Advertisement

அன்னம் வர,  முகதிருப்பலுடன் காரை எடுத்தவன் கடைக்கு போகும் வரையில் எதுவும் பேசவில்லை. அவனின் அமைதியே அவனின் கோபத்தின் அளவை சொல்ல ‘மக்கு சும்மா இருந்தவரை கோப படுத்தி பாக்குறதே உனக்கு வேலையா போச்சு. நேத்து ஆரம்பிச்சது இன்னிக்கு முடிஞ்சதுன்னு பார்த்தா திரும்பி ஆரம்பிச்சு வைச்சுட்ட’ அன்னம் ஜெய்யை பார்க்க கடு கடுவென்று இருந்தது அவன் முகம்.
கடையிலும் அவன் பேசாமல் அமர்ந்து இருக்க, அவளுக்கு எதை எடுக்க என்று தெரியவில்லை. 
“இதுல எதை எடுக்க??” என்றாள் ஜெய்யிடம் இரண்டு செட் விளக்கினை காட்டி. “என்னைய கேட்டா எனக்கும் தெரியாது?? உனக்கு பிடிச்சதை எடு” என்று விட்டான். வீடு  மில்லு என்று இருப்பவளுக்கு இது எல்லாம் எங்கு தெரிய?? கடைகாரர் சொன்ன செய் கூலி, சேதாரம் பற்றி எதுவும் அவளுக்கு புரியவில்லை…
விளக்கை வைத்து கொண்டு அவள் திணருவது ஜெய்க்கு சிரிப்பாக இருக்க அவளின் மீதான கோபத்தை கூட மறந்து விட்டான். அவளை வேடிக்கை பார்ப்பது தான் இப்போதைய முக்கிய வேலையாகியது ஜெய்க்கு. 
கடைகாரர் அவர்களை பார்ப்பதை உணர்ந்தவன் “என்ன செலக்ட் செஞ்சுட்டியா??” என்றான்
“இல்லை….. ரெண்டும் அழகா தான் இருக்கு. எதை எடுக்க??” என அவனிடம் நீட்ட அதை பார்த்தவன் “ரெண்டும் புடிச்சு இருந்தா ரெண்டும் எடுத்துக்க. ஒன்ன நீ வைச்சுக்க ஒன்னு கிஃப்ட் குடு” என்றவன் இரண்டுக்கும் சேர்த்தே பில் செய்தான். முதல் முறை அவன் தருவதை வேண்டாம் என்று சொல்ல மனம் வர வில்லை வாங்கிக்கொண்டாள் அன்னம்.
கடையில் இருந்து வெளியே வர ரூபிணி தான் அழைத்து இருந்தாள்  ஃபோனில் ஜெய்யை.
“சொல்லு ரூபி…” “அண்ணா… எனக்கு இப்ப வந்த புது கலெக்சன் சுடி எடுத்துட்டு வாங்க…. நாளைக்கு வேணும்” என்று கடையின் அட்ரஸ் சொல்ல “சரி” என்றவன் அன்னத்தை அழைத்து கொண்டு சென்றான்.
அது மூன்று மாடி கொண்ட கடை. ஜெய் எக்ஸலேட்டரில் கால் வைக்க அன்னம் பின் தங்கினாள். “என்ன அனு?? வா” என்று ஜெய் சொல்ல “எனக்கு இதுல ஏறி பழக்கம் இல்லை” என்றவளை வினோதமாகதான் பார்த்தான் ஜெய். 
“கார்  ஓட்டுற… இதுல ஏறி பழக்கம் இல்லையா!! அப்ப மூனு மாடியும் ஏறி தான் போவியா??” என்று கேட்க “இல்ல இது தான் கடைக்கு வர்ற முதல் முறை” என்றதும் “என்னது….!!” என்றான் அதிர்ந்து.
அவள் சொன்னதை கிரகிக்கவே அவனுக்கு சில நொடிகள் தேவைப்பட்டது. அவளை பார்த்தவன் “நீ வர்றது இல்லையின்னா… வேற யார் வருவா??”
“அது… எப்பவும் அத்தையும் ரூபியும் தான் வருவாங்க. எனக்கும் அவங்க தான் வாங்கிட்டு வருவாங்க” என்றவளை பார்க்க ‘என்ன செய்து வைத்திருக்கிறேன் அவள் வாழ்க்கையை நான்??’ என்ற எண்ணம் தான் அவனுக்குள்  ஓங்கி ஒலித்து. 
“வா” என்றவன் அவள் கைகளை பிடிக்க உயிரின் ஆழம் வரை சிலிர்த்தது அன்னதிற்கு. கையை பிடித்தவள் மந்தரித்த ஆட்டுக்குட்டியாய் அவனுடன் செல்ல, அவனே அவளுக்கு வேண்டியதையும் எடுத்தான். 
“எதுக்கு இவ்வளவு துணி?? எனக்கு நிறைய இருக்கு” அன்னம் சொல்ல  “எது நீ கட்டுறயே இதா??” என்றான் அவளை மேலிருந்து கீழாக பார்த்து. “எங்க அம்மா கட்டுற புடவைய சுத்திக்கிட்டு நிக்குற.. இதை எல்லாம் இனி கட்டாத” என்றவன் அவளுக்கு பொருத்தம் என்றதை எடுத்து கொண்டு இருந்தான்.
அவள் உடுத்தும் புடவைகள் ஒன்றும்  குறைந்தவை இல்லை. அனைத்தும் காட்டன் இல்லை என்றாள் பட்டு வகையே. மங்களம் தேர்வு என்பதால்  அவரின் ரசனை படியே இருக்கும். 
இவன் எடுத்து வைத்தது எல்லாம் இலகு ரக புடவைகள். அனைத்தும் லைட் வெயிட் கலெக்சனில் வரும். அவள் கையில் எடுக்கும் போதே அது மிருதுவாக இருக்க “இது போல கட்டி பழக்கம் இல்லை” என்றாள் மெதுவாக அவனிடம்.
அவள் முகத்தை பார்த்தவன் அதிலேயே சற்று அடர் நிறங்களை எடுத்து “இதை வெளிய கட்டிக்க நான் இருக்கும் போது இதை கட்டு” என்று பிரித்தவன், ‘இதை நைட் மட்டும் போட்டுக்க” என்று அவளுக்காக இரவு உடைகளையும் எடுத்துக்கொண்டான்.
ஜெய் துணிக்களுக்கு பில் போட போக, அன்னத்தை பின்னால் இருந்து யாரோ இழுப்பது போல் இருந்தது. பின்னால் திரும்பி பார்க்க “அக்கா எனக்கு அந்த பந்தை எடுத்து தாங்க..” என்றது  சற்று உயரத்தில் சர விளக்கில் சிக்கி கொண்டு இருந்த பந்தினை காட்டி சிறு வாண்டு ஒன்று.
அதனுடன் நடந்தவள் பூச்செடிக்காக ஊற்றி இருந்த நீர் சற்று கீழே சிந்தி இருக்க தண்ணீரை கவனிக்காது காலை வைக்க,  அது வழுக்கிய வேகத்தில் நிற்க முடியாமல் பக்கத்தில் இருந்த படிக்கட்டு கை பிடியை பிடிக்க போக,  பிடிமானம் இல்லாமல் உருள தொடங்கினாள் அன்னம்.
அது அந்த தளத்திலேயே இருந்த படி என்பதால்  ஐந்து படிகள் மட்டும் இருந்தது. இருந்தாலும் விழுந்த வேகத்தில் முட்டியில் அடி பட அவளாள் எழுந்து நிற்க முடிய வில்லை. 
அவள் விழுந்ததும் பயத்தில் அந்த குழந்தை அழ ஆரம்பிக்க, அனைவரும் வந்து விட்டனர். ஜெய்யும் சத்தம் கேட்டு வர, அங்கு அன்னம் எழ முடியாமல் இருக்க இருவர் அவளுக்கு உதவி கொண்டு இருந்தனர்.
“என்ன அனு… என்ன ஆச்சு??” பதட்டமாக வந்தவன் அவள் கைகளை பிடிக்க “கீழ தண்ணி இருந்தத தெரியாம கால வச்சுட்டேன் வழுக்கிடுச்சு” என்றவள் கண்கள் கலங்கி இருந்தது வலியில்.
அவளை தோளோடு அணைத்தவன் “வலிக்குதா?? எங்க அடிபட்டது??” என்று ஜெய் கேட்க “முட்டியில” என்றாள். “வா எழுந்துக்க முடியுமா??” ஜெய் 
ஜெய்யின் கைகளை பிடித்து எழுந்தாலும், அவளால் ஊன்றி நிற்க முடியவில்லை. “இங்க பக்கத்துல ஹாஸ்பிட்டல் இருக்கா??” ஜெய் கடையில் இருந்தவர்களிடம் கேட்க  “நெக்ஸ்ட் டோரே கிளினிக் தான் சார். இருங்க பசங்கள வீல் சேர் எடுத்துட்டு வர சொல்லுறேன்” என்றவர் சேர் எடுத்துக்கொண்டு வந்தார்.
டாக்டர் அன்னத்தின் காலை பார்த்தவர் “அடி எல்லாம் படலை விழுந்த வேகம் தான் இப்ப வலிக்கு இன்ஜெக்சன் போடுறேன். இந்த ஆயின் மென்ட் போதும்” என்றவர் மருந்தை எழுதி தர, அன்னம் ஜெய்யின் கைளை இறுக்கமாக பிடித்து கொண்டாள். 
“என்ன அனு வலிக்குதா!! ஊசி போட்டா சரியாகிடும்” என்று சிறு குழந்தைக்கு சொல்லுவதை போல் சொல்ல “இல்லை எனக்கு ஊசி வேண்டாம்… மாத்திரை மட்டும் தர சொல்லுங்க” என்றவளை பார்த்து தலையில் அடித்து கொள்ள வேண்டும்  போல் இருந்தது ஜெய்க்கு.
“இது என்ன மாட்டுக்கு போடுற ஊசியா?? நீ பயப்பட. எறும்பு கடிச்சா கூட வலிக்கும் இது எதுவும் தெரியாது போட்டுக்க” என்று செல்லியும் அன்னம் ஒத்துக்கொள்ளவே இல்லை. 
இவர்களை பார்த்து கொண்டு இருந்த டாக்டர்க்கு தான் வேடிக்கையாக இருந்தது இவர்களின் வாக்கு வாதத்தை பார்த்து. “சார் விடுங்க அவங்களுக்கு வேண்டாம்னா டேப்லெட் குடுக்குறேன்” என்றவரை “இல்லை டாக்டர் அவ வலி தாங்க மாட்டா… நீங்க போடுங்க நான் பாத்துக்கிறேன்” என்றான் அவளை நன்கு தெரிந்தவன் போல். அவளை தன்னை பார்க்குமாறு அமர வைத்தவன் அவறை போட சொல்லி சைகை மட்டும் செய்தான். 
அவன் திரும்ப சொல்லியதும் வலியை மீறி அவனிடம் அன்னம் கெஞ்ச “வேண்டாம் வலிக்கும் நான் ரெண்டு மாத்திரை கூட அதிகமா போட்டுக்குறேன்” என்றாள் வலிக்கு கண்களில் நீர் வர  அதை துடைத்துக்கொண்டே. ஜெய்க்கு அவளை பார்க்க பாவமாக இருந்தாலும் அவளின் வலி நன்கு முகத்தில் தெரிய அவள் பக்கம் சாய்ந்தவன் “அது என்ன நான் கொடுக்குற  முத்தமா?? எக்ஸ்ட்ராவா கேக்க” என்றதும் அதிர்ச்சியில் கண்ணீர் நிற்க கண்கள் விரிய பார்த்தாள் அன்னம். 
அவள் அதிர்ச்சியை கணக்கில் எடுக்காதவன், “சரி திரும்பு அவர் போட்டுட்டாரு” என்றதும் தான் அவளுக்கு உணர்வே வந்தது. “தேங்யூ டாக்டர்” என்றவன் அவளை அழைத்து கொண்டு வர,  அவன் சொன்ன “முத்தம்” என்ற வார்த்தை காதிலும் கண்ணிலும் ஒலி  ஒளி பரப்ப, சாவி கொடுத்த பொம்மையாய் வந்தாள் அன்னம்.
‘அவரு இப்ப என்ன சொன்னாரு?? நான் கனவு எதுவும் காணலையே!!’ நினைத்தவள் அவனை பார்க்க, காரை எடுத்து கொண்டு வந்தான் ஜெய்.                                                                                                             
அவளை முன்னாள் அமர வைத்தவன் வீடு போக, வீராசாமிதான் முன்னாள் அமர்ந்து இருந்தார். அன்னம் கால்களை தாங்கி வைத்து வர “என்னம்மா என்ன ஆச்சு??” என்று வந்தார் வாசலுக்கு. அவரின் சத்ததில் மங்களம், ரூபிணி இருவரும் வர “என்ன ஆச்சு” என்ற படியே ரூபிணி ஒருபுறமும் ஜெய் மறுபுறமும் தாங்கி கொண்டனர்.
“கீழ விழுந்துட்டேன் மாமா” என்றவளை மங்களம் தான் “நீ என்ன குழந்தையா அன்னம்.. கீழ விழ” என்று திட்ட  “நீ எதுக்கு இப்ப அந்த பொண்ண திட்டுற?? இதே கூட்டிக்கிட்டு போனான்ல இவன திட்டு.. முதல் தடவை கூட்டிக்கிட்டு போனான் அடிபட வைச்சுட்டுடான்..” என்று வீராசாமி மகனைதிட்ட
அவர் சொன்னது அவன் காதில் விழ வில்லை போல “ம்மா அவளே வலி தாங்க முடியாம இருக்குறா… நீ எதுக்கு இப்ப சத்தம் போடுற?? என்றான் அன்னத்தை தாங்கி. 
“டேய் அறிவு கெட்டவனே… நாளைக்கு காலையில அவ அங்க போயி எல்லாம் செய்யனும் இந்த நேரத்துல இப்படி அடி பட்டு வந்து நின்னா எப்படி?? நானே இப்ப தான் எல்லாம் நல்லா போகுதுன்னு கொஞ்சம் நிம்மதிய இருந்தேன் அதுகுள்ள என் கண்பட்ட மாதிரி அடிபட்டு போச்சு. இரு வர்றேன்” என்றவர்  மிளகாய் எடுத்து வந்து இருவருக்கும் சுற்றி போட்டே உள்ளே அனுப்பி வைத்தார்.
அன்னம் ஹாலில் அமர போக வேண்டாம் “ரூம்புக்கு போ” என்றவனுக்கு  “சாப்பாடு வைக்க  இறங்கி வரனும் எல்லாம் முடிச்சுட்டு போறேன்” என்றாள் அன்னம்.. இருவரின் பேச்சை கேட்ட படி தான் வந்தார் மங்களம். “டேய்… நீ அவள கூட்டிட்டு போ.. நான் ரூபிகிட்ட கொடுத்து அனுப்புறேன்” என்றதும் அவளை அணைவாக அணைத்து கொண்டு நடந்தான் ஜெய்.
அந்த அணைப்பு வீராசாமியின் கேள்விக்கான பதிலாக இருக்க போகும் இருவரும் கண்ணும் மனமும் நிறைக்க வீராசாமி  “கல்யாணம் முடிஞ்சதும் கோவிலுக்கு போயிட்டு வரலாம் மங்களம்” என்றார்
ஜெய் அன்னம் கால் வலிக்காமல் தலையணையை வாகாக வைத்துவிட நன்கு சாய்ந்து அமர்ந்து கொண்டாள் கட்டிலில். ஜெய் டாக்டர் தந்த ஆயின்மென்டை எடுத்து வர “ஐயோ” என்ற அன்னத்தின் சத்தம் மட்டுமே அந்த அறையில்.
“மன்னவன் தோள் தேடும் மங்கை மனம்!!! 
தோள் கொடுப்பானா??? தோள் சாய்ப்பானா??? 
மனம் ஆடும் ஆட்டதில் வீழ்பவர் யாரோ…”
தாளத்தில் சேராதா தனி பாடல்…………………..

Advertisement