Advertisement

யோகா,வினித்தின் பக்கத்தில் வரவும்,அவன் மயங்கி விளவும் சரியாக இருந்தது.
ஷான்,அவனின்  நண்பர்களை பார்த்தான்,அவர்கள் உடனே ,”அவர்கள் ஏற்பாடு செய்த அம்புலன்ஸ் வெளியே நின்று கொண்டு இருப்பதை ,”கண் ஜாடை காட்டினர்.
அதை புரிந்து கொண்டவன்,”பிரகாஷ் அவனை தூக்கு “,என்றான்.
அவர்கள் வினித்தை தூக்கி கொண்டு அம்புலன்சுக்கு சென்றனர்.
வினித்தை ஏற்றி கொண்டு, ஷானுக்கு சொந்தமான மருத்துவமனைக்கு சென்றது.
அங்கே ,அவனை ஐசியு வில் சேர்த்தனர்.
யோகாவின் வீட்டில் இருந்து அவள் அப்பாவும் ,தம்பியும் அந்த அம்புலன்சை பின் தொடர்ந்தனர்.
யோகாவின் அம்மா  
யோகாவை பார்த்து,”உனக்கு திருமணம் ஆகுமா யோகா…! ”  என்று கூறி அந்த இடத்திலே மயங்கிவிழுந்தார்.
யோகா அம்மாவின் குரல் கேட்டு திரும்பினாள்,அதற்குள் அவர் கீழே விழுந்தாா்.  கீழே விழுந்தவுடன் ,நெற்றியில் இருந்து இரத்தம் பாய்ந்தது.யோகா தன் முந்தானையால் இரத்தை துடைத்தாள்.ஆனந்தி ஒடி சென்று அவர்க்கு தண்ணீர் கொண்டு வந்தாள்.யோகா தண்ணீரால் அம்மாவை எழுப்பினாள்.
வினித்தின் அம்மா,அவர்கள் அம்மாவின் மடியில் விழுந்து அழுது கொண்டு இருந்தாா்.”அம்மா எனக்கு ஏன் மா இப்படி எல்லாம் நடக்கிறது,நான் கொஞ்சம் சந்தோசமாக இருந்தாள் அந்த கடவுளுக்கு பொருக்காத”.
வினித்தின் அம்மாவும்,அப்பாவும் சந்தோசமாக இருந்த காலத்தில்,வினித்தின் அம்மா அவர் கணவரிடம்,”ஏங்க எனக்கு இனிப்பு பண்டம் சாப்பிடனும் போல இருக்கு,நீங்க வாங்கிட்டு வாங்க “,என்று சொல்ல அவர் அதை வாங்க சென்றாா். சென்ற அவர் திரும்பி வரவில்லை.அவர் மருத்துவமனையில் இருக்கிறாா் என்ற தகவல் தான் வந்தது .விரைந்து சென்று பார்க்கும் போது,அவர் என்னை பார்த்து ,அவர் அருகில் இருந்த பையை காண்பித்தாா்,அதில் அனைத்து இனிப்பு பண்டம் இருந்தது.அவர் என்னை பார்த்து,”துள…..சி.. நான் பிழைக்க மாட்டேன்,நீ தைரியமாக இருந்து மகனை வளர்த்து பெரிய ஆள் ஆக்கு “என்றாா்.
அம்மா,”அந்த கடவுள்,என் கணவனை தான் என்னிடம் இருந்து பரித்தாா்,என் மகனை என்னிடம் திரும்பி தர சொல் “, என்று அழுதார்.
அங்கே மருத்துவமனையில்,ஐசியு வில் மயக்கமாக இருந்த வினித்தை பாா்த்து ,ஷான் தன் நண்பர்களிடம்,” நம்ம திட்டம் பண்ணப்படி எல்லாம்,நல்ல படியாக முடிந்தது.”என்றான்.
ஷான் அப்படி என்ன தான் திட்டத்தை தீட்டினாலும்,என் சொயலால் எல்லாம் நடந்தது என்றது விதி.
ஷான் தன் திட்டத்தை கூறினான்,யோகாவை வினித்திடம் அழைத்து வரும் போது, நீ  நாம் ஏற்பாடு பண்ண ஆள்ளை,இந்த பொருளை கொண்டு அவன் முகத்தில் அடிக்க சொல், அவன் மயக்கமாய் கீழே விழும்பொது,நீ அவனை அம்புலன்சில் ஏற்றி,நம்  மருத்துவமனைக்கு கொண்டு வரலாம்,”என்றான்.இந்த திட்டம் தோல்வி அடைந்தால் ,”நான் வினித்துக்கு பதில் மோதிரத்தை நான் போடுவேன் “என்றான்.
ஷானின் திட்டத்தை கேட்டதில் இருந்து ராமுக்கு பயமாக இருந்தது,எங்கே தன்னால் திட்டம் சொதப்புமோ என்று. இப்பொது தான் அவன் நிம்மதியாக  மூச்சு விடுகிறான்.
பிரகாஷ்,” இனி நாம் என்ன செய்ய வேண்டும் ஷான்,”என்றான்.
ராமோ,” யோகவின் அப்பாவும்,தம்பியும் வெளியே நிற்கின்றனா் ,அவர்களுக்கு நாம் என்ன பதில் சொல்லுவோம்,” என்றான்.
ஷான்,”நான் அதற்கு எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன்,”என்றான்.
பிரகாஷ்,”அப்படி என்ன தான் பண்ணினாய்,”என்றான்.
ஷான்,”இந்த வினித்,இன்னும் சில நிமிடங்களில் கண் முளித்துவிடுவான்.அவன் முளிப்பதற்குள்,டாக்டரை கூப்பிடு ,”என்றான்.
“டாக்டரை கூப்பிட்டு வந்தான்”,பிரகாஷ்.
ஷான்,”நடந்ததை அந்த டாக்டரிடம் கூறினான்.மேலும்,தனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும்” ,என்றான்.
டாக்டர்,”என்ன உதவி வேண்டும் கேளுங்கள்,”என்றார்.
ஷான்,”டாக்டர் … இந்த  வினித்தை வருகின்ற ஞாயிறு வரை விட கூடாது.” என்றான்.
அதை கேட்டு, அந்த டாக்டர் அவனை பார்த்து “ஓண்ணும் கவலை வேண்டாம்,நான் எல்லாம் பார்த்து கொள்கிறேன்”,என்றார்.
டாக்டர்,வெளியே வந்து ,” பயப்படும் படி ஓண்ணும் இல்லை,சில டெஸ்டுகளை எடுக்க வேண்டும்,என்ன.. சில நாட்கள் ஆகும்,இவரை டிஸ்சாஜ் செய்ய”,என்றார்.
இதை கேட்டவுடன், யோகவின் அப்பா,”டாக்டர் நாங்கள் வினித்தை பாா்க்கலாமா,”என்றார்.
அதற்கு அவர்,”வினித் மயக்கத்தில் தான் இருக்கிறாா்,தொந்தரவு செய்யாமல்,பாா்த்து வாருங்கள்,”என்றார்.
யோகவின் அப்பாவும்,அவன் தம்பியும் வினித்தை பாா்த்து விட்டு ,கை பேசியை எடுத்து,வீட்டிற்கு தொடர்பு கொண்டு ,”பயப்படும் படி ஓண்ணும் இல்லை,யாரும் கவலை பட வேண்டாம் ,”என்றார்.
யோகா கை பேசியை வைத்துவிட்டு ,”வினித்துக்கு பயப்படும் படி ஓண்ணும் இல்லையாம்,யாரும் கவலை பட வேண்டாம்,”என்று அப்பா கூறினாா் என்றாள்.
இதை கேட்டதும்,வினித்தின் அம்மா,”கடவுளே உமக்கு பெரிய நன்றி,என் பிள்ளையை நீ காப்பத்திட்ட,”என்றார்.
யோகா மனதில்,எப்படியோ நிச்சயம் நின்றுவிட்டது என்று நினைத்தாள்.
இந்த ஷான் ,என் மனதில் வந்த பிறகு  தான் எல்லாம் தப்பு தப்பாக நடக்கிறது என் வீட்டில்.
ஒரு வேளை இதற்கு எல்லாம் காரணம்,இந்த ஷானாக இருக்குமோ,எனக்கு சந்தேகமாக உள்ளது.
“என்னை அழைத்து கொண்டு வரும் போது,என்னை ஏன் அவன் அப்படி பாா்த்தான்,அவன் தான் பாா்த்தால் என்றால்,உனக்கு அறிவு எங்கே போனது,நீயும் வெட்கப்பட்டு தலை குனிஞ்சியே,  முதலில்,உனக்கு ஷான் வேண்டுமா…?,இல்லை வினித் வேண்டுமா…? முடிவு எடு”,என்று கேட்டது யோகா மனம் .
யோகா மனம் கேட்ட கேள்வியில் திகைத்து நின்றால்.
நான்,ஷானை திருமணம் செய்ய, அம்மா, அப்பா சம்மதிப்பாா்களா..?
“என்னால் ஷானை மறக்கமுடியுமா! அப்படியே மறந்தாலும் வினித்தை விரும்ப முடியுமா ?,தன் மனதில் ஒரு முடிவு எடுத்தாள்.
“இனிமேல்,நான் ஷானை பார்க்க கூடாது கடவுளே !! அப்படி பாா்த்தாலும் என் மனம் அவனிடம் செல்ல  கூடாது கடவுளே!”என்றாள்.
விதியோ அவளை பாா்த்து சிரித்தது,நான் இப்பொழுது தான் காயை நகர்த்தி உள்ளேன்,அதற்குள் ஏன் நீ புலம்புகிறாய் என்றது.
ஷான் தன் நண்பா்களிடம்,”நீங்கள் இனிமேல் ஊருக்கு கிளம்பலாம்”,என்றான்.
அதற்கு அவர்கள்,நீயும் எங்களுடன் வருகிறீயா? என்றனர்.
அதற்கு ஷான்,”நான் இப்பொழுது தான் வேலையை ஆரம்பித்து உள்ளேன். நீங்கள் இருந்தால் யாருக்காவது சந்தேகம் வரும்,ஆதலால் நீங்கள் ஊருக்கு சென்று வாருங்கள்,”என்றான்.
உடனே அவர்கள்,”சரி ஷான்,நாங்கள் கிளம்புறோம்”,என்றனர்.
பிரகாஷ்,”ஷான் நீ எங்கே தங்குவாய்,” என்று கேட்டான்.
“அதற்கு நான் ஒரு திட்டம் வைத்திருக்கேன்,நீங்கள் கவலை படாமல் போங்க,அப்பா கேட்டால் உங்களுக்கு தெரியாது என்று சொல்லுங்கள்”என்றான் ஷான்.
ஷான்,அவர்கள் சென்றவுடன்,தன் திட்டத்தை நினைத்து  தனக்கே சிரிப்பு வந்தது.
ஷான்,யோகாவின் வீட்டிற்கு சென்றான்.
அவனை பாா்த்ததும்,யோகாவின் அப்பா,”துளசி அக்கா….., யாா் வந்திருக்காங்க னூ பாரு ,”என்றாா்.
வினித்தின் அம்மா,”தம்பி,என்ன இப்படி  வர சொல்லுரான்”,அவரை பாா்க்க வந்தாா், வந்தவர் ஷானை பாா்த்து,தம்பி வாங்க! நீங்க செய்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன் ,”என்றாா்.
ஷான்,”அது எல்லாம் ஒண்ணு இல்லை மா,இது  என் கடமை தான்,” என்றான்.
வினித்தின் அம்மா,” ஷானிடம், வினித் எப்படி இருக்கிறான் ,”என்று கேட்டார்.
ஷான்,” அம்மா,கவலை படாதிங்க,அவன் நல்லா இருக்கான் சில நாட்கள் ஓய்வு எடுக்க சொன்னாா்கள்,மற்றபடி ஒண்ணும் இல்லை,”என்றான்.
“எனக்கு வினித்தை பாா்க்கனும் போல இருக்கு, தம்பி கூட்டிட்டு போவிங்களா”,என்று கேட்டார் வினித்தின் அம்மா.
அவர் அப்படி கேட்டதும்,நாம் இந்த வழியை தேர்வு செய்து இருக்க கூடாதோ என்று நினைத்தான்.
வினித்தின் அம்மா பாா்த்து, “அம்மா நீங்க சாப்பிடுங்க நான் உங்களை அழைத்து செல்கிறேன்.”
என்றான் ஷான்.
இதை பார்த்து கொண்டு இருந்த யோகாவிற்கு,”இவன் நல்லவனா? இல்ல கோட்டவனா? தெரியமாட்டேங்குதே “என்று நினைத்தாள்.
அந்த நொடி ,அவன் யோகாவை பாா்த்து கண் சிம்மிட்டி ,அவன் கையால் அவன் உதட்டை வருடினான்,இதை பார்த்து கொண்டு இருந்த யோகாவிற்கு வெட்கம் வந்து,சீ… சரியான காட்டுமிராண்டி,இனிமேல்,நான் “அவனை பாா்க்க கூடாது…பாா்க்க கூடாது… மனதில் கூறுகிறேன்” என்று சத்தமாக சொன்னால்.
இதை கேட்டு அவன்,”எனது பாா்க்க கூடாது…”என்று சொல்லுகிறாய் என்றான் ஷான்.
யோகா ,ஷானை பாா்த்து ஒரு அசட்டு சிரிப்பை சிந்திவிட்டு மேலே வந்தாள்,மனதில்,”சரியான இம்சையாக இருப்பான் போல் உள்ளதே”,என்று நினைத்தாள்.
அவள் காதல் கொண்ட மனமோ,நீ அவனை புகழ்கிறாயா இல்லை திட்டுகிறாயா எனக்கு தானே எல்லாம் தெரியும் என்றது.
ஷான்,வினித்தின் அம்மா  மருத்துவமனைக்கு வருகின்ற விசயத்தை டாக்டரிடம் தெரிவித்தான்.
டாக்டர்,”அழைத்து கொண்டு வாங்க,ஒரு பிரச்சனை இல்லை,”என்றாா்.
வினித்தின் அம்மா வந்தவுடன் அவரை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு வந்தான்.
மருத்துவமனையில்,வினித்தின் அம்மா ,”வினித்தை பாா்த்த உடன் தன்னை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.”
இதை பார்த்து கொண்டு இருந்த ஷானிற்கு குற்ற உணர்ச்சி அதிகமாக வந்தது,”அம்மா….அழுகாதிற்கள் ,வினித்க்கு ஒன்றும் இல்லை,என்றான் ஷான்.
“அப்புறம்,ஏன் அவன் கண்திறந்து பாா்க்கவில்லை “என்றாா் வினித்தின் அம்மா .
“அம்மா,இப்பொது தான் டெஸ்ட்டு எல்லாம் எடுத்தாா்கள்,வலி தெரியாமல் இருப்பதற்காக மயக்க மருந்தை கொடுத்தாா்கள்,இன்னும் சில மணி நேரத்தில் அவன் முளித்துவிடுவான்,அம்மா,கவலை படாதிங்க!, நீங்கள் வேண்டும் என்றால் ,இங்கேயே தங்கி இருங்க” என்றான்.
அதை கேட்டவுடன்,வினித்தின் அம்மா,”சரி தம்பி,ரெம்ப நன்றி நீங்கள் செய்த உதவிக்கு”என்றாா்.
“ஒண்ணும் பிரச்சனையில்லை அம்மா,நீங்கள் நன்றி சொல்ல தேவை இல்லை,நான் டாக்டரை பாா்த்துவிட்டு வருகிறேன்,”என்று சொல்லி வெளியே கிளம்பினான் ஷான்.
டாக்டரை பாா்த்து நடந்ததை கூறினான்.
டாக்டர்,” ஏன் இப்படி செய்திற்கள்,உங்களுடை திட்டம் எல்லாம் குழம்பிவிடும் அல்லவா,இனி என்ன செய்ய போகிறீர்கள்,”என்றாா்.
ஷான்,”டாக்டர் நானும் மனிதன் தான்,தாய் பாசத்திற்கு முன்னாடி ஒன்றும் இல்லை,வினித்தை நாளைக்கு டிஸ்சாஜ் செய்துவிடுங்கள்”,என்றான்.
டாக்டர்,”வினித்துக்கு நியபகம் வந்தால்,அவன் எல்லாம் சொல்லிவிடுவானே, நீங்கள் மாட்டிவிடுவீர்கள் அல்லவா,”என்றாா்.
“டாக்டர் அவனுக்கு மயக்க மருந்தை அடித்தது,நான் செட் பண்ண ஆள் என்று அவனுக்கு தெரியாது,அவன் கண்டும் பிடித்திட மாட்டான்,”என்றான் ஷான்.
“ஓகே உங்கள் இஷ்டம்,”என்றாா் டாக்டர்.
ஷான் வெளியே வந்த சில நிமிடத்தில் வினித்துக்கு நியபகம் வந்தாது ,அவன் அம்மாவை பாா்த்து,” அம்மா….நான் எப்படி இங்க,”என்றான்
வினித்தின் அம்மா,நடந்ததை எல்லாம்  கூறினாா் . மேலும் ,ஷான்  செய்த உதவியும் சொன்னாா்.
வினித் மனதில்,”யாா் நமக்கு எதிரி, இந்த நிச்சயத்தை திட்டம் போட்டு நிறுத்தியது,இந்த ஷானை சந்தேக படவும் முடியவில்லை,சந்தேக படாமலும் முடியவில்லை. எல்லாம் வீட்டிற்கு போய் பாா்த்து கொள்ளலாம்”
யோகாவின் வீட்டில்,அவள் அம்மா,யோகாவின் அப்பாவிடம் “நாம் திருமணத்தை வருகின்ற ஞாயிற்று கிழமையில் வைத்துவிடுவோம்,இதை விட்டால்,மாசி மாதம் பிறந்துவிடும்,உங்கள் அக்காவிடம் கேளுங்கள்,”என்றாா்.
ஷான்,வினித்தின் அம்மாவை அழைத்து கொண்டு வீடு திரும்பினான்.
வினித்தின் அம்மாவை பாா்த்ததும்,யோகாவின் அப்பா,”வினித் எப்படி இருக்கிறான்,”என்றாா்.
அதற்கு அவர்,”அவன் நல்லா இருக்கான்,நாளைக்கு டிஸ்சாஜ் “,என்றாா்.
“அப்போ நாம் திருமணத்தை வருகின்ற ஞாயிற்று கிழமையில் வைத்துவிடுவோ அக்கா ,”என்றாா்.
“தம்பி ,தப்பா நினைக்காத நான் யோசிக்க வேண்டும்,எனக்கு இருப்பதோ  ஒரே பையன்,நிச்சியத்து அன்னிக்கு அவன் இப்படி மருத்துவமனையில் சோ்ந்து இருக்கிறான் என்றால்,நான் யோசிக்க வேண்டும்.” என்று கூறி கிளம்பினாா்.
ஷான்,இந்த திருப்பத்தை எதிர் பாா்க்கவில்லை.மனதில்,”நாம் திட்டம் யோசிக்கதற்கு முன்னே இப்படி ஒரு திருப்பமா”,
“அல்லா உமக்கு நன்றி,நான் வினித்தின் அம்மாவிற்காக என் திட்டத்தை மாற்றினேன்,ஆனால் நீங்களோ எனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறீர்கள். நன்றி அல்லா…உமக்கு பெரிய  நன்றி…”என்றான் ஷான் மனதில்.
அம்மா எனக்கு ஒரு முக்கியமான வேலை உள்ளது,நான் வாரேன் என்றான்.
“சரிப்பா”,என்றாா் வினித்தின் அம்மா.
அவன் அவரிடம் சொல்லிவிட்டு ,நேற்று தான் இறங்கி வந்த மாடி படி வழியாக ,யாருக்கும் தெரியாமல் ஏறினான்.
மனதில் ,நம் குடும்ப நிலை என்ன??,நம்மை இப்படி யாருக்கும் தெரியாமல் ஏறவைக்கிறதே இந்த காதல், என்று நினைத்தான்.
ஷான் மேலே ஏறி வரும்போது,யோகா அப்பொழுது தான் தோழிகளை அனுப்பிவிட்டு மேலே வந்தாள்,”இந்த புடவையை மாற்றுவோம்,ஆனாலும் இந்த புடவையை மிகவும் அழகு, அத்தை எப்படி தான் இவ்வளவு அழகான புடவையை எடுத்தாா்களோ,எப்படி கரைட்டான அளவில் பிலவுஸ் தைத்தாா்களோ  “என்று கூறி கொண்டே கண்ணாடியை பாா்த்து கொண்டு இருந்தாள். அப்படி பாா்த்து கொண்டு இருந்தபோது.
ஷான்,”அவள் பின்னே நிற்பதை பாா்த்தாள்,” இது தனது மனப்பிரமை,எப்பொது ,எங்கே பாா்தாலும் இந்த ஷானே தெரிகிறான்…போடா …காட்டுமிராண்டி….என்றாள்.
ஷான் மனதில்,நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தால் இவள் போடா …காட்டுமிராண்டி….என்கிறாள்.இவளுக்கு காட்டுமிராண்டி என்ன செய்வான் என்று காண்பிப்போம்.
ஷான்,அவள் முடியை இழுத்து,தன் அணைப்பில் வைத்து கொண்டு,முடி எவ்வளவு மெதுவாக இருக்கிறது,பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா,இல்லை என்று கேட்டான்.
யோகாவிற்கு அவன் அணைப்பில் இருந்து விலகி காட்டுமிராண்டி… என்றாள்.
என்ன நான் காட்டுமிராண்டியா ?காட்டுமிராண்டி என்ன செய்வான் தெரியுமா என்று சொல்லி அவள் இதழை தன் இதழ் கொண்டு மூடினான், அவள் கண்மூடி நிற்கும் போது,பிலவுஸ் சரியாக இருக்கா என்று கேட்டான்,அவள் ஷாக்காகி நிற்கும் போது,நான் தான் எடுத்தேன் உன் அளவில் என்றான்.
யோகா,”என்ன…?” என்று கேட்கும் பொழுதில்.
கண் அடித்து விட்டு சென்றுவிட்டான்.
யோகாவிற்கு திருமணம் நின்ற விசயம் தெரியாது,அவள் ஷானை திருமணம் செய்வாள பாா்போம்…

Advertisement