Advertisement

“நான் என்ன செஞ்சேன் என்னைய முறைக்குற…??” என்றாள் அன்னம் சிரித்தபடி. 
“அடுத்தவங்களுக்காக நான் புடவை கட்ட முடியாது… அங்க வர்றவங்க பசங்க நான் இருப்பேன், பாப்பேன்னு  வேஷ்டியா கட்டிக்கிட்டு வர போறான்?? இல்லதான… அப்பறம் நான் மட்டும் எதுக்கு அடுத்தவங்களுக்காக புடவை கட்டனும்?? நான் இந்த சேலை எல்லாம் கட்ட மாட்டேன் போங்க…” என்றவள் மைக் பிடிக்காத குறையாக பேசி முடித்து திரும்பி கொள்ள.,  அன்னம் ஆ….வென அவளை பார்த்து இருந்தாள். 
“என்ன அண்ணி பாக்குறீங்க… நீங்களே அம்மாகிட சொல்லுங்க எனக்கு இந்த புடவை வேண்டாம்”  என அவள் தாடையை பிடித்து கெஞ்ச ஆரம்பித்தாள். 
அன்னம் “உங்க அண்ணா வந்ததுக்கு அப்பறம் நீ நிறைய பேசுற ரூபி. அப்பறம் அத்தைகிட்ட திட்டு வாங்கி கட்டிக்குவ”  என்று தாவணி செட்டை எடுத்தவள் “சேலை வேண்டாம் தாவணி போட்டுக்க அப்ப தான் அத்தை திட்ட மாட்டாங்க”   
ரூபி யோசித்தவள் “சரி… நீங்களும் நானும் மேட்சிங்க போடலாம்… இல்லையின்னா அம்மா வர விட மாட்டாங்க… இதை வச்சு நிறைய பிளான் செஞ்சு இருக்கேன்” என்றவள் இருவருக்கும் ஒரே கலரில் உடையை எடுத்து வைத்தவள் அதை  ஜெய்யிடம் காட்ட சென்றாள். 
அறையில் ஜெய் இல்லாமல் ஃபோன் ரிங் போய் கொண்டு இருந்தது.  அவன் குளியல் அறையில் இருக்க, அண்ணா ஃபோன் என்றாள் ரூபி. 
“எடுத்து அப்பறமா கால் பண்ண சொல்லு ரூபீ” என்றான் உள்ளிருந்து. 
ஜெய்யை  அமர் தான் அழைத்து இருந்தான் தங்கையின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க.
ரூபி ஃபோனை எடுத்து “ஹலோ” என்றிட ‘ஜெய்யின் ஃபோனில் பெண் குரலா!!’ அமர் ஃபோனை செக் செய்தவன் “இது ஜெய்யோட ஃபோன் தான??” என்றான். 
“ஆமா… அண்ணா குளிக்க போயிருக்காங்க… நீங்க பத்து நிமிசம் கழிச்சு ஃபோன் பண்ணுங்க” என்றவள் கட் செய்ய போக அமர் வேகமாக “ம்மா தங்கச்சி வீட்டு  அட்ரஸ அனுப்புமா நான் அங்க வரனும்” என்றான்.
“அண்ணா எங்க இருக்கீங்க?? என்றவள்  வீட்டு அட்ரஸை அனுப்பியவள்  உடன் மண்டபத்தின் முகவரியையும் அனுப்பினாள். 
இரவு நிச்சயம், காலையில் முகூர்த்தம் என்பதால் மண்டபம் முழுதும் ஆட்கள் தான். ஜெய்யும் அன்னமும் வாசலில் நிற்க வந்த அனைவரின் கண்ணும் அவர்கள் மீது தான். 
ஜெய் நல்ல அழகன் தான். இப்போது தலையில் இருந்த குடுமியை எடுத்து கிளீன் சேவ் செய் முகத்துடன் ஃபார்மல் டிரஸில்  நின்று இருந்தவன் இன்னும் அழகானான்.  லோடஸ் பிங்கில் சிறிய பச்சை கரை பாடரில் அருகில் இருந்த அன்னம் அவனுக்கு சற்றும் மட்டம் இல்லை  “யார் யாரை விட அழகு??” அது தான் அத்தனை கண்களின் கேள்வியும்.  
காலையில் கண்ணாடி முன் நின்று சேவ் செய்த படி இருந்தவனை  கேட்டு இருந்தாள் அன்னம் “இந்த குடுமி, தாடி எல்லாம் அந்த ஊருக்கு நல்லா இருக்கும், இங்க நம்ம வீட்டுல  நீங்க ஏதோ அன்னியபட்ட மாதிரி இருக்கு எடுத்துடுறீங்களா…” என்று 
“ஏன் பிடிக்கலையா??” ஜெய் கேட்க “பிடிச்சி இருக்கு…..” என்று அவள் இழுத்திலேயே அவனுக்கு புரிந்து விட்டது  “கன்னி பையன்ல இருந்து குடும்பத்தான் ஆனா பின்ன குடுமி எதுக்குடா எடுத்துடு..”  என்று அப்போதே எடுத்துவிட்டான் அதை. “பட்டு வேட்டி, சட்டை போடுங்க” என்றதற்கு “நாளைக்கு அதை தான் போடுவேன்… இப்ப இது ஓகே” என்றவன் ஃபார்மல் மட்டும் அனிந்து கொண்டான். வாசலில் கணவனுடன் சேர்ந்து நின்றாலும் அன்னத்தின் மனதில் இந்த பேச்சுகள் மட்டுமே ஓடிக்கொண்டு இருந்தது.
  
ரூபிணி வந்தவள் “அண்ணா… உங்களையும் அண்ணியையும் அங்க கூப்பிடுறாங்க” என்றவள் அவர்களை அனுப்பி விட்டு  வரவேற்ப்பில் நின்று கொண்டாள்.
அவர்கள் உள்ளே போக, ரூபிணி வந்தவர்களை பன்னீர் தெளித்து சந்தனம் கொடுக்க… அமரும், அமீரும் மண்டபத்தின் வாசலுக்கு வந்தனர்  
ரூபிணியிடம் வந்தவர்கள் “இங்க ஜெய்தேவ்…” என கேட்க  “நீங்க??”  கேட்டாள் ரூபிணி. 
“நான் அமர்… அவரோட ஃபிரண்ட்” என “அமர் அண்ணா… நான் ரூபி  அண்ணா மேடைல இருக்காங்க உள்ள  போங்க” என்றவள் வந்தவர்களை பார்க்க திரும்பிக்கொண்டாள். 
இருவரும் மேடையில் ஜெய்யை தேட,  கோபியர் சூழ நின்ற கண்ணன் போல சுற்றியும் பெண்கள் இருக்க ஜெய் அவர்களுடன் சிரித்த படி நின்று இருக்க… அவனை பார்த்த அமர்  தடால் என கீழே விழுந்து விட்டான்.
மண்டபத்தில் அய்யர் லக்ன பத்திரிக்கை வாசிக்க பாட்டும் மேள வாத்தியங்கள் நிருத்த பட்டு இருந்ததால் அமர் கீழே விழுந்த சத்தம் அங்கு நன்றாகவே கேட்டது. 
ஜெய் “என்ன ஆச்சு??” என சத்தம் வந்த பக்கம் பார்க்க அங்கு அமீரும் அமரும் இருந்ததை பார்த்தவன் ஐந்து நிமிசம் கை காட்டியவன் தாம்பூழம் மாற்றிய பிறகே வந்தான். 
அவர்களை பார்த்து முகத்தில் புன்னகையுடன் நடந்து வந்த ஜெய்யை தான் இருவரும் கண் எடுக்காமல் பார்த்து இருந்தனர். 
ஜெய் வந்தவன் “என்னடா லேட்… என்ன ஆச்சு அட்ரஸ் கண்டுபிடிக்க முடியலையா??” என்றவனை “நீங்க ஜெய்தேவ் தானா!!!” கேட்டான் அமர். 
“டேய் லூசா நீ…!!” அமீர் அமரை கேட்க “அதை அடிக்கடி நீ அவனுக்கு நியாபகம் படுத்துடா..” என்றான் ஜெய். 
இவர்களிடம் பேசியவன் மேடையில் இருந்து சத்தம் கேட்க திரும்பி பார்க்க…  அன்னம் தான் “வாங்க” என கை அசைத்தாள் அவனை பார்த்து. 
அவர்களும் அது “யார்??” என்று பார்த்து “யார்டா ஜெய்..??” கேட்க ஜெய் என் “வொய்ஃப்” என்றதும் அமர் மயங்கியே விட்டான்!!!
ஜெய் அவனை தாங்க, அமீர்  “ஜெய் நீ போ… இவன நான் பாத்துக்குறேன்.” அமீருக்கும் ஜெய் சொன்னதும் அதிர்வு தான். சமாளித்தவன் அமர் மீது தண்ணீரை தெளித்தான் “டேய் மானத்த வாங்காத எழுந்துக்க எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க” என்றான்.  அமர் கண் விழித்தவன்  “மச்சி  அவன் பொண்ணுங்க பக்கத்துல நின்னதே எனக்கு அதிர்ச்சின்னா!! இப்ப இவன் சொன்னது??? டேய்… என் தங்கச்சி கல்யாணம் நடக்குற வரை நான் உயிரோட இருக்கனும் பிளீஸ் என்னைய கூட்டிட்டு போடா..!!” என்று பரிதாபமாக சொன்னவனை, யாரும் கவனிக்காமல் காலில் மிதித்தான் அமீர்  
“வாய மூடல கொன்னுடுவேன்… அவன் வரட்டும் பேசலாம் அமைதியா இரு” என்றான் அமீர். 
இருவரும் அமைதியாக இருக்க அமர் பின்னால் திரும்பி பார்த்த படி இருந்தான். “என்னடா” அமீர். 
“இல்ல., நாளு நாளைக்கே இவன் பொண்டாட்டிய காட்டுறான். இன்னும் நாழு நிமிசம் கழிச்சு வந்து இது என் பையன்னு யாரையாவது காட்டினா…!!! அதுக்கு தான்  அவன் ஜாடையில குழந்தைங்க யாராவது இருக்குறாங்களான்னு பாக்குறேன்” என்றவனிடம் “வெட்டிடுவேன்!!” அமீர் கை காட்டா அமைதியானான் அமர்.
அமர் யோசனையாக அமர்ந்து இருக்க “என்னடா” என்றான் அமீர்.
“அவசர கல்யாணமா இருந்து இருக்குமா அமீ??? இவன் வந்த உடனே கல்யாணம் முடிச்சு இருப்பாங்களோ… அதனால தான் இவன் நம்ம கிட்ட சொல்லையா…!!” அமர் தன் சந்தேகத்தை சொல்ல., 
“இல்ல மச்சி… ஜெய் இந்த கல்யாணத்துனால தான் ஊரை விட்டே வந்து இருப்பான்” 
“என்னடா சொல்லுற..??” அமர் 
“இது என்னோட மைண்ட் தான். பட் அவன் சொன்னா தான் உண்மை என்னனு நமக்கு தெரியும். அதனால அவன் சொல்லுற வரைக்கும் சும்மா இரு. அவசரபட்டு எதுவும் கேட்காத…. அவனுக்கு சொல்லனும் தோணினா சொல்லட்டும் இல்லையின்னா வேண்டாம்.  இதை இப்படியே விட்டுடலாம்” அமீர் சொல்ல 
அமர் “இவ்வளவு நல்ல பொண்ண விட்டுட்டு வர எப்படி தான் இவனுக்கு மனசு வந்ததோ??” 
“நிச்சம் இந்த பொண்ணால இவன் வீட்டை விட்டு வரல மச்சி” ஜெய்யை புரிந்தவனாக அமீர் சொல்ல,  அப்போது தான் அன்னத்தின் முகத்தை அமர் நன்கு கவனித்தான்.
நலங்கு சடங்கு முடிந்து, வந்தவர்கள் சாப்பிட, என்று மண்டபத்தின் வேலைகள் முடிந்து ஜெய் வர சற்று நேரம்  ஆனது. 
அமரும், அமீரும் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தார்கள். வேறு எதிலும் கவனம் செல்ல வில்லை. ரூபிணியும், சத்தியனும் சாப்பிட அழைத்தும் “ஜெய் வரட்டும்” என்று விட்டார்கள். 
சற்று கூட்டம் குறைய அன்னம் வந்தாள் அவர்களை நோக்கி. “அண்ணா வாங்க சாப்பிடலாம்”  அழைக்க “இருக்கட்டும்மா… ஜெய் வந்துடட்டும்” என்றிட “அண்ணா… அவர் டைனிங்ல தான் இருக்கார் வாங்க நேரம் ஆச்சு சாப்பிட்டு வீட்டுக்கு போய் பேசலாம்” என்றவள் அவர்களை அழைத்து கொண்டு தான் சென்றாள். 
ஜெய்க்கு தெரியும், தான் போனால் அவர்களின் கேள்விகள் முடியாது என்று அதற்கு தான் அன்னத்தை அனுப்பியது.  
அவர்களுக்கு முன்னால் ஜெய் அமர்ந்து இருக்க “வாங்கடா..”  என்றவன் அனு நீயும் வா” என்றவன் அவளையும் அமர்த்தி கொண்டான். 
அமரும், அமீரும் அமைதியாக இருந்தாலும் ஜெய் அவர்கள் கண்ணில் இருந்த போபத்தை கண்டு கொண்டான். நண்பர்கள் தான் இருந்தாலும் இதுவரை அவன் அவர்களிடம்   எதையும் சொல்ல வில்லை அதே அவனுக்கு சற்று உறுத்தலாக இருந்தது.  அதிலும் அமீர் சற்று உணர்ச்சிவச படுபவன். அவன் கேள்வி கேட்க ஆரம்பித்தால் நிச்சயம் அனைவருக்கும் காட்சி பொருள் ஆவது உறுதி. அதனால் இங்கு அனைவர் முன்னும் பேச வேண்டாம் என்றே அவன் அவர்களிடம் வராமல் ஆட்டம் காட்டியது. அதை புரிந்து கொண்டதை போல அமரும் அமீரும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.
சத்தியனும், ரம்யாவும் பரிமாற  “சத்தியா நாங்க காலையில வந்திடுறோம் அப்பா அம்மா அலைய வேண்டாம்” என்றவன் சாப்பிட்டதும் கிளம்பிவிட்டான். 
மங்களம் வந்தவர் “அன்னம்  அஞ்சு மணிக்கு  முகூர்த்த கால் போடனும் பாத்துக்க” என்றவருக்கு “சரிங்கத்தை” என்றவள் ரூபிணிக்கு காலையில் “என்ன வேண்டும்??” என்று கேட்ட கிளம்பினாள். 
அன்னம் அனைவருக்கும் பால் தந்தவள் மாடிக்கு போக போகும் அவளை தான் பார்த்த படி இருந்தனர் அமரும், அமீரும்.  
அன்னத்திற்கு அவர்களை பார்த்தும்  தெரிந்தது விட்டது தன்னை பற்றிய எதுவும் அவர்களுக்கு தெரியாது என்று. நண்பர்கள் பேச தனிமை தந்தவள் அறைக்கு போக அதற்காக தான் காத்து இருந்ததை போல ஜெய் அவள் சென்றதை பார்த்தவன் “சொல்லுங்கடா எப்படி இருக்கீங்க??” என்றான். 
இருவரும் பதில் சொல்லாமல் அவனையே  முறைத்து பார்த்து இருக்க “அமீ இப்ப எதை பத்தியும் பேச்சு வேண்டாம்” என்னும் போதே ஜெய் முகம் சுருங்கி விட்டது.
தங்களிடம் கோவம், சிரிப்பு, தூக்கம், அவமானம் அனைத்தையும் பகிர்ந்தவன் முகத்தை தான் இதுவரை பார்த்து இருக்கிறார்கள் இருவரும். ஜெய்யின் இந்த முகம் அவர்களுக்கு புதிது.
அவனை புரிந்தவர்கள் போல இருவரும் எழுந்தவர்கள் ஜெய்யின் பக்கத்தில் அமர, அவர்களின் கைகளை பிடித்து கொண்டான் ஜெய்.  
“ஏன்டா சொல்லலை..” அமர் கேட்க “பயம்!!!” என்றான் ஒற்றை வார்த்தையில் ஜெய்.

Advertisement