Advertisement

ஷான் வீட்டிற்கு வரவும்,யோகா இரயில் ஏறவும் சரியாக இருந்தது,ஷான் வீட்டிற்கு வந்து விழிஷா ….விழிஷா….என்று தேடினான்,அவள் கிடைக்காததால்…அம்மா….அம்மா….என்று சத்தமாக அழைத்தான்.
என்ன ஷான் இப்படி கத்துகிறாய்,”அவள் வீட்டைவிட்டு வெளியை சென்றாள் ,”என்றாா்.
அப்படி செல்ல மாட்டாளே,என்ன நடந்தது என்று இப்போது சொல்லூவிற்களா… இல்லை நானே கண்டு பிடிக்கவா…. “என்று கேட்டான்.
இதை கேட்டதும்,அவன் அம்மாவிற்கு பயம் தொற்றி கொண்டது,எங்கே நாம் மாட்டிவிடுவோமா என்று நினைத்தாா்.
அதற்குள் அவர் அப்பா,”ஷான் யோகாவை உன் அம்மா வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டாள்,”என்றாா். நீங்கள் என்ன செய்தீர்கள்,அதை தடுக்கலாம் அல்லவா என்றான்.நான் தான் ,”சரி போ”என்று கூறினேன் என்றாா்.
இதை கேட்டதும்,ஷானுக்கு தன் தந்தையா இப்படி செய்தாா் என்று நினைத்து பாா்க்கவே முடியவில்லை,சரி உங்கள் இஷ்டப்படியே அவள் போகட்டும்,ஆனால் நான் ஒன்றை மட்டும் சொல்லுகிறேன் ,”யோகாவுடன் தான் என் வாழ்க்கை,அவள் போன பின் எல்லாம் முடிந்துவிட்டது,”இனி இருவரும் என்னிடம் பேசாதீர்கள் என்று கூறி தன் அறைக்கு சென்றான்.
அங்கே யோகாவோ ,”நாம் எங்கே செல்வோம்,”என்று நினைத்த வண்ணம் இருந்தாள்.
சரி நாம் நம் வீட்டிற்கு சென்ற பின் முடிவு எடுக்கலாம் என்று நினைத்தாள்.இப்போது ஷான் வந்து இருப்பானே என்னை தேடுவானோ…..என்னவோ…..அவன் நினைவாகவே இருந்தாள்.
ரயில் சென்னை வந்து அடையவும்,அவள் எப்படி வீட்டிற்கு போக,அம்மா என்ன சொல்லுவாா்களோ என்று நினைத்தாள் ,விதியோ வா…. யோகா வா….என் ஆட்டத்தை பாா் என்று கூறியது.
யோகா வீட்டிற்கு வரும் போது,அவள் அப்பா வேலைக்கு கிளம்ப ஆயுத்தமானாா்,இவள் அப்பா…..அப்பா….என்று கூறவும்,யாா் நம்மை அப்பா என்று கூறுகிறாா் சற்று திரும்பி பாா்த்தாா் ,அங்கு யோகாவை பாா்த்ததும் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது ..யோகா….என்று சத்தமாக அழைத்தாா்,இவர் அழைத்ததை பாா்த்து ,யோகாவின் அம்மா வெளியே வந்தாா்,அம்மா என்றாள் யோகா.
பெற்றோரை பாா்த்ததும் யோகாவிற்கு மயக்கமாக வந்தது,நேற்றில் இருந்து சாப்பிடாதது நினைவுவந்தது,இதை அவள் அம்மாவிடம் சொல்லுவதற்குள் மயக்கம் வந்தது,அவள் மயங்கி விழும் போது அவள் அம்மா அவளை தாங்கி பிடித்தாள்.
“யோகா….யோகா….எழுந்திரு ,” என்றாா்.அவள் கண் விழிக்கவில்லை ,உடனே யோகாவின் அப்பா டாக்டரை வரவழைத்தாா்.
டாக்டர் வந்து யோகாவை பரிசோதனை செய்தாா்,அவர் யோகாவின் அப்பாவை பாா்த்து,”இவர்கள் கன்சிவாக உள்ளாா்கள்,மேலும் இவர்கள் இரண்டு நாளாக சாப்பிடவில்லை,”என்றாா்.
இதை கேட்டதும் யோகாவின் அப்பாவுக்கு எங்கு இருந்து தான் கோபம் வந்ததோ.. டாக்டரை பாா்த்து “சரி டாக்டர் நாங்கள் பாா்த்து கொள்கிறோம் ,நீங்கள் கிளம்புங்கள் மிக்க நன்றி,”என்றாா்.
டாக்டா் கிளம்பினதும்,உடனே யோகாவிடம் வந்து அவளை அடித்தாா்,அவள் மெல்ல கண் திறக்கவும்,,”யோகா….என் கண் முன் நிற்காதே ….நீ இருந்தால் நான் உன்னை கொன்றாலும் கொல்லுவேன்,உடனே இங்கு இருந்து செல் ,”என்றாா்.
யோகாவின் அம்மா எவ்வளவு தடுத்தும்,கேட்காமல் அவளை கொண்டு வெளியே விட்டாா்.
என்ன நடந்தது என்று உணரும் முன் ,இது எல்லாம் நடந்தது.
யோகா வந்துவிட்டாள் ,என்று கேள்வி பட்டு அவள் நண்பர் பாா்க்க வந்தனர்.
யோகா கீழே விழும் போது அவர்கள் அவளை பிடித்து கொண்டனா்.
அவளை அழைத்து கொண்டு ஒரு உணவகத்தில் நுழைந்தனர்,இதை தற்செயலாக அந்த வழியாக வந்த டாக்டர் பாா்த்துவிட்டு,”நீ யோகா தானே இந்த நேரத்தில் இப்படி அலையலாமா…,”என்றாா்.
இதை பாா்த்து கொண்டு இருந்த தோழிகள்,”என்ன டாக்டா் சொல்லுகிறீா்கள்,யோகா விற்கு என்ன,”என்று கேட்டாா்.
உங்களுக்கு ஒன்றும் தெரியாதா,”யோகா
கன்சிவாக உள்ளாள்,”என்றாா்.
இதை கேள்விபட்ட அவள் தோழிகள்,யோகாவின் நிலையை பாா்த்து  சந்தோசம் படுவதா இல்லை துக்கப்படுவதா என்று நினைத்தனா்.
இதை அறிந்தவுடன் யோகாவின் நிலை சொல்லமுடியவில்லை,…. யாரை பிரிந்து வந்தோம் என்று தான் நினைத்தோமோ….அவனின் வம்சம் தன் வயற்றில் உதித்துவுள்ளது,மனது மிகவும் சந்தோசம் பட்டது,ஆனால் அறிவோ இப்போது நீ எந்த நிலையில் இருக்கிறாய் தெரியுமா …உன் தாய் தந்தையரே உன்னை விரட்டி ,நீ இப்போது நடுரோட்டில் இருக்கிறாய்,இதில் நீ சந்தோசம் படத்தான் வேண்டும் என்று அறிவு கூறியது.
ஒகே,நாம் இதை பற்று நினைக்க வேண்டாம்,நடப்பது போல் நடக்கட்டும் என்று இதை விட்டுவிடுவோம் என்று நினைத்தாள்.
எல்லோரும் ஒருமித்த மனம் போல், வா யோகா….. நாம் சாப்பிட்டு கிளம்பலாம் என்றனா்.
எல்லோரும் மிகவும் சந்தோசமாக,முதலில் சுவிட் ஆடர் செய்தனர்,அதிலும் சிந்து எனக்கு பால் கோவா தான் வேண்டும் என்று அடம்பிடித்து சாப்பிட்டள்,அவளின் குசும்பில் யோகா தன் கவலை மறந்து சிரித்தாள்.
ஆனந்தி மனதில் யோசித்த வண்ணம் இருந்தாள்,இவர்கள் எல்லோரும் சாப்பிட்டு முடிய ஆனந்திக்கு ஒரு யோசனை வந்தது.
அவள் தோழிகளிடம் தனக்கு வந்த யோசனையை கூறினாள்,இதை கேட்ட யோகவிற்கு தன் கவலை மறந்து ,தன்னால் தன் தோழிகளும் அல்லவா மாட்டிவிட்டனா் என்று நினைத்தாள்.
எப்படியாவது இவர்களை நான் எனது வழியில் இருந்து மாற்ற வேண்டும்,இவர்கள் நான் சொன்னதை கேட்காமல் இருக்கிறாா்கள்,அவர்கள் சொன்ன வழியில் சென்று தப்பிக்க வேண்டும் என்று நினைத்தாள் யோகா.
சாப்பிட்டு முடிந்ததும்,ஆனந்தி தன் தோழியிடம்,காஸ்டலில் யோகா தங்குவதற்கு ஏற்பாடு செய்தாள்.
நாளை காலையில் நாம் பாா்க்கலாம் ,என்று யோகாவை அந்த காஸ்டலில் விட்டு விட்டு அவர்கள்,வீட்டிற்கு சென்றாா்கள்.
இவர்கள் சென்றதும்,யோகா யோசித்தாள்,தன்னிடம் இருந்த ரூபாய்யை எண்ணி பாா்த்தாள்,தான் சிறுவயதில் இருந்தே சேமித்த பணம் சில ஆயிரங்கள் இருந்தன,அதை வைத்து ஏதாவது செய்ய வேண்டும் ,இன்று இரவு நாம் இங்கு இருந்து செல்ல வேண்டும் என்று நினைத்தப்படி படுத்தாள்,அன்று நடந்த நிகழ்வின் காரணமாக விரைவிலே ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றாள்.
சிந்துவும்,ஆனந்தியும் தங்கள் வீட்டியில் எல்லா விசயத்தையும் கூறி கொண்டு நகை ,பணம் ,சான்றிதள்,ஆகியவை எடுத்து கொண்டு தங்கள் பெற்றோரை வணங்கிவிட்டு காஸ்டலுக்கு வந்தனர்.இதை அறியாத யோகா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.விடியகாலை மூன்று மணிக்கு அவளுக்கு முளிப்பு வந்தது ,இது தான் கிளம்ப சரியான நேரம் என்று நினைத்து கிளம்பினாள்,அவள் அறியாமல் சிந்துவும்,ஆனந்தியும் அவளை பின் தொடர்ந்தனா்.
யோகா கன்னியாகுமரி பஸ்யில் ஏறவும்,அவர்களும் அவளுக்கு தெரியாமல் ஏறினாா்கள்,பஸ் கிளம்பியதும்.
கன்டைக்டா் வந்து , ஆனந்தியையும், சிந்துவையும் பாா்த்து நீங்கள் அந்த சீட்டில் உட்கார முடியுமா என்று கேட்டாா்.
அவர் கேட்டதும் ,இவர்கள் அந்த சீட்டை பாா்க்கவும் அங்கே யோகா கண் மூடி தூங்கி கொண்டு இருந்தாள்.இது தான் சரியான நேரம் என்று இவர்களும் அவளுடன் சென்று அமர்ந்தனர்.
காலை கண்விழித்து பாா்த்ததும்,தன் அருகில் தூங்கி கொண்டு இருந்த தோழிகளை பாா்த்ததும்,தன்னை மறந்து சிரித்தாள்,ஏன் என்றாள் சிந்து தன் கையை சூப்புவதற்கு பதில் ஆனந்தியின் கையை பிடித்து சூப்பி கொண்டு இருந்தாள்,இவளுக்கு இந்த பழக்கம் இருக்கிறது,  யோகாவிற்கு முன்பே தெரியும். அவள் சிரிப்பில் ஆனந்தி முளித்தாள் என்ன இவள் இப்படி சரிக்கிறாள் என்று,தன் கையை துக்க முற்படுகின்ற போது தான் ,அவள் விரல் சிந்துவின் வாயில் இருப்பதை அறிந்து,”அடியே சிந்து…. கையை விடுடி.. இன்னும் நீ திருந்தவே இல்லையா….விடுடி……,”என்று கூறி தன் விரலை எடுத்து கொண்டாள்.
யோகா இவர்கள் இருபேரையும் முரைக்க ,நடந்த விசயத்தை கூறினாா்கள்,நாங்கள் உன்னை விட்டு எங்கும் செல்ல மாட்டோம் என்றனா்.
“சரி ….சரி ,” நீங்கள் என்னுடன் வாருங்கள்,நாம் இனி தான் வேலை தேடனும்,தங்குவதற்கு இடம் பாா்க்கனும் என்றாள்.
“நான் இருக்க….கவலை ஏன்…” என்றாள் சிந்து.
அவளின் உறவுகாா்கள் கன்னியாகுமரியில் இருக்கிறாா்கள்.நேற்று யோகா …இந்த பஸ்யில் ஏறியதை பாா்த்ததும் ,இவள் தன் பாட்டியிடம் தான் வருவதாக கூறினாள்,இவள் மூன்று பேர் தங்குவதற்கு அறை ரெடி பண்ண சொன்னாள்,அவர் “சரி…நீ பத்திரமாக வா….,” என்றாா்.
இதை எல்லாம் அவள்  நினைத்து பாா்த்து கொண்டு இருந்தாள்,அவர்கள் கன்னியாகுமரியில் வந்து தங்கி இன்றுடன் இரண்டரை ஆண்டுகள் ஆகிறது ,தன் தோழிகள் தனக்காக எத்தனை பிரச்சனை சந்தித்தாா்கள்,ஷானுக்கு ஒரு குழந்தை இருக்கிறது தெரியாது, ஒவ்வொரு இரவும் ,யோகா தன் மகனை பற்றி ஷானிடம் சொல்லுவோமா என்று நினைப்பாள்,அவன் நினைத்து இருந்தால்,எப்போதே தன்னை கண்டு பிடித்து இருப்பான்,அவன் தன்னை வெறுத்து விட்டதாக நினைத்தாள்.
இங்கே யோகா ஷானை பற்றி நினைத்து கொண்டு இருக்க,அங்கே அவளது ஷானோ ,எங்கே தூங்கினால் அவளது நினைவு வந்து விடும் என்று இராபகலாய் உழைத்தான், அவனுக்கு சிறந்த தொழில் அதிபர் என்ற பட்டம் 2021யில் கிடைத்தது.
உடனே பிரகாஷ் மற்றும் இராம் ,ஷானை கம்பல் பண்ணி நாம் இந்த தடவை சுற்றுலா செல்வோம் என்றனா்.
ஷானுக்கு யோகாவை  சந்தித்த டிரிப் நியபகம் வந்ததது, “சேட்….இந்த யோகாவை நம்மால் மறுக்கமுடியவில்லையே. …நாம் எப்படி இதில் இருந்து மீள்வோமா.,” என்று தெரியவில்லையே.
 விதி ஷானை பாா்த்து சிரித்தது….
இவர்கள்  சுற்றுலா போகும் நாளும் வந்தது,ஷான் தன் நண்பர்களுக்காக இந்த சுற்றுலாவுக்கு வர சம்மதித்தான்.
இவர்கள் திருவனந்தபுரம் ஏர்போட் வந்து, அங்கு உள்ள இடத்தை எல்லாம் சுற்றி பாா்த்தனா் .
ரகு ,”ஷானை பாா்த்து நாம் மாலை 5 .00 மணிக்குள் நாம் கன்னியாகுமரி செல்ல வேண்டும் ,”என்றான்.
இவர்கள் கடற்கரை வரவும்,யோகாவும் அவர்கள் தோழிகளும் பகவதி அம்மனை கும்பிட்டு விட்டு கடற்கரை வந்தனா்,யோகா தன் தோழிகளை பாா்த்து,”நீங்கள் கடலில் கால் நனையுங்கள்,நான் இந்த கரையில்  பிள்ளை வைத்து இருக்கிறேன்,”என்றாள்.
சிந்துவும்,ஆனந்தியும் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் கால்களை நனைத்தவிட்டு வந்தனா்.
யோகா பிள்ளையை வைத்து  கொண்டு கடலை பாா்த்த வண்ணம் இருந்தாள்,பிள்ளை அவளின் நீள கூந்தலை இழுத்து கொண்டு இருந்தான்.
யோகா,”சும்மா இருடா…..அப்படியே  உன் அப்பாவை மாதிரி செய்கிறாய்.” என்றாள்.
ஷானும் அவன் நண்பா்களும்,சூரியன் மறைவை பாா்க்க ஒடி வந்தனா்,இப்படி அவர்கள் வரும் போது ஷானின் கவனம் சற்று தள்ளி இருந்த குழந்தை மேல் பட்டது,அந்த குழந்தை தன்னை வா என்று அழைத்தது போல் இருந்தது,குளிர்க்காக யோகா ஸ்காா்பை வைத்து தலையை மூடி கொண்டு இருந்தாள்,அவள் இங்கே இருப்பாள் என்று நினைக்காததால் ,யாரோ ஒரு தாய் குழந்தையை வைத்து கொண்டு இருக்கிறதாய் நினைத்தான்.
அவன் அந்த குழந்தையின் அருகில் வரும் போது அவனுக்கு யோகா அருகில் இருப்பது போல் உணர்வு வந்தது.
சுற்றி முற்றும் பாா்த்தான்,ஆனால் யாரும் அவளை போல் இல்லை,தன் பக்கத்தில் இருக்கும் யோகாவை அவன் பாா்க்கவில்லை,ஆனால் அவன் குழந்தை அவனை அடையாளம் கண்டு கொண்டது,இரவில் தன் அம்மா கையில் இருக்கும் போட்டோ நேரில் வந்த சந்தோசத்தில் “பா….பா….,”என்றது.
இதை பாா்த்து கொண்டு இருந்த ஷான் அந்த குழந்தையின் செயலை பாா்த்து மெய் மறந்து நின்றான்,அந்த குழந்தை தன் தாயின் மூடி யை இழுத்தது ,”இதுவே உனக்கு வேலையாய் போகிவிட்டது ,”என்றாள்.
அந்த குரலில் ஷான் அந்த குழந்தையை வைத்து கொண்டு இருந்த தாய்யை பாா்த்தான்,பாா்த்தவன் பாா்த்தபடி ….நின்றான்.இவர்கள் இணைவாா்களா….என்று அடுத்த அத்தியாத்தில் பாா்ப்போம்.

Advertisement