Advertisement

ராம்,”தன் நண்பா்கள் மூலம் ,யோகா மற்றும் ஆனந்தியின் கைப்பேசி நம்பா்களை வாங்கி”, பிரகாஷிடம் கொடுத்தான்.
பிரகாஷ்,தன் திட்டத்தை செயல் படுத்த ஆரம்பித்தான்.
பிரகாஷ் சிந்துவின் குரலில்,ஆனந்தி வீட்டுக்கு அழைத்தான்,”ஆனந்தி, நான் தான் சிந்து ,எனக்கு நீ…ஒரு உதவி செய்ய வேண்டும்,”என்றான்.
ஆனந்தி,”என்ன உதவி,உன் குரல் ஏன் ஒழுங்காக இல்லை,”என்றாள்.
பிரகாஷ் மனதில்,”இதை மட்டும் நல்லா.. கண்டுப்பிடி…ஆனால் என்னை மட்டும் பாா்க்காதே”என்றான்.
பிரகாஷ் சிந்துவின் குரலில்,” அது எல்லாம் ஒண்ணும் இல்லை,நீ உடனே என்னை பாா்க்க இந்த இடத்திற்கு வா,கைப்பேசியை கொண்டு வராதே ,ஏன் என்றால்….. நீ அதை எங்கையாவது வைத்து கொண்டு நாம் அடிக்கடி தேடுகிறோம்,அதனால் என்றான்,இதை கேட்டதும் ஆனந்திக்கு ,இது சரி என்று பட்டது.அதனால் கைப்பேசியை எடுக்காமல் சென்றாள்.
பிரகாஷ் மனதில்,”இவள் யாா் என்ன சொன்னாலும் நம்புகிறாளே…”நல்ல வேளை ஷான் இவர்களை பின் தொடரும் போது இவளின் நடவடிக்கை நாம் அறிந்ததால்,”இவளிடம் கைப்பேசியை எடுக்காமல் போக சொல்ல முடிந்தது”என்றான்.
ஆனந்தி,”தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு,”சிந்து சொன்ன இடத்திற்கு சென்றாள்.
பிரகாஷ்,ஆனந்தியின் குரலில்,”யோகாவை அழைத்தான்,”.
யோகா கைப்பேசியை எடுத்தவுடன்,”யோகா…..யோகா….. நான் தான் ஆனந்தி,”என்று திக்கி திணறி ஆனந்தி சொல்லுவது போல் கூறினான்.
“என்ன…ஆனந்தி இப்படி பேசுகிறாய்,இது உண்ணுடைய நம்பர் இல்லையே,இது யாருடைய நம்பர்,நீ எங்கு இருக்கிறாய்,”என்றாள் யோகா.
“அது …நீ …திட்ட கூடாது…நான் கைப்பேசியை கொண்டுவந்தால் மறந்திடுவேன் என்று நான் கொண்டுவரவில்லை,நீ நான் சொல்லும் இடத்திற்கு வா….,உடனே வா…மிகவும் அவசியம்..,..அவசரம் “என்றான் ஆனந்தியின் குரலில் பேசிய பிரகாஷ்.
யோகா,தன் கைப்பேசியை எடுத்து கொண்டு கீழே வந்தாள்,”அம்மா….அம்மா…. என்று கூப்பிட்டபடி கீழே வந்தாள்,”.
“என்ன யோகா…,இந்த நேரத்தில் கிளம்புகிறாய்,”என்றாா் யோகாவின் அம்மா.
“அம்மா … இந்த ஆனந்தி என்னை அழைத்தாள் அவள் வெளியே நிற்கிறாளாம்,கைப்பேசியை கூட எடுத்து செல்லாமல் சென்று உள்ளாள்,ஏதோ அவசரமாக என்னை அழைத்தாள்,நான் வடபழனிவரை போகிறேன்,”என்றாள் யோகா.
யோகாவின் அம்மா,”யோகா…எனக்கு மனசுக்குள் ஏதோ தப்பாக நடக்க போவது போல் உணர்கிறேன்,நானும் வாரேன்…”என்றாா்.
“உனக்கு தான் கால்வலியே அம்மா,நீ அலைய வேண்டாம்,நான் தான் கைப்பேசியை கூட எடுத்து செல்லூகிறேனே அம்மா,”என்றாள் யோகா.
” நான் வேண்டும் என்றாள்…அப்பாவை வர சொல்லவா,”என்றாா் யோகாவின் அம்மா.
“இல்லை…வேண்டாம் அம்மா,இன்னா… இருக்கிற வடபழனிக்கு எதற்கு ..அப்பா…”நான் என்ன  சின்ன குழந்தையா,நான் விரைவில் வாரேன் ,என்று கிளம்பினாள்.
அவள் வாயில் நடையில் வரவும் ,கால் தடுக்கவும் சரியாக இருந்தது.
இதை அவள் அம்மா பாா்த்துவிட்டு,”யோகா….உள்ளே வா…..”என்றாா்.
“இந்தா இந்த தண்ணீரை குடி ,”இப்பொது எல்லாம் போக வேண்டாம்,ஆனந்தி அழைத்த எண்ணுக்கு கைப்பேசியை அடித்து எனக்கு தா…நான் பேசுகிறேன் ,”என்றாா்.
யோகாவிற்கு இது சரி எனப்பட,” அந்த எண்ணுக்கு கைப்பேசியை அடித்தாள்,”பிரகாஷ் தன்னை அறியாமல் அலோ… என்று கூற,”சாா்…. நான் யோகா பேசுகிறேன்,சாா்….சற்று முன் என் தோழி இந்த நம்பரில் இருந்து எனக்கு அழைத்து இருந்தாள்,அவள் தங்கள் அருகிலா இருக்கா,”என்றாள்.
பிரகாஷ்,என்ன சொல்வது என்று ஒரு நிமிடம் யோசித்தான்,அதற்குள் யோகா,”சாா்… லைனில் இருக்கிறீர்களா,”
பிரகாஷ்,”ஆமாம் மேம்…,அங்கே தான் இருக்கிறாங்க கொடுக்கட்டா என்றான்,”
“சரி சாா்,”என்றாள் யோகா.
பிரகாஷ் ஆனந்தி மாதிரி குரலை மாற்றி,” சொல்லு யோகா எங்கே இருக்க..நீ,”என்றான்.
யோகா,”அம்மா,போக வேண்டாம் என்று சொல்லுகிறாா்கள்,நான் கண்டிப்பாக வர வேண்டு மா… ,”என்றாள்.
ஆனந்தியின் குரலில் பிரகாஷ்,”யோகா….என்னுடைய பா்ஸ்யை காணவில்லை நான் இந்த உணவகத்தில் சாப்பிட்டுவிட்டேன் ,நீ வந்தால் ரூபாய் கொடுக்கலாம் என்று நினைத்து காத்து கொண்டு இருக்கிறன் ,”என்றாள்.
இதை கேட்டதும்,”சரி ..சரி நீ வருத்தபடாதே நான் வருகிறேன்,என்றாள் யோகா.
யோகா,நடந்த விசயத்தை அவள் அம்மாவிடம் சொல்ல ,”சரி… நீ…
 போய்கிட்டுவா ,”என்றாா்.
என்றும் ….இல்லாமல்…இன்றைக்கு  யோகா,”தன் அம்மாவின் காலில் விழுந்து வணங்கினாள்”.
யோகாவின் அம்மா.,”நல்லா இரு என்று வாழ்த்தினாா்,”.
அவருக்கு தெரியாதே விதி செய்த சதியால் இனி யோகாவை நினைத்து அவர்கள் வாழ்வில் இனி நிம்மதி இல்லை என்று…..
ஆனந்தி மற்றோரு உணவகத்தில்,சிந்துக்காக காத்து கொண்டு இருந்தாள்,அவள் வரவே இல்லை,”இனி இருந்தால் இருட்டிவிடும்,அதனால் நாம் யோகாவை பாா்த்துவிட்டு வீட்டுக்கு செல்வோம்,வீட்டுக்கு போய் இந்த சிந்துவுக்கு….. இருக்கு கச்சேரி,”  என்று நினைத்து யோகாவின் வீட்டிற்கு கிளம்பினாள்.
ஆனந்தி யோகா வீட்டிற்கு வரவும் ,யோகா வீட்டில் இருந்து கிளம்பி பிரகாஷ் சொன்ன உணவகத்திற்கு வரவும் சரியாக இருந்தது.
ஆனந்தியை பாா்த்து யோகாவின் அம்மா,”ஆனந்தி…யோகா…எங்கே,”என்றாா்.
“என்ன அம்மா….. என்னிடம் கேட்கிறீர்கள்,நான் இவ்வளவு நேரம் இந்த சிந்துக்காக உணவகத்தில் காத்துக் கொண்டு இருந்தேன்,இந்த சிந்து வராமல் இருந்ததால் ,நான் யோகாவை பாா்க்க வந்தேன்,”என்றாள்.
“இதை கேட்டதும், எங்கயோ தவறு நடந்து உள்ளது,யோகாவிற்கு தொலைப்பேசியில் அழைத்தாா்”யோகாவின் அம்மா.
அவர் அழைக்கும் பொழுது,யோகா அம்மாவின் நம்பரை பாா்த்து அட்டன் பண்ணலாம் என்று நினைக்கும் போது,அவளின் முதுகில் ஒரு கரம் விழ,” யாா் இது…,”என்று அவள் திரும்ப .
பிரகாஷ்,ஏற்பாடு பண்ணிய ஆள் ,”அவளின் முகத்திற்கு நேராக மயக்க மருந்தை அடிக்க, மற்றோரு நபர் அவளை வண்டியில் ஏற்றினான்,இது யாரும் அறியாமல் பாா்த்து கொண்டான்,மற்றோருவன்.”
யோகாவின் அம்மா,” யோகாவிற்கு தொலைப்பேசியில் அழைக்க …
…அழைக்க… அவள் எடுக்கவில்லை,”இதை உடனே அவர் கணவனிடம் கூறினாா்,அவர் எந்த இடம் என்று கேட்க, அந்த வடபழினில் உள்ள உணவகத்தை கூறினாா்.
யோகாவின் அப்பா,”அங்கே சென்று பாா்க்கும் போது,அங்கே யோகா இல்லை”,அவர் உடனே யோகாவின் அம்மாவிற்கு தொலைப்பேசியில் அழைக்க,”அவர் என்னங்க… யோகா அங்கே இருக்காளா….,”என்று கேட்டாா் .
என்ன பதில் சொல்ல என்று திணறினாா்…..
“நான் வடபழனி போலிஸ்-யில் காணவில்லை என்று கம்பெலைண்டு கொடுத்துவிட்டு வாரேன்,நீ அவள் தோழிகளிடம் விசாரி,நீ பயப்படாதே…. யோகா கிடைத்துவிடுவாள்,”என்றாா்.
யோகாவின் அம்மா,அழுதுக் கொண்டே கூறினாா்,”யோகா……யோகா….
 நீ போவும் போது நடை தட்டிச்சே அப்பொழுதாவது ,நீ போகாமல் இருந்து இருக்கலாம் அல்லவா, நான் கண்ட கனவுப் படி நடந்துவிடுமோ….இறைவா…. என் மகளை காப்பாத்து….,”என்று கூறி மயங்கி விழுந்தாா்.
ஆனந்தி,”ஒடி சென்று பிடித்து கொண்டாா்…,” இதை பாா்த்து யோகாவின் பாட்டி ஒடி வந்தாா், என்ன விசயம் என்று கேட்க,”நடந்த விசயத்தை எல்லாம் ஆனந்தி கூறினாள்” .
பாட்டி,”இன்றைக்கு என்னமா…அழகா இருந்தாள் யோகா…என் கண்ணே பட்டுவிடும் படி இருந்தாளே…என் கண்ணே பட்டு விட்டதோ….அதனால் இந்த நிலைமையா.,”என்றாா்.
அங்கே தன் பெண்ணை காணவில்லை என்று போலிஸ்-யில்  கம்பெலைண்டு கொடுக்க, அங்கே அந்த போலிஸ்,”சாா் நல்லா விசாரிச்சிங்களா பெண்ணின் புகைப்படத்தை தாருங்க ,உங்கள் பெண்ணுக்கு ஏதாவது காதல் உண்டா…..,” என்றாா் .
“இல்லை சாா்…,”என்றாா் யோகாவின் அப்பா.
“சரி சாா்,நீங்கள் போங்கள் நான் ஏதாவது தகவல் இருந்தால் சொல்லுகிறேன்,”என்றாா்.
“சரி “என்று கூறி கிளம்பினாா்.
யோகாவை கடத்திய பிரகாஷின் ஆட்கள்,பிரகாஷிடம் அவன் சொன்னப்படி செய்துவிட்டதாக கூற..,”சரி….நீங்கள் என் பிஏ-விடம் அதற்கான பணத்தை வாங்கி கொள்ளுங்கள்” ,என்றான் பிரகாஷ்.
அவர்கள் பிரகாஷ் சொன்னப்படி ,ஷானுக்கு சொந்தமான பிலைட்டில் ஏற்றிவிட்டு சென்றனா்.
இதை எதையும் அறியாமல் மயக்கத்தில் இருந்தாள்.
பிரகாஷ் ஏற்பாடு பண்ணின ஆள்,யோகாவின் வீட்டின் உள்ள தகவலை உடனுக்கு உடன் தெரிவித்தாா்.
பிரகாஷ் தன் நண்பன் ராமுடன்,யாருக்கும் தெரியாமல்,யோகா இருந்த விமானத்தில் ஏறினாா்கள்.அவர்கள் ஏறியவுடன் விமானம் எடுக்கப்பட்டது.
அங்கே சூரத்தில், ஷான் தன் நண்பருக்காக காத்துக் கொண்டு இருந்தான்,நண்பருக்காக மட்டும் காத்து கொண்டு இருக்கவில்லை,நாளை தன் மனைவியாக போகும் விழிஷாவுக்காக காத்துக்கொண்டு இருந்தான்.
நடந்த எல்லா விசயத்தையும் பிரகாஷ் தன் நண்பனிடம் தெரிவித்தான்.
பிரகாஷ் ஏற்பாடு பண்ணின ஆள் மூலம் யோகாவின் வீட்டின் உள்ள தகவலை உடனுக்கு உடன் அறிந்து கொண்டனா்.
யோகாவின் அம்மா ,மருத்துவமனையில் இருப்பதாக தகவல் வந்தது.இதையும் ஷானிடம் தெரிவித்தான்.
அவர்கள் வரும் போது ,இரவு ஒரு மணி ஆகியது, ஷான் தானே வந்து யோகாவை கையில் தூக்கி கொண்டு அரண்மனைக்கு வந்தான்.அவளை மருத்துவரிடம் காண்பித்தான்,அவளுக்கு எப்போது மயக்கம் தெளியும் என்று கேட்டான்.
அதற்கு அவர்,” இன்னும் சில மணி நேரத்தில் கண் முழிக்க வாய்ப்பு உள்ளது,”என்று கூறினாா்.
இங்கே திருமண வேலைகள் மிகவும் துரிதமாக நடைப்பெற்று கொண்டது, இதை பாா்வையிட்டு கொண்டு இருந்தான் பிரகாஷ்.
ஷானின் அம்மா, எப்படி… இந்த திருமணம் நடைபெறுகிறது என்று பாா்ப்போம்,”இன்னும் பெண்ணை காணவில்லை ….மைலாஞ்சியே இன்னும் நடக்கவில்லை…,நாளை விடிய போகிறது,பாா்க்கலாம்….,”என்று தூங்க சென்றாா்.
யோகாவிற்கு நினைவு திரும்பியது,”கண் திறந்து பாா்த்தாள்,அவள் நடந்ததை நினைத்து பாா்த்தாள்,இது என்ன இடம்….மிகவும் அழகாக உள்ளதே…
நம்மை கடத்திட்டு வந்தவர்கள் இன்னமும் நம் கையை கட்டவில்லையே….யாராக இருக்கும்.,”என்று நினைத்து கொண்டு இருந்தாள்.
அப்போது கதவு திறக்கவும்,யோகா கதவை பாா்க்கவும், அங்கே ஷான் இவளை நோக்கி வந்து கொண்டு இருந்தான்.இதை பாா்த்து கொண்டு இருந்த யோகாவிற்கு மயக்கம் வருவது போல் இருந்தது,ஆனால் தன் கைகளை இறுகப்பிடித்தவாரே அடக்கிக் கொண்டு இருந்தாள்.
ஷான் இவளை நோக்கி  அருகில் வர ..வர…இவள் இதயம் வேகமாக துடித்தது…இதை அவன் அறியாமல் மறைக்க பாா்த்தாள்…..ஆனால் அவன் கண்டு கொண்டான்.
ஷான் அந்த கட்டிலில் ,அவள் அருகில் அமர்ந்தான்,யோகா,ஷானை பாா்த்து ,” இங்கே என்ன நடக்கிறது, …எதற்கு என்னை கடத்தி கொண்டு வந்திங்க…என் அப்பா.. அம்மா… என்னை காணோம் என்று தேடுவாா்கள்…”என்றாள்.
ஷான் அவளின் முகத்தில் இருந்த முடியை விலக்கி விட்டு கொண்டு…”விழிஷா…..எதை பற்றியும் சிந்திக்காமல் நீ தூங்கு…
 நாளைக்கு நமக்கு திருமணம்…”என்றான்.
யோகா,”அதற்கு …
ஒரு போதும் நான்  சம்மதிக்க மாட்டேன்…,எப்படி திருமணம் நடக்கிறது என்று பாா்ப்போம்,”என்றாள்.
“அதையும் பாா்க்கலாம்…..,இது என்னுடைய இடம்…..என்னை மீறி ஒரு அணுவும் அசையாது….இந்த திருமணத்திற்கு நீ… சம்மதிக்கவில்லை என்றாள்…நாளை காலையில் உன் பெற்றோர் உயிருடன் இருக்க மாட்டாா்கள் என்றான்..”ஷான்.
“நீ சும்மா சொல்லுகிறாய்..”என்றாள்.
“என்னை கோபப்படுத்தி பாா்க்காதே “என்றான்.
“பாா்கிறியா……பாா்கிறியா……இன்னா பாா்… உன் பெற்றோரை..” என்று காண்பித்தான் அவர்கள் மருத்துவமனையில் இருந்ததை.
இதை பாா்த்தவுடன்,”என் பெற்றோருக்கு என்ன…அவர்கள் நலமாக உள்ளாா்களா…,”என்றாள்.
“நீ … இருக்கிற பொருத்து அவர்கள் நலமா….நலமில்லையா என்று அறியலாம்,”என்றான்.
“இப்பொழுது தூங்கு…… நாளை பாா்க்கலாம்…..தப்பிக்கலாம் என்று நினைக்காதே….இது என்னோட வீடு., நாளை திருமணத்தில் ஏதாவது தவறு செயலாம் என்று நினைத்தால் அதை இப்போதே விட்டுவிடு,நீ எதுவும் செய்தால் ….தண்டனை உனக்கு இல்லை…உன் பெற்றோருக்கு ..
தான்…நினைவில் வைத்து கொள்….வரட்டா விழிஷா….”என்று கூறி சென்றான்.
திருமணம் நல்லப்படியாக நடக்கு மா என்பதைப் பற்றி பாா்ப்போம்….

Advertisement