்ய என தெரியவில்லை.  “ம்மா…” அவள் அழைக்க “என்ன..??” அவர் பார்வை தான் கேட்டது. “அப்பாவுக்கு எதுவும் ஆகாது” என்றவளுக்கு சிறு புன்னகை மட்டுமே. 
“அது எனக்கும் தெரியும்” என்றவர் சொல்லில் உண்மை இல்லை. “இதுவரை அவர் நிறைய பட்டுட்டார் போதும் இனி போனாலும் கஷ்படாம போகட்டும்” என்றவர் மருத்துமனை வாசலில் இருந்த கோயிலில் சென்று அமர்ந்து கொண்டார். ஈஸ்வரன் பட்ட சிரமங்களை பார்த்தவர் தானே போதும் என்று நினைத்து விட்டார் போலும். அதையும் விட அன்னதின் முகம் தான் அவரை ஏதோ செய்தது… 
ஈஸ்வரன் ஒரு புறம் இருந்தாலும் அன்னத்தின் அழுத முகத்தை கண்டு கொண்டார் தேவகி. அந்த நிலையில் ஈஸ்வரன் முக்கியமாக பட அன்னத்திடம் அவர் எந்த கேள்வியும் கேட்க வில்லை.  இங்கும் அவருக்கு ஆபத்து இல்லை என தெரிந்ததும் அன்னத்தின் முகம் முன்னே வர அவளிடம் எதையும் கேட்க முடியாமல் கோவிலில் சென்று அமர்ந்து கொண்டார் தேவகி. 
கேட்க முடியாது என்று இல்லை… கணவனுடன் சேர்ந்து வாழ்கிறாள் என்று நினைக்கும் போதே அவள் இங்கு தனியாக வந்து இருப்பது அவருக்கும் சரியாக பட வில்லை. அதுவும் இன்று ஜெய் வருவது தெரியும் இருந்தும் கவியுடன் அவள் இங்கு வந்து இருக்கிறாள் என்றாள்??? தாயாய் அவரின் மனம் பதறத்தான் செய்தது. எதுவாய் இருந்தாலும் அன்னதின் வாய் வழியே வரட்டும் என்று தான் அமைதியானார் தேவகி.
அன்பு அவள் மடியில் இருக்க அன்னத்திற்கு தான் எப்படி சமாளிக்க?? அப்படியே அமர்ந்து இருந்தாள். 
அன்பு இந்த வருடம் மருத்துவம் இரண்டாம் ஆண்டு மாணவி. யாரும் இல்லாத போது தைரியமாக ஈஸ்வரனை பார்த்தவளால் அன்னத்தை பார்க்கவும் அழுதுவிட்டாள். சிறு பெண்தானே தேவகிக்கு தைரியம் தந்தவள் அன்னத்தை பார்கவும் அழுதுவிட்டாள்.
கவி மருந்தை வாங்கி கொண்டு வர… வீராசாமி, மங்களம், சத்தியன், ஜெய் மருத்துவமனைக்கு உள்ளே நுழையவும், அவர்களை பார்த்துவிட்டான் கவி.  “மாமா..” என்று கவி அவர் அருகில் வர “என்ன கவி… என்ன ஆச்சு??!!” வீராசாமி கேட்க “மைல்டு அட்டாக் மாமா ஐசியூல வச்சு இருக்காங்க” என்றவன் அவர்களை அழைத்துகொண்டு போக, ஜெய் அங்கேயே நின்று கொண்டான்.
கவி ஜெய் வராததை  பார்த்தவன் “மாமா வாங்க” என்று அவனை அருகில் சென்று அழைத்தான்.  “நீ போ… நான் ரூம் புக் பண்ணிட்டு வர்றேன். லேடீஸ் எவ்வளவு நேரம் வெளிய இருப்பாங்க..” என்றவனுக்கு தலையை அசைத்தவன் உள்ளே சென்று விட்டான்.
ஜெய்க்கும் தன்னை நிதானித்துக்கொள்ள சிறிது நேரம் தேவைபட்டது. கவி ஃபோன் செய்தவுடன் பதறி போய் வந்தவர்கள் கவியின் முகம் பார்த்ததும் சற்று பதட்டம் மட்டுப்பட்டது.  அன்னத்திடம் பேச தனக்கு பொறுமை தேவை என்பதால் தான் அனைவரையும் முன்னால் அனுப்பிவிட்டு பின் தங்கினான் ஜெய்.  
அன்னம் எங்கு…?? என மங்களம் வந்தவர் அவளை பார்த்தும் “அன்னம்” என்றிட அப்போது தான் உறைத்தது அன்னத்திற்கு. “அத்தை…” என்று அவரை பார்த்தவள் பின்னால் பார்க்க, வீராசாமியும் சத்தியனும் மருத்துவருடன் பேசிய படி நின்று இருந்தனர்.  
அவர்களுக்கும் பின்னல் பார்வை  போக அவள் தேடியது கிடைக்கவில்லை.  சட்டென மனம் முழுதும் வெறுமை சூழ கண்களை மூடிக்கொண்டாள். ஈஸ்வரன் நினைவிலே இருந்தவளுக்கு மங்களத்தை பார்த்தும் தான் ஜெய்யின் நினைவே வந்தது. 
அவன் வந்து இருப்பான் என்று நினைத்து எட்டி பார்க்க அவன் இல்லாதது அவளுக்கு ஏமாற்றம் தான். உண்மையில் இப்போது தான் அவளுக்கு பயம் வந்து இருந்தது… 
வீட்டில் இருந்து வரும் போது கூட அவள் ஜெய்யை பற்றிய சிந்தனை இல்லை… அவளின் புத்தி மனம் முழுவதும் கோபம் மட்டுமே வந்து விட்டாள். இப்போது ‘ஜெய்யை எப்படி எதிர் கொள்ள?? அவன் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்ல??’ மங்களத்தை பார்த்த நொடி இத்தனையும் அவள் மனதில் ஓட கண்களை மூடிக்கொண்டாள்.
கண்கள் மூடிய பின் அவன் அண்மைக்காக  மனம் ஏங்க ஆரம்பித்தது. ‘அப்ப நான் கோவமா இருந்தா இவர் வரமாட்டாரா.. பேசமாட்டாரா… அவ்வளவு தானா… நான் அவருக்கு வேண்டாமா??’ அன்னம் நினைக்கும் போதே
“ம்மா… அத்தை எங்க??” ஜெய்யின் குரல் கேட்க சட்டென விழி திறந்தாள் அன்னம். அத்தனை பரவசம் அவள்  முகத்தில். அவளை கேட்கமல் கண்களில் இருந்து நீர் வர அவனையே பார்த்து இருந்தாள். ஜெய் கேள்வியை மங்களத்திடம் கேட்டாலும் அன்னத்தை தான் பார்த்து இருந்தான்.
ஜெய்யின் கேள்விக்கு மங்களம், கவி இருவரும் அன்னத்தின் முகம் பார்க்க அவள் எங்கு இங்கு இருந்தாள்… 
“அன்னம்..” மங்களம் அழைக்க “என்ன அத்தை..” 
“அம்மா எங்க??” 
“அம்மா கோயில்ல இருக்காங்க”  என்றவள் “எப்படி நீ வீட்டை விட்டு வரலாம்??” என்ற  ஜெயின் குற்றம் சாட்டும் பார்வை தாங்க முடியாமல் தலை குனிந்து கொண்டாள்.
ஜெய் அந்த காரிடாரின் திருப்பதிலேயே அன்னத்தை கவனித்து விட்டான். முதல் முதலாக அவன் எடுத்து தந்த சேலையில், காலையில் இருந்து அழுது இருந்ததால் கண்கள் வீங்கி போய், அன்பு தலை வைத்து இருந்ததால் அவளின் தலையை நீவிய படி இருந்தவளை பார்க்க பாவமாய் தான் இருந்தது அவனுக்கும்.
அவள் வீட்டை விட்டு சென்றதில் மனம் முழுதும் கோபம் தான். அது அன்னத்தை பார்க்கும் வரை மட்டுமே… ரம்யா அன்னம் சென்று விட்டாள் என்றதும் அவனுக்கும் எதுவும் புரியவில்லை…  மங்களம் முழுவதுமாக சொன்னதும் தான் அவளின் அந்த நேர நிலையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. இருந்தும் அவள் வீட்டை விட்டு போனதை அவனால் ஏற்க முடிய வில்லை…
‘எப்படி போகலாம்…??  எதுவா இருந்தாலும் இங்க இருந்து தான சமாளிச்சு இருக்கனும்… நான் வந்துடுவேன்னு தெரியும் தான… அப்ப நான்?? என்ன பத்தி அவ நினைக்கலையா??’ என்று நினைத்தவன், தோதாக அவன் அவளை பற்றி நினைக்காமல் சென்றதை மறந்து, அவளுடன் மனத்தில் சண்டையை தொடங்கி விட்டான். 
மனதில் வாக்கு வாததில் இருந்தவன், சத்தியன் பேசியதையோ… ரம்யாவின் வீட்டினரை வெளியில் போக சொன்னதை எல்லாம் கவனிக்கவே இல்லை. கவியின் ஃபோன் வந்து தான் அவன் உணர்வுக்கு வந்தது. 
ஜெய் “சொல்லு கவி” என்றிட அனைவரும் இவனை தான் பார்த்து இருந்தனர். “மாமா… அக்காவ பத்திரமா கூட்டிட்டு வந்துட்டேன் நீங்க அக்கா வந்ததுக்கு மனசுல எதையும் வச்சுக்காதீங்க மாமா..” என்று அன்னத்தின் செயலுக்கு மன்னிப்பு கேட்க “விடு கவி அவள பத்திரமா பாத்துக்க” என்றவன் “எப்படி இருக்கா.. சாப்பிட்டாளா??” என்னும் போது தான் கவி தடுமாறினான். 
“மாமா…” என்று அவன் இழுக்க “என்னடா..??” என்றான் ஜெய் பதட்டமாக. “மாமா நா இங்க ஹாஸ்பிட்டல இருக்குறேன் மாமா. அப்பாவுக்கு அட்டாக்” என்றதும் ஜெய் சற்று சத்தமா “என்னடா…!!” என்றான்.
இவன் சத்ததில் அனைவரும் பதறி போய் வர “இதை தான நீ முதல்ல சொல்லி இருக்கனும்… இப்ப மாமா எப்படி இருக்காரு??? எந்த ஹாஸ்ப்பிட்டல்??” கேட்டவன் வீராசாமியிடமும் மங்களத்திடமும் சொல்லிக்கொண்டு போக “அண்ணா இரு” என்றான் சத்தியன்.
சத்தியன் அனைவரையும் பார்த்தவன் “இதோ உங்க பொண்ணையும் கூட்டிட்டு போயிடுங்க.. அவளுக்கு என்ன வேணுமோ அது வீடு வந்து சேரும்” என்றவனை, ஜெய் “டேய்.. என்னடா..??” கேட்க “இப்ப எந்த பேச்சும் வேண்டாண்ணா… முதல்ல மாமாவை போய் பாக்கலாம் அண்ணி அங்க தனிய என்ன பண்ணுறாங்க தெரியலை??” என்றவன்
காரை எடுக்க,  சத்தியன் சொன்ன “அண்ணி அங்க தனியா இருப்பாங்க” என்றது மட்டும் ஜெய் மனதில் ஓட, இங்கு அவளை பார்த்தும் தான் தெரிந்தது அவனின் வார்த்தை எத்தனை உண்மை என்று. 

Advertisement