Advertisement

ஷான்,தன் நண்பர்களை அழைத்து கொண்டு சென்னைக்கு வந்தான்.யோகா படிக்கும் கல்லூரியில் MBA இரண்டாம் ஆண்டுக்கு இடம் வாங்கி அவர்கள் சோ்ந்தனர்.
இந்த இரண்டாம் ஆண்டில்,அவர்களுக்கு ப்ராஜெக்ட் தான்,அதனால் சென்னையில் அவர்கள் தொடங்கிய புது கம்பெனியில் ,நண்பர்கள் அனைவரும் ப்ராஜெக்ட்டை செய்வதாக உள்ளனா்.
ஷான் தன் தந்தையிடம்,”அப்பா நான் ஒரு புது கம்பெனி சென்னையில் ஆரம்பிக்கின்றேன்,அதனால் என்னுடைய படிப்பை நான் சென்னையில் மாற்றிவுள்ளேன் ,” என்றான்.
ஷானின் தந்தை,”சரி  நல்ல படியாக ஆரம்பி,எந்த உதவி வேண்டும் என்றாலும் என்னிடம் கேள்,”என்றார்.
ஷானின் தந்தை மனதில்,”இவன் எதற்கு சென்னையில் புது கம்பெனி ஆரம்பித்தான்,ஏதோ சந்தேகமாக இருக்கு,கொஞ்ச நாள் முன்னே இவன் சென்னை சென்று வந்தான்,வந்தவன் உடனே தொழில்லை சென்னையில் மாற்றிவுள்ளான்,நாம் இவனை கண்காணிக்கனும் ” என்று மனதில் நினைத்தாா்.
யோகா தன் தோழிகளிடம்,”நிச்சயம் நின்ற விசயத்தை தொலைபேசி மூலமாக சொன்னாள்,நான் திங்கள் கிழமை கல்லூரிக்கு வருவேன் ,” என்றாள்.
ஷான்,தன் நண்பர்களுடன் திங்கள் கிழமை கல்லூரிக்கு வந்தான்,அவன் கல்லூரிக்கு நுழைந்ததும் மாணவர்கள் எல்லாம் ரெம்ப ஆச்சிரியமாக அவனை பாா்த்தனர்.
யோகாவின் வகுப்பு மாணவன், நந்து,அவன் தான்,  இந்த கல்லூரில் கீரோ போல் திரிவான்.
அவனுடைய நண்பர்கள்,ஷானை பாா்த்து,”மச்சான் உன்னை மிஞ்ச ஒருவன் வந்துட்டான்யா…வந்துட்டான்….!,”என்றனர்.
“அப்படி யாா் டா….. அவன்.?”என்றான் நந்து.
“டேய் கொஞ்சம் திரும்பி பாரு நான் சொல்லுவது உனகே புரியும்,”என்றான் நந்துவின் நண்பன்.
நந்து ஷாக்காகி நின்றான்,”ஷானை பாா்த்து”.
ஆனாலும்,அவன் கேத்தை விட்டு கொடுக்காமல்,”இங்க ,ஏதாவது படம் சுட்டிங் நடைபெருகிறதா இருக்கும், உங்கள் கண்ணை வைத்து ஒழுங்கா பாருங்க,இவன் இந்தி கீரோ போல் தானே இருக்கிறான்,”என்றான் நந்து..
இவர்களை நோக்கி வந்தான் ஷான்,தன் நண்பர்களுடன்.
நந்து,”ஷான் இவர்களை நோக்கி வருவதை பாா்த்து,என்ன இவன் நம்மளை நோக்கி வருகிறான்,பாா்க்க இந்தி கீரோ எல்லாம் இவன் கால் தூசிக்கு சமம் போல் உள்ளான்,இவன் எதற்கு வருகிறான்.”என்று மனதில் நினைத்தான் நந்து.
ஷான்,நந்துவை பாா்த்து ,”எக்ஸ் கியுஸ் மீ”,இங்கே MBA இரண்டாம் வகுப்பு எங்கு இருக்குது என்று கேட்டான்.
ஷானை பாா்த்து நந்து,”நீங்க சீனியரா,”என்று கேட்டான்.
“அப் கொஸ், நாங்க சீனியர் தான்,என்று ஷான் சொல்ல.
” பாஸ்,என்னை மன்னித்துவிடுங்க காலில் விழாத குறையாய் கெஞ்சினான்,”நந்து.
“நான் என்ன கொள்ள கூட்ட  தலைவனா பாஸ்! பாஸ்!… “,என்று கூறுகிறாய்.
“மன்னிச்சிடுங்க தலைவா!!!”என்றான் நந்து.
” ஓகே நீ இவ்வளவு கேட்டதுனால்,நான் மன்னிக்கிறேன்,என்று ஷான் சொல்ல.
“ஒரு கும்பிடு போட்டுவிட்டு”,ஓடி போனான் நந்து.
அவன் ஓடினதை பாா்த்து, அவன் நண்பர்களும் ஷானை பாா்த்து “வணக்கம் தலைவா!!!” என்று கும்பிட்டு சென்றனா்.
யோகா அன்று தான் கல்லூரிக்கு வந்தாள்,சிந்து மற்றும் ஆனந்தியுடன் பேசி கொண்டு, இருந்தாள்.
அப்போது,யோகாவை பாா்க்க ராகவி வந்தாள்,”யோகா எப்படி இருக்க,ஏன் நீ ஒரு வாரமாக கல்லூரிக்கு வரவில்லை”என்று கேட்டாள்.
ராகவியை பற்றி சொல்ல வேண்டும் என்றால்,அவள் ஒரு தபால் காரி,ஒரு விசயம் கிடைத்தால்,அதை ஊதி பெரிசாக ஆக்கிவிடுவாள்.
யோகா மனதில் நினைத்தால்,இவள் என்ன விசயமாக நம்மளை பாா்க்கவந்திருப்பாள்,நம்ம விசயம் தெரிந்துவிட்டதோ ,தன் தோழிகளை பாா்த்தாள்,அவர்கள்இல்லை என்று தலையை அசைத்தனர்.
உடனே யோகா,” நாம் சுற்றூல சென்று வந்ததில் இருந்து எனக்கு உடம்புக்கு முடியவில்லை, நீ என்ன விசயமாக பாா்க்க வந்திருக்க ? “என்று கேட்டாள்.
” அடியே யோகா உனக்கு விசயம் தெரியாத,”என்று கேட்டாள் ராகவி.
“என்ன விசயம்,”என்று கேட்டாள் யோகா.
“நீயோ கல்லூரியின் பேர் அழகி,உனக்கே செய்து வைத்தது போல் ஒருத்தன் வந்துள்ளான்.”என்றாள்.
இதை கேட்டவுடன்,யோகாவிற்கு எங்கு இருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ,”நீ என்னை, யாா்க்கு உடையும் சேர்த்து வைத்தது பேசாதே,அப்படி பேசினால் நான் மனுசியாய் இருக்க மாட்டேன்,”என்றாள்.
இதை கேட்ட ராகவி,”நான் அப்படி என்ன சொல்லிட்டேன்,உனக்கு ஏத்த ஜோடி ஒருத்தன் வந்திருக்கான் என்று தானே சொன்னேன்,நீ ஏன் இவ்வளவு கோபம் கொள்கிறாய். நான் இனி உன்னை அப்படி சொல்லமாட்டேன்” என்றாள்.
ஆனாலும் நான் சொல்ல வந்த விசயத்தை சொல்லுகிறேன் என்றாள் ராகவி,” யோகா உன் பின்னாடியே இந்த நந்து திரிவானே,அவன் இன்று வந்த சீனியா் மாணவனை பாா்த்து பயந்து ஒடினான்,அது தான் கல்லூரியின் கைலைட்,”என்றாள்.
மேலும் அவள் சொன்னால்,”சீனியா் மாணவனை பாா்க்க,ராஜா மாதிரி இருக்கான்,அவனுக்கு துணையாக இரண்டுபேர் வந்துள்ளனர்,”என்றாள் ராகவி
“யாா் அவர்கள்,” என்றாள் சிந்து.
“பெயா் தெரியாது,ஆனால் MBA இரண்டாம் வகுப்புக்கு ,இன்னைக்கு தான் வந்திருக்காங்க,என்றாள் ராகவி.
“அப்பிடியா”,என்றாள் சிந்து.
“வகுப்புக்கு நேரம் ஆகிவிட்டது, நாம கிளம்பலாம் ,”என்றாள் யோகா.
அவர்கள் வகுப்புக்கு செல்ல,அங்கே ஷான்,தன் நண்பர்களுடன் உணவகத்துக்கு சென்றான்.
இவனின் வகுப்பில்,சென்னையில் தொழில் துறை அமைச்சரின் மகள்,மகதி படிக்கிறாள்.
ஷான் வந்த விசயத்தை கேள்விபடுகிறாள்,இந்த கல்லூரியில் தன்னை விட நிகா் எவரும் இருக்க கூடாது…,இருக்கவும் கூடாது…. என்ற நினைப்பை உடையவள் இந்த மகதி.
அவள்,அவளுடைய தோழிகள் புடை சூள உணவகத்துக்கு சென்றாள்.அங்கே ஷானை பாா்த்ததும் தன்னை மறந்து இருந்தாள்.
“இவன்,என்னவன்,எனக்கு மட்டும் சொந்தம்,நான் இவனை அடைந்தே தீருவேன்.” என்றாள் மகதி.
உணவகத்தில்,ஷானுக்கு நேர் எதிாில் உள்ள இருக்கையில் இருந்தாள் மகதி.
இவளை பாா்த்ததும்,ஷான் பிரகாஷிடம்,”பாரு கண்ட கண்ட சக்கடை எல்லாம் என் முன் இருக்கிறது.” என்றான்.
இதை கேட்டதும்,மகதிக்கு கோபம் வந்துவிட்டது,”என்ன நான் சக்கடை யா”,என்றாள்.
“நான் யாா் தெரியுமா?”என்றாள் மகதி.
“ஆமா,நீ யாராக இருந்தால் எனக்கு என்ன ? ,”என்றான் ஷான்.
“நான் சென்னையில் தொழில் துறை அமைச்சரின் மகள்,நான் உன்னை என்ன செய்கிறேன் பாா்.”
என்றாள் மகதி.
“சரி தான் போ!!! இங்கு இருந்து,”என்றான் ஷான்.
அவள் தன் கால்களால் ஒரு உதையை நிலத்திற்கு கொடுத்துவிட்டு,”பாா்போம்! யாா் வெற்றி பெருகிறாா் ? என்றாள் மகதி.
அவள் அங்கு இருந்து கிளம்ப.
பிரகாஷ் ஷானிடம் ,”நாம் வந்த வேலை என்ன,நீ ஏன் அவளை சீண்டினாய்,அவள் வேறு ஏதாவது செய்தால்,நாம் என்ன செய்ய?என்றான்.
இதற்கு நீ ஏன் கவலை படுகிறாய்,”அவள் அப்பா ஒரு பித்தலாட்டகாரன்,அவனுக்கு எல்லாம் பயம் பட முடியாது.”என்றான் ஷான்
“அவரை எப்படி ,எங்கே சந்திக்கனும் என்று எனக்கு தெரியும். நீ கவலை படாதே!”, என்றான் ஷான்.
“நாய் கொலைத்தால்,அதை நாம் கண்டு கொள்வோமா,இல்லை அல்லவா ! அதை போல் தான் இந்த மகதி “,என்று கூறினான்.
ஷான் தன் நண்பர்களுடன் வகுப்புக்கு கிளம்பினான்.
யோகாவின் மனம் பட!!! பட!!! என்று அடித்து கொண்டு இருந்தது,தனக்கு ஏதாவது நடக்குமோ ! என்று நினைத்து கொண்டு இருந்தாள்.
வகுப்பு முடிந்ததும் தன் தோழிகளுடன்,அவள் பேருந்தில் ஏற  சென்றாா்கள்.அப்போது, தன்னை யாரோ பாா்ப்பதாக உணா்ந்தாள்,உடனே திரும்பி பாா்த்தாள்.
அங்கே யாரும் இருப்பது போல் தெரியவில்லை,அப்போது தான் ஷான் ,தன்  கைபேசின் சத்ததில் நினைவு கலைந்தான் ,கைபேசி எடுத்து தன் தந்தையிடம் தனியே பேச மரத்திற்கு அந்த பக்கம் சென்றான்,அவன் அந்த பக்கம் நகர்ந்ததும் அவள் திரும்பி பாா்க்கவும் சரியாக இருந்தது ,யோகாவால் ஷானை பாா்க்க முடியவில்லை.
சிந்து,” ஏன் யோகா திரும்பி ,திரும்பி பாா்த்திட்டு வார,”என்றாள்.
யோகா,” அங்கே யாரோ என்னை பாா்ப்பதாக உணா்ந்தேன் ,”என்றாள்.
சிந்து,”அங்கே திரும்பி பாா்த்தாள்,அங்கே யாரும் இருந்த மாதிரி தெரியவில்லை,”என்றாள்.
ஆனந்தி,”வாங்க நாம் கிளம்பலாம்,நேரம் ஆகிவிட்டது,”என்றாள்.
யோகா,”சரி கிளம்பலாம்”,என்றாள்.
அவர்கள் அனைவரும்,யோகா வின் காாில் வீடு வந்தனர்.
யோகா வீட்டிற்கு வரும் போது , அவள் அம்மா,”யோகா ,இந்தா இந்த காப்பியை குடித்திட்டு போ ,”என்றார்.
“அம்மா ,நான் குளிச்சிட்டு வாரேன்,வந்து நான் சாப்பிடுகிறேன்,”என்றாள்.
“சரி சீக்கிரம் வா,நான் எல்லாம் ரெடி பண்ணி வச்சு இருக்கேன்,இன்னைக்கு பிரதோசம் அதனால், நான் கோவிலுக்கு செல்கிறேன்,”என்றார்.
” சரி அம்மா,நான் எடுத்து போட்டு சாப்பிடுகிறேன்,பாட்டி கேட்டால் ஏதாவது கொடுக்கிறேன்,”என்றாள்.
அவள் அம்மா கோவிலுக்கு சென்றாா்.
ஷானின் தந்தை ஷானிடம்,”எப்படி இருக்கா ஷான்,புது கம்பெனி வேலை எல்லாம் எப்படி சென்று கொண்டு இருக்கிறது,”என்றார்.
ஷான் மனதில் தன் தந்தையை வருத்து எடுத்து கொண்டு இருந்தான்,”இந்த அப்பா, காலம் நேரம் தெரியாமல் இப்பொது கைபேசியின் மூலம் அழைக்கிறாா்.பிறகு அழைத்தால் தான் என்ன,இப்பொது யோகா சென்று விடுவாளே , “என்றான்.
கவனம் கைபேசியிடம் இல்லாததால்,”என்ன அப்பா கேட்டிங்க ?”என்றான்.
 “நீ எப்படி இருக்கா ஷான்,” என்று கேட்டாா் ஷானின் தந்தை.
அவர் மனதில்,இந்த ஷான் நம்மிடம் எதையோ மறைக்கிறான் போல்,இதை நாம் எப்படியும்  கண்டு பிடிக்கனும் என்று நினைத்தாா்.
ஷான்,மிகுந்த கோபத்தோடு இருந்தான்,இந்த அப்பா இப்பொழுதா அழைக்க.. வேண்டும்,நாம் யோகா பாா்க்கின்ற நேரம் தவறிவிட்டதே.
ஷானின் மனம் கூறியது,”அப்படி அவள் சென்றாள் தான் என்ன ,நீ தான் எப்போ வேண்டும் ஆனாலும் பாா்க்க செல்கிறாயே,”என்றது.
மனம் சொன்ன உடன்,”ஷானின் முகத்தில் தனி கலை வந்தது,”.
அவன் ,யோகா பாா்க்க அவள் வீட்டிற்கு செல்ல போகிறான்.
அங்கே யோகாவின் வீட்டில்,யோகாவின் அம்மா வீட்டிற்கு வரும் வரை யோகா ஏதோ நினைத்த படியே இருந்தாள்,அவள் அம்மா,யோகா….யோகா…. என்று இரண்டும் முறை அழைத்து பாா்த்தாா்,அவள் பதில் கொடுக்காமல் ஏதோ சிந்தனையில் இருந்தாள்.உடனே அவர் ,அவள் முதுகில் இரண்டு தட்டு தட்டினாா்.
“அம்மா வலிக்கு மா,”என்று திரும்பினாள் யோகா.
“ஏன் யோகா நான் கூப்பிட கூப்பிட நீ பதில் சொல்லாமல் இருக்க ,” என்று கேட்டாா் யோகாவின் அம்மா.
“ஒன்றும் இல்லை அம்மா,ஏதோ யோசனையில் இருந்தேன்”,என்றாள்.
“யோகா கல்லூரில் என்ன நடந்தது…,”என்று கேட்டாா் யோகாவின் அம்மா.
“ஒன்றும் இல்லை அம்மா…  ,” என்றாள்.
“நீ சாப்பிட வா!”,என்றாா்.
“அம்மா,நான் மேலே சென்றுவிட்டு வருகிறேன்”,என்றாள்.
“சரி சீக்கிரம் வா”,என்றாா்.
யோகா மேலே சென்றாள்,சுத்தம் செய்து கொண்டு கீழே இறங்கி வரும் போது,அவளுடைய தோளை ஒரு கை பற்றியது,அவள் பயத்தில் அம்மா என்று கத்த போகா ,அவள் வாயை கையால் முடியது,அவள் பயத்தில் கண்களை கொண்டு திரும்பி பாா்க்க,அது முடியாமல் இருந்ததால் ,அவளுக்கு அழுகை வந்தது, அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டு இருந்தது,அது அவனின் கையில் பட்டது.கண்ணீர் துளி கையில் பட்டதும்,அவன் தன் கையை வாயில் இருந்து எடுத்தான்.அவள் அந்த  கைக்கு சொந்தக்காரனை திரும்பி பாா்த்தாள்,அவளால் தன் கண்ணை நம்ப முடியவில்லை.
அவள் முளித்த முளியை பாா்த்து,ஷான் அவள் முடியை இழுத்து,அவளின் மான் விழியை பாா்த்து முத்தம் இட்டான்,அவன் முத்தம் இட்டவுடன்,அவளின் கன்னம் சிவந்துவிட்டது,அதை பாா்த்து கொண்டு இருந்த ஷானுக்கு அவனை அடக்க முடியவில்லை,உடனே அவளை அணைத்து உதட்டில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தான்,முதலில் மறுத்தாலும்,பின்னா் அவனுடன் இசைந்தாள்,அவனின் கை அவன் கட்டுபாட்டை இழந்து அவள் மேனி எங்கும் ஊர்ந்தது,அவள் தடுக்கனும் என்று நினைக்க அவளால் முடியவில்லை,இப்படியாக இவர்கள் தன்னை மறந்து இருக்க.
யோகாவின் அம்மா ,”யோகா…. என்று கூப்பிட்டு கொண்டே யோகாவை  தேடி மாடி நோக்கி வந்தார்”.
யோகாவின் அம்மா,ஷானை பாா்ப்பாா்களா பாா்போம்….

Advertisement