Advertisement

                                   ஓம் நமச்சிவாய 
தாளம் 11
ஜெய் சொன்ன “பயம்” இருவருக்கும் ஆச்சர்யம் தான். “என்னாடா பயமா… உனக்கா!!??” அமீர் கேட்க. 
“ஏன்டா… எனக்கு பயம் இருக்க கூடாதா?? அப்பாவோட கட்டாயத்துல தான் இந்த கல்யாணம் அவ எப்படி இருப்பான்னு கூட தெரியாது??  தாலிகட்டின பின்னாடி தான்  முகத்தையே பாத்தேன். பதினாறு, பதினேழு வயசு தான் இருக்கும். புடவை கூட  சரியா கட்ட தெரியலை சுத்தி தான் விட்டுருந்தாங்க, அவ நின்னத பாத்தே எனக்கு பாவமா போச்சு அவ கூட எப்படிடா??” 
“அப்பவே அவளை விட்டுட்டும் வந்துட்டேன்.  அப்ப இருந்து இப்ப வரைக்கும் பயம் தான்… எங்க திரும்ப அவளை பாத்தா என் கேரியரை விட்டுடுவேனோன்னு… அது தான் என் மண்டைக்குள்ள அவளை ஏத்திக்காம இருந்துட்டேன்”  
அமர் “அன்னத்தை விட்டு விட்டு வந்ததுக்கு பயந்தா நியாம்… நீ என்னடா கேரியரை பாத்து பயந்து இருக்க?? இதை விட்டா வேற உங்களுக்கு தான் இங்க நிறைய தொழில்கள் இருக்கே!!” அமர், அன்னத்தை ஜெய் விட்டு விட்டான் ஆதங்கத்தில் கேட்டான். 
“நீ சொன்ன இந்த தொழிக்காக தான் நான் வந்ததே… இந்த ரைஸ் மில், நிலம், வீடு எல்லாம் அப்பா தாத்தா சம்பாரிச்சது…  நான் என்ன செஞ்சேன் இதுல….. எனக்குன்னு என்ன இருக்கு…. இதை பெரிசு பண்ணுனா மட்டும் போதுமா?? இல்ல இந்த சொத்தை அழியாம பாத்துகிட்டா போதுமா??? அதுக்கு தான் எங்க அப்பா இருக்காறே… இதுல நான் என்ன செஞ்சாலும் பாக்குறவங்களுக்கு  அப்பன், தாத்தன் சம்பாதனை இவன் சாப்புடுறானு தான் பேசுவாங்க…  அதனால எனக்குன்னு ஒரு அடையாளம் வேணும் அது என்னை சுத்தி இருக்குறவங்களுக்கு தெரியனும் அது தான் வந்துட்டேன். வந்ததுக்கு அப்பறமும் நான் அவளை விட்டுட்டு வந்தது சரியா, தப்பான்னு நிறைய குழப்பம் தான். ஆனாலும் எனக்கு ஒரு நம்பிக்கை அவ கண்டிப்பா எனக்காக எங்க வீட்டுல இருப்பான்னு” என்றவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. 
அமரும் அமீரும்  ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க  அவனின் சந்தோச முகம் இவர்களையும் புன்னகைக்க செய்தது. 
“சரி லேட் ஆகிடுச்சு காலையில முகூர்த்தம் படுங்க” என்றவன் அவர்கள் தூங்க வசதி செய்தவன் அறைக்கு போக  அங்கு அன்னமும் நல்ல உறக்கத்தில் தான் இருந்தாள். 
காலையில் இருந்து வேலை செய்த அசதி விழுந்ததும் உறங்கி விட்டாள் அன்னம். ஜெய் வந்தவன் அவளை அணைக்கவும் அன்னத்தின் தூக்கம் தெளிந்து விட்டது.  
“எதுக்கு இப்ப எழுந்த?? தூங்கு” என்றவன் பிடி இறுக “இப்படி பிடிச்ச எப்படி தூங்க?? எனக்கு தூக்கம்  வராது” 
எழுந்தவளை மீண்டும் தூங்க விட எண்ணம் இல்லை அவனுக்கு “அப்ப நேத்து அதுக்கு முத நாள் மேடம் எப்படி தூங்குனீங்க!! நியாபகம் இருக்கா!! அவள் கழுத்து வளைவில் முகம் புதைய கேட்க, அவன் இதழ்  செய்த வித்தையில் அவனின் கேள்விகள் மறக்க அன்னம் தொலைந்தாள் அவனுக்குள்ளே.
“முகூர்த்த காலுக்கு  அன்னம், ஜெய் இருக்க வேண்டும்” என்று மங்களம் சொல்லி இருந்ததால்  அனைவரும் அதி காலையிலேயே மண்டபம் வந்து விட்டனர். வீட்டு ஆட்கள் மட்டும் தான் என்பதால் பாதி ஆட்கள் தூக்கத்தில் இருக்க அங்கு  சடங்குக்கு வேண்டியவர்கள் மட்டுமே நின்று இருந்தனர்.
மணப்பெண் அறையில் விசாகாவை தயார் படுத்த அவளோ வாசலை எட்டி பார்த்த படி இருந்தாள்.
“என்ன விசு?? யாரை எட்டி எட்டி பாக்கிற… மாப்பிள்ளை வர நேரம் இருக்கும்மா!!” சுற்றி இருந்தவர்கள் கேலி செய்ய “மாப்பிள்ளை வந்தா மட்டும் இப்ப வா ரூம்புக்கு அனுப்ப போறீங்க!!??  நைட்தானா… அப்பறம் என்ன அவர் மெதுவாவே வரட்டும்”  விசாகா சொல்ல “அடிப்பாவி” என வாயில் கை வைத்தார் அவளை கேட்டவர். 
அன்னம் உள்ளே வர அவளை பிடித்து கொண்டாள் விசாகா. “அண்ணி அண்ணாவை முகூர்த்தம் சூட் பண்ண சொன்னேன் என்ன பண்ணுறாங்க??” அன்னம் பின்னால் இருந்து ரூபிணி தான் சொன்னால் “அண்ணா மட்டும் இல்ல லைட் பிடிக்க ரெண்டு அல்ல கையும் தயார் விசு…” என 
“அடிங்க… என்ன பேச்சு இது…!!” அன்னம் கை ஒங்க  “நான் என்ன தப்பு சொன்னேன்… வாங்க வாங்க தலைவர்கிட்டயே நியாயம் கேட்கலாம்??” என்றவள் ஜெய்யிடம் அன்னத்தை இழுத்து சென்றாள். 
ரூபி அன்னத்தை இழுத்து வருவதை ஜெய் பார்த்தவன் “ஏய் என்ன இது… சின்ன பசங்களாட்டம்” என்றான். “அண்ணா நீயே கேளு.. விசாக கல்யாணத்துல நீ சூட் பண்ணுறேன்னு பிராமிஸ் செஞ்ச தான…” “ஆமா” என்றான் ஜெய். “அப்ப உனக்கு லைட் அட்ஜஸ்ட் செய்ய அமர் அண்ணாவும், அமீர் அண்ணாவும் அசிஸ்ட் செய்வாங்க தானா??” ரூபி கேட்க ஜெய் “ஆமாம்” என்றதும் “என்ன…??” என்ற சத்தம் மற்ற இருவரிடம் இருந்து. 
“ஏண்டா…. லைட் பிடிக்க மாட்டீங்களா??” ஜெய் கேட்க “ஆமான்டா இருக்குற வேலைய விட்டுட்டு உனக்கு லைட் பிடிக்குறது தான் இப்ப எங்க முக்கிய வேலை!!” அமீர்  
“அண்ணா உங்க சண்டைய அப்பறம் வச்சுக்குங்க முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” ரூபி
அமீர் ரூபியிடம் திரும்பியவன் “நீ தான சண்டைய ஆரம்பிச்சு வச்ச அப்ப இது தான் முதல்ல அப்பறம் தான் உன் கேள்விக்கு பதில்” என்றவன் “சொல்லுடா இருக்குற வேலைய விட்டுட்டு இங்க இருக்கவா??” என ஜெய் உடன் சண்டைக்கு நிற்க இவர்களை பார்க்க வேடிக்கையாக இருந்தது அன்னதிற்கு.
“டேய்… ரெண்டு மணி நேரம் இருக்க மாட்டியா??” ஜெய் கேட்க, அமரும் அமீரும் முகம் பார்க்க, அன்னம் இருவரையும் “அண்ணா இருந்து சாப்பிட்டு போங்க” என்றாள். அவள் சொன்ன பின் மறுக்க மனம் இல்லை இருவருக்கும். “சரி” என தலை அசைக்க ரூபிணி ஓஓஓஓ என சத்தமிட்டாள். 
“அண்ணி எடுங்க ஆயிரம் ரூபா.” “எதுக்கு ரூபி??” அன்னம் கேட்க, “அவங்க இங்க இருந்தா நீங்க ஆயிரம் தரனும் அது தான் பெட் எடுங்க” என்றாள் ரூபி. 
 
“ஏய் அவளும் நீயும் பெட் கட்டுனா அவதான பணம் கொடுக்கனும்…. நீ என்ன இவங்க கிட்ட கேக்குற!!??” அமர்.  
“எங்க கிட்ட பணம் இருந்தா நாங்க ஏன் பெட் கட்ட போறோம்…!! நாங்க எப்ப பெட் கட்டனாலும் அண்ணி தான் பைனான்சியர். அண்ணி தாங்க பட்ஜெட் பிரப்ளம்” என்றிட அவள் ஜெய்யைதான் பார்த்தாள். பர்சில் இருந்து பணம் எடுத்தவன் அன்னத்திடம் கொடுக்க,  ரூபிணி வாங்கிக்கொண்டாள் அப்படியே. “ஏய் அதுல எவ்வளவு இருக்கு??” ஜெய் கேட்க. 
“எவ்வளவு இருந்தாலும் எனக்கு தான்!!” என்றவள் மணமகள் அறைக்கு ஓடி விட்டாள். அவளின் சேட்டையை பார்த்து சிரித்த படி இருக்க மங்களம் வந்து அன்னத்தையும் ஜெய்யையும் மணவரைக்கு அழைத்து சென்றார். 
எதிரில் அமர்ந்து இவர்களை தான் சாந்தியும் வள்ளியும்  காதில் புகை வர பார்த்து கொண்டு இருந்தனர். 
அதன் பிறகு சடங்குகள் தொடங்க யாருக்கும் நிற்க நேரம் இல்லை தாலி கட்டி முடிந்த பின் தான் அன்னம் சற்று ஓய்ந்தாள். மண்டபத்தின் அருகில் இருந்த கோவிலுக்கு அனைவரும் செல்ல அன்னத்தை வேண்டாம் என்று விட்டான் ஜெய். 
“டேய்… கோயிலுக்கு எதுக்குடா வேண்டாம் சொல்லுற??” மங்களம். 
“ம்மா… அவ நேத்து இருந்து வேலை செஞ்சு கிட்டே இருக்கா… காலையிலயும் சீக்கரமா எழுந்துட்டா அவளுக்கும் ரெஸ்ட் வேண்டாமா… நீங்க போங்க எல்லாரும் வர்ற வறைக்கும் அவ இருக்கட்டும்” என்றவனை “இதுவும் நல்லாதான்டா இருக்கு” மங்களம் மகனை செல்லமாக நொடித்தவர் மணமக்களுடன் கோவிலுக்கு சென்று விட்டார்.
வீராசாமியுடன் ஊர் பெரியவர்கள் நின்று இருக்க அவர் ஜெய்யை தான் தேடிக்கொண்டு இருந்தார்.  “ஏங்க மாமா உங்களை தான் தேடுறாரு போல” அன்னம் கவனித்தவள் சொல்ல, அவரிடம் சென்றான் ஜெய். 
அணிந்திருந்த பட்டு வேட்டி சட்டை ஜெய்க்கு அத்தனை பொருத்தமாக இருந்தது. கையில்  இருந்த தங்க காப்பை சரி செய்த படி பேசிக்கொண்டு இருந்த கணவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள் அன்னம். அவள் கண்களில் இருந்தது என்ன?? காதலா… பாசமா.. ஆசையா.. அதை தான் ஆராய்ச்சியாக பார்த்து கொண்டு இருந்தனர் அமரும் அமீரும்.
“அனும்மா உன்கிட்ட ஒரு விசயம் கேட்டா தப்பா நினைக்க மாட்டியே??” அமர் கேட்க அமீர் அவனை முறைத்தான். 
“டேய்..” அமீர் பல்லை கடிக்க, 
அன்னம் “கேளுங்கண்ணா” 
“இது தான் மஞ்சள் கயிறு மேஜிக்கா அனு??” ஜெய்யை பார்த்த படி கேட்டான் அமர்.    
அன்னம் அவனை பார்த்து சிரிக்க “என்னம்மா நான் கேட்டது சிரிப்பா இருக்கா!!” 
“நிச்சயம் இல்லண்ணா” 
“அப்ப நீ சிரிச்சது எதுக்கு??” 
அவன் கேட்டதும் புரியாமல் பார்த்தவள் அமர் ஜெய்யை பார்த்தும் “நீங்க கேட்டீங்கள மஞ்சள் கயிறு மேஜிக்கான்னு.. அதுக்கு தான். அவர் அதை கட்டலையின்னாலும் நான் இப்ப இருக்குற மாதிரி  தான் இருந்து இருப்பேன் அவருக்காக” என்றவளை இருவரும் கண் விரிய பார்த்தனர்!!! 
“அப்ப காதலா??” அமீர் கேட்க “இல்லை” என தலை அசைத்தாள். 
“அப்ப இது என்ன பைத்திகார தனம் அனு… ஏழு வருசமா வாழ்க்கை இல்லாம ஊர் பேச்ச எல்லாம் கேட்டுக்கிட்டு…” அமீர் அவனால் அவளின் நிலை தாங்க  முடியவில்லை. ‘தனக்கு ஒரு தங்கை இருந்து இருந்தால் இப்படி ஒரு நிலையில் நிறுத்தி இருப்பேனா..’ என்று தான் தோன்றியது  .
கண்கள் மூடி சில நொடி அமைதியானவள் “நம்பிக்கை” என்றாள் பளிச்சென.
“எனக்கு தெரியும் அவர் நிச்சயம் எனக்காக வருவார்ன்னு. அந்த நம்பிக்கை தான் இந்தனை நாள் யார் பேசுனாலும் என்ன கடந்து வர வச்சது வேற எதுவும் இல்லை” 
“ஒரு வேளை…” அமர் நிறுத்த “சொல்லுங்கண்ணா” என்றாள் அன்னம்.
“ஜெய் வேற கல்யாணம் செஞ்சு இருந்தா…”
“நிச்சயம் என்னைய தவிர வேற யாரும் அந்த இடத்துல இருக்க மாட்டாங்க… அவர் இருக்க விடவும் மாட்டார்..” என்றாள் அத்தனை உறுதியாக.
அவனுடன் இத்தனை நாள் இருந்தவர்கள் தானே… அவனின் குணம் அவர்களுக்கும் தெரியும் தானே.. இப்போது அன்னம் அவன் குணத்தை சொன்னது அவர்களுக்கு  எப்படி சொல்ல?? அவளுக்கு அவனை பற்றி எதுவும் தெரியாது?? ஆனாலும்… அன்னத்தின் நம்பிக்கை பிரம்பிப்பாக தான் இருந்தது. நேற்று இதை தான் ஜெய்யும் வேறு விதமாக சொன்னான்.
“எப்படிம்மா அவன பத்தி எதுவும் தெரியாது?? ஆனாலும் அவன் மேல இப்படி ஒரு நம்பிக்கை!!” 
அவர்களுக்கு புரியவில்லை… அன்னதின் நம்பிக்கை என்பது கருவில் இருக்கும் குழந்தை வெளி வந்ததும் உணர்வாலேயே இது தான் தன் தாய் என்பதை உணருமே அது போல என்று. ஜெய் அவளின் சீக்ரெட் ஆப் எனர்ஜி என்று.
“எனக்கு சொல்ல தெரியலை” என்றவள் சிரிக்கவும் ஜெய் வரவும் சரியாக இருந்தது “என்னடா விசாரணை முடிஞ்சுதா!!” 
“முடிஞ்சது முடிஞ்சது…” இருவரும் ராகம் இழுக்க ஜெய்யும் அன்னமும் புன்னகை முகமா அவர்களை தான் பார்த்தனர். “நாங்க சாப்பிட்டு கிளம்புறோம் நீ எப்ப வர்ற” அமர் கேட்க 
“செட்டியூல் வந்துடுச்சா??? ராவ் எனக்கு  இன்ஃபாம் பண்ணலையே…”  
“இல்ல இன்னும் வரலை வந்ததும் நான் கிளம்பிடுவேன்” அமீர் 
“அப்ப நீ..” அமரை கேட்க “டேய்… தங்கச்சி கல்யாணம் இருக்குடா.. இன்னும் பாதி வேலையே முடியலை… அப்பா ஒருத்தரா எப்படி சமாளிப்பாரு?? ரெண்டு வாரம் சமாளிங்க வந்துடுறேன்.. அப்பறம் உங்க டைம் பாத்து சின்னதா ரிசப்சன் மட்டும் வைச்சுகலாம் ஓகேவா??” 
இருவரும் “சரி” என்றிட அமர் “அப்படியே ஜெய் உங்க கல்யாணத்தையும் சேர்த்தே சொல்லிடலாம் இல்லையின்னா தினம் ஒருத்தி முகத்துல எதையாவது ஊத்துவா… இல்லை இவன் ஊத்த வைப்பான்!!”  போகும் போது அன்னத்திடம் அமர் சொல்லி போக… அன்னம் கேள்வியாக ஜெய்யை பார்த்தாள்.
ஜெய் அமரை முறைக்க “எத்தன தடவ என்ன அடிவாங்க வச்சு இருக்குற… இப்ப அனுபவி ராஜா” என்று அவன் காதில் சொன்னவன் அவன் முறைத்து பார்த்ததையும் கவனிக்காமல் சென்றான்.
மாப்பிள்ளை வீட்டிற்கு பெண்ணை விட  ஜெய்யையும் அன்னத்தை போக சொல்ல ஜெய் வேண்டாம் என்று விட்டான். 
“என்ன ஜெய்… நீங்க தான் அவங்களை விட்டுட்டு வரனும்” நல்லசிவம் சொல்ல, “இல்ல சித்தப்பா இது நம்ம வீடு உரிமையா எல்லாம் செஞ்சேன் அங்க நாங்க வேண்டாம்… நீங்க பெரியவங்க போங்க… இதே சத்தியன் வர்றான் பாத்துப்பான்” என்று அன்னத்தை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான். 

Advertisement