Advertisement

                            ஓம் நமச்சிவாயா
தாளம் 10
செய்த தவறுக்கு அன்னத்திடம் “மன்னிப்பை கேள்” என்று சொல்ல வில்லை. ஆனால்….. செயலால் சொல்ல வைத்தான் ஜெய். 
எங்கும் எதற்காகவும் யாரும் யாரையும் விட்டு கொடுக்க வில்லை. “இது தான் எங்கள் குடும்பம்… இதில் யாரும் தனி இல்லை பிரிந்து இருந்தாலும்” இது வீட்டில் இருந்த மற்றவர்களின் நிலை. 
வந்ததில் இருந்து சாந்தியிடமும் வள்ளியிடமும் வீராசாமி பேசவில்லை. இருவரும் அமைதியாக தான் இருந்தனர் மூர்த்தி “பெட்டியை கட்டு” என்றதில் இருந்து.
சத்தியன் தான் மூர்த்தி மற்றும் பிரதாப்பிடம் சொன்னான் “அத்தைங்கள ஜெய் இதோட விட்டானேன்னு சந்தோச படுங்க…  இனியும் அவங்க எதாவது பேசுனாங்கனா…” என்றவன் பேச்சு மிரட்டல் போல் இருக்க பிரதாப்பும் மூர்த்தியும் சத்தியன் முகம் பார்த்தனர். “அவன் என்ன போல இல்ல…. நீங்க எது செஞ்சாலும் அமைதியா இருக்க” என வீராசாமி அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.
ராகவும் கூட ஜெய்யிடமும் அன்னத்திடமும் திருமணத்திற்கு அழைத்துவிட்டே சென்றான்.
அனைவரும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட, ரம்யாவும் அவர்களுடன் செல்ல “ரம்யா…. நீ இங்கயே இரு மாப்பிள்ளை வரும் போது வா” என்றார் ரம்யாவின் அம்மா. 
அவள் சாந்தியின் முகம் பார்க்க “அங்க  என்னடி பார்வை… உங்க வீட்டு ஆளுங்க வரும் போது வந்தா போதும்” என்று தன் மகளின் வாழ்க்கையை யோசித்து பேச, சாந்தி தான் முந்திக்கொண்டார். “அண்ணன் கல்யாணத்துல தங்கச்சி இல்லாம எப்படி??” என்று. 
“கல்யாணத்துக்கு வந்துடுவா… இப்ப எதுக்கு அங்க… அவ இருந்து பாத்தது போதும்… அவ வீட்டுகாரர் கூட வந்தா போதும்… அங்க இருக்குற வேலைய நாம பாத்துப்போம்…. இப்ப அங்க வேலை இல்லை சாந்தி… நீ பேசாம வா” என்று ரம்யாவை முறைத்தார் “இனி அவ பேச்ச கேட்டு எதாவது கிறுக்கு தனம் செஞ்ச அவ்வளவு தான்…..!!!” என்றார் ரம்யாவிடம் தனியாக. 
சாந்தியின் முகம் தான் விழுந்து விட்டது. இத்தனை நாள் தான் எது சொன்னாலும் கேட்பவர்கள் இப்போது முதல் முறையாக தன்னைவிட்டு அவர்களாகவே செய்வது அத்தனை ஆத்திரமாக இருந்தது.
ஜெய் “அத்தை சத்தியனும் இப்ப உங்க கூட வருவான் இருந்து கூட்டிக்கிட்டே போங்க” என்றவன் மாடிக்கு சென்றான்.
அவன் யாரையும் பார்க்கவில்லை… யாரிடமும் கேட்க வில்லை… இத்தனை நாள் வீராசாமி எடுத்த முடிவுகளை இப்போது இவன் எடுத்து விட்டான். 
வீராசாமியை அனைவரும் பார்க்க “அது தான் பெரியவன் சொல்லிட்டான்ல இருந்து கூட்டிக்கிட்டே போங்க” என்று. “இனி அவன் முடிவு தான் எங்களின் முடிவு” என்று சொல்லாமல் சொல்லி சென்றார். 
அறையில் கட்டிலில் ஜெய் அமர்ந்து இயர்பட் போட்டு பாட்டு கேட்டுக்கொண்டு இருக்க அன்னம் வந்தாள் மெதுவாக தயங்கிய படி. அவளுக்கு தயக்கம் தான். பயம் தான் தயக்கமாக மாறி இருந்தது இப்போது.  காலையில் கையை பிடித்து கோபத்தை கட்டு படுத்தியவன் தான் அதன் பிறகு தன்னை நோக்கி ஒரு பார்வையோ… இல்லை வார்த்தையோ இல்லை… 
சத்தியனுக்கு சாப்பாடு வைக்க அழைத்தவன் தான் அதன் பிறகு பேச்சே இல்லை.  ரம்யாவின் அம்மா, அப்பா கொடுத்த பத்திரிக்கை  தட்டினை “வாங்கு” என்னும் போது கூட முகத்தில் எந்த பாவனையும் இல்லை. கோபமாக இருக்கிறானா… இல்லையா என்று தெரியவில்லை?? இரவும் சரியாக சாப்பிடாததால்  கையில் பால் கிளாசுடன் அவன் முன் நின்றாள்.
“பால்” என்று அன்னம் சொன்னது அவன் காதுகளில் விழவில்லை. சற்று சத்தமா “ஏங்க பால்..” என்றிட கண் திறந்தவன் அவள் கையில் இருந்ததை பார்த்து  “என் தலையில ஊத்து!!!” என்றான். 
அன்னம் அவனை பார்த்து நின்று இருக்க… பாட்டை நிறுத்தியவன் “எல்லாம் முடிச்சாச்சு.. இன்னும் பால் ஊத்துறது தான பாக்கி… அதையும் முடிச்சுட்டா பரம திருப்தியா இருக்கும்ல…!! அதுக்குதான் தலையில ஊத்த சொன்னேன்” 
அவன் பேச்சில் ஆத்திரம் இல்லை ஆதங்கம் மட்டுமே. பொது இடத்தில் மற்றவர்  பேசும் போது தன்னை பேசவிடாமல் தடுத்ததால் வந்தது. வீட்டில் அனைவரிடமும் சமாளித்தாலும் மனதில் அன்னத்தை பேசும் போது அமைதியாக இருந்தது உறுத்தி கொண்டு தான் இருந்தது.
அவன் கோபமாக இல்லை என்பதை உணர்ந்தவள் கிளாஸை அவனிடம் நீட்ட,  வாங்காமல் விடமாட்டாள் என்பதால் “டேபிள்ல வை” என்றான்.  
அன்னம் கிளாஸை வைத்தவள் அவன் முன்னால் அமர்ந்தாள்.
ஜெய்  “இப்ப என்ன??”
ஜெய்யை பார்த்தவள் “பேச்சு தான் முடிஞ்சு போச்சுல இப்ப எதுக்கு இப்படி இருக்கீங்க…??” 
ஜெய் பேசாமல் இருக்க “கேக்குறேன்ல சொல்லுங்க…” என்றாள் சலுகையாக.
“என்னடி சொல்ல… காலையில அத்தனை பேர் முன்னாடி பேசுறாங்க… என்னைய எதுவும் பேச கூடதுன்னு சொல்லிட்டு இப்ப வந்து பேச சொல்லுற… என்னைய பாத்த  பைத்தியகாரன் மாதிரி இருக்கா??!!!”  
நிஜமாகவே அப்போது அவனை பார்க்க அன்னத்திற்கு அப்படி தான் இருந்தது. பின் இருந்த குடிமி அவிழ்ந்து முடி முன்னாள் வந்து விழுந்து இருக்க சற்று பைத்தியத்தின் தோற்றம் தான். 
அன்னம் சிரிப்பை வாய்க்குள் அடக்க  “என்ன சிரிப்பு??” என்றவன் முகத்திலும் புன்னகையின் சாயல்.  
“நீங்க கோவிச்சுக்க மாட்டீங்கன்னா நான் ஒன்னு சொல்லவா???” கேட்டாள் அன்னம். 
“கோவம் வராத மாதிரி சொன்னா கோவிச்சுக்க மாட்டேன்…!!” என்றவன் குரலில் அத்தனை மென்மை.
அன்னம் “நீங்க சொன்னது தான்” என்றதும் “நான் சொன்னதா!! என்ன சொன்னேன்??” ஜெய்
“எல்லார்கிட்டையும் சொன்னீங்க… நாம அங்க சண்டை போட போகலை சந்தோசமா இருக்க தான் போனோம்ன்னு சொன்னீங்க.. அதை தான் நானும் சொன்னேன்.”  
“அவங்க உங்க அத்தை…  எப்படி அவங்க கிட்ட சண்டை போடுவீங்க…. அப்படி போட்ட திரும்ப அவங்க கிட்ட பேசமுடியுமா?? மூனாவது மனுசன் இனி நமக்கு அவங்க தேவை இல்லை அப்படின்னு நினைக்குறவங்க கிட்ட சண்டை போடலாம்… பேசலாம்… இவங்க கிட்ட எப்படி?? சண்டையில ஏதையாவது பேசிட்டு நாளைக்கு அவங்களையே உறவு கொண்டாட முடியுமா… தப்பா பேசுனதுக்கு அப்பறம் எப்படி அவங்கிட்ட முகம் கொடுத்து பேச… நமக்கு உறுத்தாதா??? என்று அவன் முகம் பார்க்க 
“அவங்க பேசினது சரின்னு சொல்லுறியா…??” 
“நான் எப்ப அப்படி சொன்னோன்… நீங்க அவங்கள பேச வேண்டாம்னு தான் சொன்னோன். அவங்க இந்த வீட்டுல பிறந்த பொண்ணு நாளைக்கு எதுனாலும் நீங்க தான் போகனும். அவங்கள பாக்கும் போது இந்த பேச்சு எல்லாம் மனசுல தன்னால ஓடும்.  பேச்சும் பேசிட்டு அவங்க கிட்ட திரும்ப சிரிச்சு பேச மனசு வருமா?? இப்ப அந்த சங்கடம் இல்லை தான. நாளைக்கு நீங்க போனாலும்  முழு மனசா எதையும் செய்யலாம் உறவுக்குள்ள வார்த்தைகள் தான் முக்கியம்” 
“பணம் இருந்து எத்தனை நாளைக்கு… அவங்களுக்கு ஒன்னுன்னா நான் இருக்கேன்னு நீங்க முன்ன போய் நின்னா தான் நமக்கு மரியாதை”  என்று அவனை பார்க்க அவனோ ஆச்சர்யமாக இவளை தான் பார்த்து கொண்டு இருந்தான். 
“எப்படி அனு… அவங்க உங்கனை அத்தனை பேர் முன்ன பேசுறாங்க.. நீ அவங்களுக்கு சாதகமா பேசுற…!!” 
“நான் எங்க அவங்களுக்கு சாதகமா பேசினேன் எங்க வீட்டு ஆளுங்கள மத்தவங்க பேசாம பாத்துகிட்டேன்… நீங்க  அங்க பேசி இருந்தா பெரியம்மா இன்னும் பேசி இருப்பாங்க… அப்பறம் மாமா, அத்தை அப்படின்னு போயி சின்ன விசயம் பெரிச போயி இருக்கும்.  அதுவும் அது கல்யாண வீடு.   யாராவது இத பெரிசு பண்ண போய் அதனால விசாக கல்யாணத்துல குழப்பம் வந்தா??  அது எவ்வளவு கஷ்டம். அதுவும் இல்லாம உங்கள யாரும் பேசுறதையோ… இல்லை கேள்வி கேக்குறதையோ என்னால ஒத்துக்க முடியாது… நீங்களும் மாமா கிட்ட அதை தான சொன்னீங்க… நாம சண்டை போட போகலையின்னு. அதுக்கு தான்  பேச வேண்டாம் சொன்னது இப்ப அதுவே சரியா போயிடுச்சு”  
ஜெய்  அவளையே பார்த்து இருக்க.. பேச்சு அற்ற அமைதி அவர்களிடையே. அன்னத்தின் இந்த பேச்சு அவனுக்கு அத்தனை நிம்மதியாக இருந்தது.. ‘அவள் சொல்வதும் உண்மை தானே…  உறவுகளிடம் வார்த்தைகளை விட்ட பிறகு மீண்டும் ஒட்டிக்கொள்வதில் என்ன இருக்கிறது?? என்றாவது பேசிய பேச்சுக்கள் நம்மை நோக்கி திரும்பத்தான் செய்யும்’  நினைத்தவன் கண்களை மூடிக்கொண்டான். 
அன்னம் விளக்கினை அணைத்தவள் படுக்க  “அன்னம் இப்படியே டிரஸ்ஸோடவா படுக்க போற…??” என்ற ஜெய்யின் கேள்வியில் “என்ன??” என அவன் முகம் பார்க்க திரும்பி படுத்தாள் அன்னம்.
அவனின் கேள்வியை அவள்  வேறு விதமாக அர்த்தபடுத்திக்கொண்டது புரிய சிரிப்பை அடக்கியவன் “என்ன பாக்குற… டிரஸ்ஸோடவா தூங்க போற…” என்றான் மீண்டும்.
அன்னம் வேகமாக உடையை பார்த்தவள் “இதுக்கு என்ன… நல்லாதான இருக்கு… எனக்கு இது ஒகே தான்” என்றாள் சற்று சரிந்து இருந்த தலைப்பை சரி செய்த படி. 
அவள் சொல்லும் வரையிலும் கூட அன்னத்திடம் விளையாடும் எண்ணம் இல்லை ஜெய்க்கு. அவளிடம் கேட்டதும்  நேற்றைய கால் வலிக்கா தான் ‘எங்கே புடவை தட்டி வலி வருமோ..’ என்று 
அவன் கேட்டதும்…. அன்னத்தின் அதிர்வு, வேகமாக உடையை குனிந்து பார்த்து… எல்லாம் சேர்ந்து அவளிடம் விளையாட தூண்ட ‘எனக்கு  இப்படி தூங்குனா ஆகாது!!” என்று அன்னதின் புடவையில்  கை வைக்க சத்தமில்லா “ஐயோ” என்றது அன்னத்தின் வாய். 
ஜெய் , அவளின் திறந்த வாயை  பிடித்து இழுக்க,  வலியில் அவள் முகம் சுருங்க சட்டென விட்டான்.  “இப்போதைக்கு உன்னைய எதுவும் செய்யுறதா எனக்கு உத்தேசம் இல்லை!!! என்றான் உல்லாசமாக விசில் அடித்த படி
அன்னம் அவனையே பார்த்து இருக்க “என்ன??” என்றான் புருவம் தூக்க.  அவள் முகம் காட்டிய பாவனையில் தொலைந்தான் ஜெய். 
“அனு” என அழைக்க “ம்ம்” என்றவள் அவன் முகம் பார்க்காமல் தலைகுனிய…  அவளை இழுத்து அணைத்தவன் விரல்கள் அவள் இடையில் மாயாஜாலம் செய்ய உடலும் மனமும் மயங்க ஜெய்வசம் ஆனால் அன்னம்.  
ஜெய்யும் இப்போது இந்த கூடலை நினைக்கவில்லை.  தள்ளி இருப்பதையும் அவன் விரும்பவில்லை… எப்போது என்றாலும் கணவன் மனைவிக்குள் நிகழும் இனிமையான நிகழ்வு  தான் இது. தான் செய்த தவறை ஒப்பு கொடுத்து அவள் தன்னை  மனமாற  ஏற்றபின் தான் குடும்பம் என்பதில் தெளிவாகத்தான் இருந்தான்.
 
அன்னம் ஜெய்யை தேடி இருந்தாலோ… இல்லை வந்ததும் கேள்விகள் கேட்டு இருந்தாலோ… அவனின் அன்னத்தின் மீதான எண்ணமோ.. பிடித்தமோ வேறாய் மாறி இருக்கும். ஆனால் வந்தவனை இப்போது வரையிலும் அவள் கேட்கவில்லை.  ஒரு வார்த்தை கூட அவனை காய படுத்துவது போல் இல்லை…  
இதோ இப்போது அவள் சொன்ன “உங்களை யாரும் கேள்வி கேட்பதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்றதே அவனுக்கு போதும் ‘எங்கும் என் மனைவி என்னை விட்டுகொடுக்க நினைக்கவில்லை’ என்ற எண்ணம் தான் அவர்களின் துவக்கதிற்கு போதுமானாதாக இருந்தது.
 
ரூபிணி நலங்குக்காக உடைகளை எடுத்து கொண்டு இருக்க அவளுக்கு எதுவும் திருப்தியாக இல்லை. “என்ன ரூபி எத்தனை டிரஸை கலைப்ப??” என்று அவள் கலைத்ததை அன்னம் மடித்து வைக்க  “அண்ணி… இதுல எதுவும் நலங்குக்கு மேட்சா இல்லை… நேத்து நீங்க எடுத்துட்டு வந்ததை போட்டாச்சு… இப்ப எல்லாம் பழசா இருக்கு… எனக்கு புதுசு தான் வேணும்” என்றாள் அடமாக.
மங்களம் உள்ளே வந்தவர் அவள் கலைத்து வைத்த உடைகளை பார்த்தார். “கல்யாண வயசு வந்துடுச்சு… இன்னும் இதுபோல டிரஸ் பண்ணாத… நாலு பேர் வருவாங்க பாக்க லட்சணமா இருக்கனும்” என்றவர் “அழகா புடவைய கட்டு” என்று அவள் உடுத்த தேதாக புடவை ஒன்றை தந்து போக, அன்னத்தை தான் முறைத்தாள் ரூபிணி. 

Advertisement