Advertisement

                           ஓம் நமச்சிவாய
தாளம் 7    
இரவு ஜெய் மாடிக்கு வந்தாலும் அவனுக்குள் நிலையில்லாத தன்மை தான்.  அவன் வெளியில் வந்ததே மற்றொன்றை தேடி. வீட்டில் அவன் குடிப்பது இல்லை. மற்றவர்களுக்கு தன் பலவீனத்தை அவன் எப்போதும் காட்டுவது இல்லை. 
இதுவரை அவன் தனிமைக்கு துணை மது தான். அடிமை என்று சொல்ல முடியாவிட்டாலும் அது இல்லாமல் இத்தனை நாள் இல்லை. இங்கு வந்த பின் அதை தேட மனம் சொல்லவில்லை. இன்று தேவை பட வீட்டை விட்டு கிளம்பி விட்டான். 
  
அம்மாவும் அப்பாவும் வந்ததும் வீட்டில் நடந்ததை ரூபிணி சொல்லி விடுவாள். அவர் கேட்டால் நிச்சயம் இருவருக்கும் வாக்கு வாதம் வலுக்கும் என்று தெரிந்தே அவர்கள் வந்ததும் இவன் வெளியே வந்தது, அதோடு அன்னத்தின் கலங்கிய முகம் அவனை ஏதோ செய்ய மதுவை தேடி சென்றான். 
ஜெய்க்கு அன்னத்தை பிடிக்கும் என்றாலும், அவளை மட்டுமே பிடிக்கும் என்பது அவளை இங்கு வந்து பார்த்த பின் தான் அவனுக்கே புரிந்தது.  ஏழு வருடங்களில் அவளின் நினைவு  இல்லை என பொய் சொல்ல அவன் தயாராக இல்லை. அன்னதின் நினைவு இருந்தாலும் அதை ஓரத்தில் தள்ளி வைத்து இருந்தான் கேமிராவை முன் நிருத்தி. இந்த சில நாட்களாகவே அன்னத்தின் நினைவு அதிகம் தான் அவனுக்கு. வீராசாமி அனுப்பிய நோட்டீஸ் அவனுக்கு இங்கு வர ஒரு காரணம் மட்டுமே. 
ஜெய்யை பார்த்தும் அன்னத்தின்  அதிர்ந்த பார்வை, இத்தனை வருடங்களாக அவன் மனதில் சொல்லி கொண்டு இருந்த ‘இவள் என்னவள்’ என்ற சத்தம் இப்போது ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து இருந்தது.
இன்று ஈஸ்வரன், தேவகி முகத்தில் இருந்த மகிழ்ச்சியே சொன்னது தன்னை எந்த அளவுக்கு இவர்கள் எதிர் பார்த்து இருந்து இருக்கிறார்கள் என்று.
அதை நிரந்தரம் செய்ய அவன் எடுத்த முதல் முயற்சியே வெற்றிகரமாக தோல்வியை தழுவிக்கொண்டது.
ஜெய்  அன்னத்தை அழைத்து கொண்டு வெளியில் செல்ல தான் நினைத்து இருந்தான். ரூபிணி வீட்டில் இருந்து இருந்தால் அப்படி தான் செய்து இருப்பான், ரூபிணிக்கு ஏதாவது வாங்கும் சாக்கில்.
வீட்டில் யாரும் இல்லாது இருக்க, அவளை மட்டும் அழைத்தால் ‘என்ன நினைப்பாளோ??’ என்று நினைத்து தான் ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வந்தது. ரூபிணியின் புண்ணியத்தால் அது யார் வயிற்றுக்கும் போகாமல், குப்பைக்கு சென்று விட்டது…
கார் தன்னால் மில்லுக்குள் நுழைய, அப்போது தான்  புதிதாக லோட் வர…  அவன் தேடல் பின்னால் சென்றது. இரவு, நேரம் ஆனாதால் அங்கேயே தங்கி விட்டான் ஜெய். வீடு வராமல் இருக்க வேண்டும் என்று எண்ணம் எல்லாம் இல்லை ஜெய்க்கு.
அன்னம் காரில் இருந்து இறங்கியவள் ஜெய்யை தேடி போக, நோட்டில் எதையே எழுதிக்கொண்டு இருந்தான். 
அவன் முன் அன்னம் சாப்பாட்டு கேரியரை வைக்க, நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் தலை நுழைத்து கொண்டான் நோட்டில். அன்னம் தட்டில் இட்லியை வைக்க “நான் இன்னும் முகம் கூட கழுவல..” என்றான் ஜெய். 
அவள் பேசாமல் தட்டில் சட்னியை உற்றியவாறு கடை கண்ணால் பார்க்க… அவன் அங்கு இல்லை அவன் போனதை உறுதி படுத்தியவள்….
“எங்க ஊர் மாடு எல்லாம் காலையில எழுந்ததும் முகம் கழுவாம தான் புல் தின்னும்!!” என்று அன்னம் முடிக்க…
பின்னால் இருந்து “நேத்து ஒரு நாள் சண்டைக்கே நா மாடு ஆகிட்டேனா ….!!”  என்று ஜெய் கேட்கவும், விக்கியவள் அவனை பாவமாய் பார்க்க பரவாயில்லை “ஒரு ஃபோன் செஞ்சு என்னை விசாரிக்கலையின்னாலும்…  சாப்பிட கொண்டு வந்தியே அது போதும் !!” என்றவன் அவளிடம் இருந்து தட்டை வாங்க  “உக்காருங்க வைக்குறேன்” என்றாள். 
“உங்க ஊர் மாடு மூஞ்சி கழுவாம புல் திண்ணும்… ஆனா எங்க ஊர் மாடு குளிச்சுட்டு தான் புல் திண்ணும்” என்றவனை “என்ன??” என அன்னம்  பார்க்க “நா மாடுன்னா…!!! சாப்பிடு” என அவளுக்கும் வைக்க  “இல்ல இன்னிக்கு நான் விரதம்” என்றாள். 
அவளை பார்த்தவன் “இன்னிக்கு ஒரு நாள் லீவ் லெட்டர் குடுத்துட்டு  சாப்பிட்டு… உங்க சாமி அக்சப்ட் செஞ்சுக்கும்” என்றவன் அவள் முன் தட்டை நீட்டிய படி இருக்க ,”விரதம்” என்ற பின்னும் நான் சொல்வதை செய்… என்று அவள் முன் இருப்பவனை என்ன செய்ய?? தட்டை வாங்கியவள் சாப்பிட ஆரம்பிக்க,  அவள் சாப்பிட்ட பின் தான் சாப்பிட ஆரம்பித்தான்… 
அவனுக்கு தெரியும் இரவு அவள் சாப்பிட வில்லை, கொண்டு வந்த பாலையும் குடித்து இருக்க மாட்டாள் என்று. அதனாலேயே அவள் வந்ததும் முதலில் அவளை சாப்பிட வைத்து.
ஜெய் எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்தவன், அப்போதே வேறு டீவிக்கும் ஆர்டர் செய்தவன், அன்றைய வேலையை  அன்னத்திடம் சொல்லி வீட்டுக்கு போக அங்கு அமர்ந்து இருந்தார் நல்லசாமி. நல்லசாமி, ரம்யாவின் அண்ணனுக்கு பெண் தருபவர் ஜெய்க்கு சித்தப்பா முறையும் கூட.
“என்ன ஜெய் எப்படி இருக்குற??” நல்லசாமி 
“நல்லா இருக்குறேன் சித்தப்பா. நீ எங்க எப்படி இருக்கீங்க??” என்று விசாரித்தான். “நாளைக்கு பந்தகால் நடுறோம் ஜெய். நீயும் அன்னமும் தான் விசாகவுக்கு அண்ணா அண்ணியா நின்னு எல்லாம் செய்யனும். அது தான் சொல்லிட்டு போக வந்தேன்” 
“அதுக்கு நீங்க எதுக்கு சித்தப்பா அலையனும்.. ஃபோன்ல சொல்லியிருந்தா போதாதா” 
“அது எப்படிப்பா… அது முறையில்லையில… அதுவும் அன்னம் நான் வருந்தி கூப்பிட்டா கூட வராது. அது தான் நேர்ல ரெண்டு பேரையும் பாத்து சொல்லிட்டு போக வந்தேன். அப்ப நான் கிளம்புறேன். வர்றேன் அண்ணே, வர்றேன் ஜெய்” என்றவர்  சென்று விட்டார்.
வீராசாமியும் ஜெய்யும் மட்டும் ஹாலில் இருக்க அவனின் சந்தோசத்தை கெடுப்பதை போல வீராசாமி தான் கேட்டார். “நான் அனுப்புன நோட்டீஸ்க்கு என்னடா பதில்??” 
ஜெய் அவறை பார்த்தவன் “என்ன பதில் சொல்லனும்?? அதையும் நீங்களே சொல்லிட்டுங்க…” இது நாள் வரை வீராசாமியிடம் முகம் கொடுத்து பேசாதவன் பேசிவிட்டான்.
“இது வரைக்கும் எல்லா முடிவையும் நீங்க தான எடுப்பீங்க… இப்ப என்ன புதுசா கேக்குறீங்க!! என்னைய நம்பாம தான எவனோ சொன்னான்னு கல்யாணம் பண்ணிவைச்சீங்க… இப்ப எவன் என்ன சொன்னான்??” 
“ஜெய் அன்னத்தை விட்டு வேற பொண்ணு கூட குடும்பம் நடத்துறதா சொன்னானா..!! அது தான்  டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி வைச்சீங்களா!!??” என்று கேட்க வீராசாமி அவனை தான் பார்த்து இருந்தார். 
அவர் அளவில் அவர் செய்தது நியாமே. தன் மகனை ஒருவர் பேசுவதா… என்று நினைத்தவர் தன் மகனின் எண்ணம் என்ன?? என்பதை கேட்க தவறி விட்டார். கேட்டு இருந்து இருந்தால் இத்தனை வருந்தங்கள் இல்லாமல் இருந்து இருக்கும்
“என் கிட்ட டைவர்ஸ் வாங்கிட்டு அடுத்து என்ன செய்யுறதா உத்தேசம்… வேற கல்யாணம் செய்ய பையன பாத்து வைச்சுட்டீங்களா??” என்று கேட்க பளார் என்று அறைந்து விட்டார் ஜெய்யை. 
கன்னத்தை தடவியவன் “உங்களுக்கு உங்க பையன் மேல நம்பிக்கை இல்லாம போய் இருக்கலாம்… ஆனா நான் நம்புறேன்… எனக்கு எதுவும் தப்பா செய்ய மாட்டீங்கன்னு… அது தான் வந்தேன் நீங்க அனுப்புனதுக்கு பதில் சொல்ல இல்லை” என்றான் திமிராகவே…
“அனுக்கு விசயம் தெரியுமா?? அவளுக்கு தெரிஞ்சு தான் அனுப்பி வைச்சீங்களா??” ஜெய்யின் கேள்விக்கு “இல்லை” என தலையாட்டினார் வீராசாமி.
“அவகிட்ட தவறி கூட சொல்லிடாதீங்க… அப்பறம் என்னைய விட்டுட்டு உங்க எல்லாருக்கும் டைவர்ஸ் கொடுத்துடுவா…” என்றவன் அறைக்கு சென்று விட்டான் அவன் சொல்லி சென்ற பாவனையில் சிரித்து விட்டார் வீராசாமி.
அன்னம், ஜெய்  சென்றதும் அவன் சொன்ன வேலைகளை முடித்தவளை  மங்களம் தான் வீட்டுக்கு வர சொல்லி அழைத்திருந்தார். ‘என்ன எதுக்கு வீட்டுக்கு வர சொல்லுறாங்க… நேத்து நடந்ததை ரூபி அத்தைகிட்ட சொல்லிட்டாளா?? இல்லையே அவகிட்ட சொல்ல கூடாதுன்னு சொல்லி தான வச்சு இருக்கேன். இல்லையின்னா இவர் ஏதும் பேசிட்டாறா??’ என்று யேசனையுடன் வந்தாள் வீட்டுக்கு.
விசில் அடித்தபடி கீழே வந்தவனை மங்களம் தான் அழைத்தார் “ஜெய்” என்று 
“என்னம்மா??”
“அன்னத்தை கூட்டிக்கிட்டு கடை வரைக்கும் போயிட்டு வாப்பா” 
“எதுக்கும்மா??” 
“நல்லசிவம் பொண்ணுக்கு செய்ய இன்னும் எதுவும் எடுக்கலை… இப்ப தான் அப்பா சொன்னாரு அண்ணன் முறைக்கு நீ நிக்கனுமாம்.  அப்ப அந்த பொண்ணு புகுந்த வீட்டுக்கு போகும் போது நம்ம வீட்டு சீரும் போகனும்” 
“அதுக்கு தான் நீயும் அன்னமும் போயி வெள்ளி குத்துவிளக்கா பாத்து எடுத்துட்டு வாங்க..” என்று சொல்ல அன்னம் தயங்கி நின்றாள். 
ஜெய் அவளை பார்க்க “நான் எதுக்கு  அத்தை?? நீங்களும் அவரும் போய் வாங்கிட்டு வாங்க” என்றதும் ஜெய்யின் கோபம் ஏற தொடங்கியது.
மங்களம்  ஜெய்யை  பார்க்க “ம்மா கார்ல வெயிட் பண்ணுறேன் அவளை வர சொல்லுங்க” என்றவன் விடுவிடுவென என சென்று காரில் அமர்ந்து கொண்டான்.
மங்களம் தான் திட்டினார் அன்னத்தை “அவன் கூப்புடும் போது  நான் போகலையின்னு சொன்னா என்ன செய்றது அன்னம்?? அவன திரும்பி அனுப்பி வைக்குறதா எண்ணமா உனக்கு…  இத்தனை நாள் எப்படியோ எனக்கு தெரியாது, இனி அவன் வீட்டில தங்க வைச்சுக்குறது உன் பாடு. இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்லை. போ சீக்கிரம் புடவைய மாத்திக்கிட்டு வா” என்று அவளை அனுப்பி விட்டார்.

Advertisement