Advertisement

யோகாவின் அம்மா ,”யோகா…. என்று கூப்பிட்டு கொண்டே யோகாவை  தேடி மாடி நோக்கி வந்தார்”.
அவரின் குரல் கேட்டதும்,ஷான் தன் சுயநினைவு அடைந்தான், தன் கையில் இருந்த யோகாவை சுவர் ஒரமாக சாய்த்தான், தான் ஏறி வந்த மாடி படிகளில் இறங்கினான்.
யோகாவின் அம்மா மேலே வரும் போது யோகா கண்மூடி சுவர் ஒரமாக சாய்ந்திருந்தாள்,”யோகா…. “,என்று அவர் தொட்டு அழைக்க.
“என்ன அம்மா”,என்று சுயஉணர்வு அடைந்தாள்.
“ஏன் யோகா இப்படி இருக்கிறாய், முகம் எல்லாம் சிவந்து போய் இருக்கிறது,காச்சல் ஏதும் அடிக்கிறதா, “என்று கூறி தொட்டு பாா்த்தாா்.
“ஒண்ணும் இல்லை அம்மா,” என்றாள்.
அவள் மனதில்,இந்த ஷான் வந்தது உண்மை தானா? அவன் நமக்கு முத்தம் கொடுத்தானே அதுவும் உண்மையா? நாம் கண்டது கனவு இல்லையா?எல்லாம் உண்மை என்றால் ,இந்த ஷான் எங்கே இருக்கிறான்,சுற்றும் முற்றும் பாா்த்தாள்,ஆனால் இந்த ஷானை பாா்க்க முடியவில்லை.
இவள் சுற்றும் முற்றும் பாா்த்ததை பாா்த்து,”யோகா எங்கே பாா்கிறாய்,இங்கு வேறு யாரும் உள்ளாா்களா?”, என்று கேட்டாா் யோகாவின் அம்மா.
“அது ஒண்ணும் இல்லை அம்மா,ஏதோ நியாபகமாய் பாா்த்தேன்,”என்றாள்.
“நீ கல்லூரில் இருந்து வந்ததில் இருந்து நீ சரியாக இல்லை,அங்கே என்ன நடந்தது,என்னிடம் எதையும் மறைக்காதே,” என்றாா்.
அம்மா நான் எப்படி உங்களிடம் சொல்லுவேன்,ஷானை பற்றி என்று மனதில் நினைத்தவாரே ,”அம்மா இன்று கல்லூரில் எல்லோரும் ஏன் இவ்வளவு நாள் வரவில்லை என்று கேட்டனா்,அதற்கு பதில் சொல்லவே நேரம் போதவில்லை ,அதையே நினைத்து கொண்டே இருந்தேன்,நீங்கள் கூப்பிடுவது கேட்கவில்லை.,” என்றாள்.
“நம்பிட்டேன் ….நீ கீழே வா ,”என்றாா்.
யோகா கீழே தன் அம்மாவுடன் சாப்பிடச்  சென்றாள்.
ஷான்,யோகாவின் வீட்டில் இருந்து தாங்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு வந்தான்.அங்கே ராம் ,”என்ன ஷான், எங்கே போய் இருந்தாய் நாங்கள் எங்கே எல்லாம் தேடினோம் தெரியுமா,உன் முகம் ஏன் இவ்வாரு ஜொலிக்கிறது,” என்றான்.
அதை கேட்டவுடன்,ஷானின் முகம் புன்சிரிப்பு சிந்தியது,”நான்…. என் யோகாவை பாா்த்துவிட்டு வருகிறேன்”என்றான்.
“வா நாம் சாப்பிடலாம்,”என்றான் பிரகாஷ்.
சாப்பிட்டுவிட்டு அவர்கள் படுத்தாா்கள்.
ஷானின் கனவில் யோகா வந்து,”நீ என்னை பிடிக்க முடியாது ஷான்,” என்றாள்.ஷானின் தூக்கம் கலைந்தது,”உன்னை பிடிக்க நான் வரேன் விழிஷா, உன்னை என்னிடம் இருந்து யாரும் பிரிக்க முடியாது,இன்றைக்கு இதற்கு ஒரு முடிவு கட்டுறேன்.”என்றான்.
ஷான் தன் நண்பர்களுடன்,கல்லூரில் நுழையவும்,யோகா நுழையவும் சரியாக இருந்தது.
 
யோகா அதிர்ச்சியாக ஷானை பாா்த்தாள்,”நேற்று கல்லூரியில் நண்பர் பேசியது இந்த ஷானை தானா,இது தெரியாமல், நான் என் நினைவில் இருந்து உள்ளேன்,”என்று நினைத்தாள்.
அப்போது தன் வண்டியில் வந்து இறங்கினாள் மகதி,ஷானை பாா்த்து ,”என்ன ஷான் ? உன் மனைவியாக வரப்போகிற என்னை கண்டுகாமல் போகிறாய்,எப்படி இருந்தாலும் நான் தானே உன் மனைவியாய் வர பேகிறேன்? “என்றாள்.
இதை கேட்டதும்,”யோகாவிற்கு கண் மண் தெரியதா கோபம் வந்தது,அவள் ஷானை பாா்த்து முறைத்தாள்.” 
ஷானுக்கு சிரிப்பு வந்தது,மனதில் அதை அடக்கினான்,மகதியை பாா்த்து,”நீ நினைப்பது ஒரு நாளும் நடக்காது,ஏன் என்றால் என் மனதில் மனைவியாக ஒருத்தி வந்துவிட்டாள்,அவளை தான் நான் திருமணம் செய்து கொள்வேன்.உன்னால் முடிந்ததை நீ செய்து கொள்,” என்று சவால்விட்டான்.
” அதையும் பாா்க்கலாம்? யாா் அவள் எனக்கு எதிராக,”என்றாள்.
நேற்றே ஷானை பற்றி அவள் தந்தையிடம் கூறினாள்,அவர் கவலைப் படாதே ஷான் உனக்கு தான் என்று ஷானை பற்றி தெரியாமல் வாக்களித்தாா்.அந்த சந்தோசத்தில் கல்லூரிக்கு நுழையவும்,இந்த ஷான் அந்த சந்தோசத்தை கெடுக்கும் விதத்தில் பேசி செல்கிறான்,மனது வலித்தாலும் அதை வெளி காட்டி கொள்ளாமல் ,கெத்தாக செல்கிறாள்.
யோகாவிற்கு கண் மண் தெரியதா கோபம்,அந்த கோபத்தை எல்லாம் தன் தோழிகளிடம் காண்பித்தாள்.
அவர்கள் இவள் கோபம் அறிந்து,அமைதியாக இருந்தனா்,அதற்கு முக்கிய காரணம்,பிரகாஷ் மற்றும் ராம் இருவரும் ஆனந்தி,சிந்துவை பாா்த்தபடி இருந்தனர்.
இவர்களை பாா்த்ததும் ஆனந்திக்கு “இவர்கள் எதற்கு இங்கே வந்தாா்கள்,” என்று நினைத்தாள்.
சிந்துவோ,”இந்த எலி மூஞ்சி எதற்கு என்னை பாா்க்கிறது,அந்த கண்ணை நோன்டி கைல கொடுத்திடனும்,”என்று நினைத்தாள்.
இவர்கள் இப்படி நினைத்து கொண்டு இருக்க, நம் ஷானின் நண்பர்கள் தங்கள் இனணகளை பாா்த்ததும் தங்களை மறந்து பாா்த்து கொண்டு இருந்தனர்.
இதை தற்செயலாக திரும்பி பாா்த்த ஷான் ,தன் நண்பர்களின் காதலை அறிந்து கொண்டான்.
“வாங்க நாம்  போகலாம்,”என்று தன் நண்பர்களை அழைத்து சென்றான்.
மகதி மனதில் ,” இந்த ஷான் யாரை விரும்புகிறான் , அவளை நான் விரைவில் கண்டு பிடிக்கனும்,அவன் காதல் எப்படி நிறைவேறும் என்று நான் பாா்க்க தானே போகிறேன்,”என்றாள்.
யோகா,தன் தோழிகளை அழைத்து கொண்டு வகுப்புக்கு நுழைந்தாள்,அப்போது,ராகவி ஓடி வந்தாள்,,”யோகா…யோகா…. நீ பாா்த்தியா அந்த மூன்று பேரை,நீங்கள் மூன்று பேரும் அவர்களும் ஓரே சமயத்தில் தானே வந்திர்கள் கல்லூரிக்கு,”என்றாள்.
இவள் கூறியதை கேட்டதும்,”ஆமாம் ,அவனை பாா்த்தோம்,அதற்கு என்ன?”என்றாள் யோகா.
“என்ன யோகா, இப்படி பேசுகிறாய்,நான் சும்மா தானே கேட்டேன்,”என்றாள் ராகவி.இதை சொல்லிவிட்டு,”நான் வருகிரேன்” என்று கூறி சென்றாள்.
யோகாவிற்கு அவள் தோழிகளுக்கும்,எப்படியோ அந்த நாளை கடத்தினர். அன்று மாலை அவர்கள் வீடு திரும்பும் போது,ஷான் தன் நண்பர்களுடன் யோகாவின் முன் வந்து,”யோகா நில்லு உன்னுடன் தனியாக பேசனும்,” என்றான்.
“எதற்கு தனியாக பேசனும் ,நம்மை பாா்த்து ஊர் தப்பாக பேசனும் அதற்கா….,உங்கள் வேலை எதுவோ ,அதை பாத்திட்டு போங்க….,”என்றாள் யோகா.
“ஏன் யோகா ,இப்படி பேசுகிறாய்,நான் சொல்ல வருவதை கேள்,”என்றான் ஷான்.
“ஓண்ணும் சொல்ல வேண்டாம்,” தயவு செய்து ஆளைவிடுங்கள் என்று கை கூப்பிவிட்டு தன் தோழிகளை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்றாள்.
வீட்டுக்கு வந்ததும்,தன் தோழிகளை பாா்த்து ,”நான் என்ன செய்வேன்….. ,” என்று கூறினாள்.
சிந்து,”நாம் இந்த ஷானிற்கு ஓரு முடிவு எடுக்க வேண்டும்.,”என்றாள்.
ஆனந்தி,”நாம் அமைதியாக இருந்து காய்யை நகர்த்துவோம் யோகா,”என்றாள்.
“யோகா! நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல் ,நீ ஷானை விரும்புகிறாயா,”என்றாள் ஆனந்தி.
யோகா,” இதற்கு என்ன பதில் சொல்லூவேன் என்று தெரியவில்லை,ஏன் என்றாள் இந்த ஷான் என் மனதில் என்னை அறியாமல் நுழைந்துவிட்டான்,அவனை நான் எப்படி மறப்பது என்றே தெரியவில்லை ” என்று கூறி அழுதாள்.
இவள் சொன்னதை ,மற்றோரு நபர் கேட்டதை ,இவர்கள் அறியவில்லை.
இங்கே விதி யோகாவை பாா்த்து சிரித்தது.
யோகாவை சமதானம் செய்துவிட்டு ,இவர்கள் சென்றனர்.
நாளை மறுநாள்,புதுவருடம் பிறக்கிறது,கல்லூரியில் புத்தாண்டை இந்த வருடம்  மிக சிறப்பாக கொண்டாடுவதற்காக கல்லூரி நிர்வாகம் ஆணை பிரப்பித்து உள்ளது.அதனால் எல்லோரும் நாளை நம் தமிழ் பண்பாடுபடி புடவையும்,வேட்டியும் அணிய வேண்டும் என்றாா்கள்.
யோகா,”காலையில் எழுந்தவுடன், தன் அம்மாவை கூப்பிட்டாள்,அம்மா நான் எந்த புடவை கட்ட “என்று கேட்டாள்.
அவள் அம்மா,”யோகா நீ இந்த பிங்கு புடவை கட்டு ,”என்றாா்.
“அம்மா இந்த புடவை அத்தை நிச்சயத்திற்கு எடுத்து வந்தது,”என்றாள்.
“அதற்கு என்ன,நம் அத்தை எடுத்துட்டு வந்தது தானே,நீ இந்த புடவை அணிந்து கொண்டு கீழே  சாப்பிட வா ,”என்றாா்.
யோகா மனதில்,”இது ஷான் எடுத்து கொடுத்த புடவை அல்லவா நான் இதை எப்படி அம்மாவிடம் சொல்லுவேன்”,என்றாள்.
“யோகா …. யோகா… இன்னும் ரெடியாக வில்லையா,”என்றாா் யோகாவின் அம்மா.
“இதோ அம்மா”,என்றாள்.
புடவை அணிய…. அணிய…,ஷானின் நினைவே 
வந்தது,அன்று ஷான் அவளை அணைத்ததும் ,முத்தமிட்டதும் நினைவு வந்து ,அவள் முகத்தை செம்மையாக மாற்றியது.
யோகா கீழே இறங்கி வரும் போது,” என்ன யோகா கன்னம் இவ்வளவு செம்மையாக மாறிவுளது,நீ அழுதியா” என்று கேட்டாா் யோகாவின் அம்மா.
“இல்லை மா, நான் அழுக வில்லை ,முகத்தில் பவ்டர் கூடிவிட்டது அதை துடைத்தேன்,”என்றாள்.
“சரி சீக்கிரம் சாப்பிடு,ஆனந்தியும்,சிந்துவும் வந்து விடுவாா்கள்,”என்றாா்.
“சரி அம்மா,” என்று கூறி சாப்பிட்டாள்.
அங்கே ஷான்,ராமிடம்,,”இது என்ன   வேட்டி டா நிக்க மாட்டேன்கிறது,”என்றான்.
ராம்,”அதற்கு தான் நான் ஒட்டிகோ கட்டிகோ வேட்டி யை வாங்கினேன்,நீ தான் பெரிய இவன் மாதிரி அன்றைக்கு டைலாக் பேசினாய்,இப்போது என்னிடம் வந்து கேள், நான் என்ன செய்வேன்,”என்றான்.
ஷான்,”அது இல்லை டா,தமிழ் நாட்டு பண்பாடு ,”என்று இந்த வேட்டியை ஏன் சொல்லுகிறாா்கள் உனக்கு தெரியுமா?”,என்றான்.
ராம்,”ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” என்பது பழமொழி உனக்கு தெரியுமா ஷான், ஆடை மக்களை மவுசுக்குரியவர் களாக்குகிறது. நாகரிகத்தின் நல்லிணக்கமாக திகழ்கிறது.  நாளடைவில் உடையே நமது சமூகத்தின் கலாசார குறியீடாக மாறி விட்டது ஷான்.
ராம்,”ஷான்…ஆதி காலத்தில் கடும் குளிர், வெப்பம், மழை போன்றவற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள இலைகளையும், மிருகங்களின் தோல்களையுமே உடுத்தி வந்தது மனித சமுதாயம். அதன் வெளிப்பாடாகத்தான் தமிழ்க் கடவுளின் தந்தையும், எந்நாட்டவருக்கும் இறைவனுமான சிவபெருமான் புலித் தோலை இடுப்பில் கட்டி உள்ளார் என்றனா்.
நீ நினைக்கலாம்,ஏன் கடவுளை இதில் சமந்த படுத்தி உள்ளனா் என்று? அதில் ஒரு தத்துவம் அடங்கி உள்ளது,நம் முன்னோர்கள் இறைவனை தம் உள் கண்டனர்,”என்றான்.
ஷான் ராமிடம்,” எப்பா… ,என்ன அற்புதமாக உன் கடவுளை எனக்கு சொல்லிவிட்டாய்,”.
உனக்கு தெரியுமா ராம்,”
நாகரிகம் வளர, வளர மனிதர்கள் தாங்கள் வாழும் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப பருத்தி, கம்பளி, சணல் போன்றவற்றால் ஆடையை நெய்து அணிய தொடங்கினர்.தமிழகத்தை பொறுத்த வரை பருத்தி மட்டுமே முதலில் ஆடை நெய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது. பால் நுரையை ஒத்த மென்மையான மஸ்லின் துணியும், சீனாவில் பிறந்த பட்டும் நம் பண்டைத் தமிழ் துறைமுகங்களுக்கும் கடல் வழியே இறக்குமதியாகின. பட்டு ஆடைகள் இறைவனும், செல்வந்தரும், அரச குலத்தோரும் அணியும் உயர்நிலை பெற்றன. சங்க காலம் வரை உடையைத் தைத்து அணியும் பழக்கம் நம்மிடையே இல்லை. சிற்றாடை, மேலாடை என பல வகை நீளங்களில் இடையிலும் மார்பிலும் கட்டிக் கொள்ளப்பட்டன.இவை எல்லாம் என் பாட்டி நான் சிறுவயதில் இருக்கும் போது சொன்னாா்,”என்றான் ஷான்.
நான் சிறுவயதிலே எல்லா மொழியை கற்று கொண்டேன்,அதில் இது எல்லாம் தெரிந்து கொண்டேன், கிட்டத்தட்ட “800 ஆண்டுகளுக்கு முன்பு தான் சேலை உடுத்தும் கலாசாரம் நம்மிடையே தோன்றி இருக்க வேண்டும். வேட்டி எனப்படும் வெள்ளை உடை நெடுநாட்களாக வழக்கத்தில் இருந்திருக்க வேண்டும். 
சிலப்பதிகாரத்தில் இந்திர விழாக்களுக்கு அனைவரும் தூய வெள்ளை உடை அணிந்து சென்றதால் அதற்கு வெள்ளணி விழா என்றொரு பெயரும் வழங்கி வந்திருக்கிறது. 
எது எப்படியோ, சேலை எனப்படும் கண்ணுக் கினிய, கண்ணியமான உடை தமிழர்களின் கலாசார சின்னமாயிற்று. புடவையும், சிறுமிகளுக்கு பாவாடை, சட்டையும், வளர்ந்த பெண்களுக்கு தாவணியும் என அழகிய உடைகள் வடிவமைக்கப்பட்டு நம்மிடையே உலவி வந்தன. வெப்ப மண்டலப்பகுதியான தமிழகத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட  இந்த உடைகள் அழகும், அமைதியும் தரவல்லவை.
தாவணி அணிந்து தேவதைகளாய் வலம் வந்த பெண்கள், ஆண்கள் மனதில் ரசிப்புத் தன்மையை மட்டுமே வளர்த்தனர். ஆண், பெண் ஈர்ப்பையும் இலைமறை காயாக ஒரு வரம்பிற்குள் வைத்திருந்தது உடை விஷயத்தில் இளம்பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடு. அறிவியல் பூர்வமாக சிந்தித்து உருவாக்கப்பட்ட நமது பாரம்பரிய உடைகள் மருத்துவ, அறிவியல் ரீதியாகவும் பெண்களுக்கு உகந்ததாகவே இருந்து வந்தது.
சுதந்திர போராட்ட காலத்தில் அண்ணல் காந்தியின் அடியற்றி சுதேசி ஆடையான கதரை அணிந்த பெண்கள் ஏராளம். மானம் காத்த கதராடை நம்மை ஆண்ட அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்க்கவும் பயன்பட்டது. அயல்நாட்டு ஆடைகளுக்கு தீமூட்டும் அளவுக்கு இந்திய பெண்கள் கதராடையை நேசித்தனர். ருக்குமணி லட்சுமிபதி, எழுத்தாளர் குமுதினி, கேப்டன் லட்சுமி போன்ற பலர் தங்கள் வாழ்வு முழுவதும் கதரையே உடுத்தி வந்த லட்சிய பெண்மணிகள்.
நம் உடலை உறுத்தாத மென்மையும், காண்போர் மனதை உறுத்தாத மேன்மையுமே உடைகளின் இலக்கணம். 
தாவணி காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. வடக்கில் இருந்து இங்கு வந்து ஆதிக்கம் செலுத்தும் சுடிதார், சல்வார் கம்மீஸ்களும் கூட உருமாறி லெக்கின்ஸ், ஜீன்ஸ் போன்ற மேற்கத்திய உடைகள் மட்டுமே இன்றைக்கு வழக்கத்தில் உள்ளன. அவையும் குறைந்து அரையாடை உடுத்துவதே அற்புதம் என நினைக்கும் நிலை மேலோங்கி நிற்கிறது.
அனைத்து விஷயங்களையும் ஆழமாக, அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து வடிவமைத்த நமது தனித்தன்மை வாய்ந்த பாரம்பரிய உடைகளே,”என்றான் ஷான்.
ராம்,”ஷான் நீ இவ்வளவு தெரிந்து வைத்து கொண்டு,ஏன் என்னிடம் இதை பற்றி கேட்டாய்,”என்றான்.
“சும்மா கேட்டேன்,அதனால் தானே உனக்கு தெரிந்த கடவுளை இப்படி ஆடையோடு சம்மந்த படுத்தினாய்,”என்றான் ஷான்.
“அது உண்மை தான் ஷான், நீ முஸ்லிம் அதனால் இதை ஏற்க மறுக்கிறாய்,”என்றான் ராம்.
“அப்படியும் இருக்கலாம்,எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு,”என்றான் ஷான்.
“பிரகாஷ் எங்கே காணோம்,”என்றான் ஷான்.
உடனே ராம்,” அவன் எங்கே இருப்பான்…,,எல்லாம் பாத் ரூம்மில் தான்,”என்றான்.
“என்ன,என் பெயர் அடிபடுகிறது,” என்று வந்தான் பிரகாஷ்.
“என்னடா ,கலியாண மாப்பிளை போல் ரெடியாக வந்துள்ளாய், பெண்ணை பாா்ப்பமா இல்லை நீ பாா்த்திட்டியா”என்றான் ஷான்.
பிரகாஷ் மனதில்,”இவன் தெரிஞ்சு கேட்கிறானா இல்லை தெரியாம கேட்கிறானா  தெரியவில்லையே ” என்று நினைத்தான்.
ராம், “சரி சரி எல்லோரும் கிளம்புவோம் ,நேரம் ஆகிவிட்டது,”என்றான்.
கல்லூரியில் என்ன நடக்க போகிறது என்று பாா்கலாம்……
,

Advertisement