Advertisement

ராமலிங்கம் அந்த அறையின் மூளையில் ஏதோ தீவிரமான யோசனையில் இருந்தார்.அருள்வேந்தனோ அவரது முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான்.அண்ணாமலையிடம் பேச சென்றவனை கையை பிடித்து இழுத்து வந்திருந்தார் ராமலிங்கம்.அவனுக்கு தந்தையின் செயல் புரியவில்லை இருந்தாலும் பேசாமல் அமைதிகாத்தான் அவரே கூறட்டும் என்று ஆனால் அவரோ ஏதோ தீவிர சிந்தனையில் இருக்கவும் கடுப்பானவன்,
“என்னப்பா…ஏன் இப்படி என்ன இழுத்துட்டு வந்து உட்கார வச்சிருக்கீங்க…”என்றான் எரிச்சலாக.அவரோ பொறுமையாக
“நீ என்ன பண்ற வேந்தா…”என்றார் அவனை ஆராயும் பார்வை பார்த்துக்கொண்டு.
“என்ன…”என்று புரியமால் கேட்டான்.
“உனக்கு நான் கேட்க வரது புரியலையா இல்ல தெரியாத மாதிரி இருக்கியா….”என்றார் அவரும் அழுத்தமாக.இவ்வளவு நேரம் தந்தையின் கேள்வி புரியாமல் இருந்தவனுக்கு இப்போது புரியதுவங்கியது ஆக தந்தை எதையோ தெரிந்துகொண்டார் என்று நினைத்தவன் தலை குனிந்தான்.மகன் தலைகுனிவதை தாங்காமல் அவன் அருகே வந்து தலையை நிமிர்த்தி,
“நீ தலைகுனியற அளவுக்கு எதுவும் செய்யல வேந்தா…இப்ப சொல்லு எதுக்கு இங்க வந்த…”என்றார்.மகனிடம் பதில் இல்லை அமைதியாக அமர்ந்திருந்தான் பார்வை எங்கோ வெறித்துக்கொண்டிருந்தது.அவனுக்கு புரிந்தது தான் செய்தது தவறு என்று இருந்தும் மனதில் கேள்விகளை அவனால் என்ன  முயன்றும் கட்டுபடுத்தமுடியவில்லை.இதற்காக அவனுக்கு அழகி மேல் பாசமோ,பரிதாபமோ இல்லை வெறுப்பு மட்டுமே இருந்தும் ஏன் அவளை பற்றி அறிய விழைகிறேன் என்று தனக்குள் கேட்ட கேள்விக்கு பதில் தான் கிடைக்கவில்லை.அவனை மேலும் யோசிக்க விடாமல் தடுத்தது ராமலிங்கத்தின் குரல்,
“எனக்கு தெரியும் வேந்தா…நீ  எதுக்கு யார பார்க்க வந்தனு..அந்த புள்ளய பத்தி உனக்கு என்ன தெரிஞ்சிக்கனும்…”என்றார் நேரிடையாக.
“அது வந்து அப்பா…”என்று திணரினான் மகன்.
“எனக்கு எல்லாம் தெரியும்ப்பா…”என்றார்.
“அப்பா உங்களுக்கு எப்படி…”என்று வாரத்தைகள் வர மறுத்தன.அவன் மட்டும் தான் அழகியை பார்த்தாக நினைத்திருந்தான்.ஆனால் அவனுக்கு முன்பே ராமலிங்கம் அழகியை பார்த்திருந்தார் என்பது அவனுக்கு தெரியாதே அதே போல் வேந்தனுக்கு முன்பே அண்ணாமலையிடம் அழகியை பற்றி தெரிந்து கொண்டார் என்பதும் அவனுக்கு தெரியாதே.
ராமலிங்கத்துக்கு அழகியை வேனில் இருந்து ஓடி வந்த போதே பார்த்தது விட்டார்.அவருக்கு அழகியை கண்டவுடன் அதிர்ச்சி தான் அதிலும் அவள் நிலை கண்டவருக்கு மனது கனத்தது.அண்ணாமலையை தனிமையில் சந்தித்தவர் அழகியை பற்றி கேட்டார்.அதற்கு அண்ணாமலை,
“நீங்க எதுக்கு அந்த பொண்ண பத்திக் கேட்கிருங்க…”என்றார்.அதற்கு ராமலிங்கம் அழகியை பற்றி அனைத்தையும் கூறியவர் அவர்கள் கடைசியாக மகனை அவமானபடுத்தியதை மட்டும் மறைத்தார்.ராமலிங்கம் கூறிய அனைத்தையும் கேட்டவருக்கு ஒன்று மட்டும் புரிந்தது அழகியும் அவர்களது குடும்பத்தாரும் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்று.அண்ணாமலையும் தனக்கு தெரிந்த விவரங்களை கூறனார்.அதுவும் கற்பகம் சாரதா பற்றிக் கூறியிருந்தார் அவளது மகனே தந்தை சாவுக்கு காரணமானதோடு அல்லாமல் தங்கை வாழ்வையும் சீரழிக்க பார்க்கிறான் அதனால் தப்பி வந்துவிட்டார்கள் என்று கூறியிருந்தார்.அதை ராமலிங்கத்திடம் கூறியவர் கூடுதலாக,
“பாவம் சார் அந்த பொண்ணு பெத்தவங்க செஞ்ச பாவத்துக்கு அது அனுபவிக்குது…”என்றார் அழகியின் நிலைக் கண்டு.ஆனால் ராமலிங்கத்துக்கு அதெல்லாம் இல்லை போலும்,
“அதுவும் அவங்க அம்மாவும் பண்ணதுக்கு இது தேவைதான்…”என்றவர்.தான் கேட்டதை யாரிடமும் கூறவேண்டாம் என்றுவிட்டார்.அண்ணாமலைக்கு ராமலிங்கத்தின் பேச்சு பாதி புரிந்தும் புரியாத நிலை இருந்தும் அவர் எதுவும் செய்யமுடியாதே அதனால் சரி என்றார்.அனைத்தையும் கூறியவர் மகனின் முகத்தை பார்த்தார் அவனது முகம் தெளியாமல் இருக்கவும்,
“வேந்தா…எனக்கும் அந்த பொண்ண நினைச்சா வருத்தமா தான் இருக்கு…இருந்தாலும் அது செஞ்ச காரியம்…”என்று அன்றைய நாளின் காயங்கள் ஆரவில்லை மனிதருக்கு.
“அப்பா…அமைதியா இருங்க…”என்றவன் தண்ணீர் தர மறுக்காமல் வாங்கி குடித்தவர் மகனின் தலையை வாஞ்சையாக தடவிக் கொடுத்தவர்,
“வேந்தா…எனக்கு உன்னோட கல்யாணம் எந்த தடங்களும் இல்லாம நடக்கனும் அவ்வளவு தான்ய்யா…நீ தேவையில்லாதெல்லாம் நினைக்காத…உனக்கு அப்பா சொல்ரது புரியுதுலய்யா…”என்றவர் கண்களில் கண்ணீரை காண சகிக்காதவன்,
“என்னப்பா இது சின்னபுள்ள மாதிரி அழுதுக்கிட்டு…நீங்க நினைச்ச மாதிரி தான் நானும் நினைக்கிறேன்….என் கல்யாணம் நல்லபடியா நடக்கும்…”என்றவன் அவரது கண்களை துடைத்துவிட்டு தந்தையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.
காலையில் இருந்த மன இறுக்கங்கள் தந்தையிடம் பேசிய பின் குறைந்ததை போல உணர்ந்தவன் உற்சாகமாக மாலை வரவேற்ப்புக்கு தயாரானான்.
மகனது முகத்தில் தெரிந்த மலர்ச்சியில் ராமலிங்கமும் சற்று ஆசுவாசம் அடைந்தார்.இதோ வேந்தனும்,ரம்யாவும் அலங்கரிக்கப்பட்ட மேடையில் நின்று கொண்டிருந்தனர்.ராமலிங்கம் வீட்டில் கல்யாணம் என்பதால் அவர்கள் பெண்ணழைப்பு வைத்து மணமகளை முறைபடி அழைத்தவர்கள் மேடையில் இருவரையும் ஒன்றாக நிறுத்தி ஆலம் எடுத்து இருக்கையில் அமரவைக்கப்பட்டனர்.வேந்தனுக்கு மனதில் இப்போது எதுவும் இல்லை அதனால் தன் வருங்கால மனைவியின் முகத்தை பார்த்தான்.கரும்பச்சை நிற புடவையில் மிதமான அலங்காரத்துடன் அழகாவே இருந்தாள் ரம்யா.ஆனால் கண்களில் ஒருவித பதட்டம் அதை திருமணத்திற்கு உண்டான பதட்டம் என்று எண்ணியவன் அவளின் அருகில் குனிந்து,
“ரிலாக்ஸா இரு ரம்யா…”என்றான்.அவனது குரலில் அவளுக்கு பதட்டம் குறைவதற்கு பதிலாக கூடியது போல இருந்தது இருப்பினும் தலையை ஆட்டிவைத்தாள்.இங்கு நடப்பவைகளை எல்லாம் தூரத்தில் ஒரு ஓரத்தில் இரு ஜோடி கண்கள் கோபமாக பார்த்தது.அனைத்தும் முடிந்து விருந்து உண்ண அனைவரும் சென்றனர்.மாப்பிள்ளை,பெண்ணும் உணவு அறுந்தும் வேலை வேந்தனின் கண்களோ யாரும்அறியா வண்ணம் அழகியை தேடின.ஆனால் அவன் தேடுபவளோ தான் யார் கண்ணிலும் படாதவாறு அடுக்களையின் உள்ளே வெந்துக் கொண்டிருந்தாள்.அவளையும் அறியாமல் மனது கனத்தது ஏன் என்று தான் புரியவில்லை.எங்கே அழுதுவிடுவோமோ என்று தன்னை கட்டுபடுத்திக்கொண்டு இருந்தாள்.மனதின் பாரங்களை யாரிடமாவது இறக்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை.இது தான் தன் விதி என்று நொந்தவள் மனது ஊமையாக அழுதது.அண்ணாமலைக்கு அழகியின் மனநிலை புரிந்ததால் அவரும் தொந்தரவு செய்யவில்லை.விடியற்காலையில் முகூர்த்தம் என்பதால் வேலைகள் நிறைய இருந்தன அதனால் அழகி தன் மனதை வேலையில் செலுத்தினாள்.
அனைவரும் உண்டு அவரவர் ரூம்களில் சென்று படுத்தனர்.ராமலிங்கமோ அடுத்த காலை வேலைகளில் கவனம் செலுத்தியவர் அவ்வபோது யாரும் அறியா வண்ணம் அழகியையும் கவனித்தார்.என்ன தான் மகனிடம் பேசிவிட்டாலும் மனது அவளுக்காக வருந்தத தான் செய்தது.அவரும் வந்ததில் இருந்து அவளை பார்க்கிறார் தானே முன்பு படபடபட்டாசாய் பொரிபவள் இன்று இரு வார்த்தைகளுக்கு மேல் பேசுவது இல்லை.எப்போதும் முகத்தில் ஒட்டியிருக்கும் சிரிப்பு இல்லை.இந்த சிறு வயதில் அவளது நிலையைக் கண்டவருக்கு மனது வருந்தியது இருந்தும் தன் மகனின் வாழ்வு என்று வரும் போது மனது முரண்டது.அனைத்தையும் விட மகன் தான் முன்னிலை பெற்றான்.
அருள்வேந்தனோ தன் நண்பர்களுடன் பேசிவிட்டு தன் அறைக்கு அப்போது வந்திருந்தான்.முகம் அலம்பிவிட்டு படுக்க எத்தனிக்கும் நேரம் அவனது அறையின் கதவு தட்டப்பட்டது.இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று எண்ணியவன் கதவை திறந்தான் வெளியின் நின்றவரைக் கண்டு புருவம் சுருக்கினான்.அவன் திறப்பதற்காக காத்திரந்து போல அவனிடம் சில விஷயங்களை கூறியவர் அவனது பதிலை எதிர்பாராமல் சென்றுவிட்டார். அவர் கூறியவைகளைக் கேட்டவனுக்கு இவ்வளவு நேரம் இருந்த இலகு தன்மை நீங்கி முகம் இறுக துவங்கியது.இது ஓய்ந்து அமரும் நேரமில்லை என்று உணர்ந்தவன் சில முடிவுகளை எடுத்துவிட்டு ஒருவரைக் காண சென்றான். அவரிடம் சிலவற்றை பேசிவிட்டு வந்தவன் கண்களில் கோபம் கனன்று கொண்டிருந்தது.
அடுத்த நாள் மூகூர்த்த வேளையில் மதியழகியின் கழுத்தில் மங்கள நாணை அணிவித்தான் அருள்வேந்தன்.

Advertisement